Monday, March 27, 2023
முகப்புகட்சிகள்பா.ஜ.கமோடியின் படிப்பு - என்ன ஒரு நடிப்பு !

மோடியின் படிப்பு – என்ன ஒரு நடிப்பு !

-

displayimage-(1)

ம்பலப்பட்டார் மோடி”என்று சொல்வதே தேய்வழக்காகி விட்டது. இந்தச் சுற்றில் மோடியின் போலி கல்விச் சான்றிதழ் ஊடகங்களில் படபடத்துக் கொண்டிருக்கிறது. மோடியின் கல்வித் தகுதியை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கிளறி விட்டவர் கேஜ்ரிவால். பிரதமர் அலுவலகமும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களும் மௌனம் சாதித்து வந்த நிலையில் மத்திய தகவல் ஆணையத்திற்கு கேஜ்ரிவால் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதன்பின் விவகாரம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளானது.

சொல்லிக் கொள்வதற்கு சாதனைகள் ஏதுமின்றி சொத்தையான பில்டப்புகளின் மூலமே வாழ்ந்து வரும் மோடிக்கு உடனடியாக சரிந்து போன பிம்பத்தை தூக்கி நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் எழுகிறது. அவர் படித்து பட்டம் பெற்றதாகச் சொல்லப்பட்ட தில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களும் விளக்கங்கள் தரமுடியாமல் மோடிக்குப் பக்கத்திலேயே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டன. இந்நிலையில் மோடியின் கல்விச்சான்றிதழ் என்பதாக போர்ஜரி செய்யப்பட்ட ஆவணத்தின் நகல் ஒன்று ஊடகங்களுக்கு ‘கசிய’ விடப்படுகின்றது. மேற்படி ஆவணம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டதல்ல என்பதை போட்டோஷாப் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் கண்டறிந்து அம்பலப்படுத்தினர்.

இதையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் அருண் ஜேட்லியும் அமித்ஷாவும் ஆளுக்கொரு கல்விச் சான்றிதழ் நகல்களை உயர்த்திக் காட்டி மோடியின் கல்வித் தகுதியை  ’நிரூபிக்க’ முயன்றனர். உலகிலேயே ஒரு பிரதமரின் கல்வித் தகுதியை நிரூபிக்க ஆளும்கட்சித் தலைவரும், நிதி அமைச்சரும் களத்தில் இறங்கி கம்பு சுற்றிய கேலிக்கூத்து கடந்த பத்தாம் தேதி அரங்கேறியது.

BA-degreeஅமித்ஷாவும் அருண்ஜேட்லியும் போராடிப் பிடித்த பிள்ளையாரும் குரங்கு தான் என்கின்றனர் சமூக வலைத்தள விமரிசகர்கள். சான்றிதழ் வழங்கப்பட்ட காலத்தில் புழக்கத்தில் இல்லாத எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருப்பது, நான்கு சான்றிதழ்களில் மோடியின் பெயர் நான்கு வெவ்வேறு விதங்களில் எழுதப்பட்டிருப்பது, மோடியின் தந்தை பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது, மோடியின் பெயரே தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது, மோடி படித்ததாக சொல்லப்படும் பாடங்களே குறிப்பிட்ட அந்தக் காலத்தில் இல்லாமல் இருந்தது, வருடங்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது என்று அடுக்கடுக்காக போர்ஜரி முன் வைக்கப்படுகின்றது.

மோடி படித்தவரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, அவர் படித்ததாக பொய்  சொல்லியிருக்கிறார் என்றும் பிரதமரே இப்படி ஒரு பொய்யராக இருப்பது சரியா என்றும் அதிர்ச்சி தெரிவிக்கிறார் கேஜ்ரிவால். தனது பிம்பம் சரிந்ததற்கு மோடி கவலைப்படும் அளவுக்கு மோடியின் எஜமானர்களான முதலாளிகளும் குருமார்களான காக்கி டவுசர்களும் கலைப்படுவார்களா என்பது சந்தேகம் தான்.

ஏனெனில், பிரதமர் உள்ளிட்ட ஆளும்வர்க்க கைக்கூலிகளுக்கு கல்வித் தகுதியை விட புரோக்கர் தகுதியே பிரதானமானது என்பதே இன்றைய தேர்தல் அரசியலின் விதி.

