privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்126 வழக்கறிஞர் நீக்கம் : தொடங்கியது உயர்நீதிமன்ற முற்றுகை !

126 வழக்கறிஞர் நீக்கம் : தொடங்கியது உயர்நீதிமன்ற முற்றுகை !

-

ஜூலை 25 முற்றுகைப் போர் வெல்லட்டும்!
வழக்குரைஞர் வாய்ப்பூட்டு சட்டம் தகர்த்தெறியப்படட்டும்!

—————————————————————————

நீதிபதிகள் மன்னர்கள் அல்ல!
வழக்குரைஞர்கள் அடிமைகள் அல்ல!

ஜூலை 25, 2016
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……
சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்

அன்பார்ந்த வழக்குரைஞர்களே!

வழக்குரைஞர் சட்டம், 1961 பிரிவு 34(1)-ன் கீழ் சென்னை உயர்நீதிமன்ற அறிவிக்கை செய்துள்ள திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களாக நாம் போராடு கிறோம். நீதிமன்ற புறக்கணிப்பால் அனைத்தையும் இழந்து துவண்ட போதும் மானம் காக்க ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடி வருகிறோம். 41 வழக்குரைஞர்களின் சட்டவிரோத இடைநீக்கத்தினால் நாம் பயந்து பின்வாங்கி விட்டோம் எனும் நிலையினை தகர்த்து அனைத்து வழக்குரைஞர்களும் ஒரணியில் நிற்கின்றோம்.

IMG_20160725_074751ஜூன் 6 வழக்குரைஞர்கள் பேரணியினை MHAA அறிவித்த மாத்திரத்திலேயே தலைமை நீதிபதி பேச்சு வார்த்தைக்கு தயார் எனக் கூறினார். பேசப் போனால் நிறுத்தி வைக்கவோ, திரும்பப் பெறவோ முடியாது, சில திருத்தங்களை வேண்டுமென்றால் செய்யலாம் என பதிலளித்தார். தமிழகம் தழுவிய வழக்குரைஞர்களின் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதிகளின் முழு அவை கூடி புதிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனத் தீர்மானம் இயற்றியது, புதிய விதிகளை அரசிதழில் வெளியிட்டு, நடைமுறைக்கு கொண்டு வந்த பின் நீதிபதிகளின் முழு அவை தீர்மானத்திற்கு என்ன சட்ட அங்கீகாரம் உள்ளது. இதனால்தான் MHAA-ன் பொதுக்குழு முடிவின்படி நீதிமன்ற புறக்கணிப்பு, போராட்டங்கள் என உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட போதுதான் திருத்தங்கள் ஆய்வு செய்ய நீதிபதிகளின் ஐவர் குழு அறிவிக்கப்பட்டது. அக்குழுவும் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட திருத்த விதிகளில் மாற்றங்கள்-திருத்தங்கள்தான் செய்யுமாம். வழக்குரைஞர் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமலேயே உச்சநீதிமன்றத் தீர்ப்பினை தங்களது வசதிக்கேற்ப வியக்கியானம் செய்து விதிகளை நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால் இப்போதோ போராட்டத்தை கைவிட்டு வாருங்கள்; கருத்து கூறுங்கள்: தேவைப்பட்டால் திருத்தம் செய்கிறோம் என்று கூறினால் ஏற்க முடியுமா என்ன?

பல இலட்சம் வழக்காடிகளின் வழக்குகள் பாதிப்படைந்துள்ள நிலையிலும், ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்கள் தொழிலற்ற நிலையிலும் தலைமை நீதிபதி தன்னுடைய பிடிவாதத்தினை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றார். வழக்குரைஞர் சங்க பிரதிநிதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியினை கடந்த வாரம் சந்தித்த போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தமிழக நீதிபதிகளிடம் இப்பிரச்சினை சுமூகமாக பேசித் தீர்க்க அறிவுறுத்துவதாகக் கூறியுள்ளார். ஆனால் இன்று வரை பேச்சுவார்த்தைக்கு தலைமை நீதிபதி அழைக்கவேவில்லை. பொது மக்கள் பாதிக்கப்படுவது பற்றியோ, வழக்குரைஞர்கள் அவதிக்குள்ளாவது பற்றியோ அவர்கள் கவலையில்லாமல் இருக்கின்றனர். நம்மால் அப்படி இருக்க முடியுமா என்ன?

