privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுஇன்று டாஸ்மாக் மூடுவிழா ! அனைவரும் வருக !

இன்று டாஸ்மாக் மூடுவிழா ! அனைவரும் வருக !

-

ஆனைவாரி

“பிராத்தல் கேஸ் போடுவேன் கை, காலை உடைத்து விடுவேன்”  ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட பிரச்சாரம் செய்த பெண்கள் மக்கள் அதிகாரம் தோழர்களிடம் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி குத்தாலிங்கம் ரவுடித்தனம்.

புவனகிரி தாலுக்கா, ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட மே 5-ம் தேதி வரை கெடுவிடுத்து ஆனைவாரி கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும், விருத்தாசலம் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் சிதம்பரம் கோட்டாட்சியரிடம் தேதி மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மனு கொடுக்க வந்த பெண்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் இணைந்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தது பற்றியும். மே 5-ம் தேதி போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தும் தெருமுனை கூட்டங்கள் போட்டு விளக்கினார்.

காட்டு நாயக்கன் தெருவில் தெருமுனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த போலிசு “யாரிடம் அனுமதி வாங்கி பிராச்சாரம் செய்தீர்கள், தேர்தல் நேரத்தில் இப்படி கூட்டம் போடுவது சட்டவிரோதம்” என்று கூறி தோழர்களிடம் இருந்த மெகா போனை பிடுங்கிக் கொண்டு தோழர்களையும் கைது செய்து வண்டியில் ஏற்ற முயன்றனர். அதற்கு ஒத்துழைக்காமல் தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு போலிசிடம் போராடினார்கள்.

“நீங்கள் எல்லாம் எந்த ஊர்? இங்கு வந்து மக்களை ஏன் போராட துண்டுகிறீர்கள் சொன்னா ஒழுங்க ஏற மாட்டீர்களா? சோறுதான் தின்றீங்களா, வேறா ஏதாவது சாப்பிடுறீர்களா?” என்றவாறு திட்டித் தீர்த்தனர். கூடுதலான போலீசு வந்து ஆண் தோழர்களை ஜீப்பில் ஏற்றியது. பெண் தோழர்கள் “பெண் போலீஸ் இல்லாமல் கைது செய்ய முடியாது” என்று வாதாடிய பிறகு பெண் போலீசை வரவழைத்து கைது செய்ய முயன்றனர்.

இதற்கிடையே கைது செய்த ஆண் தோழர்களை கொண்ட ஜீப்பை எடுக்க போலீசு முயன்ற போது பெண் தோழர்களுடன் இணைந்து மக்களும் ஜீப்பை மறித்து நின்று போராடினார்கள். இது சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் செய்வதறியாது திகைத்து போனது போலீசு.

ஜீப்பை பின்னால் எடுத்த போலீசு வேறு வழியில் 3 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு 25 கி.மீ சுற்றிக் கொண்டு தோழர்களை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றது. போகிற வழியில் தோழர்களிடம் இருந்து செல்போனை பிடுங்கியது. செல் போனை பிடுங்கியவுடன் தோழர்கள் “மூடு டாஸ்மாக்கை” என்று பாடியவாறு வந்ததும் போலிசை ஆத்திரமடைய செய்தது.

பெண் போலிசு வந்து தோழர்களை கைது செய்ய முயன்ற போது உடன் வந்த DSP குத்தாலிங்கம் “உங்களை எல்லாம் பிராத்தல் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் இங்கு வந்து ஏன் பிரச்சினை பன்றீங்க, இது வி.ஐ.பி தொகுதி (அ.தி.மு.க செல்வி. இராமஜெயம்)” என தோழர்களையும் “நீங்க என்னிடம் தான் வந்தாக வேண்டும். உங்கள் பிள்ளைகள் வேலைக்கு போகாமல் செய்துவிடுவேன்” என்று மக்களையும் மிரட்டினார்.

பெண் தோழர்களை கைது செய்ய முயடியாமல் திணறிய போலிசு தோழர்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கைது செய்தது. தோழர்களை போட்டோ பிடிக்க சி.ஐ.டி உளவுப்பிரிவு, எஸ்.ஐ என அனைவரும் அணிவகுத்தனர்.

கைது செய்த தோழர்களை தனித்தனியாக விசாரித்த டி.எஸ்.பி எதும் பதில் ஏதும் கிடைக்கததால் மேலும் ஆத்திரமடைந்தார். மக்கள் அதிகாரம் விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தத்தை தனி அறையில் அடைத்தனர். தோழர் மணிவாசகத்திடம் “மக்கள் அதிகாரம் என்ன மயிர் அதிகாரம்” என்றும் “ நீங்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் நாங்கள் என்ன செரைக்கவா இருக்கிறோம். கை காலை உடைத்து விடுவேன்” என்றும் மிரட்டினார்.

அதற்கு தோழர், “நீங்கள் என்னை அடித்துக்கூட கொல்லலாம் அமைப்பைப் பற்றி தவறாகப் பேசினால் நடப்பதே வேறு” என பதிலடி கொடுத்தவுடன் அமைதியாக சென்றார்.

கைதான பெண் தோழர்கள் 3 பேர் உட்பட 10 பேர் மீதும் பிரிவு 143 மற்றும் 188 ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட துணை செயலாளர் செந்தில் தலைமையிலான வழக்கறிஞர் குழு, போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான தோழர்கள் மறுநாளே அதே கிராமத்திற்கு சென்று, “மே 5 -ம் தேதி கடையை மூட வாருங்கள், அதிகாரிகள் மூட மாட்டார்கள் போலீசு கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் ஒன்று திரண்டால் நிச்சயம் மூடமுடியும்” என்று பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரம் செய்ய மீண்டும் வரமாட்டார்கள் என்று நினைத்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கடையை மூட பெருமளவில் திரள்வோம் என உறுதியாக கூறினர்.

shutdown-tasmac-anaivari

shutdown-tasmac-anaivari-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்

சென்னை மதுரவாயல்

shutdown-tasmac-maduravoyal-poster-2

shutdown-tasmac-maduravoyal-banner

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

சீர்காழி

shutdown-tasmac-sirkazhi-banner

தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி வட்டம்

தஞ்சை

shutdown-tasmac-thanjai-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
தஞ்சை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க