privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயஸ்ரீ பாலியல் வன்முறை - தொடரும் துயரம் !

ஜெயஸ்ரீ பாலியல் வன்முறை – தொடரும் துயரம் !

-

10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ பாலியல் வன்முறை சம்பவத்தில் அ.தி.மு.க ரவுடிகளுக்கு துணை போகும் போலிசு – அதிகார வர்க்கம்

தொடரும் துயரம்

டந்த மே மாதம் 5-ம் தேதி வாக்கில் கடலூர் மாவட்டம் தையல்குணாம்பட்டினம் கிராமத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ அ.தி.மு.க குண்டர்களால் பாலியல் சித்தரவதை செய்யப்பட்டதையும் இது தொடர்பாக வழக்கு தொடுத்த காரணத்திற்காக அச்சிறுமியின் வீட்டை கொளுத்தி தீக்கிரையாக்கியதையும் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். வினவில் வெளியான இந்தச் செய்தியை பல வாசகர்களும் பேஸ்புக், வாட்சப் வாயிலாக பரப்புரை செய்திருந்தனர்.

அதேவேளையில் இன்னொரு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டபோதும், வீடு எரிக்கப்பட்ட போதும், உள்ளூர் ஊடகங்கள் அனைவருக்கும் தகவல்கள் சொன்னோம். குறிப்பாக புதிய தலைமுறை, சன் டிவி, மெகா டிவி, பாலிமர் டிவி மற்றும் தினத்தந்தி, தினகரன், தமிழ், இந்து உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் சொன்னோம். ஒவ்வொருவருக்கும் 4 முறைக்கு மேல் போன் செய்தோம், ஒருவரும் வரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னபதில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகியது. “பாலியல் பலாத்காரமே நடக்கலியாமே. போலிசு முதல் தகவல் அறிக்கையும் இல்லையே, இதை எப்படி செய்தியாக போட முடியும்? வீடு எரிக்கப்பட்டது தொடர்பான செய்தி எல்லாம் ஒரு செய்தியா எங்க நிறுவனத்துல ஏத்துக்க மாட்டாங்க” என்றனர்.

பின் நடந்த சம்பவத்தை விளக்கினோம். இதைக்கேட்ட நிருபர்கள் “கண்டிப்பாக வருகிறோம்” என்று சொல்லி விட்டு ஒருவர் கூடவரவில்லை.

அ.தி.மு.க மந்திரி சம்பத்தின் விழாவிற்கும், ஆட்சியர் சுரேஷ்குமாரின் அரசு விழாவிற்கும் சென்று செய்தி கவர் வாங்கும் இந்த ஊடகக் கயவர்களுக்கு தெரியுமா ஏழைகளின் வேதனை? கையில் கேமராவையும், சிந்தனையில் பிழைப்புவாதப் பொறுக்கித் தனத்தையும் ஆயுதமாக வைத்துள்ள இவர்களின் யோக்கியதையை புரிந்து கொண்ட மக்கள் அதிகாரம் சிறுமி மீதான கொடுமையை இவ்வட்டாரம் எங்கும் சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தியது. 3-ம்தேதி நள்ளிரவு குறிஞ்சிபாடியில் சுவரொட்டி ஒட்டிய இளைஞர்களை மிரட்டி, “இந்த போஸ்டர்லாம் ஒட்டக்கூடாது. உள்ள தள்ளிடுவேன்” என்று போஸ்டரை பறித்துச் சென்றனர். பின் மக்கள் அதிகாரம் தோழர்களும், வழக்கறிஞர்களும் போலிஸ் ஸ்டேசன் சென்று நீண்டப் போராட்டத்துக்கு பின்னரே போஸ்டர்களை திருப்பி கொடுத்தனர்.

இதன்பின் பெற்றோர்கள் கடலூர் எஸ்.பி. யைப் பார்த்து மனுகொடுத்தனர். அவர் நெய்வேலி டி.எஸ்.பி.-யைப் பார்க்க சொன்னார். டி.எஸ்.பி.யைப் பார்த்தபோது சிறுமியின் அப்பா ரவி-யைப் பார்த்து, “யோவ் நான்தான் கேஸ் போட்டு இருக்கேன்ல, என்ன நம்பமாட்டியா” என்று கேட்டார்.

“அய்யா அவனுகல இன்னும் போலிசு புடிக்கல, ஊர்லதான் திரியராங்க. எனக்கு பயமா இருக்கு” என்ற போது

“ஆமா இப்ப பயப்புடு புள்ளய ஒழுங்கா வளத்தியா” என்று கேட்டார் டி.எஸ்.பி.

“என் பொண்ணு ஒருதப்பும் பண்ணலை ஐயா? ஊருக்குள்ள என் பெண்ணை விசாரிச்சி பாருங்க, அபாண்டமா பழிபோடாதிங்க” என்றார்.

“நான் விசாரிச்சேன், உன் பொண்ணு வேற பக்கத்து ஊரு பையனோட பேசிக்கிட்டு இருந்து தாமே, அதை கண்டிச்சதலாதான் உன் பொண்ணே வீட்டுக்கு உள்தாப்பா போட்டுகின்னு தூக்கு மாட்டிக்க போச்சாமே” என்றார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்களும், மக்கள் அதிகார தோழர்களும், “நிறுத்துங்க. நீங்க சரியா விசாரிக்கல, யாரோ சொன்னதை வாந்தி எடுக்கிறீங்க. அந்த வீட்டுக்கு உள்தாப்பளே போட முடியாது. உங்க விசாரணையோட போக்கே சரியில்லை” என்று ஆத்திரப்பட்டனர்.

