Tuesday, June 18, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு - வாருங்கள் !

விருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – வாருங்கள் !

-

நம் பிள்ளைகளுக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?

ன்பார்ந்த பெற்றோர்களே! வணக்கம்!

education-conference-notice-2பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளில் தாய்மொழியில், பொதுப்பள்ளிகள் மூலமாக அரசுதான் முற்றிலும் இலவசமாக கல்வி வழங்குகிறது. அருகமைப் பள்ளி முறை – அதாவது நம்ம ஊர் ரேசன் கடை போன்று அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அருகிலுள்ள பள்ளிகளில் கல்வி கற்கும், அருகமைப் பள்ளி முறைதான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

அனைவருக்கும் ஒரே சீரான, தரமான கல்வி முறைதான் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல், தனி மனித ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடிப்படையானது. அதை அரசுதான் இலாப நோக்கமின்றி அனைவருக்கும் வழங்க முடியும். இந்தியாவில் பார்ப்பனிய சாதிக் கொடுமையுடன், வர்க்கப் பாகுபாடுகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் பணத்திற்கு தகுந்த பள்ளிக்கூடம் என்பது, மேலும் இத்தகைய பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யும். பணம் சம்பாதிக்க மட்டும் படிப்பு என்ற கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழிப்பது, பாம்பைப் பார்த்தவுடன் அடிக்கும் முடிவுக்கு ஒப்பானது. ஆனால், அதை பெற்றோர்கள் வரவேற்பது என்ற நிலை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

தனியார் பள்ளி தரமானதா?

education-conference-notice-3தனியார் பள்ளியில் படித்தால், தன் பிள்ளை ஆங்கிலம் பேசுவான், அறிவு வளரும், டாக்டர், எஞ்சினியர் ஆவான், நம்மைப் போல் கஷ்டப்பட மாட்டான், அதிகம் பணம் சம்பாதிப்பான் என்ற மூட நம்பிக்கையில், அவரவர் வசதிக்கேற்றாற்போல தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி விட்டில் பூச்சியாய் ஓடுகிறார்கள். பட்டம் பெற்ற லட்சக் கணக்கான இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்ற கிடைத்த சம்பளத்திற்கு உரிமைகளற்ற கூலிகளாய் பணிபுரியும் அவலத்தை அவர்கள் பார்ப்பதில்லை.

தனியார் பள்ளி தாளாளர்களுக்கு ஒழுக்கம், நேர்மை எதுவும் கிடையாது. கட்டணக் கொள்ளை அடிப்பது, பணம் கட்டாத மாணவர்களை துன்புறுத்துவது, பெற்றோர்களை அவமானப்படுத்துவது, 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலும் படிக்கச் சொல்வது என்று மாணவர்களின் படிக்கும் முறை, பாயாசத்தின் சுவை அறியாத கரண்டி போல மாணவர்களிடம் பதிய வைக்கப்படுகிறது.

கருப்புப் பணமாக கல்விக் கட்டணம், வினாத்தாள் முன்கூட்டியே சொல்வது, காப்பி அடிக்க அனுமதிப்பது, தேர்வு கண்காணிப்பாளரை பிக்ஸ் பண்ணுவது என அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவது தவறில்லை; அதுதான் திறமை என்று மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய தவறான சிந்தனைகளை பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அதற்கு உடன்படுகிறார்கள்.

தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக, குறைந்த சம்பளத்திற்கு ஓய்வு இன்றி வேலை வாங்குவது, அவர்களை செங்கல் சூளைக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் போல் மாணவர்களைப் பிடித்து வரச் சொல்லுவது, தவறினால் பணி நீக்கம் செய்வது. இத்தகைய முறைகேடுகள் பற்றி தெரிந்த பெற்றோர் காரியவாதமாக தனியார் பள்ளி பற்றி பேச மறுக்கிறார்கள். ஆசிரியர் இல்லை, சொல்லிக் கொடுப்பதில்லை என அரசுப் பள்ளிகளின் தரம் பற்றி மிகையாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அரசுப் பள்ளியே நமது பள்ளி!

education-conference-notice-4புத்தகம், நோட்டு, சீருடை, செருப்பு, மதிய உணவு, சைக்கிள் என மாணவர்களுக்கு வழங்கி – கற்றல், கற்பித்தலை அறிவியல்பூர்வமான சேவையாக செயல்படுத்தும் அரசுப் பள்ளிகளோடு அனைத்திலும் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒருநாளும் ஒப்பிட முடியாது. அரசுப் பள்ளி மாணவன், வீட்டு வேலை முதல் விவசாய வேலை வரை செய்து, வறுமையில் டியூசன் படிக்காத சூழலில்தான், அரசுப் பள்ளி மாணவர்கள் 80 சதவீத தேர்ச்சி, 495 மதிப்பெண் என பெறுகிறார்கள்.

இன்றைக்கு உயர்பதவிகளில் இருப்பவர்கள், மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பெரும்பான்மையானவர்கள், அரசுப் பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள்தான். அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களும் சரியாகச் சொல்லி கொடுப்பதில்லை என்ற குறைகள் பெற்றோர்கள் கண்காணித்துப் போராடினால் சரிசெய்ய முடியும்.

