privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள்

இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள்

-

ந்தியாவில் மருத்துவ தொழிலில் ஈடுபட்டிருக்கும் அலோபதி மருத்துவர்களில் 31% பேர் பத்தாம் வகுப்பை வரை மட்டுமே படித்தவர்கள் எனவும் 57% சதவீத மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த எவ்வித தகுதியும் கிடையாது எனவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

Doctors
மொத்த சுகாதார ஊழியர்களில் 23.3% பேர் தான் மருத்துவ துறைக்கான தகுதிகளோடு இருக்கிறார்கள்.

இந்தியாவில் செயல்படும் பல்வேறு வகையான மருத்துவ ஊழியர்கள், அவர்களின் கல்விதகுதி, திறமை, கிராம மற்றும் நகரங்களில் செயல்படும் மருத்துவ ஊழியர் விகிதாச்சாரத்தின் ஏற்றத்தாழ்வு, மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு, மருத்துவ ஊழியர்களின் ஆண் பெண் விகிதம் உள்ளிட்ட பல வகையான ஆய்வு முடிவுகளை “இந்தியாவின் சுகாதாரத்துறை ஊழியர்கள்” (The Health Workforce in India) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம். அதில் தான் மேற்கண்ட அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மொத்த சுகாதார ஊழியர்களில் மருத்துவர்கள் 39.6%, செவிலியர்கள் 30.5%, பாரம்பரிய மற்றும் நாட்டுவைத்தியர்கள் 0.6%, டயட்டீசியன், பிசியோதெரபி உள்ளிட்ட பிற மருத்துவ ஊழியர்கள் 17%, மருந்தக ஊழியர்கள் 11.2% இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் சேர்த்து தான் சுகாதார ஊழியர்கள் என உலக சுகாதர நிறுவனம் கணக்கிடுகின்றது.

இதில் மொத்த சுகாதார ஊழியர்களில் 23.3% பேர் தான் மருத்துவ துறைக்கான தகுதிகளோடு இருக்கிறார்கள். 51.4% பேர் இடைநிலை கல்வி அதாவது 10-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார்கள்; 5.8 %பேர் டிப்ளமோ முடித்திருக்கிறார்கள்; 37.4% பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்கள்;8.1% பேர் பட்ட மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள். இதில் குறிப்பாக அலோபதி மருத்துவர்களின் தகுதி மட்டும் தனியாக முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ளோம்.அதாவது அலோபதி மருத்துவர்களில் தகுதியானவர்கள் 42.7% மட்டுமே. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மொத்தமாக கணக்கிட்டால் அதில் துறை சார்ந்த தகுதியுள்ளவர்கள் 29.7% மட்டுமே. அலோபதி அல்லாத பிற(ஆயுர்வேத(60.1%,யுனானி(45.8) உள்ளிட்ட) மருத்துவர்களில் 52.8% மட்டுமே தகுதியானர்கள்.

Doctors1
பெரும்பாண்மையான மக்கள் அதாவது 72.2% மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் 40.8% மட்டுமே சுகாதர பணியாளர்கள் செயல்படுகின்றனர்.

ஆக மொத்தத்தில் இந்தியாவில் செயல்பட்டு வரும் சுகாதார ஊழியர்களில் துறை சார்ந்த தகுதியுள்ளவர்கள் 23.3% மட்டுமே என இவ்வாய்வறிகை அதிர்ச்சியளிக்கிறது. மொத்தத்தில் மருத்துவ ஊழியர்களின் தரம் இதுவென்றால் இதில் கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவர்களின் நிலை இன்னும் மோசமானது. இதைவிட கொடுமையானது தகுதியற்ற மருத்துவர்களையும் சேர்த்து கணக்கிட்டால் கூட இந்தியாவில் அதிக மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை நகரங்களைவிட மிகக் குறைவாக இருக்கிறது.

