privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கBreaking News: அதிகாலை டாஸ்மாக் விற்பனை – படங்கள்

Breaking News: அதிகாலை டாஸ்மாக் விற்பனை – படங்கள்

-

தவியேற்ற முதல் நாளிலேயே டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்து மதியம் 12 மணிக்குத்தான் விற்பனை ஆரம்பம் என்று ஜெயா அறிவித்தார். மொத்த கடைகளில் 500 கடைகளை குறைத்தும் அவர் உத்தரவிட்டதை ஊடகங்கள் மாபெரும் சாதனையாக வெளியிட்டிருந்தன.

மீனை வெறுப்பதாக பூனை என்னதான் சீனைப் போட்டாலும் கவிச்சியின்றி அம்மா கட்சியினர் வாழ முடியுமா என்ன? ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் உரிய நேரத்தை தாண்டியும், முன்னரும், விடுமுறைகளின் போதும் திருட்டுத்தனமாக அதாவது பார்களில் பகிரங்கமாக சரக்கு விற்பது வாடிக்கையான ஒன்று.

இன்று 24.05.2015 காலை சென்னையில் நடைப் பயிற்சிக்கு போன தோழர் ஒருவர், நகரின் மையப்பகுதி ஒன்றில் டாஸ்மாக் கடையருகே உள்ள பெட்டிக்கடையில் இன்று முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருப்பதால் விற்பனை குறையுமா?” என்று விசாரித்திருக்கிறார். கடைக்காரரோ சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அவரது கடை அருகே உள்ள தேநீர்க்கடையைத் தாண்டி காலியாக நிற்கும் கையேந்தி பவன் வண்டி அருகே சரக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார். அருகே சென்று பார்த்தால் பார் ஆசாமி கை நிறைய காந்தி நோட்டுக்களுடன் நின்று கொண்டிருக்க கீழே தண்ணீர் பாக்கெட் மூட்டை போல இருந்த வெள்ளை பிளாஸ்டிக் சாக்கில் பாட்டில்கள் இருந்தன. இந்த விற்பனை நேரம் காலை 7.00 மணி.

பிறகு விசாரித்தால் தமிழகம் முழுவதும் இன்று முழுவீச்சோடு டாஸ்மாக் விற்பனை அதிகாலையிலிருந்தே அமோகமாக நடைபெறுகிறது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள இரு கடைகளில் ம.க.இ.க தோழர்கள் காலையில் சென்று விசாரித்த போது சரக்கு விற்பனை கன ஜோராக நடைபெறுவதை நேரில் கண்டார்கள். அதன் புகைப்படங்களை இங்கே தந்திருக்கிறோம். இவை எடுக்கப்பட்ட நேரம் காலை 9.30 மணி. உறையூர் பகுதியில் இருக்கும் இரு கடைகளிலும் டாஸ்மாக் விற்பனை சூடு பிடித்துக் கொண்டிருந்தது. ரெகுலர் கடையில் இருக்கும் கூட்டத்திற்கு இணையாக பாரில் நடக்கும் திருட்டு விற்பனையும் இருந்தது.

பொதுவில் காலையில் குடிப்பவர்கள் குடிக்கு அடிமையாக இ ருப்பவர்களும், காலையிலேயே வேலைக்கு குடித்து விட்டு செல்பவர்களும் என்று இரு வகையினர் இருக்கிறார்கள். போதை மீட்பு மையத்தில் இருக்க வேண்டிய இந்த பரிதாபத்திற்குரிய மக்களை இன்று பாசிச ஜெயா அரசு கொல்வதின் சாட்சிதான் இந்த பிளாக் விற்பனை.

