privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சியில் பிப். 14 "மூடு டாஸ்மாக்கை" மாநாடு - நிகழ்ச்சி நிரல்

திருச்சியில் பிப். 14 “மூடு டாஸ்மாக்கை” மாநாடு – நிகழ்ச்சி நிரல்

-

shutdown-tasmac-poster

ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்!
மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு

14-02-2016 ஞாயிறு, மாலை 4.00 மணி
உழவர் சந்தை மைதானம், தென்னூர், திருச்சி

ஏன் முடியாது? மூடு டாஸ்மாக்கை
குடிநோயால் குடும்பம் குடும்பமாக பலியாகிறது தமிழ்ச்சமூகம்
சாராய சாம்ராஜ்யாத்துக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!

shutdown-tasmac-invitationதலைமை
தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு, மக்கள் அதிகாரம்

சிறப்புரை
தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

உரையாற்றுவோர்
திரு டி.எம். சஞ்சீவி குமார், பத்திரிகையாளர், சென்னை
க.காவ்யாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அவ்வூர், நீலகிரி மாவட்டம்
திரு. தனசேகரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம்
Dr. இரா பாலகுரு, மனநல மருத்துவர், திண்டுக்கல்

டாஸ்மாக் கொடூரம் – நேருரைகள்
திருமதி ஆனந்தி அம்மாள், உதவும் கைகள், சென்னை
திருமதி மந்திரி குமாரி, கச்சிராயநத்தம், விருத்தாசலம் வட்டம்
திரு நாகராஜ், அனுப்பராப்பாளையம், திருப்பூர்
திரு. டேவிட் ராஜ், தேசிய சாம்பியன்- வாள்வீச்சு, தேமனூர், கன்னியாகுமரி

தப்பாட்டம் – மாலை 4.00 மணி ஜான் பீட்டர் – கலா தப்பாட்டக் குழு, ரெட்டிப் பாளையம், தஞ்சாவூர்
நாடகம் – மையம் வீதி நாடக இயக்கம், மதுரை
கலை நிகழ்க்கிசகள் – கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு, ஆலப்புழா, கேரளா
புரட்சிகர கலை நிகழ்ச்சி – ம.க.இ.க மையக் கலைக்குழு

போதையிலிருந்து தமிழகத்தை மீட்க, சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டவாரீர்!

நிதி தாரீர்

shutdown-tasmac-request-donationவெற்றிவேல் செழியன்

வங்கிக் கணக்கு எண் : 62432032779
State Bank of Hyderabad
Pozhichalur, Chennai
IFSC Code SBHY0021334

 

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

“மூடு டாஸ்மாக்கை” அரித்துவாரமங்கலம் மாணவர்கள் அறைகூவல்

shutdown-tasmac-kumbakonam-meeting-1மூடு டாஸ்மாக்கை மாநாடு தொடர்பாக அரித்துவாரமங்கலம் பகுதியில் கடந்த 24-01-2016 அன்று தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.  மக்கள் அதிகாரம் தோழர்களும் பு.மா.இ.மு தோழர்களும் காலை 10 மணியளவில் தொடங்கி பறைஅடித்துக்கொண்டும் மெகாபோன் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். மாலை 7 மணியளவில் அரித்துவாரமங்கலம் கடை வீதியில் தெருமுனை பிரச்சாரம் செய்யும் போது காவல்துறை வந்து “அனுமதி வாங்காம பிரச்சாரம் பண்ணக்கூடாது” என்று தகராறு செய்தார்கள்.

“ஒலிஒளி அமைக்கதான் அனுமதி வாங்கனும். மெகாபோனுக்கு எல்லாம் அனுமதி வாங்க தேவையில்லை” என்று தோழர்கள் வாதிட்டார்கள். அப்போது PRPC வழக்கறிஞர் தோழரும் கூட இருந்தார் அவரிடத்தில் SI, “இது எல்லாம் தொழில் ரகசியம்” என்று பம்மினார். அந்தப் பகுதியில் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் ஆனாலும் மக்கள் கடைசிவரை கலையாமல் நின்று பார்த்து கொண்டிருந்தனர். போலீஸ் விடாப்பிடியாக நின்றதால், “நாங்க மெகாபோன் வைத்து நாலுபேருக்கு தெரியனுன்னு நினைத்ததை போலீஸ் நானூறு பேறுக்கு தெரிவிக்கனுன்னு ஆசைபடுறாங்க. போலீசு ஆசைபடியே செய்துடலாம்” என்று சொல்லிவிட்டு தோழர்கள் கலைந்து விட்டார்கள்.

shutdown-tasmac-kumbakonam-meeting-3பிறகு அனுமதி வாங்கி 04-02-2016 அன்று மாலை மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாட்டு விளக்க தெருமுனை கூட்டம் சுமார் 6.45 மணியளவில் பறை அடிக்க துவங்கியது. கூட்டத்தின் துவக்கத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ஜெயபாண்டியன் பேசுகையில்

