Wednesday, January 19, 2022
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் - பாகம் 1

பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் – பாகம் 1

-

பார்ப்பன ஆதிக்க சாதி வெறியின் தோற்றுவாய், அதன் ஆதிக்கம் புறமணத்தடையில் இருந்தே வந்துள்ளது – நீங்கள் மறுத்தாலும் உங்களின் இனக்கீற்று அமிலங்கள் (டி.என்.ஏ) மறுக்காது!

டி.என்.ஏ (DNA) அல்லது இனக்கீற்று அமிலங்கள் மனித இனத்தின் மரபணுத் தகவல்கள் மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி மட்டுமே சொல்லும் என நினைத்தால், இல்லை, நாங்கள் சாதிகள் தோன்றி வளர்ந்து மேலாதிக்கம் பெற்ற காலத்தையும் துல்லியமாகச் சொல்வோம் என நிரூபித்துள்ளன. கல்கத்தாவில் இருந்து செயல்படும் தேசிய உயிர்-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) மற்றும் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் மனித மரபியல் பிரிவும் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் PNAS என்ற ஆய்விதழில் வந்துள்ள இக்கட்டுரையின் ஆராய்ச்சியை, NIBMG-இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் அனலபா பாசு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

கடவுள் துகள்கள் (God particle) என அழைக்கபடும் ஹிக்ஸ்போசான் துகள்களின் கண்டுபிடிப்பு எவ்வாறு கடவுளை மறுத்த துகளாக மாறி இயக்க மறுப்பியலாளர்கள், சங்கப்பரிவாரங்கள் மற்றும் இதர மதக் கோட்பாட்டுவாதிகளின் வாதங்களுக்கு ஆப்பறைந்ததோ, அதைப்போல இவ்வாராய்ச்சி, இந்திய வரலாற்றில் ஆயிரமாண்டுகளாக கடைப்பிடித்து வருகிற வருணாசிரம முறை மேலாதிக்கம் பெற்று இறுகிய நிலைக்கு புறமணத்தடையை (அல்லது அகமண முறையைக் கட்டாயமாக்கிய) அமல் படுத்திய பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பும் அதன் பிரதிநிதிகளான மன்னர்களும் தான் காரணம் என்பதை அறிவியல் ஆதாரத்துடன் விளக்கி, சாதிகளைப் பற்றிப் புரிந்து கொள்ளும் சமூக ஆய்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. புறமணங்களின்மீது அகமணமானது ஏறி ஆதிக்கம் செலுத்திய காலகட்டம்தான் சாதி மேலாண்மையின் தோற்றுவாயாக இருந்தது, எனக் கூறிய அம்பேத்கரின் வாதத்திற்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வலுசேர்த்துள்ளன.

இந்தியாவில் மக்கள் ஏற்றத்தாழ்வான சாதியக் கட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதற்கான உயிரியல் ஆதாரங்களை இந்த ஆய்வு மெய்ப்பித்துள்ளது. அகமண முறையால் இந்த கூறு இன்றும் தொடருவதை இந்த ஆய்வு மெய்ப்பிக்கிறது. அதே நேரம் இந்த அகமண முறை அல்லது சாதியப் பிரிவினை பொருளாதார அலகுகளாக பிரிந்திருப்பதன் மூலம் இந்த சாதிய ஏற்றத்தாழ்வை ஆதிக்கம் செய்யும் சக்திகள் தமது அதிகாரத்தை கையில் வைத்திருந்தன.

வரலாற்று நோக்கில், தற்போதைய இந்திய மக்கள் தொகையின் மரபுத்தொகுதி புனரமைப்பு                  ஐந்துவகைப்பட்ட தனித்தனி
genes-study-5மூதாதையர்களையும், சிக்கலான அமைப்பையும் கொண்டது, (Genomic reconstruction of the history of extant populations of India reveals five distinct ancestral components and a complex structure) எனத் தலைப்பிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில்தான் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரய்ச்சியின் முதல்படியாக, இந்தியாவின் பல்வேறு சமூகக் கலாச்சாரம், மற்றும் மொழியில் வேறுபட்ட சுமார் இருபது சாதிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்திய நிலப்பகுதிகளில் வாழும் 18 சாதிகளிடம் இருந்தும் அந்தமான் தீவில் வாழும் இரண்டு பழங்குடியினரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு சாதியில் இருந்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஏறக்குறைய 20 நபர்கள் என சுமார் 367 நபர்களின் ரத்த மாதிரிகளில் இருந்து மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் மரபணுத் தொடர்வரிசை கணக்கிடப்பட்டது (Genome sequence).

இதன்படி பல்வேறு முடிவுகளை கண்டடைந்துள்ளனர். குறிப்பாக 2009-களில் இந்திய மக்களின் மரபணுக்களைப் பரிசோதித்த ரீச் (ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக் கழகம், அமெரிக்கா) மற்றும் குமாரசாமி தங்கராஜ் (மத்திய செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்தியா) குழுவினரின் ஆய்வுப்படி இரண்டு தனி மூதாதையர்கள் மட்டுமே இருக்கின்றனர் என முடிவு செய்யப்பட்டது. அதாவது பெரும்பாலான தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும், திராவிட வழியிலான மூதாதையர்கள் (ASI – Ancestral South Indian) மற்றும் வட இந்தியப் பகுதிகளில் இந்திய – ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மூதாதையர்கள் (ஆரியர்கள் எனவும் எடுத்துக்கொள்ளலாம், ANI – Ancestral north Indian) என இருப்பிரிவினர். அனால் தற்போது, இந்தியா முழுதும் உள்ள பரந்துபட்ட மக்களின் மரபணுக்களை ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் மேற்கூறிய இரண்டு பிரிவினரையும் சேர்த்து மொத்தம் 5 தனித்தனி மூதாதையர் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் காணப்படும் பழங்குடிகளான ஆஸ்திரிய-ஆசிய மக்கள் (AAA – Ancestral Austro -Asiatic), வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் திபத்திய-பர்மிய மக்கள் (ATB – Ancestral Tibeto -Burman) மற்றும் அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் மட்டுமே வாழ்ந்துவரும் ஜரவா, ஓங்கே உள்ளிட்ட பழங்குடிகள் உள்ளிட்ட மூன்று மூதாதையர்களை உள்ளடக்கியதுதான் இந்தியாவின் இன்றைய குடிமக்கள்.genes-study

இதற்கு முன்பு வந்த ஆய்வுகள் பல இதுபோன்ற தகவல்களைக் கூறினாலும் இச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை பலவெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் நடந்தாலும் ஆய்விற்கு சில சாதிகளின் ரத்த மாதிரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் அவர்கள் ஒரு முன்முடிவில் இருந்து அவ்வராய்ச்சியை நடத்தியுள்ளனர். ஆனால் இக்குறிப்ப்ட்ட ஆய்வு முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய மரபணு ஆராய்ச்சியாளர்களால் பல வகைப்பட்ட பிரிவினரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, கடந்தகால சமூகப் பழக்கவழக்கங்களில் இருந்து நிறுவியுள்ளனர். பல சமூக ஆய்வாளர்கள் இவர்களின் அறிவியல்-சமூகப் பூர்வ தர்க்கத்தை ஏற்றுள்ளனர். நல்லவேளையாக இவ்வாராய்ச்சியின் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் விவாதங்கள் அல்லது எதிர்கால சமூக ஆய்வில் ஏற்படப்போகும் திருப்பங்கள் குறித்து இந்துத்துவப் பார்ப்பனப் பரிவாரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டும் தெரிந்திருந்தால் கண்டிப்பாக மோடி இவாராய்ச்சியை நடத்த விட்டிருக்கமாட்டார்கள்.  இல்லையென்றால் எடுக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரிகளை (samples) மாற்றியிருப்பார் எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவிற்கு சங்க பரிவாரங்களை எரிச்சல்படுத்துவதோடு அறிவியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு இது.

சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தியா முழுவதும் 1575 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 1575 ஆண்டுகள் முன்பு வரையிலான இடைப்பட்ட காலங்களில் நமது அனைத்து மூதாதையர்களும் தங்கள் இனத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர், கலந்துள்ளனர். அதாவது புறமணமுறையானது (Exogamy) இருந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தங்கள் கணம் அல்லது சாதி/குழுக்களைத் தாண்டி திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்த பொழுதுதான் அக்கால மக்களின் சமூக வாழ்நிலை அப்போதைய ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டதைக் கண்டனர். இந்தியாவின் பொற்காலம் என்றும் வேதங்களின் காலம் என்றும் புகழாரம் சூட்டப்படும் குப்தர்கள் பேரரசில்தான் அகமணமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தர்மசாஸ்திரம்/மனுதர்மத்தின் பெயரில் சாதிக்கொடுங்கோன்மைகளும் ஒரு சாதியினர் மற்ற சாதியினருடன் மணமுடிப்பது தடுக்கப்பட்டு புறமணமுறை தடைசெய்யப்பட்டது. இச்செய்திகள் நமக்கு முன்கூட்டியே தெரியும் என்றாலும், உயிரித் தொழில்நுட்பம் மூலமாக உறுதியாகியுள்ளது எனலாம்.

genes-study-4இந்தியாவில் இருக்கும் குஜராத், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க பார்ப்பனர், தமிழகத்தின் ஐயர், மற்றும் கத்ரி போன்ற ஆதிக்கச்சாதி பிரிவினர்கள் கிட்டத்தட்ட 70 தலைமுறைகளுக்கு முன்பாகவே புறமணமுறையை கைவிட்டார்கள் என இவ்வாய்வு தெரிவிக்கிறது. 1100 வருடங்களுக்கு முன்பு ஆண்ட சாளுக்கியர்கள் காலகட்டத்தில் மராத்தா பிரிவினரின் புறமணமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்தான் ராஷ்டிரகுட மன்னர்கள் விவசாயிகளிடமிருந்து ஒரு படைப்பிரிவினரைத் தோற்றுவித்து அவர்கள் மற்ற சமூகத்தினரிடையே கலப்பதைத் தடுத்துள்ளனர், இவர்களே பிற்காலத்தில் அப்பகுதியின் சத்திரிய வம்சமாகத் தோன்றினர். இச்சாதிப் பிரிவால்தான் ஒரு கட்டத்தில் அதிக அளவில் நடந்த, திராவிட- பழங்குடியின கலப்பும், வேறுபட்ட பழங்குடியினரிடையேயான கலப்பும் தடைசெய்யப்பட்டது எனலாம்.

சாதிப்பாகுபாட்டினால் பல்வேறு பிரிவினையிடையே இருந்து வந்த கலப்பு முற்றுப் பெற்றாலும் அது முழுமையாக முடியவில்லை. ஆதிக்கசாதி ஆண்களின் மரபணுக்கள் மற்றசாதி குழந்தைகளிடையே காணப்பட்டுவதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. அதாவது பார்ப்பன, ஆதிக்க சாதிகளின் ஆணாதிக்கம் திராவிட, பழங்குடிப் பெண்களின் வாழ்க்கையில், அவர்களின் குடும்பங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் இது மற்றசாதி ஆண்கள் பார்ப்பன, ஆதிக்க சாதி பெண்களுடனான கலப்பைத் தடுத்திருக்கிறது. இதன் மிச்ச சொச்சம்தான் பொட்டுக்கட்டுதல், தேவதாசி மற்றும் தேவரடியார் முறைகளில் பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பனர்கள் மற்றும் இதர ஆதிக்க சாதியினர் பயன்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளின் மனைவிமார்களை ஜமீந்தார்களுக்குப் பிடித்துவிட்டால் அவ்வளவுதான், அவ்விவசாயி தன் மனைவியை அவர்களின் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும், இது அம்மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு கட்டாயமாக இருந்துள்ளது. அதை மீறி செயல்பட முடியாத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருந்துள்ளது. வீரம்செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தைப் பற்றி விளக்கும் மாபூமி படத்தில் கூட இது போன்ற காட்சிகளைப் படமாகப் பார்த்திருப்பீர்கள்.

எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் ஆராய்ச்சியில் கூறப்பட்டவை அனைத்தும் அறியியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதைக் கண்டுபிடிக்க மனித உடலில் காணப்படும் Y குரோமோசோம்கள் (மரபணுச்சரம், மரபணுக்கோல் அல்லது நிறமூர்த்தம் என பல கலைச்சொற்கள் உள்ளன) மற்றும் மைட்டோகான்ட்ரீயா (மணியிழை) டீ.என்.ஏக்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் Y மரபணுச்சரங்களின் மூலம் ஆண்களின் பரம்பரைத் தகவல்களையும், மணியிழை டி.என்.ஏக்கள் மூலம் பெண்களின் பரம்பரைத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். Y மரபணுச்சரமானது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது, ஆக ஆண்களிடமிருந்தே இத்தகவல்கள் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது. மரபணுக்களை மொத்தமாகப் படிக்கும்போது, இத்ததகவல்கள் குறிப்பிட்ட நபரின் தந்தை எந்த சமூகத்தைச் சார்ந்தவராக, சாதியைச் சார்ந்தவராக இருந்தார் என்பதைச் சொல்கின்றன. மணியிழை டி.என்.ஏ பெண்களிடமிருந்துதான் ஒருவருக்குக் கிடைக்கிறது. மணியிழை டி.என்.ஏவானது விந்துவில் மிகக் குறைவாகவும், கருமுட்டையில் அதிக அளவும் காணப்படுகிறது. கருவுறுதலின் பொழுது விந்துக்களில் உள்ள மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன,(மைட்டோகாண்ட்ரீயா அல்லது மணியிழைகள், இவை செல்களுக்கான ஆற்றலின் பிறப்பிடமாகும்) அதனால் ஒருவரின் உடலில் உள்ள மணியிழை டி.என்.ஏ தனது தாயிடமிருந்து பெறப்பட்டவையாக மட்டுமே இருக்கும்.

இதன்படி, இந்தியாவில் காணப்படும் திராவிட, பழங்குடியின மக்களின் மரபணுக்களில் Y மரபணுச்சரத்தின் பல்வகைப்பட்ட பிரிவுகள் காணப்படுகின்றன, அதே சமயத்தில் மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் இப்பிரிவினரிடையே ஒன்றுபோல இருக்கின்றன. அதாவது மேல்சாதி ஆண்கள் திராவிட, பழங்குடி பெண்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அவர்களின் வழியே பிறந்த குழந்தைகளிடம் Y மரபணுச்சரங்கள் வேறுபட்டு இருந்தன, ஆனால் தாய்க்கூறைக் கண்டுபிடிக்கும் மணியிழை டி.என்.ஏக்களில் எவ்வித வேறுபாடும் இல்லை. இத்தகைய பண்புகள் மேல்சாதியினரின் மரபணுக்களில் இல்லை, இதன் மூலம் திராவிட, பழங்குடியின ஆண்கள் மேல்சாதி பெண்களிடம் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே பார்ப்பனிய மேலான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது போன்ற தனிச்சிறப்பான ஆராய்ச்சிகள் மூலம் நமது ஆப்பிரிக்க மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பகுதிகளுக்கு வந்தனர், திராவிடப் பாரம்பரியம், ஆரியப் படையெடுப்பு பற்றிய தகவல்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.மேலும், பல்வேறு இனங்களுக்கிடையில் கலப்பு இருந்த நமது சமூகம் மிகுந்த ஆரோக்கியத்துடன்தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள், பல நோய்களின் கூடாரமாக மாறியது சிலப் பல நூறாண்டுகளுக்கு முன்பு இவர்கள் கொண்டு வந்த அகமணமுறையின் மூலம்தான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா. நம்பமுடியாவிட்டாலும் அதுதான் உண்மை. இதை அவர்களே மறுத்தாலும் அவர்களின் டி.என்.ஏக்கள் மறுக்காது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

– நிகரன்

மேலும் படிக்க

 1. தூய சாதி ரத்தம் பற்றி பேசும் மருத்துவர் அய்யாவுக்கு இந்த விசயம் தெரியுமா?.
  சுத்தமான சாதி ரத்தம் பற்றி வாய் கிழிய பேசும் மடையர்களுக்கு புரியும் விதத்தில் தமிழில் கட்டுரை வரைந்த கட்டுரையாளருக்கு மிக்க நன்றி.