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள  டாஸ்மாக் கடை
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பூட்டப்பட்டிருக்கிறது – சும்மா ஒரு எஃபெக்ட்டுக்கு!
WhatsApp-Image-20160524(12)
காலை 9.30க்கு குடிமகன்கள் சரக்கு வாங்க நுழைகிறார்கள்!
WhatsApp-Image-20160524(4)
விற்பனை இரகசியமாக அல்ல, பகிரங்கமாக நடைபெறுகிறது. குடிமகன்கள் பலரும் நம்மை அழைத்து விதவிதமாக போட்டோ எடுக்கச் சொன்னார்கள்.
WhatsApp-Image-20160524(2)
ஆதாரம் வேண்டுமா? பாட்டிலுடன் ஒருவர்!
WhatsApp-Image-20160524(10)
முதல் நாளில் காலையிலேயே சரக்கு கிடைக்கும் என்பதற்கு இது போதுமா இன்னும் வேண்டுமா?

புரட்சித் தலைவியின் அதிரடி அறிவிப்பின் முதல் நாளிலேயே இக்கடை அதிகாலை 7.00 மணிக்கே திறக்கப்பட்டுள்ளது. மெயின் கடை பூட்டப்பட்டிருந்தாலும், பார் மட்டும் திறக்கப்பட்டு கடை விற்பனையை கவனித்துள்ளது. குடிமகன்கள் வழக்கம் போல வந்து குடித்து விட்டுப் போகிறார்கள். கடையில் சுமார் 90 அல்லது 100 ரூபாயிக்கு விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில் இங்கே சுமார் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அம்மா தடை செய்த நேரத்தில் சரக்கு கிடைக்கிறது என்பதால் குடிமகன்களும் இந்த விலை உயர்வை சட்டை செய்வதில்லை.

இதன்படி பார்த்தால் இனி தமிழகமெங்கும் காலை விற்பனை என்பது இப்படித்தான் நடக்கும். பார்களை நடத்தும் அ.தி.மு.க ரௌடிகள் கடை வருமானத்திற்கு நிகரான வருமானத்தை இங்கு பெறுவது உறுதி. இப்படி கட்சிக்காரர்கள் எனும் குண்டர் படை பொறுக்கித் தின்பதற்கே பாசிச ஜெயா இப்படி கடை நேரத்தை குறைப்பதாக நாடகமாடி வருகிறார். இந்த அதிகாலை விற்பனைக்கு ஆதரவு தரும் பொருட்டு போலீசின் மாமூலும் கூட்டி கொடுக்கப்படுமென்று தெரிகிறது.  மதுவிலக்கை முழுமையாக கொண்டு வராத எந்த நாடகமும் இப்படித்தான் கொள்ளையை கூட்டும் என்பதும், ஆண்கள் சாவதையும், பெண்கள் சித்ரவதையில் வாழ்வதையும் இந்த நாடகம் அதிகப்படுத்தும் என்பதும் உறுதி.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போமென்னு ஜெயா அறிவித்த உடனே அவரது ஊடக அடிமைகள் துள்ளிக் குதித்தார்கள். அவர் ஆட்சி அமைத்த பிறகு இவர்கள் செய்திகளால் கட்அவுட் நட்டார்கள்.

அம்மாவின் போங்காட்டம் ஆரம்பித்து விட்டது. அதை முறியடிக்கும்  மக்கள் அதிகாரம் போராட்டமும் ஓயாது!

பின் குறிப்பு: வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவரும் தங்களது ஊரில் நடக்கும் அதிகாலை டாஸ்மாக் விற்பனை குறித்த புகைப்படங்கள், செய்திகளை அனுப்பித் தருமாறு கோருகிறோம்.

திருச்சி உறையூர் பகுதியிலே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடை
திருச்சி உறையூர் பகுதியிலே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடை – அனைவரும் வருக! எந்நேரமும் சரக்கு கிடைக்கும்!

WhatsApp-Image-20160524(15)

WhatsApp-Image-20160524(16)
புரட்சித் தலைவியின் போங்காட்டத்தை காறித்துப்புகிறது இன்று காலையில் வாங்கிய ஒரு பாட்டில்!

