இந்திய அரசின் உத்தரவோடு காஷ்மீரில் சமீபகாலமாக இராணுவம் நடத்திய தாக்குதலில் 45-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் இந்திய இராணுவம் பெல்லட் கன் (pellet gun) எனப்படும் காற்று துப்பாக்கியின் (Air Gun) மூலம் சிறு குண்டுகளை பயன்படுத்தி காஷ்மீர் மக்களை ஒடுக்கியுள்ளது. இதனால் பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் “இந்த 4 நாட்களில் மட்டும் நாங்கள் 100 கண் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளோம்” என்று கூறுகின்றனர். மேலும் சிகிச்சை மேற்கொண்ட அனைவரும் தங்களின் கண் பார்வையை இழக்க நேரிடும் என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத மூத்த மருத்துவர் அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.
காஷ்மீரில் முதன்முதலில் பிரிட்டிஷ் காலத்தில் வாத்து வேட்டையில் (Duck-Hunting) அறிமுகப்படுத்தப்பட்ட இத்தகைய பெல்லட் துப்பாக்கிகள் ஒரு முறை சுடும் போது அதிவேகத்தில் சுமார் 600 சிறு குண்டுகளை வெளியிடும். இதனால் எதிரில் உள்ளவர்கள் மீது சரமாரியாக தாக்கும் இச்சிறு குண்டுகள் ஆர்ப்பாட்டக்காரர்களை செயலிழக்க வைத்துவிடும். இந்த தாக்குதல் முறை நீண்டகாலமாக இந்திய இராணுவத்தால் காஷ்மீரில் போராட்டத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு இது பயன்படுவதாக காஷ்மீர் போலீசார் கூறுகின்றனர். அதை மறுக்கும் போராட்டக்காரர்கள் இக்குண்டுகள் பொதுமக்களின் கண்களை இழக்க செய்கின்றன, அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். தற்போது இக்குண்டினால் 4 வயது சிறுமி உள்பட பல குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையை இரகசிய பிரிவு போலிசார் சுற்றி வருவதால் குண்டடிப்பட்டு சேர்க்கப்படும் இளைஞர்களின் விவரங்களை பெற்று பின்னர் தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்டோரின் பெயர் மற்றும் உண்மை தகவல்களை குறிப்பிடாமல் எண்களை கொண்டு நோயாளிகளை அடையாளம் காண்கின்றனர்.
புட்கம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவன்,” நான் என்னுடைய அம்மாவிற்கு மருந்து வாங்க வெளியில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று இராணுவ வீரர்கள் என்னை சூழ்ந்து கொண்டு பெல்லட் குண்டுகளால் சுட்டனர். இத்தனைக்கும் அப்போது கலவரம் எதுவும் நடைபெறவில்லை”, என்கிறார்.
கண்டேர்பல் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது தமன்னா அஷ்ரஃப், பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது இரைச்சலுடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது என்று அவளின் தாய் ஷமிமா கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அவளுடைய இடது கண்ணில் சிறு இரும்பு குண்டை பார்த்ததும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயலுகையில் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டோம். அப்போது இவர்கள் என்னுடைய குழந்தையின் வாழ்க்கையோடு ஏன் விளையாடுகிறார்கள் என்று நான் அழ தொடங்கினேன். அதிர்ஷ்டவசமாக அன்று எங்களால் மருத்துவமனைக்கு வர முடிந்தது ”.
செய்தி, படங்கள்,நன்றி: அல் ஜசீரா -Al Jazeera
தமிழாக்கம்: கலா
காஷ்மீர் (இந்தி)யாவின் ஒரு பகுதி என காவிகளும் இல்லை அது (பக்கி)ஸ்தானுக்கு செந்தம் என கூறும் பச்சைகளும் சண்டை போடும் முட்டாள்களுக்கு தெரியவில்லை மண்ணின் மைந்தனுக்கு செந்தம் என்று ஈழ மக்களை கொண்ற சிங்கள ராணுவம் போல்தன் இந்த இந்த இந்தி யா காவி ராணுவம்
ராணுவம் (காவி ) என்று கூறுவதுக்கு பதில் கொலைகாரன்,கொள்ளைகாரன், கற்பழிக்கும் கொடிய விலங்கு என கூறாலம்
இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரும் இந்தக் கொடூரம். உலக நாடுகள்…. மனித உரிமை அமைப்புகள் …… கை கட்டி; எட்டி நின்று பார்த்து; வாளாதிருப்பது ஏன்? மனித உயிர் இன்று அவ்வளவு மலிவாகிப் போனது எதனால்? இதுவும் உலக முதலாளித்துவத்தின் வெளிபாடா?