privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதுப்பு கெட்ட அரசுக்கு தேர்தல் ஒரு கேடா !

துப்பு கெட்ட அரசுக்கு தேர்தல் ஒரு கேடா !

-

நீங்களும் வாங்க… இந்தச் சனியனை ஒழிக்க !
மூடு டாஸ்மாக்கை ! பொதுக்கூட்டம் – பாகம் 3

shutdown-tasmac-virudhai-meeting-poster-1

விருத்தாசலம் வானொலி திடலில் 27-3-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ராஜு ஆற்றிய உரை:

வழக்கறிஞர். சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

விருத்தாச்சலம் மூடு டாஸ்மாக்கை பொதுக்கூட்டம்
தோழர் ராஜூ உரை

“இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகின்ற மக்கள் அதிகாரம் விருத்தாசலம் பகுதி தோழர்களே, உரையாற்றிய ஆன்றோர்களே,

எவ்வளவோ கட்சி கூட்டத்தை இந்த இடத்தில் பார்த்திருப்பீர்கள். ஊழல் பணத்தில் கூலிக்கு அழைத்து வரப்பட மனிதர்களை வைத்து லஞ்ச பணத்தில் நடத்தபடும் கூட்டம். எந்த கொள்கை உறவும் இருக்காது.  இந்த கூட்டம் அப்படிப்பட்டதல்ல. நீங்களும் வாங்க இந்த சனியனை ஒழிக்க என்ற அறைகூவலுக்கு இதோ நாங்கள் வருகிறோம். டாஸ்மாக் சனியனை ஒழித்து கட்டுவோம் என வந்திருக்கிறீர்கள்.

குடியால் அழிந்த குடும்பங்களின் கொடூரங்களை தினம் தோறும் சீரியலாக  தொலைக்காட்சியில் பத்து நாள் ஒளிபரப்பினால் போதும். எத்தனை ஆயுதம் தாங்கிய போலீசார் இருந்தாலும் டாஸ்மாக்கை பாதுகாக்க முடியாது. மக்கள் அடித்து நொறுக்கி கொளுத்தி விடுவார்கள்.

குடிகார கணவன் மீது உள்ள ஆத்திரத்தால் மூன்று வயது குழந்தையை கொன்று விட்டு சொந்த கிராமத்தில் போலீசால் கைது செய்யபட்டு ஊரே நின்று கவலையோடு பார்க்க நடந்து செல்லும் அந்த அபலை பெண்ணை பார்க்க முடியுமா?

shutdown-tasmac-virudhai-meeting-25குடிகார கணவனோடு தினம்தோறும் குடும்பம் நடத்த முடியாமல் இரு குழந்தைகளை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு தானும் தொங்கி,  சாகாமல் உயிர் பிழைத்து வாழமுடியாமல் தவிக்கும் காட்சியைப் பார்த்து நெஞ்சம் பதறவில்லையா?

கேஸ் சிலிண்டரை வைத்து குடிககிறான், அண்டா குண்டாவைத்து குடிக்கிறான், மண் வெட்டி கடப்பாறையை வைத்து குடிக்கிறான். குடிப்பதற்காக திருடுகிறான்.

குடித்து விட்டு போதை ஏறியவுடன் முதல் இலக்கு பெண்தான். தாய் யார் தாரம் யார், பெத்த பெண் யார் மத்த பெண் யார் என்ற வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறான்.

நன்றாக சிந்தித்து பாருங்கள். நாம் டாஸ்மாக்கை மூடு என்கிறோம். நத்தம் விஸ்வநாதன் முடியாது என்கிறார், யார் இவர்? திண்டுகல்லில் ஸ்டார் ஒயின்ஸ் வைத்து ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தவர் இன்று ஏழு கோடி மக்களுக்கு மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சர். யாரிடம் போய் கேட்பது?

தமிழகத்தின் முதல்வர், சசிகலாவோடு முரண்பட்டு வெளியேற்றிய போது தனது ஒன்பது நிறுவனத்திற்கும் சோ ராமசாமியை இயக்குநராக நியமித்தார் ஜெயா. அதில் சாராயக் கம்பெனி மிடாஸும் அடக்கம். யாரிடம் போய் கேட்பது?

