Tuesday, May 11, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் காமெராவில் சிக்கிய உடுமலை அரிவாளும் வைகோவின் நாதசுரமும் !

காமெராவில் சிக்கிய உடுமலை அரிவாளும் வைகோவின் நாதசுரமும் !

-

ள்ளத்திலிருந்து சாதி ஆதிக்க உணர்வை அகற்றியவன் முழு போதையில் இருந்தாலும், அவன் வாயிலிருந்து சாதிவெறி வசைச்சொல் வருவதில்லை. திருடுவது குற்றம் என்று பயின்ற ஒரு சிறுவன், பசி கண்ணை இருட்டினாலும், கடையிலிருந்து தின்பண்டத்தைத் திருட கை நீட்டுவதில்லை.

பெண்ணை ஒரு நுகர்வுப் பண்டமாகக் கருதாதவன், பேருந்தில் அழகான ஒரு பெண்ணைக் கண்டு உள்ளம் கிளர்ச்சியுற்றாலும், அவள் மீது அனிச்சையாக கை போடுவதில்லை.

அப்படிக் கை போட்டுவிட்டு, ‘’சாரி, தவறிக் கை பட்டுவிட்டது’’ என்று வருத்தம் தெரிவிப்பவனை, ‘யோக்கியன்’ என்று யாரும் ஏற்பதில்லை.

‘’நான் அந்தப் பொருளில் பேசவே இல்லை. மனதால் கூட அப்படி நினைக்கவில்லை’’ என்கிறார் வைகோ.
‘’நான் அந்தப் பொருளில் பேசவே இல்லை. மனதால் கூட அப்படி நினைக்கவில்லை’’

வை.கோபாலசாமி கை நீட்டியிருக்கிறார். ரகசியமாக அல்ல, ஊரறிய! திமுக தலைவர் கருணாநிதியை சாதி ரீதியாக இழிவு படுத்தி அவர் பேசியது வாய்தவறிப் பேசியதல்ல. மிகவும் ரசித்து ருசித்துப் பேசினார். ‘ஆதித்தொழில்’ என்று தான் சொல்வதை எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதில் பெரிதும் கவனம் செலுத்தினார்.

நாதசுரம் வாசிப்பதை தான் இழிவு படுத்திச் சொல்லவில்லை என்றும், அது தமிழரின் ‘உன்னதக் கலை’ என்றும் நக்கலாகச் சொல்லி, கருணாநிதியை சாதி ரீதியாக இழிவு படுத்துவதற்கு நயம் கூட்டினார்.

பிறகு, சாமர்த்தியமாக ஒரு மன்னிப்பு அறிக்கை விட்டிருக்கிறார். அந்த மன்னிப்பு அறிக்கையைப் படித்துப் பாருங்கள்.

டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, (மரியாதையைக் கவனியுங்கள்) அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் அவர் மனதில் எண்ணம் இல்லையாம்.

‘’நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத் தெரியும்’’ என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டதாம். சாதியைக் குறித்து சொன்னதாக தான் ஒரு பழிக்கு ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறாராம்.

அப்புறம் தன் மீது கொலைப்பழி சுமத்தியது பற்றி ஒரு நினைவூட்டல். அப்புறம், தான் செய்தது ஒரு ‘வாழ்நாள் குற்றம்’ என்று ஒரு மன்னிப்பு !

‘’நான் அந்தப் பொருளில் பேசவே இல்லை. மனதால் கூட அப்படி நினைக்கவில்லை’’ என்கிறார் வைகோ.

அபாண்டமான பழியில் சிக்கி விட்டோமே என்று தனது நிலையை எண்ணித்தான் அவர் வேதனைப் படுகிறார் என்பதை அந்த அறிக்கையை கவனமாகப் படிக்கும் யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் செய்த தவறுக்கு வைகோ வருந்தி விட்டதாகச் சொல்லி கோப்பை மூடுகின்றன பல ஊடகங்கள்.