IMG_20160725_075402நம் போராட்ட பாராம்பரியம் வலிமையானது. பல ஆண்டுகளுக்கு பின் MHAA வழக்குரைஞர்களும், தமிழகத்தின் இதர வழக்குரைஞர்களும் ஒரணியில் அணிவகுத்து உள்ளோம். வழக்குரைஞர்களின் போராட்டத்தால் வாழ்வு பெற்ற MBA தலைமையை தவிர பெரும்பாலான MBA வழக்குரைஞர்கள் நம் பக்கம்தான். இது இறுதிச்சுற்று. உயர்நீதிமன்றத்தினை முடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதிலுமிருந்து வழக்குரைஞர்கள் ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வர இருக்கிறார்கள். அடிமை சாசனத்தினை முறியடிக்க ஆர்ப்பரித்து சென்னை உயர்நீதிமன்றத்தினை முற்றுகையிட உள்ளார்கள்.

——-

• MHAA-வின் போராட்ட பாராம்பரியத்தினை உயர்த்தி பிடித்து உயர்நீதிமன்ற முற்றுகைப் போரில் ஆயிரக்கணக்கில் முன் நிற்போம்!

• முற்றுகைப் போர் வெல்லட்டும்!

• வழக்குரைஞர் வாய்ப்பூட்டு சட்டம் தகர்த்தெறியப்படட்டும்!

———–

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம்
Madras High Court Advocates’ Association(MHAA)
_______________________

புதிய சட்டத் திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறு எனும் உரத்த குரலில் தொடரும் வழக்கறிஞர் போராட்டத்தில் கடந்த 20ந் தேதியன்று பார் கவுன்சில் மற்றும் தலைமை நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் மூத்த வழக்கறிஞர் திருமலைராஜன் பேட்டியளித்திருந்தார்.

IMG_20160725_085524
இன்று 25.06.2016 காலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குழுமிய வழக்கறிஞர்கள்.

இதற்கிடையில், 22ந் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிபதிகளிடம் சென்னையில் மூத்த வழக்கறிஞர்களுடன் இருநூறு வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய சட்டத் திருத்தம் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தவறு என விவாதித்தனர்.

இன்று அனைத்திந்திய பார் கவுன்சில் போராட்டத்தில் முன்நின்று போராடிய 126 வழக்கறிஞர்களை அராஜகமாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஆகையால், திருமலைராஜன் அவர்களுடைய பேட்டியை வெளியிடுகிறோம்.

நாளை நடக்கும் முற்றுகை போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தி, புதிய சட்டத் திருத்தத்தை முறியடிப்போம்.

-PRPC, சென்னை.

————–

20 ஜூலை அன்று சன்நியூஸ் தொலைக்காட்சியில் பார் கவுன்சில் தலைவர் செல்வத்தின் அறிவிப்புக்கு பிறகு வழக்கறிஞர்கள் போராட்ட கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜனிடம் வழக்கறிஞர் போராட்டம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்

(முழு தொகுப்பு)

——-

சன் நியூஸ் கேள்வி 1:

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்வழக்கறிஞர்கள் வருகிற 22 ஆம்தேதிக்குள் போராட்டத்தைகைவிட்டு நீதிமன்றத்திற்குசெல்லவில்லை என்றால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பார் கவுன்சில்தலைவர் செல்வம் இறுதிஎச்சரிக்கை விடுத்து நோட்டீஸ்அனுப்பியுள்ளார். அதை ஒருவேண்டுகோளாக பார்க்கிறீர்களா? அல்லது மிரட்டலாக கருதுகிறீர்களா?
மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்

பார் கவுன்சில் தங்கள் அதிகாரம் எது என்று தெரியாமல் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அவர்கள்ஏன் இந்த சட்டத்திற்கு ஒப்புதல்அளித்தார்கள் என இதுவரை விளக்கவும் இல்லை . 34, 35 இந்தஇரண்டு சட்டப்பிரிவுக்கும்வேறுபாடு தெரியாமல்,பார்கவுன்சில் தலைவர்கள் தடுமாறிக் கொண்டிருப்பது தான்உண்மை. இந்த ஜனநாயகவிரோதமான சட்டத்தை தமிழகவழக்கறிஞர்கள் மீது புகுத்துவதைபற்றி பார் கவுன்சில் தலைவர்கள்முதலில் விளக்கம் அளிக்கவேண்டும். பார்கவுன்சில்எங்களுக்கு ஆதரவுதெரிவிக்கிறார்களா? அல்லது சட்டவிரோதமாக செயல்படும் தலைமைநீதிபதிக்கு ஆதரவாகஉள்ளார்களா? என்பதை தெரிவிக்கவேண்டும். அதன் பின்னர்தான்எங்களிடம் சமாதானபேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும். அதை விடுத்துமிரட்டுவது என்பதுவழக்கறிஞர்களிடம் எடுபடாதுஎன்பதைதெரிவித்துக்கொள்கிறோம்.
———

