உணவு இருக்கிறது
உலகத்துக்கே சோறு போடலாம்
குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள்
ஏன்
நாம் இத்தனைப் பேர் இருக்கிறோம்
ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள்
ஏன்
கொல்வதற்குக் குறி பார்க்கும்
ஏவுகனைகள்
அமைதிப் படைகள் என்று
அழைக்கப்படுகின்றனவே
ஏன்
ஒரு பெண்ணிற்கு
சொந்த வீட்டில் கூட பாதுகாப்பில்லையே
ஏன்
வெறுப்புக்குப் பொருள் அன்பு
போருக்குப் பொருள் அமைதி
இல்லையென்பதன் பொருள் ஆம்
நாமோ
சுதந்திர மனிதர்களாம்!
இதற்கெல்லாம் பதில் சொல்லாமல்
தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.
எத்தனை கேள்விகள்
எத்தனை முரண்பாடுகள்!
இதற்கு விடை தேடுவோர்
உண்மையைத் தேடுவோர்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
பதில் சொல்லாமல் தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.
கண்ணை இறுக்கும் கட்டுகள் அறுத்து
குருடர்கள்
பார்க்கப் போகிறார்கள்.
ஊமைகள்
பேசப் போகிறார்கள்
உண்மையைப் பேசப் போகிறார்கள்
பதில் சொல்லாமல் தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.
– டிரேஸி சாப்மன், அமெரிக்கக் கறுப்பினப் பாடகி
புதிய கலாச்சாரம், ஜூலை 2000.
https://youtu.be/K-WpxSrmV4Y
உணவு இருக்கிறது
//உலகத்துக்கே சோறு போடலாம்
குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள்
ஏன்
நாம் இத்தனைப் பேர் இருக்கிறோம்
ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள்
ஏன்//
வறுமையையும், சமூக அவலத்தையும் இதை விட சுலபமான வரிகளில் சொல்ல முடியாது. இரண்டு வரி திருக்குறளை மிஞ்சியது இந்த இரண்டு வரி கவிதை நடை.