Tuesday, November 29, 2022
முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்கபாலி தலித் படமா ? வாசகர் விவாதம்

கபாலி தலித் படமா ? வாசகர் விவாதம்

-

கபாலி படம் குறித்து வினவில் விமரிசனமும், இரு கட்டுரைகளும் வெளியாகின. இணையத்தில் சில சாதி வெறியர்கள் இப்படத்திற்கு குறிப்பாக இயக்குநர் ரஞ்சித்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டியும், தினமணி போன்ற பார்ப்பனிய ஊடகங்களின் கருத்தை வைத்தும் சிலர் கபாலியை தலித் போராளி படமாக சித்தரிக்கிறார்கள். இது தொடர்பாக வாசகர்கள் இருவர் தெரிவித்த கருத்துக்களும் அதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதிலையும் இங்கே பதிவு செய்கிறோம். நேரமிருந்தால் இது குறித்து முழுமையாக எழுதுகிறோம். நன்றி.

– வினவு

பாலி விமர்சனம் படித்தேன். வினவில் இப்படியொரு அபத்தமான விமர்சனம் வருமென்று நான் நினைக்கவில்லை. அவ்வளவு மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டால் பிறகு ஏன் அதற்கு விமர்சனமெழுத வேண்டும்? இதுவரை அப்படி எழுதியதேயில்லையே?

கபாலியாயை வெறும் கபாலியாக மட்டுமே பார்ப்பதற்கு வினவெதற்கு? அதற்கு செஞ்கிஸ்கான்கள் போதும். சில காட்சிகள் தவிர இப்படத்தின் பல காட்சிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற விசயத்தைக் காண்பதற்கு வினவு தவறிவிட்டது. தமிழ் சினிமாவில் முதன்முதலாக அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் முதன்மைக் கதாபாத்திரம் கபாலிதான். காபாலியை நான் வரவேற்கிறேன்.

படத்தின் இறுதியில் கிஷோர் பேசும் வசனங்கள்தான் கதையின் வில்லன். அவன் சாதியை மட்டுமல்ல வர்க்கத்தையும்தான் குறிப்பிடுகிறான். தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’? ரஜினியின் படத்தை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்துப் பார்ப்பது ரஜினியின் ரசிகர்கள்தான். பொதுவான ரசிகர்களல்ல. ஆனால், பெரும்பான்மையான ரஜினி ரசிகர்களுக்கும் கபாலி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, படத்தின் மீது அவர்களுக்கு எரிச்சலும் உள்ளது. ஒரு எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகின்ற மாபெரும் பெருமையைப் பெற்ற முதல் தமிழ் சினிமா கபாலி. காபாலியை நான் வரவேற்கிறேன்.

படம் வெளிவந்த நாள் அதிகாலை 8.00 மணிக்கெல்லாம் அலைபேசிக்குள் படம் வந்துவிட்டது. நெரிசல் இல்லாதபோதும் படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களல்லாத சினிமா ரசிகர்களுக்கு கபாலி பிடித்துள்ளது என்பதுதான் இதற்குக் காரணம். ‘வில்லேஜ் தீம்களில்’ அம்பேத்கர் படத்தை மாட்டிவைக்கும் நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் இருக்கிறதா என்ன?

கபாலி சொல்லும் பதில் அல்லது பஞ்ச் வசனங்களுக்கான கேள்விகளைக் கேட்டவர்கள் காந்தியிலிருந்து மாம்பழம் ஊடாக மதயானைக்கூட்டம் வரையிலும் இருப்பவர்கள்தான் என்பது வினவிற்குப் புரியவில்லையா?

– குருசாமி மயில்வாகனன்.

__________

இதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதில்:

குருசாமி மயில்வாகனன்,

பாலி மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டு ஏன் விமரிசனம் எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.அது மோசமான படமென்பது உங்களது கருத்தில்லை என்றால் அது ஏன் நல்ல படமென்றுதான் நீங்கள் விவாதிக்க வேண்டும். மாறாக ஏன் எழுதுகிறீர்கள் என்றால் அது மொக்கை படமென்பதை நீங்கள் மறைமுகமாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். அடுத்து உங்களைப் பொறுத்த வரை கபாலி மிக நல்லபடம் என்பது அடுத்த வரிகளிலேயே வருகிறது. அதுதான் உங்களது உண்மையான கருத்தென்றால் முதல் வரிகள் தவறு.

