முகப்புசெய்திகளச் செய்திகள் - 04/04/2016

களச் செய்திகள் – 04/04/2016

-

நொய்யல் நதியை கூவமாக்கும் கார்ப்பரேட் சாமியார்களும் கோவை முதலாளிகளும்!

நொய்யலை விழுங்கி ஏப்பமிட்டு  “உயிர் மூச்சென்று” நாடகமா ? – ஆர்ப்பாட்டம்!

protect-noyyal-bannerநொய்யல் மேற்குத் தொடர்ச்சி மலையில், கோவைக்கு மேற்கே தொடங்கி, கோவை-திருப்பூர்-ஈரோடு-கரூர் வழியாக ஓடும் ஒரு ஜீவ நதி. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பல்வேறு கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள், தொழில் கூட்டு நிறுவனங்கள், கார்பரேட் சாமியார்களின் மடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு இந்நதியே கோவையின் கூவமாகி வருகிறது.

ஈஷா யோக மையம். சின்மயா கல்வி நிறுவனம், காருண்யா பல்கலைக்கழகம் போன்றவை ஆக்கிரமிப்பாளர்களில் முக்கியமானவை. பேரூர் படித்துறையின் கழிவுகளும், சாயப் பட்டறைகளும், அரசு நிறுவனங்களும் இவற்றிற்கு இசைவான அரசின் கொள்கைகளுமே நொய்யலின் இந்நிலைக்கு அப்பட்டமான காரணங்களாகும்.

நொய்யலாற்றை மீட்க வேண்டியது அவசர அவசியமானது என்ற போதும், அது சீரழிக்கப்பட்ட மூல காரணங்களைக் களையாமல் அது முழுமையாகச் சாத்தியமில்லை. இந்நிலையில் “சிறுதுளி” என்ற பிரிக்கால் நிறுவன இயக்குனர் வனிதா மோகன் என்பவரை நிர்வாக அறங்காவலராக கொண்டு இயங்கி வரும் அமைப்பு “நொய்யல் எங்கள் உயிர் மூச்சு” என்ற பெயரில் நொய்யலை சுத்தப்படுத்துவதாகக் கூறி அண்ணா ஹசாரேவைக் கொண்டு விழா ஒன்றை நடத்தியுள்ளது.

protect-noyyal-demo-poster“சிறுதுளி” வனிதா மோகன் தனது மகன் பெயரில் தாமரா ரிசார்ட் எனும் தங்கும் விடுதியை இதே நொய்யலாற்றின் கிளை ஓடை ஒன்றின் கரை மீது பெருமாள் கோவில் பதி எனும் இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டி நடத்தி வருகிறார். ஆனால், “நொய்யலுக்கு நூறு ரூபாய்” தொடங்கி சூர்யா, அண்ணா ஹசாரே கலந்து கொண்ட இந்நிகழ்வு வரை பல நாடகங்கள் நடத்தி வருகிறார்.

உண்மையான காரணங்களை மறைத்துவிட்டு நொய்யலைக் காப்போம் எனக் கிளம்பியிருக்கும் இந்த ஏமாற்றுக் காரர்களிடம் நொய்யல் புனரமைப்பை ஒப்படைக்கக் கூடாது. அரசே ஏற்று இதைச் செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் இக்கூட்டு மக்களின் வாழ்வாதார உரிமையை, நதியுடனான மக்களின் பிணைப்பை பிடுங்கி அழித்துவிடும் என எச்சரிக்கிறோம் !

ஆடு நனைய ஓநாய் அழுததாம் !
கார்ப்பரேட் முதலாளி ‘சிறுதுளி’ வனிதா மோகனின்
நொய்யல் பாதுகாப்பு கபட நாடகம் !

ஆலந்துறை இருட்டுப்பள்ளத்தில் நொய்யல் ஆற்றின் மீது
வனிதா மோகன் கட்டியிருக்கும் தாமரா ரிசார்ட்டை இழுத்து மூடுவோம் !

உழைக்கும் மக்களே !

  • நொய்யலை ஆக்கிரமித்தும் நாசமாக்கியும் வருகிற அரசு நிறுவனங்கள் – கார்ப்பரேட்டுகள் சாயப்பட்டறை முதலாளியின் கொட்டுச் சாதியை முறியடிப்போம் !
  • நொய்யலைப் பாதுகாக்க ஏகாதிபத்திய கைக்கூலி, பிரிக்கால் முதலாளி, தொழிலாளிகளின் விரோதி வனிதாமோகன் வழி தீர்வல்ல
  • அதிகாரத்தைக் கையிலெடுப்போம் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம் !

ஆர்ப்பாட்டம்

protect-noyyal-demo-131.03.2016 – காலை 10:30 மணிக்கு
ஆலாந்துறை பேருந்து நிறுத்தம், கோவை.

மக்கள் கலை இலக்கியக் கழகம்-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி-புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கோவை – 9159476849

ஆர்ப்பாட்ட முழக்கம்

புதிய ஜனநாயகப் புரட்சி வெல்க !
மார்க்சிய, லெனினிய மாவோ சிந்தனை ஓங்குக !

