Friday, November 15, 2019
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் உலக கந்து வட்டிக்காரனிடம் கருணை இருக்குமா ?

உலக கந்து வட்டிக்காரனிடம் கருணை இருக்குமா ?

-

IMF
ஐ.எம்.எஃப்

புதிய தாராளமய கொள்கையின் பலன்கள் மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது என்றும் இக்கொள்கைகளினால் பாதகமான விளைவுகளே அதிகம் ஏற்பட்டிருக்கின்றன என்று இக்கொள்கைக்கு கந்து வட்டிக்காரனாக இருக்கும் ஐ.எம்.எஃப் – சர்வதேச நாணய நிதியம் ஒத்துக்கொண்டிருக்கிறது.

புதிய தாராளமய கொள்கைககள் உலக மக்களுக்கும் ஏழை நாடுகளுக்கும் விரோதமானவை என்பதை பலரும் கூறிவந்த போதிலும் தாராளமய ஆதரவு பூசாரிகள் அதற்கு எதிராக சாமியாடி வந்தனர். புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும்படி கட்டளையிடும் நாட்டாமையான ஐ.எம்.எஃப்பே இனியும் இதை மறைக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஐ.எம்.எஃப்பின் துணை இயக்குனரான ஜோனாதன் ஒஸ்ட்ரி உள்ளடக்கிய மூன்று பொருளாதார நிபுணர்களின் “Neoliberalism: Oversold” என்ற ஒரு அறிக்கையை ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ளது.

இவ்வாய்வில் நாடுகளுக்கிடையே மூலதனத்தின் தடையில்லா பாய்ச்சல் மற்றும் அரசின் செலவுகளை குறைக்கும் சிக்கன நடவடிக்கைகள் ஆகிய தாராளமயத்தின் இரண்டு முக்கிய கொள்கைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு பரிசீலிக்கிறார்களாம்.

  1. பல நாடுகளை ஆய்வு செய்கையில் தாராளமயத்தால் அந்நாடுகள் வளர்ச்சி அடைந்திருப்பதாக எங்களால் கண்டறிய முடியவில்லை.
  2. அதே சமயத்தில் இக்கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட விலையாக ஏற்றத்தாழ்வு அதிகமாகியுள்ளதை மிகத் தெளிவாக அறியமுடிகிறது.
  3. ஏற்றத்தாழ்வு அதிகமாகியிருப்பதன் பின்விளைவாக வளர்ச்சியை மேலும் குறைந்திருக்கிறது.

தடையற்ற மூலதன பரிமாற்றம் குறித்த ஆய்வு முடிவு

ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மறைத்து, மூலதன பற்றாக்குறையால் அவதிப்படும் வளரும் நாடுகளுக்கு அதை  தடையில்லாமல் கிடைக்கச்செய்வதன் மூலம் உலக பொருளாதாரம் வலுப்பெறும் என்று கூறிவந்தனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால் இம்மூலதன பாய்ச்சலால் பொருளாதார நெருக்கடிகள் அதிகமாகுவதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FII) மூலம் பங்குச் சந்தைக்குள் நுழையும் மூலதனம் எந்நேரம் வேண்டுமானும் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும்.இப்படிபட்ட குறுகியகால மூலதத்தினால் மிக பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதாக கூறுகிறது இவ்வாய்வுக் கட்டுரை.

கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளிலும் கூட அரசுகள் 'சிக்கன' நடவடிக்கையில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அந்நாடுகளில் நடந்து வருகின்றன
கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளிலும் கூட அரசுகள் ‘சிக்கன’ நடவடிக்கையில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அந்நாடுகளில் நடந்து வருகின்றன

வளரும் நாடுகளின் மூலதன வரவை ஆய்வு செய்கையில்  மூலதன வரத்து திடீரென அதிகரிப்பது 150 முறை நடந்துள்ளது. இந்த திடீர் அதிகரிப்புகளில்  20% பொருளாதார நெருக்கடியில் முடிந்துள்ளது என இவ்வாய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிகள் மேலும் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கிறதாம்.மேலும் குறுகிய கால மூலதன பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று வாதிடுகிறது இவ்வறிக்கை.

சிக்கன நடவடிக்கைகள் குறித்த ஆய்வு முடிவு

அரசின் பங்களிப்பை குறைப்பது என்ற வகையில் அரசுத்துறைகளை தனியார்மயமாக்குவது; நிதி பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் சமூக நலத்திட்டங்களை வெட்டி  குறைப்பது போன்ற நடவடிக்கைகள்  உலகெங்கும் அமல்படுத்தப்படுகின்றன. கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளிலும் கூட அரசுகள் ‘சிக்கன’ நடவடிக்கையில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அந்நாடுகளில் நடந்து வருகின்றன.

இதை ஆய்வு  செய்துள்ள இவ்வாய்வாளர்கள் நிதி பற்றாக்குறை குறைப்பு நடவடிக்கைகளினால் உற்பத்தி விரிவடைவதற்கு மாறாக குறைவதாக தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%  அளவிற்கு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது 0.6% அளவிற்கு வேலை இழப்பு அதிகரிப்பதாக கூறுகிறது இவ்வாய்வு. ஐந்தாண்டுகளில் இது 1.5% ஆக உயருகிறது. சிக்கன நடவடிக்கைகளினால்  உற்பத்தி குறைவது, நலத்திட்ட வெட்டுகள், அதிக வேலை இழப்புகள் முதலியவை ஏற்படுவதாக கூறுகிறது இவ்வறிக்கை.