அடுத்து இந்த படம் மரண மொக்கை என்பதையோ, மட்டமான மொக்கை என்பதையோ நாங்கள் நிரூபிக்கத் தேவையில்லை. படமே அப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் விமரிசனமும் உணர்த்துகிறது.தமிழ் சினிமாவில் எல்லா போலீஸ் ஸ்டேசன் காட்சிகளிலும் அம்பேத்கர் படம் தவறாமல் இருக்கும். இது வரை உங்களது கண்ணுக்கு ஏன் அது தட்டுப்படவில்லை? கபாலியை விட பல போலிஸ் படங்களில் அதிக முறை அம்பேத்கர் படமாக வந்து போகிறார்.ஆகவே இப்படியெல்லாம் அபத்தமாக குறியீடு ஆய்வு செய்யாதீர்கள்.

ரஜினி ரசிகர்கள் எனப்படும் உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை கபாலி டிக்கெட்டே முதல் நாட்களில் கிடைக்கவில்லை. எல்லாம் ஐ.டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விற்கப்பட்டதால் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இது வினவின் கட்டுரையிலேயே வருகிறது. ஐ.டி நிறுவனங்களில் வசூல் செய்தவர்கள் சசிகலா கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகிறது என்று ரசிகர்களையெல்லாம் ஆதிக்கசாதியாக்கி விட்டீர்கள். உண்மையில் ரஜினி, விஜயகாந்த் போன்றவர்களுக்கு தலித் ரசிகர்கள் அதிகம். பா.ம.க ரஜினி படப்பெட்டியை எடுத்து படத்தை ரலீஸ் செய்ய தடை ஏற்படுத்தியது, பா.ம.க பகுதிகளில் விஜயகாந்த் வெற்றி பெற்றது எல்லாம் அப்படித்தான்.

வில்லேஜ் தீமில் அம்பேத்கர் படமுண்டா என்று அப்பாவியாக கேட்டிருக்கீர்கள். பாராளுமன்றத்திலேயே அம்பேத்கர் உண்டு. அதற்கு மோடி மாலை போட்ட போட்டோவும் உண்டு. உடனே பா.ஜ.க வில் அம்பேத்கர் இருப்பதால் அது தலித் கட்சி என்று அழைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

மற்றபடி உங்களைப் போன்றவர்கள் அர்த்தமற்ற இந்த குறியீடுகளை வைத்து கபாலி படம் எனும் தேவர் சாதி வெறி கும்பல் வழிப்பறி செய்த கொள்ளையை, ரஜனி எனும் பா.ஜ.கவின் பிராண்ட் அம்பாசிடரின் இமேஜை ஆதரிக்கிறீர்கள். இல்லையேல் அத்தகைய தலித் போராளி படமான கபாலியை எதற்காக்க தேவர் சாதி வெறி சசிகலா கும்பல் வெளியிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்து கொள்ளும் அளவு தேவர் சாதி சசிகலா கும்பல் புத்திசாலி அல்ல என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்நாட்டில் அடிமைகளாக வாழ்வதும் புத்திசாலிகளாக இல்லை என்ற காரணத்திலாகி விடும். சாதி ஒடுக்குமுறை என்பது அறிவார்ந்து அல்ல, பொருளாதாரத்தை சார்ந்து சமூக ரீதியாக ஒடுக்குவது. நேரமிருப்பின் காபாலி அக்கப்போர்களை வெளுத்து வாங்கும் வண்ணம் எழுதும் எண்ணமுண்டு.

இறுதியில் காபாலி எனும் முன்னாள் தொழிற்சங்க தலைவர் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவனாக உலா வந்து 1 கோடி ரூபாய் பென்ஸ் காரில் வந்து சோபாவில் தேய்ந்து போன வசனங்களைப் பேசினால் உங்களைப் போன்றவர்கள் ரஜினி ரசிகர்களா மாறுகிறீர்கள் என்றால் உண்மையான ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ மேல். அவர்களை திருத்த முடியும். மற்றவர்களை சிரமம்.

