privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கவறட்சியின் அகதிகள் - மராத்வாடா பயங்கரம் - புகைப்படங்கள் !

வறட்சியின் அகதிகள் – மராத்வாடா பயங்கரம் – புகைப்படங்கள் !

-

ந்தியாவில சுமார் 33 கோடி மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த மாரத்வாடா பகுதியில் வறட்சியோ தலைவிரித்தாடுகிறது. மோடி அரசு முன்வைக்கும் “வளர்ச்சி” அரசியலின் உண்மை முகம் காண விரும்புவோர் மராட்டிய மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இந்த வறட்சியும் அந்த வறட்சியை எதிர் கொள்ளாமல் போகும் மத்திய மாநில அரசுகளும் சேர்ந்து மராட்டியத்தின் மராத்வாடா பகுதியில் யாரும் வாழ முடியாத நிலையை கொண்டு வந்துள்ளது.

அங்கே சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசையும் தாண்டி மக்களை வதைக்கிறது. வெயிலின் கொடுமையால் கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் எங்கெல்லாம் நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றதோ அதை அலைந்து திரிந்து பருகி உயிர் வாழும் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இங்குள்ள கிணற்று நீரை பருகுவதினால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வேறுவழியின்றி மேலும் மேலும் கிணற்றை தோண்டி அதே நீரை குடித்து அவதிக்குள்ளாகின்றனர். மருத்துவ துறை தனியார் மயமாகி, அரசு கைவிடும் போக்கினால் இம்மக்கள் வாழ்வில் மட்டுமல்ல, நோயிலும் தாக்கப்படுகின்றனர்.

வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

யானைப்பசிக்கு சோளப்பொறி போல, மகாராஷ்டிரா அரசு இரயில்களின் மூலம் தண்ணீரை சொட்டு சொட்டாக அளிக்க முயல்கிறது. அதுவும் கிடைக்காத மக்கள் தண்ணீருக்கு அவ்வட்டாரம் முழுவதும் அலைகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருப்போர் கொஞ்சம் மராட்டியத்தின் அவலத்தை பாருங்கள்! தமிழகமும் இந்நிலை நோக்கித்தான் செல்கிறது.