WhatsApp-Image-20160524(19)

WhatsApp-Image-20160524(18)

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பு விற்பனை
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பு விற்பனை! மஞ்சள் தொப்பி போட்டவர் வாங்குகிறார். நடுவில் இருப்பவர் பைக்கில் வைத்து சரக்கை ஓட்டுகிறார்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகேயும், சித்ர குப்தன் கோவில் அருகேயும் உள்ள கடையில் இன்று காலை முதல் பாட்டில் விற்பனை ஜரூராக நடக்கிறது.

– செய்தி, படங்கள்: வினவு செய்தியாளர்கள்

  1. why are you blaming the government for the workers mistake? the government is not telling them to sell illegally… that’s what the government employees do just like taking bribe… instead of blaming the employees you are taking the opportunity to blame the governemnt… if the government sack the employees for doing this illegal business then also you will blame the government for sacking poor employees!!!

    • Is that true ? How about their internal revenue targets ? Have that been re-aligned with these reduced hours in consideration ? If not, govt is inducing this albeit not directly

  2. பூரண மது விலக்கு
    படிப்படியான மது விலக்கு
    கள்ளு கடை
    என்னும் மூன்று வழி முறைகளை ஜனநாயகம் மக்கள் மன்றத்தில் வைத்தது .

    மக்கள் படிப்படியான மதுவிலக்கு என்பதை ஏற்று கொண்ட பிறகு அரசாங்கத்தை குறை கூற வேண்டிய அவசியம் இல்லை .

  3. அம்மா தடைவிதித்த பிறகும் விற்கப்படுவதால் 100ரூபாய் சரக்கு 130 ரூபாய் …. ஆஹா … அம்மா எதச் செஞ்சாலும் அதுல ஒரு அர்த்த மிருக்கும்.

    இனிமே டாஸ்மார்க் ஆண்டு வருமானம் 30% அதிகரிக்கும்ன்னு சொல்லுங்க.

    இதுல பலபேர் தாலிய அறுத்துத்தான 8 கிராம் கொடுக்கப்போறதா அறிவிப்பு வந்திருக்கு.

    இந்த அவலத்த ஏன்னு கேக்க துப்புல்ல. வெக்க மில்லாம இந்த பார்த்த சாரதிகள் கமாண்ட் போடுறானுங்க பாரு…

    • Eureka
      As Raman mentioned she put this step by step prohibition forward and people elected her.
      As much as we don’t like this and agree that this is right you can’t blame her for the employees selling it illegally in a corner, at least if that happened in the shop you can blame the government. But this act of the employees is for pure greed and without blaming them you can’t blame Jaya for it.

    • “வெக்க மில்லாம இந்த பார்த்த சாரதிகள் கமாண்ட் போடுறானுங்க பாரு…”
      Excellant

  4. நண்பா … லாட்டரிசீட்டால அரசாங்கத்துக்கு பெரிய லாபமில்லன்ன ஒடனே ஒட்டு மொத்தமா ஒழிச்சுக்கட்டின ஆற்றல்மிக்க வீராங்கனை, இந்த விசயத்துல படிப் படியான்னு பல்ட்டியடிக்கிறப்பவே இவங்க யோக்கியதைய புரிஞ்சுக்கணும்.

    இது எல்லாம் தேர்தல் கண்துடைப்பு வேலை. அதிலும் இந்தமுறை பெற்ற வெற்றிங்கிறது. போனமுறை மாதிரி அவ்வளவு எளிதானதில்ல, போனமுறையைவிட அதிகமான போலிவாக்குறுதிகள், இலவச லஞ்சங்கள், இது எல்லாத்துக்கும் மேல கண்டைனர் கண்டைனரா பணத்த கொட்டி வாங்கின வெற்றி இது.

    அதுமட்டுமில்லாம டாஸ்மார்க் அடைப்புங்கிறது அவங்களோட வருமானத்தின் ஊற்றுக்கண்ணையே அடைப்பதற்கான வாக்குக்குறுதி. அதையும் வேற வழிஇல்லாம கொட்துதுத்தான் இந்த வெற்றிய பெறமுடிஞ்சிருக்கு.

