Wednesday, July 15, 2020
முகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் எது காதல் ? புதிய கலாச்சாரம் - அக்டோபர் 2015 வெளியீடு !

எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு !

-

லகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.

கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.

செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.

சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.

காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.

வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
அக்டோபர் – 2015

puka6_sex_oct_15_wrapper

இதழில் இடம் பெற்றுள்ள தலைப்புகள்

காதலைத் தீர்மானிப்பது
அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

இந்தியா டுடேயின் செக்ஸ் விற்பனையும்,
தமிழ்க் கற்பின் கூச்சல்களும்!

ஜீன்ஸ் பேண்டும், பாலியல் வன்முறையும்!

பூவரசியின் கொலையும் ‘தற்கொலையும்’!

சினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி?

அஞ்சலி குப்தா: இந்தியா விமானப் படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!

பிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்!

‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்

பேருந்தில் ஒரு மிருகம்!
வேடிக்கை பார்த்த மௌனம்!!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00


_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

Clear
SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. இன்று காதலுக்கு எதிரான அட்டுழியங்கள் அனைத்துமே பார்ப்பனர் அல்லாதாஒரால் மாத்திரமெ ரிபீட் மாத்திரமே செய்யப் படுகின்றன அதை வாய் திறந்து சொல்ல நேர்மை இல்லாமல் பார்ப்பனியாம் அது இது என்று பசப்பி இருக்கிறிர்கள். ஒன்றைமட்டும் மறக்காதீர்கள்.இது மதம்,இனம் சம்பத்தப் பட்ட ப்ரச்சினை அல்ல அரசியலும் அல்ல எப்படியும் பாரதியின் வாக்கு பலித்தே தீரும் நாங்காம் தலைமுறையைப் பார் நாவிதனும் சித்தப்பனாவான்.

  • நைனா, இன்னா மேட்டருன்னு தெரியாம சும்மா வந்துகினு பார்ப்பானுங்க நல்லவங்கனு சொல்லப்படாது..

   மார்க்சியம் வாழ்கிறதுன்னு சொன்னா மார்க்ஸ் இன்னமும் வாழ்கிறாரானு கேள்வி கேப்ப போலிருக்குதே…

   எப்படி மார்க்சின் உலகை மாற்றியமைக்கும் தத்துவத்தை மார்க்சியம்னு சொல்றோமோ, அதே மாதிரி பார்ப்பனர்கள் உருவாக்கிய சனாதன தர்மத்தை, பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பிரிச்சு ஒருவனுக்கு கிழே இன்னொருத்தன்னு படிநிலைகள் வச்சி எல்லாருக்கும் மேலே தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அயோக்கியத்தனத்தை தான் பார்ப்பனியம்னு சொல்றோம்.

   அந்தத் தத்துவத்தின் படிதான் இன்னைக்கு ஒவ்வொரு ஊர்கள்லயும் இருக்குற ஆதிக்க சாதி கிரிமினல்கள் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை கடுமையா ஒடுக்குறானுங்க ..
   காதலுக்கு எதிரான அட்டூழியங்களை பார்ப்பனர் அல்லாதவர்கள் செய்யலாம், ஆனால் அதன் அடிப்படை தத்துவம் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. இன்று வரை மேலிருந்து அவர்களின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதியனர் தனக்கு கீழ் வகைப்படுத்தப்பட்ட மற்ற சாதியனரை ஒடுக்குவதும் பார்ப்பனீயம் தான்.

   பாரதிக்குப் பிறகு 10 தலைமுறை உருண்டு விட்டது, எந்த நாவிதனும் பார்ப்பானுக்கு சித்தப்பனானதாக வரலாறு இன்னமும் இல்லை. கஞ்சா போதையில் பாரதி எழுதிய உளறல்களை வக்காலத்துக்கு எடுத்துக் கொண்டீர்களானால், சேம் சைடு கோல் தான் பரிசாகக் கிடைக்கும்.

   பாரதி பற்றி மேலும் படிக்க … பரவசமடைய …

   https://www.vinavu.com/2013/12/13/barathi-movie-review/

 2. Dai

  Do you have proof for this “கஞ்சா போதையில் பாரதி எழுதிய உளறல்களை”, dont write whatever you are doing here.

  Who will tell you “that time my daughter should marry thalith boy,” i had read what did you share in vinavu.

  Because of you people only tamilnadu spoil like anything.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க