Sunday, April 2, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமதுரவாயல் - மீஞ்சூர் டாஸ்மாக் முற்றுகை - வீடியோ

மதுரவாயல் – மீஞ்சூர் டாஸ்மாக் முற்றுகை – வீடியோ

-

 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் முற்றுகை – போலிஸ் தாக்குதல் வீடியோ:

சென்னை மதுரவாயில் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தில் போலிசின் தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே எட்டு தோழர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள். இந்த வீடியோவில் அந்தப் போராட்டத்தின் முழுமையான காட்சிகள் இடம்பெறுகின்றது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் நடந்த இந்த போராட்டத்தை இவ்வளவு பெரிய தாக்குதலுடன் ஒடுக்கிய போலிசின் நோக்கத்திலிருந்து பாசிச ஜெயா அரசின் டாஸ்மாக் வெறியைப் புரிந்து கொள்ளலாம்.

———————————————————————-

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் – நாப்பாளையம் டாஸ்மாக் முற்றுகை போராட்டம்!

சென்னை மதுரவாயிலைப் போலவே மீஞ்சூரில் நடந்த போராட்டத்தையும் போலிசு கொடூரமாக தாக்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அனைத்து குடும்பங்களும் டாஸ்மாக்கிற்கு ஆண்களை பலி கொடுத்திருக்கின்றன. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குறிப்பாக பெண்கள் தமது அனுபவங்களை யதார்த்தமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களை கலைத்து விட்டு அச்சுறுத்தும் பணியினை உள்ளூர் அ.தி.மு.கவினர் செய்கின்றனர். அப்படி ஒரு அ.தி.மு.க பிரமுகரின் நேர்காணலும் வீடியோவில் உள்ளது. இந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்யச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்களை தடுக்கும் போலிசின் காட்சிகளும் உள்ளன. முக்கியமாக டாஸ்மாக் மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களை போலிசு மிரட்டுகிறது.

  1. டாஸ்மாக் முடுவதை அரசாங்கம் செய்யும் , எதிர்கட்சி தி மு க போராட்டம் நடத்தும் . மற்ற போராட்டம் எழுதவும்.

  2. சாதி வெறியர் ராமதாஸ் கீழ்கண்டவாறு சொல்லியிருக்கிறார் நீங்க செய்யும் தியாகத்தில் ஒரு பொருக்கி அரசியல் ஆதாயம் தேடும் இவரை என்ன செய்வது

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து 26 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மதுவிலக்கை வலியுறுத்துவதே பாவச்செயல் என்று பேசப்பட்ட நிலையிலிருந்து, தமிழகத்தை மது வெள்ளம் பாயும் மாநிலமாக மாற்றிய அதிமுகவும், திமுகவும் மதுவிலக்கு குறித்து தேர்தல் வாக்குறுதி அளிக்குமளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு முழு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் தமிழகத்தில் மது விற்பனை நேரமும், மதுக்கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.

    http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=166300

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க