மொத்த மக்கள் தொகையில் 27.8% பேர் வசிக்கும் நகர்புறங்களில் மொத்த சுகாதார பணியாளர்களில் 59.2% செயல்படுகின்றனர். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் அதாவது 72.2% மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் 40.8% மட்டுமே சுகாதர பணியாளர்கள் செயல்படுகின்றனர். லாபத்தை நோக்காக கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தில் மக்களின் தேவையை விட செலவழிக்கும் ஆற்றல் தான் பிராதானமாக பார்க்கப்படுகிறது.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் எக்காலத்திலும் வறுமை சூழ்ந்த கிராமப்புறங்களில் அமைக்கமாட்டார்கள். அதே சமயத்தில் தனியார்மயத்தின் கொள்கைகளினால் அரசும் சுகாதரம் வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதும், அரசு மருத்தவமனைகளை பராமரிக்காமல் இருப்பதும் மேற்கண்ட இடைவெளியை அதிகப்படுத்தியிருக்கிறது. ஆக கிராமப்புற மக்கள் ஓரளவு தரமான சிகிச்சைக்காக பல நூறு கிலோ மீடடர்கள் பயணித்து நகர் பகுதிகளுக்கு வரவேண்டியிருக்கிறது. 2015-ல் வெளியிடப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக (National Sample Survey Office (NSSO) புள்ளிவிவரப்படி கிராம்ப்புற மக்களின் மொத்த இரவு பயணங்களில் 48% சதவீத பயணங்கள் நகர்புற மருத்துவமனைகளை நோக்கியதாகவே இருப்பதாக தெரிவிக்கிறது.

ரீட்டா
ரீட்டா

இதைவிட கொடுமையானது மாதகணக்கில் ஏன் வருடக்கணக்கில் கூட மருத்துவமனை வாசலில் மருத்துவர்களின் சந்திப்புக்காக(appointment) காத்துகிடக்கிறார்கள் கிராமப்புற மக்கள். இது குறித்த கள ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளது indiaspend.com. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையின் நேரம்(அப்பாயிண்ட்மென்ட்) கோரி டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் பாதையோராங்களில் பல நூறு குடும்பங்கள் பல மாதங்களாக காத்திருக்கும் அவலம் தெரியவந்துள்ளது. தனது 9 மாத குழந்தையின் தீராத பிரச்சனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என 6 மாதமாத காத்திருக்கும் முகம்மது கலாமுதீனுக்கு தற்போது தான் எப்போது சந்திக்க வரவேண்டும் என்ற தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு ஆண்டு கழித்து தான் தேதி ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த 6 மாதமும் தற்காலிகமாக தங்கியிருந்ததை சேர்த்தால் ரூபாய் 60,000த்திற்கும் மேல் செலவழித்துள்ளார் கலாமுதீன்.

தனது கணவருக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்காக மருத்துவர் நேரம் (அப்பாயிண்ட்மென்ட்) கோரி 75 நாட்களாக எய்ம்ஸ் வாசலின் பிளாட்பாரத்தில் காத்திருக்கிறார் பீகாரிலிருந்து வந்திருக்கும் ரீட்டா. உத்திரபிரதேசத்தின் சமளி 1 வருடமாக உத்திரபிரதேசத்திற்கும் டெல்லி எய்ம்ஸ்க்கும் அலைந்துகொண்டிருக்கிறார். இப்படியாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் சுமார் 200 முதல் 300 குடும்பங்கள் காத்துக் கிடக்கிறார்கள். தன்னார்வலர்கள் குறிப்பாக சீக்கியர்கள் வழங்கும் உணவில் இவர்கள் உயிர்வாழ்கிறார்கள். மறுகாலனியாக்க கொள்கைகளினால் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதையே கண்டுகொள்ளாத அரசு இதை எப்படி கண்டுகொள்ளும்? கிராமப்புறங்களில் அரசு பொது மருத்துவத்தையும் சீரழித்ததன் விளைவு தான் மக்கள் உயிரை கையில் பிடித்துகொண்டு டெல்லி குளிரில் நடைபாதையில் தங்கியிருக்கிறார்கள்.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் சுமார் 200 முதல் 300 குடும்பங்கள் காத்துகிடக்கிறார்கள். தன்னார்வலர்கள் குறிப்பாக சீக்கியர்கள் வழங்கும் உணவில் இவர்கள் உயிர்வாழ்து கொண்டிருக்கிறார்கள்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் சுமார் 200 முதல் 300 குடும்பங்கள் காத்துகிடக்கிறார்கள். தன்னார்வலர்கள் குறிப்பாக சீக்கியர்கள் வழங்கும் உணவில் இவர்கள் உயிர்வாழ்து கொண்டிருக்கிறார்கள்.

