மத்திய மாநில பா.ஜ.க அரசுகள் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களை காவிமயமாக்கிவருவது நமக்கு தெரிந்த ஒன்று தான் என்றாலும் இது இந்தியாவோடு முடிந்து விடவில்லை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பள்ளி பாடத்திட்டங்களை மாற்றுவது வழக்கம். மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் பொதுவில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டு மாறுதலுக்கு உட்படுத்தப்படும்.
அதன்படி இவ்வாண்டு வெளியிடப்பட்ட உத்தேச பாடத்திட்டத்தின் வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களில் இந்தியாவின் சாதி அமைப்பு குறித்தும், தலித்துகள் மீதான ஒடுக்குமுறை குறித்தும் சில குறிப்புகள் உலக நாகரிகங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. சிந்து சமவெளி நாகரீகம் போன்ற இந்திய பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு பொதுவான விசயங்களை தெற்காசிய கலாச்சாரம் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய அமெரிக்க இந்துத்துவ அமைப்புகளான இந்து அமெரிக்க பவுன்டேசன், தர்ம நாகரிகம் உள்ளிட்ட வானரங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து அதை மாற்ற போராடி வந்தன.

சாதிய வர்ணாசிரம தத்துவத்தை இப்பாடதிட்டம் தவறாக சித்தரிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே டெக்சாஸ் மாகாணத்தில் பாடதிட்டத்தில் சாதி அமைப்பு குறித்து எதிர்மறையாக இருந்த கருத்துகளை திருத்தி சாதி அமைப்பு சிறப்பான ஒன்று என்பதாக சேர்த்துள்ளனர். இது குறித்து அவர்களின் இணைய தளம் தங்களின் வெற்றியாக பின்வரும் திருத்தத்தை கூறுகிறது.
அரசின் பாடத்திட்டத்தில் “வர்ண அமைப்பில் சிறு குழு அனைத்து அதிகாரங்களையும், செல்வங்களையும் கொண்டு பெரும்பான்மையினரை ஒடுக்கியது” என்று இருந்ததை மாற்றி “வர்ண அமைப்பு ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாத்திரம் வழங்கி சமூகம் சுமூகமாக இயங்க வழிசெய்தது” என்று திருத்தியிருக்கிறோம் என்று வெற்றி செய்தியாக பகிர்ந்திருக்கிறார்கள்.

இதே போன்று கலிபோர்னியாவிலும் பாடதிட்டத்தை தங்களுக்கு ஏற்றபடி மாற்ற அவர்கள் செய்த முயற்சி தற்போது பகுதியளவு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கோரிய சாதி குறித்த மாற்றங்கள் நிறைவேறவில்லை. மற்றபடி தெற்காசிய என்ற வார்த்தைக்கு பதிலாக இந்தியா என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி இனி சிந்து சமவெளிநாகரிகம் இந்திய நாகரிகம் என்று அழைக்கப்படும்.
தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்ற இந்துத்துவ அமைப்புகளின் திருத்தமும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவ்விசயத்தில் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக போராடிவரும் கலிபோர்னியா அம்பேத்கர் பேரவையைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தர்ராஜன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “ இந்த போராட்டம் கலிபோர்னிய பாடதிட்டத்தை குறித்தகாக இருந்தாலும்கூட இது உண்மையில் சித்தாந்தத்திற்கு இடையிலான போராட்டம். இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையை மறைக்க இந்துத்துவவாதிகள் முயல்கிறார்கள். ஆனால் நீங்கள் உண்மையை மாற்றமுடியாது. சாதிய கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட பல கோடி மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வரலாற்றிலிருந்து மறைக்க அனுமதிக்க முடியாது” என்கிறார்.