    அதனால வாக்குறுதியையும் நிறைவேற்றணும் வருமானமும் குறையக்கூடது.

    நீங்க ஜெயலலிதா நிலமையில இருந்து யோசிச்சுப்பாருங்க ….

    ஆமா … இனிம டாஸ்மார்க்குகள் எண்ணிக்கை குறைக்கப்படும் ஆனால் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதனால நீங்க சொன்னமாதிரி 5000, 10000த்துக்கு சம்ப்பளம் வாங்கிறவன கொறசொல்ல்லாம், கோடி கோடியா கொள்ளையடிக்கிற அரசையோ … அத நடத்துற ஜெயாவையோ பழிசுமத்த முடியாது பாருங்க.

  5. அக்ரகாரத்து மாமி ” தீர்த்தம்” விக்கிறா….
    அதை வாங்கி சாபிடுவியா? அதை விட்டுட்டு சரக்கு அது இதுண்ணு புலம்பல்…
    இது வேணும்னுதான் மாமிக்கு நெறைய பேர் ஓட்டு போட்டான் தெரியுமோ நோக்கு?
    துணி கட்டாதவா ஊர்ல துணி கட்னவன் பைதியக்காரனோல்யோ

    • சங்கம் உஷாராதாம்லே இருக்கு

      கருணானிதிய ஜாதிபேர் சொல்லாது
      ஆனா

      ஜெ வ சொல்லும்

      ஜாதி வெறி கூடாது சங்கம்

  6. தேர்தல் பாதை திருடர் பாதை என்று முழக்கமிடும் தோழர்கள் இந்தத் தேர்தலில் தமிழகத்து மக்களுக்கு அதிமுகவுக்கு மாற்றாக வழங்கப்பட்டிருந்த வாய்ப்புகளை கூர்ந்து நோக்க வேண்டுகிறேன்.

    ஆளாளுக்கு அதிமுகவுக்கு மாற்று நான்தான் என்று கூவிக்கொண்டிருந்தார்கள்.

    திமுகவா, மக்கள் நலக்கூட்டணி -தேதிமுக -தமாக அணியா,பாமகவா, பிஜேபியா,நாம் தமிழர் கட்சியா என்று மக்களுக்கு ஐந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

    தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்ட புரட்சிபாடல்கள் போன்ற பல்வேறு நகர்வுகள் மூலம் குடிமக்களை விழிப்புணர்ச்சிக்கு ஆயத்தம் செய்த இயக்கங்கள் கொணர்ந்த அழுத்தங்கள் காரணமாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு மிகமுக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளப்பட்டு மேலே குறிப்பிட்ட அனைத்து அணிகளும் தங்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டால் மிகமுக்கிய கொள்கையாக பூரணமது விலக்கை அமுல்படுத்த உறுதிமொழி அளித்திருந்தன.

    கட்டக் கடைசியாக வேறு வழியே இல்லாமல் அதிமுகவும் இதே வழிக்கு வந்தது. அதிலும் கூட படிப்படியாக செய்கிறேன் என்றுதான் ஜெயலலிதா .அறிவித்தார்.

    பெரும்பாலும் அவரது தேர்தல் நேர அறிவிப்புகள், உத்திரவாதங்களை நீர்மேல் எழுதிய எழுத்தாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு அவரின் மேலிருந்த இமேஜ் – கடந்தகால நடத்தை அடிப்படையிலான செயல்பாடுகள் கட்டியம் கூறியிருந்த நிலையில் ‘போங்கு’ பாடல் மூலம்
    ‘நாங்களே பூட்டிக்கிறோம் கொடநாடு போங்க’ என்று தேர்தல் அரசியலைப் புறந்தள்ளும் இயக்கத்தின் பதில் தெளிவாகவே சொல்லப்பட்டிருந்தது.

