privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநேர்காணல் : என்ன செய்றது மக்களே விரட்டுறாங்க தோழர் !

நேர்காணல் : என்ன செய்றது மக்களே விரட்டுறாங்க தோழர் !

-

கொள்கையா, சாதியா, பணமா ? பென்னாகரம் தொகுதி நேரடி ரிப்போர்ட் 3

”தோழர், உங்களோடெல்லாம் பேசினா பெரிய பிரச்சினையாகிடுமே” என்கிற தயக்கத்தோடேயே வரவேற்றார் முனிராஜ். பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள தெருவில் சி.பி.எம் கட்சியின் அலுவலகம் உள்ளது. முனிராஜ் நீண்டகால சி.பி.எம் கட்சி உறுப்பினர். இந்தத் தேர்தலில் மிகக் கடுமையான களப்பணிக்குப் பிறகும் ஐயாயிரத்தி சொச்ச ஓட்டுக்களில் படுதோல்வி அடைந்ததில் மிகுந்த ஏமாற்றமடைந்திருந்தார்.

பென்னாகரம் முன்னாள் MLA நஞ்சப்பன் (சி.பி.எம்)
பென்னாகரம் முன்னாள் MLA நஞ்சப்பன் (சி.பி.எம்)

“ஏன் நாங்கள் எதுவும் பிரச்சினை செய்யப் போவதில்லையே?”

“அதில்லே தோழர்.. உங்க கட்சிக்கும் எங்க கட்சிக்கும் கொள்கை அளவுலே பிரச்சினை இருக்கு.. நீங்க எதுனா கேட்டு நான் எதுனா தப்பா சொல்லி.. அதுவும் உங்க பத்திரிகைல வேற வந்திருச்சின்னா எங்க கட்சிக்காரங்க பிரச்சினை ஆக்கிடுவாங்க”

”கொள்கை, சித்தாந்தம் பற்றியெல்லாம் பேச வரலைங்க.. இந்த தேர்தலில் நீங்க வேலை செய்த அனுபவம் பற்றி பேசத் தான் வந்திருக்கோம்” என்று நம்பிக்கை ஊட்டியதும் பேச ஒப்புக் கொண்டார்.

“பிரச்சாரம் செய்த அனுபவம் பற்றி சொல்லுங்க”

“எங்களோட பிரச்சாரம் நல்ல முறைல எடுபட்டது. நாங்களும் தொகுதில ஒரு பகுதியைக் கூட விட்டு வைக்காம பிரச்சாரம் செய்தோம். இதே பாட்டாளி மக்கள் கட்சி பார்த்தீங்கன்னா காலனிக்குள்ளே ஓட்டுக் கேட்கவே போகலை.. நாங்க அப்படியெல்லாம் எந்த பகுதியையும் ஒதுக்காம எல்லா இடங்களுக்கும் போனோம். நாங்க பேசியதை மக்கள் வரவேற்றார்கள்”

“ஆனாலும் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ இப்படி வெறு ஐந்தாயிரம் ஓட்டு மட்டும் வாங்கி டெப்பாசிட்டை கூட காப்பாற்றிக்க முடியாம தோற்றிருக்காரே? இத்தனைக்கும் பென்னாகரத்தில் உங்களுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கும் நிலையிலேயே இப்படி தோற்றிருக்கீங்களே?”

“என்ன செய்யிறது தோழர்… மக்கள் காசுக்கும் சாதிக்கும் விலை போயிட்டாங்க. எங்களை மாதிரி சுத்தமான அரசியலை முன்வைத்துப் பேசறவங்களுக்கு இப்ப காலமில்லை”

“உங்க வேட்பாளர் நஞ்சப்பன் மேல கூட சில மோசடிப் புகார்கள் இருக்கிறதா மக்கள் பேசிக்கிறாங்களே?”

சரி விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்து அவரையெல்லாம் முதல்வர் வேட்பாளரா அறிவிச்சிருக்கீங்க. உங்க டைபி (DYFI) தோழர்களே ‘அண்ணியார் பிரேமலதான்னு’ கூட்டங்கள்ல பேசி நானே கேட்டிருக்கேன்..
சரி விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்து அவரையெல்லாம் முதல்வர் வேட்பாளரா அறிவிச்சிருக்கீங்க. உங்க டைபி (DYFI) தோழர்களே ‘அண்ணியார் பிரேமலதான்னு’ கூட்டங்கள்ல பேசி நானே கேட்டிருக்கேன்..