உங்கள் நிலை குறித்து பரிதாபப்படுகிறோம். நன்றி

பின் குறிப்பு:

//தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’?//

மயில் வாகனன், கபாலியில் மறைந்திருக்கும் பல்வேறு கம்ப சூத்திரங்களை கண்டிபிடித்து விட்டு மேற்க்ண்ட வரியின் சூட்சுமம் புரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. முடிந்தால் கட்டுரையை மீண்டும் படித்து விட்டு அந்த வரி நீங்கள் குறிப்பிட்டது போல அல்லாமல் வேறு மாதரி இருப்பதையும், அது தரும் பொருள் என்னவென்பதையும் கண்டுபிடியுங்கள். இல்லையேல் கபாலி காய்ச்சலிருந்து நீங்கள் இன்னமும் விடுபடவில்லை என்றாகிவிடும்.

____________________

மயில்வாகனனுக்கு அளிக்கப்பட்ட வினவு பதில் குறித்து வாசகர் சுகதேவ் விமரிசக்கிறார்:

ம்பேத்கர் படத்தை போலீஸ் நிலையங்களில் காட்டும் போது எழாத எதிர்ப்பு கபாலியில் காட்டிய போது ஏன் எழுகிறது? ‘எனக்கு ஒரு கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம். டாங்கு டக்கர டொய்’; ‘கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு; காலத்தின் கையில் அது இருக்கு’ என்பவை தான் தனது திரைப்படங்களில் ரஜினிகாந்த் பேசி வந்த ‘அரசியல்’. அவற்றிலிருந்து நகர்ந்து கபாலியில் அவர் பேசிய அரசியல் வசனங்கள் ஒரு பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும்.

கபாலியில் ரஜினி பேசிய வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரஜினியினுடையவை அல்ல. அவை கபாலியினுடையவை. அதனால் தான் ஒரு புத்திசாலி ரசிகனால் கபாலியுடன் ஒன்றுபட முடியவில்லை. தலித் அதிகாரம் பெறுவது தொடர்பான ஒரு கனவின்பம், கபாலி. இதனை கற்பனாவாதம் என்று எளிதில் நிராகரிக்கலாம். ஆனால் இப்படம் பார்ப்பவருக்கு வழங்கும் தற்காலிக கர்வம் முக்கியமானது. இதனை தினமணி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் போன்ற நபர்களால் எக்காரணம் கொண்டும் புரிந்து கொள்ள இயலாது. நீங்களும் அந்த ஜீப்பில் ஏறிக் கொள்வது எதற்காக?

இப்படத்தை மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்திருப்பது தெரியவில்லையா? தேவர்சாதி வெறி தயவில் தலித் விடுதலையா? என்று கேட்பது ஒரு மாய நியாயம். கபாலி அல்ல; ஜோக்கர் படத்தை கூட மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்ய முன்வரலாம். காரணம் மக்களுடைய கோபாக்கினையின் எல்லையை புரிந்து கொண்டுள்ளது ஆளும்வர்க்கம். கோவன் கைது செய்யப்பட்டதை பா.ஜ.க எதிர்த்தது. இதை எப்படி புரிந்து கொள்வது? ‘மோடிக்கு பூங்கொத்து கொடுக்கும் ஜெயா’ படம், பாடல் காட்சிகளில் இருந்ததால் பாடலை ஏற்க முடியவில்லை என்று தமிழிசை விளக்கினார். ஆனால், அதன் பிறகும், முரளிதரர் ராவ் ஒரு பேட்டியில், கோவன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பேட்டி கொடுத்தார்.

பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்து சென்றிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய நினைக்கவில்லை. காரணம், எந்த பெரிய நெருக்கடியையும் அரசு உணரவில்லை. கபாலியை ஸ்பான்ஸர் செய்வதிலும் மன்னார்குடி மாபியாக்களுக்கு இந்த உத்தி தான் இருக்க முடியும். எனவே அதனை விமர்சிக்கின்ற அதே நேரம் இப்படத்தை தனியாக அலசுவதும் தேவையாகிறது. கபாலி விமர்சனத்தில் இந்த இரண்டாம் கடமையை செய்வதில் நேர்மைத் திறம் வெளிப்படவில்லை.

– சுகதேவ்.

______________

இதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதில்:

சுகதேவ்,

மெய்நிகர் உலகின் மாயைகள் மெய்யுலகில் இல்லை என்பதை புரிய வைப்பது சிரமம். கபாலி படத்திற்காக ஆதிக்க சாதி சங்கங்கள் எவையும் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமோ, மறியலோ, திரையரங்க முற்றுகையோ ஒன்று கூட நடத்தவில்லை. காரணம் இந்தபடம் தலித் படமோ, தமிழர் படமோ, மலேசியாவில் பிழைக்கச் சென்ற தமிழ் மக்கள் படமோ இல்லை. இல்லவே இல்லை. இது ஒரு அப்பட்டமான மசாலா. இதை இயக்குநர் ரஞ்சித்தே பல நேர்காணல்களில் கூறுகிறார்.

இணையத்தில் சில சாதிவெறியர்கள் எதிர்ப்பதை வைத்து படமே தலித் போராளி படம் என்று கருதுவது சகிக்க முடியாத பிழை. இணையத்தில் அப்படி சிலர் எதிரப்பு தெரிவிப்பது என்பது இதுதான் என்றில்லை, பல்வேறு விசயங்களில் நடக்கிறது. மெய்யுலகத்தில் ‘கலப்பு மணங்கள்’ குறித்து ராமதாஸ் முன்வைத்து பேசும் சாதி வெறி கருத்துக்களே தமிழகத்தின் ஆதிக்க சாதி அல்லது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களது கருத்து. நிலைமை இப்படி இருக்க கபாலி படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இது வரை ஓடியது என்றால் ராமதாஸ் மற்றும் தமிழக ‘பெரும்பான்மை’ மக்கள் திருந்தி விட்டார்கள் என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

கபாலியில் ரஜினி பேசியது அரசியல் வசனங்கள் என்று ஏதாவது ஒன்றையாவது தாங்கள் சொன்னால் விவாதிப்பது பலனளிக்கும். ரிக்ஷாக்காரனாக, விவசாயியாக எம்.ஜி.ஆர் பேசாதா வசனமா, லியாகத் அலிகான் உதவியுடன் விஜயகாந்த் பேசாதா புரட்சியா?……அதனால்தான் கபாலி படம் துக்ளக் சோவிற்கும் பிடித்திருக்கிறது.

கபாலி படத்தை வைத்துத்தான் தினமணியை இங்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாறாக தினமணியின் பார்ப்பனிய திமிரை கண்டித்து வினவில் மட்டுமே ஏராளமான கட்டுரைகள் உண்டு. இன்றைக்கும் கபாலியை வியந்தோதுவார் நாளைக்கே தினமணி வைத்தியுடன் நட்புறவு கொண்டு நடுப் பக்க கட்டுரை எழுதுகிறார்கள், எழுதியிருக்கிறார்கள், எழுதுவார்கள். மாறாக தலித் மக்கள் அசைவம் உண்பதால்தான் ரேப் செய்கிறார்கள் எனும் வைத்தியை கண்டித்து இணையத்தின் காபாலி ஆதரவு முற்போக்காளர்கள் எவர் எழுதியிருக்கிறார்கள?

மேலும் ஒரு விசயத்தை சரியான முறையில் நாங்கள் விமரிசிப்பதையும், தவறான முறையில் மற்றவர் விமரிசிப்பதையும் இணை வைத்து பேசுவது கண்டனத்திற்குரியது. அழகிப் போட்டியை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கமும், இடது சாரிகளின் நோக்கமும் ஒன்றா? இல்லை அமெரிக்க ஏகாதிபத்தியைத்தை எதிர்க்கும் இடதுசாரிகளும், முசுலீம் மதவெறி அமைப்புக்களும் ஒன்றா? எங்கள் விமர்சனத்திற்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் சாதி வெறியர்களின் முதுகில் அமர்ந்து கொண்டு சிலர் பேசும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இல்லை வினவு எப்படி தலித் விரோத ஆதிக்க சாதி வெறி பத்திரிகை என்று நிருபியுங்கள், விவாதிக்க காத்திருக்கிறோம்.