 2. இனங்களின் மரபணு ஆய்வு பற்றிய செய்தியைப் படித்தபோது இந்த ஆய்வின் முடிவுகள் சமூகத்திற்கு நல்ல விளைவுகளைத் தருமா என்றொரு ஐயம் இருந்தது. நிகரனின் கட்டுரையைப் படித்த பின் ஓரளவு தெளிவு கிடைத்துள்ளது.முழுவதையும் படித்த பின் முழு தெளிவு கிடைக்குமா பார்ப்போம்.இந்த ஆய்வு முடிவுகளின் தொடர்ச்சியாகப் பல நிகழ்வுகளை இணைத்துப் பார்க்க முடிகிறது.அகமண முறையின் பல்வேறு உடல் ,மன ரீதியான கேடுகளைக் கண் முன்னே பார்த்து வருவது நினைவில் நிழலாடுகிறது.மருத்துவ உலகம் நீண்டகாலமாக புற மண முறையை வலியுறுத்தி வருகிறது.ஆனால் சாதி, மத அடிப்படைவாதிகள்தான் பலாத்காரமாக அகமண முறையைத் திணித்து வருகின்றனர்.பார்ப்பன சனாதனிகள் அதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்.பிற ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களும் அதையே தூக்கிப் பிடிக்கின்றனர்.கலப்பைத் தடுக்கக் கொலை செய்யத் தயாராக உள்ளனர் சாதி வெறியர்கள்.ஆர்.எஸ்.எஸ். அவர்கள் கூட்டணி.அபாயம்!

 3. நல்ல ஆராய்ச்சி கட்டுரை .

  // ஆப்பிரிக்க மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பகுதிகளுக்கு வந்தனர், திராவிடப் பாரம்பரியம்//
  திராவிடர்கள் வந்தால் அது வருகை . ஆரியர்கள் வந்தால் அது படையெடுப்பு ?

  • When someone comes for the first time, it is migration. If someone comes and chases the native population and captures land, then it is conquest. Will Raman in his “right” mind say that Moguls and British also “came” to India instead of conquered India?

    • You mean to say that there is no separate Dravidian gene pool? Are you saying we are also Aryans? Or are you saying Northies are also Dravidians? There is a separate gene pool. Separate language family. Separate culture. But no invasion. Good going!

     • சிந்து சமவெளிநாகரிகம் பிற்கால ஆரியநாகரிகத்திற்கு தொடர்பற்றதாகவும், வேத கலாச்சரத்திற்கு ஆணிவேரான குதிரையும், பிற இந்திரன் முதலிய தேவ வடிவங்கள் அகழ்வில் காணப்படாமையும் போன்ற தகவல்கள் கொண்டு பார்க்கும்போது, ஆரியர்கள் அதிக எதிர்ப்பில்லாமலேயே இஙகு பாடியமைத்து குடியேறியுள்ளனர்! மகாபாரதத்தில் வரும் ஜனமேஜயன், அர்ஜுனன் முதலியோர் நாகர்களை அழித்த கதை , அதற்கு முன்பே சிந்து சமவெளியிலும் நடந்திருக்கலாம்!

     • @HisFeet

      Dravidian came to India via sea route. Did they reach ganga ? Punjab and sindh?
      Do we have linga franca flora fauna to prove the presence of Dravidian in northern india ?

      Only evidence claimed is based on Baluch tribe in pakistan. but they dont have linga franca flora fauna to prove they migrated from South of India. And what if their boat landed there from Africa directly ?

      The presence of Dravidian for the whole of India is still not established.

      Iravatham like people are working to establish “Indus valley civilization” belongs to Dravidians.
      but still facts are not established.

      • If that is not counted as invasion, these count!

       1. Forcing us to pray in Aryan tongue and worship Aryan gods
       2. Trying to make an Aryan language as lingua franca
       3. Even replacing our baby names with Aryan names
       4. Creating a sense of inferiority among Dravidians
       5. Denying that Dravidians were civilized before Aryans came
       6. During classical times in Tamil Nadu, Buddhism and Jainism flourished here. Where are the temples/mutts of Tamil Buddhists and Jains? Where are the people? Were they not forced to convert to Hinduism and their places of worship converted to Hindu temples? Just look at Sri Lanka. The Rama legend may be a Ghar Waspi attempt to make them Hindus.
       7. It is quiet possible to do DNA analysis on Baluchi people and find out when they are separated from the main population. Such studies will soon clear the doubts for “honest” doubters like you.

       • //1. Forcing us to pray in Aryan tongue and worship Aryan gods//

        Muniyappan, karuppan, Maariyamman live even today. It would not have been possible ,if the invaders were monotheistic

        //2. Trying to make an Aryan language as lingua franca//

        Nope. People will choose what is best for communication at that point of time in history.
        Today you willingly learn and use English. That is not forcing. You are doing it because science and other information’s which are not in your mother tongue is available there.
        No Sanskrit speaking king ruled Tamilnadu.

        //3. Even replacing our baby names with Aryan names//
        Once people convert to a religion or accept the superiority of the solution by other cultures, it is inevitable . Being a convert, your mind will accept joesh then krishnan.
        Again do you think anyone forced you ?

        //4. Creating a sense of inferiority among Dravidians//

        Well if one culture has rock solid solution, it will not be threatened or feel inferiority.
        They may even repair the short comings and move on. Take yourself, you accepted solution from other culture because you felt the inferiority of your way of life. Even if you accept issues in your new found solution,You are even ready to reform their culture and identity with them rather then associate with your local culture . These things will happen again and again.

        //6. During classical times in Tamil Nadu, Buddhism and Jainism flourished here. Where are the temples/mutts of Tamil Buddhists and Jains? Where are the people? Were they not forced to convert to Hinduism and their places of worship converted to Hindu temples? Just look at Sri Lanka. The Rama legend may be a Ghar Waspi attempt to make them Hindus. //

        Where are the palaces of Tamil kings ? Those days not many granite structures were built.
        We were not like Egyptians building stuff from 2000BC. All our structures built recently from 1000 AD. If there is no major King convert, buildings such things are very difficult.
        Those religions were not rewarding for pouring milk and building big structures by offering heaven

        //7. It is quiet possible to do DNA analysis on Baluchi people and find out when they are separated from the main population. Such studies will soon clear the doubts for “honest” doubters like you.
        //

        Science will talk with evidence. So you have to be patient before generalizing and throwing stones

        • //Muniyappan, karuppan, Maariyamman live even today. It would not have been possible ,if the invaders were monotheistic//

         accommodating Dravidians inside their religion yet keeping them inferior is worse than converting and giving equal status. Show me a brahmin who worships or works as priest in Karuppu or Muni temples? They just curse these gods in Kandha Shashti Kavasam.

         //Today you willingly learn and use English. That is not forcing. You are doing it because science and other information’s which are not in your mother tongue is available there.//

         I am talking about Hindi. Hindi has no advantage over Tamil or English. Again, I am talking about systemic forcing of Hindi on our people. Not about Tamils learning Hindi on their own.

         //Once people convert to a religion or accept the superiority of the solution by other cultures, it is inevitable . Being a convert, your mind will accept joesh then krishnan.//

         So you acknowledge that there is conversion to Aryan religion or accepting the superiority of the Aryan culture happened here. This is what invasion is. I will not accept Krishnan. But if it is Pandian or Ezhilan or Mugilan, yes. I still have Tamil name and so does my family.

         //Even if you accept issues in your new found solution,You are even ready to reform their culture and identity with them rather then associate with your local culture . These things will happen again and again.//

         When you chose something new, you should upgrade. And upgrading means more equality and more progress in terms of religion. Surely Tamils should look something other than Aryan religion for an upgrade.