இந்துத்துவ அமைப்புகளோ இது போன்ற பாடத்திட்டங்களால் தங்கள் குழந்தைகள் பள்ளியில் கேலிக்கு உள்ளாக்கபடுவார்கள் என்று ஒடுக்குமுறையையே கேலி எனும் சென்டிமெண்டாக முன்வைக்கிறது. சாதிய அமைப்பின் பலனை அனுபவித்து அதன் நீட்சியாக சென்னை, டெல்லி என அதிகார மையங்களுக்கு மாறி தற்போது அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று வசிக்கும் வர்க்கத்திற்கு ஒடுக்கப்படும் மக்களின் துன்பத்தைவிட தாங்கள் கேலிக்கு உள்ளாவோமோ என்பது பிரச்சனையாக தெரிகிறது. பல தலைமுறைகளாக இழைக்கப்பட்ட சாதி கொடுங்கோன்மையையும், பார்ப்பனர்களை தயிர் சாதம் என்று கிண்டல் செய்வதையும் ஒன்றென சமப்படுத்தி பேசும் ஜெயமோகனின் வாதம் இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்துத்துவ அமைப்புகள் அமெரிக்காவிலும் அமைப்பு ரீதியில் எவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்பதையும் இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. சாதி குறித்த திருத்தங்கள் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தாலும் அவர்கள் இதோடு விடபோவதில்லை. டெக்சாஸ் மாகாணத்தில் பெற்ற வெற்றியை கலிபோர்னியாவிலும் பெறவே அவர்கள் முயற்சிப்பார்கள்.
இந்தியாவில் எரிகிற இந்துத்துவ கொள்ளியை அணைத்தால் மட்டுமே மற்ற இடங்களிலும் வெற்றி சாத்தியம்.
தொடர்புடைய பதிவுகள்
Caste Won’t Be Erased from California Textbooks, Says Committee
California community debates ‘saffronising’ textbooks, Dalits, rewriting of South Asian history
Hindutva Efforts to Rewrite History in California Schools Fail
HAF Applauds Textbook Publishers for Transformational Changes in Depiction of Hinduism in Texas
இந்திய மக்கள் தொகையில் மிகச்சிறிய எண்ணிக்கையில் இருக்கும் பிராமணர்கள் உலக அளவில் பிரபலமாக ஆனதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் தாங்கள் நினைப்பதை அமெரிக்காவிலும் ஐநா சபையிலும் கூட சாதிப்பதற்கும் காரணம், அடி முதல் முடி வரை உள்ள, அனைத்து அதிகார மட்டங்களிலும் இவர்கள் நீக்கமற நிறைந்து இருப்பது தான். அமெரிக்காவாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் அங்கிருக்கும் அதிகார மட்டங்களில் அதிகாரிகளாகவும் துறைசார் நிபுணர்களாகவும் வணிகர்களாகவும் இருக்கும் இவர்கள் நினைத்தபடி காரியம் சாதிக்கிறார்கள். இவர்கள் அதிகார மட்டங்களில் இல்லாத இடங்களிலும் அமைப்புக்களிலும் வெளியே இருந்து அழுத்தம் கொடுக்கும் குழுக்களாக செயல்பட்டு காரியம் சாதிக்கிறார்கள். திராவிட இயக்கமானது, தமிழகத்தில் அரசியல் உள்ளிட்ட பொதுத்தளங்களில் இருந்தும் அதிகாரத்தில் இருந்தும் பிராமணர்களை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் இப்படி வெளியேற்றப்பட்ட பிராமணர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் சர்வ வல்லமை கொண்ட மத்திய அரசின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கண்ணிகளில், அதிகாரத்தில், ஜம் என்று அமர்ந்து உள்ளார்கள். இந்த கண்ணிகளில் இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராகவும் உலக தமிழர்களின் நலனுக்கு எதிராகவும் நேரடியாகவும் திரைமறைவிலும் செயல்பட்டு வருகிறார்கள்.இப்போது அவர்கள் அமெரிக்காவுக்கும் ஐநா சபைக்கும் கூட பரவி விட்டார்கள்.