கோவன் கைதை பா.ஜ.க எதிர்த்தது என்பது கலப்படமில்லாத முழுப்பொய். ஆரம்பத்தில் எதிர்ப்பதாக பேசிய தமிழிசைக்கு கண்டனங்கள் குவிந்த பிறகு அவர் தனது எதிர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார் (அதாவது முதலமைச்சரை இழிவு படுத்தி  கோவன் பாடியது தனது கவனத்திற்கு வரவில்லை என்றார்). மேலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க டி.வி நிலையை விவாத வித்வான்கள் வினவு மற்றும் ம.க.இ.கவை தடை செய்ய வேண்டும் என்று எழுதி பேசியிருக்கிறார்கள். அடுத்து பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்துச் சென்றிருக்க முடியும் என்பது உங்களது தவறான பார்வை. இதற்கு பா.ஜ.க தயவு இருப்பதால்தான் நீங்கள் சுதந்திரமாக எழுதி பேசி உலாவுகிறீர்கள் என்றே நேரடியாக சொல்லலாம்.

உங்களது வாதப்படி சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை நீக்கம் கூட பா.ஜ.கவின் கருணை என்று விளக்கமளிக்கலாம். மோடி நினைத்திருந்தால் அம்பேத்கர் வாசகர் வட்டத்தை நாடு கடத்தியிருக்கலாம் என்று கூட நீங்கள் மதிப்பிடலாம். ஆனால் அந்த தடை நீக்கம் என்பது தமிழகத்தில் எழுந்த மாபெரும் எதிர்ப்பின் விளைவு அல்லது வேறு வழியில்லாத நிலை என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. முழு இந்தியாவும் பல்வேறு அமைப்புக்களும் அதற்காக்க குரல் கொடுத்தன, போராடின. புரட்சிகர அமைப்புக்களும் தீவிரமாக போராடின.

எல்லா சமூக மாற்றங்களும், போராட்டங்களும் ஆளும் வர்க்கங்களின் கருணையால் நடப்பதில்லை. உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணம். ஊத்திக் கொடுத்த உத்தமி பாட்டை பாடிய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் பிணையில் விடுதலையாகி அங்கேயே அதே பாட்டை வரிமாறாமல் பாடினாரே அது ஏன்? ஜெயாவின் கருணையா இல்லை அந்த பாசிஸ்டை அஞ்சாமல் எதிர்க்கும் புரட்சிகர அமைப்புக்களின் நெஞ்சுரமா? இல்லை உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு முற்போக்காளர், பத்திரிகையாளர், பத்திரிகை, மற்ற கட்சிகள் யாராவது ஜெயலலிதாவை ஒரு பாசிஸ்டு என்று எழுதவோ, ஒரு வாரம் தமிழகத்தில் இயக்கமோ நடத்தவோ சொல்லுங்கள் பார்ப்போம்!

இன்றைக்கும் தமிழகத்தில் ஜெயாவை எதிர்ப்பதில் அஞ்சாமல் செயல்படும் ஒரே இயக்கம் எதிர்க்கட்சி எமது அமைப்புக்கள் மட்டுமே. இதில் நாங்கள் மட்டுமே செய்கிறோம் என்பதை பெருமையாக சொல்லவில்லை. மற்றவர்கள் கோழைகளாக இருக்கிறார்களே என்று வருத்தத்துடனே பதிவு செய்கிறோம்.