தடையற்ற மூலதன பாய்ச்சல் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் ஏற்படுத்தும் ஏற்றாத்தாழ்வு பாதகமான ஒரு நச்சு சுழலை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறது இவ்வாய்வறிக்கை. இதனால் கொள்கை வடிவமைப்பாளர்கள் மறுபங்கீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறது. கல்விக்கும், பயிற்சிகளுக்கும் அதிகம் செலவழிக்க வேண்டும் என்றும், சிக்கன நடவடிக்கைகள் ஏழைகளை பாதிப்பதாக இருக்க கூடாது எனவும் கோருகிறது. அப்போது தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என வாதிடுகிறது.

மூலதன பாய்ச்சலுக்கு கட்டுப்பாடு, சிக்கன நடவடிக்கைகளுக்கு தடை என தான் இதுவரை கூறிவந்த கட்டுபாடில்லாத தாராளமய  கொள்கைகளுக்கு நேர் எதிராக ஐ.எம்.எஃப் ஆய்வறிக்கை வெளியிடவேண்டிய தேவை என்ன?

உலகலாவிய நிதி நெருக்கடி, அதை தீர்க்க பரிந்துரைப்பட்ட சிக்கன நடவடிக்கைகளினால் (அதாவது சமூகநலத்திட்டங்களை ரத்து செய்வது, அதற்கான நிதியை வெட்டுவது) உண்டான எதிர்விளைவுகள், இதன் விளைவுகளாக மேற்குலகில் பரவும் மக்கள் போராட்டம் என முதலாளித்துவ அமைப்பு ஒரு நச்சு சுழலில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. அந்த போராட்டங்களின் விளைவாக வெளிப்படையாக முதலாளித்துவம் ஒழிக என்றோ இல்லை முதலாளித்துவத்தைக் கொல்வோம் என்றோ முழக்கங்கள் இக்கனவான்களின் காதை கிழிக்கின்றன. இன்று காதைக் கிழிக்கும் குரல் நாளை அவர்களின் அடிமடியிலேயே ஆப்பு வைக்கும் கிளர்ச்சியாக வளர்ந்து விட்டால்?

இனி அதை தடுத்து நிறுத்துவது எப்படி என்று உலகமயத்தை அமல்படுத்தும் அயோக்கியர்கள் ஆய்வு செய்கிறார்கள். எளிமையாகச் சொன்னால் தமிழகத்தில் ஜெயா அமல்படுத்துவது போல இலவசத் திட்டங்களை காட்டி விட்டு, கல்வி, தண்ணீர், மருத்துவம், தொழிற்துறை அனைத்திலும் தனியார் மயத்தை முன்னிலும் அதிகமாய் பரப்புகிறார்கள். நீர் ஒரு விற்பனைச் சரக்கு என்று நிலைநாட்டி விட்டு ஏழைகளுக்கு இரண்டு குடம் தண்ணீர் கொடுத்துவிட்டால் முடிந்து போயிற்று.

உலகமெங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு முதலாளித்துவம் அனைத்து துறைகளிலும் அசுர வேகத்துடன் – பலத்துடன் இலாபத்தை உறிஞ்சி எடுக்கிறது. இந்த வேகம்தான் நெருக்கடி எனும் விளைவை பேரழிவுத் தாக்குதலாக கொண்டு வருகிறது. இந்த சுரண்டலை ஆய்வு செய்யாமல் சுரண்டலினால் வரும் ஏற்றத்தாழ்வு, போராட்டத்தை மட்டும் கண்கட்டு வித்தை மூலம் மறைக்க நினைக்கிறது   ஐ.எம்.எஃப் அறிக்கை.

முதலாளித்துவத்தின் கொடூரங்களை சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள மக்களிடம் கண்கட்டு வித்தைகள் செல்லுபடியாகாது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. பாரிஸிலோ, நியூயார்க்கிலோ ஐ.எம்.எஃப் அலுவலகத்தின் வாயிலிலேயே அன்றாடம் இந்த செய்தி மக்களின் போராட்டத்தால் சொல்லப்பட்டு வருகிறது. இனி அந்த செய்தியைக் கேட்பது அவர்களது தெரிவோ விருப்பமோ அல்ல!

– ரவி

மேலும் படிக்க
Neoliberalism: Oversold?
Even the IMF Now Admits Neoliberalism Has Failed
You’re witnessing the death of neoliberalism – from within

  1. அதியமான் போன்ற தாராளவாதப் பூசாரிகளுக்கு ஐ.எம்.எஃப்பின் ‘சமர்ப்பணம்!’

