privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாடு அஞ்சாதே பாடு - தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !

பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !

-

பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு

எத்தனை கைது… எத்தனை சிறை…
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு

எதிர்த்துக் நிற்க ஏன் தயங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்

போதை தெளிய தமிழனுக்கு
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத்துரோக வழக்கெதற்கு
தேடித்தேடி கைது எதற்கு
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய் பூட்டு  போட முடியாது

பூட்டணும்னா கடைய பூட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு

பாடல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

SUPPORT US

  1. மதுப் பழக்கத்துக்கு மக்களை அடிமைப்படுத்தி அதில் தனிப்பட்ட தனது வியாபாரத்துக்கு லாபம் சம்பாதிக்கும் அரசின்/ ஆளும் வர்க்கத்தின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். ஜெயாவின் மிதாஸ் மது ஆலையில் உற்பத்தி ஆகும் சாராயத்தை அரசே முக்குக்கு முக்கு விற்று ஏழை மக்களை மூக்கு முட்டக் குடிக்கச் செய்யும் கேடு கெட்ட அரசாகத் தமிழ்நாடு அரசு இருப்பதைப் பரப்புரை செய்வதைத் தேசத் துரோகம் என்று கூறுவது வெட்கக் கேடு. மக்களைக் குடிகாரர்களாக்கி அவர்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கும் ஆட்சியாளர்கள் செய்வது தேசத் துரோகமா? அல்லது இந்த விஷயத்தின் உன்மையைப் பரப்புரை செய்வது தேசத் துரோகமா?

    உடனடியாக அதே மெட்டில் “பாடு அஞ்சாதே பாடு” என்ற பாடலை வெளியிட்டமை சிறப்பு.

  2. ஆயிரம் காலம் அடிமையென்றாயே
    ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே
    ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே

    காடு கழனிக சொல்லும் எம்பேர
    சொல்லும் எம் பேர
    ஆறு கொளங்களும் சொல்லும் எம்பேர
    சொல்லும் எம் பேர
    சேறு வடிந்த அந்த ஏரு சொல்லும் எம்பேர
    ஏரு சொல்லும் எம் பேர
    தாவிக்குதிக்கும் கெண்ட மீன கேளு எம்பேர
    மீன கேளு எம்பேர
    எனக்கு நீ பேரு வக்க யாரடா நாயே

    கீத்தெல்லாம் மாத்திப்புட்டு கார வூடு கட்டி தந்தேன்
    கார வூடு கட்டி தந்தேன்
    எங்க காத்து கூட ஆகாதுனு ஊர உட்டே தள்ளி வச்சே
    ஊர உட்டே தள்ளி வச்சே
    சேரிக்கெல்லாம் பேர மாத்தி காலனி ஆக்கிப்புட்டே
    காலனி ஆக்கிப்புட்டே
    கேணி சுடுகாட்டுக்கு பாத தனியாக்கிட்டே
    பாத தனியாக்கிட்டே
    எங்க பேரையும் மாத்தி வக்க
    யாரட நாயே

    அக்கிரகாரமின்னும் சேரினும் வச்சதாரு
    சேரினும் வச்சதாரு
    ஆகம வேதம் கட்ட சாத்திரம் வகுத்ததாரு
    சாத்திரம் வகுத்ததாரு
    தொட்டாலே தீட்டுன்னு கட்டி உரித்ததாரு
    கட்டி உரித்ததாரு
    தட்டிகேட்ட எங்கள கட்டி உரித்ததாரு
    கட்டி உரித்ததாரு
    உங்க அரி செஞ்ச வேலதாண்டா ஆர்.எஸ்.எஸ். நாயே

    அயோத்தி ராமனுக்கு ஆலயம் கட்டனுன்னு
    ஆலயம் கட்டனுன்னு
    அரியின் ஜனங்களெல்லாம் ஆயோத்தி வரச்சொன்ன
    ஆயோத்தி வரச்சொன்ன
    அய்யய்யோ தீயில் வெந்த பெண்மணிக்கு யாரும்வல்ல
    பெண்மணிக்கு யாரும்வல்ல
    அந்த அரிராமன் சேரி பக்கம் எட்டிகூட பாத்ததில்ல
    எட்டிகூட பாத்ததில்ல
    அந்த அரிக்கு நான் மகனாடா அயோக்கிய நாயே

    ஆயிரம் காலம் அடிமையென்றாயே
    ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே
    ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே … ஏஏய்.

  3. பாடகர் கோவனின் மதுவிலக்குப் போராட்டத்துக்கு தமிழ‌க அரசின் அங்கீகாரமே அவரைச் சிறையில் அடைத்தது. ஒரு புரட்சிக் கலைஞனுக்கு இதை விட சிறந்த பாராட்டும் விருதும் வேறு என்ன கிடைத்து விடப் போகிறது?

  4. அரசின் செலவில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பல பேருந்துகள் வாங்கி அவற்றை ஊரெங்கும் கொண்டு சென்று மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி அரசின் சாதனைகள் என்ற பெயரில் ஜெயலலிதாவின் புகழ் பாடும் காட்சிகள் அரங்கேறி வருகினறன. உங்களுக்கு அரசின் சாதனைகளைக் கொண்டு செல்ல உரிமை இருப்பது போல் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் படும் வேதனைகளையும் மதுக் கடைகளால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை ஒரு சாமானிய பாடகர் பாடி பிரச்சாரம் செய்வதற்கு உரிமை கிடையாதா? இது எந்த வகையில் தேச்த்துரோகம்? வெள்ளைகாரன் ஆட்சியை விட மிகக் கொடுமையாக உள்ளதே. இவரின் பாடல் மக்கள் நலன் சார்ந்தது இல்லையா? பொதுமக்கள் எவரும் இந்தப் பாடலில் குற்றம் உள்ளது இதனைப் பாடக் கூடாது என்று சொல்லவே மாட்டார்கள். பெருவாரியான பொதுமக்களின் உள்ளக் குமுறலைத்தான் இவர் பாடி உள்ளார்.

  5. Sir,i want to download the song. Please help me.share the link or else upload in vinavu.Today we attracted peoples attention.I am from a village,have been following vinavu more than 4years.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க