Monday, March 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா காரு கூட நனையவில்லை - ம.க.இ.க பாடல் டீசர்

அம்மா காரு கூட நனையவில்லை – ம.க.இ.க பாடல் டீசர்

-

புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.

ஊரெங்கும் மழைவெள்ளம் தத்தளிக்கிறது தமிழகம்
இது யாரோட குத்தம்னு கேட்காத சிறைவாசம்!

சாக்கடை ஊட்டுக்குள்ளே போக்கிடம் ஏதுமில்லே…
பாக்க வந்த அம்மாவோட காரு கூட நனையவில்லை..
பொங்கித் தின்ன வழியில்லை பொட்டலம்தான் கதியில்லை
போயஸ் ராணி ஆட்சியில போட்டோவுக்கு குறைச்சல் இல்ல…

தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி
தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி
தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி
தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே – தடியடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க