Wednesday, December 11, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன ?

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன ?

-

சொத்துக்குவிப்பு வழக்கிலும், டான்சி நில ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டவர் ஜெயா என்ற போதும், இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுதலையை வாங்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 2ஜி வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே தி.மு.க.வையும் கருணாநிதியையும் மன்னிக்கவே முடியாத குற்றவாளியென மக்களின் மனதில் பதிய வைப்பதில் ஜெயா, துக்ளக் சோ, பா.ஜ.க., உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் வெற்றி பெற்றுவிட்டது.

2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்கைத் துறையின் அனுமானம்தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையைவிடக் குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ்விற்பனையில் விதிமுறையை மீறி நடந்துகொண்டு, சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு; அதற்காக, கலைஞர் டி.வி.க்கு இருநூறு கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கொள்ளையோ தி.மு.க. மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஊழலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.

சமச்சீர் கல்வி போராட்டம்
பதவியேற்றவுடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த பார்ப்பன ஜெயா அரசைக் கண்டித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அணிதிரட்டி நடத்திய சாலை மறியல் போராட்டம் (கோப்புப் படம்)

2ஜி ஊழல் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் விவாதிக்கப்பட்ட அளவிற்கு அம்மா அடித்திருக்கும் இந்தக் கொள்ளை பேசப்படவில்லை. அப்படி விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம், “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிய கட்சிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை வீழ்த்தினால்தான் தமிழகம் உருப்படும்” என சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஒரு நரித்தனமான வாதத்தைக் கிளப்பி அதற்குள் புகுந்து கொண்டு, பார்ப்பன ஜெயாவைப் பாதுகாக்கிறது. பார்ப்பனக் கும்பலின் இந்தக் கிரிமினல்தனத்தை ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் வழிமொழிந்து வருகின்றனர்.

அரைகுறையாகவாவது சமச்சீர் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க.வையும், அக்கல்வித் திட்டத்தைப் பதவியேற்றவுடனேயே குழிதோண்டிப் புதைக்க முயற்சி செய்த ஜெயாவின் அ.தி.மு.க.வையும்; அனைத்துச் சாதியினரும் அரச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்த தி.மு.க.வையும், அரசியல் தரகன் பார்ப்பன சு.சாமியோடு கைகோர்த்துக்கொண்டு அச்சட்டத்தை வேரறுத்த அ.தி.மு.க.வையும்; மோடி அரசின் இந்தி, சம்ஸ்கிருத திணிப்புகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும், அத்திணிப்புகளை மௌனமாக இருந்து அங்கீகரித்து வரும் அ.தி.மு.க.வையும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலைச் சாக்காக வைத்துக் கொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது.

மகாமக பலிகள்
1992-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் மகாமகத்தின்போது, ஜெயாவும் சசியும் புனித நீராடுவதற்காகப் பலியிடப்பட்ட அப்பாவி பக்தர்கள் (நன்றி : ஜூனியர் விகடன்)

மார்க்சிஸ்டுகள் தலைமையில் மேற்கு வங்கத்தில் நடந்துவந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி சிங்கூரில் தரகு முதலாளி டாடாவின் நானோ கார் திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; நந்திகிராமத்தில் இந்தோனேஷிய பெருந்தொழில் நிறுவனமான சலீம் குழுமத்திற்காக நிலங்கள் பறிக்கப்பட்டன. இதனாலேயே,போலி கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் ஒன்றுதான் எனக் கூறினால், அதனைப் போலி கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வார்களா?

தி.மு.க.வும் இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகளில் ஊறிப்போன கட்சிதான். ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளைகள் தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடந்திருப்பதையும், அதற்குரிய பங்கை தி.மு.க. பெற்றிருப்பதையும் மறுக்க முடியாதுதான். தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல், திருமங்கலம் ஃபார்முலா என தி.மு.க.விற்கு இருண்ட பக்கங்கள் இருப்பதும் உண்மைதான். இவை போல இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் தி.மு.க. மீது சுமத்த முடியுமென்றாலும், பார்ப்பன-பாசிசத்தைத் தனது கொள்கையாகவே கொண்டிருக்கும் அ.தி.மு.க.வும், பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ், தமிழினம் என்ற திராவிடக் கொள்கைகளின் வாசம் வீசுகின்ற – அது காலிப் பெருங்காய டப்பாவாக இருந்தபோதும் – தி.மு.க.வையும் ஒரேவிதமாக மதிப்பிடுவது அறியாமை அல்ல, கபடத்தனம்.

dmk-admk-caption-1பகுத்தறிவு, சுயமரியாதை உள்ளிட்ட திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொண்டர்களை அடித்தளமாகக் கொண்டிருந்த தி.மு.க., தேர்தல் அரசியலின் ஊடாக பிழைப்புவாதக் கட்சியாகச் சீரழிந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வோ சினிமா கவர்ச்சியையும், அவரது ரசிகர்களான உதிரித் தொழிலாளர்களையும் அடித்தளமாகக் கொண்டு உருவானது. தனது பிறப்பிலேயே எந்தக் கொள்கையும் இன்றி, பிழைப்புவாதத்தையும் அடிமைத்தனத்தையும் மட்டுமே கொண்ட கட்சியாக உருவெடுத்து, அதனின் பரிணாம வளர்ச்சியில், ஜெயாவின் தலைமையில் பார்ப்பன-பாசிசக் கட்சியாக உருமாறி நிற்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே தேர்தலின்பொழுது பணப்பட்டுவாடாவில் இறங்கக்கூடிய கட்சிகள் என்றாலும், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகள், பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது ஆகிய வழிகளின் மூலம் கோடிகோடியாகக் கொள்ளையடிப்பது, அதில் ஒரு சிறுபகுதியை வீசியெறிந்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவது, இதன் மூலம் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக நீடிப்பது என்பதுதான் ஜெயலலிதாவின் அரசியல். கடத்தல், கொலை, விபச்சாரம் போன்ற அனைத்து கிரிமினல்தனங்களையும் ஒரு தொழிலாக நடத்திக் கொண்டே, ஒரு கொடை வள்ளலைப் போல ஏழை மக்களுக்குக் காசை அள்ளி இறைப்பதன் மூலம் அவர்களுடைய ஆதரவைத் திரட்டிக் கொள்வதுடன், அவர்களையும் ஊழல்படுத்தி, அவர்களையே தனது கூலிப்படையாக மாற்றி வைத்துக் கொள்வதைப் போன்றது இந்த அரசியல்.

அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவிற்குத் தேர்தல் ஆணையமே துணை நின்ற அநீதியைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது தமிழகம் கண்டது. 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது, தேர்தல் விதிமுறைகளை மீறி நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர் ஜெயா. இம்முறைகேடு தொடர்பாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக இழுவையில் இருக்கிறது. இவ்வழக்கை இழுத்தடிப்பதன் மூலமே ஊத்தி மூடிவிட எண்ணும் ஜெயாவின் சதிக்குத் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றன. பார்ப்பன ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட இந்த ‘வீட்டோ’ அதிகாரம் கருணாநிதி உள்ளிட்ட வேறு யாருக்கும் ஓட்டுக்கட்சி அரசியலில் வழங்கப்படவில்லை.

அம்மா பக்தர்கள் யாகம்
பார்ப்பன மூடநம்பிக்கை: அம்மாவின் நலன் வேண்டி, அம்மாவின் அடிமைகளான தமிழக அமைச்சர்களால் கோயம்புத்தூர் சுகுணாபுரத்திலுள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 17 நாட்கள் நடத்தப்பட்ட அஸ்வருதா தேவி மகா யாகம் (கோப்புப் படம்)

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, அத்தேர்தல் பிரச்சாரங்களில் எவ்விதத் தடையுமின்றி ஜெயா ஈடுபடுவதற்கும், அத்தேர்தல் முடிந்த பிறகு நடைபெறக்கூடிய பேரங்களில் அவர் பங்கு பெறுவதற்கும் ஏற்ப அச்சமயத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, உச்சநீதி மன்றம். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயாவிற்கு சட்டத்தை மீறி சலுகை அளித்துப் பிணை வழங்கியது, அவருக்குச் சாதகமாக அவ்வழக்கை விரைந்து முடிந்து கொடுக்க ஏற்பாடு செய்தது, கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்த அம்மேல்முறையீட்டு வழக்கில் காணப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக தி.மு.க.வின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பூசிமெழுகியும், இரண்டுங் கெட்டான்தனமாகவும் தீர்ப்புகளை அளித்தன நீதிமன்றங்கள். தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க. தரப்புக்கு மட்டும் வாதிடுவதற்கான அனுமதியை மறுத்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனுமதி மறுப்பதாக வெட்கமே இல்லாமல் கூறுகிறார்கள். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றங்கள் வழங்கி வரும் இத்தகைய சலுகைகள், வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியாவில் வழங்கப்பட்டதேயில்லை என்பதே உண்மை.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை ஒரு இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததையும், அப்பொழுது நிலவிய மின் தட்டுப்பாட்டையும் காட்டி கருணாநிதியை நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சராகப் பார்ப்பனக் கும்பலும், ஊடகங்களும் குற்றஞ்சாட்டின. கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியிலோ தமிழக அரசின் கடன் சுமை மேலும் 1,40,000 கோடி ரூபாய் அதிகரித்து, 2,47,031 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிவிட்டதாக ஜெயா அடித்துவரும் தம்பட்டம் கடைந்தெடுத்த மோசடி என்பதைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அம்பலப்படுத்துகிறது. ஆனாலும், எந்தவொரு ‘நடுநிலை’ ஊடகமும் ஜெயாவின் நிர்வாகத் திறமையைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, அவர் அடிமுட்டாள்தனமாகவும் அடாவடித்தனமாகவும் எடுக்கும் முடிவுகளைக் காட்டி, அவரைத் தைரியலட்சுமி எனத் துதிபாடி வருகின்றன.

அ.தி.மு.க அடிமைத்தனம்
நாயினும் கீழாகத் தாழ்ந்து… அடிமைத்தனத்தின் மறுபெயர் அ.தி.மு.க

ஜெயா-சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்ட லக்ஸ் தியேட்டர், இந்த ஐந்தாண்டுகளில் அக்கும்பல் நடத்திவரும் சொத்துக்குவிப்பு கிரிமினல்தனங்களை எடுத்துக்காட்டும் துவக்கப் புள்ளியாக அமைந்தது. இதனையடுத்து, ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் மிகப்பெரும் பொருளாதாரக் குற்றங்களிலும், கிரிமினல் சதி வேலைகளிலும் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி வருகிறது. எனினும், அந்த அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவில்லை. மாறாக, அவர்களது ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்படுவதே தண்டனையாகக் காட்டப்படுகிறது.

80 விழுக்காடு அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பாதிப்பேர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு துறையின் அமைச்சர் எனப்படுபவருக்கு அந்தத் துறையைக் கொள்ளையடிக்கும் உரிமை அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கிறது என்பதும், அடித்த கொள்ளையின் உண்மையான கணக்கை ஒப்படைக்காத நேர்மையற்ற அமைச்சர்கள்தான் நீக்கப்பட்டுப் பின்னர் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை.

சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, அந்த மகன் தனக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த திருட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக அந்த மகன் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிய வரலாற்றுப் பெருமை கொண்டவர் ஜெயா. இப்பொழுது ஐவரணி கூட்டாளிகளுள் ஒரு சிலரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, வன்கொடுமைத் தடைச் சட்டத்தையும் எள்ளி நகையாடியிருக்கிறார்.

இதற்கும் மேலாக, அமைச்சர்களை போயசு தோட்டத்திற்கு வரவழைத்து, மிரட்டி, வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி, அவர்கள் சட்டவிரோதமாகக் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களைத் தனது பெயரில் பட்டா போட்டு வருகிறது, ஜெயா-சசி கும்பல். அரசின் கஜானாவிற்குப் போகவேண்டிய சொத்துக்கள் போயசு தோட்டத்தில் பதுக்கப்படுகின்றன. திருடர்களிடமிருந்து கைப்பற்றப்படும் திருட்டு நகை, பணம் ஆகியவற்றில் பெரும்பகுதியைச் சுருட்டிக் கொண்டு, கொஞ்சத்தை திருடனுக்கும், மிச்சத்தைப் பறிகொடுத்தவனுக்கும் பிரித்துக் கொடுக்கும் கிரைம் பிராஞ்சு போலீசின் நேர்மைகூட ஜெயாவிடம் இல்லை.

ஜெயா கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால், அவரது விசுவாச ரவுடிக் கூட்டம் தமிழகத்தையே ரணகளமாக்கத் துணிகிறது. மூன்று மாணவிகளை உயிரோடு எரித்து சிவில் சமூகத்தைப் பீதிக்குள்ளாக்குகிறது. இன்னொருபுறமோ, இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள், காமக் களியாட்டங்கள் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களைப் புரியும் தனது அமைச்சர்களைத் தண்டிக்கும் உரிமையைச் சட்டத்திடம் விட மறுத்து, அவர்களின் தலைவி என்ற மமதையோடு அதனைத் தானே எடுத்துக் கொள்கிறார். மக்கள் நலப் பணியாளர், நடைபாதைகளில் பேனர்கள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தனது அரசுக்கு எதிராக நீதிமன்றம் இடும் உத்தரவுகளை அமல்படுத்த மறுக்கிறார். நீதிபதிகளை விலைக்கு வாங்குவதன் மூலம் அல்லது மிரட்டுவதன் மூலம் தனக்குச் சாதகமான உத்தரவுகளைப் பெறுகிறார். இதன் வழியாக, சட்டத்திற்கு மேலான சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியாக, அரசியல் கட்சித் தலைவர்களிலேயே தனிச் சலுகை படைத்தவராகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார், ஜெயலலிதா.

அரசு என்பதை தனது அந்தப்புரமாகவும், போலீசை அங்கு காவலிருக்கும் திருநங்கைகளாகவும், அமைச்சர்களைக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் காவலர்களாகவும் கருதி நடத்துகிறார் ஜெயலலிதா. இப்படிபட்ட ஒரு அரசு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தனிச்சலுகை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. காரணம், தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் மரபை வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வந்த அவதாரமாக ஜெயலலிதாவைக் கருதுகிறது பார்ப்பன-பனியா ஆளும் கும்பல்.

பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, இந்தி-சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு ஆகிய திராவிடக் கருத்தாக்கங்கள் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருவதற்கு கருணாநிதியையும், தி.மு.க..வையும் காரணமாகக் கருதி வருகிறது, பார்ப்பனக் கும்பல். அதனால்தான் தி.மு.க. தீயசக்தி என அவாள்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது. தி.மு.க.வை அடுத்தடுத்த தேர்தல்களில் தோற்கடிப்பதன் மூலம், வழக்குகளை ஏவி நிலைகுலையச் செய்வதன் மூலம், இதனையும் கருணாநிதி உயிரோடு இருக்கும்பொழுதே செய்து முடிப்பதன் மூலம், அக்கட்சிக்கு மங்களம் பாடித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன தேசியத்திற்குள் முழுவதுமாக மூழ்கடித்துவிடலாம் என முனைந்து வருகிறது, அக்கும்பல். கருணாநிதி எத்தனை அரசியல் சமரசங்களைச் செய்து கொண்டு இந்திய தேசியத்திற்கும், பார்ப்பனக் கும்பலுக்கும் விசுவாசமிக்கவராக நடந்து கொண்டாலும், பார்ப்பன பாசிசக் கும்பல் எதையும் பொருட்படுத்துவதில்லை.