நக்சல்பாரிகளே தேசபக்தர்கள் !
நொய்யல் ஆறு ! எங்கள் ஆறு !

ஜக்கி, சின்மயா, காருண்யா
சிறுதுளி கபடதாரியே வெளியேறு !

மழை நீர் தேங்க இடமில்ல
நீரோடைகள் எதையும் காணல
மலையெல்லாம் கார்ப்பரேட்டு
காடெல்லாம் ரிசார்ட்டு
இதுக்கு கவர்ன்மெண்ட்டு சப்போர்ட்டு

விவசாயத்துக்கு நீரில்ல
வன விலங்குக்கு தண்ணியில்ல
ஒரு முழு நதிய காணல
நொய்யலை விழுங்கி ஏப்பமிட்டு
“உயிர் மூச்சென்று” நாடகமா ?
ஆக்கிரமித்து அழித்துவிட்டு
காப்பது போல் நாடகமா ?

ஆத்தங்கரையில தாமரா ரிசார்ட்டு
நொய்யலைக் காக்க கார்ப்பரேட் கூட்டு !
இழுத்து மூடுவோம் ! இழுத்து மூடுவோம் !
தாமரா ரிசார்ட்டை இழுத்து மூடுவோம் !

போலீசு, கோர்ட்டு, வனத்துறையும்
சிறுதுளி வனிதாவின் கூட்டாளிகளே !
அருவா, கடப்பாரை, மண்வெட்டியோடு
விவசாயி, மாணவர், தொழிலாளர்
உழைக்கும் மக்கள் களமிறங்கி
ஆக்கிரமிப்புகளை அகற்றிடுவோம் !
நொய்யலை நாமே காத்திடுவோம்

மூடு டாஸ்மாக்கை மாநாட்டில் பேசியதால் பாய்ந்தது தேசத்துரோக வழக்கு – விருதையில் கண்டன ஆர்ப்பாட்டம்

sedition-case-pala-posterமூடு டாஸ்மாக்கை! திருச்சி மாநாட்டில் பேசிய 6 பேர் மீது தேசத் துரோக வழக்கா?

கண்டன ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 5, 2016, செவ்வாய் மாலை 5.00 மணி
பாலக்கரை, விருத்தாசலம்

தமிழக அரசே!

  • மூடு டாஸ்மாக்கை என பேசுபவர்கள் தேசத் துரோகிகளா?
  • சாராயம் விற்று சமூகத்தை சீரழிப்பவர்கள் தேசபக்தர்களா?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

மேலூர் நீதிமன்றத்தில் பி.ஆர்.பி விடுதலை – குற்றவாளியை நாமே தண்டிப்போம் ! – பென்னாகரம் வி.வி.மு செய்தி

ட்டமும், நீதி மன்றமும் எப்போதுமே ஏழை மக்களுக்கானது அல்ல. ஏழை மக்களை அடக்கவே இருக்கும் கருவிகள் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்தி வருகிறது நீதித்துறை.

தற்போது நீதி மன்றத்தின் மூலம் விடுதலை பெற்றிருக்கின்ற பி.ஆ.ர்பி வழக்கு நமக்கு கொடுத்திருக்கும் எச்சரிக்கை இது.

இரவு பகலாக சகாயம் சுடுகாடு முதல் கிரானைட் கொள்ளை நடந்த இடங்கள் வரை அலைந்து திரிந்தார். பல நூற்றுக்கணக்கான பக்கங்களில் கிரானைட் கொள்ளையை அறிக்கையாக கொடுத்தார். அந்த அறிக்கைகளுக்கு எல்லாம் என்ன பதில் கிடைக்குமோ அதைத்தான் முன்னோட்டமாக மேலூர் நீதிமன்றத்தின் நீதிபதி மகேந்திர பூபதி தீர்ப்பாக கொடுத்துள்ளார்.

இது இந்த நாட்டு மக்களை இழிச்சவாயர்களாகக் கருதும் தீர்ப்பு என்பதைத் தவிர வேறென்ன? இந்தக் கட்டமைப்பு எல்லாம் மக்களுக்கு எதிரானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேட தேவையில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயாவிற்கும், தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கும் எதிராக இந்த நீதிமன்றங்களில் என்ன தீர்ப்பு வந்துவிடும்.

இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் எந்தத் திருடர்களையும் இந்த அரசமைப்பு ஒருபோதும் தண்டித்து விடாது. ஏனெனில் இந்த திருடர்களை பாதுகாக்கவே தான் இந்த சட்டம், போலீசு, நீதி மன்றம் எல்லாம், நமக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது.

அதானி முதல், அம்பானி வரை இந்த இயற்கை வளத்தை சுரண்டும் திருடர்களை யோக்கிய சிகாமணியாக காட்டி வருகின்றனர். ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை திருடிய விஜய் மல்லையாவை காப்பாற்றி வருகிறவர்கள் தானே இவர்கள். இன்னும் நாம் பொறுமை காத்து வரவேண்டுமா என்ன?

அதிகாரத்தை கையிலெடுப்போம், குற்றவாளிகளை நாமே வீதியில் வைத்து தண்டிப்போம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி
பென்னாகரம் வட்டம்.
தொடர்புக்கு 9943312467

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க