“நல்ல வேளையாக சிலர் வார வாரம் உணவு தருவார்கள். அதனால் நாங்கள் ஓரளவு தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் வராத நிலையில் தினமும் 30 ரூபாய் செலவு செய்யவேண்டியிருக்கும்” என்கிறார் கலாமுதீன். 6 மாத கைக்குழந்தையை வைத்துகொண்டு தினம் 30 ரூபாய் செலவிலும், இலவச உணவிலும் மெட்ரோ நடைபாதையில் வசித்துவருகிறார்.

அதே சயமத்தில் உலகத்திலேயே மருத்துவ சுற்றுலாவில் இந்தியா வளர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு பல நூறு மைல் பயணத்தையும், எய்ம்ஸ்மருத்துவமனையின்  பிளாட்பாரமும் கொடுத்திருக்கும் மறுகாலனியாக்கம் வசதிபடைத்தவர்களுக்கு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளின் குளுகுளு ஏசி அறைகளில் தங்கி சிகிச்சை பெறுவது பணக்கார இந்தியர்களுக்கு சாத்தியமாகியுள்ளது.

மேற்கண்ட கள ஆய்வு தற்போது வெளியாகியிருக்கும் சுகாதார ஊழியர்கள் குறித்த புள்ளிவிவரத்தின் நடைமுறை பாதிப்புகளை உணர்த்துவதாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு என்பது கிராமம் நகரம் என்று மட்டுமில்லாமல் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாநிலங்கள், மாவட்டங்களிலும் காணக்கிடைக்கிறது. மேகாலயாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 28 மருத்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அருணாச்சலபிரதேசம்(32.5) நாகாலந்து (35.6), ராஜஸ்தான் (55.1) மோடியின் குஜராத் (63.4), பீகார் 52.6%,தமிழ்நாடு (72) என தேசிய சாராசரியை விட பினதங்கியிருக்கிறது. அதே சமயத்தில் லட்சம் பேருக்கும் சண்டிகர் (280),, டெல்லி 197, பஞ்சாப் 134, மேற்குவங்கம் (101), கேரளா (99) என மருத்துவர்கள் விகிதம் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டை எடுத்துக்கொண்டால் ஒரு லட்சம் மக்களுக்கு 80மருத்துவர்களும், 61 செவிலியர்களும் என்ற அளவில் தான் இருக்கிறது. இதுவும் தகுதியற்ற மருத்துவர்களையும் கணக்கில் சேர்த்துகொண்டால் தான். அவர்களை கழித்தால் இந்த விகிதம் இன்னும் 10 மடங்கு குறையும். இது தான் இந்திய சுகாதரத்தின் லட்சணம்.

hospitalஇந்த பின்னணியில் தான் மோடி அரசு 2014-15 பட்ஜெட்டில் சுதாரத்துக்கான செலவை 20% குறைத்துள்ளது.அதாவது ரூ 30,645 கோடியிலிருந்து ரூ 24,549 கோடியாக குறைத்துள்ளது. மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என அரசு புதிய விளக்கம் கூறியது. அதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. அரசின் புள்ளிவிவரப்படியே கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை மூன்று மடங்காக அதிகரித்து 200%த்தை தாண்டியுள்ளது;

திறமையில்லாத மருத்துவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு வாய்பில்லாத கிராமப்புறங்கள், பின்தங்கிய மாவட்டங்கள் என மருத்துவ துறை ஏற்றத்தாழ்வுகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்திருக்கிறது. பெரிய தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கிட்னி திருடும் மையங்களாக செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரமில்லாத, மருத்துவர்களுக்கு மாத இலக்கு வைத்து லாப வெறியை நோக்காக கொண்ட தனியார் மருத்துவமனைகள் பெருகிவருகிறது. மருத்துவ துறை சின்னாபின்னாகியுள்ளதை தான் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து வெளிவர மருத்துவதுறைக்கு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை.

– ரவி

மேலும் படிக்க
WHO report sounds alarm on ‘doctors’ in India
THE HEALTH WORKFORCE IN INDIA
Ruksana’s Journey And Rural India’s Search For Healthcare
Rural Doctor Shortage Up 200% In 10 Years. What should Delhi do?Jaitley Slashes Education, Health Spending
NITI Aayog meet seeks reforms in public healthcare system