இந்த நோக்கத்துக்காகப் பல்வேறு திசைகளிலும் காய்கள் நகர்த்தப்படுகின்றன. துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, “அ.தி.மு.க. அரசு வந்ததால்தான் ஒரு குடும்ப ஆட்சி போனது. குடும்ப ஆட்சி திரும்ப வந்துவிட நமது ஓட்டு பயன்பட்டுவிடக் கூடாது” என தி.மு.க.விற்கு எதிராகப் பார்ப்பன ஜெயாவை ஆதரித்து வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்கிறார். “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிப் போன ஒரேமாதிரியான கட்சிகள்” எனச் சமப்படுத்தும் மக்கள் நலக் கூட்டணியும்; “திராவிடக் கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டதாக”ப் பழிபோடும் பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் ஆழ்வார்கள் வேலையில் இறங்கியிருக்கின்றன.

தேர்தல் அரசியலுக்கு வெளியேதான், மக்கள் விடுதலைக்கும் அதிகாரத்துக்குமான தீர்வு இருக்கிறது என்று நாம் கூறுவதனாலேயே, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அனைத்தும் சமமானவை என்று பொருளல்ல. பாரதிய ஜனதா, காங்கிரசு முதலான ஆளும் வர்க்கக் கட்சிகளாகட்டும், போலி கம்யூனிஸ்டுகள், தலித் கட்சிகள் போன்றவைகளாகட்டும், அவை ஒவ்வொன்றின் தன்மையையும் பிரித்துப் புரிந்து கொள்வது அவசியம்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் எனப் பார்ப்பனக் கும்பல் முன்வைக்கும் வாதம், அதற்கு வால்பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது.

– செல்வம்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

 

inner_design400x300

    • கடைசி பத்தி எப்படி தவறு என்று விளக்குங்கள்! கடைசிக்கு முந்தைய பத்தி இப்படி சொல்கிறது… “தேர்தல் அரசியலுக்கு வெளியேதான், மக்கள் விடுதலைக்கும் அதிகாரத்துக்குமான தீர்வு இருக்கிறது என்று நாம் கூறுவதனாலேயே, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அனைத்தும் சமமானவை என்று பொருளல்ல. பாரதிய ஜனதா, காங்கிரசு முதலான ஆளும் வர்க்கக் கட்சிகளாகட்டும், போலி கம்யூனிஸ்டுகள், தலித் கட்சிகள் போன்றவைகளாகட்டும், அவை ஒவ்வொன்றின் தன்மையையும் பிரித்துப் புரிந்து கொள்வது அவசியம்.”

  1. திமுகவும் அதிமுகவும் எந்த எந்த விசயங்களில் எல்லாம் ஒன்றாக இருக்கின்றன என்பதை பற்றி எல்லாம் அப்படியே விட்டுவிட்டு அதைத்தாண்டிய விசயங்களை பற்றி பேசுகிறது இக்கட்டுரை. திமுகவிற்கு தரகுவேலை பார்த்துவரும் சுபவீரபாண்டியன் அங்கலாய்ப்பது போல இருக்கிறது. வினவின் சமீபத்திய மாற்றம் வாசகர்கள் அறிந்ததுதான்.

    இந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் “மக்கள் நலக்கூட்டணி- அம்மா எங்களை ஏன் கைவிட்டீர்?” என்ற கட்டுரையில் கூட நான் கேட்டிருந்தேன். திமுகவின் மீது இதேமாதிரியான விமர்சன பார்வையை முன்வைக்கமுடியுமா என்று.

    • இதைதான் செவிடன் காதில் ஊதிய சங்கு என்பார்கள்.
      தமிழ்வழிக் கல்வி, தமிழில் அர்ச்சனை, சமூகநீதி போன்ற
      திராவிட இயக்க கொள்கைகளில் திமுக பெயரளவுக்குத்தான்
      செயல்படுகிறது என்றாலும் பெயரளவுக்குக்கூட செயல்படுபவர்கள்
      இருக்ககூடாது என்பது பார்ப்பன லாபியின் அஜெண்டா.
      அதனால்தான் எத்தனை இணக்கமாக செயல்பட்டாலும்
      திமுகவை ஒழித்துக்கட்ட அவர்கள் முனைகிறார்கள்.
      இதுதான் கட்டுரையின் மைய கருத்து.அதை விடுத்து
      கைய புடிச்சி இழுத்தியா ரேஞ்சுக்கு கேள்வி கேட்டா எப்படி?

    • /திமுகவின் மீது இதேமாதிரியான விமர்சன பார்வையை முன்வைக்கமுடியுமா என்று./
      உங்களுக்கு கருணாநிதிபோயியா இல்லை எனில் தேடல் பெட்டியில் தேடி தெரிந்துகொள்ளலாம். திமுகவை கிழித்து தொங்கவிட்ட கட்டுரைகள் காணக்கிடைக்கிறது.

    • Dear Krishna..Vinavu have all rights to write their view in this democratic country. If you wants to write about DMK then you are welcome. If you don’t agree about what wrote about ADMK then prove it with your argument. Otherwise you also biased and don’t have guts to speak about straight forward.

  2. எனக்கு கட்டுரை பல சந்தேகங்களை கிளப்புகிறது.
    1. தேர்தல் நேரத்தில் இப்படி பாகுபடுத்தி பார்ப்பது பற்றிய கட்டுரை வெளியிட்டால் அது பொதுவான வாசகரை ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்க தூண்டுவதாக போய் முடியாதா?
    2. திமுக வை போனபார்டிஸ்டுகள் என்றும், அதிமுக வை பாசிஸ்டுகள் என்றும் வரையறுத்த பின் அவர்களுக்குள் எப்படி வித்தியாசம் காண்பது என்பதை விளக்கவில்லை எனக் கருதுகிறேன்.
    3. திமுக, அதிமுக ஒப்பிடலில் ஒரு பக்கச்சாய்வு இருப்பதாக தோன்றுகிறதே. பாஜக உடன் ஆன கூட்டணி குறித்த வேறுபாட்டில் பிழைப்புவாதம் காரணமாக திமுக கூட்டணி அமைத்த்து என்றும் அதிமுகவோ இயற்கை கூட்டாளி என்று சொன்னாலும் விளைவு என்று பார்த்தால் பாஜக தமிழகத்தில் காலூன்ற இவர்களும்தானே காரணம்.
    4. கட்சிகளின் தோற்றத்தோடு நிற்கும் நிலையில் ஆய்வு நின்று விடுவதாக படுகிறது. இப்போது பொன்முடி திருமணத்திற்கு சாதி பார்க்க வேண்டும் என சங்கர் மரணத்துக்கு பின் கடந்த மாதம் பேசியிருக்கிறார். செய்தித்தாளில் வந்திருக்கிறது. அவர் எண்பதுகளில் திராவிடர் கழகத்தில் இருந்தவர். மதுரை மாவட்ட செயலாளர் மூர்த்தி சோழவந்தான் தனித் தொகுதி பெண் வேட்பாளர் பிரியா தேன்மொழியை சாதி பெயரை சொல்லி திட்டியதால் தான் போட்டியிடாமல் பின்வாங்கினார் என்பதை திமுகவின் ஒரு கோஷ்டியே சுவரொட்டி மூலம் போட்டு உடைத்து விட்டார்கள். இதன் பிறகும் திமுக சமூக நீதிக்கான கட்சி எனப் பார்ப்பது எப்படி சரி? பத்தாண்டுகளுக்கு முன் அன்பில் வீட்டு திருமணத்தில் பட்டு உடுத்தியதற்காய் ஸ்டாலினை கடிந்து கொண்டார் கலைஞர். இப்போது அவரையே பட்டு சட்டை போட வைத்து விட்டார்கள்.

    • திரு மணி அவர்களே! இன்றைய ஜனநாயகமே பிழைப்பு வாதம் தான்! திராவிட இயக்கத்தையே அழிக்க பார்ப்பனீயம் பகீரத பிரயத்தனத்துடன் செயல்படும்போது ப ஜ க வுடன் தி மு க செர்ந்து அரசமைத்தது அன்றைய நிலைமைக்கு தீர்வு! ப ஜ க வும் , காஙிரசும், ஏன் மற்ற அரசியல் கட்சி தலைமைகளும் பார்பனீயத்திற்கும், அதன் தலையில் இந்திய-பன்னாட்டு முதலாளிகளுக்கும் பணிந்தவையே!

      எல்லா அதிகார மைய்யம்களிலும் அவாளிருக்க ஓரளவு ‘சுதந்திரமாக’ இருப்பது தி மு கவும் நிடிஷ்குமாரும் தான்! இவர்கள் பெயரை கெடுக்க ஊடகங்கள் வாயிலாக பொய்பிரச்சாரம் செய்யப்படுகிறது!

      • நீங்கதான் சுத்தி சுத்தி செக்கு மாடாட்டம் வர்றீங்க. வண்டியோட ஸ்டியரிங் சுத்தவே மாட்டேங்குது. அதக் கொஞ்சம் சுத்துங்கண்ணே

        • மணி அண்ணே நீங்க சுத்தி சுத்தி இங்க கம்பு சுழட்டறத விட நேத்தைக்கு டாஸ்மாக் முற்றுகையில கலந்துகிட்டு இருந்திருந்தா ஜெயா மாமிய பற்றி நல்லாவே தெரிஞ்சிருப்பீங்க

          • அண்ணே.. நீங்க பாய்தான்.. சத்தியமா நம்புறேன். ஒங்க குடுமி மேல ஆணயா.. ஆனா அதுக்கான்டி மே தின பேரணிய டாஸ்மாக் முத்துகையா மாத்திடாதீங்க..நல்ல வருவீங்க போங்கோ னா

  3. அதெப்படி? பாஜகவுடன் அதிமுக கூட்டணி கண்டால் அது இந்துத்துவக் கூட்டணி! ஆனால் திமுக கூட்டணி கண்டால் அது சந்தர்ப்பவாதக் கூட்டணி!ஆகா என்னே உங்கள் மார்க்சியத் திறனாய்வு! திமுக பாஜக கூட்டணியில் மத்தியில் இருந்த போதுதான் மோடி குசராத் நரவேட்டையை நடத்தி முடித்தார். அவர் குற்றவாளி அல்ல எனக் காட்ட விரும்பிய பாஜக குசராத்திலேயே மோடிக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் உங்களின் பகுத்தறிவு திமுகவும் கலந்து கொண்டு ரத்தக் கறை படிந்த மோடிகளின் கைகளைப் பிடித்து அவரைக் குற்றமற்றவராகக் காட்டியதே, இதுதான் வெறும் சந்தர்ப்பவாதக் கூட்டணியாக வினவுக்குத் தெரிகிறதா?

    நல்லது, அம்மா எங்களை ஏன் கைவிட்டீர் என்ற கட்டுரையை முடிக்கையில் வைகோவை விமர்சிக்கிறீர்கள். வைகோ நாடாளுமன்றத்தில் மதவெறியன் மோடியை ஆதரித்துப பேசியதாகச் சொல்கிறீர்கள். அதே நாடாளுமன்றத்தில் வைகோவுடன் சேர்ந்து திமுகவும் இந்துத்துவ பஜனை நடத்தியது என்பதை மட்டும் ஏன் மறைக்கிறீர்கள்.

    அது மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுளள அத்வானி அமைச்சர் பதவி வகிக்கக் கூடாது என அவருக்கு எதிராக காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அதற்கு எதிராக வாக்களித்த கட்சிதான் திமுக.

    இந்துத்துவம், பார்ப்பனியம் என அனைத்திலும் அதிமுகவுக்குத் துளியும் சளைத்த கட்சி அல்ல திமுக. நீங்கள் அதிமுகவுக்கு எதிராக வைக்கும் எல்லா வாதங்களையும் திமுகவுக்கு எதிராகவும் திருப்ப முடியும். கலைஞர் பக்தராய் திமுக பஜனை பாடுவது வினவின் உரிமை. அதை நான் தடுக்கவில்லை. ஆனால் இருவரின் தமிழனத் துரோகங்களையும் மக்கள் மத்தில் அம்பலப்படுத்தி வருவோரையும் இந்த பஜனையில் சேரச் சொல்வது என்ன நியாயம் தோழரே!

  4. ///தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் எனப் பார்ப்பனக் கும்பல் ///

    தவறு.. இரண்டும் எப்படி சமம் என்கிறீர்கள்… இன்று நாளேட்டின் வந்தபடி ஜெ யின் சொத்து ரூ 100 கோடிக்கு மேல்… ஆனால் கருணாவிற்கு வெறும் 13 கோடிதான்… தயாளுவிற்கு ஏதோ 20 30 கோடிதான்.. ராசாத்திக்கு வெறும் 70 கோடிதான்… ஸ்டாலின் அவர் சொந்தங்கள் இங்கே சேர்க்க முடியாது.. ஏனெனில் தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறல்லவா.. வாய் கூசாமல் இருவரும் ஒன்று எப்படி சொல்ல முடியும்.. பச்சை பார்ப்பனீயம்…

    • ஜெயின் சொத்து மதிப்பு வெறும் 100 கோடிதானா? 2000 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் பத்திரிககளில் வந்ததே! உ பி சகொ குடும்பத்தையும் மறந்து விட முடியுமா சகோ?

