Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாடு அஞ்சாதே பாடு - தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !

பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !

-

பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு

எத்தனை கைது… எத்தனை சிறை…
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு

எதிர்த்துக் நிற்க ஏன் தயங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்

போதை தெளிய தமிழனுக்கு
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத்துரோக வழக்கெதற்கு
தேடித்தேடி கைது எதற்கு
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய் பூட்டு  போட முடியாது

பூட்டணும்னா கடைய பூட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு

பாடல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

SUPPORT US