“அது பழைய கதைங்க. அப்ப அவரு யு.சி.பி கட்சில இருந்தார்.. நான் அப்ப சி.பி.ஐல இருந்தேன். அரசு புறம்போக்கு நிலத்தை அந்த சமயத்துல அபகரிச்சதா சொல்றாங்க… எனக்கு அது பத்தி முழு விவரம் தெரியாது”

“நாங்க பழைய விவகாரத்தைக் கேட்கலை.. இப்ப ஒரு பதினைந்து ஏக்கர் நிலத்தை வளைச்சிப் போட்டிருக்கார்னு பேசிக்கிறாங்களே?”

“ஆமா.. சொல்றாங்க.. இது ரெண்டு வருசத்துக்கு முன்னே நடந்ததுன்னு பேசிக்கிறாங்க”

“இப்படி மக்கள் சொத்தை வளைத்துப் போடுறவர்.. அப்புறம் தளி ராமச்சந்திரன் பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை.. இந்த மாதிரி வேட்பாளர்களை வைத்துக் கொண்டு தூய்மையான அரசியல்னு நீங்க பேசறதை யாருங்க நம்ப போறாங்க?”

“தோழர் நீங்க ஒரு விசயத்தை புரிஞ்சுக்கனும்.. சி.பி.ஐ கட்சியே ஒரு குட்டி பூர்சுவா கட்சியா மாறிட்டுது. அவங்களோட மாநில கமிட்டி கூட்டம் நடக்கும் போது பாருங்க… எப்படியும் ஐம்பது அறுபது காருங்க வரும்.. எல்லாம் சொந்த வண்டிங்க. இதே எங்களோட மாநில கமிட்டி கூட்டத்துக்கும் கூட அதே அளவுக்கு கார்கள் வரும்னு நீங்க சொல்லலாம்.. ஆனா பாருங்க அதுல பாதி கட்சி பேர்ல இருக்கும்… இதெல்லாம் மீறித்தான் நாங்க கூட்டணியா இருக்கோம். என்ன செய்யுறது சொல்லுங்க?”

”சரி விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்து அவரையெல்லாம் முதல்வர் வேட்பாளரா அறிவிச்சிருக்கீங்க. உங்க டைபி (DYFI) தோழர்களே ‘அண்ணியார் பிரேமலதான்னு’ கூட்டங்கள்ல பேசி நானே கேட்டிருக்கேன்.. இப்படி ஒரு அரசியல் கழிசடையோட கூட்டு சேர்வது சந்தர்பவாதமில்லையா? உங்களை எப்படி மக்கள் நம்புவாங்க?”

தோழர், விஜயகாந்துக்குன்னு ஒரு வோட்டு வங்கி இருக்குது. தேர்தல் அரசியல்னு வந்த பின்னால நீங்க எல்லாத்தையும் கணக்கில் எடுத்துக்கனும். சூழ்நிலைய அணுசரிச்சு போனா தான் அரசியல் செய்யவே முடியும்..
தோழர், விஜயகாந்துக்குன்னு ஒரு வோட்டு வங்கி இருக்குது. தேர்தல் அரசியல்னு வந்த பின்னால நீங்க எல்லாத்தையும் கணக்கில் எடுத்துக்கனும். சூழ்நிலைய அணுசரிச்சு போனா தான் அரசியல் செய்யவே முடியும்..

”தோழர், விஜயகாந்துக்குன்னு ஒரு வோட்டு வங்கி இருக்குது. தேர்தல் அரசியல்னு வந்த பின்னால நீங்க எல்லாத்தையும் கணக்கில் எடுத்துக்கனும். சூழ்நிலைய அனுசரிச்சு போனா தான் அரசியல் செய்யவே முடியும்..”

“அது சந்தர்பவாதமில்லையா?”

“இல்லை தேர்தல் அரசியலில் ஒரு உத்தி”

“சரிங்க.. ஓட்டு சதவீதம் அப்படின்னு பார்த்தால் கூட உங்களுக்கு ஜெயிக்கிறதுக்கான அடிப்படையே இல்லையே? தேர்தலுக்கு முன்னாடி உங்க கூட்டணில இருந்த கட்சிகளோட ஓட்டு சதவீதத்தை கூட்டினா கூட ஜெயிக்கிறதுக்கு தேவையான ஓட்டுக்கள் உங்க கிட்டே இல்லையே?”

“தோழர் இந்த ஓட்டு சதவீதம்… ஓட்டு வங்கி அப்படின்னு சொல்றதை நாம் ஓரளவுக்குத் தான் நம்பணும். எல்லா மக்களும் அரசியல் கட்சிகள்லயா இருக்காங்க? இல்லையே… நாங்க கட்சி சாராத மக்களை நம்பித் தான் களமிறங்கினோம். ஆனா அவங்களும் ஏமாத்திட்டாங்க. எல்லாம் காசுக்கு விலை போயிட்டாங்க.

“காசு மட்டும் தானா?”