‘’அப்படி ஒரு சாதித் திமிர் என்னிடம் இருந்திருக்கிறது. அதை உணர்கிறேன். அவமானத்தால் தலை குனிகிறேன்’’ என்று வைகோ சொல்லியிருந்தால் அது யோக்கியமான பேச்சு.

‘’நான் சாதிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது கலைஞருக்கே தெரியும்’’ என்கிறார் வைகோ. அப்புறம் யாரை ஏமாற்றுவதற்கு மன்னிப்பு நாடகம்?

எஸ்.எஸ்.சந்திரன் போன்ற அதிமுக சில்லறைகள், கருணாநிதியை ‘’திருக்குவளை தகரப்பெட்டி, சவரக்கத்தி’’ என்று மிகவும் ரசித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத சாதித்திமிருடன்தான் வைகோ வின் பேச்சு அமைந்திருந்தது.  இதை வீடியோவைப் பார்க்கும் எல்லோரும் புரிந்து கொள்ள முடியும்.

‘’ஆமாம். நான் பாப்பாத்திதான்’’ என்று சட்டமன்றத்திலேயே பேசியவர் ஜெயலலிதா. அவருடைய ஆணவத்தை அவர் பிறந்த சாதியுடன் தொடர்பு படுத்தி எப்போதாவது வைகோ பேசியிருக்கிறாரா? ஆதித்தொழில், நாதசுரம் என்பனவற்றை மிகவும் ரசித்துப் பேசினாரே, அப்படி அம்மையார் பிறந்த சாதியின் தொழிலைக் கேலி செய்து பேசிய வீடியோ இருந்தால் அதைப் பார்க்க விரும்புகிறோம்.

வைகோவுக்கு பார்ப்பனியத்தைக் கேலி செய்து பேசுவதற்கு மட்டும் நாக்கு வரவில்லை என்றால், அது தற்செயல் அல்ல; நேற்றுப் பேசியதும் தற்செயல் அல்ல. மேலே உள்ளவனின் காலைப் பிடிப்பதும் கீழே உள்ளவனை ஏறி மிதிப்பதும்தானே சாதிய மனோபாவம்!

‘’ஜாதி ரீதியாக விமர்சிப்பது தேவையற்ற செயல்’’ என்று திருமாவளவனும், ‘’சாதீய தொழில் குறித்து தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல’’ என்று ராமகிருஷ்ணனும் வைகோ வின் பேச்சு குறித்து தெரிவித்திருக்கின்றனர். இதற்குப் பெயர் கண்டனமாம்!

‘’சங்கரைப் படுகொலை செய்தது எங்களுக்கு ஏற்புடையதல்ல, இது தேவையற்ற செயல்’’ என்பது போன்ற பாணியில்தான் உடுமலைக் கொலை பற்றி பாமக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

‘’அதுவும் இதுவும் எப்படி ஒன்றாகும்? வைகோ என்ன அரிவாள் எடுத்தா வெட்டினார்?’’ என்று ராமகிருஷ்ணன் கேட்பார். ‘’சவரக்கத்தியும் அரிவாளும் எப்படி ஒன்றாக முடியும்?’’ என்று எஸ்.எஸ்.சந்திரன் கேட்பார்.

நாம் என்ன பதில் சொல்ல முடியும்?

– தொரட்டி

 1. தன்மான சிங்கம், தரமான அரசியலை மறந்து வெகுநாளாகி விட்டன! தற்போது தமிழனின் அவமான சின்னம்! தூ!

