Tuesday, April 7, 2020
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு டாஸ்மாக்கை மூடு - தமிழகம் போர்க்களமானது - வீடியோ

டாஸ்மாக்கை மூடு – தமிழகம் போர்க்களமானது – வீடியோ

-

மதுரவாயல்

புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கை

மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது.

பெறுநர்: ஆசிரியர்/நிர்வாகி அவர்கள் பத்திரிக்கை/தொலைக்காட்சி

அன்புடையீர்,

வணக்கம். சென்னை மதுரவாயல் ரேசன் கடை அருகில், உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மதுரவாயல் நொளம்பூர் மாதாகோயில் நகர், ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு கடந்த 2-ம் தேதி மனு கொடுத்து எச்சரித்திருந்தனர். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மேற்படி பகுதிகளை சார்ந்த மக்களை அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்பு குழுவும், மக்கள் அதிகாரமும் ஒருங்கிணைத்து, இன்று காலை 11.30 மணி அளவில், ரேசன் கடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்காக சென்றனர். சுமார் 500 பெண்கள், 100 சிறுவர்கள் என 1000 பேர் திரண்டு முழக்கம் எழுப்பியதும் அவர்கள் மீது போலீசார் கொலை வெறி தாக்குதலை நடத்தினர். பெண்கள் என்றும் பாராமல், ஆண் போலீசார் அவர்களைக் கீழே தள்ளி வக்கிரமாக பூட்ஸ் காலால் மிதித்தனர். பெண்களின் ஆடையை கிழித்து வக்கிரமாக நடந்து கொண்டனர். சிறுவர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஆகாஷ் என்ற பள்ளி மாணவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யா என்ற 50 வயது பெண்மணியின் மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். அப்போராட்டதிற்கு ஆதரவாக சென்ற என் மீதும் (த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு) கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். பேசக் கூட அனுமதிக்காமல், சுமார் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்கினர். தலையிலும், முதுகிலும், முகத்திலும் என லத்தி கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் இடது கண் அருகே காயம் ஏற்பட்டுள்ளது. என்னைப் போல் சுமார் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் மருத்துவம் கூட பார்க்காமல், மதுரவாயல் பாக்கியலஷ்மி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு. டாஸ்மாக்கை மூடாமல் காவல் காக்கும் ஜெயா அரசின் போலீசு போராடிய மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதையும், மண்டபத்தில் அடைத்து வைத்து மருத்துவம் பார்க்காமல் சித்திரவதை செய்வதையும், பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஜனநாயக அமைப்புகளும் ஜெயாவின் பாசிச நடவடிக்கையை கண்டிக்க வேண்டுமென பு.மா.இ.மு கோருகிறது.

இவண்
த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை. 9445112675

கோவை

மீஞ்சூர்

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே! போராடிய தோழர்களுக்கும்,பொதுமக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

 2. போராட்டம் சரிதான்.. ஆனால் , இதில் குழந்தைகளையும், சிறுவர்களையும் பங்கெடுக்க செய்தது தவறு என்று தோன்றுகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுப்படுமாறு அவர்களை வற்புறுத்துவதோ, மூளை சலவை செய்வதோ மிகவும் தவறாகும்.

  • மேரியக்கா.. எனது பதில் இந்தப் போராட்டத்திற்கானது மட்டுமல்ல. எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளும் சிறுவர்கள் வெறும் மூளைச்சலவையால் நீடித்து களத்தில் அடிவாங்கிய பிறகும் நிற்பார்கள் என்பது சாத்தியமேயில்லை. வெளியில் டிவியும், விளம்பரங்களும், பழைய சமூகமும் அவர்களது மூளையில் நொடிக்கு நொடி இடைவிடாது ஏற்றி வைப்பதெல்லாம் தான் அறிவுக்கும், தர்க்கத்திற்கும் வாய்ப்பளிக்காத ஜனநாயக முறையற்ற மூளைச்சலவை. ஆனால் இதெல்லாம் தேவைப்படும் போராட்ட முறைக்கு தயார்படுத்துவதை மூளைச்சலவை என்கிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறது உங்களது தர்க்கம்