அதன்பின் ஜகா வாங்கிய டி.எஸ்.பி கலைச்செல்வன், குறிஞ்சிப்பாடி டி.எஸ்.பி தவமணிக்கு போன்செய்து, “உடனே மற்ற இருவரையும் கைது செய்யுங்க, உடனே கைது செய்யுங்க விடக் கூடாது” என்று சத்தம் போட்டார். ஆனால் இந்த அயோக்கியர்களுக்கு நாலே நாளில் பெயில் வாங்குவதற்கு போலிசே உதவியது பின்னர் தெரியவந்தது. குற்றவாளிகள் அ.தி.மு.க குற்றவாளிகள். போலிசு துறை அம்மா கையில் உள்ளது. கலெக்டர் ஒரு அ.தி.மு.க மாவட்ட செயலாளர், எஸ்.பி 2-வது மாவட்ட செயலாளராக பணிபுரிகின்றனர். இவர்களை முன்னாள் கள்ளச்சாராய வியாபாரி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ வான சொரத்தூர் ராஜேந்திரன் வழி நடத்துகிறார்.

பாதிக்கப்பட்ட மாணவி இன்றுவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் வன்முறை வெறியாட்டம் போட்ட அ.தி.மு.க வெறிநாய்கள் (மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து) திமிரோடு திரியும் போது மாணவியின் குடும்பமோ துயரத்திலும், அச்சத்திலும் உள்ளது. பயப்படாதிர்கள்! இது அம்மா ஆட்சி, இது ரவுடிகள் ஆட்சி, இது போலிசு ஆட்சி. இன்னும் எவ்வளவோ இருக்கு

இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் செய்தி அறிந்த பலரும் மதுரை, காட்டுமன்னார்கோவில், திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சலவைத்தொழிலாளி சமூகத்தைச்சேர்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறினார்கள். நீண்ட உறக்கத்திற்குபின் வந்தது, உள்ளளூர் மாதர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், சிபிஎம் கட்சியும்.

“எஸ்.பி, கலெக்டரை பார்க்கணும் நேரில் வாங்க” என்று போன் மூலம் சிறுமியின் அப்பா ரவியை அழைத்தார் மாதர் சங்க பொறுப்பாளர் மேரி. “ஏற்கனவே எஸ்.பி ஆபிஸில் மனு கொடுத்துள்ளேன். ஒன்னும் வேலை நடக்கல தினமும் யாராவது வந்து கூப்பிட்டுக் கிட்டு இருக்காங்க நான் தாசில்தாரை பார்க்க போய்க்கொண்டு இருக்கிறேன். எதுவா இருந்தாலும் நீங்க பார்த்து செய்யுங்க” என்று கிளம்பி விட்டார்.

ஒரு சாமானிய மனிதனான ரவியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த நிலைமையை எதிர்கொள்ள பத்திரிக்கைகள், போலிசு, அரசு அதிகாரிகள், கட்சிகளின் உதவி எந்த இடத்திலும் வரவில்லை. இந்த மொத்த அமைப்பும், இச்சம்பவத்தில் ரவியின் குடும்பத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளன. ஒருபானைக்கு, ஒரு சோறு பதம் என்பது போல மொத்த சமூக அரசமைப்புமே ஒரு சாதாராண மனிதனின் பிரச்சனையை தீர்ப்பதற்கு வக்கில்லாமல் செத்து போய்விட்டது. சீக்கு பிடித்து நாறும் இந்த அரசமைப்பை சவகுழிக்குள் புதைப்பதை தவிர நம்மை பாதுகாத்து கொள்ள வேறுவழியில்லை.

நண்பர்களே

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துடன் மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 16-ம் தேதி அன்று தையல்குணாம்பட்டினம் அருகில் உள்ள குள்ளஞ்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு தரவில்லை. பின் குறிஞ்சிப்பாடியில் முயற்சித்து அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஆர்ப்பாட்ட தேதியன்று குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் 50-க்கு மேற்பட்ட போலிசை குவித்து மிரட்டியது. எஸ்.பியைப் பார்த்துப்பேசியும், பலனில்லை. நீதிமன்ற அனுமதிக்கான வேலையில் ஈடுபட்டுள்ளோம்.

புதுச்சேரி, ஜிப்மரில் இருக்கும் சிறுமி ஜெயஸ்ரீ-யின் குடும்பம் ஒரு சிறிய கூலித்தொழிலாளி குடும்பம். இதுநாள் வரையில் கடன் வாங்கியும், உறவினர்கள் உதவியாலும் செலவுகளைப் பார்த்து வந்தார். தற்போது கையில் இருந்த பணம் தீர்ந்து போயிவிட்டது. மருந்துக்கும், உணவுக்கும் போக்குவரத்துக்கும் சிரமமாக உள்ளது. எனவே நிதி உதவி தேவையாக உள்ளது. ஆதரவு தாருங்கள், கீழே ஜெயஸ்ரீயின் தந்தை வங்கிக் கணக்கு தரப்பட்டுள்ளது.

K.Ravi
Account No:002101000084468
Indian Overseas Bank,
OT, Cuddalore.
Cell:7373112694.

தகவலுக்கு:
மக்கள் அதிகாரம்,
கடலூர்
தொடர்பு எண்: 8110815963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க