 2. வைகோ ஒருபோதும் ” பார்ப்பினியத்தை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டார் ! அது அவரது அவருக்கு ஆண்டசாதி பெருமையை சீர்குழைத்துவிடும்.
  வைகோவுக்கு ” ஆர் எஸ் எஸ் மீது ஒரு சாப்ட் கார்னர் உண்டு !
  எம்ஜிஆர் ஆட்சியில் , பள்ளிகளின் மைதானங்களில் , ஆர் எஸ் எஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தது . அதை ” எம்ஜியார் அரசாங்கம் தடை செய்து ஆணை பிறபித்தது ( தோழர் கல்யாண சுந்தரம் உபயம் ).. எதிர்கட்சி தலைவர் கருணாநிதியும் வரவேற்றார் . ஆனால் வைகோ ( அப்போது திமுக எம்பி )” அந்த ஆணையை எதிர்த்து அறிக்கை விட்டார்
  ஜனநாயக விரோத செயல் என்று எம்ஜிஆரை தாக்கி அறிக்கை விட்டார் …..
  >. மோடியின் குஜராத் கொலைகளை நியாயபடுத்திய வைகோ
  > இன்று மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகபடுத்தி அவர் பிரதமராக வேண்டும் என அல்லும் பகலும் , தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் களம் கண்டவர் வைகோ !
  +++++++++ ஒரு நல்ல நேர்மையான சமூக உணர்வாளன் ” மோடியை ஆதரித்து அறிக்கை விடுவானா ?
  ++ வைகோ , மோடியை ஆதரித்தற்காக “தமிழகம் மக்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டு இருப்பாரா ?
  # வைகோ என்ற சினிமாத்தன அரசியல் ஊதாரி ##

 3. வைகோ என்பவர் சாதரண அரசியல் பிழைப்புவாதிதான் அவரை அதிகம் குதரும் அளவுக்கு அந்த ஆள் தகுதியானாவர் இல்லை

 4. மீண்டும் அம்மணமாய்…..
  கோவணம்!
  http://hooraan.blogspot.in/2014/07/blog-post.html

  வைகோவின் பேச்சு ஆதிக்கச் சாதி மனப்பான்மையின் ஆழ்மன வெளிப்பாடு. இது மன்னிப்புக் கேட்டு முடித்துக்கொள்கின்ற ஒன்றல்ல.

 5. If anybody wants to talk badly they can choose paarppaana. nobody will question it. if anybody talks more bad about them they are more forward thinking people. when easy target is available why people need to behind any other community?

 6. If anybody wants to talk badly they can choose ANTI-NATIONAL. nobody will question it. if anybody talks more bad about HINDUTVA they are more TERRORIST people. when easy target UN_EDUCATED and UNDER EDUCATED are available to believe all nonsenses, why people need to drag muslims and any other community as terrorists?

 7. வைகோவின் சாதித் திமிர் வாக்கொழுப்புதொலைக்காட்சி நேர்காணல் சீலையில் வடிந்தது!அதை நக்கித் துடைப்பதற்கு அவர் செய்த முயற்சி தான் பின்னர் வந்த அறிக்கை.இவ(ர்)ன்தான் வைகோ என்பதை துல்லியமாக அடையாளம் காட்டிக் கொண்டா..என்னதான் முயற்சி செய்தாலும் நீ சாதித் திமிர் பிடித்த சங்கப்பரிவாரம் என்பதை இனி மூடி மறைக்க முடியாது.கருணாநிதியைத் தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன்,ஆட்சியை டிஸ்மிஸ் செய்வேன் என்று கொக்கரித்தவர்களின் கூட்டாளி நீ! பம்மாத்து,பாச்சாக்கள் பலிக்காது!இதற்கு கண்டனம் தெரிவித்த சகபாடிகள் சுத்த மொன்னைகள் என்பதைக் காட்டிவிட்டார்கள்.வாழ்க பீ டீம்!

 8. வை. கோ தன் சாதி பாசத்தால் தான் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏட்ருக்கொன்டார்.மு.கா வை திட்டியதில் வைகோ சாதி எனும் டவுசர் கழேன்டு அம்மனமாக நிர்கிரார்.