  5. திமுகவும் அதிமுகவும் ஒன்று என்று சொல்பவர்கள் யாரும் அரசியல் தற்குறிகளல்ல. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பாரதூரமான வித்தியாசங்களை அறிந்தே உள்ளனர் . வினவின் அபாரமான ஆராய்ச்சி அதை பா்ப்பன அடிவருடித்தனம் என்று கண்டுபிடித்து தனது அற்புதமான மேதமையை காட்டுகிறது!
    எத்தகைய சூழ்நிலையில் மநகூ, நாம்தமிழர், பாமக ‘இரண்டு கட்சிகளும் ஒன்று’ என்ற முழக்கத்தை வைக்கிறார்கள் என்பதற்கான உண்மையான பின்புலத்தை அறிவு ஜீவிகளான வினவினர் தெரிந்து கொள்வது அவசியம். தமிழகத்தில் கடந்த கால்நூற்றாண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சியை மாறி மாறி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாக ஒரு கட்சி வர வேண்டும் என்ற எண்ணம் பத்தாண்டுகளுக்கு முன்பே வலுவடைந்துவிட்டாலும் அதற்கான வலுவான காரணிகளோ கள எதார்த்தமோ அமையவில்லை. தமிழக மக்கள் மத்தியில் ஜெவுக்கு மாற்று கருணா, கருணாவுக்கு மாற்று ஜெ என்னும் எண்ணம் ஆழ பதிந்திருந்த நிலையில் ஈழப்படுகொலையும் ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதற்கான களத்தை ஏறப்படுத்தின. குறிப்பாக சமூக ஊடகங்ஊளின் வரவு திமுகவின் மீது இளம்தலைமுறையினர்க்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த பின்னணயில்தான் இரண்டு கட்சிளில் திமுக வின் அழிவு முதலில் தோன்றியது. இரண்டு பேரில் மோசமானவர் யார் என்ற வரையரையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மதிப்பீடு இருக்கும். மகஇகவிற்கு கருணாநிதி பரவாயில்லை என்றால், கேபினெட்டில் பதவியில் இருந்தும் திமுக செய்ய முடியாததை பலமில்லாமலேயே காவிரி நடுவன்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது, தனி ஈழ தீர்மானம், போன்ற சில விவகாரங்களில் எனக்கு ஜெ பரவாயில்லை. இருவருக்கும் மாற்று என்ற சிந்தனை தற்போது வலுவடைந்துள்ள நிலையில் ஜெவுக்கு எதிரான வாக்குகள் மக்களின் வழக்கமான பழக்கதோசத்தின் காரணமாக திமுகவிற்கு சென்றுவிட கூடாது என்ற காரணத்தினால்தான் இரண்டு பேரும் ஒன்று எனும் முழக்கம் முன் வைக்கப்படுகிறது. மக்கள் “திமுகவிற்கு மாற்று அதிமுக, அதிமுகவிற்கு மாற்று திமுக” எனும் மனநிலையிலிருந்து வெளி வர வேண்டும் . இந்த தேர்தலில் திமுக தோற்றால் மட்டுமே அந்த மாயையை தகர்க்க முடியும். ஒருவேலை இந்த தேர்தலில் திமுக வென்றுவிட்டால் அதை மீண்டும் பலவீனப்படுத்த இருபது ஆண்டுகளாவது ஆகும். திமுக வை வீழ்த்தினாலே அந்த அரசியல் வெற்றிடத்தை புதியதொரு சக்தி இட்டு நிரப்பும். அதிமுகவை விஞ்சிய திமுக வெறுப்பு என்பது வெறும் மநகூ, நாம்தமிழர், மற்றும் பாமக வின் மனநிலை மட்டுமல்லாது பல்வேறு தமிழ் உணர்வாளர்கள், காந்தியவாதிகள், முற்போக்காளர்கள், எல்லாரையும் விட இளம் தலைமுறையினரின் மனநிலையாகும். இதனை வழக்கம் போல் பார்ப்பன அடிவருடித்தனம் என்று மகஇக கடந்து செல்ல முற்படுமானால் அது குறித்து எமக்கு கவலை இல்லை. திமுக எனும் துருப்படித்த தகரடப்பா மகஇக விற்கு வேண்டுமானால் காலி பெருங்காய டப்பாவாக மணக்கலாம். எங்களுக்கு அது புளுத்து நாறும் கக்கூஸ் டப்பா. வெளிப்படையாகவே பாசிஸ்டாக நடந்து கொள்ளும் ஜெவை விட பகுத்தறிவு, திராவிடம், கடவுள் மறுப்பு ஆகிய பெரியாரின் கொள்கைகளை கேலிகூத்தாக்கி விட்ட கருணாநிதியே எங்களை பொருத்தவரை முதலில் வீழ்த்தப்பட வேண்டியவர். கோவனை கைது செய்த போது கருணாநிதி, இளங்கோவன், ராமதாஸ், திருமாவளவன் ஆகிய அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் வெளியில் வந்த கோவனோ கருணாநிதியை மட்டும் நேரில் சந்தித்து நன்றி கூறி தனது திமுக விசுவாசத்தை காட்டினார்! எல்லோரையும் பகைமுரண், நட்புமுரண் பாராமல் பாசிஸ்டு, போலி கம்யூனிஸ்டு, திரிபுவாதி என்று சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து கத்தியை சுழற்றும் மகஇக வின் சூரப்புலித்தனம் இந்த அரைகுறை பார்வை மிக்க கட்டுரையில் பல்லிளிக்கிறது.

    ~Kaarmukhilnilavan

    • அருமையான பதிலடி நண்பரே , திமுக வை நியாயப்படுத்த ம ந கூ , பா ம க , நாம் தமிழர் ஆகியோரை பலி கொடுத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறது வினவு ..

    • மிக சரியான பதில்.
      அதிமுக மற்றும் திமுகவிற்கு இடைவெளி அதிகம் என்று சொல்லும் வினவு உங்கள் கொள்கைக்கு பெயரளவிற்கு நெருக்கமான சி பி ம் ஐ ஆதரிக்கலாமே.

    • /ஜெவுக்கு எதிரான வாக்குகள் மக்களின் வழக்கமான பழக்கதோசத்தின் காரணமாக திமுகவிற்கு சென்றுவிட கூடாது என்ற காரணத்தினால்தான் இரண்டு பேரும் ஒன்று எனும் முழக்கம் முன் வைக்கப்படுகிறது./
      /திமுக வை வீழ்த்தினாலே அந்த அரசியல் வெற்றிடத்தை புதியதொரு சக்தி இட்டு நிரப்பும். அதிமுகவை விஞ்சிய திமுக வெறுப்பு என்பது வெறும் மநகூ, நாம்தமிழர், மற்றும் பாமக வின் மனநிலை மட்டுமல்லாது பல்வேறு தமிழ் உணர்வாளர்கள், காந்தியவாதிகள், முற்போக்காளர்கள், எல்லாரையும் விட இளம் தலைமுறையினரின் மனநிலையாகும். இதனை வழக்கம் போல் பார்ப்பன அடிவருடித்தனம் என்று மகைக கடந்து செல்ல முற்படுமானால் அது குறித்து எமக்கு கவலை இல்லை/

      சிலரை விட்டுவிட்டீர்கள் . சோ, குருமூர்த்தி, தினமணி வைத்தியநாதன், தினமலர் …..

    • தங்கள் கருத்துக்கள் அம்மா புகழ் பாடுவதாகவே உள்ளது ஏன்? உதாரணம்; காவேரி டிரிபுனல் அரசிதழில் வெளியிட கெடு விதித்தது சுப்ரீம் கோர்ட், அம்மாவின் ஆணைக்கு இணங்க மழை பெய்தது போல , சுப்ரீம் கோர்ட்டும் அம்மாவின் ஆணைக்கு தான் இணங்கியதா?

      வி பி சிங் ஆட்சியில் காவேரிநடுவர் மன்றம் அமைத்தது தி மு க தானே? அதற்கு பின்னர் அம்மா சுண்டு விரலைக்கூட அசைக்க வில்லையே!

      வேளச்சேர்ய் எம் ஆர் டி எஸ் பாதை அமைக்க கலைஞர் ஆரம்பித்த திட்டத்தை பிசா கூட ஒதுக்காமல் அம்மா கிடப்பில் போடவில்லையா?

      வீம்புக்கு வீராணம் திட்டத்தை முடக்கி கலைஞரை பழிவாங்க , தமிழகத்தையே சீர்குலைக்கவில்லையா? பத்தாண்டுகள் கழித்து வந்த அம்மா வீராணம் எப்படி சிறுத்து உரு மாறியுள்ளது?

      அம்மாவின் கொள்ளைகள் நீதி மன்றத்தில் நீரூபணமாகியும், பார்பன அர்சியல் அவரை காப்பாற்று வருவது போல, கருணானிதியை பழிவாங்கி வருகிறது என்பதே உண்மை!

    • Ammaa has NO role in Cauvery tribunal award Notification !
      https://en.wikipedia.org/wiki/Kaveri_River_water_dispute

      Indian Government notifies Cauvery Water Dispute Tribunal[edit]
      On 20 February 2013, based on the directions of the Supreme Court, the Indian Government has notified the final award of the Cauvery Water Disputes Tribunal (CWDT) on sharing the waters of the Cauvery system among the basin States of Karnataka, Tamil Nadu, and Kerala and Union territory of Puducherry. The “extraordinary” notification in the gazette dated 19 February 2013 says the order takes effect on the date of publication.[21] The Tribunal, in a unanimous decision in 2007, determined the total availability of water in the Cauvery basin at 740 thousand million cubic (tmc) feet at the Lower Coleroon Anicut site, including 14 tmcft for environmental protection and seepage into the sea. The final award makes an annual allocation of 419 tmcft to Tamil Nadu in the entire Cauvery basin, 270 tmcft to Karnataka, 30 tmcft to Kerala and 7 tmcft to Puducherry.[22][23][24]

      Karnataka Tamil Nadu Kerala Puducherry Total
      Basin Area (in km²)[2] 34,273 (42%) 44,016 (54%) 2,866 (3.5%) 148(-) 81,155
      Share for each state as per Cauvery Tribunal final award Dated 19 February 2013 [25] 270 (37%) 419 (58%) 30 (4%) 7 (1%) 726
      Temporary Supervisory Committee[edit]
      In response to the Special Leave Petition (SLP) lodged by Tamil Nadu earlier, the Supreme Court on 10 May 2013 issued an interim direction to the Government of India (GoI) to establish a temporary Supervisory Committee to implement the Cauvery tribunal order till the constitution of “Cauvery Management Board” as stated in the tribunal order. GoI issued the gazette notification on 22 May 2013 establishing the said Supervisory Committee.[26]

      See also[edit]
      Kaveri river

  6. மிக சரியான சமயத்தில் வந்த சரியான சாட்டை! அதுவும் கடைசி பத்திதான் சரியான விமரிசனம்!

    //தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் எனப் பார்ப்பனக் கும்பல் முன்வைக்கும் வாதம், அதற்கு வால்பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது.//

    எதிர்ப்பாளர்கள் எந்த வகையில் தி மு க வும், அதிமுகவும் ஒன்றே என மக்களை குழப்புகின்றனர்?

    தி மு க – மக்களறிந்த திராவிட கட்சி
    அதிமுக- மக்களை ஏமாற்றும் போலி; பெயரில் மட்டுமே திராவிட வேடமிடும் மற்ற கட்சிகளும் பார்ப்பன ஆர் எஸ் எஸ் படைப்பே! சங்கர மடமும் , மற்ற வேளாளர் மடங்களும் போல!

  7. Its really disappointing from Vinavu. There is no doubt that DMK is better than ADMK, but it does not mean that other parties are favoring ADMK b’coz they talk against both ADMK and DMK.

  8. திமுக ஆட்சியில் ஜனநாயக வெளி இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய சாட்சியாக இருப்பது ஈழப் பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்த போது ‘இந்து’ பத்திரிக்கையில், மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரை. ‘தமிழகத்தின் வீதிகளில் நடப்பது என்ன? இங்கு பிரிவினை கோரிக்கை வளர்ந்து வருகிறது – யாராலும் கடுப்படுத்த இயலாமல். அரசு வேடிக்கை பார்க்கிறது’ என்ற ரீதியில் அக்கட்டுரை விரிகிறது. முத்துக்குமார் மரணம் அடைந்த தருவாயில் எழுதப்பட்ட கட்டுரை அது. மிகவும் உச்சஸ்தாயில் இந்தியா எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை அருகே பெரியார் தி.க தலைவர் கு. ராமகிருட்டிணன் தலைமையில் ராணுவத் தளவாடங்கள் ஏற்றிய வாகனம் அடித்து நொறுக்கப்பட்டன. இவை எல்லாம் ஜெயலலிதா அட்சியில் சாத்தியமாகி இருக்குமா?

    ஒரு அரங்கு கூட்டத்தில் புலிகளை ஆதரித்து பேசினார் என்பதற்காக பேரா. சுபவீ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது ஜெயலலிதா பேசியது நினைவிருக்கிறது. தமிழ், தமிழன் என்று பேசித் திரிவோரை விட மாட்டேன் என்றார். அப்போது ‘தமிழர் கண்ணோட்டம் இதழ் ‘தமிழ்த் தேசியத்துக்கு இது சோதனைக்காலம்’ என்று தலையங்கம் தீட்டியது. பொடா சட்டத்தை திரும்பப் பெற புரட்சிகர இயக்கங்கள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தன. கருணாநிதி ஒவ்வொரு பேட்டியிலும் நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

    இன்று தமிழ்த்தேசியம் புத்துயிர் பெற்றிருப்பதற்கு காரணம், கடந்த திமுக ஆட்சி அமைத்துக் கொடுத்த ஜனநாயக வெளி என்றால் மிகையில்லை. குடிக்கு எதிராக பாடியதற்கும், பேசியதற்குமே ராஜதுரோக வழக்கு போடுகிறார் ஜெயலலிதா. 2009 காலகட்டத்தில் அவர் முதலமைச்சராக இருந்திருந்தால் — ஒன்று, ஈழத்துக்கு குறைவில்லாத வகையில் இங்கு ரத்த ஆறு ஓடியிருக்கும். அல்லது, சீமார், வேல்முருகன் போன்ற தமிழனத் தளபதிகள் சினிமா எடுத்துக் கொண்டிருப்பர்.

    ஈழம் தொடர்பாக கருணாநிதி மிகவும் பலகீனமான பார்வையையே கொண்டிருந்தார். ஈழம் பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் என்றளவிலே தான் அவரது பார்வை இருந்தது. தாம் உணர்ச்சிகர ஈடுபாடு செலுத்தும் ஒன்றின் மீது மிகப் பலகீனமான அரசியல் பார்வை கொண்டிருந்த கருணாநிதியை நம்பியது தமிழினவாதிகளின் குற்றமா? அல்லது கருணாநிதியின் குற்றமா? தமிழ்த்தேசியப் பிரச்சினைகளாக முன்னிலைப்படுத்தப்படும் ஈழம், எழுவர் தூக்கு விவகாரம் ஆகியவை குறித்து பேசுவதற்கு கடந்த திமுக ஆட்சிக்கு முன்பு வரை இருந்த கட்டுப்பாடுகள் தமிழினவாதிகள் அறியாததல்ல. பேரறிவாளனுக்கு தூக்கு குறித்து உங்கள் கருத்தென்ன என்று திமுக தலைவரிடம் செய்தியாளர்கள் முன்பொருமுறை கேட்டதற்கு, தூக்கு தண்டனை முற்றாக ஒழிவதே திமுகவின் கொள்கை என்றார். சுற்றி வளைத்து இப்படி பேசியதையே ‘காலம் போற்றும் கலைஞர்’ என்று அட்டைப்படம் போட்டு நந்தன் வழி பத்திரிக்கை கொண்டாடியது.

    ஒரு வேளை இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், நாம் தமிழர் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி மற்றும்இதர பிற்போக்கு சக்திகள் உசுப்பேற்றிக் கொள்ளும். இந்த கும்பலை அடித்து துரத்த வேண்டியது கம்யூனிஸ்ட் மற்றும் பெரியாரிஸ்ட்களின் பணியாக இருக்கும்.

  9. சாதி இந்துக்கள் ஓட்டுக்காக எங்களை கழட்டி விட்டுவிட்டது திமுக என்கிறார் திருமா…. அதைப் பற்றி வினவு வாயே திறக்கவில்லையே… ஒன்று திருமா தவறு இல்லை உண்மை ஏதாவது ஒன்றுதானே உண்மை என்று உரைக்கவேண்டியதுதானே… எங்கே உண்மையை உரைப்பவரே… இப்போது பேசுங்கள் பார்ப்போம்

    • திருமா அப்படி சொன்னதுபோல தெரியவில்லையே.கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தைவைத்து வெளியே வந்ததாக அல்லவா கூறுகிறார்.

      அதுபோகட்டும் கட்டுரை அதிமுக திமுக விற்கு இடையே வேறுபாடுகள் இருக்கிறது. சி.பி.எம் -பா.ஜ.க போல அல்லது காங்-பி.ஜே.பி போல.அது குறித்து உங்கள் கருத்து என்ன?

      • தி இந்து திருமாவளவன் பேட்டியைப் படித்துப் பாருங்கள்//APRIL 14
        ..///தலித் வெறுப்பைத் தமிழகம் முழுமைக்கும் ராமதாஸ் தூவினார். தலித் வெறுப்புக்கான இலக்காக விசிகவைக் கட்டமைத்தார். திமுகவுக்கும் இயல்பிலேயே அச்சம் இருந்தது. எங்களை உடன் வைத்திருந்தால் அவர்களின் அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்று அவர்கள் உணர்வதை அவர்களுடைய புறக்கணிப்புகள் வெளிக்காட்டியபோது நாங்கள் வெளியேறினோம்.///
        மனோஜ் எதையும் சரியாக படிக்காமல் அப்படி சொன்னதுபோல தெரியவில்லை என்று நீங்கள் எழுதுவது நுனிப்புல் மேய்வதைப் போல இல்லையா..?