         //We were not like Egyptians building stuff from 2000BC. All our structures built recently from 1000 AD. If there is no major King convert, buildings such things are very difficult.
         Those religions were not rewarding for pouring milk and building big structures by offering heaven//

         You mean to say there is no sizable Buddhist/Jain population in ancient TN? If there was, where is the population now? Do you think all of them voluntarily surrendered to Aryan version of Hinduism?

         //So you have to be patient before generalizing and throwing stones//
         When the evidence comes, like in the case of gravitaional waves, it will come in the predicted form. And people like you will again find some excuses to discredit those evidences too. Don’t you think the current DNA evidence itself is a blow to the much venerated “Vedic” past?

         • // keeping them inferior is worse than converting and giving equal status.//

          They let you go to your temple and pray whatever you like. That is why even after 2000 years you have something to think about your past identity. Had it been monotheistic religions, your identity will be based on middle east/Europe and today you wont even think about your roots.

          //I am talking about Hindi. Hindi has no advantage over Tamil or English//
          What is this has to do with Aryan invasion. This is a 20th century political problem.
          Every country has its own challenges to maintain its boundary and identity. Use your political powers to solve this kind of issue.

          // Surely Tamils should look something other than Aryan religion for an upgrade//

          Of course we all know what kind of solution, you are longing for.

          //. I still have Tamil name and so does my family.//

          It is not about what your/family has. Which name will be natural to you.

          //Do you think all of them voluntarily surrendered to Aryan version of Hinduism?//
          During pallava period, Mahendravarma Pallava wrote a novel and he made fun of Buddists and Jain monks as useless beggars.Not sure many sizable family as buddists was mentioned. All were about monks.

          Once majority people converted others will follow. When Buddhism invaded Thai/vietnam they all converted.
          When Islam invaded Egypt they all converted. They dint go to every house with swords.
          And how did Xianity spread to South America/Africa?
          You dont have much choice to go against your villege/neighbors unless money support from elsewhere like Europe

          //Don’t you think the current DNA evidence itself is a blow to the much venerated “Vedic” past?//

          DNA evidence is there.Aryan migration based on Horse/river a cultural is also there.
          But Dravidian do not have evidence to show they were ruling whole of India and there is no cultural evidence to prove Ganga/Punjab rivers were occupied by us.

          You have Kallanai dam in south. A similar struture in north or any other Dravidian building. Or any poems referring a Norther rivers .

          • //Once majority people converted others will follow. When Buddhism invaded Thai/vietnam they all converted.
           When Islam invaded Egypt they all converted. They dint go to every house with swords.
           And how did Xianity spread to South America/Africa?//

           So Islam invaded. Buddhism invaded. Correct. Exactly.

           Here Aryanism invaded. Thanks for acknowledging.

 4. /திராவிடர்கள் வந்தால் அது வருகை . ஆரியர்கள் வந்தால் அது படையெடுப்பு ?/
  ராமன் அவர்களது ஆதங்கம் அர்த்தமற்றது! ஆப்பிரிக்க முதாதையர்கள் இயற்கையாக புலம் பெயர்தல் மூலமோ, கண்டம் பிளவுண்டு இடம்பெயர்தல் மூலமோ இந்திய பகுதியில் குடியமைந்தனர்! ஆனால் மிக பிற்காலத்தில் நடந்த ஆரியநுழைவு அவர்தம் நாசகார போர்கருவிகள் மூலமும், ஏமாற்று தந்திரங்கள் மூலமும்தான் சாத்தியமாயிற்று!கட்டுரையாளர் மிகச்சரியாக கணித்திருக்கிறார் ! ஆரியர் கையாண்டதாக கூறப்படும் போர்க்கருவிகள் பலவும் கிரேக்க, திபேத்திய கடவுளர்களால் கையாளப்பட்டுள்ளன! பிரமாஸ்ரதிரம் மட்டும் விதி விலக்கு! பாவம், திராவிடர்கள் நேருக்கு நேர் நின்று மோதும் போரை அன்றி வேறு கபட முறை அறியாதவர்கள்! அரசியலிலும் தான்!

  • அஜாத சத்ரு அவர்களே! நான் அறிந்துகொள்ள சில ஆதாரங்கள் தேவை.
   1. ஆரியநுழைவு அவர்தம் நாசகார போர்கருவிகள் மூலமும், ஏமாற்று தந்திரங்கள் மூலமும்தான் சாத்தியமாயிற்று என்று கூறியிருக்கும் நீங்கள் அதற்கு என்ன ஆதாரம். வரலாற்று ஆதாராங்கள் எனக்கு வழங்க முடியுமா?
   2. ஆரியர் கையாண்டதாக கூறப்படும் போர்க்கருவிகள் பலவும் கிரேக்க, திபேத்திய கடவுளர்களால் கையாளப்பட்டுள்ளன! பிரமாஸ்ரதிரம் மட்டும் விதி விலக்கு! பாவம், திராவிடர்கள் நேருக்கு நேர் நின்று மோதும் போரை அன்றி வேறு கபட முறை அறியாதவர்கள்! மேற்கண்ட போர் முறைகள்தான் கையாண்டதாக கூறியுள்ளதற்கு ஆதாரங்கள் வழங்க முடியுமா?

   மேற்கண்ட விஷயங்கள் குறித்து உள்ளே நுழைந்தபோது அதன் ஆதாரம் தேவை. உங்கள் நிலைப்பாடு ஆதரமற்றதாக இருப்பதாகவே கருதுகிறேன். விவரங்கள் தேவை.

 5. தமிழ் நாட்டில் நிலை வேறு. இங்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் வடக்கு எல்லை ஒர மாவட்டங்களில் எடுக்கபட்டது ஆகும். பொதுவில் தமிழ் நாட்டுக்குள் இடம் பெயர்ந்த சாதிகளான நாயுடு, ரெட்டி , போன்றவர்கள் வேண்டுமானால் இந்த கட்டுரை கூறுவது போன்று ஆரியர்களுடன் கலப்புற்று சத் சூத்திரர்களாக மாறியிருக்கலாம். அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து தமிழ் நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அருந்ததியர் மக்களிடம் அப்படிபட்ட ஆரிய இன கலப்புக்கு சாத்தியம் இல்லை. வேண்டுமானால் கட்டுரை கூறுவது போன்று மிக குறைந்த அளவுவுக்கு வேண்டுமானால் உழைக்கும் மக்களுடன் அதாவது பூர்வ குடி திராவிட மக்களுடன் ஆரியம் ஆண்டைகள் வலுகட்டாயமாக கலப்பு உற்று இருக்கலாம்.

  அதே நேரத்தில் தமிழ் நாட்டை பொறுத்தவரையில் பறையர், வன்னியர், தேவர், நாடார் போன்ற தமிழ் ஆதி குடி சாதிகளில் அத்தகைய வலுகட்டாய ஆரிய கலப்புக்கு சாத்தியம் குறைவே. மேலும் இந்த கட்டுரை விரிவான அளவில் சமுக, அரசியல், வரலாற்று பின்னணியில் ஏற்படும் கலப்புகளை கணக்கில் எடுத்துகொள்லாததையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 6. அந்தக் காலத்திலேயே நாங்கள் மரபணு ஆராய்ச்சி செய்து தர்ம சாஸ்த்திரத்தை நிறுவினோம்னு சொல்லாம இருந்தா சரி.

  😀 அருமையான கட்டுரை.

  // நல்லவேளையாக இவ்வாராய்ச்சியின் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் விவாதங்கள் அல்லது எதிர்கால சமூக ஆய்வில் ஏற்படப்போகும் திருப்பங்கள் குறித்து இந்துத்துவப் பார்ப்பனப் பரிவாரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டும் தெரிந்திருந்தால் கண்டிப்பாக மோடி இவாராய்ச்சியை நடத்த விட்டிருக்கமாட்டார்கள். இல்லையென்றால் எடுக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரிகளை (samples) மாற்றியிருப்பார் எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவிற்கு சங்க பரிவாரங்களை எரிச்சல்படுத்துவதோடு அறிவியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு இது.//

  செம்ம..!