அரசின் தனியார்மய கொள்கையால் கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், விவசாயம் என்ற அடிப்படை வாழ்வுரிமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவு மக்களும் போராடுகிறார்கள். பொறுப்பான முறையில் தீர்வு காண வேண்டிய அரசோ, போராடுபவர்கள் மீது தடியடி, பொய் வழக்கு, சிறை, சித்ரவதை என அடக்குமுறை செய்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணை நிற்கிறது.

education-conference-notice-5

மக்கள் நல அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகார வர்க்கத்தினர் மற்றும் நீதித்துறையினர் என அனைத்தும் மக்களின் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணுவதில்லை. அவர்கள் வகுத்த விதிமுறைகள், சட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை அவர்களே கடைப்பிடிக்க முடியாமல் மீறுகிறார்கள். மக்கள் நலன்களுக்குஎ திராகச் செயல்படுகிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த சுதந்திரப்போராட்டம்போல், மக்களுக்கான கொள்கையை அமல்படுத்தும் அரசை புதிதாக உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

உயிராதாரமான குடிநீர் இன்று வாட்டர் பாட்டில் என்ற மாறி நிற்கும் பயங்கரம். அதே போல் தனியார் பள்ளிகளை தரம் என ஆதரிப்பது எதிர்காலத் தலைமுறையையே பாதிக்கும்.

அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை இலவசமாக வழங்கும் அரசுப் பள்ளியை ஆதரித்து அதனை மேம்படுத்த பெற்றோர்கள் போராட வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கா நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?

அரசுப் பள்ளியே நமது பள்ளி!
கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல!!
கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்!

mini-marathon-in-support-of-govt-school

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 2016

மினி மாரத்தான்
ஜூன் 19, காலை 6 மணி
சித்தூர் புறவழிச்சாலை

பேரணி, மாநாடு, தப்பாட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி

ஜூன் 25, சனி மாலை 5 மணி
வானொலித் திடல், விருத்தாசலம்

பேரணி துவங்குமிடம்:
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி,
விருத்தாசலம்
மாலை 4 மணி

தலைமை
திரு வை.வெங்கடேசன், மாவட்டத் தலைவர், மா.க.உ.பெ. சங்கம், விருத்தாசலம்

வரவேற்புரை
திரு வா.அன்பழகன், பத்திரப் பதிவுத்துறை (ஓய்வு), துணைத்தலைவர், , மா.க.உ.ப.ச, விருத்தாசலம்

துவக்க உரை:
பாரதி தம்பி, பத்திரிகையாளர் (கற்க கசடற நூலாசிரியர்), ஆனந்த விகடன், சென்னை

சிறப்புரை
மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வித் தரத்தின் அடையாளம் அல்ல

பேராசிரியர் ந.சி சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு), கந்தசாமி கண்டர் கல்லூரி, நாமக்கல்
புலவர் சிவராம சேது, தலைமை ஆசிரியர் (ஓய்வு), அ.ஆ.மே.நி.பள்ளி, விருத்தாசலம்
மாணவர் மாரிமுத்து, பு.மா.இ.மு, டாஸ்மாக் எதிர்ப்புப் போராளி, சென்னை

கல்வி நிதியை களவாடும் நகராட்சிகள்
டாக்டர் மு. வள்ளுவன், மு.நகர் மன்றத் தலைவர், விருத்தாசலம்
வழக்கறிஞர் ர.புஷ்பதேவன், மா.செ, ம.உ.பா.மையம், விருத்தாசலம்
திரு ச.செந்தாமரைக்கந்தன், செயலாளர், மா.க.உ.பெ.சங்கம், விருத்தாசலம்

சமூக ஏற்றத் தாழ்வுகளை, சாதி வேறுபாடுகளை அகற்றும் அரசுப் பள்ளிகளில் அனைவரையும் சேர்ப்போம்!

பேராசிரியர் திருமதி சாந்தி, சென்னை
தோழர் த. கணேசன், மாநில அமைப்பாளர், பு.மா.இ.மு, சென்னை
திரு கோ.பாக்கியராஜ், தலைமை ஆசிரியர், இலங்கியனூர், மா.தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கம்.

நிறைவுரை
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

வாழ்த்துரை
திருமதி மங்கையர்க்கரசி, மா.க.உ.பெ.சங்கம், விருத்தாசலம்
வழக்கறிஞர் ச.செந்தில்குமார், மா.தலைவர், ம.உ.பா.மை, கடலூர்
வழக்கறிஞர் சி.செந்தில், மா.து செயலாளர், ம.உ.பா.மை, சிதம்பரம்
திரு. ஆ. செல்வம், மா.து. தலைவர், ம.உ.பா.மை, விருத்தாசலம்.
திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), சேத்தியாதோப்பு.
தோழர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், விருத்தாசலம்
தோழர் கதிர், செயலர், பு.மா.இ.மு, விருத்தாசலம்
திரு சிறுத்தொண்ட நாயனார், தலைமை ஆசிரியர், தே.பவழங்குடி
திரு த. கலையரசன், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம்
தோழர் எம். முஜிபூர் ரஹ்மான், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம்
திரு டி. ரவிச்சந்திரன், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம்

நன்றியுரை
க.செல்வகுமார், செ.கு.உ., ம.உ.பா.மையம், விருத்தாசலம்

கல்வி உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். நிதிச்சுமை எங்களை பெருமளவில் அழுத்துகிறது.

நிதி தாருங்கள்! மாநாட்டுக்கு வாருங்கள், நன்றி!

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
9345067646
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம் 93600 61121

  1. மிகவும் சிற்ப்பானநிகழ்வு. அரசு செய்ய வேண்டிய கடமையை மக்களும் இயக்கங்களும் செய்வது மெச்சதகுந்தது. வாழ்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க