   • மணி, நான் சொல்ல வருவதை நீங்கள் சரியாக புரிந்துக் கொள்ளுவில்லை. முதலில், மக்கள் அதிகாரம் நடத்தும் இந்த போராட்டமே மிகவும் முரணாக இருக்கிறது. மதுவுக்கு எதிரான போராட்டம் தேவை தான், ஆனால், இப்பொழுது தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசால் மே 19 வரை எந்த விதமான புது அறிவிப்பையோ அல்லது கொள்கை முடிவையோ எடுக்க முடியாது என்கிற பொழுது எதற்க்காக இந்த போராட்டம். ஜெயலலிதாவே நினைத்தாலும் இந்த சமயத்தில் மதுவிலக்கை அறிவிக்க முடியாது. மீறி செய்தால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக நடந்துக்கொண்டதற்க்காக கடுமையான நடவடிக்கைகளை அவர் எதிர்க்கொள்ள நேரிடும். மக்கள் அதிகாரத்தை சேர்ந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் ஒன்றுமில்லை. தெரிந்தும் போராடுகிறார்கள் என்றால் இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்றுத் தான் என்ன தோன்றுகிறது. யாருடைய நலன்களுக்காக இந்த போராட்டம் நடக்கிறதோ என்பது அந்த கண்கண்ட சக்தியான சூரிய பகவானுக்கு தான் தெரியும். நிற்க ..

    சிறுவர்களை அழைத்து வந்தது தவறு தான், போராட்டத்தில் சிறுவர்களும் குழந்தைகளும் எதற்க்காக? பொது வெளியில் ஏதாவது பச்சாதாபத்தை உருவாக்குவதற்க்காவா? சிறுவர்களை போலீசார் தாக்கினார்களா என்று தெரியவில்லை. அதைப் போல் எந்த புகைப்படமும் வினவில் இல்லை. ஒருவேளை, ஏதவாது அசம்பாவிதம் நேர்ந்து அப்பாவி சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தாகி இருந்தால் என்னவாகும்? போராட்டக்காரர்களை அடிக்க ஓங்கும் லத்தி தெரியாமல் சிறுவர்கள் மீது பட்டிருந்தால் யார் பொறுப்பு. இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக சிந்தித்து பாருங்கள் நான் கூற வருவதன் உண்மை விளங்கும். மேலும், சிறு வயதில் போராட்டம், கலகம்,போலிசு, அடிதடி மற்றும் சிறுவர்களின் கண்முன்பே போலீசார் அவர்களின் பெற்றோர்களை கைது seidhu வேனில் ஏற்றி செல்வது போன்றவற்றை பார்ப்பதால் அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    • மதுவிலக்கு என்பது இப்போது ஜெயாவின் கையில் இல்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முழுமையாய் இல்லை என ஒத்துக்கொண்டால் என்னைப் போல திருடன் யாரும் இருக்க முடியாது. அதிகாரம் இப்போது இருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேர்தல் கமிசனரோ அல்லது உண்மையிலேயே அதிகாரம் இருக்கும் அரசுத் துறை செயலர்களோ இதில் முடிவெடுத்தால் அது தேர்தலுக்கு தொடர்பு இல்லாத ஒன்று. உதாரணமாக இப்போது விற்கும் டாஸ்மாக் கடையில் தேர்தல் காலத்தில் ஏதோ விச சாராயம் கலந்து வருகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வார்கள்.. இவர்கள் இருவரும் இப்போது மூடுவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானதா எனக் கூட அவர்களிடமே நீங்கள் ஆர்டிஐ போட்டு கேட்டுப் பாருங்கள்.. அப்போது நாம் பேசுவது அபத்தம் என்பது புரியும். சூரிய பகவான் விசயத்தில் என்னுடைய பார்வையை முன்வைக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பொதுவில் அடிப்பது அவதூறு தான்.
     குழந்தைகளை கற்பிதம் செய்யப்பட்ட புத்தராக வளர்க்க வேண்டும் என்கிறீர்கள். இதெல்லாம் விட அவர்கள் கெடுக்கும் கலாச்சர அம்சங்கள் நிறைந்த கார்ட்டூன் நெட்வொர்க் டிவிக்கள், விளம்பரங்கள், சினிமா பாடல்கள், ஊடக, இணைய அக்கப் போர்கள், ஃபோர்னோவே விளம்பரமாகி நிற்கும் குழந்தைகளின் விளம்பர காமிக்சுகள் இதிலெல்லாம் அந்த பிஞ்சு மனசு கெட்டுப் போனால் நிச்சயம் நமக்கு ஒரு சமூக விரோதி தான் கிடைப்பான். இதில் வேண்டுமானால் அவனது அச்சம் அல்லது அச்சமின்மை வேண்டுமானால் மாறுபடலாம் என்பது எனது கருத்து.
     லத்தி அடிபட்டால் என்று சொல்கிறீர்களே.. லத்தியால் அடிக்குமளவுக்கு சட்டப்படி நடக்க வேண்டும் என போலீசை விமரிசிக்க மனசு வரவில்லையா