புரோக்கர் தகுதியைப் பொறுத்தவரை சமகாலத்தில் மோடியை விஞ்சியவர் எவருமிலர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. குஜராத்தில் முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் விலையில் ஒரு சதுர அடி நிலத்தை அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுத்ததாகட்டும், இல்லாத பெட்ரோலை துரப்பணம் செய்யும் உரிமத்தை குஜராத் மாநில பெட்ரோலிய துறையிடம் இருந்து தனக்கு படியளக்கும் முதலாளிகளுக்கு மாற்றி அதற்கு 20000 கோடி அளவுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து கொள்ளையடிக்க வகை செய்ததாகட்டும், பிரதமர் ஆன பின்பும் அதானி குழுமத்திற்கு சுரங்க உரிமை கோரி ஆஸ்திரேலியாவுக்கு காவடி தூக்கியதாகட்டும், மோடியின் ஒவ்வொரு செயல்பாடும் அவரது தகுதியை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

பொதுச் சொத்தை தனியார் ஏகபோக முதலாளிகள் சூறையாடத் திறந்து விடும் தகுதியும் அந்தக் கொள்ளையை வளர்ச்சி என்று நம்ப வைக்கும் திறமையும் தான் பிரதமருக்கு அவசியம் என்று முதலாளிய அறிஞர்கள் தீர்ப்பளித்தபின் மோடி பத்தாம் வகுப்பில் ‘கோட்’அடித்தவராய் இருந்தால் என்ன டாக்டர் பட்டம் பெற ‘பிட்’அடித்தவராய் இருந்தால் தான் என்ன?

 

————————————————————————————-

டபுள் ஸ்ரீ ரவிசங்கர் – டபுள் நோபல் ரவிசங்கர்

o-SRI-SRI-RAVI-SHANKAR-facebook-(1)

டபுள் ஸ்ரீ ரவிசங்கர் நோபல் பரிசை மறுத்துள்ளார். முன்பொரு முறை தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நோபல் கமிட்டி முன்வந்ததாகவும், அரசியல் ரீதியில் வழங்கப்படுகின்றது என்பதாலேயே தான் அப்பரிசை மறுத்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு பரிசுகளின் மேல் நாட்டமில்லை என்றும், சேவை புரிவதையே முக்கியமானதாக கருதுவதாகவும் தெரிவித்த டபுள் ஸ்ரீ, பாகிஸ்தனைச் சேர்ந்த யுசூப் மலாலா நோபல் பரிசுக்குத் தகுதியானவர் அல்லவென்றும், அவர் குறிப்பிடத் தக்க சேவை ஏதும் ஆற்றவில்லை என்றும் பொங்கியிருக்கிறார்.

பரிசுகளைக் கண்டு மயங்காமல் மீமாம்ஸம் போதிக்கும் கர்ம யோக பாதையில் செயல்களின் பலன்களை ஈச்வரார்ப்பணம் செய்து நிஷ்காம்ய கர்மியாக வாழும் டபுள் ஸ்ரீயை ஒரு முறையாவது பாராட்டி விடலாம் என்று பார்த்தால் அவர் வகை தொகையின்றி வாங்கிக் குவித்துள்ள விருதுகளும், பரிசுகளும் குறுக்கே நிற்கின்றன. பத்மவிபூஷனில் இருந்து ஏதோவொரு உப்புமா கம்பெனி வழங்கிய பாரத் சிரோமணி விருதைக் கூட வாங்கி அடுக்கியிருக்கும் ரவிசங்கர்
பற்றின்மை குறித்து பீற்றிக் கொள்வதைப் பார்த்து அ.தி.மு.கவினரே கொதிக்கிறார்கள்.

அம்மாவின் தவவாழ்வு சாதாரணமானதா என்ன? பதினாறு ஏசி மிஷின்களும் பிரச்சார மேடைக்கு மேல் கட்டிய உப்பரிகையுமாக தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்ந்து வருகிறார் அம்மா. நியாயமாகப் பார்த்தால் ஐந்தாண்டுகளாக தமிழ் ஊடகங்களில் அமைதியை நிலைநாட்டிய அம்மாவுக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும். பெருந்தன்மையோடு பாரத் ரத்னா போதும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஆயிரம் கோடிக்கு பீனிக்ஸ் மால் திரையரங்கை பட்டா போட்ட அம்மாவின் தவவாழ்வின் முன் 900 கோடி யோகா கம்பெனிக்கு சொந்தக்காரரான டபுள் ஸ்ரீயின் தவவாழ்வு கொஞ்சம் அற்பமானது தான்.  என்றாலும் இந்தச் சின்னஞ்சிறிய தவவாழ்வை வைத்துக் கொண்டு உலக அமைதிக்காகவும் இந்திய அமைதிக்காகவும் அவர் ஆற்றி வரும் சேவைகள் அளப்பரியவை.