“அதுவும் தான்… அதே மாதிரி தேர்தலுக்கு முன்னேயே கருத்துக் கணிப்புன்ற பேர்ல வந்தது எல்லாமே எங்களுக்கு வர வேண்டிய ஓட்டுக்களை தடுத்திடுச்சி. நீங்களே சொல்லுங்க… எல்லா பத்திரிகையும் எங்களை தோற்கப் போறவங்களா காமிச்ச பின்னாடி யாரு ஓட்டு போடுவா?”

“ஆனா, உங்களை அதிமுகவோட பி-டீம்னு சொல்றாங்களே? வைகோவோட கடந்த கால அரசியல் வரலாறை கணக்கில் எடுத்துக்கிட்டா அவர் நம்பத் தகுந்தவருன்னு நம்புறீங்களா?”

“தோழர், முதல்லே பி.டீம்னு சொல்றது தப்பு. அது திமுககாரனோட பொய் பிரச்சாரம். அடுத்து வைகோ தன்னோட பழைய தவறுகளை உணர்ந்திருக்கார்”

“மோடியின் வடிவில் பெரியாரைக் காண்கிறேன்னு கூட சொல்லி இருக்காரே?”

“தோழர், அதுக்கெல்லாம் அவர் சுயவிமர்சனம் ஏற்றுக் கொண்டிருக்கார். ஏன் கருணாநிதி கூட்டணி வைக்கலையா, ஜெயலலிதா கூட்டணி வைக்கலையா? இந்த விசயத்துல வைகோ ஜெயலலிதாவை விட கருணாநிதி தான் பெரிய குற்றவாளி”

ஆனா, உங்களை அதிமுகவோட பி-டீம்னு சொல்றாங்களே? வைகோவோட கடந்த கால அரசியல் வரலாறை கணக்கில் எடுத்துக்கிட்டா அவர் நம்பத் தகுந்தவரா தெரியலையே
ஆனா, உங்களை அதிமுகவோட பி-டீம்னு சொல்றாங்களே? வைகோவோட கடந்த கால அரசியல் வரலாறை கணக்கில் எடுத்துக்கிட்டா அவர் நம்பத் தகுந்தவரா தெரியலையே

“சரி, அதிமுக மாநில அளவுல வெற்றி பற்றி பெற்றதைப் பற்றி உங்க கருத்து என்ன?”

”பெரிதா சொல்றதுக்கு ஒன்னுமில்லே. ஆச்சரியமும் இல்லை”

“திமுக தோல்வி பத்தி?”

“திமுக தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா இந்தளவுக்கு ஓட்டு வாங்கினதும், எம்.எல்.ஏக்கள் ஜெயித்ததையும் தான் நம்ப முடியலை”

”உங்க கூட்டணி பத்தி சொல்லுங்க?”

“அது தான் தலைவர்கள் ஏற்கனவே சொல்லிட்டாங்களே?”

“உங்க கருத்து என்ன?”

“இந்தக் கூட்டணி தொடரனும்ங்கறது தான் என்னோட தனிப்பட்ட ஆசை”

“சரி, உங்க கருத்துப்படி இந்தக் கூட்டணி தொடருதுன்னு வைத்துக் கொண்டால், இதன் எதிர்கால அரசியல் எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க?”

”இந்தக் கூட்டணி எதிர்காலத்தில் மக்களின் நம்பிக்கையை வெல்லணும். ஒன்னா சேர்ந்து நிறைய போராட்டங்கள் நடத்தணும்… அடுத்த தேர்தல்ல எப்படியாவது சில எம்.எல்.ஏ தொகுதிகளில் ஜெயிக்கணும். சட்ட மன்றத்துல எங்க போராட்டத்தை தொடரணும்..”

“சரிங்க.. அதான் பணம் கொடுக்காம ஜெயிக்கவே முடியாதுன்ற நிலைமை வந்தாச்சே? இதுக்கு மேல தேர்தல்ல ஜெயிக்க நீங்க எவ்வளவு செலவு செய்யலாம்னு இருக்கீங்க?”

“அதாங்க என்ன செய்யறதுன்னே புரியலை. நாங்க காசு கொடுக்கிறதை தடுக்கப் போனா எங்களையே மக்கள் அடிச்சி விரட்டி விடுறாங்க. பிரச்சாரம் செஞ்சா கூட அதனால எதாவது பயனிருக்குமான்னு தெரியலை”

சிபிஎம் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான முனிராஜின் வார்த்தைகளில் அவநம்பிக்கையே தொனித்தது. ஒரே நேரத்தில் மக்களை குறை சொல்கிறார், கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளை குறை சொல்கிறார், ஊடகங்களை குறை சொல்கிறார், எதிர் கட்சிகளை குறை சொல்கிறார்.. ஆனால், நாங்கள் அவரோடு உரையாடிய ஒரு மணி நேரத்தில் எந்த இடத்திலும் தன்னுடைய கட்சி தேர்தெடுத்துக் கொண்ட பாதையின் மேல் அவருக்கு எந்தவொரு கேள்வியும் எழவில்லை. அது தொடர்பான கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை அளித்தார் அல்லது கட்சியின் நிலைப்பாட்டையே பதிலாக முன்வைத்தார்.