கபாலி ஏன் ஒரு தலித் படம், ஆதிக்க சாதி எதிர்ப்பு படம் என்பதற்கு காத்திரமான ஒரு விமரினத்தையோ, கருத்தையோ இது வரை யாரும் எழுதி நாங்கள் பார்க்கவில்லை. அனைத்துமே ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையே முன்வைக்கின்றன. இரண்டாவதாக இயக்குநர் ரஞ்சித் பேசும் சில அரை குறை முற்போக்கு கருத்துக்களை வைத்து கபாலியை முன்வைக்கிறார்கள். நாங்கள் கேட்பது கபாலி படத்தில் எங்கே தலித்துக்களின் வாழ்வோ, வசனமோ, குறியீடோ இருக்கிறது என்பது மட்டுமே!

கபாலி எனும் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவர் 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை அழகுணர்ச்சியோடு தடவி பயணிக்கிறார். எனில் தலித்துக்கள் பென்ஸ் காரில் போகக் கூடாதா என்று கேட்டால் நிச்சயம் கபாலி ஒரு ‘தலித்திய’ படம்தான். ஆனால் தலித் மக்கள் அந்த படத்தில் இல்லை. நன்றி!

பின்குறிப்பு: இந்தியாவில் சாதி ஒழிப்பு எனும் சமூக மாற்றத்தை ஆர்.எஸ்.எஸ்-தான் செய்ய முடியும் என்று எழுதிய திருவாளர் சமஸ் – தி இந்துவின் ஆசிரியர்களுள் ஒருவர் – கபாலி படத்தை ஆதிக்க சாதி எதிர்ப்பு படமாக உணர்கிறார், வாழ்த்துகிறார்!

 1. கபாலி படத்தை ராமதாஸ் மாதிரியான நபர்கள் எதிர்க்கவில்லை. அதனால் கபாலியை போராளியாக பார்க்க முடியாது என்கிறீர்கள். கபாலிக்கு சாதி வெறியர்கள் எதிர்வினை ஆற்றதது பெரிய இடத்தின் வணிக நலன் ஒளிந்திருப்பதால் தான். ஆனால், சாதி உணர்வாளர்களான பலரை சீண்டி இருக்கிறது. இப்படத்தை பார்க்க வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் பலர் கூறி இருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் கூறும் போது, ஒரு தியேட்டருக்கு முன் சிலர் கூடி நின்று, ‘இப்படத்தை யாரும் பார்க்க செல்லாதீர்’ என்று மக்களிடம் கேட்டுக் கொண்டதாக பதிவு செய்தார். எனவே தினமணி மட்டும் எதிர்க்கவில்லை. சாதி வெறியர்கள் ஒரு வகையில் போலியான சாதி உணர்வாளர்கள்.

  தலித் மக்கள் வாழ்க்கையை கபாலி பிரதிபலிப்பதாக சொல்லவில்லை. தங்களை மனிதனாக மதிக்காத சமூகத்தில் தங்களில் ஒருவனின் தலைநிமிர்வை கண்டு மக்கள் பரவசம் கொள்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகியோரின் படங்களில் சாதிமுரண் கழுவி எடுக்கப்பட்டு இருக்கும். ஏன் முந்தைய ரஜினி படங்களில் கூட அப்படித்தான். பாட்ஷா படத்தில் ரஜினி உண்மையில் ஒரு ஆட்டோக்காரன் இல்லை. ஒரு தாதா பாத்திரம் வகிக்கும் சிறு பாத்திரம் தான் ஆட்டோக்காரன். அது போல அருணாச்சலம் படத்தில் ரஜினி பெரும் கோடீஸ்வரரின் மகன். அதனை அறியாது சாதாரண நபராக வாழ்ந்து கொண்டிருப்பார். ராஜாதி ராஜா படத்தில் முதலாளி ஒருவனின் மகன். ஆனால், வீட்டு வேலைகள் செய்து கொண்டிருப்பார். படையப்பா படத்தில் அனைத்து சொத்துக்களையும் இழந்து போண்டியான பின்பு வாங்கிய சிறு நிலத்தின் பாறைகள் கிரானைட்களாக இருக்கும். ஒரு chance event -ல் மறுபடியும் பணக்காரர் ஆகி விடுவார். அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் நிறைவேறாத சாத்தியம் இது. கபாலியில் மட்டும் தான் ஒடுக்கப்பட்ட நிலையில் பிறந்து, அந்த அடையாளத்துடன் சாதிப்பதும் நிகழ்கிறது. எனவே தான் படத்தை பார்க்கும் மக்கள் ஒன்றுவதும், விலகுவதும் நடக்கிறது.

