privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்புதுச்சேரி தொழிலாளிகள் கொண்டாடும் லெனின் !

புதுச்சேரி தொழிலாளிகள் கொண்டாடும் லெனின் !

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

Lenin-Redஏப்ரல்-22, மாமேதை லெனின் அவர்களின் பிறந்த நாள். லெனின் பிறந்த நாளை தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் ஏன் கொண்டாட வேண்டும்? என தொழிலாளர்களுக்கு விளக்கிப் புரட்சிக்கு அறைகூவி அழைக்கும் விதமாக ஆசான் லெனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மன்னராட்சி நிலவிய ரசியாவில் ஜார் மன்னனின் ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் கேள்விக்கிடமற்ற வகையில் நிலவி வந்தது. மனிதனை மனிதன் சுரண்டும் இந்த சுரண்டல் முறையை ஒழிக்க அதே தொழிலாளர்கள், விவசாயிகளை அணிதிரட்டி ஜாரின் காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் தோழர் லெனின். உலகில் முதன் முதலாக பாட்டாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியவர். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டியவர். தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் ஏதேச்சதிகாரத்திற்கு முடிவு கட்டியவர். உழைக்கும் மக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தை ஒழித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியரவர் என்ற வகையில் லெனினும் அவருடைய வழியும் நமக்கு இன்றும் தேவைப் படுகிறது. குறிப்பாக ரசியாவில் இருந்த நிலை தான், இந்தியாவில் இன்றைய முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல் முறையில் மக்களின் நிலையாக உள்ளது.

pondy-lenin-bd-1தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் முதலாளிகளால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதையும் முழுவதுமாக துடைத்துவிடவும், சில மாற்றங்கள் என்ற வகையில் முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தமும் செய்து வருகிறது மோடி தலைமையிலான அரசு. இதனால், தொழிலாளி வர்க்கம் வறுமையில் வாடுவதும், தற்கொலைக்கு ஆளாவதும் நடக்கிறது. சட்ட்திருத்தத்திற்கு எதிராகப் போராடினால் தொழிலாளர்கள் மீது வழக்கு, காவல்துறையினரை வைத்துத் தாக்குதல் நட்த்துவது என காட்டுமிராண்டித் தனமான செயல்களை மாணவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களை தேசவிரோத பேச்சுகள், கருத்துக்கள் என்று தேசபக்த முலாம் பூசி அவர்களைத் தற்கொலைக்கு ஆளாக்கியும், படுகொலையும் செய்து வருகிறது.

விவசாயிகளின் மானியம் ரத்து செய்யப்படுவதும், படிப்படியாக குறைக்கப் படுவதும், கடன்கள் மறுக்கப்படுவதும் செய்து வருகிறது அரசு. இன்னொரு பக்கம் முதலாளிகளுக்கு மானியத்தைத் திறந்துவிடுவதும், கடன்களைத் தள்ளுபடியும் செய்கிறது இதே அரசு தான். இதையே நாட்டின் வளர்ச்சி என்று கூறி, தனது தவறுகளை மூடி மறைத்து நியாயம் கற்பித்து வருகிறது. தனது உழைப்பின் மூலம் மக்களுக்குச் சோறு போடும் விவசாயிகளை இழிவாகப் பார்ப்பதும், மக்களுடைய வரிப்பணத்தை விழுங்கி, தொழிலாளர்களின் உழைப்பினை விழுங்கி ஊதாரித்தனமாக மது, மாது என செலவு செய்யும் முதலாளிகளை உயர்வாய்ப் பார்த்து சலுகைகளை வாரி வாரி வழங்குவதும் தான் இன்று நாம் காட்சியாக உள்ளது.

pondy-lenin-bd-2இவற்றை எல்லாம் மூடி மறைத்து ஓட்டுக்கட்சிகளில் நேர்மையானவர் களுக்கு, அதுவும் நியாயமானவர்களுக்கு வாக்களித்தால் நமது நிலைமைகள் மாறிவிடும் என்றும், எனவே, அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் எனவும் தேர்தல்துறை பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் உழைக்கும் மக்களின் வாழ்வில் மாற்றம் பெற்று ஏற்றம் வரவில்லை.

எனவே, உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக தங்களின் போராட்டத் தலைவராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழிகாட்டியுள்ளார் என்பதை நெஞ்சிலேந்தி நமது நாட்டிலும் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்திக் காட்டத் தயாராக வேண்டும் என தற்போதைய அரசியல் சூழல் கோருகிறது. ஆம்! அது தான் தற்போது பெங்களூருவில் தொழிலாளர்கள் நடத்திய பி.எஃப் வயது வரம்பிற்கான போராட்டமும் உணர்த்துகிறது.

எனவே, உலகில் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற பெருமைக்குரியவரான மாமேதை லெனின் பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைத்திட உறுதியேற்பு திருபுவனை கிளை அலுவகத்தில் கொண்டாடப்பட்டது. மாமேதை லெனின் அவர்களின் உருவப்படத்தை வைத்து, இன்றைக்கு ஏன் லெனின் நமக்குத் தேவைப்படுகிறார் என்பதை விளக்கி, பு.ஜ.தொ.மு புதுச்சேரி தலைவர் சரவணன் பேசினார்.

ஏற்கனவே, பிறந்தநாள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, அந்தப் பக்கம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போலிசு, வெடி வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் போது, அவ்வழியே வந்த தேர்தல் ‘பறக்கும் படை’ போலிசை ஏவி விட்டுச் சென்றது. ஏற்கனவே, பாயக் காத்து நின்ற போலிசு, உடனடியாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து, “அனுமதி வாங்கினீர்களா? அனுமதி இல்லாமல் நடத்தக் கூடாது, யாரு வெடி வெடித்தது? யாரு தலைவர்? உடனே ஸ்டேசனுக்கு வாங்க!” என்றது. மேலும், “விசயம் தெரிந்த நீங்களே இப்படி அனுமதி வாங்காமல் செய்யலாமா?” என்ற வழக்கமான டயலாக்கையும் எடுத்து விட்டது.

pondy-lenin-bd-4“எங்களது ஆசான் லெனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. மேலும், ஒலிபெருக்கி, வைக்கவும் இல்லை. அதனால், அனுமதி வாங்கத் தேவையில்லை.” என்று கூறிய நமது தோழர்களிடம், “ஸ்குவாடு வந்து சொல்லிட்டுப் போயிட்டாங்க, ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போயிடுங்க” என்று கெஞ்சிய போலிசிடம், “இதோ வருகிறோம்” என்று சொல்லி ஸ்டேசனுக்குச் சென்று பார்த்த போது, “இது மாதிரி செய்யும் போது, ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்துட்டு அனுமதி வாங்கிச் செய்யுங்க” என்று சொல்லி அனுப்பியது போலிசு.

அவ்வழியாகச் சென்ற மக்களிடம், இனிப்பு வழங்கியும், யார் லெனின் என்பதை பிரசுரம் கொடுத்து விளக்கும் விதமாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கும் தொழிற்பேட்டைப் பகுதியில் வெடிவெடித்தும் கொண்டாடியது தொழிலாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

pondy-lenin-bd-poster

தகவல்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, 95977 89801.

  1. என்னங்க இது தீபாளி மாதிரி பட்டாசு வெடிச்சிகிட்டு,லட்டு கொடுத்துகிட்டு !….பறை அடிச்சி நம்ம ஆசான் லெனின் அவர்களின் பிறந்தநாளை நம்ம தமிழர் பண்பாட்டோட கொண்டாடணுங்க…..அடுத்த ஆண்டு செய்வோமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க