    • வெனிசூலாவின் சோசியலிசம் மக்களை பட்டினி போட்டு கொல்கிறது என்பதை பற்றிய கட்டுரை

      http://www.forbes.com/sites/timworstall/2016/06/26/congratulations-to-bolivarian-socialism-venezuela-now-faces-imminent-famine/#724ba6e881c0

      நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்

      • ராமனண்ணே …

        லின்க் போடுறதுக்கு முன்னாடி மொதல்ல போய் படிச்சுட்டு வாண்ணே .. ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகள்ன்னா என்ன ?.. சமூக ஏகாதிபத்தியம்னா என்ன? .. சோசலிசம்னா என்னானு தெரிஞ்சுட்டு வாண்ணே .. அப்புறம் உக்காந்து பேசுவோம்…

        நீ மொதல்ல நாணயம்னா என்னானு தெரிஞ்சாத் தான் நாணயத்தோட இரு பக்கத்தையும் மக்களுக்கு வெளக்க முடியும்.

        தெருல கெடக்குற சிங்கி ய எடுத்துட்டு, நாணயத்தோட ரெண்டு பக்கத்தையும் பாருண்ணு நீ பாட்டுக்கு சொல்லிட்டு இருக்காதண்ணே … லூசுப்பயன்னு சொல்லீடுவாங்க …

        என்னமோ உன் நல்லதுக்கு தான் சொன்னேன் ..

      • வெனிசூலா ஒரு முழுமையான சோசலிச நாடு அல்ல. அங்கு கடைபிடிக்கப்பட்டது ஒரு வகையான கீன்சிய பொருளாதாரம் தான் என்பது என் கருத்து.

        கீன்சின் தோல்விக்கு வெனிசுலாவும், பீரீட்மேனின் தோல்விக்கு கிரீசும் உதாரணமாக இருக்கின்றன.

  2. வினவு,

    உங்களுக்கு ’சவுகரியமான’ சில வரிகளை மட்டும் உருவி, ஏதோ மொத்த நவ தாரளமய கொள்கைகள் அனைத்தையும் அய்.எம்.எஃப் நிராகரித்துவிட்டது போல் ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி எழுதுவதில் வழக்கம் போல் உங்க ’திறமையை’ காட்டிகிறீக. வாழ்த்துக்கள். (எனக்கு தான் இது வாய்க்க மாட்டேங்குது !!)

    ஏற்றதாழ்வு அதிகரித்திருக்கிறது தான். ஆனால் அனைத்து நாடுகளிலும் அல்ல. ஆனால் வறுமை மிக வேகமாக குறைந்து வருகிறது என்பதை அய்.எம்.எஃப் வேறு பல இடங்களில் பதிவு செய்து வருகிறது. ஏற்ற தாழ்வு விகிதங்களுக்கும், வளர்ச்சி விகிதங்களுக்கும் உள்ள உறவு இன்னும் தெளிவாக நிருபிக்கப்படவில்லை. சரி இதெல்லாம் இருக்கட்டும். முதலில் நவதாரளமயமாக்கல் என்றால் என்னவென்று பார்க்கலாம். முக்கியமாக இந்தியாவை பொருத்த வரை :

    1. Dismantling of industrial licencing policy and freeing all sectors from licensing norms
    2. Abolition of MRTP ACt 1969 and replacing it with Competition Commission Act
    3. Abolition of Controller of capital issues and allowing free pricing of IPO, etc
    4. Allowing full convertibility of rupee in the current account
    5. Allowing FDI in most sectors with sectoral caps being raised in steps
    6. Allowing FII in Indian stock markets
    7. Allowing private sector in sectors like telecom, power, aviation, TV broadcast, FM radio, etc which were hitherto the monopoly of government
    8. Drastic pruning of items reserved exclusively for small scale sector industries
    9. Abolition of export / import controls. Reduction of customs duties from near 200% levels
    10. Reduction of all taxes from confiscatory regime to rational levels.
    11. Phased Privatization of PSUs and govt banks

    இவை தான் இன்று ‘நவ தாரள’ கொள்கைகள் என்று பொதுவான அடைமொழிக்குள் அழைக்கபடுகின்றன. கல்வி, சுகாதார துறைகளை ‘தனியார்’மயமாக்கல் இதில் இல்லை என்பதை க்வனிக்கவும். தாய்லாந், மலேசியா போன்ற நாடுகளில் 1997இல் நடந்த short term capital outflowsகளினால் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி மற்றும் மந்தங்கள் பற்றி தான் அய்.எம்.எஃப் பதிவு பேசுகிறது. இந்தியா capital account convertibilityஅய் இன்றும் அனுமதிக்காததால் இந்த சிக்கலை எதிர்க்கொள்ளவில்லை. ஆனால் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் இது நடந்ததின் விளைவுகளை பற்றி பேசுகிறது. Capital account convertibility எல்லா நாடுகளிலும் தேவையில்லை என்ற முடிவுக்கு அய்.எம்.எஃப் வருகிறது. அவ்வளவு தான். ஆனால் மேலே நான் பட்டியிலிட்ட விசியங்கள் அனைத்தையும் ‘நிராகரித்தாக’ அய்.எம்.எஃப் எங்கும் சொல்லவில்லை. சொல்ல மாட்டார்கள். இதை பற்றி மேலும் விரிவாக பேச முடியும்.

    • @அதியமான்,

      நீளமான கட்டுரையில அவங்க கண்ணோட்டத்துக்கு ஏத்தா மாதிரி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டி எப்படி அவை மக்கள் விரோதமாக இருக்கின்றன என்று தான் காட்ட முடியும்.