நன்றி: Al Jazeera, புகைப்படங்கள் Neha Tara Mehta

தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: கலா

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பெல்குந்த் கிராமத்தில் வடிகட்டாத நீரை பருகுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரகத்தில் கல் உருவாகின்றன.
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பெல்குந்த் கிராமத்தில் பாதுகாப்பற்ற குடிநீரை பருகுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக கல் உருவாகின்றன. இந்தியா ஒலிம்பிக்கில் கிழிப்பது இருக்கட்டும், நம் குழந்தைகளுக்கு குடிநீர் கூட கொடுக்க இங்கே வக்கில்லை.
வறட்சியின் காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். வறட்சி காலங்களில் பராமரிக்க முடியாதவர்கள் அதை விற்க முடியாது ஏனெனில் அங்கு மாட்டுக்கறி தடைச்செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் அவர்களின் தொழிலை விடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
வறட்சியின் காரணமாக கால்நடை விவசாயிகள் தமது மாடுகளுக்கு குடிநீர் கூட அளிக்க முடியவில்லை. அதே நேரம் அவற்றை விற்கவும் முடியவில்லை காரணம் மாட்டுக்கறி மீதான தடை. இடையில் அரசு, மேற்கண்ட படத்தில் இருப்பது போல சில கோசாலைகளை வைத்து கணக்கு காட்டி தனது கோமாதா பக்தியை காட்டுகிறது. குடிக்க தண்ணி இல்லை, இதில் கும்பிடுவது ஒரு கேடா?
சினத் சேக் தஜூதின் – கிணற்று நீர் வற்றிவிட்டதால் எங்களை சுற்றி இருந்தவர்களில் பஞ்சத்தினால் பிழைப்பு தேடி சென்றுவிட்டனர். ஆனால் எங்களுக்கு வேறு இடம் இல்லாததால் நாங்க இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கிறோம்.
உளுத்தம் பருப்பை காயவைக்கிறார் ஜீனத் ஷேக் தஜூதின். உள்ளூர் கிணறுகள் வற்றிவிட்டதால் அண்டை வீட்டார் பலர் வெளியேறி விட்டனர். அப்படி வெளியேறுவதற்கு வழியில்லை என்றாலும் ஜீனத்தின் குடும்பமும் ஏதாவது ஏற்பாடு செய்து வெளியேற வேண்டும், வேறு வழியில்லை.
 சுனந்தா பாவர் – எங்கள் குடும்பம் தண்ணிருக்காக பக்கத்து கிராமத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. என்னுடைய மாமியார் தண்ணிருக்காக தன்னைத்தானே தாக்கிகொண்டு மருத்துவனையில் சிகிச்சைப்பெற்றார்.
சுனந்தா பவார் (நீலம் – ரோஸ் சேலையில் இருப்பவர்): எங்கள் குடும்பம் தண்ணிருக்காக பக்கத்து கிராமத்திற்கு சென்று மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படி கஷ்டப்படுவதால் என்னுடைய மாமியார் (மஞ்சள் துப்பட்டா) தண்ணிருக்காக அடிப்பட்டு பின்னர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றார்.
அடோலத்தி கிராமத்தை சார்ந்த சுவர்ணா விலாஸ் சாப்தே குழந்தை பெற்றெடுத்து 10 நாட்களில் அசுத்தமான நீரினால்  இரைப்பை சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அருகில் மாமியார் கைக்குழந்தையுடன் இருக்க படுக்கையில் இருக்கும் அடோலத்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது ஸ்வமா விலாஸ் சாப்தே, குழந்தை பெற்றெடுத்த 10 நாட்களுக்குள்ளேயேஅசுத்தமான நீரினால் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிர்மலா தாஹே
3 குழந்தைகளுக்கு தாயான நிர்மலா தாகே வயது 45, லட்டூர் நகரின் அருகில் உள்ள கங்காபுரி கிராமத்தில் வசிக்கிறார். கடந்த 4 மாதங்களாக அசுத்தமான நீரை குடித்ததால் இவருடைய சிறுநீரகத்தில் கல் உருவாகி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் சிகிச்சைக்காக சுமார் 34 000 ரூபாய் வரை செலவழித்துள்ளார்.
 லட்டூரை சேர்ந்த மஞ்ரா கிராமத்தின் ஆற்றை ஆழப்படுத்தும் பணி மேற்க்கொள்ளப்படுகிறது. இதனால் இக்கிராமத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.
லட்டூரை சேர்ந்த மஞ்சிரா கிராமத்தின் ஆற்றை ஆழப்படுத்தும் பணி தற்போது மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் இக்கிராமத்திற்கு தேவையான தண்ணீரை அளித்த இந்த ஆற்றில் இப்போது சகதி மட்டுமே இருக்கிறது.
வறட்சியால் பலர் இந்த ஊரைவிட்டு போகின்றனர் – ராம் சந்திர ஏக்நாத் சிண்டே ஊர் தலைவர்
வறட்சியால பலர் இந்த ஊரை விட்டு போகிறார்கள் – ராம் சந்திர ஏக்நாத் ஷிண்டே , லட்டூர் பகுதி கிராமம் ஒன்றின் தலைவர்
15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணிர் இங்கே வீடுகளுக்கு கொடுக்கிறாங்க அதுவும் ஒவ்வொரு வீட்டிற்கும் 50 லீட்டர்தான்
சுத்தமான நீருக்கு வரிசையில் நிற்கும் மக்கள். அதுவும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படும். ஒரு குடும்பத்திற்கு 50 லிட்டர் மட்டுமே. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் ஒரு நபர் இந்த தண்ணீரை சராசரியாக ஒரு நாளைக்கு அரை லிட்டர் மட்டுமே பயன்படுத்த முடியும். இது நாடா இல்லை சுடுகாடா?
வறண்டு காணப்படும் கிணறு
மராத்வாடா பகுதியில் இருக்கும் சோலாப்பூர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் அருகிலிருக்கும் வறண்ட கிணறு.
 ஜூன் மாதத்திற்கு பின்பு தான் மழை வரும் இருப்பினும் விவசாயிகள் இப்போதே தங்களின் நிலங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
பருவமழை ஜூன் மாதத்திற்கு பின்பு தான் வரும். இருப்பினும் விவசாயிகள் இப்போதே தங்களின் நிலங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். தண்ணீருக்காக வருத்தத்துடன் ஒரு முன்தயாரிப்பு!
சில வருடங்களுக்கு முன் இந்த தோட்டத்தில் திராட்சை காணப்பட்டது. இப்போதோ சிறு இலைககள் கூட இல்லை.
சில வருடங்களுக்கு முன் இந்த தோட்டத்தில் பசுமையான இலைகளோடு கொத்துக் கொத்தான திராட்சைக் குலைகள் காணப்படும். இப்போதோ சிறு இலைககள் கூட இல்லை. பேய்கள் நடமாடும் வனாந்திரம் போல இருக்கிறது.
 கடுமையான வறட்சி தொடங்கி மூன்று வருடத்தில யாரும் எதுவும் எங்களுக்கு பண்ணல.
ஷிவ்குமார் நக்ரால்: கடுமையான வறட்சி தொடங்கி மூன்று வருசம் ஆகுது ஆனா யாரும் எதுவும் எங்களுக்கு பண்ணல.
வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பக்கத்தில் உள்ள அணையிலிருந்து 2.5 லிருந்து 5 மில்லியன் லீட்டர் தண்ணீர் இங்கு கொண்டுவந்து வினியோகம் செய்யப்பட்டாலும், இன்னும் அங்கு தண்ணிர் பற்றாக்குறை இருந்துக்கொண்டு தான் இருக்கிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பக்கத்தில் உள்ள அணையிலிருந்து 2.5 லிருந்து 5 மில்லியன் லீட்டர் தண்ணீர் இங்கு கொண்டுவந்து வினியோகம் செய்யப்பட்டாலும், இன்னும் அங்கு தண்ணிர் பற்றாக்குறை இருந்துக்கொண்டு தான் இருக்கிறது.