privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஊர் எல்லையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு ! ஊரெல்லாம் கடை திறப்பு

ஊர் எல்லையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு ! ஊரெல்லாம் கடை திறப்பு

-

1. ஊர் எல்லையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு! ஊரெல்லாம் கடை திறப்பு : இது அம்மாவின் மதுவிலக்கு!

anbil-shutdown-tasmac-struggle-1லால்குடி அன்பில் டாஸ்மாக் (கடை எண் 10506) ஏழு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு போதை ஊட்டும் இடமாக விளங்கி வந்துள்ளது. டாஸ்மாக் கடையினால் ஏற்பட்ட கொடுமையை சொல்லில் வடிக்க முடியாத அளவுக்கு பெண்களும், குழந்தைகளும் வேதனை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கூட்டுறவு ஒயின்ஷாப் என்கிற பெயரில் ஊருக்குள் இருந்ததை கடந்த காலங்களில் மக்கள் தொடர்ந்து போராடி அகற்றி உள்ளனர்.

அதிகாரிகள் தந்திரத்தால் ஊருக்குள் இருந்த கடை ஊர் வாசலில் அதாவது ஊர் முகப்பு வாயிலில் திறக்கப்பட்டது. கழுத்து வலி போயி முதுகு வலி வந்த கதையாக மாலை 6 மணிக்கு மேல் ஆண்கள், பெண்கள் என குடிக்காத மக்கள் நிம்மதியாக அவ்வழியே சென்று வர முடியாது. சின்ன, சின்ன வாய் சண்டை, நாய் சண்டைகளுக்கெல்லாம் உடனடியாக சரக்கை வாங்கி ஊத்திக்கிட்டு வந்து பெரும் பிரச்சினையாக்கி விடுவார்கள்.

இதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல வித கோரிக்கைகள் வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இந்த சூழலில் தான் மக்கள் அதிகாரம் தமிழகமெங்கும் “மூடு டாஸ்மாக்கை” என இயக்கம் எடுத்து வந்ததும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியதும் இப்பகுதி மக்களுக்கு தெரிந்து நம்மை தொடர்பு கொண்டனர். மேலும், இப்பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக கொள்ளிடம் ஆற்று பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து போராடி மணல் கொள்ளையை தடுத்து உள்ளதாலும் அந்த இயக்கத்தினரும் நமது போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தனர். மக்கள் அதிகாரம், ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு தோழர்களுடன் இணைந்து வீதிதோறும், வீடுதோறும் மக்களை சந்தித்து போராட அழைப்பு விடுக்கப்பட்டது.

anbil-shutdown-tasmac-struggle-2தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் நடத்திய மே 5 முற்றுகை போராட்டத்தின் ஒரு பகுதியாக அன்பில் பகுதியிலும் 500-க்கும் மேற்பட்ட மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

ஆண்களும், பெண்களும் திரண்டு நின்றதும், போலீசாரின் அரட்டல், மிரட்டலுக்கு பயப்படாமலும் பேச்சு வார்த்தை மூலம் போராட்டத்தை நீர்த்து போக செய்ய முயன்ற தாசில்தாரையும் உறுதியாக எதிர்த்து நின்று விரட்டியடித்தனர். அதன் பின் அனைவரையும் கைது செய்வோம் என போலீஸார் கொடுத்த நெருக்கடியை மீறி போராடி கைதாகினர். அன்று இரவு 8 மணி வரை போலிஸாருக்கு பெயர், முகவரி என தராமல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்தனர். மாலை நேரத்தில் மாவட்ட உதவி ஆட்சி தலைவர் வந்து சினிமா கதாநாயகன் பாணியில் வந்து நீட்டி முழங்கினார். அவர் முகத்திலும் கரியை பூசும் விதமாக கடையை மூடும் வரை தொடர்ந்து போராடுவோம் என உறுதியாக மக்கள் நின்றனர். வேறு வழி இன்றி இரவு 8 மணிக்கு அனைவரையும் விடுவித்தனர்.

anbil-shutdown-tasmac-struggle-310 நாட்களுக்குள் கடையை மூட முயற்சி எடுக்கிறோம் என அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர். அதன்படி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறி கடித நகலையும் ஒப்படைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் திருவிழா, ஆட்சி பொறுப்பை மீண்டும் ஏற்ற ஜெயலலிதா 500 கடையை மூடுவதாக அறிவித்ததில் அன்பில் கடை திருச்சி மண்டலத்தில் முதன்மையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மக்களின் உணர்வு பூர்வமான போராட்டமும், மக்கள் அதிகாரத்தின் உறுதியுமே ஜெயாவை இக்கடையை மூட வைத்துள்ளது.

கடை மூடப்பட்ட செய்தி வந்ததும் மக்கள் மகிழ்ச்சியை பறிமாறி கொண்டதும் மக்கள் அதிகாரத்தை வாழ்த்தியதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

anbil-shutdown-tasmac-struggle-4ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்கு முன்னரே சில இடங்களில் போலிஸார் உதவியுடன் சிலர் டாஸ்மாக் சரக்குகளை கூடுதல் விலைக்கு சப்ளை செய்து வருகின்றனர் என்ற தகவலையும் மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

படிப்படியாக மதுவிலக்கு என்ற ஜெயாவின் போங்காட்டம் அன்பிலில் பலித்தது. ஊர் எல்லையில் இருந்த கடையை அகற்றி ஊர் முழுக்க உள்ளுர் கட்சிகாரர்கள், ரௌடிகள் போலிஸ் பாதுகாப்புடன் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

மக்கள் அரசை எதிர்த்து விரட்டிவிட்டோம் ஆனால் ஊருக்குள் விற்பவர்கள் சாதிக்காரர்களாகவும், பணக்காரர்களாகவும், ரௌடிகளாகவும் உள்ளனர். இவர்களை எப்படி வீழ்த்துவது என அடுத்த கட்ட போராட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மக்கள் என்றால் மக்கள் அதிகாரம் இல்லாமலா! இவர்களுடன் களத்தில் மீண்டும் போராட ஆயுத்தமாகி வருகின்றோம். அரசு ரௌடிகளை எதிர்த்து அனுபவப்பட்ட நமக்கு அன்பில் ரௌடிகளை எதிர்ப்பது பெரிய சவாலாக இருக்க போவது இல்லை!

செய்தி:
மக்கள் அதிகாரம்,
திருச்சி கிளை.

2. சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க