  M.செய்யது
  துபை

 9. இந்த பிரச்சினையில் வைகோ மட்டுமே பொறுப்பாளி என்று நான் குறுக்கி பார்க்க வில்லை. வைகோ அவ்வாறு ஒரு பேட்டியை கொடுத்துக் கொண்டு இருந்த போது இரண்டு இடதுசாரித்தலைவர்களும்,திருமாவும் எவ்வித சலனமும் இன்றி ஒரே சீரான மற்றும் சாதாரண முகத்தோற்றத்துடனும் வீற்றிருந்தனர்.அவர்களில் ஒருவரும் அத்தகைய சாதி வெறி பேச்சினை நிறுத்த வேண்டும் என்று முனையவில்லை.திருமாவோ முத்தரசனோ வைகோவின் கையையோ தோள்களையோ தொட்டு அழுத்தும் ஒரு சிறு எதிர்ப்பு பதிவு கூட அங்கு நடக்கவில்லை.அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் அங்கே கூடியிருந்தவர்களின் ”நகைச்சுவை” உணர்வு அதாவது உயர்சாதி ஆதிக்க கொண்டாட்ட சிரிப்பொலி அங்கே வழிந்து கொண்டிருந்தது. அதனை வெளிப்படுத்தியவர்கள் பத்திரிக்கையாளர்களா அல்லது “மாற்று” சிந்தனைப்புகழ்
  கொண்ட ம ந கூட்டணி அடுத்தகட்ட தலைவர்களா என்பதை அங்கிருந்தவர்களில் மனசாட்சியுள்ளவர்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்.

  அருணன் கூட சீமான் தன்னை திருத்திக் கொண்டு தவறை உணர ஏன் ஒரு சந்தர்ப்பத்தை சீமானுக்கு அருளியிருக்க கூடாது? இடதுசாரிகளும், சிறுத்தைகளும் சாதி ஆதிக்கம் நிறைந்த கிராமங்களில் நடக்கின்ற கட்ட பஞ்சாயத்துகளைப் பற்றி நன்கறிந்தவர்கள்.எந்த ஒரு குற்றத்திற்கும் உயர் சாதி ஆண்டைக்கு என்ன ’தண்டனை’ தருவார்கள், அதே ஒரு ஒடுக்கப்பட்டவருக்கு அங்கு என்ன கிடைக்கும் என்கிற ‘விபரம்’ புரிந்தவர்கள் தான் அவர்கள்.அந்த ’விபரம்’ தான் தன்னுடன் இணைந்து தேர்தல் உடன்பாடு கொண்டிருக்கின்ற நட்பு சக்தியும் ’உயர்சாதி’ கோமானுமான வைகோவிற்கு மெல்லிய இறகால் வருடுகின்ற முறையில் ”அவர் கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்கிற செல்லமான சிணுங்கல் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.இவர்கள் தான் மாற்று அரசியலை முன்னெடுத்து தமிழகம் தலைநிமிர செய்யப்போகிறவர்கள் என்றால் அது ஒரு ஏமாற்று வேலை என்பதை விளக்கவும் வேண்டுமா?

  ஒரு நல்ல பேச்சு திறன் கொண்ட இளைஞனாக இருந்த வைகோவை ஒரு பஞ்சாயத்து சேர்மன் மட்டத்திலோ ஒரு தலைமைக்கழக பேச்சாளராகவோ மட்டறுத்தி விடாமல் டெல்லி ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினராக 18 ஆண்டுகாலம் வைத்து அழகு பார்த்த தன் முன்னால் தலைவனுக்கு வைகோ தந்தது ஒரு சூத்திரப்பட்டத்தை தான்.திருமா போன்றவர்கள் தேர்தல் முடிந்த பின்னரேனும் இந்த மனிதரை விட்டகல வேண்டும்.அது அவர்களின் தன்மானத்திற்கு நல்லது.’நட்புடன்’ பழகிக் கொண்டே தான் உயர்சாதிக்காரன் என்று மனதிற்குள் மமதையுடன் திரிபவர்களுடன் எத்தனை நாட்கள் தான் நட்பாக இருந்துவிட முடியும்? இன்றைக்கு கலைஞருக்கு நிகழ்ந்தது திருமாவுக்கு நடக்காது என்பதை யார் தான் உறுதியளித்திட முடியும்?