அதாங்க என்ன செய்யறதுன்னே புரியலை. நாங்க காசு கொடுக்கிறதை தடுக்கப் போனா எங்களையே மக்கள் அடிச்சி விரட்டி விடுறாங்க. பிரச்சாரம் செஞ்சா கூட அதனால எதாவது பயனிருக்குமான்னு தெரியலை
அதாங்க என்ன செய்யறதுன்னே புரியலை. நாங்க காசு கொடுக்கிறதை தடுக்கப் போனா எங்களையே மக்கள் அடிச்சி விரட்டி விடுறாங்க. பிரச்சாரம் செஞ்சா கூட அதனால எதாவது பயனிருக்குமான்னு தெரியலை

நம்மால் ஏன் கழுகுகளைப் போல் உயரத்தில் பறக்க முடியவில்லை என்று யோசித்து யோசித்து சுயகழிவிறக்கத்தில் ஆழ்ந்து விட்ட அவரை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்க வேண்டாமென்று தீர்மானித்து நாங்கள் அங்கிருந்து விடைபெற்றோம்.

பென்னாகரத்தில் நாங்கள் சந்தித்த சிபிஐ கட்சியைச் சேர்ந்த பிறரிடமும் இதே போன்ற விரக்தியே மேலோங்கியிருந்தது. தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலின் போதும் சரி, தேர்தல் முடிந்த பின்பும் சரி, தமது கட்சித் தலைமையும் கூட்டணித் தலைமையும் முன்வைத்த “மாற்று” என்கிற கருத்தாக்கத்தை அவர்கள் முழுமையாக நம்பிக்கை வைத்து ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. இன்னுமொரு தேர்தல், இன்னுமொரு தோல்வி என்கிற அளவிலேயே எடுத்துக் கொள்கிறார்கள். இனி அடுத்த தேர்தலும், பெரிய கட்சிகளோடு ஒரு கூட்டணி ஏற்பட்டால் இந்த மாற்றை கடாசி விட்டு அடுத்த நியாயத்தை தயார் செய்து பேசுவார்கள்.

ஏதோ ஒரு சக்தி நம்மை படைத்து இயக்கி வழிநடத்துவதாக ஆத்திகர்கள் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை கடத்துவது போல சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ தொண்டர்கள் ஏதோ நாமும் ஒரு அரசியலை நம்புகிறோம் செய்கிறோம் என்று எண்ணி நாட்களை கழிக்கிறார்கள். எனினும் இந்த வகைப்பட்ட ஏதோ ஒரு நம்பிக்கையை அவர்களுக்கு அளிப்பதற்கு அக்கட்சிகளின் தலைமை என்னவெல்லாம்

 1. ஏதோ ஒரு சக்தி வழி நடத்துவதாக….
  கண்டுபிடிச்சிட்டேன்….கன்டெயினர்…..
  கன்டெயினர்…..

 2. ஓ.ஜி மஹேந்திரன் என்ற பார்ப்பனிய_______பொறுக்கிக்கு கடும் கண்டனம் ஸ்வாதி கொலையில்

  இந்த கேள்விகளை நாங்கள் தாண்ட பிராமணர்களை பார்த்து கேட்கவேண்டும் , நீங்க எண்ணத்தை புடுங்கினீங்க பிற சமுதாயங்கள் பாதிக்கப்படும் பொழுது ? இது ஆண்டவன் செயல் என்று ஒதுங்கி போனீங்க ! ___________

  ஒரே ஒரு சாவுக்கு இந்த ஓலம் , நாங்க தினந்தோறும் சாவுறும் உங்களால் ,தினந்தோறும் உயிர்பலி உங்க சாதி வெறியர்களால் ,
  DSP விஷ்ணுபிரியா , கடலூர் மூன்று மாணவிகள் , பள்ளிக்கொழந்தைகள் சாதிவெறியர்களால் தலையில் செருப்பை சுமக்க வைத்து அடித்தபொழுது நீங்க எங்கட போனீங்க, தலையை வெட்டி தனியா கிடந்தபொழுது நிறைமாத கர்பிணிப்பெண்கள் கற்பழித்து கொள்ளும் பொழுது உங்களுக்கு எங்கடா போனுச்சு மனசாட்சி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க