இந்த ஆண்டு (2016) மே தினத்தை முன்னிட்டு உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க போராட்டங்களும், பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன. பல பேரணிகளில் போலிஸ் தடியடி நடத்தியிருக்கிறது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையைப் போல இந்த மே தினம் வெடித்திருக்கிறது.
தொழிலாளர் நலச் சட்டங்களில் பிரான்ஸ் அரசு கொண்டு வர உள்ள அநீதியான திருத்தங்களை எதிர்த்து கடந்த சில மாதங்களாகவே போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு அது மேலும் தீவிரமடைந்திருக்கிறது. வேலை நேரத்தை அதிகரிப்பதையும், வேலை நீக்கம் செய்யபடுவதை எளிமையப்படுத்தியும் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் இச்சட்டத்தை தொழிலாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று 1.5.2016 நடைபெற்ற போராட்டத்தில் போலீசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. துருக்கியில் நடைபெற்ற மேதின ஊர்லவத்தில் போலீஸ் உடன் நடந்த மோதலில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக மேதின ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்நிய ஆதிக்கத்தை முறியடிக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் இது நடைபெற்றது.
அமெரிக்காவில் இனவெறியை கிளப்பிவிடும் குடியரசுக் கட்சியின் டிரம்பை எதிர்த்து மேதின ஊர்வலம் நடைபெற்றது. தென் கொரிய தலைநகர் சியோல் முதல் வங்கதேச தலைநகர் டாக்கா என உலகம் முழுவதிலும் நடைபெற்ற போராட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
மே தினம் வெறும் கொண்டாட்டமல்ல, போராட்டம் – வீடியோக்கள்
ஜெர்மனி
————————————
துருக்கி
———————————
பிரான்ஸ்
—————————————–
உக்ரேன்
———————————————
இத்தாலி
————————————–
மே தின புகைப்படங்கள்























—————————————————————–
வளர்ந்தநாடுகள், வளரும்நாடுகள் அனைத்திலும், அதனதன் கொதிநிலையை வெளிக்காட்டி கொண்டிருக்கிறது. இன்னும் இந்தியா கும்பகர்ன உறக்கத்தில் உள்ளது. இந்திய முதாலாளிதுவ வல்லுனர்களின் சமீபத்திய பயத்தில்/கனிப்பின் படி ஐ.டி துறையின் சரிவில் தான் இந்தியாவிலும் வெடிக்கும் போராட்டங்கள். ஆக, ஒன்றினைந்த போராட்டங்களும் புரட்சியும் சாத்தியப்படும். ஐ.டி துறையின் சரிவில் மற்றும் அதன் மீளவழியற்ற தொடர்ச்சியிலும் தான் பரந்த அளவில் புரட்சிகான தொடக்கமாக இருக்கும்.
காண கண்கொள்ளாக் காட்சிகள். வெடிக்கட்டும் முதலாளிகளுக்கு எதிரான போராட்டங்கள்