      ஏது… முழு கட்டுரையையும் நீ ஏன் போடலைன்னு கேப்பீங்க போல இருக்கே…

      //ஆனால் மேலே நான் பட்டியிலிட்ட விசியங்கள் அனைத்தையும் ‘நிராகரித்தாக’ அய்.எம்.எஃப் எங்கும் சொல்லவில்லை.//

      வினவும் கூட ஐ.எம்.எஃப் அனைத்தையும் ‘நிராகரித்தாக’வோ அல்லது அனைத்தையும் ‘நிராகரித்தாக’ ஐ.எம்.எஃப் சொன்னதாகவோ எங்கும் சொல்லவில்லையே? அப்புறம் ஏன் இந்தப் பதற்றம்? போலி அறிவுஜீவித்தனம்? அறிவு நாணயம் இருந்தால் வினவு சொன்னதாக உங்களால் நிரூபிக்க முடியுமா?

      ஐ.எம்.எஃப் அறிக்கையின் முடிவுகளிலிருந்து…
      ///எளிமையாகச் சொன்னால் தமிழகத்தில் ஜெயா அமல்படுத்துவது போல இலவசத் திட்டங்களை காட்டி விட்டு, கல்வி, தண்ணீர், மருத்துவம், தொழிற்துறை அனைத்திலும் தனியார் மயத்தை முன்னிலும் அதிகமாய் பரப்புகிறார்கள். நீர் ஒரு விற்பனைச் சரக்கு என்று நிலைநாட்டி விட்டு ஏழைகளுக்கு இரண்டு குடம் தண்ணீர் கொடுத்துவிட்டால் முடிந்து போயிற்று.///
      – இதைத்தான் வினவு சொல்கிறது.

      வினவின் கட்டுரையில் இருந்து ’சந்தர்ப்பவாதமாக’ சிலவற்றை மட்டும் வெட்டி ஒட்டி நீங்கள் தான் “போலி (முதலாளித்துவ) அறிவு ஜீவி” வேஷம் கட்டிக் கொள்கிறீர்கள்.

    • Will Adhiyaman explain the benefit from allowing FII in Indian stock markets.By allowing it only speculation is encouraged.When there is some movement by the Federal Chief at USA,the investment flies away and millions of Indians lose their investments.
      By pruning of items (salt,agarbathi,candle etc)exclusively reserved for small scale industries,small scale industries which contribute employment to millions are killed.What is the necessity for this pruning?
      Phased privatization of govt banks will only pave way for cornering of all financial resources by few industrialists and closing down rural branches.Already the original purpose of starting Regional Rural Banks was defeated by providing credit facilities to big industries by these banks.
      Adhiyaman will start listing out the inefficiency in PSUs.OK.How private industrialists who are the “very able and efficient persons”according to Adhiyaman have contributed to lion share of NPAs of public sector banks?Let him read the list of big loan defaulters.
      Adhiyaman,the floor for debate is open to you.

    • அதியமான்,

      இந்த ஆய்வு குறிப்பிட்ட நாடுகளை பற்றியதல்ல. அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளப்டி பெரும்பாலான நாடுகளில் இக்கொள்கையினால் வளர்ச்சி அடைந்திருப்பதாக ஏதும் காணக்கிடைக்கவில்லை என்பதும், அதே சமயத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்திருப்பது தெளிவாக தெரிவதாக்வும் அழுத்தம் திருத்தமாக ஐ.எம்.எஃ தெரிவித்திருக்கிறது. அதே போல வளரும் 50 நாடுகளில் குறுகியகால மூலதனத்தின் விளைவுகளை ஆய்ந்து இம்முடிவுவகளுக்கு வ்ந்திருப்பதாக இவ்வறிகை கூறுகிறது.

      நீங்கள் குறிப்பிட்டுள்ளப்டி 1997 தாய்லாந்து மலேசியா போன்று கிழக்காசிய நாடுகளின் பிரச்சனையாக நீங்கள் வேண்டுமென்றே குறுக்குவது தவறு.

      அரசின் அளவை குறைப்பது, அரசின் செலவை குறைப்பது என்ற பெயரில் தான் தனியார்மய நடவடிக்கைகளை ஊக்குவிக்கபடுகின்றன. அதை கேள்விக்குட்படுத்துகிறது ஐ.எம்.எஃபின் இக்கட்டுரை.ஐ.எம்.எஃபே தன் நிலைப்பாட்டை மாற்றிகொண்டிடுப்பதாக கூறுகிறது.உதாரணமாக,

      On capital account liberalization, the IMF’s view has also changed—from one that considered capital controls as almost always counterproductive to greater acceptance of controls to deal with the volatility of capital flows.

      அடுத்ததாக கட்டுரையின் முடிவு உங்களுக்காகவே எழுதப்பட்டதுபோல இருக்கிறது. மீண்டும் அதை ஒரு முறை வாசியுங்கள்.

      புதிய பொருளாதார கொள்கைகளின் தீமைகளை குறிப்பிட்டுவிட்டு “எல்லா நாடுகளுக்கும் எல்லா காலத்துக்கும் நன்மை பயக்ககூடிய நிரந்தர கொள்கை என்று ஒன்று கிடையாது.பாலிசிமேக்கர்களும், ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்களும் நம்பிகை(FAITH)யின் அடிப்படையில் செயல்படகூடாது. ” என்று கேட்டுக்கொள்கிறது.

