privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை

புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை

-

நேற்று 17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் குழுமியிருந்தனர்.

தோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.

பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.

சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !

kovan's release (4)

– செய்தி, புகைப்படங்கள், வீடியோ: வினவு செய்தியாளர்கள்

  1. மக்கள் தலைவரின்-தோழர் கோவன் பேட்டி சும்மா நச்சுனு இருக்கு. அறிவில் உரைக்க வேண்டியவர்களுக்கு உரைத்தால் நல்லது தான். டாஸ்மாக்க்கு எதிரான போராட்டம் இன்னும் சில மாதங்கலாவது தொடருமாயின் தமிழக தேர்தலை முன்னிட்டு “அம்மா-டாஸ்மாக்” கதவை சாராய ஆத்தா மூட சாத்தியங்கள் அதிகம் உள்ளது..

  2. புரட்சிகர சிந்தனையை புழல் சிறையாலும் சிதைத்துவிட முடியாது என்பதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு தோழரின் சிறையும் விடுதலையும். வாழ்த்துக்கள்.

  3. கோவன் அவர்களின் விடுதலைக்கு வாழ்த்துக்கள்.
    தங்களது பணி மென்மேலும் தொடரட்டும்.

  4. யார் தேசத்துரோகி? தேசத்தின் உயிர்நாடி மக்களை கூட்டம் கூட்டமாக விஷம் கொடுத்துக்கொல்லும் ஆட்சியாளர்களா? இவர்களா? பாடல் வரிகள் மக்களின் மொழி என் வார்த்தைகளல்ல என்னும் அவரின் கருத்து 100 க்கு 100 உண்மை என்பதை அம்மாவின் மரண தேசம் வீடியோ வில் பதிவான மக்கள் குரல் நிரூபிக்கிறது.

  5. தோழர்கள் மருதையானோ, கோவனோ, வினவு தளத்தை நடத்துவோரோ நிச்சயமாகத் தேசப்பற்றாளர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    ஆனால், மார்க்ஸிய லெனினியப் பாதை வன்முறைப்பாதை என்பதாலும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானவை என்பதாலும், அப்பாதையினின்று விலகுதல் மட்டுமே அத் தேசப் பற்றினால் விளையும் பயன்களை உன்மையாகப் பெற்றுத் தர முடியும். மாறிவர முடியும் என்றநம்பிக்கை இல்லை. ஆனாலும், சொல்வது கடமை.சொல்லி விட்டேன்.

    • அரவிந்தன் நீலகண்டன்: ஹிட்லரின் காதலைப் போற்றலாமா? கட்டுரைக்கு நீங்கள் போட்ட மறுமொழி இது.

      //பெனிடோ முசோலினியின் கட்சி பாசிஸ்ட் கட்சி. அதன் தீவிர உறுப்பினர் என்பதில் பெருமை கொண்ட அந்தோனியோ மெயினோவின் மகள் சோனியா. அவரது மனதில் ஊறிப்போன கிறிஸ்தவ மதமாற்றத்தை வளர்க்க அவர் ஆண்ட கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நடந்த மதமாற்றம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விடவும் அதிகம். இந்த நவீன பாசிசத்தை ஒரு நாளும் பாசிசம் என்று வினவு கூறாது!

      அவ்வளவு ஏன், உட்கார்ந்தால் எழுந்தால் ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதாவது ஒரு வழியில் திணித்து, பார்ப்பன இந்துமதம் என்று திட்டும் பாசிசக் கொள்கையும் வழக்கமும் வினவுக்கு இருக்கிறது.

      இந்துமதத்தை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனையும் கோட்பாடும் கொண்ட வினவை விடவும் ஒரு பாசிஸ்ட் இருக்கவே முடியாது.//

      பாசிஸ்ட் வினவுக்கு பார்ப்பவர்கள் எல்லாரும் பாசிஸ்டாகத்தான் தெரியும். ஒரு மனிதன் கலப்பு மணம் செய்து நிம்மதியாக வாழ்வது கூடப் பொறுக்க முடியாத அளவுக்குப் பாசிஸ்டாக இருக்கும் வினவு சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.//

      பாசிஸ்டுகளை தேசப்பற்றாளர்களாக அழைப்பதிலிருந்து, பாசிஸ்டுகள் தேசபற்றாளர்களாகவும் இருப்பார்கள் என்றாகிறது.பிறகு மா.லெ பாதை, ஜனநாயகக் கோட்பாடு, பாதை விலகல், நம்பிக்கை இல்லை, கடமை………………………..?

