Sunday, April 2, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்

ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்

-

களச்செய்தி 1

ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்

டலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பெரியவடவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ராம நாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரி 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது, அதைச் சுற்றியுள்ள விஜயமாநகரம், பெரியவடவாடி இன்னும் பல குக்கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயன்படுகிறது.

lake-encroachment-stopped-2இந்த ஏரியில் கடந்த 3-ஆண்டுகளாக பல்வேறு ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் பார்த்தனர்.

இதற்கிடையில் விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, அவர் மகன் ஆகியோர் ஏரிநீர்வழி புறம் போக்கை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வருகின்றனர். இதுவரை இவர்கள் 5-ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து பயிரிட்டு வருகின்றனர்.

இதை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் சிறப்புப் பிரிவு என பல அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் புகார் மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒருமுறை மட்டும் ஆக்கிரமிப்பாளரையும், புகார் செய்தவர்களையும் அழைத்து வட்டாட்சியரின் தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆக்கிரமிப்பாளர், “இந்தக் கூட்டத்தில் எனக்கு விருப்பமில்லை. உங்களால் முடிந்ததை செய்” என்று சவால் விட்டு வெளியே சென்றார்.

இப்படி கேவலப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்காமல் வாங்கிய காசுக்கு விசுவாசமாக அதிகாரிகள் நடந்து கொண்டனர்.

lake-encroachment-stopped-1இந்நிலையில் புதிதாக மேலும் 2-ஏக்கர் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்பட்ட போது மக்கள் அதிகார உறுப்பினர் தனசேகரன், “ஏரிக்கு நீர் செல்லும் வழியையும், மக்கள் நடந்து செல்லும் பாதையையும் ஆக்கிரமிப்பதை நிறுத்திக்கொள்” என்றார். இருந்தும் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்பை தொடர்ந்து கருவேல மரக்கட்டைகளை பிடுங்கி நிரவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஜே.சி.பி இயந்திரத்தையும் சிறைபிடித்தனர்.

ஆத்திரமடைந்த ராஜசேகர் தடுத்த விவசாயிகளையும், ஊர் பொதுமக்களையும் ஆபாசமாக திட்டியது மட்டுமல்லாமல் ஜே.சி.பி.யை ஏற்றி கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். ஆனால் இவர்களுடைய மிரட்டலுக்கு அஞ்சாமல் எதிர்கொண்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்தது மட்டுமல்லாமல் சமரசமற்று சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை வீரியத்துடன் தொடர்ந்தனர்.

இதைக் கேள்விப்பட்ட கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போராட்ட இடத்திற்கு வந்தனர். மக்களை ஆபாசமாக திட்டிய ராஜசேகர் வருவாய் ஆய்வாளரையும் மரியாதை தரக்குறைவாக பேசினார். பின்னர் மங்கலம்பேட்டை காவல்நிலையம் எஸ்.பி சி.ஐ.டி ரமேஷ்பாபு (ரகசியம்) ஆய்வாளர் தமிழ்மாறன் தலைமையில் 10-க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஆக்கிரமிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். காவல்துறை அதிகாரிகள் ஜே.சி.பி-யை விடுவிக்குமாறு தோழர்களிடம் கேட்டனர்.  ஆய்வாளர் ஜே.சி.பி-யை விடுவிக்க முயற்சித்தபோது அதை புரிந்து கொண்ட தோழர்கள், “நாங்கள் இயந்திரத்தை சிறை பிடித்துள்ளோம். ஆக்கிரமிப்புக்கு உரிய நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காதவரை நாங்கள் விடுவிக்கமாட்டோம்” என்று கூறிய பிறகு காவல்துறையினர், “நடவடிக்கை அதிகாரிகள் வந்து எடுக்கட்டும் அதுவரை ஜே.சி.பி-யை உங்கள் தோழர்களின் கண்காணிப்போடு காவல்துறை கொண்டு செல்கிறோம்” என்றார். பின்னர் தோழர்களின் கண்காணிப்பில் காவல்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

lake-encroachment-stopped-3பிறகு வந்த தாசில்தாரிடம், “ஆக்கிரமிப்பை தற்பொழுது நிறுத்திவிட்டோம். முன்பு நடந்த ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்ற போகிறீர்கள்” என்று தோழர்கள் கேட்டதற்கு, “வரும் ஜுன் 3-ந் தேதி அமைதி கூட்டத்தில் அதை பற்றி பேசிகொள்ளலாம்” என்றும் “இங்கு இதற்குமேல் ஆக்கிரமிப்பு நடக்காது” என்றும் கூறி சென்றார்.

இது சிறிய வெற்றியானாலும் அந்தப் பகுதி மக்களிடையே போராடினால் வெற்றி பெறலாம் என்ற நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை அருகில் இருந்து பார்த்த முதியவர், “நாங்கள் இவ்வளவு காலம் அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அப்போது அதிகாரிகள் எங்களை கேவலமாக பேசினர், நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக் கழித்தனர். குறிப்பாக மங்கலம்பேட்டை காவல்துறை ஆய்வாளர் மோசமாக நடந்து கொள்வார். இன்று உறுதியான போராட்டத்தை பார்த்த பின்பு போராடியவர்களிடம் பவ்வியமாக நடந்து கொண்டார் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்” என  கேட்டார்.

தகவல்

மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்

களச்செய்தி 2

தலித் மக்கள் மீது போலீசு கும்பல் கொலைவெறி தாக்குதல்

virudhai-police-atrocity-poster

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க