privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகோவை - தருமபுரி : லெனின் பிறந்தநாளில் சபதமேற்போம் !

கோவை – தருமபுரி : லெனின் பிறந்தநாளில் சபதமேற்போம் !

-

தருமபுரியில் லெனின் பிறந்தநாள்

தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் அதிகாரமே ஒரே மாற்று!

ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்தநாளில் சபதமேற்போம்!

lenin-147-dpi-3ப்ரல் 22 மாமேதை தோழர் லெனினின் 147 வது பிறந்தநாள் 7 கிளைகளில் படம் வைத்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது. தோழர் லெனின் காட்டிய பாதையை முன்னெடுப்போம், தேர்தலை புறக்கணித்து மக்களை அதிகாரத்தை நிறுவுவோம் என பிரச்சாரம் செய்யப்பட்டது.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் வி.வி.மு செயலர் தோழர் கோபிநாத் உரையாற்றினார். “மாமேதை லெனின் பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார். ஆனால் இன்று நம்மையும் அந்தத் தொழுவத்திற்கு அழைக்கின்றனர். மக்களுக்கு வேண்டாத சுமையாகி போன இந்த கட்டமைப்பை காப்பாற்ற, மக்களுக்கு இருக்கும் மிகபெரிய ஜனநாயகம் ஓட்டுப்போடுவதுதான் என மக்களை முட்டாளாக்கி வருகிறது ஆளதகுதியிழந்த இந்த அரசு. நமது நாட்டில் லஞ்சம் பெறாத அரசு அலுவலகம் உண்டா? ஊழல் நடக்காத துறை உண்டா? சட்டமன்றம் பாராளுமன்றம், நீதி மன்றம், கலெக்டர், தாசில்தார், என அனைத்தும் புழுத்து நாறுகின்றது, முடைநாற்றம் வீசுகிறது. இந்த கட்டமைப்பு மக்களுக்கு எதிராக வேண்டாத சுமையாக இருக்கிறது. இதனை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும். இந்த போலி ஜனநாயக தேர்தலை புறக்கணிப்போம் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” என்று பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதில் திரளான தோழர்களும் பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி

கோவை

ஏப்ரல் – 22 தோழர் லெனின் பிறந்த நாள்
தானே ஆன தொழிலாளி வர்க்கத்தை தனக்காக இயங்கும் வர்க்கமாக்குவோம் !

ன்பார்ந்த தொழிலாளர்களே !

இன்று ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்த நாள். உலகமெங்கும் உள்ள உழைப்பாளி மக்களுக்கு இன்றும் போராடுவதற்கு உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் மாபெரும் தோழர் லெனின், அவர் பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் நமது போராட்ட ஆற்றலை மேம்படுத்திக் கொள்கிறோம்.

ரஷியா நாட்டில் இதரருக்காக வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்தை, முதலாளிகளின் சட்டைப்பையை நிரப்பபுவதற்காக அன்றாடம் பாடுபட்ட பாட்டாளி வர்க்கத்தை தனக்காக வாழும் வர்க்கமாக மாற்றியமைத்தார். அதன் விளைவாக 1917-ம் ஆண்டு ரசியாவில் உலகில் முதன் முறையாக சோசலிச அரசு அமைந்தது.

தோழர் லெனின் ரசியாவில் உழைப்பாளி மக்களை திரட்டி முதலாளிகளை விரட்டியடித்த காரணத்தால் உலகமெங்கும் உள்ள முதலாளிகள் மிரண்டனர். தங்கள் நாட்டு தொழிலாளி வர்க்கத்துக்கு சிற்சில உரிமைகள் வழங்கினர்.

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் 8 மணி நேர வேலை, இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப், சீருடை போன்ற எல்லாவற்றுக்கும் சோவியத் தொழிலாளி வர்க்கமும் தோழர் லெனினும் காரணமானவர்கள். எனவே அளவில்லா பெருமையோடு அவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்.

தேர்தலில் ஓட்டு பொறுக்குபவர்களுக்கு தோழர் லெனின் தேவை இல்லை. பிறந்த நாளை கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை படைப்பதற்காக பணியாற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு தோழர் லெனின் பிறந்த நாளை கொண்டாட வேண்டிய கடமை உள்ளது.

தொழிலாளி வர்க்கம் போர்க்குணம் இழந்து விட்டது. இனிமேல் தொழிலாளர்களை புரட்சிக்கு அணிதிரட்ட முடியாது என்று பிலாக்கணம் வைக்கும் புலம்பல் பேர்வழிகளுக்கு தோழர் லெனின் பிறந்த நாளை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தொழிலாளர் வர்க்கத்தின் மேல் நம்பிக்கை கொண்ட கம்யூனிஸ்டுகளான நாம் தோழர் லெனினிடமிருந்து கற்றுக் கொள்வோம்.

தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட ஆற்றலை கொச்சைப்படுத்தும் கோமாளிகளுக்கு இந்தியத் தொழிலாளி வர்க்கம் பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அதனுடைய சமீபத்திய வெளிப்பாடு பெங்களூர் தொழிலாளர் போராட்டம். வருங்கால வாய்ப்பு நிதித் திட்டத்தில் மத்தியில் உள்ள மோடி அரசு பல்வேறு மோசடிகளைச் செய்தது. இதனைக் கண்டித்து பெங்களூர் ஆடை உற்பத்தி தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். உடனே மத்திய அரசு பணிந்து சட்டத்தையே திரும்ப பெற்றுள்ளது.

தொழிலாளி வர்க்கம் போராடினால், ஒன்றுபட்டு நின்றால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதற்கு சான்றாக இப்போராட்டம் விளங்குகிறது.

மோடி அரசு ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல தொழிலாளர்களால் தகர்த்து எறிய முடியும் என்பதை பெங்களூர் போராட்டம் உணர்த்தி உள்ளது. இது போல போராடும் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகளும் இணைந்தால், தோழர் லெனின் காட்டிய வழியில் சென்றால் வர்க்கப் போராட்டம் நீடித்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைக்க முடியும். 1917 நவம்பர் புரட்சியை இங்கே நிகழ்த்த முடியும்.

அதற்கான ஆற்றலைப் பெறுவதற்கு பெங்களூர் போராட்டத்தை தோழர் லெனின் காட்டிய வழியில் இந்தியாவெங்கும் முன்னெடுப்போம் .

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க