shutdown-tasmac-virudhai-meeting-17இன்று தேர்தல் அதிகாரிகள் நேர்மை பற்றி பேசுகிறார்கள். சசிபெருமாள் போராடி உயிர் விட்டார். டாஸ்மாக்கை எங்கு வைக்கலாம் வைக்கக் கூடாது என்ற விதிமுறைகளை மீறியது இந்த அதிகாரிகள்தான். நீதிமன்றம் மூடு என உத்திரவிட்டும் ஒன்றரை ஆண்டுகாலம் மூடாமல் இழுத்தடித்தவர்கள் இந்த அதிகாரிகள். நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்து சட்டப்படி நட என போராடிதான் செல் போன் கோபுரத்தில் ஏறி உயிர் துறந்தார் சசிபெருமாள். உண்ணாமலை கடை பகுதி மக்கள தீக்குளிப்பு போரட்ம் அறிவித்தார்கள். எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. செல் போன் கோபுரத்தில் ஏறிய பிறகும் ஒரு வாரத்தில் மூடுகிறோம் என வாக்குறுதி கொடுத்திருந்தால் கூட அய்யா சசி பெருமாள் இறந்திருக்கமாட்டார். இந்த அதிகாரிகளுக்கு நம்மை ஆள என்ன அருகதை இருக்கிறது?

காந்தியவாதி எப்படி டவரில் ஏறலாம் என அவரது இறப்பை கொச்சைப் படுத்தியது அ.தி.மு.க அரசாங்கம். இவர்களிடம் எப்படி மனு கொடுப்பது,மன்றாடுவது?

கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் மக்களுக்கு செய்து கொடுக்காமல் போராடும் மக்களை அடிக்கிறது. பொய் வழக்கு போடுகிறது. இது மக்கள் நல அரசா?.

எங்களை வாழ விடு என மக்கள் போராடினால் பொய் வழக்கு போடுகிறார்கள். தடியடி நடத்துகிறார்கள். அதற்கு பெயர் காவல் துறை. காலி பய துறை.

shutdown-tasmac-virudhai-meeting-25டாஸ்மாக் கொடூரங்கள் பற்றி பக்கம் பக்கமாக பத்திரிகைகள் எழுதுகின்றன. கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என அறிவிக்கிறார்கள். இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தார்கள். மாமல்லபுரத்திலும், வண்டலூரிலும், திருச்சி மதுரையிலும் லட்சக்கணக்கில் மக்களை திரட்டும் கட்சிகள் மூடு டாஸ்மாக்கை ஏன் மூட முடியவில்லை? முதல்வராகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

அதிகாரிகள் மக்களுக்கு சேவகம் செய்யும் கூலியாள். அவர்களுக்கு சட்டம் இருக்கு விதிமுறைகள் இருக்கு. அவர்களது 58 வயது வரை நாட்டையும், மக்களையும் பாதுகாக்க நாம் லைசென்ஸ் கொடுத்திருக்கோம். நம் வரிப்பணத்தில் சம்பளம் கொடுக்கிறோம். அவர்களுக்கு எதற்கு அஞ்ச வேண்டும்?

அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அதிகாரிகள் யோக்கியமானவர்கள் என்ற தோற்றத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. திருட கற்றுக் கொடுப்பது இந்த அதிகாரிகள்தான். நகர்மன்ற தலைவருக்கு எதுவும் தெரியாது நகராட்சி ஆணையர்தான் ரோடு போடுவதில், கால்வாய் வெட்டுவதில் எப்படி என கொள்ளையடிக்கக் கத்து கொடுக்கிறார். மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை அனைத்திலும் இந்த கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் என அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அனைவரும் ஆளும் கட்சி மாவட்ட செயலாளராகவே இருக்கிறார்கள். அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்தது என இவர்கள் சொல்வது, ஏ.டி.ஜி.பி நட்ராஜ் போல் பிற்காலத்தில் சீட் கேட்க இன்றைக்கு செயல்படுகிறார்கள்.

நேர்மையானவர்களுக்கு வாக்கு, ஊழலற்ற ஆட்சி, இதெல்லாம் எப்படி சாத்தியம் என தேர்தல் ஆணையம் விளக்கினால் நன்றாக இருக்கும். 10 ஆண்டுகளில் 73 லட்சம் கோடி ஊழல், அதானியின் சொத்து 10 ஆண்டுகளில் 3,500 கோடியிலிருந்து 75 ஆயிரம் கோடியாக, மின்சாரம் கொள்முதலில் ஒரு லட்சம் கோடி கடன் ஊழல், நிலக்கரியில் 1-80 லட்சம் கோடி ஊழல் அனைத்தும் அதிகாரிகள் துணையோடு தான் நடக்கின்றது.

எம்.எல்.ஏ. எம்.பி. அயோக்கியர்கள்தான், நாடு நாசமா போச்சு. இந்த அரசு கட்டமைப்பில் யோக்கியன் என்ன செய்ய முடியும் என கேட்கிறோம். லஞ்சம் வாங்கிய பொறியாளரை தண்டிக்க முடியுமா? பன்னாட்டு கம்பெனிக்கு ஆதரவாக அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை தண்டிக்க முடியுமா? என்ன அதிகாரம் இருக்கிறது.