      ஜெயமோகன் உங்களை மதவாதி(FAITH) என்று கூறியதை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என நம்புகிறேன்ன்.

      • /ஐ.எம்.எஃபே தன் நிலைப்பாட்டை மாற்றிகொண்டிடுப்பதாக கூறுகிறது.உதாரணமாக/

        “சில விசயங்களில்” ஐ.எம்.எஃபே தன் நிலைப்பாட்டை மாற்றிகொண்டிடுப்பதாக கூறுகிறது.

        சில விசயங்களில் என்பதை சேர்த்து படிக்கவும்

      • ///புதிய பொருளாதார கொள்கைகளின் தீமைகளை குறிப்பிட்டுவிட்டு “எல்லா நாடுகளுக்கும் எல்லா காலத்துக்கும் நன்மை பயக்ககூடிய நிரந்தர கொள்கை என்று ஒன்று கிடையாது.பாலிசிமேக்கர்களும், ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்களும் நம்பிகை(FAITH)யின் அடிப்படையில் செயல்படகூடாது. ” என்று கேட்டுக்கொள்கிறது./// ஆம். மிகவும் சரி. ஆனால் நவதாரளவாதம் என்றால் என்ன என்ற எனது மேற்படி விரிவான 11 அம்ச விளக்கத்தை பற்றி இதுவரை யாரும் பேச காணோம் ? பேச முடியாது தோழர். பொதுப்படுத்தல்கள், sweeping statements with no substance தான் செய்வாங்க. Short term capital flows, capital account convertibilityயின் சிக்கல்கள் அல்லது தேவையின்மை பற்றி தான் அய்.எம்.எஃப் அறிக்கை ’உள்ளே சென்று’ பேசுகிறது. மேலே நான் சொன்ன இதர முக்கிய அம்சங்கள் பற்றி பேசவில்லை. ஏனென்றால் அவைகளை அய்.எம்.எஃப் இன்றும் முன்மொழிகிறது.

        • முதலில் கிழக்காசிய நாடுகளின் பிரச்சனையை பற்றி தான் கட்டுரை பேசுகிறது என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது தவறு என்பதற்கு கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறேன். அதை பற்றி எதுவும் கூறாமல் அடுத்த விசயத்திற்கு தாவுகிறீர்கள்.

          //Short term capital flows, capital account convertibilityயின் சிக்கல்கள் அல்லது தேவையின்மை பற்றி தான் அய்.எம்.எஃப் அறிக்கை//

          ஏற்றத்தாழ்வு, நிதி நெருக்கடி அதனால் இன்று உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணமான கொள்கைகளை பற்றி பேசுவதை மேற்கண்ட ஒரு வரியில் கடந்து செல்கிறீர்கள். ஐ.எம்.எஃ ஆய்வாளர்களிடம் இருக்கும் நேர்மை, மனித உணர்வு கூட உங்களிடம் இல்லை.

          // மேலே நான் சொன்ன இதர முக்கிய அம்சங்கள் பற்றி பேசவில்லை//

          ஆமாம். ஐ.எம்.எஃ இதர பிரச்சனைகளைப் பற்றி பேசுவதாக யாரும் கூறவில்லையே. அதுபோக அந்நிறுவனத்திற்கு அப்படி ஒரு மனித முகம் இருக்கும் என்றும் நம்பவில்லை.

          ஐ.எம்.எஃ – ஐ ஏதோ பெரிய நியாயவான் போன்றும் அது தாராளமயத்தை முற்றிலுமாக கைவிட்டுவிட்டது என்று கட்டுரை எங்கும் கூறவில்லையே. தாராளமயத்தின் இரண்டு முக்கிய கூறுகளான அரசின் அளவை குறைப்பது, மூலதனத்திற்கான தடையை விலக்குவது ஆகிய பிரச்சனைகளை ஆராய்ந்து அதன் முடிவுகளாக பின்வருவதை கூறுகிறது. இத்தனை காலம் austerity க்கு வாதாடிய, தடையற்ற மூலதன பரிமாற்றத்திற்கு வாதாடிய ஐ.எம்.எஃ ஏன் இன்றி மாற்றி பேசுகிறது. இந்த நெருக்கடிக்கு காரணம் என்ன? என்பது தான் கட்டுரையில் கூறப்படுகிறது.

          •The benefits in terms of increased growth seem fairly difficult to establish when looking at a broad group of countries.­
          •The costs in terms of increased inequality are prominent. Such costs epitomize the trade-off between the growth and equity effects of some aspects of the neoliberal agenda.­
          •Increased inequality in turn hurts the level and sustainability of growth.
          மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% அளவிற்கு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது 0.6% அளவிற்கு வேலை இழப்பு அதிகரிப்பதாக கூறுகிறது இவ்வாய்வு. ஐந்தாண்டுகளில் இது 1.5% ஆக உயருகிறது.

          அது பற்றி உங்கள் கருத்து என்ன? இதை ஏற்கிறீர்களா இல்லை ஐ.எம்.எஃ ஆய்வாளர்கள் nellikkani போன்ற பிளாக் படித்திருந்தால் வேறு விதமாக கூறியிருப்பார்கள் என்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?

