Tuesday, May 30, 2023
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஐ.டி யூனியன் : பு.ஜ.தொ.மு.விற்கு தோள் கொடுங்கள் !

ஐ.டி யூனியன் : பு.ஜ.தொ.மு.விற்கு தோள் கொடுங்கள் !

-

ன்பார்ந்த வினவு வாசகர்களுக்கு வணக்கம்.

நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐ.டி ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடி வருகிறோம்.

Tamil-IT-Posterசமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் ஒற்றுமைக்காகவும், பணிப் பாதுகாப்பிற்காகவும், தமது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளவும் தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். NASSCOM எனும் சங்கம் வைத்திருக்கும் ஐ.டி. முதலாளிகள், ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாதென நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டிக் கொண்டிருந்தனர். நடப்பில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை இம்மியளவும் மதிக்காமல், எட்டுமணி நேர வேலை என்பதை மறுதலித்தும், நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து தூக்கி எறிந்தும் ஐ.டி. ஊழியர்களை துயரத்தில் தள்ளினர்.

உச்சகட்டமாக, 2014 இறுதியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தி விட TCS முடிவு செய்தது. அநீதியான அந்த முடிவை எதிர்த்து சென்னை OMR-ல் பு.ஜ.தொ.மு தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக, ஐ.டி. ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை, ஜனவரி 10, 2015 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடங்கியது.

அதே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரி பு.ஜ.தொ.மு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விசயத்தில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தது. நீதி மன்றமும் ஏன் என்று கேட்கவில்லை. அரசிடமிருந்து பதில் பெற பு.ஜ.தொ.மு அனைத்து வழிகளிலும் முயற்சித்து வந்தது. இப்படியே ஓராண்டு ஓடிப்போனது. அதன் பிறகும் தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே தமிழக அரசின் இந்த கள்ள மவுனத்தை கலைக்க 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.

இந்நிலையில்தான், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சற்று முன்பாக, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு (மே 30 அன்று) பு.ஜ.தொ.மு-வுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது முடிவை அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி,

 • அனைத்து தொழிலாளர் சட்டங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து I.T. மற்றும் I.T.E.S. நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
 • ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது.
 • ஐ.டி ஊழியர்களுக்கு பணியிடத்தில் தமக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் தொழிற்தகராறு சட்டம் 1947-ன் கீழ் தீர்த்துக்கொள்ளலாம்.
 • வேலை நீக்கம் செய்யப்பட்டாலோ, ஆட்குறைப்பு செய்தாலோ தொழிலாளர் ஆணையர் முன் வழக்கு எழுப்பி போராடலாம்.

இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை தமிழக அரசு தானாக முன்வந்து செய்யவில்லை. நீதிமன்றத்திலும், தெருக்களிலும், ஐ.டி ஊழியர்கள் மத்தியிலும், நிர்வாக வழிகளிலும் விடாப்பிடியான முயற்சிகள், போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலமாக இந்த உத்தரவை அரசின் வாயிலிருந்து வரவழைத்திருக்கிறோம். அதையும் வெளிப்படையாக அறிவிக்காமல் தனிப்பட்ட கடிதத்தின் மூலம் எங்களுக்கு தெரிவித்திருக்கிறது, தமிழக அரசு. எனவே அடுத்ததாக இம்முடிவை வெளிப்படையான அரசாணையாக வெளியிட வேண்டும் என்று போராடவிருக்கிறோம்.

ஐ.டி துறையிலும் நாட்டின் சட்டங்கள் செல்லுபடியாகும் என்ற இந்த அறிவிப்பு வெளியானதும் ‘சட்டத்தின் ஆட்சியை தூக்கிப் பிடிப்பதாக’ சொல்லிக் கொள்ளும் முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ‘இனிமேல் ஐ.டி துறையும் உருப்படாமல் போய்விடும்’ என்று ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டன.

ஐ.டி முதலாளிகள் சங்கம் வைத்திருப்பதெல்லாம் அவர்களுக்கு பிரச்சினை அல்ல. ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்றதும் அனைத்துமே நாசமாகிவிடும் என்று ஊளையிடுகிறார்கள். சங்கம் என்றதுமே இவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்?

30 லட்சத்துக்கும் அதிகமான ஐ.டி ஊழியர்களின் கடும் உழைப்பால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் ஐ.டி நிறுவனங்கள், தமது லாப வீதத்தை உயர்த்திக் காட்டவும், பங்குச் சந்தையில் பங்கு மதிப்பை ஊதிப் பெருக்கவும், அதன் மூலம் முதலாளிகளும், உயர் மேலாளர்களும் கொள்ளை பணம் குவிக்கவும் செலவுக் குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களை கசக்கிப் பிழிகிறார்கள், அவர்களது வாழ்க்கையை வைத்து சூதாடுகிறார்கள்.

ஐ.டி ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொண்டால் என்ன ஆகும்?

 • அப்ரைசல் என்கிற பெயரில் ஐ.டி ஊழியர்கள் பிரித்து ஆளப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.
 • ஐ.டி ஊழியர்களை நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து தூக்கி எறிய முடியாது. விருப்பம் போல் ஆட்குறைப்பு செய்ய முடியாது. TCS 25,000 பேரை கேட்பாரின்றி வேலை நீக்கம் செய்ததைப் போல நடந்து கொள்ள முடியாது. ஊழியர்களின் எதிர்கால பணிவாழ்வை காட்டி மிரட்ட முடியாது.
 • எட்டு மணி நேரத்திற்கு மேல் வரம்பின்றி வேலை வாங்க முடியாது.