  உண்மையில் வைகோ கலைஞரை அவமானப்படுத்தி விட்டதாக நான் கருதவில்லை.வைகோ தான் தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டார்.ஒரு சூத்திரனாக பிறந்ததற்காக யாருமே இங்கே தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதையே நான் நம்புகிறேன்.பிறப்பால் உயர்வோ தாழ்வோ இல்லை என்று நம்புகின்ற யாருமே இந்த கருத்தையே கொண்டிருப்பர். வைகோ தான் போட்டிருக்கின்ற கருப்பு சால்வைக்கு பதிலாக காவி ஜிப்பாவோ துண்டோ போட முழுதகுதியை அடைந்துவிட்டார்.

 10. தேவர் சாதி வெறி, வன்னியர் சாதி வெறி, இத்தியாதி இத்தியாதி என்று தெளிவாகவே தமிழ் சாதி வெறிகளை பற்றி பேசும் வினவுக்கு வைகோ என்ற சாதிவெறி சைகோவின் சாதிவெறி மட்டும் நாயுடு சாதி வெறியாக தெரியாமைக்கு காரணம் என்ன? தமிழ் சாதிகள் மட்டும் தானா சாதிவெறி என்ற சொல்லாடலுக்குள் வரும்? ஆந்திர சாதிகளான ரெட்டி , நாயுடு சாதிகளின் வெறி எல்லாம் எந்த வரையறைக்குள் வரும் வினவை பொறுத்தவரையில்….?

  எந்த சாதி வெறியா இருந்தாலும் அந்த சாதிபெயரை சொல்லி அடிக்கனும் வினவு…! ஆந்திர காரனின் சாதி என்பதால் மறைக்ககூடாது வினவு…..

  • சரியாகச் சொன்னீர் ரவிக்குமார் அவர்களே.வைகோ தனது சாதிக்காரர்களை ஒன்று திரட்டி வெற்றி காணலாம் என்று நினைக்கிறார் போலும்.அவரது கண்ணுக்கு தெலுங்கர்கள் மட்டுமே தெரிகிறார்கள் போலும்.இராமதாஸ் எந்த ஒரு சாதியையும் பழித்துப் பேசியதில்லை.அனைத்து சமூக மக்களுக்கும் போராடும் ஒரு போராளி அவர்.அவரைக் குறை சொல்வது ஏற்புடையதல்ல்.

   • கவனிக்கவும் : தேவர் சாதி வெறி, வன்னியர் சாதி வெறி, இத்தியாதி இத்தியாதி என்று தெளிவாகவே தமிழ் சாதி வெறிகளை பற்றி பேசும் வினவுக்கு…….

    எந்த சாதிவெறியையும் நான் ஆதரிக்கவில்லை… எதற்க்காக வைகோவின் சாதி வெறியை மட்டும் வினவு சாதி பெயரிட்டு சாட்டையடி கொடுக்கவில்லை என்று தான் கேள்வி எழுப்புகிறேன்….நெல்லை மாவட்டம் குறிஞ்சாக்குளத்தில் தலித் இன மக்கள் தங்களுக்கென்று காந்தாரி அம்மன் கோவிலை கட்டமுயன்றதற்காக, 1992 மார்ச் 16 -ல் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். முதல் குற்றவாளி வைகோ அவர்களின் தம்பி ரவிச்சந்திரன். இரண்டாம் குற்றவாளி வைகோ அவர்களின் மாமா சங்குவெட்டி மோகன்தாசு நாயுடு. இவ்வளவு உண்மை அப்பட்டமாக தெரிந்தும் வினவு வாய் மூடி நாயுடுகளுக்கு எதிராக, நாயுடுகளின் சாதி வெறிக்கு எதிராக பேச முடியாமைக்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க