privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கொலைகார ராம்கி நிறுவனத்தை விரட்டியடிப்போம்!

கொலைகார ராம்கி நிறுவனத்தை விரட்டியடிப்போம்!

-

மக்கள் வாழ்வாதாரத்தை காவு வாங்கும் கொலைகார ராம்கி நிறுவனத்தை விரட்டியடிப்போம்!

mukkulam-medical-waste-banner-2விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் நெல், கடலை, வெள்ளரி, துவரை, தட்டங்காய் செடி, காய்கறிகள் என முப்போகமும் விளையும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயங்கள்.

mukkulam-medical-waste-poster-12006-ம் ஆண்டு அ.முக்குளம் அருகில் “ராம்கி ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல்” என்கிற பெயரில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை தொடங்கப்பட்டு. இதன் பாதிப்பை உணரத் தொடங்கிய மக்கள் ராம்கி ஆலையால் பாதிப்பு என முறையிட்டும், கிராமப் பஞ்சாயத்திற்கு வரி செலுத்தவில்லை எனவும் முறையிட்டனர். அதன் அடிப்படையில் 26-06-2013-ல் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 04-07-2013-ல் ராம்கி நிறுவனத்தால் விவசாயம் மற்றும் மக்களுக்கு அபாயம் என சீல் வைக்கப்பட்டது. ஆனால், சட்டத்தின் ஓட்டையினுள் புகுந்து ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கியது.

mukkulam-medical-waste-demo-5அதன்பிறகு மருத்துவக் கழிவுகளை எரிப்பதனால் வெளிப்படக் கூடிய “பையாக்ஸின்” “பியூரான்” வாயுக்களால் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, சுவாசக் கோளாறு, கால்நடைகள் சாவு, விவசாய மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் அதிகார வர்க்கம் செவிசாய்க்கவில்லை. தீர்வு கிடைக்காமல் துவண்டு போன மக்கள் அதன் பிறகு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர்பு கிடைத்து போராடத் துவங்கினர்.

இதன்படி 03-04-2016 அன்று அ.முக்குளம் கிராமத்தின் கொலைகார ராம்கி நிறுவனத்தை மூடுமாறு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

mukkulam-medical-waste-demo-4ஆர்ப்பாட்டம் துவங்கியதும் சசிக்குமாரின் கவிதை வரிகளை முக்குளத்தின் அருண்குமார் எழுச்சிகரமாக வாசித்து போராட்டம் துவங்கியது.

அதன் பிறகு அ.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு வீரா தனது கண்டன உரையில் ராம்கி நிறுவனத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதையும், கழிவுகள் உருவாக்கத்தில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருப்பதையும் குறிப்பிட்டு, புதிதாகத் தொடங்கியுள்ள ராம்கியின் “தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட்” நிறுவனம் ஏகாதிபத்திய அமெரிக்காவின் மின்னணுக் கழிவுகளை விவசாய பூமியின் புதைக்கும் திட்டத்தை அம்பலப்படுத்தினார்.

mukkulam-medical-waste-demo-2போபால் விஷவாயுக் கழிவுகளை அகற்றும் பணியை ஜபல்பூர் உயர்நீதிமன்றம் ரூ 117 கோடிக்கும், ஆண்டு பராமரிப்பிற்கு ரூ 15 இலட்சமும் என ராம்கி நிறுவனத்திடம் அந்தப் பணியைக் கொடுத்ததன் அபாயங்களை அம்பலப்படுத்தியதோடு, பிரேசில் நாட்டு ஒப்பந்தத்தை மீறி “நாட் நியூஸ் குட்ஸ்” என்ற பெயரில் உலக நாடுகளின் கழிவுகள் முதலாளிகளின் சந்தைக்காக இங்கு அனுப்பப்படுவதையும், வெளிநாட்டுக் கழிவுகளைக் கொட்ட தகுதியான நாடாகவே நமது நாட்டை ஓட்டுப் பொறுக்கிகள் வைத்துள்ளனர். ஆதலால், ஓட்டுப் போட்டு ராம்கியை விரட்ட இயலாது. ஆளும் அருகதை இழந்த இந்த அரசுக் கட்டமைப்பிற்கே பூட்டு போட்டு மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுப்பதே தீர்வு என்பதை உணர்த்தும் விதமாகப் பேசினார்.

mukkulam-medical-waste-demo-3அ.முக்குளத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் முருகேஸ்வரி கண்டன முழக்கங்கள் எழுப்பினார்.

இறுதியாக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் எழுச்சிகரமான விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பி கண்டன உரையைத் துவங்கினார்.