ஐ.டி துறையில் யூனியன் என்பது சாத்தியமற்ற கனவு என்று பலர் எண்ணிக்கொண்டிருந்த போது பு.ஜ.தொ.மு அதை சாதித்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் ஐ.டி தொழிற்சங்கம் நிறுவப்பட்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விசயம். தமிழகத்தில் ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கத்தை ஆழமாகவும் உறுதியாகவும் நிறுவுவதன் மூலம் ஐ.டி முதலாளிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அகில இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டுவதை சாதிக்கலாம்.

tamil-IT-Noticeஇப்போது பெற்றிருக்கும் வெற்றி ஒரு சிறிய வெற்றிதான். இந்த வெற்றியை ஒழித்துக்கட்ட ஐ.டி முதலாளிகள் நிச்சயமாக முயற்சிப்பார்கள். எனவே, இனிமேல்தான் ஐ.டி ஊழியர்கள் இன்னும் கடினமான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை எதிர்த்து நாஸ்காம் நீதிமன்றத்திற்கு சென்றால் அதை எதிர்த்தும் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நடத்துவதன் மூலம் தான் சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஐ.டி துறையில் ஆட்குறைப்புக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என்று செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் கணிசமான தொகை செலவாகியிருக்கிறது. குறிப்பாக, ஐ.டி துறையில் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்ற இந்த உத்தரவைப் பெற மட்டுமே ரூ 20,000-க்கு மேல் செலவாகியிருக்கிறது. ஒரு சில ஆதரவாளர்களின் நன்கொடை மற்றும் தற்காலிக கடன் மூலம் இந்தச் செலவுகளை சரிக்கட்டி வந்திருக்கிறோம். ஐ.டி ஊழியர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராடுவதற்கு மேலும் பொருளுதவி தேவைப்படும்.

எனவே, ஐ.டி ஊழியர்களும், பிற வினவு வாசகர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவை வலுப்படுத்தவும், போராட்டங்கள், பிரச்சாரங்களை இன்னும் வீச்சாக எடுத்துச் செல்லவும் உங்களால் இயன்ற நிதியை தாருங்கள். கீழ் உள்ள வங்கிக் கணக்கில் நிதியை செலுத்துங்கள், அல்லது எங்களை தொடர்பு கொண்டு நேரில் நிதி தாருங்கள்.

வங்கிக் கணக்கு விபரங்கள்

S KARPAGA VINAYAGAM
Indian Overseas Bank,
R.K. Salai Branch,
Chennai-4
Account Number: 029101000035047
Account Type: Savings
IFSC code: IOBA0000291

ஐ.டி.துறையில் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும் உடனடியாக சங்கத்தில் இணையுங்கள். உங்கள் நண்பர்களையும் இணையச்சொல்லுங்கள். நமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இனி சங்கம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சங்கத்தில் இணைவதற்கு எமது தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளுங்கள்.

English-IT-Notice
Union in IT Sector! Hurdles Overcome!
Put an End to Injustice and Exploitation!!

Dear Friends,

We belong to New Democratic Labour Front (NDLF) – I.T Employees Wing. We have been working to unionize IT employees for the past one and half years.

English-IT-PosterFrom daily wage earners to corporates in IT sector, every section of society have union of their own to safeguard their interests. While lobbying with government and propagating their views in society using their association NASCOM, the IT companies place direct and indirect hurdles for IT employees to form a Trade Union. In the absence of an Union they are able to deny the employees all legal rights such as regular working hours, protection from sudden and arbitrary dismissal etc.

To cap them all, in December 2014 TCS decided to lay off 25,000 senior employees at one go. Against this unjust and unfair move, workers belonging to NDLF launched a struggle in Chennai OMR. On January 10, 2015 NDLF formed the first labour union in India for IT employees.

In the same month, we filed a Public Interest Litigation in Chennai High Court to confirm that Industrial Disputes Act 1947 is applicable to IT companies. The court passed an order asking Tamil Nadu government to spell out its policy decision immediately. However, the government delayed its decision for 15 months, and sent a reply to our petition on May 30, 2016.

According to the government’s stand

 1. IT company employees are free to form trade union.
 2. All the labour welfare legislations are applicable to all the IT and ITES companies. No IT industry has been exempted from the provisions of the Industrial Disputes Act 1947.
 3. IT employees can redress their grievances through evoking the provisions of Industrial Disputes Act 1947.

As a result of our efforts, Tamil Nadu government has legally confirmed our right to form union. This is only the beginning, to complete this victory we should organize ourselves as a Trade Union and realize our demands.

What are the benefits of forming an Union?

 1. Put an end to the ever present, ever terrifying oppressions like Pink Slip, Forced Resignation and sudden Termination
 2. Put an end to the unjust, unfair and unscientific appraisal system.
 3. Ensure job security and promotion as a right.
 4. Realize democratic demands like 8 hours work day
 5. Abolish gender discrimination in work place, compensation levels and promotion. Win legally provided facilities like children’s Creche, maternity leave etc.

All these can be carried out only by a Labour Union registered under Indian Trade Union Act 1926. At present, NDLF – I.T Employees Wing is the only Trade Union of IT employees registered under this act

To win our rights Join the Union Now.
Give a missed call to 9003198576

#ITLabourUnion

New Democratic Labour Front – IT Employees Wing
combatlayoff@gmail.com
www.vinavu.com
fb:\\NDLFITEmployeesWing

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு.
தொடர்புக்கு 90031 98576.
மின்னஞ்சல் combatlayoff@gmail.com
FB : NDLFITEmployeesWing

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க