  10. உங்களின் கட்டுரையின் நோக்கம் என்ன ?
    தி மு க மற்றும் அ தி மு கா கட்சிகள் பாதுகாக்க பட வேண்டும் என்று கூறுகிறீர்களா ? என்ன “‘திராவிடம் “”?
    “‘சர்வதேச அரசியல் பேசும் ” நீங்கள் திராவிடத்தை ஆலிங்கனம் செய்ய முன் வரும் ரகசியம் என்ன ?
    பாராளுமன்ற ஜனநாயகத்தையும் , புரட்சியையும் ஏன் குழப்பி கொள்கிறீர்கள்?
    இடதுசாரிகள் ஒற்றுமைக்கு வழி கூறுங்கள் —ஆந்திரா மாநிலத்தில் “‘புதிய ஜனநாயகம் ” மற்ற இடது சாரிகளுடன் இணைந்து வேலை செய்கிறார்கள்- அவர்களின் வெகு ஜன அமைப்புகள் மற்ற இடது சாரிகளுடன் இணைந்து மக்கள் விரோத செயல்களை எதிர்கிறார்கள்- கூட தங்கள் திட்ட படி மற்ற வேலைகளையும் செய்கிறார்கள்-
    maoist களின் spokes person ஆந்திராவின் வரவர ராவ் பேட்டியை படித்தீர்களா ? “”எங்கள் வெகு ஜன அமைப்புகள் RSS ,ஹிந்துத்வா சக்திகளை எதிர்த்து போராட, அந்த பாசிஸ்ட் களை தோற்கடிக்க மற்ற இடது சாரி வெகு ஜன அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய தயார்”” என கூறி உள்ளார் . அதே சமயம் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்று கொண்டு செயல் படும் CPI -CPM உடன் இணைந்து வேலை செய்ய மாட்டோம் எனவும் கூறி உள்ளனர்-
    நீங்கள் RSS -ஹிந்துத்வா சக்திகளை எதிர்க்கும் சக்திகளை யும் எதிர்ப்பது எந்த அளவு சரி ?
    “”வேறு வேறு திட்டங்களுடன்”” செயல் பட்டு கொண்டே பொது எதிரிகளை எதிர்க்க வேண்டாமா ?
    சர்ச்சில் ,பிராங்க்ளின் D .ரோஸ்வெல்ட் இருவருமே அதி பயங்கர ANTI COMMUNISTS —2 ம் உலக சண்டையில் -ஸ்டாலினுடன் -மூவரும் இணைந்து தானே ஹிட்லர் ரை தோற்கடித்தார்கள்- இல்லாவிட்டால் உலகம் என்ன ஆகி இருக்கும் ?

    ஆகவே ஒரு குறைந்த பட்ச அடிப்படையில் எல்லா இடதுசாரிகளும் இணைந்து நின்றால் தான் நல்லது-இடது திருப்பம் எளிதானது அல்ல- ஒற்றுமை RSS /ஹிந்துத்வா எதிர்ப்பில் வேண்டாமா ? CPI -CPM இரண்டும் தி மு க -அ தி மு கா வை விட்டு தொகுதி உடன்பாடுகள் இன்றி வெளியில் வந்தது பாராட்ட பட வேண்டிய விஷயம் இல்லையா ?
    எல்லாவற்றிற்கும் “‘பார்பனீய சாயம் “‘பூசி கொண்டே இருந்தால் இடது சாரிகள் வளர மாட்டார்கள்- இது போன்ற கட்டுரைகளை அன்பு கூர்ந்து இனி வெளியிட வேண்டாம் என கேட்டு கொள்ளகிறேன்-

    உங்கள் “திட்டம் “என்னவோ அது படி செல்லுங்கள்- “”1970 ஆண்டுகளை புரட்சியின் பத்து ஆண்டுகள் ஆக்குங்கள் “‘ என்ற சாரு மஜும்தாரின் வார்த்தைகள் இன்னும் நனவு ஆக வில்லை தோழர்களே- அன்பு கூர்ந்து பரிசீலனை செய்யுங்கள்- இடது ஒற்றுமைக்கு வழி கொள்ளுங்கள் …

    • திமுக அதிமுக கட்சிகளுக்கு இடையில் வேறுபாடு இருக்கிறது என்பதையும் பார்ப்பன பாசிஸ்டுகளை பிரச்சாரம் செய்வதுபோல இரண்டும் ஒன்று அல்ல என்று கூறுகிறது கட்டுரை. அதற்கு அதாரமாக சில உதாரணங்களையும் கூறியிருக்கிறது. அதை மறுத்து எதையும் கூறாமல் பொத்தாம் பொதுவாக இடதுசாரி ஒற்றுமை, பாசிச அபாயம் என்று பேசினால் எப்படி சரியாக இருக்கும்?
      பார்ப்பன் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் ஆதரிக்கவேண்டிய கட்டுரை இது. ஆனால் உங்களுக்கு பதற்றத்தை உண்டாக்குகிறது என்றால் பிரச்சனை எங்கு என்று நீங்கள் தான் பார்க்க வேண்டும்.

      எமெர்ஜென்சி என்ற பாசிச காட்டாட்சியை தீரமாக எதிர்த்தகட்சி திமுக. அதற்காக இழப்புகளை சந்தித்திருக்கிறது. ஆனால் அதை ஆதரித்து தனது கட்சியின் பெயரை மாற்றியது அ.இ.அ.தி.மு.க. எமெர்ஜென்சியை ஆதரித்தது போலி கம்யூனிஸ்ட் சி.பி.ஐ. இப்படி கட்சிகளுக்குள் வேறுபாடு இருக்கிறது.

      2009க்கு முந்தைய வரலாறுகள் அனைத்தையும் மறக்கும் செலடிவ் அம்னீசியா பீடித்துருக்கும் தமிழ் சூழலில் இதை இந்த கட்டுரை அதிலிருந்து மாறுபட்டு உண்மையை எழுதியிருக்கிறது.

      மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் பா.ஜ.க காலூன்றி வரும் வேகத்தையும் தமிழ்கத்தையும் ஒப்பிட்டால் சி.பி.எம்-ஐ விட பெரியாரின் கொள்கைகள் வலுவான எதிர்பை காண்பிப்பது போல தெரிகிறது.

      • மனோஜ் அண்ணே..
        எனக்கு ஒரு சந்தேகம். எமர்ஜென்சிய எதிர்த்த சிலருக்கு அமெரிக்க சிஐஏ வோட தொடர்பு இருந்துச்சு என்பது சமீபத்திய விக்கிலீக்ஸ் வயர்ல லீக் ஆயிருக்கே.. குறிப்பாக ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உடனான உரையாடல்கள்… அது கொஞ்சம் பட்டி பாக்க வேண்டிய மிச்ச மீதினு சொல்லிட முடியுமா? சந்தேகம் தா ங்க

        • அமெரிகா நம்ம ஊரு அரசியலை நன்றாகவே மோப்பம் பிடிக்கிறது! அந்தக்காலத்தில் மக்கள் கம்யூனிசம் பக்கம் போகாமல் தடுக்க, காங்கிரசுக்கு பணம் கொடுத்தது! இன்றும் ஜெயா முதல் புத்ததெவ் எல்லோரது ஜாகஙளும் கையில் வைத்துள்ளது அமெரிக்கா! ச்மீபத்தில் கருணனிதியையும் சந்திதுள்ளார் அமெரிக்க தூதர்! மோடியை பற்றி சொல்ல வேண்டியதில்லை! ஆர் எஸ் எஸ் தலைமை இடமே தற்போது அமெரிக்கா தானே!நீதி மன்றங்கள் தடை போட்டும் கொல்லைபுறமாக ஆதார் வந்துவிட வில்லையா?நமது பன்னாட்டு முதலாளி , இந்திய பாராளுமமன்றம், உச்சானீதிமன்றங்களைவிட சக்தியுள்ளவர்கள் என்பது பெருமை தானே!

    • /CPஈ -CPM இரண்டும் தி மு க -அ தி மு கா வை விட்டு தொகுதி உடன்பாடுகள் இன்றி வெளியில் வந்தது பாராட்ட பட வேண்டிய விஷயம் இல்லையா ?/

      சின்ன திருத்தம் வெளியில் இவர்களாக வரவில்லை. பாரளுமன்ற தேர்தலில் அகில இந்திய தலைமை போயஸ் தோட்டத்துக்கு காவடி எடுத்த பின்னரும் போயசில் இருந்து அடித்து துரத்தப்பட்டனர்.

  11. // தி.மு.க.வும் இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகளில் ஊறிப்போன கட்சிதான். ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளைகள் தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடந்திருப்பதையும், அதற்குரிய பங்கை தி.மு.க. பெற்றிருப்பதையும் மறுக்க முடியாதுதான். //

    இதில் இருந்து தி.மு.க மீண்டுவிட்டதா ? திருந்தி விட்டதா ?
    கடந்த இருபது வருட திமுக-அதிமுக ஆட்சிகளில் ஒரு வேறுபாடும் இல்லை. இந்த இரண்டு கழிசடைகளும் ஒழிந்தே தீர வேண்டும்.

  12. குற்றம் செய்த ஜெயாவிற்கு தண்டனை கிடைக்க வேண்டும். சரி. கடந்த 18 வருடங்களாக 1996 முதல் 2014 வரை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, ஜெயாவிற்கு தண்டனை கிடைக்க என்ன முயற்சிகள் எடுத்தது ?
    கடந்த 2004 முதல் 2014 வரை ஆண்டது காங்கிரஸ் கட்சி தானே ? திமுக ஆதரவில் தானே காங்கிரஸ் ஆண்டது ? திமுக-காங்கிரஸ் இரண்டிற்கு ஜெயாவை பிடிக்காது …சரி…. அவர்க்கு தண்டனை கிடைக்க என்ன வழி செய்தார்கள் ? அதுபோன்ற தண்டனை வாங்கித் தர மாட்டார்கள். ஏன் என்றால், சட்டப்படி அவருக்கு தண்டனை கிடைத்தால், அதே சட்டம் இந்த காங்கிரஸ்-திமுக கழிசடைகள் மீதும் பாயும். அதனால், இந்த காங்கிரஸ்-திமுக கழிசடைகள் கொள்ளை அடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.

    இந்த கழிசடைகளை, கண்ணாடி விரியன், கட்டு விரியன் பாம்புகளை அடித்து கொன்றே தீர வேண்டும்.

  13. தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை; இலக்கு முற்றிலும் வேறு என்றானபின் அரசியல் கட்சிகளைப் பற்றிய அலசல் எதற்கு? உங்கள் பாதை என்னவோ அதை நோக்கி செல்லுங்கள்.

  14. இந்தக்கட்டுரையை முழுமையாகப்படித்தபின் இந்த சிறு பதிலை எழுதுகிறேன்.
    1. திமுக, அதிமுக என்று இரு கட்சிகளையும் சமமாக தாக்குவது பார்ப்பன யுக்தி என்று கூறுகிறார் கட்டுரை ஆசிரியர். அதற்கு அவர் கூறும் காரணங்கள். 2-ஜி ஊழல் தொகை அனுமானம்தான். அதைவிட அதிகமாக ஜெயா ஊழல் செய்திருக்கிறார். இதைவிட 2-ஜி யில் ஊழலே இல்லை, வருமானக் குறைவுதான் ஏற்பட்டது என்று கலைஞர் டிவி போல கூறியிருக்கலாம். அது சரி, பதவியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவது என்பது எப்போது ஏற்பட்டது. காமராஜர், பக்தவச்சலம், அண்ணா ஆட்சியிலா. இதற்கு முன் இந்தியாவில் யாராவது ஊழல் செய்திருக்கிறார்களா?
    2. சமச்சீர் கல்வி என்று எதிர்காலத்தலைமுறையை அறிவு சூன்யங்களாக ஆக்கும் ஒரு திட்டத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். சமச்சீர் கல்வியில் 500-க்கு 499 வாங்கும் பிள்ளைகளை பாடத்திலிருந்து ஒரு விளக்கம் கேட்டுப்பாருங்கள், எனக்கு ஒப்பிக்க அல்லது எழுதத்தான் தெரியும், விளக்கத்தெரியாது என்று பதில் வரும். மதிப்பெண் அள்ளிப்போட்டு விடுவதால் அறிவு வளர்ந்து விடுமா. இதில் ஜெயலலிதாவை குறை கூறவேண்டும் என்றால், மற்ற அனைத்திற்கும் உச்ச நீதிமன்றம் சென்றவர், இதில் மட்டும் செல்லாதது ஏன்? ஏனென்றால் தமிழ் மக்களைப்பற்றி, அவருக்கும் பெரிய அக்கறை இல்லை. எனவே, கருணாவின் குடும்பக்கதைகளையும், அவர் படம் மற்றும் பாடலை எடுத்தவுடன் திருப்தி அடைந்து விட்டார்.
    3.சுயமரியாதை, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றில் திமுக காலி பெருங்காய டப்பாவாகவேனும் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது, இவை அதிமுகவுக்கு உண்டா என்று ஒரு கேள்வி. மஞ்சள் துண்டு வினவுவிற்கு பகுத்தறிவாகப் படுகிறது. திமுக, சுயமரியாதையாளர்களின் கட்சி, அதனால் குடும்பம் குடும்பமாக பதவிகள் வழங்கப்படுகின்றன. சுயமரியாதைக்கார்ர்கள் எங்கே போனார்கள்? தலைமையை எதிர்த்து இதுவரை எத்தனை தீர்மான்ங்கள் கொண்டு வந்திருப்பார்கள்? அவரை எதிர்ப்பது கூட அவர் குடும்பத்தினர் மட்டும்தான். உலக குரு என்று உலவிக்கொண்டிருந்தவரை சிறைக்கு அனுப்பியது யார்? இதனாலேயே பலர் அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளார்கள் என்பதும், சமீபத்தில் ஒரு ஆ…சாமி, உங்களை சிறைக்கு அனுப்பியவர்கள், விரைவில் சிறைக்குச்செல்வார்கள் என்று யாரைக் குறிப்பிட்டார்? அதே நேரத்தில், 2006-ல் ஒருவர் முதல்வர் பதவியேற்றவுடன், அவரிடமிருந்து பிரசாதம் யாருக்கு கொடுத்தனுப்பப்பட்டது?
    அதிமுக என்பது எம்.ஜி.ஆரின் சினிமா கவர்ச்சியினால் உருவானது. எம்.ஜி.ஆரை யார் உருவாக்கியது. உருவாக்கியவர் மட்டும் என்ன அய்.ஏ.எஸ் அதிகாரியா? இவரும் சினிமாக்காரர்தானே.
    தர்மபுரி வேளான் பல்கலை மாணவியர், 70-களில் அண்ணாமலை பல்கலையின் பரிணாம வளர்ச்சி. 1999-ல் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தபின் ஜெயா மத்திய அரசில் அங்கம் வகிக்க முடியவில்லை. ஆனால் தன்னையும் தன்னை நம்பிய, நம்பிக்கொண்டிருக்கிற தமிழினத்தையே அடகு வைத்ததன் மூலம் கிடைத்த பரிசு, 2-ஜி. செம்மொழி – செத்துப்போன ஒரு மொழிக்கு கிடைத்த அந்த அந்தஸ்து, மிகவும் போராடியபின் தமிழுக்கு கிடைத்த்து. உடனே, கன்னடம், தெலுங்கு, நேற்று பிறந்த குழந்தையின் மழலை மொழிக்குக்கூட செம்மொழி அந்தஸ்து கிடைத்து விட்ட்து. அதை எங்கே வைப்பது. இலங்கயில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலியாக வைக்கலாம்.
    இறுதியாக ஒன்று, சோ.ராமஸ்வாமி சொல்கிறார் என்பதற்காகவே ஜெயாவை எதிர்க்கத்தேவையில்லை. அவர் தமிழினத்தின் எதிரியாகக்கூட இருக்கலாம். ஆனால் எதிரிகளைக்காட்டிலும், முதுகில் குத்துபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதே என் கருத்து.