          • ////புதிய பொருளாதார கொள்கைகளின் தீமைகளை குறிப்பிட்டுவிட்டு ///

            இந்த புதிய பொருளாதார கொள்கைகளின் 11 முக்கிய அம்சங்களையும் (நான் மேலே எழுதிய்ள்ள) தீமை என்று அய்.எம்.எஃப் எங்கு சொல்லகிறது ? அதன் அறிக்கையை வைத்து எழுதபட்ட கட்டுரையில் அப்படி சொல்கிறீர்கள். புதிய பொருளாதார கொள்கைகள் அனைத்துமே (repeat : அனைத்துமே) தீமையா என்ன ? அல்லது /Short term capital flows, capital account convertibility மட்டும் தீமையா ? இதை பற்றி தான் நமக்குள் விவாதம். நவதாரளவாதம் என்பது மேலே உள்ள 11 அம்சம் மற்றும் இன்னும் சில விசியங்களையும் சேர்த்து தான்.

            ///தாராளமயத்தின் இரண்டு முக்கிய கூறுகளான அரசின் அளவை குறைப்பது, மூலதனத்திற்கான தடையை விலக்குவது ஆகிய பிரச்சனைகளை ஆராய்ந்து அதன் முடிவுகளாக பின்வருவதை கூறுகிறது. இத்தனை காலம் austerity க்கு வாதாடிய, தடையற்ற மூலதன பரிமாற்றத்திற்கு வாதாடிய ஐ.எம்.எஃ ஏன் இன்றி மாற்றி பேசுகிறது.///

            austerity may work in some nations in some periods and it may not work always. முதலிலேயே சொன்னபடி : ’எல்லா நாடுகளுக்கும் எல்லா காலத்துக்கும் நன்மை பயக்ககூடிய நிரந்தர கொள்கை என்று ஒன்று கிடையாது.’ IMF too keeps learning from history (unlike you guys). And there are limits to government size. Because unless the expansion of govt is supported by tax revenue (and not debt or printing currency) it will collapse like present day Venezuela. India too was on the verge of collapse in 1991. Today the growth has produced exponential tax revenue increase (when compared to pre reform era) and hence the govt is able to spend billions of new money on welfare like never before. But there is limit due to fiscal constraints.

            As far the trade off between growth vs equity, it is still being debated and this IMF paper is part of the debate and not conclusive. But you guys have no open mind or open form for such debates but wallow in orthodox Marxism. மதவாதிகளை போல் பேசிகிட்டே இருங்க.

            • “Real economic “expertise” is not just mastery of theories and facts. It is a deeper understanding of the variety of interpretations of those theories and facts and humility in the face of our limits in applying that knowledge in attempting to manage an economy.
              The smartest economists are the ones who know the limits of economic expertise.” – Steven Horwitz

              Marxists like to compare a theoretically perfect version of socialism with practical, imperfect capitalism which allows them to claim that socialism is superior to capitalism. – Mark J. Perry

            • //Today the growth has produced exponential tax revenue increase(when compared to pre-return era)and hence the govt is able to spend billions of new money like never before.But there is limit to fiscal constraints//
              What a blatent lie? Even the reduced allocation under the MGNREG programme even in drought affected states was not released.Here is a govt that has not released wage arrears amounting to 12000 crores meant for previous financial year to poor people under 100 day programme.The allocations under vital sectors like Education,Health,Women And Child Welfare have been cut like never before.The govt is keen in cutting subsidy meant for poor which amounts to about Rs200000 crore annually citing fiscal constraints.But these fiscal constraints never deter them to be liberal with Rs540000 crore worth tax concessions/subsidy to big industrialists.The Railway Minister reminds every citizen about the subsidy provided in railway fares and asked the ministry to print the actual amount of subsidy in every railway ticket to remind the citizens that they are simply “beggars” at the mercy of benovalent govt and not law abiding citizens.Adhiyaman like cronies only praise the benovalent govt.

            • /As far the trade off between growth vs equity, it is still being debated and this IMF paper is part of the debate and not conclusive. /

              மேற்கண்ட விவாதத்தில் பொருளாதாரா மாமேதையான உங்களது கருத்து என்ன என்பது தான் இந்த எளியவனின் கேள்வி. அதை கூற மறுக்கிறீர்களே?