  • உழைப்பின் பாத்திரம், சமூக உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள் ஆகியவை குறித்து எங்கல்சின் கருத்துக்கள் இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்கள். உடலியல், மற்றும் உளவியல் கூறுகள்தான் இந்திய வரலாற்றை தீர்மானித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆய்வு, விவாதம் அற்ற பதிவு. விவாதிப்போம்.

  • மேற்கண்ட கட்டுரை இந்தப் பதிவின் கட்டுரைக்கு நேரெதிர் கருத்துகளை கொண்டுள்ளது. இந்த இரண்டு கட்டுரையும் படிப்பவர்கள் சந்தர்ப்பவாதத்திற்கு பலியாவதை தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது.

 7. மார்க்சியத்தின் வழியாக நிலப்பிரபுதுவத்தை விளக்க முடியாத வினவு, அறிவியல் வழியாக பார்ப்பனியத்தை நிறுவுகிறது 🙂

 8. கூடவே பண்டைய ஈரானில் உருவான அவஸ்தன் கலாச்சாரத்துக்கும் ரிக் வேத கலாச்சாரத்துக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் அராய்ந்தால் இந்துத்துவ கொள்கைகளுக்கு சாவு மணி அடிக்க முடியும். ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியும். ரிக் வேத கால சமஸ்கிருத மொழியும் பண்டைய ஈரானின் அவஸ்தன் மொழியும் நெருங்கிய சகோதரிகள். ரிக்வேதத்தில் வரும் கடவுளர்கள் அவஸ்தன் கலாச்சாரத்தில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு இருப்பதை உற்று நோக்கினால் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும். ஆனால் திராவிட இனவாதிகள் இது போன்ற பகுத்தறிவு மற்றும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளை செய்ய மாட்டார்கள். ஒன்றுக்கும் உதவாத குமரிக்கண்ட அல்லது லெமூரியா கண்ட கட்டுக்கதையை பிடித்துக்கொண்டு தொங்குவார்கள்.
  முன்னொரு காலத்தில் இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பெரும் நிலப்பரப்பு ஆஸ்திரேலியா வரை நீண்டு இருந்ததாம். அது தான் ‘லெமூரியா கண்டம்’ என மேல் நாட்டு அறிஞர்கள் சொல்லி விட்டார்களாம். அந்த லெமூரியா கண்டம் தான் சங்க இலக்கியத்தில் காணப்படும் குமரிக்கண்டம் என்று இந்த திராவிட கும்பல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பிதற்றி திரிகிறது. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் புவியியல் துறை சார்ந்த அறிவியலில் என்ன முன்னேற்றம் நடந்தது. லெமூரியா கண்டம் கோட்பாடு புவியியல் துறை சார்ந்த அறிஞர்களால் கழித்துக்கட்டப்பட்டது என்பது இந்த கும்பலுக்கு தெரியுமா என தெரியவில்லை. அப்படியே லெமூரியா கண்டம் இருந்தது உண்மை என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் அது இருந்ததாக சொல்லப்படும் காலம் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னர். ஆனால் மனித இனம் தோன்றியது வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்குள் தான். அதிலும் நாடு, நகரம் என அமைப்புக்களை ஏற்படுத்தி மனித இனம் நாகரீகத்தோடு வாழத்தலைப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாகத்தான். இதிலே லெமூரியா கண்டம் எங்கே வந்தது? வேண்டுமானால் “கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி“ என இன்னொரு கப்ஸாவை அள்ளி விடலாம், நம்புவதற்கு தமிழ் நாட்டில் ஆட்கள் இருப்பதால். உலகத் தமிழ் மாநாடு கூத்தில் லெமூரியாவை ஆராய நிதி வேறு ஒதுக்கப்பட்டிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இந்துத்துவவாதிகளின் அறியாமை, கபடத்தனம், பித்தலாட்டம், முட்டாள்தனம், அரைகுறை அறிவு ஆகியவற்றுக்கு சற்றும் குறையாதது திராவிட இனவாதிகளின் செயல்கள்.

  • It is very essential to know ones past. You can’t deny the fact that the seashore of Tamizh Nadu was more than 100 kilometers east of bay of Bengal and 250 kilometers South of today’s Kanyakumari and about 150 kilometers in the west sea shore. Poombuhar was a famous city and harbor where people from other part of the world came and did business. ..it is proved beyond doubt…but Indian government withdraw the further research on this by saying no fund. It is a fact.

 9. நான் அப்பவே சொன்னேன் “ரிசிஇ மூலம் நதி மூலம் பார்க்ககூடாது”. இப்ப நான் யார் என்று தெரிந்து போச்சு …அட ராம…கோபாலா …

 10. Hi All. A very beautiful article. Understood more than when read in The Hindu.These are some of my observation which I hope will get analyzed by the scientific community
  1. The Indus Valley civilization ended by about 2500 BC and Aryans migrated (not invaded) to Bharat (Region beyond Sindhu (Indus valley) towards east is called bharatavarsha)by 2000 BC a long gap and Indus valley declined well before Aryan migration. With no confrontation, there is no invasion
  2. Not only Dravidian Ancestors entered India, the other Astro Asiatic and Tibeto Burmese (probably Nagas and NE Tribes) also entered earlier than Aryans. But we find evidences of clearing of forests and starting of agriculture in Gangatic plains only with the arrival of Aryans. Indus valley people did not expand till Gangatic plains and the other tribes mentioned probably did not start agriculture at the time of arrival of Aryans. Then how can we say that Aryans invaded. The displacement of tribals by farmers has happend through out the world, including Tamil Nadu. (Please read Gun, Germs and Steel written by Gerard Diamond). Then how can we say Aryans invaded. It is honest to tell Aryans migrated as much as other 4 ancestors.
  3. The Aryan Gods were Indra, Vayu, Agni who were villians in Ahura Mazda religion (they are called as Daevas by Zorastrains) (Zorastrainism), and their Ahura is our Asura. So Aryans and Iranians were related either through friendship or enemity and certainly Asura does not mean Dravidians or other ancestors. It means present Iranians.
  4. Now in Hinduism nobody is worshipping Indra, Vayu or Agni. Hindus are worshipping only Shiva, Krishna, Rama etc, whom did not exist in Vedic times of Aryans. So the Gods and methods of worship of Aryans are dead, so we cannot say that Aryans forced others into their worship
  5. Even Buddha and Mahavira are from Aryan tribes (kshatriyas) and both these religions venerate Rama of Ramayan. This Rama and Krishna (must be a tamil God Mayon of fertile lands) were accepted by Aryans when Indra and Agni lost his significance
  6. Most important point as revealed by this research is whoever our ancestors might be, we share all their legacies and we are the inheritors of what they achieved and failed to achieve. The intermixing through inter caste marriage ended only 1500 years ago. Aryans came around 3500 years ago (about 2000 BC). So far 2000 years every one mixed with each other. Only during Gupta’s period these inter caste marriages were banned and after that we lost all the proud possessions of knowledge, war craft etc and become slaves.
  7. I am a south Indian Tamil Brahmin (Paarpan) and I may be called by Aryan by some. But truth is my forefathers belonged to all these 5 ancestors and I am proud of each of them. It would be foolish to claim our heritage as superior like what is done in the name of Hindutva or Tamilian idealogy (to my understanding dravidian ideology does not do this irrational approach, only our tumbler boys alias Tamil Nazis do this)
  8. I request to Vinavu, please publish a lot of these scientific papers (awaiting the article on gravitational ripples) along with the interpretation of sociology with them. Very few could do it as compared to you
  9. Finally, I know a lot of my observtion will be ridiculed. But I am an open minded learner as I am proud of my common heritage. If you find the observations illogical or wrong, please comment on the same as with only these arguments we all learn

 11. I expect somebody to write an article in vinavu comparing the rigvedic sanskrit culture and Iranian avestan culture. These dravidianists and most tamil scholars are generally fools due to their frog in well mindset. They don’t upgrade their knowledge regularly and don’t approach things with open mind and with learning tendency. They hang on to age old theories which were rejected long ago. And tamil language media, especially print media like news papers and magazines are very worst as far as erudition is concerned. Please publish an article on the latest discovery of gravitational waves.