    • Ms.J.Jayalalitha’s Government dropped the Samacheer Kalvi syllabus for the 2011-2012 academic year as the books had contents in praise of DMK’s leaders. But, the High court of Tamil Nadu ordered that Samacheer Kalvi must come into immediate effect. Tamil Nadu Government moved to Supreme court and the apex court refused to stay the order of the High court and insisted that the books need to be distributed on or before 2 August 2011.[1]
      Thanks to wiki.

    • அண்ணன் தியாகராஜன் அறிவது! சுதந்திர இந்தியாவின் முதல் சுதந்திர ஊழல், திருவாளர் சோ வின் முன்னாள் முதலாளி, ராஜாஜி யின் உறவினர் , ஆர் கே ஷன்முகம் செட்டி என்ற கோவை தமிழனை ராஜினாமா செய்ய சொல்லி அந்த இடத்திற்கு நிதியமச்சராக வந்த டி டி கிருஷ்ணமாச்சாரி என்ற தமிழர்? செய்தது! இன்றைய பங்கு சந்தை ஊழலுக்கெல்லாம் முன்னோடி! அன்னாரின் செயல் டி டி கெ -முந்த்ரா ஊழல் என்று பாராளுமன்றத்தில் முழக்கியவர் இந்திரா காந்தியின் கணவர்! அடுததநாள் மர்மமான முறையில் இறந்தார்! முதல் அரசியல் கொலை!

      • ஆனா ஜெயா மாமி பாப்பாத்தி, பாஜக பாசிஸ்டுகள் என்பதெல்லாம் இருக்கட்டும். அஜாதசத்ரு அண்ணே.. நீங்க் ரொம்ப்ப்ப நல்லவரு. எடத்துக்கு ஏத்தாப்ல தாளத்த கரீக்டா போடுறப்பவே நெனச்சேன். ஸ்மிருதி.. சாரி சுருதி தப்பிருச்சண்ணே.. சரி ஞானைக்கும் அடி சறுக்கும்.. ம்.. ம்.. நடத்துங்க.. ஆனா முந்த்ரா ஊழல் வந்த மறுநாளே பெரோஸ் காந்திய கொன்னீங்க பாருங்க அங்க இருக்கீங்க நீங்க

  15. தோழர் விமலவித்யா ! அதிமுகவை விமரிசிப்பது , அதிமுக ஆட்சியை அகற்றுவது என்பதே இப்போதைய குறிக்கோள்! தோழர் சுக்தேவின் பதிவை மீண்டும் படியுங்கள்(பதிவு 11). அதுசரி! மற்ற இடதுசாரிகளுடன் ஒத்துழைக்கலாம் என்றிர்களே, யாராது? தி மு க வுடனும், அதி முக வுடனும் எங்கு பெரிய எலும்பு துண்டு கிடைக்கும் என சென்றார்களே அவர்களா இடது சாரிகள்? மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் டாடாவின் கூட்டாளிகளாய் மாறி போனவர்கள் உங்களுக்கு இடது சாரிகளாய் தெரிகிறார்களா? வைக்கோ விமரிசிக்க தகுதியற்ற கோமாளியாகிவிட்டார், எஞ்சியிருப்பவர் விஜய்காந்த் ; தனது திருமண சத்திரத்தின் பொர்டிகொவில் சில இஞ்சுகள் , பொது உபயொகத்திற்கு விட்டு கொடுக்காமல் உச்சநிதிமன்றம் வரை சென்ற “பொதுநலவாதி” இடது சாரியா?

    இதற்கு பதில், இந்த பொய்யான தெர்தல் சடங்கையே புறக்கணிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்யலாம்! அதற்கு முன்பு இந்த அராஜக ஆட்சி இரக்கப்படல் வேண்டும்!

  16. குற்றங்களையும் ஊழல் செய்வதிலும் மறைமுகமாக ஈடுபட்டது திமுக குற்றச்செயல்களையும் ஊழலையும் அராஜாத்தைஉம் வெளிப்படையாகவே செய்கிற கட்சி அதிமுக திமுகவிற்க்கு குண்டர் படை துணையென்றால் அதிமுகவில் தொண்டர் படையே சமயம் கிடைக்கும் போது ஜெயாவின் காசில் குண்டர்படையாக மாறும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணா அவரது கட்சியினர் தத்தம் சாதியை ஒன்றே குலமாகவும் தத்தம் கடவுளை ஒரே தேவனாகவும் எண்ணிக்கொண்டு அலைந்தனர் அதுதான் திமுக கொள்கையோ என்ன எளவோ தெரியல, அனா அதிமுக கொள்கை கழகமே கோவில் அம்மாவே தெய்வம் ,இந்த வகையில் இவ்ர்களும் நாத்திகர்கள்,

  17. “தேர்தல் அரசியலுக்கு வெளியேதான், மக்கள் விடுதலைக்கும் அதிகாரத்துக்குமான தீர்வு இருக்கிறது என்று நாம் கூறுவதனாலேயே, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அனைத்தும் சமமானவை என்று பொருளல்ல. பாரதிய ஜனதா, காங்கிரசு முதலான ஆளும் வர்க்கக் கட்சிகளாகட்டும், போலி கம்யூனிஸ்டுகள், தலித் கட்சிகள் போன்றவைகளாகட்டும், அவை ஒவ்வொன்றின் தன்மையையும் பிரித்துப் புரிந்து கொள்வது அவசியம்”

    My personal view is we cannot put mechanically all the vote bank parties in one basket!
    there are half rotten apples,fully rotten apples, poison foods , etc.
    I accept this article is difficult to digest but one of the best article which stands out because of it boldness and its authors ability to walk the uncharted territory .
    A honest debate based on this article’s contend will pave way for more clarity for the young generation readers .

    • கூடையில் உள்ள ஆப்பிள்களில் கொஞ்சத்திலும் கொஞ்சம் கெட்டுப் போயிருந்தாலும் மொத்தமாய் கெடத்தான் வைக்கும். கூடையில் போய் உட்கார்ந்திருந்தாலே நல்லதும் கெட்டுப் போகும். தேர்தல் பாதைக்கு போன திருமா இதற்கு நல்ல உதாரணம் இல்லையா. நேர்மையான விவாதங்களை கோரி நிற்பவையாக கட்டுரையில் நீங்கள் குறிப்பிடும் பகுதி நீடித்திருக்க வேண்டுமானால் சொல்வதற்கு ஒன்றுமில்லை

  18. 2G ஊழலில் திமுக சம்பாரித்த காசை விட அதிமுக இந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாரித்த காசு அதிகம் என்று கூறுவதன் மூலம் ஊழல் விசயத்தில் இரண்டு கட்சிகளையும் சமன் செய்யாமல் திமுக கம்மியா தான் ஊழல் செய்து ஆனால் அதிமுக அதிகமா ஊழல் செய்து உள்ளது என்ற முடிவை வினவு வாசகர்கள் மீது வினவு வலிய திணிக்கின்றது….2G என்பது வெளிவந்த ஒரு ஊழல் மட்டும் தான்….காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக சம்பாரித்த ஊழல் சொத்து மதிப்பு அதன் தலைவர் கருணாவின் குடும்ப நபர்களின் பெயர்களில் சட்டப்படி(சட்டத்தை ஏமாற்றி ) பதிவு செய்யப்பட்டு உள்ளது….

    கனிமொழியின் சொத்துமதிப்பை கூரசொல்லுங்கள் பார்ப்போம்…..

    எது எப்படியோ அதிமுக ஊழல் மூலம் சம்பாரித்த காசை வாக்களர்களுக்கு கொடுக்கவும், வைகோ போன்ற அரசியல் பிச்சைகாரர்களுக்கு பிச்சை போடவும் பயன்படுத்துகிறது என்றால் , அதே போன்ற நிலையை தான் திமுகவும் எடுத்து ஊழல் பணத்தை ஆனந்த விகடனுக்கும் , பிற ஊடகங்களுக்கும் கொடுத்து அதற்கு சார்பான கருத்துகளை எழுத வலியுறித்தி கொண்டு உள்ளதை இந்த திமுகவுக்கு சார்பான இந்த வினவு கட்டுரை நமக்கு உணர்த்துகின்றது….

  19. தி.மு.க. கருணாநிதியைக் கடுமையாகச் சாடும் பலர் ,கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் பார்ப்பன ஊடகங்கள்,உயர், உச்ச நீதிமன்றங்கள்,அதிகார வர்க்கம்,ஆர்.எஸ்.எஸ்.சங்கப் பரிவார சக்திகள்,சாதி,சடங்கு சம்பிரதாய பிற்போக்குவாதிகள் ஜெயாவிற்கு வழங்கும் சட்டத்தை,சமூக நீதியை மீறிய சலுகைகள் இந்தியாவில் யாருக்குமே வழங்கப்படாததாகவும் தனிச் சிறப்பானதாகவும் இருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் கண்டுகொள்ளவில்லையே ஏன்? அதே போது திமுக-கருணாநிதி மீது அதீதமான பகைமையும் ,வெறுப்பும் காட்டுவது ஏன்? இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் கட்டுரையில் உள்ளனவே.இன்றைய சட்டமன்றத் தேர்தலில் திமுகவைக் குறிவைத்து அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளது தற்செயலானதா? தொன்றுதொட்டு நிலவிவரும் ஆரிய-திராவிடப் பகைமையில் இன்று எஞ்சி நிற்பது யார்?முகவா,ஜெயாவா?இதை வேறோடும் வேறடி மண்ணோடும் ஒழித்துக் கட்டும் நோக்கோடு இயங்கும் ஆர் எஸ் எஸ்க்கு நெருக்கமான கூட்டளி கருணாநிதியா?”அம்மாவா?” திராவிடத்தின் பெயரால்தான் தமிழ் நாட்டின் கட்சிகள் அனைத்தும் இயங்குகின்றன.இவையெல்லாம் திக திமுகவிலிருந்து வந்தவைதான்.இவர்கள் திராவிடப் பகைமை கொண்டு இயங்குவது ஏன்?கருணாநிதியின் மீது மட்டும் அளவற்ற வெறுப்பை உமிழ்வது ஏன்?கழுகைப்போலக் காத்திருக்கும் இந்து மத வெறி பாசிஸ்டுகளைப் பற்றி இவர்களுக்குத் தெரியாதா?இந்தச் சூழலில்தான் முகவையும் ஜெயாவையும் சமப்படுத்தக் கூடாது என்ற செய்தியை கட்டுரை முன் வைக்கிறது.பார்ப்பன இந்து மத வெறி அபாயத்தை அவர்களோடு(ஆர் எஸ் எஸ்) இணைந்து தான் ஒழிக்க முடியும் என்று சொல்பவர்கள்தான் சமப்படுத்திப் பார்ப்பவர்கள்.வெறும் தேர்தல் அரசியலுக்குள் கட்டுரை நிற்கவில்லை.அதைத் தாண்டி மக்களை அச்சுறுத்தும் இந்து மதவெறி அரசியலுக்கு எதிராக நிற்கிறது.கருத்துப் பதிவிட்டிருக்கும் பலர் தேர்தல் அரசியலில் நின்றுதான் பதிவிட்டிருகிறார்கள்.

    • வேறுபடுத்தி பார்ப்பது சரி என்று பார்த்தாலும், அது ஒரு தியரி. நடைமுறையில் மொத்த வேலைக்கு இவர்களோடு உறவை எப்படி பராமரிப்பது என்பது என வந்தால் அதனை சொல்லாமல் போவது யூகங்களுக்கு வழிவகுத்து விடாதா.. ஆரிய-திராவிட பகைமை என்பதற்கான வரலாற்று தரவுகள் இன்னமும் விவாதங்களில் தான் இருந்து கொண்டிருக்கின்றன. இனக்கலப்பு நடந்து பல நூற்றாண்டுகளைத் தாண்டி வந்து விட்டோம் என நினைக்கிறேன். ஒரு குறியீடு என்ற முறையில் சரி என்றும் அதே நேரத்தில் கருதலாம்

  20. One of the commenter has written that samacheer kalvi is a trash because of poor students knowledge in that stream of education . I openly challenge to test the cbse students the VERY BASIC FUNDAMENTALS OF GRAVITY, BUOYANCY , DENSITY AND NEWTONS LAW THRU PRACTICAL UNDERSTANDINGS IN REAL LIFE EXAMPLES . IT WILL BE A PAINFUL RESULT THAT OUR STUDENTS OF BOTH STREAMS ARE IN THE SAME BOAT . ALL OVER INDIA IS THE SAME RESULTS . EDUCATION IS A TRASH IN INDIA WITH MEMORY FILLING MACHINES .
    THE VERY IMPORTANT MESSAGE I HUMBLY WOULD PUT FORWARD IS THE VERY BASIC PROFILING OF CHARECTERISTICS IS NEEDED TO UNDERSTAND AND ANALYSE THE ELECTION PARTIES . GIVING MARKS AND STAR RATINGS TO DMK AND ADMK IS NOT THE ANSWER . I FEEL THERE IS SURE A HUGE DIFFERENCE IN THE CORE DNA OF ADMK AND DMK.

    • இரண்டு கட்சிகளது மரபணுவிலும் இப்போது இருப்பது கொள்ளை தான். கொள்கையில்லை. இந்துக்களின் கட்சிதான் என்கிறார் ஸ்டாலின். ராசாத்தியம்மாள் போகின்ற நாகத்தம்மன் கோவிலும், தயாளு அம்மாளின் பக்தியும், துர்க்கா ஸ்டாலின் பக்தியும் ஊரறிந்த ரகசியம். ஒற்றை நபரில் இருந்து தான் டிஎன்ஏ எடுத்து பரிசோதித்து பார்க்க வேண்டுமானால் வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் பற்றி ரசிய முன்னாள் மார்க்சிய அறிஞர் பிளக்கனவ் எழுதிய நூல் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்குமென கருதுகிறேன்

  21. கருணாநிதி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் நமது சூத்திர சகோதரர்கள் பற்றிய ஒரு உளவியல் அலசலாக வில்லவன் எழுதிய பதிவு இருக்கிறது.இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம்.
    https://villavan.wordpress.com/2016/02/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95/

    • படித்தேன். ஆனால் அதில் பார்ப்பனிய பார்வையில் இருந்து கருணாநிதியின் கொள்ளையை சகிக்க முடியாதவர்கள் பற்றிதான் விமரிசனம் உள்ளது. அவரே திராவிட இயக்க கொள்கையை கைவிட்டு விட்டார் எனக் கருதி விமரிசிப்பவர்கள் பற்றிய அலசல் விடுபட்டுள்ளது. கட்டுரையின் பொது ஓட்டத்தில் கருணாநிதியை மதிக்காவிட்டால் பாஜக எப்படி மன்னார்குடி கும்பலை தள்ளி வைத்து போயஸ் கார்டனை லவட்டும் என்ற வில்லவனின் முன்யூகிக்கும் திறன் தான் ஆகச் சிறப்பு. அதற்காக அவருக்கும், அவர் நிறுவ முயலும் பாசிச அபாயத்தினைசுட்டிக்காட்டியமைக்கும் எப்படி நன்றி சொல்வது என்றுதான் தெரியவில்லை.