“டாஸ்மாக்கால் தமிழகம் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதோடு போதை தலைக்கேறியவன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சுயநினைவை இழந்து விடுகிறான் என்பதற்கு உதாரணமாக ஒரு அரசன் குற்றவாளிக்கு தண்டனை தருகிறான் அப்போது ஒரு பெண், ஒரு குழந்தை, ஒருபாட்டில் சாராயம் இந்தமூன்றையும் காட்டி அந்தப் பெண்ணை கற்பழிக்க வேண்டும் இல்லை என்றால் அந்தக் குழந்தையை கொலை செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த சாராயத்தை குடிக்க வேண்டும் என்று சொல்கிறான். அவன் அந்த பெண்ணைக் கற்பழித்தாலோ அல்லது அந்தக் குழந்தையை கொன்றாலோ பாவம் என்று விட்டுவிட்டு சாராயத்தை குடிக்கிறான். குடித்தபிறகு போதை அதிகமானதும் பெண்ணை கற்பழிக்கிறான் அந்த குழந்தையையும் கொலை செய்கிறான். போதை தலைக்கு ஏறினா என்னவாகும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக குறிப்பிட்டு இந்த அரசு எப்படி குடிகார அரசாக இருக்கிறது என்று அரசை அம்பலப்படுத்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து பிரவின் என்ற 7-ம் வகுப்பு மாணவன் பேசுகையில், “வெள்ளக்காரன் கிட்டயிருந்து நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது நம்மள குடிக்க வைக்கிறதுக்கா? எங்க பள்ளிகூடத்துக்கு பக்கத்துல உள்ள டாஸ்மாக்கை மூடுனுன்னு கலெக்டர்கிட்ட மனுகொடுக்கலான்னு பார்த்தா அந்த கலெக்டர்தான் டாஸ்மாக்கை நடத்துறதா சொல்லுறாங்க. போலீசு டாஸ்மாக்கு காவல்காக்குது” என்று அதிகாரவர்கத்தை எள்ளி நகையாடினார்.

shutdown-tasmac-kumbakonam-meeting-4அடுததபடியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர் சங்கத்தமிழன் பேசுகையில் “பள்ளிகூடத்துக்கு கழிப்பறை இல்லை பாடம் நடத்த வாத்தியார் இல்லை இதை எல்லாம் செய்து கொடுன்னு கேட்டா அதை செய்யமாட்டங்குது அரசாங்கம். எங்க ஊரில் டாஸ்மாக் வேண்டான்னு ஊராட்சி மன்றத்தலைவர் தீர்மானம் போடுறாரு. தீர்மானத்தை கொஞ்சமும் மதிக்காமல் செயல்படுகிறது” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அரித்துவாரமங்கலம் பகுதி அமைப்பாளர் தோழர் விஜயராகவன் பேசுகையில், “எங்களுடைய வரிப்பணத்துல சம்பளம் வாங்குற போலீசு எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காம சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்குது. இதுதான் போலீசோட நிலைமை. அதோடு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தன்னுடைய சகமாணவன் குடித்து சீரழியிறான்னு கல்லூரி பக்கத்துல உள்ள டாஸ்மாக்கை அடித்து உடைத்தார்கள். அவர்களை போலீசு மண்டையை அடித்து உடைத்து ஜெயில்ல தூக்கி போட்டது. எப்படி காவல்துறை சாராயக்கடைக்கு காவல் காக்குது” என்று போலீசோட அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார். “இன்னைக்கு மாணவர்கள் நாங்க போராடுறோம் நீங்க எல்லாம் வேடிக்கை பாக்குறிங்க” என்று பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

shutdown-tasmac-kumbakonam-meeting-6அடுத்த படியாக அட்சயா என்ற 5ஆம் வகுப்பு மாணவி பேசுகையில், “சாராயம் குடிச்சிட்டு வந்து எங்ககிட்ட தண்ணி கேக்குறாங்க. பாட்டிலை போட்டு உடைக்கிறாங்க. எங்களால படிக்கமுடியல. உடம்புல துணியில்லாம கெடக்குறாங்க. அந்தப் பக்கம் நடந்து போகவே அசிங்கமா இருக்கு” என்று பேசினார்.

சிறப்புரையாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர். காவிரிநாடன் பேசுகையில், “சாக்ரடீஸ் பிறந்த ரோமில் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க முடிந்தது. சாக்ரடீஸிடம் நீதிபதி நீ அரசுக்கு எதிராக போராடுற அதனால் நாங்க உனக்கு தண்டனை தரலாம் என்று இருக்கோம். உனக்கான தண்டனையை நீயே சொல்லு என்று கேட்க்கையில் சாக்ரடீஸ் எனக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமும் தினமும் உணவும் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை போல ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடிய நமது நாட்டில் அப்படி கேட்க முடியுமா? இங்கு ஜனநாயகம் எல்லாம் கிடையாது. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொன்ன பெரியார் பிறந்த மண்ணில் மானத்தையும் அறிவையும் இழந்து நிற்கும் அவலநிலை. ஊருக்கே சோறுபோட்ட விவசாயி நடுத்தெருவில. விவசாயம் பொய்த்துவிட்டது. ஆளும் ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் இனி டாஸ்மாக்கை மூடமாட்டார்கள் நாம் தான் மூடவேண்டும் மக்கள்தான் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என்று டாஸ்மாக்கை மூட மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தக் கூட்டத்தில் பெருந்திரளாக மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர் கூட்டத்தின் இடையே பு.மா.இ.மு தோழர்கள் வேலுவும், தமிழ்மாறனும் “மூடுடாஸ்மாக்கை”, “ஊருக்கு ஊரு சாராயம்” பாடல்களை பாடினார்கள்.

இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் செல்வகுமார் நன்றியுரை ஆற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கும்பகோணம்

திருவாரூர்

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க