 12. @Hisfeet

  //Here Aryanism invaded. Thanks for acknowledging.//

  An obvious truth doesnt need my acknowledgement 🙂

  //So Islam invaded. Buddhism invaded. Correct. Exactly.//
  You missed Xianity.
  Your much revered “Christians invaded South Africa”. When they did they made Africans third class citizens in their own country.
  But Islam/Buddism did not make the local people third class citizens in their own country.

  • //You missed Xianity.//

   Sorry… Christianity invaded South Africa. True…

   //When they did they made Africans third class citizens in their own country.
   But Islam/Buddism did not make the local people third class citizens in their own country.//

   True again

   But case of Ethiopia and Egypt gives a different perspective. It may be termed “European Christianity” to give some clarity.

 13. Varnachirama created during Sangamithra Pushya, who was a soldier, killed one of Ashoka’s great great grandson and established hindurajaya. During his tenure to justify caste and varnachrama, created Bhagavath githa and inserted in to epic Mahabharata. so there might be a varnachirama followed prior to that..

 14. ஆரியர்கள் தங்கள் தாயகமான மெசபடொமியா பகுதியிலிருந்து சிந்து சமவெளி பகுதிக்கு வந்து குடியேறினர் என்பது நிரூபணமாகிறது! அப்படி வரும்போதே அவர்களின் ரிக் வேதத்தின் பெரும்பகுதி தொகுக்கப்பட்டுவிட்டது!
  விடை காணவேண்டிய கேள்வி: அவர்களுக்கு முன் சிந்து சமவெளியில் இருந்த நகர கலாச்சாரம் எது என்பதும், அது முற்றிலும் அழிந்து விட்டதா என்பதும் தான்!

  திராவிடர்கள் ஆரியர்களுக்கு முன் இந்தியாவில் இருந்துள்ளனர் என்பதும், கடவுளர்களுக்கு (சிலை அமைத்து வழிபடுவது) கோவில் கட்டுவதும் திராவிட பண்பாடே! சிந்து சமவெளியில் இருக்கும் தடயங்களை வைத்து அயிராவதம் மகாதேவன் போன்றோர், அங்கு இருந்தநாகரிக மக்கள் தமிழர்களே (திராவிடர் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டவர்கள்) என்ற முடிவுக்கு வருகிறார்! மேலும் தமிழர்கள் (திராவிடர்கள்) லெமூரியா கண்டத்திலிருந்து வடக்கே குடி பெயர்ந்தனர் என்பதும் கற்பனையே! பொதுவாக பயிர்த்தொழில் மட்டுமே தெரிந்த தமிழர்கள் , மலைப்பகுதிகளை கடந்து செல்லவேண்டிய நெருக்கடி தெற்கில் இருந்திருக்க வாய்ப்பில்லை! ஆனால் இன்னொரு , பாபிலோனிய செய்தி , அவர்களின் தெற்கு பகுதியான நிலம் கடலால் பிரித்தெடுத்துக்கொள்ளபட்டது என்பது தான்! அவர்கள் மூதாதையினரின் வழிபாடும் தமிழ் தெய்வங்களான சிவன், முருகன், காளி போன்று இருப்பதுதான்!

  ஆகவே, திராவிடர் இந்திய கண்டத்துடனேயே ,நோவாவின் கப்பல் போல வந்து இமய மலையுடன் இணைந்திருக்க வாய்ப்புண்டு!

  மிக பிற்காலத்தில், ஆரியர்களான நெருப்பை வணங்குபவர்கள் ,நிலப்பகுதி வழியாக வந்து , திராவிடர்களுடன் இணைந்துவிட்டனர்!

  ஆரியர்கள் முதன் முதலாக 2-ம் நூற்றாண்டில் குஜராத் பகுதியில் ஆரிய அரசை நிறுவி சுமார் 100 ஆண்டு காலம் ஆண்டுள்ளனர்!

  திராவிடர் எனப்படும் தமிழர்களுக்கு அரசாளும் முனைப்பு இல்லாததால் குடித்தலைனையே பின்பற்றி சிறு சிறு கூட்டமாக இருந்ததால் , ஆரியகள் பெரும் சண்டையில்லாமலேயே திராவிட மக்களூடே ஊடுருவினர்! மகாபாரத கதையில் நாகர்களின் வனப்பகுதியை அழித்து ஆரிய குடியை விஸ்தரிக்கும்வரை இரண்டு இனங்களும் இணக்கமாகவே இருந்துள்ளனர்!

  யாதவ கிருட்டிணன், ஆரிய இந்திரனால் கொல்லப்பட்ட சரித்திரத்தை மறைக்கவே, கிருட்டினன் பஞசபாண்டவருக்கு உதவிய கதையும்,நரகாசுர கதையும் ,நால்வருண கதையும் பிற்காலத்தில் புனையப்பட்டிருத்தல் வேண்டும்!

  • அஜாதசத்ரு,

   எல்லா ஆதாரமும் ஆரியர் வருகை என்பதை ஆரியர் இலக்கியம் கொண்டுதான் கூறபடுகிறது .
   திராவிடர்கள் வட இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை .பஞ்சாப் பஞ்ச நதிபகுதியில் இருந்து துரத்த பட்டார்கள் என்றால் திராவிட இலக்கியத்தில் ஏதேனும் ஒரு குறிப்பு இல்லாமல் போய்விடுமா ?

   நதியை கொண்டுதான் நாகரிகங்கள் அடையாளம் காணப்படுகிறன என்னும் பொழுது வாய் வழி குறிப்பு , நாட்டு புற பாடல் என ஏதேனும் ஒன்றில் குறிப்பிடாமல் விட வாய்ப்பு இல்லை . மாபெரும் நில இழப்பை குறிக்கும் தொனியில் பாடல் இல்லை . இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் தனது முன்னோர் நிலத்தை மீட்டான் என்று எழுதப்படவில்லை. உணவு பழக்கமும் அவ்வளவு பெரிய பெயர்சியால் மாறும் . தானிய உற்பத்தி முறை மாறும் .

   முதுமக்கள் தாழி வட இந்தியாவில் சிந்து சமவெளியில் காணப்பட்டதா ?

   //திராவிடர் எனப்படும் தமிழர்களுக்கு அரசாளும் முனைப்பு இல்லாததால் குடித்தலைனையே பின்பற்றி சிறு சிறு கூட்டமாக இருந்ததால் //

   இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகள் முன் வரியில் சிற்றருஸ்ர்கள் தான் இருந்துள்ளார்கள் .

   //யாதவ கிருட்டிணன், ஆரிய இந்திரனால் கொல்லப்பட்ட சரித்திரத்தை மறைக்கவே,//

   கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்று அர்த்தம் . திராவிட கருப்பனை கடவுளாகக ஆரியர்கள் ஏன் மெனக்கெட வேண்டும்.

   Proof is available for Aryans immigration but not for Dravidian displacement

   • //எல்லா ஆதாரமும் ஆரியர் வருகை என்பதை ஆரியர் இலக்கியம் கொண்டுதான் கூறபடுகிறது .
    திராவிடர்கள் வட இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை .பஞ்சாப் பஞ்ச நதிபகுதியில் இருந்து துரத்த பட்டார்கள் என்றால் திராவிட இலக்கியத்தில் ஏதேனும் ஒரு குறிப்பு இல்லாமல் போய்விடுமா ?//
    “இந்து” என்ற பதமே எந்த இந்துவினாலும் கூறப்படவில்லை! முற்கால திராவிட(தமிழ்) இலக்கியங்கள், ஆரியமரயமாக்கப்பட்டதுடன் , தமிழர்கள் படிப்பறிவு பெறுவதற்கே தடை போடப்பட்டது! எந்த ஆதாரத்தை ஆரியர்கள் விட்டு வைப்பார்கள்?எல்லாமே தனது என , இப்போது புதிய சரித்திரம் எழுதும் ஆர் எஸ் எஸ் போல, மூலநூல்கள் அழித்தொழிக்கப்பட்டு, ஆரியநூல்களே முன்னிறுத்தபட்டன!புத்தர் கால தத்துவங்கள், அவர் போதனைகள் எல்லாம் பாலி மொழியில் அல்லவா இருந்தன! அவர்காலத்துக்கு பின்னரே சமஸ்கிருததிற்கு தாவி, அந்த மொழியையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனரே! இலங்கையில் கண்ட இன அழிப்பு யுத்தம், அன்றே வட இந்தியாவில் நடந்தேறியது!