நாம் ஓட்டு பேடுகிறோம், நம்மை கேட்டா கெயில், மீத்தேன், அனுமதி கொடுத்தார்கள். தனியார் சுயநிதி கல்லூரி மெட்ரிக் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தார்கள். மணல், கிரானைட் தாதுமணல் கொள்ளைக்கு அனுமதி கொடுக்கும் போது நம்மை கேட்டார்களா? கண்முன்னே நடக்கிறது. யார் கேட்பது யாரிடம் கேட்பது? தேர்தல் ஆணையம் பதில் சொல்லட்டும்.

இந்த அரசு கட்டமைப்பால் எந்த கொள்ளைகளையும் தடுக்க முடியவில்லை. ஏன் என்றால் இந்த கட்டமைப்புதான் காரணம். சாதி கொடுமைகள், ஆணவ படுகொலைகள், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கல்வி கட்டணக் கொள்ளை அனைத்தும் சட்டப்படிதான் நடக்கிறது. நீதிமன்றம் தடுக்க முடியவில்லை.

5000 எல்.கே.ஜி. கட்டணம் என நிர்ணியிக்கிறார்கள். 50,000 வசூலிக்கின்றது தனியார் பள்ளிகள். அதிகாரிகள், நீதிமன்றங்கள் என்ன செய்ய முடிந்தது? தரம் எனச் சொல்லி கற்றல் என்ற முறைக்கு எதிராக குழந்தைகளை துன்புறுத்துவது நடக்கிறது.

தான் வகுத்த நெறிமுறைகளை தானே கடைபிடிக்க முடியாமல் தள்ளாடுகிறது இந்த அமைப்பு. மக்களின் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு தரமுடியாமல் தோற்று விட்டது. மக்களுக்கு எதிர் நிலை சக்தியானதுடன் வேண்டாத சுமையாகி போய் விட்டது. அரசின் அனைத்து உறுப்புகளும் நிதானமிழந்து தள்ளாடும் குடிகாரனைப் போல் நிற்கின்றன. ஓங்கி ஒரு குத்து விட ஒரு அமைப்பு இல்லை. மக்கள் எழுந்து நின்றால் இந்த அரசு கட்டமைப்பை அகற்றி தங்களுக்கான மாற்றை உருவாக்கி கொள்ள முடியும்.

சிலைகளை மூடு என தேர்தல் ஆணையம் உத்திரவிட்டால் திருவள்ளுவர் சிலைளை மூடுகிறார்கள். 144 தடை உத்திரவு போட்டு பணம் கொடுத்து தே ர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்று இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்த கட்சிகளே நிற்காமல் புறக்கணிக்கிறது. ஓ.பி.எஸ், நத்தம், பழனியப்பன் ஆகியோரிடம் 30,000 கோடிகளை போயசில் அடித்து எழுதி வாங்கி விட்டார்கள் என பேசப்படுகிறது. தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலா, கொள்ளையடித்த மக்கள் பணத்தை அரசு கஜானாவிற்கு கொண்டு வரவேண்டாமா? இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?

அரசு அதிகார வர்க்கம் முழுவதும் கிரிமினல் மயமாகி விட்டது. இவர்களிடம் எந்த நியாயமும் கிடைக்காது. 24 மணி நேரத்தில் சென்னை மாசு கட்டுபாட்டு வாரியம், மாநில சுற்றுச் சூழல் ஆணையம், பொதுப் பணித்துறை, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் என மணல் கொள்ளைக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. சாதி சான்றிதழ் வாங்க, என் அப்பனுக்கு நான் தான் வாரிசு என சான்றிதழ் வாங்க எத்தனை டேபிள், நம் பேப்பர் நகர வேண்டு்ம்? எவ்ளவு லஞ்சம், எத்தனை நாள் அலைய வேண்டும் தெரியுமா?

இது மக்களுக்கான அரசு என்ற அருகதை இழந்து விட்டது. திருச்சி மாநாட்டில் மூடு டாஸ்மாக் என பேசியதற்காக என்மீதும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தோழர் காளியப்பன், ஆனந்தியம்மாள், டேவிட்ராஜ் என்ற இளைஞர், டாஸ்மாக் பணியாளர் சங்க செயலாளர் தனசேகரன் ஆகியோர் மீதும் தேசதுரோக வழக்கு ஒரு மாதத்திற்கு பிறகு பதிவு செய்திருக்கிறார்கள். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

60 ஆண்டுகளாக ஓட்டு போட்டோம். நமக்கு எந்த அதிகாரமும் எந்த உரிமையும் இல்லாத தேர்தலில் நாம் ஏன் பங்கேற்க வேண்டும். தீபாவளி ரீலிஸ் படத்தை பார்க்கிறோம் போனா 150 ரூ படம் நல்லாயிருந்தா சந்தோசம் அவ்வளவுதான். ஆனால் தேர்தல் ரீலிஸ் செய்யும் பல கட்சிகளின் படத்தை பார்த்து விட்டால் அதன் விளைவு கடுமையாக இருக்கும். இரண்டுல ஒண்ண தொடு கண்டிப்பாக பாரு என தேர்தல் ஆணையம் கட்டாயபடுத்துகிறது. பிரச்சாரம் தாங்க முடியல.

