Wednesday, January 15, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சேரி - டிரேசி சாப்மன் பாடல்

சேரி – டிரேசி சாப்மன் பாடல்

-

ப்படியா?
அப்படி ஒரு இடம் இருக்கிறதா?

ஒன்றுமே தெரியாதது போல
பாசங்கு செய்கிறார்கள்
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

அப்படி ஒரு இரகசிய உலகம்
இருக்கிறது என்பதை
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும்
குப்பைக் கூளத்திலும் தான் – அங்கே
சிலர் வாழ்கிறார்கள் எனபதை
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

slumஇந்தச் சேரி வாழ்க்கை
ஒரு நரகம்
அரசின் கடைக்கண் பார்வைகூட
எங்கள்மீது பட்டதில்லை

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நான்
மனப்பூர்வமாக மரியாதை செலுத்தவேண்டும்
என்னை அவமரியாதை செய்ததற்காக.

நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம்
உண்மைதான்!

என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன்
பணப்பெட்டிச் சாவியோ
முதலாளிகள் கையில், அரசின் கையில்
நானோ அவர்கள் தயவில்
நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .

உண்மைதான்
நகரத்தில் குற்றம் பெருகித்தான் விட்டது.

கொஞ்சம் விரிசல்கள் இருந்தபோதும்
அமைப்பு நன்றாகவே இயங்குகிறதாம்
எனில், நாங்கள்?

நாங்கள் அந்த விரிசலில் விழுந்துவிட்டோமாம்
கைதூக்கிவிட அவர்கள் முயன்றபோதும்
நாங்கள்
மேலேறிவர மறுக்கிறோமாம்.

ஓ…! அவர்கள் மாபெரும் சிந்தனையாளர்கள் தான்!

எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்
மானத்தோடு வாழ வழிவேண்டும்
கையேந்தி வாழ்வது வாழ்க்கையல்ல

கடவுளை நம்பினேன்
அன்றாடம் உழைத்தேன்
வாழ்க்கைக்கு ஏதேனும்
உத்திரவாதம் உண்டென்று
நினைத்தேன், நம்பினேன்.

நேற்றிரவு
இன்னொரு உறக்கம் பிடிக்காத இரவு
நாளைக்கு என்ன
என்ற கவலையிலேயே
நான் உறங்கிப் போனேன்.

கனவு கண்டேன்
உறைய வைக்கும்
நீலஓளி என்னைத் திணறடித்தது
அலறி எழுந்தேன்

ஒருவேளை… ஒருவேளை…
நான் இறந்து கொண்டிருக்கிறேனோ?

– டிரேஸி சாப்மன்

ஆடியோ மட்டும்…

டிரேசி சாப்மெனின் இந்த பாடலை வைத்து (சேரி மற்றும் வீடற்றவர்களின் பிரச்சினை) கல்லூரி மாணவர் ஒருவர் தயாரித்த வீடியோ – யூடியூபில் பார்க்க இங்கே சொடுக்கவும்

பாடல் வரிகளுடன் உள்ள வீடியோ…


– புதிய கலாச்சாரம், ஆக, செப், அக் 1990

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க