privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?

சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?

-

ர்மமான முறையில் மரணமடைந்த எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (27-01-2016) உத்தரவிட்டிருந்தது. இன்று (28-01-2016) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் மாணவி மோனிஷாவின் உடலை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் (அவரது சொந்த ஊர்) அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்யவிருந்தனர்.

இறந்து போன தங்களுடைய சக மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காகவும், தங்களது பிரச்சனை குறித்து வழக்குரைஞர்களை கலந்து பேசுவதற்காகவும் கள்ளக்குறிச்சியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்றை காலை சென்னை வந்தனர். அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்க புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாணவர்களை ஊரிலிருந்தே பின் தொடர்ந்து வந்த போலீசு மண்டபத்துக்கு வந்து இறங்கியவுடன் அனைவரையும் தடுப்புக் காவலில் கைது செய்வதாக அறிவித்திருக்கிறது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர் மில்டன் இதனைக் கடுமையாக ஆட்சேபித்து உதவி கமிஷனர் புகழேந்தியுடன் கடுமையாக வாதிட்ட பின்னரும் மாணவர்களை விடுவிக்க முடியாது என்று போலீஸ் அடாவடித்தனமாக மறுக்கிறது.

மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

போலீசின் இந்த சட்டவிரோத கைதுக்கு எதிராக உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்று மதியம் விசாரணைக்கு வரும்.

தகவல்
கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
28-01-2016 காலை 10.30 மணி