Friday, March 31, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிழுப்புரத்தில் ஜெயா - வீட்டுக் காவலில் தோழர் ராஜு !

விழுப்புரத்தில் ஜெயா – வீட்டுக் காவலில் தோழர் ராஜு !

-

raju128-04-2016 நள்ளிரவு 12.45 மணியளவில் விருத்தாசலம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் நேர்முக காவல் ஆய்வாளர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் செல் போனில் பேசி உங்கள் வீட்டுக்கு அருகில் நிற்கிறோம். வெளியே வாருங்கள் என அழைத்துள்ளனர். அதற்கு ராஜு “நான் வெளியூரில் இருக்கிறேன் இந்த நேரத்தில் பேசுவதும் வீட்டுக்கு வருவதும் அவசியமில்லை” என பேசினார்.

“இன்று விழுப்பரத்தில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, நீங்கள் போராட்டம் நடத்த போவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதனால்தான் டி.ஐ.ஜி, எஸ்.பி சொல்லி நாங்களே இந்த நேரத்தில் வந்துள்ளாம். நேரில் பேச வேண்டும் வாருங்கள்” என அழைத்தனர். “அறிவிக்காமல் எந்த போராட்டமும் எங்கள் அமைப்பினர் செய்ய மாட்டார்கள். இன்றைய தினம் எந்த போராட்டமும் அறிவிக்கவில்லை. க்யூ பிரிவு போலீசார் வேண்டுமென்றே வதந்தியை கிளப்புவார்கள் நீங்கள் போங்கள்” என போனில் பேசி அனுப்பி விட்டார்.

அதிகாலை 4.30 மணியளவில் வெளியூரில் இருந்து வீட்டிற்கு ராஜு வந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் அனைத்து  வழிகளிலும் போலீசு ஜீப்போடு காவலுக்கு போட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலைமை. பத்திரிக்கையாளர்களும். மக்கள் அதிகார தோழர்களும், பல்வேறு கட்சி பிரமுகர்களும் பொது மக்களும் செய்தி கேள்விப்பட்டு கூட்டம் கூடிய பிறகு காலை 8-00 மணியளவில்தான் போலீசார் கல்லூரி நகரை விட்டு சென்றனர். ஆனால் வெளிப்பகுதியில் மப்டியில் அதிகாமான போலீசாரை தற்போதும் கண்காணிப்புக்கு அனைத்து வழியிலும் போட்டுள்ளனர்.

விழுப்பரத்தில் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், தோழர் ரஞ்சித் ஆகியோரை காலை 6-00 மணிக்கு வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். ஜெயா பொதுக்கூட்டம் நடத்தினால் போலீசு பாதுகாப்பு கொடுக்கட்டும் மக்கள் அதிகார தோழர்களை கைது செய்வது காவல் துறையின் ரவுடித்தனம். சுதந்திரம் ஜனநாயகம், சட்டம் மனித உரிமை எதுவும்  ஜெயா ஆட்சியில் கிடையாது. தேர்தல் ஆணையம் ஜெயா கட்டுபாட்டில் இருப்பதால் அது தொடர்கிறது. மக்கள் அதிகாரம் சார்பில் காவல் துறையின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மதுவிலக்கை தேர்தல் வந்ததால் அனைத்து கட்சிகளும் வாக்குறுதி அளிக்கின்றனர். மக்கள் அதிகாரம் ஒரு வருடமாக மதுவிலக்கை மக்களே அமுல்படுத்த போராடி வருகிறது. தேர்தலுக்கும் மக்கள் அதிகார அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தேர்தலினால் மக்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேறாது. அதனால்தான் மக்கள் அதிகாரம் அமைப்பினைக் கண்டு அரசு பயப்படுகிறது, அடக்குமுறையை ஏவிவிடுகிறது. இதனால் எங்களது போராட்டம் ஓயாது, முன்னிலும் அதிகமாக போராடுவோம். டாஸ்மக் கடைகளை நிரந்தரமாக மக்கள் மூடுவார்கள்!

தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

  1. Jayamma ADMK must stop supply of spurious free items. Even the DMK supplied colour TVs were spurious quality dont work well. FREE schemes by ADMK DMK must be good products. Otherwise dont give FREE items.
    ’அம்மா’ இலவச பொருட்கள் போலியா? – என்டிடிவி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்கள்வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (11:06 IST) . தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள இலவசப் பொருட்கள் போலி நிறுவனங்களால் வாங்கப்பட்டு விநியோகப்பட்டுள்ளதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் தனது புலனாய்வில் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தமிழக மக்களுக்கு வழங்கியுள்ள விலையில்லா பொருள்கள் பலவழங்கியுள்ளது. மடிக்கணினிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள், தங்க நாணயங்கள் மற்றும் பள்ளிக்கூட பைகள் என்று பல பொருள்களை அது வழங்கியுள்ளது. இவற்றிற்காக அரசாங்கம் சுமார் 21 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் மூலமாக வாங்கப்பட்டிருக்கலாமோ என்று என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த விலையில்லா பொருள்கள் எப்படி அரசால் வாங்கப்பட்டன என்று ஆய்வு செய்த அத்தொலைக்காட்சி நிறுவனம் இதன்பின் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகித்துள்ளது. மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள் ஆகிய மூன்று இனங்களுக்கு மட்டும் 8870 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வாங்கிய ஒருசில நாட்களிலேயே பழுதடைந்து ஓரங்கட்டப் பட்டுவிட்டன. இது எந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் என்று பார்த்தால், அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்கவே இல்லை என்பது புலனாய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது. ………… இவ்வாறு வர்த்தகர்களிடமிருந்துதான் இவற்றை வாங்கியதாகவும், அவை சீனாவில் கூட உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த என்டிடிவி புலனாய்வு காணொளி இப்போது சமூகவலைத்தள ஆர்வலர்கள் பலராலும் தங்கள் முகநூல் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வலம் வந்துகொண்டிருக்கிறது. நன்றி : தீக்கதிர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க