     • மணி…..

      நீங்கள் பேசுவது தான் முரணாக இருக்கின்றது.. தேர்தல் கமிஷனரோ அல்லது அரசு துறை செயலரோ எப்படி பூரண மது விலக்கை நடை முறைப்படுத்த முடியும். இதை செய்ய வேண்டியது அதிகாரம் அந்த நாட்டின் முதல்வரின் கைகளில் தான் இருக்கிறது. மது விற்பனையை இன்னும் அதிகப் படுத்த வேண்டுமா அல்லது முழுமையாக தடை செய்ய வேண்டுமா என்பதனை அந்தந்த மாநில முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும். பீகாரில் செய்யவில்லையா அதே போன்று தான். பிகார் முதல்வர் தன்னுடைய மாநிலத்தில் பூரணமதுவிலக்கு திட்டத்தை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, தேர்தல் முடிந்த பிற்ப்பாடு தான் நடைமுறை படுத்தினார். ஏன் அவர் நினைத்திருந்தால் தேர்தல் நடக்கும் பொழுதே நடைமுறை படுத்தியிருக்க முடியாதா. நீங்கள் பேசுவது விநோதமாக இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் இது சாத்தியமா என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல்களை பெற்று அதன் நகலை வினவில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      //உதாரணமாக இப்போது விற்கும் டாஸ்மாக் கடையில் தேர்தல் காலத்தில் ஏதோ விச சாராயம் கலந்து வருகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வார்கள்.. //

      இது விதண்டா வாதம்… சாதரணமாக நாம் கூறும் மது விலக்கிற்கும், விஷம் கலந்து வருவதால் உடனே தடுத்து நிறுத்தி மக்களை காப்பதற்கும் நிறைய வேறுப்பாடு இருக்கிறது. மது விலக்கு என்பது மக்களுக்காக அரசு செயல் படுத்த வேண்டிய நல்ல திட்டம். பின்னது அவசர நிலை. வாக்குறுதிக்கும், அவசர கால நடவடிக்கைக்கும் வித்யாசம் உள்ளது. உதாரணதிற்கு, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் யாரவது விஷம் கலந்து விட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை போன்றது. மதுவிலக்கு சாத்தியமில்லாத இந்த தேர்தல் சமயத்தில் மக்கள் அதிகாரம் இந்த போராட்டத்தை நடத்துவதன் மர்மம் என்னவென்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.

      குழந்தைகளை அழைத்து வரவேண்டாம் என்று அவர்களின் உடல்,மன நல பாதுகாப்பிற்க்காக கூறினேன். அவ்வளவே.

    • என்ன சகோதரி இப்பிடி அதிமுக பிரச்சாரகர் பேசுற மாறியே பேசுறீங்க அம்மா உங்க கிட்ட எப்ப டாஸ்மாக்க எடுப்பென்னு சொல்லிச்சி போராட போன குழைந்தைகள் எல்லாம் டாஸ்மாக் மது பாண்த்தை குடித்து குடல் வெந்து செத்தவர்களின் வாரிசு பிள்ளைகளாக ஏன் நீங்க கருத கூடாது அவுக வேதனை அவுக்ளுக்கு இத மூளைச்சலைவை என்று சொல்லுவது அதிமுக அடிவருடிகள் செய்வது அதை நீங்களும் செய்கிறீர்கள் எனும்போது மிகவும் கேவலமாக இருக்கிறது அம்மா பணம் எவ்வளவு வந்துட்டு இத பரப்புறை செய்வதற்க்கு…

  • குழந்தைகளையும், சிறுவர்களையும் போராட கர்டுக்கொடுப்பதில் தவரு ஒன்ரும் இல்லையே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க