    பிரகாஷ் சவடேகர் பேசியது வெறும் சவடாலாகிப் போனது.
    முரட்டு பலம் முரட்டு பணத்திடம் மண்டியிட்டுக் காணாமல் தோற்றோடியது.
    முதலமைச்சர் வேட்பாளர்கள் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு சின்னத்தைக் காணோம் கட்சி அங்கீகாரத்தைக் காணோம் என்று பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
    பிந்தைய நிலையைக் கணக்கிட்டால் முன்னதாக முந்தியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் விதத்தில் ‘நமக்குநாமே’ என்று எதிர்க் கட்சி அந்தஸ்தை தட்டிப் பிடித்ததையே பெருமைப்பட்டுக்கொள்ளும் விதத்தில் வீழ்ந்துகிடக்கும் நிலையில் முதுபெரும் அரசியல் கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

    அடிமைகள் என்று அனைவரும் எத்தனை முறை ஓலமிட்டாலும் நாங்கள் அம்மா காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தே தீருவோம் என்று அனைவரும் அம்மா காலில் விழுந்து வணங்கி இந்த வெற்றியின் மிதப்பை ஜெயலலிதாவுக்கும் அவரது அனைத்து எதிரிகளுக்கும் நெற்றியடியாய் சொல்லியிருக்கும் தேர்தல் முடிவு இது.

    இந்த முடிவின் அடிப்படையில் முற்றுமுதலாய் இருப்பது வாக்களித்த மக்கள்.

    அந்த அடிப்படையில் ஒரு சோற்றுப் பதமாக அரசியலில் தமிழருவி மணியன் மிகச் சிறிய பங்களிப்பு தந்திருந்தாலும் (இப்படியொரு இயக்கம் தேர்தலில் நின்றது என்ற விஷயம் கூட இன்றுதான் எனக்குத் தெரியும்)
    ‘பொது வாழ்வை விட்டுப் போகிறேன்’ என்ற முடிவு தமிழகத்து மூத்த அரசியல் தலைவர்கள் அனைவரும் எடுக்கவேண்டிய பெருத்தமான முடிவாகவே எனக்குப்படுகிறது.

    இந்த நிலைக்குக் காரணம் மக்கள் என்ற நிலையில் மக்கள் அதிகாரம் எப்படிச் சாத்தியமாகும்?

    ஜெயலலிதா ஒரு பேச்சுக்காக படிப்படியான மதுவிலக்கு என்று சொல்லியிருந்தாலும் அதனை செய்யத்தான் வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை. கேட்பாரில்லை. அந்த நிலைதான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழக தலையெழுத்து. வேறு ஒருவரும் ஒரு பூச்சாண்டியும் காட்டமுடியாது. எந்த எம்எல்ஏவையும் எங்கும் இழுத்து ஆட்சிமாற்றம் ஏற்படுத்தும் கதைக்கெல்லாம் இடம் என்பது இம்மியளவும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் அல்லவா திருந்தவேண்டும்’ என்ற மூத்த அரசியல் தலைவரின் விரக்தியான வரிகள் வெளிப் படுத்தியிருக்கின்றன.

    எனவே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று அதிமுகவினர் இடும் கோஷம் போல இன்றும் முதல்வராயிருக்கிற அவராகவே பார்த்து இப்படி ஏதாவது மதுவிலக்கை அமுல்படுத்தினாலொழிய வேறு வழியே இல்லை.

    அதனால் அவர் இட்டிருக்கும் அரசாணைக்கு தலைவணங்கி மகிழ்வதைத் தவிர சராசரிப் பொதுமக்களுக்கு வேறு வழியில்லை.

  7. என்ன ஓய் சங்கத்ல கொற கண்டீர்!
    கட்டுமரம் வகைக்கு ஒன்னா ஏகப்பட்ட வப்பாட்டி வச்சிருக்கான்..
    அவனை நான் எந்த ஜாதியில சேக்குறது?
    கொஞ்சம் வெயிட் பண்ணும் ஓய்..எப்பாவாவது பீச்சில 45 நிமிசம்..16 செகண்ட்
    உண்ணாவிரதம் இருப்பான்..கேட்டு சொல்றேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க