சன் நியூஸ் கேள்வி 2:
40 நாட்களை கடந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பொதுமக்கள் சம்பந்தமான வழக்குகள் பாதிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகூறியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதன் பின்னர் போராட்டம் அவசியம் தானா?
மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்திரவாதம் கொடுத்த பின்னர் உயர்நீதிமன்ற தலைமை இதைபற்றி வாயை திறக்கவே மறுக்கின்றார். நாங்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விண்ணப்பம் கொடுத்து ஒன்ரை மாதங்கள் ஆகிறது. இதுவரை எங்களை எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. பேசுவதற்கே பெரிய போராட்டம் நடத்த வேண்டிஉள்ளது. பார்கவுன்சில் தேர்தலில் எங்களிடம் வாக்கு வாங்கி வெற்றிபெற்று தலைவர்கள் ஆனவர்கள்,எப்படி எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பது புரியவில்லை. போராட்டங்களால் வழக்காடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தற்காலிகம் தான். உண்மையில் இந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் வழக்காடிகளுக்கு நன்மை பயக்காது மாறாக நெருக்கடிதான் ஏற்படும், கடுமையான “Hot Atmosphere” போன்ற சூழல் நீதிமன்றத்திற்குள் நிலவும். பார்கவுன்சில் தலைவர்கள் இதைப் புரிந்து கொண்டு தலைமை நீதிபதியிடம் விளக்கமாக கூற வேண்டும்.

————–

சன் நியூஸ் கேள்வி 3:
நீதித்துறை நிர்வாகத்திற்கும், பார் கவுன்சிலுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் , வழக்கிற்காக வரும் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது நியாயம்தானா?

மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
நாங்கள் நியாயம் என சொல்லவில்லை. அநியாயமாக வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கு சட்டதிருத்தத்தை கொண்டு வந்ததற்கு பார்கவுன்சில் தான் காரணம் என நினைக்கிறோம். பார்கவுன்சில் ஒழுங்காக இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என்பது எங்கள் கருத்து. இப்படி ஒரு சட்டம் அமலுக்கு வருகிற போது வழக்கறிஞர்களுக்கே அது தெரியவில்லை, இந்த சட்டத்தை இயற்றுவதற்கு முன் வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்க வேண்டுமா? எங்களிடம் ஓட்டு வாங்கி வந்த பார்கவுன்சில் தலைவர்கள் வழக்காடிகளுக்கும் விரோதமாகும் இந்த சட்டத்திருத்ததிற்கு ஏன் ஒப்புதல் அளித்தார்கள்? என்பதை விளக்கமாக சொல்ல வேண்டும்.

—–

சன் நியூஸ் கேள்வி 4:
இந்த சட்டதிருத்தத்தை ஆய்வு செய்வதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவாக மாற்றப்பட்டிருக்கிறது, அதில் முறையிடலாம். அவர்கள் தங்கள் பணியை தொடங்கி இருக்கிறார்கள். உங்களுடையை கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் ஏன் இப்படி ஒரு போராட்டம் நீடிக்கிறது?

மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
மன்னிக்கவும், அந்த குழுவில் உள்ள ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஏற்கனவே இந்த சட்டதிருத்ததிற்கு ஒப்புதல் வழங்கியவர்கள். அவர்களிடம் போய் பேசினால், எப்படி வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கும்?

——

சன் நியூஸ் கேள்வி 5:
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனபதுதான் வழக்கறிஞர்களின் பிரதான கோரிக்கையா?

மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
இல்லை. அனுமானத்தில் பேச முடியாது, அதற்கான நடவடிக்கை வேண்டும். வழக்கறிஞர்கள் நீதித்துறை காப்பாற்றுவதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதித்துறையை அழிப்பதற்காகவே தயாராகி விட்டார்கள். அவர்கள் யார் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை, நடைமுறையிலேயே தெரிந்து கொள்வீர்கள். ஆனால் நீதித்துறையை காப்பாற்ற வேண்டிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எந்தவொரு முயற்சி எடுக்க வில்லை. இது வருத்ததிற்குரியது.

——

சன் நியூஸ் கேள்வி 6:
அப்படியானால் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா?

மூத்த வழக்குரைஞர் திருமலைராஜன்:
வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கிறது. 65000 வழக்குகள் நடக்காமல் தேங்கி உள்ளது. 99 சதவீதம் நீதிமன்றம் இயங்குகிறது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகிறார், இது பார்கவுன்சிலுக்கு தெரியாதா?

இந்த சட்டதிருத்ததின் மூலம் வழக்கறிஞர்களுக்கு என்ன பிரச்சினை? எப்படி வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும் அநீதியாக மாறும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிந்து கொள்ளாமலேயே பல பேர் பார் கவுன்சிலில் உள்ளனர், வழக்கு நடத்துவதற்கு தொடர்பே இல்லாதவர்கள், நீதிமன்றத்திற்கு செல்லாதவர்கள் வழக்கறிஞர்களை மிரட்டுகிறார்கள்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

-PRPC, சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க