    சஙககாலமே ஆரியம் தமிழ்நாட்டிலும் நுழைந்த காலம், அப்பொTகு வழக்கில் இருந்த என்னற்ற தமிழ்நூல்கள் தீயிடப்பட்டும், ஆற்றிலிடப்பட்டும் அழிந்தனவே! அந்தக்கொடுமை, வடநாட்டில் அப்போதே நடந்திருக்க வேண்டும்!

    • //தமிழர்கள் படிப்பறிவு பெறுவதற்கே தடை போடப்பட்டது! //

     எந்த காலத்தில் ? எந்த மன்னன்னால் ? குறிப்பிட்ட சாதியினர் மட்டுமா அல்லது ஒட்டு மொத தமிழர்களுக்கும் அந்த தடை நீடித்தா ?

     திருவள்ளுவர் திருட்டு தனமாக படித்தாரா ? தமிழ் இலக்கியம் எரித்தவர்கள் , முநியப்பனையும் கருப்பனையும் விட்டு வைத்து ஏனோ ?

     ஒரு கற்பனை கதை புனைய வேண்டியது . அதாரம் இல்லை அழித்துவிட்டார்கள் என்று புலம்ப வேண்டியது .

     குமரி என்னும் ஒரே ஒரு வார்த்தையையும் லேமூரியாவையும் இணைத்து சிலகாலம்
     சிந்து சமவெளியை வைத்து சிலகாலம்
     பூம்புகாரை வைத்து சிலகாலம்

     தமிழன் பெருமைக்கு நேர்ந்த சோதனை

     • சூத்திரனுக்கு படிக்க (தவம் செய்ய) தடை போட்டது அயொக்கிய ராமன்! சூத்திர முனிவன் தவமியற்றுவதால் , பார்ப்பனனான தனக்கு வருவாய் இன்றி , தனது மகன் இறந்தான் என்று அன்றைய மோடி ராமனிடம் ஒரு பார்ப்பான் முறையிட, சிறிதும் ஆராயாமல் , அந்த மூளையற்ற ராமன் , சம்பூகனை கொன்று பார்பான் பிழைக்க வகை செய்தான் என்பது வால்மீகி!

      திருவள்ளுவன் பார்பன அரசனுக்கு அஞ்சி , தனதுநூலை பகிரங்கமாக அரஙேற்றவே இல்லை! வள்ளுவன் என்ற பெயரேநாம் வைத்துக்கொண்டதுதான்!

      இதே கதைதான் மூலனுக்கும்! சொந்த பெயரையே சொல்ல முடிய வில்லை ! ஆன்மீக நூலாயிருந்தபடியால் தப்பித்தது, அப்படியும் அது கூடு விட்டு கூடு பாய்ந்த பார்ப்பான் வேலையாகத்தான் இருக்கும், சூத்திர மூலனுக்கு எப்படி இவ்வளவு அறிவு என்று கூட கதை உண்டு!

      தமிழில் அறநூல்கள் எழுதிய சமணர்கள் கூண்டோடு கொலையுண்டனர்! ஒரு சில தப்பிபிழைத்தன!

      இன்னும்நக்கீரன் தனதுநூலை அறங்கேற்ற பட்ட பாடு வேற கதை! போதுமா ராமன்!

   • //எல்லா ஆதாரமும் ஆரியர் வருகை என்பதை ஆரியர் இலக்கியம் கொண்டுதான் கூறபடுகிறது .
    திராவிடர்கள் வட இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை .பஞ்சாப் பஞ்ச நதிபகுதியில் இருந்து துரத்த பட்டார்கள் என்றால் திராவிட இலக்கியத்தில் ஏதேனும் ஒரு குறிப்பு இல்லாமல் போய்விடுமா ?//
    “இந்து” என்ற பதமே எந்த இந்துவினாலும் கூறப்படவில்லை! முற்கால திராவிட(தமிழ்) இலக்கியங்கள், ஆரியமரயமாக்கப்பட்டதுடன் , தமிழர்கள் படிப்பறிவு பெறுவதற்கே தடை போடப்பட்டது! எந்த ஆதாரத்தை ஆரியர்கள் விட்டு வைப்பார்கள்?எல்லாமே தனது என , இப்போது புதிய சரித்திரம் எழுதும் ஆர் எஸ் எஸ் போல, மூலநூல்கள் அழித்தொழிக்கப்பட்டு, ஆரியநூல்களே முன்னிறுத்தபட்டன!புத்தர் கால தத்துவங்கள், அவர் போதனைகள் எல்லாம் பாலி மொழியில் அல்லவா இருந்தன! அவர்காலத்துக்கு பின்னரே சமஸ்கிருததிற்கு தாவி, அந்த மொழியையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனரே! இலங்கையில் கண்ட இன அழிப்பு யுத்தம், அன்றே வட இந்தியாவில் நடந்தேறியது!

    சஙககாலமே ஆரியம் தமிழ்நாட்டிலும் நுழைந்த காலம், அப்பொTகு வழக்கில் இருந்த என்னற்ற தமிழ்நூல்கள் தீயிடப்பட்டும், ஆற்றிலிடப்பட்டும் அழிந்தனவே! அந்தக்கொடுமை, வடநாட்டில் அப்போதே நடந்திருக்க வேண்டும்!

    //கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்று அர்த்தம் . திராவிட கருப்பனை கடவுளாகக ஆரியர்கள் ஏன் மெனக்கெட வேண்டும்.//

    திராவிட கருப்பனை அவர்கள் ஆரியனாக காட்டவில்லை, ஆரிய தாசனாக காட்டி, திராவிடன் அறிவை மழுஙச்செய்தது , எதிர்ப்பு கிளம்பாமல் இருக்கத்தான்!

    பின்னாலில் கேரள மகாபலியையும் கொன்றது அதே நாடக பாணியில்தான்!

    நரகாசுரனை வஞ்சகமாக கொன்று, அவன் கிருஷ்னனால் சாகவில்லை, அவன் தாயாரால் கொலையுண்டான் என்றதும் சூழ்ச்சியே! எந்த தாயும் செய்ய துணியாத செயலை திரித்து கதையாக்கி நம் காதில் பூ சுற்றுகிறார்கள்!

   • The aryans are very much like parasite. Unlike predators, parasites typically do not kill their host, are generally much smaller than their host, and will often live in or on their host for an extended period. — thanks to WIKI

   • கி.மு. 480 என்பது கி.மு.610 என ஆகி 7ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம்வரை என இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் கணிக்கலாம். எனினும் இவை அனைத்தையும் கொண்டு இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என உறுதிபடக் கூறலாம். இந்த 6ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துக்கள் மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால், தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கவேண்டும் எனவும் கா.இராசன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழி எழுத்தின் தொடக்ககாலம் குறைந்தபட்சம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது.