ஜனநாயகம் என பேசும் கட்சிகளிடம் என்ன ஜனநாயகம் இருக்கிறது. கட்சிக்கு எவ்வளவு கொடுப்ப, நீ எவ்வளவு செலவு செய்வ, என்ன சாதி நம்ம கட்சி ஜெயிக்குமா? யார் கூட போகலாம்? வேலை வாய்ப்பு முகாம் போல வேட்பாளர் தேர்வுக்கு போறாங்க, என்ன அநியாயம்!

வாசன் கட்சியில கூட 4000 பேர் மனு போட்டிருக்காங்க?

விஜயகாந்த் சிறந்த தலைவர் என்று பேசுகிறார்கள். நாளை தனுஷ் சிறந்தவராக தெரியலாம். அவர் உருவில் பகத் சிங்கை ராம கிருஷ்ணனும் முத்தரசனும் பார்க்கலாம். நம் தலை எழுத்து. இந்த நாட்டில் வாழ வெட்கமாக இருக்கிறது. பிரேம லதா, அவர் தம்பி சுதீஷ், விஜயகாந்த் என்ன கொள்கை இருக்கிறது. யோசித்து பாருங்கள்.

அரசியல்  லாபம் தரும் தொழிலாக, பொறுக்கி தின்னும் இடமாக மாறிவிட்டது. இதில் மக்களுக்கு என்ன வேலை? மக்கள் பிரச்சினைக்கு என்ன காரணம் என்ன தீர்வு, எந்த விவாதமும் இல்லை. மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வளிக்க முடியாத இந்த கட்டமைப்பில் நமக்கு எந்த பலனும் இல்லை. இத்து போன கைலியாக பாழடைந்த வீடாக மாறி போனதில் எத்தனை முறை ஓட்டு போட்டாலும், பழுது பார்த்தாலும் மீண்டும் மீண்டும் கிழிகிறது. கைலியை மாற்றுவது, வீட்டை இடித்து புதிதாக கட்டுவது இதை தவிர வேறு வழியில்லை. அது தான் மக்கள் அதிகாரம் என்கிறோம்.”

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

  1. மக்கள் அதிகாரம் ஆயுதம் இல்லாமல் வராது… அயுதம் ஏந்தும் தைரியம் தமிழனுக்கு வராது.. இங்கே எல்லோருக்கும் அவரவர் குடும்பம் மட்டுமே முக்கியம்… விடுதலை புலிகளின் முட்டாள்தனமான ஆய்தம் ஏந்திய போராட்டம் உலகம் முழுவது தீவீரவாத கூட்டத்தையே சிந்திக்கவைத்தது… எவ்வளவு பேசினாலும் “காசு குடுத்து” காரியம் சாதிக்க 100 சதவிகித மக்கள் தயாராக உள்ள போது… காசு கையில் இல்லாதவன் கூப்பாடு வேலைக்காவாது… காசு கையில் உள்ளவன் “மூடிக்கொண்டு” இருப்பான்… இங்கே அவ்வளவு தான்.

  2. மக்கள் அதிகாரம் என்பதே
    மக்கள் அதிகாரம் என்பதே
    வாக்கு சீட்டுதான் !

  3. அக்காளின் கலியாணத்தினூடும்
    அண்ணன் வீட்டில் மொட்டைமாடி கிரிக்கெட்டினூடும்
    தமக்கை குழந்தைகளுடன் விளையாட்டினூடும்
    தோழன் வீட்டு கலியாணப் பந்தி பரிமாறலினூடும்
    எதிர்வீட்டு தனி தாத்தா எழவு சடங்கினூடும்
    ரயில் பயனதினூடும்
    ஒரு நல்ல திரைப்படத்தின் மாலைநேரக் காட்சியினூடும்
    ஆக சிறந்த வேலையினூடும்
    தலை போகும் பிரச்சனைகளூடும்
    இரவு 9.30 எனக்குள் படபடத்தால்..நாளட்னும் தினவரி கட்டும் தமிழ்நாட்டு குடிமகனே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க