srisri-malala1992ல் சிறைக்கைதிகளை சீர்திருத்தும் வித்தியாசமான யோக அணுகுமுறையின் மூலம் ஊடக வெளிச்சத்தில் அடிபடத் துவங்கிய டபுள் ஸ்ரீ, அரசியல் ரீதியில் அமைதியின்மை தலையெடுக்கும் போதெல்லாம் அவதாரமெடுத்து அமைதியை நிலைநாட்ட சேவையாற்றியுள்ளார். ஜன் லோக்பால் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிரான வீக் எண்ட் போராட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற தருணாங்களில் எப்போதெல்லாம் அரசியல் நிகழ்வுகள் பாரதிய ஜனதா எதிர்பார்த்த திசையில் நகரவில்லையோ அப்போதெல்லாம் அங்கே எழுந்தருளி ’அமைதியை’ நிலைநாட்டியிருக்கிறார்.

உச்சகட்டமாக, சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு தான் பேச்சுவார்த்தை நடத்த முனைந்ததாகவும், பதிலுக்கு தலையில்லாத முண்டத்தின் புகைப்படத்தை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ரசியாவும் தலையால் தண்ணீர் குடித்து வரும் விவகாரத்தில் டபுள் ஸ்ரீயை ’அமைதி’புரோக்கர் பணிக்கு அமர்த்தியவர்கள் யார், அவரால் எப்படி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு பேச்சு நடத்த முடிந்தது, அவ்வமைப்பிலிருந்து யாரெல்லாம் யார் மூலமாகவெல்லாம் டபுள் ஸ்ரீயைத் தொடர்பு கொண்டனர், புரோக்கர் வேலைக்கு கமிசன் எவ்வளவு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு பேச அதிகாரம் வழங்கியது யார், என்னவிதமான
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன – என்பன போன்ற கேள்விகளுக்கு என்றென்றைக்கும் பதில் வரப்போவதில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் கும்பலிடம் அமைதி யாவாரம் போணியாகவில்லை என்றாலும் கூட அவர்
இரட்டை நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் தான். கம்யூனிசத்திற்கு எதிரான இலக்கிய கூலிப்படை அடியாட்களுக்கும், அமெரிக்க ஐந்தாம்படைகளுக்கும் வழங்கப்பட்ட வரலாறு நோபலுக்கு உண்டு. அந்த வகையில் யமுனை நதியை உலக கலாச்சார நிகழ்ச்சி நடத்தி சீரழித்த பின் பசுமைத் தீர்ப்பாயம் விதித்த நட்ட ஈட்டுக்கும், சம்மன்களுக்கும் அசராமல் அமைதியாக
இருப்பதற்கு ஒன்றும் இன்ன பிற புரோக்கர் வேலைகளுக்கு மற்றொன்றுமாக இரண்டு நோபல் பரிசுகளுக்கு டபுள் ஸ்ரீ தகுதியுடைவராகிறார்.

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்

இணையுங்கள்:

 1. டிகிரி வாங்குனது பீலா !
  டீக்கடை மேட்டர் பீலா !!
  RSS அலுவகத்தை பெருக்குவது போல் காட்டியது போட்டோ ஷாப் பீலா !!!
  இந்தியர்கள் அனைவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடும் மேட்டர் உலக பீலா !!!!
  PM னா PRIME MINISTER ரெண்டு வருஷம் முன்னால.
  PM னா பீலா மாஸ்டர்னு ஆக்கிட்டாரு மோடிஜி.
  வாய் சவடால் பேசுற எவன் வேணும்னாலும் பிரதமர் ஆகலாம் போல.
  கருமம்.

 2. இப்ப ரொம்ப முக்கியம் இது. அவர் மனைவி, அவர் உடை, அவருடைய வெளிநாட்டு பயணம்,இப்ப அவருடைய படிப்பு. த்தூ.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க