  22. முதலில் சில விடயங்களைப் புரிந்துகொள்வது அவசியம்:
    1. மத அடிப்படைவாதம், எதிஏட்சியதிகாரம், முறைப்படுத்தப்பட்ட சங்கிலித் தொடர் ஊழல் போன்றவற்றில் எந்தக் கட்சி மிகவும் அபாயகரமானது?
    2. தி.மு.க. வெறுப்பு யாருக்குப் பயன்படும்?
    3. “நாயனம் வாசிக்கிற சாதிக்காரன்” என்று கருணாநிதியைத் திட்டிய வை.கோ தன்னை 19 மாதங்கள் பொடா சட்டத்தில் சிறையிலடைத்தபோதுகூட ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்றோ, பாசிஸ்ட் என்றோ கூடச் சொல்லவில்லையே ஏன்?
    4. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று சொல்பவர்கள் இன்றைய உடனடி அபாயங்கலான சாதி வெறி, மத வெறி, பாசிசக் கோமாளித்தனமான தேர்தல் ஜனநாயகம் குறித்துப் பேசுவதில்லையே ஏன்?
    5. கருணாநிதியை மிகக் காத்திரமாக விமர்சிப்பவர்கள் சீமான்,, வை.கோ, ராமதாசு,, அவ்வளவு ஏன்? விஜயகாந்த் குறித்துக்கூட அவ்வாறான விமர்சனங்களை வைக்கத் தயங்குவது ஏன்?
    இவற்றைப் பரிசீலிக்கும்போதுதான் ஏன் ஜெயாவையும் தி.மு.க.வையும் சமப்படுத்த முடியாது என்பதற்கு விடைகான முடியும்.

    “இத்தனை அபாயகரமான சூழலில் வெகுமக்களின் கவனம் கருணாநிதியின் மீதான வெறுப்பில் நிலைகொள்வது நல்லதல்ல.
    விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் இன்னும் 70சதவிகிதம் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். இதனை இந்திய அரசியல் அமைப்பின் தோல்வி என சொல்ல இயலாத நாம் எப்படி நாற்பதாண்டுகால திராவிட அரசியலால்தான் வீணாய் போனோம் என சொல்கிறோம்? காரணம் நாம் அப்படி சொல்லும்படி பயிற்றுவிக்கப்பட்டுவிட்டோம். இவ்வாறே தனியார்மயம் சிறந்தது எனவும், ஜெயலலிதா சிறந்த நிர்வாகி எனவும் பல அடிப்படையற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுமாறு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறேம்.

    கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் நடக்கும், கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் அந்த ஆட்சியும் மோடிக்கு பயந்துதான் நடக்கும், கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும் இப்போது போலவே அரசுப்பள்ளிகள் அழிந்துகொண்டே வரும், தமிழ் மொழிக்கும் அக்கதிதான் ஏற்படும். இவையெல்லாம் மக்களின் போராட்டங்களின் வாயிலாக மட்டுமே களையப்படக்கூடியவை. மதவாதம், ஊழல், தனியார்மயம், இயற்கைவள சுரண்டல் போன்ற பல்முனைத் தாக்குதலுக்கு தமிழகம் முகம் கொடுக்கிறது. இதில் கருணாநிதி எனும் ஒற்றை இலக்கை மட்டும் நோக்கி நீங்கள் நகர்ந்தால் மிக எளிதாக இந்துத்துவமும் முதலாளித்துவமும் நம்மை ஒழித்துவிடும்.
    பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்களைப் போல கைக்காட்டும் இடத்தில் பாய்வது முட்டாள்தனம். நிறைய வாசிப்போம், அதிகம் விவாதிப்போம் அதுதான் அறிவார்ந்த சமூகத்தின் இலக்கணம். அத்தகைய சமூகத்தின் எதிரியாக கருணாநிதி எனும் ஒற்றை நபர் மட்டும் இருக்க மாட்டார்.”
    என்று வில்லவன் எழுதியிருப்பதையும் பரிசீலிக்கவேண்டு.

    • உங்களுக்குக்கும், வில்லவனுக்கும் பிளக்கனவ் இன் வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் பற்றிய சிறு வெளியீடையே படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்

      • மார்க்ஸ் எழுதிய “கான்பிடரேஷன் ஒஃப் ப்ரோலிட்டரேட்ஸ்” என்கிற கட்டுரையில் சரியான விளக்கம் உள்ளது. அதையே உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

    • திராவிடம் என்ற இன வேர் சொல் மதிப்பு இழந்து பல ஆண்டுகள் ஆகின்றது. அரசியல் நோக்கில் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என்று திராவிட மொழிகள் வேறுபட்டு நிற்கும் இந்த காலகட்டத்தில் அவற்றுக்கு என்று மொழிவாரியான மாநிலங்கள் தனி தனியாக உருவான நிலையில் இந்த மொழிகளின் ஆதி சொல்லை அதாவது திராவிட மொழி என்ற சொல்லை தமிழ் நாட்டு மக்கள் மீது எதற்காக நாம் திணிக்கவேண்டும்.

      மெட்ராஸ் மாகாணம் பிரிவுபட்டு பலவேறு மாநிலங்களாக மொழி அடிப்படையில் பிரிந்து இருக்கும் இன்றைய நிலையில் திராவிடர் என்ற சொல்லை நாம் தவறித்து தமிழர் என்ற இன-மொழி அடிபடையிலான சொல்லை தான் நாம் பயன்படுத்த வேண்டும். திராவிடர் என்ற சொல் திமுக வில் உள்ள மாற்று மொழி இனத்தவருக்க்கு வேண்டுமானால் களிப்பு அளிக்கலாமே தவிர தமிழ் மக்களுக்கு அது தீமையை தான் அளிக்கும்.

      மக்கள் நல கூட்டணியில் திருமாவை தவிர்த்து, முத்தரசனை தவிர்த்து மீதி முத்தலைவர்களும் விஜயகாந்த் ,வைகோ,ராமகிருஷ்ணன் ஆகியோர் தெலுங்கு நாயுடு என்ற நிலையில் திராவிடம் என்ற சொல் யாருக்கு பயன் படும்?

      திமுக தலைவர் கருணா உட்பட பெருந்தலைகள் பொன்முடிபோன்றவர்கள் அனைவருமே தமிழ் மக்கள் கிடையாது.. அவர்கள் வடுகர்கள். அப்படி எனில் திராவிடம் என்ற கோட்பாடு யாருக்கு உதவ போகின்றது?

      திக தலைமை வீரமணி கூட தமிழ் அல்லாதவர் தானே? எஅப்படி எனில் திராவிடம் என்ற சொல்லால் யாருக்கு லாபம்?

      அன்று மெட்ராஸ் மாகாணம் தமிழகம் , ஆந்திரம், கருநாடகா ஆகியவற்றை கொண்டு இருந்தது என்பதற்க்காக திரு பெரியார் அவர்கள் அந்த பிரதேசங்களில் வாழும் பிற்பட்ட மக்களை ஒருங்கிணைக்கவும் அவர்களை அரசியல் படுத்தவும் திராவிடம் என்ற இன உணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார்….அவர் கால கட்டத்தில் அவர் செய்தது 100% சரியாக இருந்தாலும் இன்று அத்தகைய திராவிட உணர்வு தேவையற்ற ஒன்றாகும்…

      அது எல்லாம் சரி திமுக வின் தோற்ற தலைவர் அண்ணா இந்த வினவுக்கு பிழைப்பு வாதியாக தெரியும் போது அதே திமுகவின் இன்றைய தலைமை கருணா வினவுக்கு என்ன பார்பன எதிர்பாலரா ?

      (நாம் தமிழர் கட்சி என்று என்னை பார்த்து குரல் எழுப்ப போகும் திராவிட கும்பலுக்கு நான் பதில் சொல்ல போவது இல்லை. ஆமாம் இது தமிழ் நாடு தான்… எம் மொழி தமிழ் தான்… நாங்கள் தமிழர்கள் தான்..திராவிடம் வழக்கு அழிந்த சொல்)

    • செங்கொடியின் கட்டுரையின் மீது…
      1. திமுக தலைவர் கொள்கையையே அவர் திமுக அணிகளது கொள்கையாகவும் பார்க்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், சீர்திருத்த திருமணம், தாலி போன்றவற்றில் அணிகளின் பார்வை பற்றி ஏதேனும் கள ஆய்வுகள் உள்ளனவா?
      2. இந்துக்களின் கட்சி திமுக என ஸ்டாலின் கூறி இரு மாதங்கள் கூட ஆகவில்லை. இதுபற்றி செங்கொடியின் கருத்து. பிறகு திமுக தலைமை குடும்பத்தின் உறுப்பினர்களது தெய்வ பக்தி பற்றிய மதிப்பீடு
      3.கலைஞர் குடும்பத்திற்குள் நடந்த சாதி மறுப்பு திருமணங்களுடைய சதவீத கணக்கு ஏதும் உளதா?
      4.திக நடத்திய தாலி அறுப்பு நிகழ்ச்சியின்போது இந்து அமைப்புகள் பெரியார் திடல் நோக்கி தாக்குதலுக்கு தயாரான போது கருணாநிதியின் எதிர்வினை என்ன?
      5. குஜராத் படுகொலைக்கு பிறகும் அமைச்சரவையிலிருந்து வெளியேறாமல் இருந்த்து?
      6.கருணாநிதியின் மறைவுக்கு பின் கட்சியின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தொடர்வதற்கு தகுந்த ஆட்கள் தலைமைக்கு வர இருக்கும் சதவீத வாய்ப்புகள்..

      இதெல்லாம் பரிசீலிக்கதக்க மார்க்சிய அடிப்படை இல்லை என்பதும், நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என சொல்வதும் எப்படி சரியானது

      • உப்பு போட்டு சோரு திங்குறவனுக்கு திமுக வுக்கும் அதிமுக்கா வுஎக்கும் வித்தியாசம் கண்டிப்பா தெரியும் அதுனாலதான் வினவுல கட்டுரை எழுதிட்டாக நீ போய் அம்மா கார் டயர்ல விழேன்டா அம்பி மனி உனக்கு மந்திரி பதவியது கிடைக்கும் ஆன ஒன்னு மட்டும் தெரிஞ்க்க திமுக மட்டும்தான் தன் மான இயக்கம்

  23. தோழமையுடன் புஜ விற்கு,

    ஏப்ரல் இதழ் பார்த்தேன். சிறப்பான மேலட்டையுடன் இதழ் வந்திருக்கிறது.

    வெளிவந்துள்ள 9 கட்டுரைகளின் பட்டியல் வருமாறு; 1. ஜெ.வின் ஊழலை விவரிக்கிறது; 2. தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் சமப்படுத்தக்கூடாதென்கிறது. 3. ம.ந.கூட்டணியை அ.தி.மு.கவின் ‘பி’ டீம் என்கிறது. 4. விஜயகாந்த்தை அம்பலப்படுத்துகிறது. 5. தேர்தல் தீர்வு தராது என்கிறது. 6. சாதி நிலைநாட்டலை எடுத்துரைக்கிறது. 7. டார்ஜிலிங் தேயிலைத் தோட்டத் தொழிலின் நசிவு பற்றி விளக்குகிறது. 8,9. ஆர்.எஸ்.எஸ் அம்பலப்படுத்தப்படுகிறது. ஒன்பதில் 4 கட்டுரைகள் திமுகவின் எதிர்தரப்பிற்கு எதிரானதாயிருக்கின்றன.

    தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன?

    கட்டுரை குறித்து சில கருத்துக்கள்:

    தி.மு.கவின் நிலையாக கட்டுரை (சாதகமாக) கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறது:

    1. 2ஜி இழப்பு குறித்து, இந்தத் தொகையைவிடக் ‘குறைவான’ அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத்துறை.

    2. ‘சில’ நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு.

    3. கலைஞர் டிவிக்கு ‘இருநூறு’கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

    4. திராவிடக் கொள்கைகளின் வாசம் வீசுகின்ற, (அது காலிப்பெருங்காய டப்பாவாக இருந்தபோதும்) கட்சியாக இருக்கிறது.

    5. தி.மு.க தேர்தல் அரசியலின் ஊடாகத்தான் பிழைப்பு வாதக் கட்சியாகச் சீரழிந்தது.

    6. ஒப்பீட்டு அளவில் அ.தி.மு.கவைவிட குறைவான தேர்தல் பணப் பட்டுவாடாவையே தி.மு.க செய்கிறது.

    7. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் தி.மு.கவிற்கு இல்லை.

    8. நீதி மன்றங்கள் கருணாநிதிக்கு சலுகைகள் வழங்கவில்லை.

    9. கருணாநிதியை நிர்வாகத் திறமையற்றவர் எனப் பார்ப்பனக் கும்பலும் ஊடகங்களும் குற்றஞ்சாட்டின.

    10. திராவிடக் கருத்தாக்கங்கள் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருவதற்கு கருணாநிதியையும் திமுகவையும் காரணமாகக் கருதி வருகிறது பார்ப்பனக் கும்பல்.

    11. தி.மு.கவிற்கு மங்களம்பாடித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன தேசியத்திற்குள் முழுவதுமாக மூழ்கடித்துவிடலாம் என முனைந்து வருகிறது அக்கும்பல்.

    12. ஓவ்வொரு கட்சியின் தன்மையையும் பிரித்துப் புரிந்துகொள்வது அவசியம்.

    13. தி.மு.க, அ.தி.மு.க சமம் என்பது பார்ப்பனக் கும்பல் முன்வைக்கும் வாதம்.

    14. அதற்கு வால்பிடிக்கின்றன ம.ந.கூ, பா.ம.க, நா.த. கட்சிகள்.

    மேலே குறிப்பிட்டுள்ள 14 கருத்துக்களையும் முன்னர் வெளிவந்துள்ள புஜவிலிருந்தே ஆதாரங்களை எடுத்து விரிவாக விளக்கி மறுக்கமுடியும். இருப்பினும் சுருக்கமாகவே கூறலாம்.

    1,2,3. இக்காரணங்களினால் 2ஜி ஊழல் நியாயமானதாகிவிடுமா? அல்லது குறைவு, சில, 200 கோடிதான் இலஞ்சம் என இதைச் சாதகமாக அணுகமுடியுமா? இப்படித்தானே தொடக்கத்தில் சி.பி.எம்மும் கூறியது. தி.மு.கவிற்காக புஜ ஏன் இப்படித் தன்னிலை விளக்கம் கொடுக்கிறது?

    4. பெருங்காயமே போலியானது என்றுதான் நாம் கூறி வந்திருக்கிறோம். காலி பெருங்காய டப்பாக்களைப் பற்றிய கவலை நமக்கெதற்கு?

    5. தனது அரசியல் குழந்தைப் பருவத்திலேயே, காமராஜரைத் தோற்கடிக்க, ஓட்டுக்குப் பணம்கொடுத்த கட்சி தி.மு.க. அதை நேரடியாக மேற்பார்வையிட்டுத் திறம்படச் செயலாற்றியவர் கருணாநிதி. எனவே தேர்தல் அரசியலின் ஊடாகத்தான் தி.மு.க சீரழிந்தது என்பது ஏற்க இயலாதது. ஏனென்றால் தேர்தல் அரசியலே சீரழிவானதுதானே.