    கொடுமணலில் இவைபோக 1456 குறியீடு(GRAFFITI) பொறித்தப் பொருட்களும் கிடைத்துள்ளன. இதில் 858 குறியீடு பொறித்த பொருட்களில் உள்ள குறியீடுகள் முழுமையற்றுப் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருக்கிறது. ஆகவே 598 குறியீடு பொறித்தப் பொருட்களை மட்டுமே கணக்கில் கொள்ளமுடியும். ஆக 500க்கும்மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும், கிட்டத்தட்ட 600 குறியீடு பொறிப்புகளும் கொடுமணலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காட்டு ஆய்வில் கிடைத்துள்ளன(18). “தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என முனைவர் கா.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை முன்பே சொல்லியுள்ளோம். இக்குறியீடுகள் அக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன எனலாம்

    http://www.velichaveedu.com/np-281215-06/

  • //மெசபடொமியா பகுதியிலிருந்து சிந்து சமவெளி பகுதிக்கு என்பது நிரூபணமாகிறது//

   தவறு . மெசபடோமியா மக்கள் க்யூனிக் எழுது வடிவத்தை பயன்படுத்தினார்கள் . அறுபது பேசாக கொண்ட எண்முறையை கொண்டவர்கள் .

   இவை இரண்டும் ஆரியர்களிடம் காணப்படவில்லை . ஆனால் சந்திரனை அடிப்படையாக கொண்ட கால அளவீட்டு முறை மட்டுமே சார்ந்து போகிறது .

   • இந்திய அரசின் வரலாற்று துறையின் ஆவணப்படம் “தி கேட் வே ஆF இன்டியா” கூறுவதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன் ! ஆரியர்கள் எழுத்து முறையை அறிந்து கொண்டது மிக பிற்காலத்தில், ஆதியில் சம்ஸ்க்ருதம் ஒலி வடிவானது மட்டுமே! தேவநாகரி எழுத்து வடிவம் மிக பிற்காலத்தில் ஏற்பட்டதுதான்! சிந்து சமவேளி குறியீடுகள் ஆரியர் அறியாதது மட்டுமல்ல, படிக்கும் முறையிலும் வினோதமானது! ஒரு வரி வலமிருந்து இடமாகவும், அடுத்த வரி இடமிருந்து வலமாகவும் இருப்பதாக திருவாளர் கலையரசன் வலைப்பதிவுகளிலிருந்து அறிகிறோம்!

    • வெளிநாட்டில் ஸ்டோரி ஒப் இந்திய என்கின்ற ஆவன படம் பார்த்தேன் . ராமாயணம் மகாபாரதம் எல்லாம் உண்மை எனபது போல , இதோ இங்கே தான் போர் நடை பெற்றது என்று காட்டினார்கள் . ஒரு குத்து மதிபாகதான் வரலாறு சொல்கிறார்கள். அடுத்த நாட்டு கலாசாரத்தை அவமதிக்க கூடாது எனபது போலவும் இருக்கலாம் .

     அறுதி இட்டு கூறும் அளவிற்கு ஆரியர் வருகை என்னும் பசில் சால்வ் செய்யப்படவில்லை.
     அவர்களுடைய கலாச்சாரமும் மொழியும் மதமும் இந்தியா வந்த பின்னரே முழுமை அடைந்து உள்ளது.

     அவர்களுடைய கலாச்சாரமும் மொழியும் மதமும் இந்தியா வந்த பின்னரே முழுமை அடைந்து உள்ளது. திராவிடர்களுக்கும் அதே கதை தான் . இந்தியா வந்த பின்னரே சமூகம் அமைந்து உள்ளது

 15. சிந்து சமவெளி நாகரிகம் திராவிட/தமிழ் நாகரிகமே என நீண்ட நாட்களுக்கு முன்பே வினவு கட்டுரையின் கருத்துபகுதியில் விவாதிக்கப் பட்டு உள்ளது. அஸ்கோ பர்போலாவின் புத்தகத்தில் இருந்தும் சங்க கவிதைகளில் இருந்தும் பல மேற்கோள்கள் காட்டப்பட்டு இருந்தது.
  மேற்கோள்களில் ஓன்று “மீன் வடிவம்” , இதனை நட்சத்திரத்தை குறிக்க தமிழிலும் சிந்துவெளி இலட்சினைகளிலும் பயன்படுத்தி இருந்தது ஒரு மிக பெரிய ஆதாரம்.
  For more information read, Asco’s book or Saravanan’s comments in that article

 16. Dravidian’s are native people of India. If you ask Apache Indian, Seminole Indian or a Sioux Indian proof for their immigration into USA, they can’t show one, because it is their land they were there from the beginning of time..but if you ask George Bush he can show a proof when was their ancestor came to use, could be some 200 years. Same thing applies to Tamizh in India. Samskirutham had no written scripts until 1century BC, where Tamils had some kind of written symbols, which is proven beyond doubt that the Indus’ scripts are Tamil(Dravidian). Here is purananooru poem written by Kapilar, which is proof that Tamils ruled Duwaraka submerged city in Arabian sea near today’s Gujarat.in Tamil it is referred as Duvarai approximately 4000 years ago. Please pay attention to these lines
  செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
  உவரா ஈகைத் துவரை யாண்டு
  நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
  வேளிருள் வேள விறல் போர் அண்ணல்

  புறநானூறு 201, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: இருங்கோவேள், திணை: பாடாண், துறை: பரிசில்
  இவர் யார் என்குவை ஆயின் இவரே
  ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
  முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
  படுமணி யானைப் பறம்பின் கோமான்
  நெடுமாப் பாரி மகளிர் யானே
  தந்தை தோழன் இவர் என் மகளிர்
  அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
  நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றிச்
  செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
  உவரா ஈகைத் துவரை யாண்டு
  நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
  வேளிருள் வேள விறல் போர் அண்ணல்
  தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே
  ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
  ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்
  யான் தர இவரைக் கொண்மதி வான் கவித்து
  இரும் கடல் உடுத்த இவ் வையகத்து அரும் திறல்
  பொன்படு மால் வரைக் கிழவ வென் வேல்
  உடலுநர் உட்கும் தானைக்
  கெடல் அருங்குரைய நாடு கிழவோயே.

  • சாத்திய அடுக்குகளில் மேல் நிலையில் உள்ள பார்பனர்களின் ஒப்புதல் வாகுமூலம் தான் “இடைநிலை தாழ்த்தப்பட்டவர்களை” என்ற சொற்தொடர். ஆமாம் சாதிய அடுக்குகளில் பார்பனர்கள் என்றுமே ” மேல் ” உள்ளவர்கள் தான் . இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு கிருஷ்ணன்.? பாபனர்களை கணினி மென்பொருள் தயாரிப்பு துறையில் software designer என்று கொண்டோம் எனில் இடை சாதியினரை software engineer என்று கொள்ளலாம். இடை சாதியில் உள்ளவர்களை senior software engineer junior software engineer என்று வேண்டுமானால வகைமை படுத்தி பார்பனர்களின் சாதி ஆளுமை என்ற ஹிந்துத்துவா design ஐ நடைமுறை படுத்துபவர்கள் தானே இந்த இடை சாதி சாதி வெறியர்கள்.

   ஒத்துக்கொள்கின்றேன் கிரீஸ் பாபனர்கள் என்றுமே ஹிந்துத்துவ சாதிய அடுக்குகளில் மேல் மேலானவர்கள் தான்.

 17. //ஆகவே, திராவிடர் இந்திய கண்டத்துடனேயே ,நோவாவின் கப்பல் போல வந்து இமய மலையுடன் இணைந்திருக்க வாய்ப்புண்டு!
  //

  http://www.csmonitor.com/Science/2016/0217/Neanderthals-and-modern-humans-mated-50-000-years-before-we-thought-scientists-say

  Dravidian have Neanderthal gene. This hypothesis that Africa to India directly is out of equation.

 18. குண்மை. ஆனால் இன்றைய சூழல் மாறுபட்ட நிலையில் உள்ளது. இன்று பார்ப்பன பெண்கள் பெரிய பதவியிலிருக்கும் சூத்திர ஆண்களை மணமுடித்துக் கொள்கின்றனர். இதிலுள்ள பொருளாதார உண்மையையும்நாம் தெளிய வேண்டும். அந்த பெரும் பதவியிலுள்ள சூத்திர இளைஞர்களின் உழைப்பு அந்த பார்ப்பனப் பெண்ணின் குடும்பத்திற்குத்தான் பயன்படுகின்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க