              • மனோஜ்,

                ஏற்றதாழ்வுகளை விட வறுமை ஒழிப்பு தான் முக்கியம் என்று கருதுகிறேன். inequality பற்றிய விவாதம் இறுதியில் அதீத வரி விதிப்பு, லைசென்ஸ் ராஜ்ஜியம், பொருளாதார முடக்கத்திற்க்கு தான் இட்டு சென்ற வரலாறு நம்மிடம் உள்ளது. அன்றும் ஏற்றதாழ்வுகளை அகற்றுவதே முக்கியம் என்று மிக மிக பலமான வாதங்கள் ஒலித்தன. 98 சதவீத உட்சபட்ச வருமான வரி விதித்தார் இந்திரா காந்தி. Monopoly act என்று பெரும் நிறுவனங்களின் அளவை, வளர்ச்சியை மிக கட்டுப்படுத்தினார். ஏற்றதாழ்வுகளை குறைத்து சமப்படுத்தும் உன்னத நோக்கம் !! ஆனால் ஏற்றதாழ்வும் குறையவில்லை. வறும்மையும் குறையவில்லை. ஊழல் தான் பெருகியது. Hence the tickle down effects of growth in reducing poverty is more important and relevant than the parrot cry of inequality. We Indians know our economic history (and effects of various socialistic policies) than any IMF economist. 70களில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட கொள்கைகள், அன்று பேசபட்ட வாதங்கள் (இன்று நீங்க பேசும் மார்க்சியம் எல்லாம் ஒன்றுமே இல்லை. நீர்த்து போன வடிவம் இன்று. அன்று ஆளும் காங்கிரஸ் கட்சியில், எதிர்கட்சிகளில், அரசு அதிகார வர்கத்தில், ஊடக்ங்களில், பல்கலைகழகங்களில், think tanksகளில், எங்கும் சோசியலிச, மார்க்சிய பார்வை மிக மிக மிக வலுவாக இருந்த காலம். அவை போலி என்று கிள்ம்பாதீக). 90களுக்கு பிறகு உருவான வளர்ச்சி நம் வறுமையை (சீனாவிலும் தான்) குறைத்த மாதிரி இதற்க்கு முன்பு சாத்தியமானதில்லை. ஏற்றதாழ்வு என்பது relative statistics தான். Absolute poverty and relative poverty ratiosதான் என்னை பொருத்தவரை முக்கியம். தாமஸ் பிக்கெட்டிக்கு இந்தியாவின் சமீபத்திய வரலாறு அவ்வளவாக தெரியாது / புரியாது. வேண்டுமானால் அவர் சொல்லும் புதிய சொத்து வரியை செயல்படுத்தி பாருங்க. cause and effect பற்றி அவருக்கு அனுபவ அறிவு பத்தாது. இன்று இங்கு யாரும் 70களில் (மேலே நான் இட்ட 11 அம்சங்களை) மீண்டும் கொண்டு வர சொல்லி போராடுவதில்லை. (அதீத வரி விதிப்பு உள்பட)

  3. Sooriyan,

    I wonder how you were employed as a Bank manager if you cannot even understand the basics of foreign exchange reserves, IMF bailouts and the distortions and suppression caused to Indian exports due to over valued and fixed currency systems. Until 1991, India had to periodically borrow dollars from IMF to tide over the balance of payments crisis (அப்படினா என்னவென்று தெரியுமா அய்யா ?) அய்.எம்.எஃப் இடம் இந்தியாவை அடமானம் வைக்கிறாக என்ற கூப்பாடு தொடர்ந்து ஒலித்தது. இறக்குமதி செய்ய போதுமான அன்னிய செலாவணி இல்லாமல் கடுமையான import license regimes, and the corruption around this regime which was a big story in those decades. அன்னிய முதலீடுகளை அனைத்து துறைகளிலும், பங்கு சந்தைகளிலு அனுமதித்த பின் தான் போதுமான அன்னிய செலவாணி இன்று 400 பில்லியன் அளவுக்கு சேர்ந்தது. 1991இல் வெறும் இரண்டு வார இறக்குமதிக்கு தேவையான அன்னிய செலவாணி மட்டுமே இருந்தது. தங்கத்தை அடமானம் வைத்து தற்காலிக் SDR (special drawing rights from IMF) வாங்கி சமாளிதது சந்திரசேகர் அரசு. இதை பத்தி ஒன்னும் உங்க வங்கி பயிற்ச்சிகளில் சொல்லி தந்ததில்லையா ?
    இன்று அதே அய்.எம்.எஃப் இடம் நாம் டாலர் டெபாசிட் செய்கிறோம். எப்படி ஆனது இந்த மாற்றம் ? மேலும் அன்னிய முதலீடுகள் புதிய தொழிற்சாலைகள், secondary suppliers chain, millions of employment in direct and indirect effects, new tax revenues, ripple effects, enabling good compnaines to raise capital in stock markets and from foreign PEs, FIIs, enabling growth and prosperity. இதை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாமல் தொடர்ந்து பேசும் முன்னாள் வங்கி மேலாளருடன் பேசுவது வீண் வேலை. இருந்தாலும் உம்மை விடப்போவதில்லை.

    சரி, பல வருடங்களுக்கு முன்பு இதை பற்றி நான் எழுதிய பதிவு இது :
    http://nellikkani.blogspot.in/2008/05/1991.html
    1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

    இந்த பதிவின் இறுதியில் ஒரு எளிய கேள்வி எழுப்பியிருக்கிறேன். பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
    இந்த 8 வருடங்களில் இதுவரை ஒருவராலும் முடிந்ததில்லை. I challenge you or any of the Vinavu comrades here to try.

    • //1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?///

      கிரீஸ் இப்ப திவாலாகிருச்சே அதுக்கு என்ன காரணம்?

      1991இல் இந்தியா திவாலாக்கூடாது என்பதற்காக புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன… புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதால் 2012-இல் கிரீஸ் திவாலாகிவிட்டது !!!

      இதுக்கும் இதே மாதிரி லின்க் போட்டு விளக்கிவிடாதீர்கள்… (தயவு செய்து சாதாரண மக்களுக்கு புரிகிற மாதிரி பேசவும்)

      சரி திவாலானா என்ன ? கிரகம் இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?

      • அதானே ? திவாலானா என்ன ? பட்டினி கிடந்தா என்ன ?