    6. தி.மு.க அதிகமாகப் பணப்பட்டுவாடா செய்யாமலிருப்பதற்குக் காரணங்கள் இரண்டாகும். 1. உட்கட்சி ஊழல்கள் அதிகம். 2. பெருங்காய டப்பா இன்னும் நம்மிடம்தானிருக்கிறது எனும் திமுகவின் மிதப்பான எண்ணம். சரி, பணப்பட்டுவாடாவே செய்யாமலிருந்தால் மட்டும் தி.மு.க யோக்கியமானதாக ஆகிவிடுமா?

    7. 8. இது ஆதங்கமா?. இல்லை, வருத்தமா?.

    9. நாம் குற்றம் சாட்டியதில்லையா?

    10. கருணாநிதியின் நாக்கைவெட்டுவேன் எனக்கொக்கரித்த சதுர்வேதி சாமியாரைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கீழச்சேவல்பட்டித் தோழர்களைக் கைது செய்தது திமுக போலீஸ்தான். பார்ப்பனக் கும்பல்ல. அதனாலென்ன, போலீஸ் போலீஸ்தான். திமுக திமுகதான் என்கிறதா பு.ஜா?

    11. பிரித்துப் பார்க்குமளவிற்கான தன்மைகள் என்று திமுகவின் எந்தத் தன்மையைப் புஜ கருதுகிறது என விளக்க முடியுமா?

    13. சோ, தி.மு.கவிற்கு எதிராக அ.தி.மு.கவை ஆதரிக்கிறார் என்பது, “தி.மு.க, அ.தி.மு.க சமம் எனப் பார்ப்பனக் கும்பல் முன்வைக்கும் வாதம்”, என்பதற்கு முரணாக உள்ளது. ஒருவேளை, ‘அது போன(தேர்தலாக) மாசமாக’ இருக்குமோ!.

    தேர்தல் நேரத்தில் இப்படியொரு கட்டுரை வெளிவந்துள்ளது சிந்திக்க வைக்கிறது.

    கட்டுரையின் சாரமாக நான் புரிந்துகொள்வது, “தி.மு.க காப்பாற்றப்படவேண்டிய கட்சி எனப் புஜ கருதுகிறது” என்பதுதான்.

    ‘கருணாநிதி எத்தனை அரசியல் சமரசங்களைச் செய்துகொண்டு இந்திய தேசியத்திற்கும் பார்ப்பனக் கும்பலுக்கும் விசுவாசமிக்கவராக நடந்து கொண்டாலும் பார்ப்பன பாசிசக் கும்பல் எதையும் பொருட்படுத்துவதாக இல்லை’ எனப் புஜ கருணாநிதியைச் சரியாக அடையாளம் காட்டுகிறது. திமுகவும் கருணாநிதியும் ஒன்றுதான்.

    சமப்படுத்தப்படுவதின் நோக்கத்தினையும் சமப்படுத்துபவர்களின் நோக்கத்தினையும் அம்பலப்படுத்துவது அவசியமானதே. ஆனால், அதற்காக சமமற்றது என வரிந்து கட்டிக்கொண்டு விளக்கவேண்டிய தேவை நமக்கேன் வந்தது?

    திமுகவையும் அதிமுகவையும் சமப்படுத்தும் காரணிகள் ஒன்றுகூட இல்லையா?. ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அக்காரணிகளைக்கொண்டு பார்ப்பனக் கும்பல் அவைகளைச் சமப்படுத்துவதில்லை, என்பதில்தான் அவர்களது உள்நோக்கம் மறைந்துள்ளது. புஜ அந்தக் காரணிகளை எடுத்துரைத்து அம்பலப்படுத்தி உண்மையில் எந்த வகையில் அவர்கள் சமமானவர்களாகயிருக்கிறார்கள் என்பதைக் காட்டியிருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் வெறுமனே சமப்படுத்தவே கூடாது என்பதும் பொத்தம் பொதுவாக, நரித்தனம், கபடத்தனம் என்பதும் புஜவின் கட்டுரைத் தரத்திற்குப் பொருந்தக்கூடியதுமல்ல, சரியானதுமல்ல.

    தோழமையுடன்

    குருசாமிமயில்வாகனன்

  24. அறிவற்ற ஒரு முட்டாள் தான் மக்கள் நலக் கூட்டணியை அதிமுக வின் B டீம் என்பான்.

    • அறிவற்ற முட்டாளுக்கு தானே ஒரு முட்டாள் தான் என்பது தெரியாது! விளங்கவைக்கவும் முடியாது!

      • மெய்யாலுமே மார்க்சிய இயங்கியல் பூர்வமா இப்போதான் பேச ஆரம்பிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்

  25. தேர்தல் நேரத்தில் இக்கட்டுரையின் நோக்கமென்ன?

    ஓட்டுப் போடாதே என்ற முழக்கம் காணாமல் போய் விட்டதே? ஏன்?

    கவிஞர் அப்துல் ரகுமான் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில்பதில் சொல்லவதாக இப்படி சொன்னார். தமிழ் சமுதாயத்திற்கு அவரை விட்டால் யார்? எனவே நாம் அவரை குறை சொல்லக் கூடாது? என்று

    இக்கட்டுரையின் நோக்கம் அதே தொனியில் இருப்பதாக தெரிகிறது.

  26. எல்லோருக்கும் தத்துவ வறட்சி ஏற்பட்டு இருக்குன்னு நெனைக்கேன். முதல்ல பொது எதிரிய அடையாளம் கண்டு வீழ்த்தனும்கய்யா. சில்லறை எதிரிகள அப்புறம் கவனிச்சிக்கலாம். பொது எதிரியான பார்ப்பனீயம் இப்போது அசுர பலத்தோடு வராய்யா. கால்ல விழுந்து கதறுகிற திமுகவை கூட அவன் விட்டு வைக்க நினைக்கல அத நெனச்சுப் பாருங்கய்யா. அவன வீழ்த்தனும். க்டுகளவுதான் பயன்படும்னா கூட பயன்படுத்திக்குவோம். இல்லைன்னா பெரியார் பிறந்த மண் பொறிகடலை வித்த மண்ணுன்னு பேசிக்கறதுல ஒரு பிரயோசனுமும் இல்ல.

    • உங்களது தத்துவ திரட்டின்படி திமுக என்பது பார்ப்பன எதிர்ப்பின் குறியீடு. சரிதானே. அதில் உண்மை கடுகளவு இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சரிதான். ஆனால் எதார்த்தம் அப்படி இல்லையே. அணியிலக்கணத்தில் பொய் சொல்லப் புகுந்த புலவர்கள் இல்பொருள் உவமையணி என ஒன்றை கட்டியமைப்பார்கள். அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதனை உண்மை என மன்னன் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் மக்கள்..?

      • ஆளுங்கட்சிகளை பிரித்து பார்த்து கையாள்வதில் ஒரு தத்துவம் இருக்கவேண்டும். அது மர்ர்க்சியத்தில் இருக்கிறது. இந்தியாவில் இந்து பயங்கரவாதத்தையும் முஸ்லீம் தீவிரவாதத்தையும் ஒரே மாதிரியானதாக எடை போடமுடியுமா? இன்னொரு உதாரணம் – திமுகவும், பாமகவும் ஜாதி ரீதியிலான வேட்பாளர்களையே நிறுத்துகின்றன என்பதற்காக இரண்டும் ஒரே தன்மையிலானவையா? இன்று திமுகவும் அதிமுகவும் ஒன்னுன்னு சொல்லி பார்ப்பனீயம் திமுகவை ஒன்னுமில்லாமல் செய்ய நினைக்கிறது. அதற்கு நாயுடு முதல் பாய்மார் வரையினில் எல்லா மட்டத்திலும் வேலை செய்கிறார்கள். அதற்கு இது ஒரு எதிர்வினை. வினவு சொல்லி ஓட்டுபோடாமல் இருக்கப் போவதில்லை. அப்படி ஓட்டுப் போடுபவர்களுக்கு இது ஒரு கைடு மாதிரி. ஜெயா மீண்டும் வந்தால் தனிழ்நாடு நாசகரா விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மக்களைக் காக்கும் கடமையைச் செய்யத் தவறினால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும்.

        • சித்திக் சார்.. குல்லாவால கொண்டய மறைக்க முடியாது. நீங்க போற ரூட்டுக்கு கட்டுரை தரம் தாழ்ந்து போகல.. எடம் மாரி வந்திருக்கீங்க பாய் (சரிதான.. கொண்டல சிணுக்கோலிய சரியா சோருவும்வோய்)

  27. மத்தியில் காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்து திமுகவினர் நடத்திய 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற (வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டவை இன்னும் எத்தனையோ!) இந்தியா இதுவரை கண்டிராத மெகா ஊழல்கள் மற்றும் அராஜகங்கள் தான் இந்து மதவெறிக்கும்பல் பெரும்பாண்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு காரணம். இல்லாவிட்டால் பா.ஜ.க என்னும் கட்சி தனிப்பட்ட முறையில் பெரும்பாண்மை பெற்று இருக்கவே முடியாது. ஒரு பக்கம் மதவாதத்தை எதிர்க்கிறோம் என்று பம்மாத்து செய்வது, இன்னொரு பக்கம் மெகா ஊழல்களும் அராஜகங்களும் செய்து பா.ஜ.க வே பரவாயில்லை என்று அகில இந்திய அளவில் மக்களும் அறிவுஜீவிகளும் உணரும்படி செய்து மதவாத கும்பல் அதிகாரத்துக்கு வர வழிவகுப்பது. இது தான் திமுகவினரின் (அதாவது கருணாநிதி குடும்பத்தினரின்) யோக்கியதை. இந்த கட்சி ஒழிவது தான் எதிர்கால திராவிட அரசியலுக்கு நல்லது.

  28. மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது எவ்வளவு உன்னதமானது!. இந்தியா மிகப்பரந்த நிலப்பரப்பையும் மிகுந்த வேற்றுமைகள் கொண்ட மக்கள் கூட்டங்களையும் கொண்ட நாடு. ஆனால் அதிகாரங்கள் அதிகளவில் மத்திய அரசில் தான் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் தான் தமிழ்நாடு போன்ற ஓரத்தில் இருக்கும் மாநிலங்கள் பங்கெடுத்து நியாயமான வகையில் பலன் பெற முடியும். ஆனால் இந்த கூட்டணி ஆட்சியையே அகில இந்திய அளவில் மக்கள் வெறுக்கும் விதமாக திமுகவினர் செயல்பட்டார்கள். ஆனால் “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று பம்மாத்து மட்டும் செய்வார்கள். திமுக இந்து மதவெறி எதிர்ப்பு கட்சி என்றால் அதிமுகவையும் இந்து மதவெறி எதிர்ப்பு கட்சி என தாராளமாக சொல்லலாம்.

    1. வாஜ்பாய் அரசை பதிமூன்று மாத காலம் அல்லோலகல்லோலப்படுத்தி கடைசியில் ஒரு ஓட்டின் மூலம் அவர்களை தோற்கடித்தார் (2014 நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் வென்றாலும் அந்த அம்மையார் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. 2ஜி ஊழல் புண்ணியத்தில் மத்தியில் பாஜக பெரும்பான்மை பெற்றுவிட்டதால் அவர்களை ஆட்டிப்படைக்க முடியாது என்பது தான் அதற்கு காரணம்) .
    2. உச்ச நீதிமன்றம் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்த போது தனி சட்டம் கொண்டுவந்து இடஒதுக்கீட்டை பாதுகாத்தார். அதற்கு எதிராக வழக்கு தொடுத்து தமிழக அரசை எதிர்த்த வழக்கறிஞர் விஜயன் கொடூரமாக வெட்டப்பட்டார்.
    3. சி.ஐ.ஏ ஏஜெண்ட் என புத்தகத்தில் எழுதி அண்ணாவை கேவலப்படுத்தியதற்காக சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய சேஷனுக்கு அதிமுக மகளிர் அணியினர் கலை நிகழ்ச்சி நடத்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    4. ஆண்டு தோறும் கிருஸ்துமஸ் நாளன்று கன்னியாஸ்திரிகளை கொண்டு தன் வீட்டில் திருப்பலி நடத்துகிறார். சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்த காலம் தான் தன் வாழ்நாளில் பொற்காலம் என தயங்காமல் கூறுகிறார்.
    5. எல்லாவற்றுக்கும் மேல் சங்கராச்சாரியாரை ஒரு தீபாவளி நாளன்று கைது செய்து கம்பி எண்ண வைத்தது. இது எத்தகைய அதிர்ச்சியையும் வெறுப்பையும் இந்துத்துவ மற்றும் உயர்சாதி கும்பலுக்கு அகில உலக அளவில் ஏற்படுத்தியது என்பதை சொல்ல தேவையில்லை.சங்கராச்சாரி நேரடியாக பத்து கொலைகளை செய்திருந்தாலும் அந்த ஆளின் மீது யாரும் எந்த ஆட்சியாளரும் கை வைக்க துணிய மாட்டார்கள். ஏனென்றால் இந்த நாட்டின் யோக்கியதை அப்படி. ஆனால் சொந்த பகை தீர்க்க ஒரு கொலையை இந்த அம்மையார் பயன்படுத்திக்கொண்டார்.

    ஆக திமுக இந்துத்துவ எதிர்ப்பு கட்சி என்றால் அதிமுகவும் இந்துத்துவ எதிர்ப்பு கட்சி தான். அதிமுக இந்துத்துவ பாசிச கட்சி என்றால் திமுகவும் இந்துத்துவ ஆதரவு பாசிச கட்சி என எளிதாக நிறுவலாம்.

  29. I request all my fellow citizens, this writer and other commenters to think something else as our country has entered into a one way path leading to its self demolition long back. Netaji’s sad end just says this. Where people are living there anyone can fight for rights. Here? No…only 2 legged creatures living as humans.! Really sorry for saying this. But careful analysis of history…mean the past 100 years history would confirm you this statement true. The very reason could be anything from disliking our own color, culture, language, religion, etc. & liking white people color, style of living, language, religion,etc. If this is what our quality/character, then where it can lead? Sure…Slavery only. But one thing is sure. Whoever behind this worst situation will undergo even worst damages than what we earlier victims are facing now or later.! It is like advanced level serious cancer that can’t be cured but to wait for the day.! May be we can struggle to extend our days! That is the only thing left to us now. Because, here, the evil forces are so powerful to eliminate any kind of reformers. Evil forces, I mean not only our politicians, Cinema walas, Serial walas, riches but also the very population of this country.
    Don’t know what could be the intention of this writer…may be defending DMK? whatever it is…nothing good will happen here. I mean TN and the whole India.! May be those who expect changes…might pray for some miracle to happen. Already there came a man in the disguise of miracle maker but proving us that he is even worst than the Congress walas. So don’t believe in any miracle of human nature…that will get uprooted in minutes here…only that way country has grown uncomparable to other nations.

  30. karunanishi frontal attack on thanthi tv and dinamani..

    கேள்வி :- ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட “தினத்தந்தி” நாளிதழ் தேர்தல் நெருங்க நெருங்க, அ.தி.மு.க. வின் பிரச்சார ஏடாக மாறி வருகிறதே?