அ.முக்குளம் கிராமப் பஞ்சாயத்தில் இதுவரையில் முறையாக அனுமதி வாங்கவில்லை. விதியை மீறி 12 போர்கள் ராம்கி நிறுவனத்தில் போடப்பட்டுள்ளதையும், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பையும் விளக்கியதோடு, ராம்கி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் ராம்கியின் லாபத்திற்காகவே என்பதை அம்பலப்படுத்தினார்.

mukkulam-medical-waste-demo-1திருச்சுழியில் அதிகாரிகள் அனைத்து கிராம மக்கள் மற்றும் ராம்கி நிறுவன அதிகாரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய போது 194 பேர் கலந்து கொண்ட முன்னர் நடந்த கூட்டத்தை 350 பேர் நிறுவனத்திற்கு ஆதரவு என்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ராம்கி நிறுவனத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததையும் அரசும், அதிகாரிகளும் மக்களுக்கானவர் அல்ல அவர்கள் ராம்கியின் கையாட்கள் என்பதை எடுத்துரைத்தார்.

12 கிராமங்கள் ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடுமாறு தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் செவிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததையும், அரசியல் சட்டம் சரத்து 21-ன்படி மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் உரிமை அரசுக்குக் கிடையாது என்பதை மக்களுக்கு விளக்கினார்.

மேலும் திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை அருகில் இதேபோன்று ஆலையில் இரண்டு ஆடு இறந்ததற்காக அந்த நிறுவனம் மூடப்பட்டதையும், ஆனால் இங்கு 100-க்கு மேற்பட்ட மக்கள் இறந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை ராம்கி நிறுவனத்தின் கைக்கூலிகள்தான் என அம்பலப்படுத்தினார்.

மருத்துவக் கழிவு ஆலையை மூடாமல் 200 ஏக்கர் பரப்பளவில் எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டும் புதிய நிறுவனத்திற்கு அரசே ஆதரவாக இருந்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதோடு, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் முக்கூட்டு களவாணிகளாக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.

இதற்கெல்லாம் ஓட்டுப் போடுவதால் தீர்வு இல்லை. அரசுக் கட்டமைப்பிற்கு எதிராக “மக்கள் போராட்டம்தான் தீர்வு” என்பதை விளக்கியதோடு அடுத்த கட்ட போராட்டத்தையும் அறிவித்தார்.

இப்படியான புரட்சிகர அரசியலை அறிந்திராத அந்தப் பகுதி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் புதிய நம்பிக்கை பெற்று கொலைகார ராம்கியை விரட்டியடிக்க அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இறுதியாக அ.முக்குளத்தைச் சேர்ந்த அன்பு வீரா நன்றியுரை கூறினார்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

mukkulam-medical-waste-noticeவெல்லட்டும் ! வெல்லட்டும் !
கொலைகார ராம்கிக்கு
எதிரான போராட்டம் வெல்லட்டும் ! வெல்லட்டும் !

இழுத்து மூடு ! இழுத்து மூடு !
மக்களைக் கொல்லும் ராம்கியை
இழுத்து மூடு ! இழுத்து மூடு !

படுகொலை ! படுகொலை !
100 -க்கும் மேலான
முக்குளம்
மக்கள் படுகொலை !
படுகொலை ! படுகொலை !
ராம்கி நிறுவனம்
நடத்திய படுகொலை !

உரிமை இல்ல ! உரிமை இல்ல !
வாழவே உரிமை இல்ல !

கேடா ? கேடா ?
தேர்தல் ஒரு கேடா ?

கேடா ? கேடா ?
ஓட்டு ஒரு கேடா ?

இளப்பமா ? இளப்பமா ?
எங்கள் உயிர்
இளப்பமா ?

நூறு மனுக்கள் கொடுத்தாச்சு !
ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தியாச்சு !
பயனில்ல ! பயனில்ல !
தூங்குது ! தூக்குது !
அரசாங்கம் தூங்குது !

மானக்கேடு ! வெட்கக்கேடு !
அரசாங்கமே வெட்கக்கேடு !

பதில் சொல் ! பதில் சொல் !
அரசே பதில் சொல் !
பதில் சொல் ! பதில் !
மாவட்ட ஆட்சியரே
பதில் சொல் !
தாசில்தாரே பதில் சொல் !

நிறுவனம் ! நிறுவனம் !
மக்களைக் கொல்லும் நிறுவனம்
கொலைகார நிறுவனம்
ராம்கி நிறுவனம் !
தெரியாதா ? தெரியாதா ?
அரசுக்குத் தெரியாதா?

தேவையில்ல ! தேவையில்ல !
தேர்தல் தேவையில்ல.

வாழனும் ! வாழனும் !
உயிரோட வாழனும் !

வராத ! வராத !
கொலைகார ராம்கியை மூடாமல் வராத !
ஊருக்குள்ள வராத !

விடமாட்டோம் ! விடமாட்டோம் !
ராம்கியை மூடாமல்
எந்தக் கட்சிக்காரனையும் ஊருக்குள்ள விடமாட்டோம் !

புறக்கணிப்போம் ! புறக்கணிப்போம் !
ராம்கியை மூடாவிட்டால் தேர்தலையே புறக்கணிப்போம் !

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க