பிராமணர்கள் எப்போதும், எப்படி சுற்றி வளைத்தாலும், அதிகாரத்தை மட்டுமே குறி வைத்து செயல்படக்கூடியவர்கள். இதற்கு ஏற்றாற் போல் தாங்கள் பெறக்கூடிய கல்வியையும் வடிவமைத்துக்கொள்கிறார்கள். அதனால் தான் சமஸ்கிருத வெறியும் இந்து சனாதன வெறியும் கொண்ட இவர்கள் ஆங்கில மீடியத்தில் எல்லா பாடங்களையும் படிக்க விரும்புகிறார்கள். அமெரிக்கா போன்ற முன்னேறிய கிறுத்துவ மெஜாரிட்டி நாடுகளுக்கு குடிபெயரவும் முயற்சிக்கிறார்கள். ஐஐடி போன்ற அக்கிரகார பண்ணைகள் இந்தியாவின் தேவைக்கேற்ற பாடத்திட்டத்தை கொண்டிருக்காமல் அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளின் தேவைக்கேற்ற பாடத்திட்டத்தை கொண்டிருப்பதற்கு இது தான் காரணம். இந்த விடயத்தை யோசிக்கும் போது நம் தமிழகத்தின் சமச்சீர் கல்வி என்னும் தண்டம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. தமிழகத்தில் பிராமணர்களை வெளியேற்றிய திராவிட இயக்கம் அவர்களுக்கு இணையான ஒரு அறிவுஜீவி புலத்தை உருவாக்குவதற்கு தவறிவிட்டது. இன்றைக்கு திராவிட இயக்கம் சீரழிந்து கிடப்பதற்கும் தமிழகம் பின் தங்கி வருவதற்கும் உலக அளவில் தமிழர்கள் கேட்பார் இல்லாமல் அடி வாங்கி சாவதற்கும் இது தான் காரணம்.
ஐயா பெரியசாமி இந்த தகவலை அப்படியெ தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சா பிற்காலத்துல மக்கள் எல்லாரும் பார்த்துப் படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க
அதற்கும் திராவிட இயக்கத்தால் பலனடைந்த அறிவு ஜீவிகள் , பார்ப்பனரை பணிந்து பதவி பெறவே ஆர்வம் காட்டுவதுதான் காரணம்! அய்ந்தாயிரம் ஆண்டுகளாக ஆண்டைகளுக்கு பணிந்து போய் தன்மானம் இழந்துவிட்ட சமூகம், பெரியார்-அம்பேத்கரை கூட புரிந்து கொள்ளவில்லையே! பார்பன விபச்சார ஊடகங்களுக்கும் , டாச்மாக் சரக்கிற்கும் தானே அடிமையாகி அழிகிறார்கள்!
\\பார்ப்பனரை பணிந்து பதவி பெறவே ஆர்வம் காட்டுவதுதான் காரணம்!//இது தான் பெரியாரின் மண். \\அய்ந்தாயிரம் ஆண்டுகளாக ஆண்டைகளுக்கு பணிந்து போய் தன்மானம் இழந்துவிட்ட சமூகம்//இவர்கள தான் சுயமரியாதை சுடர்கள்.
கபட வேட தாரிகளின் மோக வலையிலும், மோச வலையிலும் விழுந்து சுய மரியாதையை இழந்த சுடர்கள் என்பதே பொருத்தம் அய்யா!
வினவு என்ன ஆயிற்று உணக்கு?
ஜெயா அரசாட்சியை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிறுக்கின்றார்கள்.
உங்களிடம் இருந்து எந்தொரு சத்தத்தையும் கானவில்லை.
“அம்மாவும் அம்மா பரிவாரங்களும் ஏதாவது செய்துவிட்டார்களா உங்களை!”
சுய பரிசோதனை செய்து கொண்டிருக்கலாம்! சிலர் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டும்ருக்கலாம்!