    கலைஞர் :- “தினத்தந்தி”, “தினமணி” போன்ற ஏடுகளின் உரிமை யாளர்கள் ஆளுங்கட்சியின் சார்பில் நேரில் கண்டு மிரட்டப்பட்டுள்ளார்களாம். “தினமலர்” நாளேட்டையும் அவ்வாறே மிரட்ட முயன்று அவர்கள் அதற்கு மிரளவில்லையாம். “தினத்தந்தி”யைப் பொறுத்தவரையில், “தினத்தந்தி அறக்கட்டளை” மீது அரசு தொடுத்திருந்த ஒரு வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக, அ.தி.மு.க. அரசின் தலைமை வழக்கறிஞரே, நீதி மன்றத்தில் கடிதம் ஒன்றினை, சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த உதவிக்குக் கைமாறாக “தந்தி தொலைக்காட்சி” கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி, அதில் செயற்கையாக அ.தி.மு.க. வுக்கு ஆதரவான நிலை இருப்பதாகக் காட்டி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறதாம்! அதைப் போலவே “தினமணி” நாளிதழில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்கி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட “கார்ட்டூன்”களை மீண்டும் வெளியிடுவதாக உறுதி அளிக்கப்பட்டு அவ்வாறே வெளியிடத் தொடங்கியிருக்கிறதாம்! எடுத்த வாந்தியை மீண்டும் வாயில் போட்டு விழுங்கிட முயற்சிக்கிறார்களாம். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் இது போன்ற ஏடுகளின் பிரச்சாரங்களையெல்லாம் கடந்து தான் தனது பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இனியும் தொடரும். இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் தி.மு.க. கவலைப்படாது.

    • About 2 years back,Dinamani particularly its editor Vaithyanathan celebrated the birth day of their cartoonist Madhi.In an article praising Madhi,Vaithyanathan wrote that Madhi is a true follower of Ramakrishna Paramahamsa and Vivekananda.But the under the belt attack of Karunanidhi and DMK by this cartoonist over the years belies the certificate given by Vaithyanathan to him as true follower of Ramakrishna and Vivekanandha.Dinamani not only releases old cartoons attacking DMK.But also carries articles belittling the DMK in its Election Special supplement.As told by Kalaignar,DMK is beyond all these motivated negative campaign and false propaganda.Kalaignar ‘THENDRALAI THEENDIYADHILLAI;THEEYAI THANDIYIRUKKIRAAR”AVARADHU ARASIYAL VAZZHKKAIYE ORU THODARUM YEDHIRNEECCHALTHAAN.

  31. ஊழல் ,கட்ட பஞ்சாயத்து போன்றவற்றில் ஒரே தராசில் நிற்கின்றன

    அடுத்து இரு கட்சிகளுமே இயக்கத்தை கம்ம்யூனிச கட்சி போல ஒரு நபர் கட்சியாக மாற்றிவிட்டார்கள். உட்கட்சி ஜனநாயகத்தை அழித்து , இயக்கத்தை முடக்கி விட்டார்கள்.

    சமூக நீதி என்பதில் தீ மூ க ஒப்பீட்டு அளவில் சிறப்பாக செயல் படுகிறார்கள். ஆனால் இன்னும் ஜாதி சார்ந்த வேட்பாலகளை நிறுத்துவதன் மூலம் , ஜாதி என்னும் கட்டமைப்பை பயன்படுத்துவதோடு அதற்கு மறைமுகமாக உரம் போடுகிறார்கள் . மக்கள் ஜாதியை விட்டு வராததால் அது தேவை படுகிறது போலும் .மாற்றத்தை ஓரிரவில் கொண்டு வர முடியாது என்பதால் குறை கூற முடியாது.

    தி மு க தமிழ் தமிழ் என்று முழங்கி அரசு கல்வியை செல்லாக்காசாக்கி , மக்களை தனியார் கல்வி கூடத்திற்கு அனுப்பிவிட்டார்கள் . ஆ தி மூ க இந்த விசயத்தில் மாறு பட்டு எளியோரும் ஆங்கில கல்வி பெற வழி செய்து விட்டார்கள்.

    ஆனால் தி மூ கா மக்கள் வரி பணத்தை எடுத்து மக்களுக்கே சட்ட பூர்வ லஞ்சம் (இலவசம் ) கொடுத்து ஜனநாயகத்தின் ஆணி வேறை அசைத்து விட்டார்கள் . ஜனநாயக அமைப்பு முறையை கேலி கூத்தாக்கி விட்டார்கள்.

    புதிய தலைவர்கள் வராமல் அதே தலைவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தரப்பட வேண்டுமா ? இரண்டு முறைக்கு மேல் ஒருவரே ஒரு பதவியை வகிக்க கூடாது என்னும் சட்ட திருத்தம் அவசிய தேவை

  32. //பார்ப்பன் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் ஆதரிக்கவேண்டிய கட்டுரை இது. ஆனால் உங்களுக்கு பதற்றத்தை உண்டாக்குகிறது என்றால் பிரச்சனை எங்கு என்று நீங்கள் தான் பார்க்க வேண்டும்.//

    அன்பர் மனோஜ் அவர்களின் கூற்றை நான் வழி மொழிகிறேன்! உலக முதலாளித்துவ ஜனனாயக அமைப்பே திருடர்களின் கூட்டணிதான்! அதில் கரை கண்டது அதிமுக, காங்கிரஸ், பி ஜெ பி! மற்ற காம்ரேடுகளை போன்று தி மு க வும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சாதாரண மக்களை கரையேற்ற பார்க்கிரார்கள்! வங்கத்திலும், கேரளாவிலும் ஆட்சியை பிடித்த தோழர்கள் ஊழல் சேற்றில் விழுந்து , டாடாவின் கூட்டாளி என்றநிலமைக்கு இறங்கவில்லையா?

    தி மு க வும் காங்கிரஸ் என்ற, பார்பன படுகுழியில் தெரிந்தே வீழுந்தது! ஒரு சமயத்தில் பி ஜே பி கூட்டணியையும் ஆதரித்தது , தன் ஆட்சியை தக்கவைத்து கொள்ள! அதனால் தமிழகத்திற்கு கிடைத்தநன்மைகள் பல!

    ஆனால் அதிமுக திராவிட த்தை பிளந்து ஒழிக்கவே உருவெடுத்தது, கருவிலேயே பிழை! ஊழல் குற்ற சாட்டில் மாட்டிய அனைத்து தி மு க வினரும் அதிமுகவில் இணைந்த பின்னர் புனிதராயினர், பண்ருட்டியார் உட்பட!

    அதிமுக இமாலய ஊழல் செய்தாலும் அகில இந்திய அளவில் அனைத்து பார்ப்பன அமைப்புகளின் ஆதரவும் இருப்பதால் உச்சநீதி மன்றமே உச்சா விட்டு கொண்டுள்ளது!

  33. 1. http://www.theptrfamily.org/index.php/galleries/social-media – இது பிடிஆர்பி தியாகராசனின் ஒப்புதல் வாக்குமூலம். தங்களது குடும்ப ஆன்மீக உதவி பற்றியது. இவர்தான் தற்போதைய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
    2. பார்க்க வந்த புதிய தமிழகம் கட்சியினரை ஏ.எல்.எஸ். லட்சுமணனின் (நெல்லை சட்டமன்ற உறுப்பினர்) வீட்டிலிருந்தவர்கள், அவர்கள் வெளியேறும் போது ‘அவர்கள் வந்துபோன இடத்தை டெட்டால் போட்டு கழுவி விட்டு வா’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் போன தாழ்த்தப்பட்டவர்கள் காதில் விழும்படி. இரண்டாம் தலைமுறை திராவிட இயக்க குடும்பம் வேறு.
    -காலி பெருங்காய டப்பாக்களில் கெரசின் வாடை தான் வருகிறது

    • மகா பாவம் மனசாட்சி இல்லாதசெயல்
      இது இல்லை அசலான இந்து தர்மம்

    • அன்புள்ள பழனி, கட்டுரை தொடர்பான விசயம் குறித்து உங்களது சொந்த கருத்து, விமரிசனங்கள், ஐயங்களை முன் வையுங்கள்! இரவல் வாங்கும் கட்டுரைகளை முன்வைத்து விவாதிப்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அந்த இரவல் முழு உளறலாக இருக்கும் பட்சத்தில் அந்த மதிப்பீடு உங்களுக்கும் வந்து சேரும்.ஒரு வேளை அந்த கட்டுரை கருத்து உங்களுடையதும்தான் எனில் என்ன செய்வது? பரிதாப்படுவதைத் தவிர விவாதிப்பது என்பது வன்முறைக்கு சமம். நன்றி

      • சால்ஜாப்பு ஜகா

        சோ ஜாதி உணர்வு கொண்டு ஜெவை ஆதரிக்கிரார் என்று சொன்னால் பிறகு ஏன் அவர் 1996ல் ஜெ வை தோற்கடித்து கருணானிதி முதல்வராக உதவினார்

        • ஆDMஈண்!

          43 ஆக வரவேண்டிய எனது பதிவு 39-40-ல் வருகிறது! தயவு செய்து திருத்தவும்!

      • தோழர்கழுக்கு வணக்கம்,நாம் இது போன்ற ஒரு நிலையில் உள்ளதை என்னவென்று கூறுவதற்க்கு உள்ளன, நான் ம.க.இ.க அனுதாபி என்று தோழர்கள் என்னிடம் அடுக்கும் கேள்விகள் குறித்து பின்னர் பார்ப்போம், இதில் தோழர் கேட்ட கேள்விகள் செயல்த்ந்திரம் போர்த்ந்திர்ம் சரியானவை இல்லையோ அல்லது தவறை சுட்டி காட்டாவும், உங்கள் பதில் எதிர்பார்கிறேன்.

      • தோழர்களுக்கு வணக்கம், நான் தோழர் பாவெல் அவர்களின் கட்டுரை கீற்று இணைய் தளத்தில் வெளியாகி இருந்தது அவற்றின் மீதான என் விளக்கத்திற்க்காக இதனை கேட்டுருந்தேன் ஆனால் அதற்க்கான பதில் வரவில்லை ஏனோ? உங்கள் பதிலுக்காக… சி.

  34. பூனை கண்ணை மூடிகொண்டால் பூலோகம் இருண்டதாய் விடுமா?
    1996-ல் ஜெயலலிதாவின் எதிர்ப்பலை கண்டு அஞ்சியே , தனது சாராய சாம்ராஜ்ய சகாக்களை காப்பாற்றவே, தி மு க விற்கு ஆதரவு என்று நாடகமாடினார் கள்ள சாராயம்+நல்ல சாராய அதிபர் (விழுப்புரம் டிஸ்டிலரி ஊழல்-பு ஜ வில் படித்தது) சோ அன்ட் கோ! கருணானிதி பதவியேற்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டு , ஓரத்தில் அம்போ என்று விழித்து கொண்டிருந்த “சோ: முகத்தை நேரில் கண்டேன்! அந்த கொடுமையை ஏன் சார் கேட் கிறீங்க?

  35. திருவாளர் ராமன் அவர்கள் தி மு க -அதிமுக இரண்டும் எப்படி ஒரே தராசில் இருக்கிரார்கள் என்று விளக்கினார்-பதிவு 36. பார்ப்பனீயம் இத்தகைய முடிவைத்தான் மக்கள் எடுக்க வேண்டும் என முன்வைக்கிறது!
    சமூக நீதி என்பதில் தீ மூ க ஒப்பீட்டு அளவில் சிறப்பாக செயல் படுகிறார்கள். ஆனால் இன்னும் ஜாதி சார்ந்த வேட்பாலகளை நிறுத்துவதன் மூலம் , ஜாதி என்னும் கட்டமைப்பை பயன்படுத்துவதோடு அதற்கு மறைமுகமாக உரம் போடுகிறார்கள் . மக்கள் ஜாதியை விட்டு வராததால் அது தேவை படுகிறது போலும் .மாற்றத்தை ஓரிரவில் கொண்டு வர முடியாது என்பதால் குறை கூற முடியாது.//

    குறை கூற முடியாதவர் இரண்டும் ஒன்றே என்ற முடிவிற்கு எப்படி வந்தார்?

    //தி மு க தமிழ் தமிழ் என்று முழங்கி அரசு கல்வியை செல்லாக்காசாக்கி , மக்களை தனியார் கல்வி கூடத்திற்கு அனுப்பிவிட்டார்கள் . ஆ தி மூ க இந்த விசயத்தில் மாறு பட்டு எளியோரும் ஆங்கில கல்வி பெற வழி செய்து விட்டார்கள்.//

    ஆக தமிழ் தமிழ் என்று தி மு க வின் வெற்று முழக்கத்தையே அம்பிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்ற உண்மையை ஒப்புகொண்டுள்ளார்!

    பல அரசு பளிகளில் ஆசிரியர்களையேநியமிக்காமலும், மேலும் பல பள்ளிகளை இழுத்து மூடியும் சாதனை புரிந்தது அதிமுக தானே!அதிமுக எல்லோருக்கும் ஆங்கிலகல்வி அளித்ததாம் ! இது தான் பார்ப்பன புரட்டோ?

    //ஆனால் தி மூ கா மக்கள் வரி பணத்தை எடுத்து மக்களுக்கே சட்ட பூர்வ லஞ்சம் (இலவசம் ) கொடுத்து ஜனநாயகத்தின் ஆணி வேறை அசைத்து விட்டார்கள் . ஜனநாயக அமைப்பு முறையை கேலி கூத்தாக்கி விட்டார்கள்.//

    இதில் அ தி மு க அப்பாவி போலும்! எனக்கு ஒரு சந்தேகம்! அன்பருக்கு ஒருவித காமாலை கண்ணோ? அ தி முக என்பதற்கு பதில் திமுக அன்று பதிவிட்டுள்ளாரே?

    • //பல அரசு பளிகளில் ஆசிரியர்களையேநியமிக்காமலும், மேலும் பல பள்ளிகளை இழுத்து மூடியும் சாதனை புரிந்தது அதிமுக தானே!அதிமுக எல்லோருக்கும் ஆங்கிலகல்வி அளித்ததாம் ! இது தான் பார்ப்பன புரட்டோ?//

      தமிழ் வழி கல்வி என்பதை விட்டு சமூகம் வெகு தொலைவில் போய்விட்டது . இதை உணராமல் அரசாங்கம் தமிழ் வழி கலிவ்யையே தர விழைந்தது . நடுத்தர பெற்றோர்கள் அனைவரும் ஆங்கில கல்வி தரும் பள்ளியை நாட ஆரம்பித்து விட்டனர் .

      அதன் விளைவால் குறைந்தது மாணவர் சேர்க்கை .
      குறைந்த மாணவர் சேர்க்கை தொடர்ந்ததால் ஆசிரியர் குறைப்பு நடந்தது .
      ஆசிரியர் எண்ணிக்கை குறைந்ததால் மிச்சம் மீதி இருப்பவர்களும் தனியார் பள்ளிக்கு சென்றுவிட்டார்கள்.

      இதற்க டவுன்வார்ட் ஸ்பைரல் என்வார்கள்

      நன்றாக நடக்கும் ,பெற்றோர் ஆதரவு உள்ள பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைதுவிட்டர்களா ?

      //இதில் அ தி மு க அப்பாவி போலும்! எனக்கு ஒரு சந்தேகம்! அன்பருக்கு ஒருவித காமாலை கண்ணோ? அ தி முக என்பதற்கு பதில் திமுக அன்று பதிவிட்டுள்ளாரே?
      //

      இதை யார் ஆரம்பித்து வைத்தது ? மக்களை பழக்கிய பின்னர் பிற கட்சிகளுக்கு வேறு வழி இல்லை! தி மு க பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம் . ஆனால் இது ஒரு கரையாக அந்த கட்சியின் மீது படிந்திருக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க