      என்ன ஆச்சு ஜி ?

  6. கோவன் மீதான தேச துரோக வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த ரொம்ப ரொம்ப யோசித்து அனுமதி கொடுத்த கம்பம் தெற்கு காவல் நிலைய இன்ஸ்.ஏ.மணிமாறன் பல நிபந்தனைகள் விதித்தார்.கோஷம் போடக்கூடாது,கொடி பிடிக்கக் கூடாது.பாட்டுப் பாடக்கூடாது,பறை அடிக்கக்கூடாது,மெகா போனும் வைக்கக்கூடாது,அரசைக் கண்டித்துப் பேசக் கூடாது,தனி நபரைத் தாகிப் பேசக் கூடாது,2 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது.கோவன் தான் ஜாமீனில் வந்து விட்டாரே அப்புறம் எதுக்கு ஆர்ப்பாட்டம் என்று சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு முந்தின நாள் இரவு தான் அனுமதி கொடுக்கப்பட்டது.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பலத்த யோசனைக்குப் பிறகு அனுமதிக்கச் சொன்னாராம்.இதனால் ஆர்ப்பாட்டமே நடத்தாமல் முழக்கம் மட்டும் போட்டுவிட்டு காவல்துறையின் கட்டுபாடுகளை மக்களிடம் வெறும் வாயால் அறிவித்துவிட்டு வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு நின்றார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள். அதையும் கூடாது என்று தடுத்தார் இன்ஸ்.இனி என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று 2மணி நேரம் நெடுமரமாக நின்றுவிட்டார்கள்.அம்மா போலீசுக்கு உறைக்கவா போகிறது ? தமிழ் நாட்டிலுள்ள எல்லா காவல் துறைப் பிரிவினரும் வந்து குவிந்திருந்தனர்.ஆர்ப்பாட்டக்காரர்கள்(?) ஒரு வரிசை. காவல் துறை ஒரு வரிசை.மக்கள் இந்த அதிசயத்தை வேடிக்கை பார்த்துச் சென்றார்கள்.இது கம்பத்தில் மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் காவல்துறை இப்போது இதைத் தான் கடைபிடிக்கிறது.இது எந்த சட்டதில் இருக்கிறது என்று கேட்டால்.இது உங்களுக்கு மட்டும் காவல் துறையே இயற்றிய சட்டம் என்கிறது காவல்துறை.இது காவல்துறையின் பாதை.வாய்ப் பூட்டு போட்டுக் கொண்டது விவிமுவின் பாதை.உங்க ஜனநாயகப் பாதையில அனுமதி வாங்கிக் கொடுங்க அஞ்சன் குமார் சார்! அப்படியே நீதியரசர் வைத்திய நாதனிடமும் கோவன் கைது அரசியல் இல்லை சும்மாதான் என்று சொல்லுங்க.தமிழக அரசு தண்ணீரில் தள்ளாடும்( மழை,வெள்ளத்தில்) மக்களை விட்டுவிட்டு ஒரு பாட்டுக்காக சுப்ரீம் கோர்ட் போகவேண்டாம்னும் சொல்லுங்க ப்ளீஸ்!வன்முறைப் பாதையெல்லாம் வேஸ்ட்.மென்முறைப் பாதை தான் கரைக்ட்.அடுத்து போராட்டத்துக்குனு வர்றவங்க வாயில ஈர மண்ண அள்ளிப் போடுமில்ல போலீசு.ஈர மண்ணுல்ல.

  7. சகோதரர் கோவன் விடுதலைக்கு வாழ்த்துகள். அவர இசை எ்ங்கும் ஒலிக்கட்டடும. எளியவர்களின் விடியல் கீதமாக இருக்கட்டும்

Leave a Reply to குடும்பஸ்தன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க