        ரஷ்யா திவாலாச்சே ? அர்ஜன்டைனா திவால் ஆச்சே ! வெனிசூலா திவாலாக போகுதே !

        • ஆமாண்ணே .. கரெக்டுண்ணே …

          இதெல்லாம் விட்டுட்டண்ணே …

          அமெரிக்கா திவாலாச்சே … கிரீஸ் திவாலாச்சே .. அடுத்து ஈ யூ திவாலாகப் போகுதே ..

          எல்லாத்தையும் கேளுண்ணே …

          எப்படி முதலாளிகளுக்கு கடிவாளம் போடாததால (முதலாளிகள் மீது சர்வாதிகாரம் செலுத்தாதனால்) ரஸ்யா, அர்ஜெண்டினா, வெனிசுலா, க்யூபா, அமெரிக்கா, கிரீஸ், ஈ யூ எல்லாம் திவால் நிலைக்கு எப்படிப் போச்சுன்னு நீயே உன் வாயால எடுத்துச் சொல்லுண்ணே இந்த வினவு கூட்டத்துக்கு.

          பொருளாதாரம் தெரியாத முட்டாப்ப் பசங்கண்ணே இவங்க .. நீ சொல்லுண்ணே .. நம்ம திவாலான கதைய…

    • I have asked three questions to you.You tried to browbeat me with some jargons just in one issue.You have asked me proof for several things and ridicule my knowledge on foreign exchange issues.Now you provide statistics for employment generated after 1991 just by having FII in stock exchanges.India improved its foreign exchange reserves mostly from remittances from NRIs. How many new factories were started due to FII?
      You are talking about new tax revenues.Why Nokia evaded taxes due to central as well as state govt?Why the industrial lobby is supporting the Vodofone on the tax issue?
      It is your habit to throw challenges and run away from the debate when some one provide conflicting views.What happened to your challenge about the tax concessions/subsidies given annually to big industrialists to the tune of Rs5.40 lakh crore?When I gave the statistics proving that concessions shown to the industrialists have not yielded any increase in manufacturing/or in employment generation,you ran away.Now,you have asked a new question.Let us see.

    • I have read your blog.Before answering your question,not only me but also all Vinavu readers would like to have a table of statistics-prior to 1991 and after 1991 from you about the bonanza of liberalization.DO not just write-ARASU GAJANA NIRAMBIYADHU,INDHIYAVIL ORUVAR PAAKKIYILLAMAL VELAI VAYPPU VAZHANGAPATTADHU,NALATHITTANGAL NIRAIVETRAPATTU VARUMAI OZHIKKAPATTADHU.YENGALUKKELLAAM SIRU VAYADHILEYE KAADHU KUTHIVITTAARGAL.UMMAI NEERE POTRIKOLLUM KATTURAYIL PULLI VIVARAM ILLAI PILLAAI.MUDHALIL PULLI VIVARATHAI KOORUM ADHANBIN UMMUDAYA SAVAALAI SANDHIKKIROM.
      Now,about the evil effects of liberalization.Have you read about the patent granted to an American company for producing medicine for hepatitis-c denying the opportunities to local manufacturers to produce generic medicine for the same disease not only for local use but for exports to African countries.Why compulsory licenses were not issued in this case and why the patent officers are being given training in USA?It is reported that the cost of one injection will be 1000 dollars and one course of 83 injections will cost 83000 dollars.Even American citizens cannot afford to buy this life saving medicine.Have you heard about India signing Logistic Supportive Agreement with USA recently which was not done during UPA regime?

  4. @அதியமான்

    //ஒரு எளிய கேள்வி எழுப்பியிருக்கிறேன். பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
    இந்த 8 வருடங்களில் இதுவரை ஒருவராலும் முடிந்ததில்லை///

    இதுக்கு பேரு என்ன? “Self acclaimed – Self Proclaimed Intellectual”-ன்னு சொல்லுவாங்களே அது இது தானா?

    //உங்களுக்கு ’சவுகரியமான’ சில வரிகளை மட்டும் உருவி, ஏதோ மொத்த நவ தாரளமய கொள்கைகள் அனைத்தையும் அய்.எம்.எஃப் நிராகரித்துவிட்டது போல்//
    //அனைத்தையும் ‘நிராகரித்தாக’ அய்.எம்.எஃப் எங்கும் சொல்லவில்லை. சொல்ல மாட்டார்கள்.//

    வினவு மொத்த நவ தாரளமய கொள்கைகள் அனைத்தையும் அய்.எம்.எஃப் நிராகரித்துவிட்டது என்று சொன்னதாக வெட்டி திரித்து சொல்வதற்கு ஆதாரம் கேட்டேன்…

    • /மொத்த நவ தாரளமய கொள்கைகள் அனைத்தையும் அய்.எம்.எஃப் நிராகரித்துவிட்டது என்று வினவு சொன்னதாக வெட்டி திரித்து சொல்வதற்கு ஆதாரம் கேட்டேன்…/

  5. முதலாளித்துவ ஆதரவாளர்கள் விழிபிதுங்கி நிற்கும் வகையில் தாராளாவாத கொள்கைகள் வழங்கியிருக்கும் பரிசுகளில் சில jobless growth, rural distress, Credit crisis in banks because of NPAs, Decline in export and real GDP, environmental issues, social unrest .. …………..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க