privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்

ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்

-

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயங்கி வரும் ஷூ தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் மீது முதலாளிகள் நடத்தும் அடக்குமுறைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அந்த அளவுக்கு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு அவர்களை மிகவும் கேவலமாக நடத்தி வருகின்றனர், முதலாளிகள்.

ஷூ தொழிற்சாலை
படம் இணையத்திலிருந்து (விளக்கத்துக்காக மட்டும்)

கடந்த 13-04-2016 அன்று இட்டாராஸ் என்கின்ற ஷூ கம்பெனியில் ரெட் லைனில் வேலை பார்த்து வரும் பெண் தொழிலாளர்கள் மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசியுள்ளான் சலீம் என்ற எச்.ஆர் அதிகாரி. அதைக் கேட்டு கோபம் அடைந்த பெண் தொழிலாளிகளிடம் “உன்னால் என்ன செய்ய முடியும்” எனத் திமிராக பதில் கூறியுள்ளான்.

இக்கம்பெனியில் உள்சங்கம் வைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் சங்கம் நிர்வாகத்திடம் HRA அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதை நிர்வாகம் கேட்கவில்லை.

இறுதியாக பெண் தொழிலாளர்கள் HRA அதிகாரியை வேலையை விட்டு விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலை மறியல் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதன் விளைவாக HRA அதிகாரியை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது நிர்வாகம்.

இந்தப் போராட்டத்தை பிற கம்பெனி தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் பு.ஜ.தொ.மு சார்பில் சுவரொட்டி போட்டு பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.

இதைப் பார்த்த நிர்வாகம் மற்றும் உள்சங்கம் நம்மைத் தொடர்பு கொண்டு, “எங்களைக் கேட்காமல் ஏன் போஸ்டர் போட்டீர்கள். எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் யார் எங்களைப் பற்றி போஸ்டர் போட” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “பிற தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் போராட்டம் இருந்தது. அதனால் ஆதரித்து போஸ்டர் போட்டோம். நீங்கள் முதலாளிகளுக்கான சங்கம் சார்பாக இருப்பதால் இந்தப் போராட்டத்தை உங்களுடைய போராட்டமாக பார்க்கிறீர்கள்” என்றதும் தொலைபேசியைத் துண்டித்துக் கொண்டனர்.

அதே வேளையில் பிற ஆலைத் தொழிலாளிகள் மத்தியில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே ஆலை சாதாரண தொழிலாளிகளிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படிக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஆம்பூர் பகுதி,
வேலூர் மாவட்டம்

முழக்கங்கள்

இட்டாரஸ் பெண் தொழிலாளர்களை
இழிவுபடுத்திய HR அதிகாரிக்கு செருப்படி

தொழிலாளர்களே!

தொழிலாளர்களை இழிவுபடுத்தியும்
உரிமைகளைப் பறித்தும் வருகிறது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

அடங்கி போவது அவமானம்,
அமைப்பாய் திரண்டு போராடுவதே
தன்மானம் என்பதை உணர்த்தியுள்ளனர்
இட்டாரஸ் தொழிலாளர்கள்!

முதலாளிகளின் சுரண்டலுக்கு முடிவுகட்ட
தொழிலாளர் வர்க்கமாய் ஒன்றிணைவோம்,
புரட்சிகர சங்கத்தில் அணிதிரள்வோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க