  ஜெயாவை பாசிஸ்ட்கள் என்று நாங்கள் அழைப்பது போல மற்ற முற்போக்கு அறிவுஜீவிகள் அழைக்க தயாரா? என்று கேட்பது வீண்வாதம். ஒரு உடலின் வெவ்வேறு அங்கங்களை போன்றது ஒவ்வொரு சமூகப்பிரிவினரின் பணி. ஒருவர் மற்றவர் பணியை மதிப்பதும், அங்கீகரிப்பதுமே நன்மை பயக்கும். உங்கள் கேள்வி சிறு வயதில் படித்த ‘நாக்கு பெரிதா? கைகள் பெரிதா? பற்கள் பெரிதா?’ கதையை தான் நினைவுபடுத்துகிறது.

  • சுகதேவ்,

   ரஜினியின் கோட்டு சூட்டு டயலாக், வெளிநாட்டு சாதி டயலாக், இதைத் தவிர அந்தப் படத்தில் தலித் பிரச்சினைகளைப் பற்றி பேசும் பகுதியைக் குறிப்பிட முடியுமா ?.

   ஒரு தாதா இன்னொரு தாதாவைப் பலி வாங்கும் கதையை தலித் பிரச்சினைக்காக பேசும் படமாக உங்களைப் பார்க்க வைத்தது எதுவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

   ரஜினியின் ’மாஸ்’ என்ற பிம்பத்திற்குள் தலித் அடையாளங்களைப் புகுத்தியது தான் தலித் பிரச்சினையைப் பற்றிப் பேசும் படத்திற்கான தகுதியா ?. அப்படியெனில் கபாலி தலித் அரசியல் படம் தான்.

   ரஜினியின் ‘மாஸ்’ பிம்பத்திற்குள் தலித் அடையாளங்களைப் புகுத்தியதை ரஞ்சித் பெரிய புரட்சியாக எண்ணியிருக்கலாம். அது கூடப் பொறுக்காமல் தினமணியும், மற்ற பார்ப்பனக்கும்பலும் பொறுமியிருக்கலாம். ஆனால் படம் தலித் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் படமா ?.

   ரஜினி ரசிக மனப்பான்மையிலிருந்து சிறிது விடுபட்டு இப்படத்தை தலித்களின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விமர்சனப்பூர்வமாகப் பார்த்தால், அதில் தலித் அரசியல் ஒன்றும் இல்லை என்பதே புலப்படும். வெற்று வசனங்களை ரஜினி பேசியதற்காக இப்படத்தை பாராட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது, ரஜினி ரசிக அல்லது ரஞ்சித் ரசிக மனநிலையே.
   கபாலி தலித் பிரச்சினை பேசும் அல்லது தலித் அடையாளம் கொண்டுள்ள படம் என்றால் கத்தி படமும் கம்யூனிச சிந்தனை கொண்ட படமாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ‘செல்ஃபி புள்ளை’யை ஜென்னியோடு ஒப்பிடும் அபத்தம் அது.
   வழக்கு எண் 18/9 படத்தை விட எவ்விதத்திலாவது இப்படம் தலித் மற்றும் உதிரிப் பாட்டாளிகளின் வாழ்நிலையை, பிரச்சினைகளை சிறிதாவது தொட்டுச் சென்றுள்ளதா ?

   ரஜினியின் மார்க்கெட் குறித்த உங்களது மிகப்பெரும் பிம்பம் தான், கபாலியில் அவரது டயலாக்குகளுக்கு வினவும் விசிலடிக்க வேண்டும் என்ற மனோநிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதுகிறேன். மீண்டும் ஒருமுறை பரிசீலித்துப் பாருங்களேன்.

   • அய்யா,

    கபாலியில் தலித் வாழ்க்கையை தேடுவது போன்ற அபத்தம் எதுவும் இருக்க முடியாது. தலித் வாழ்வியலை எடுத்துரைத்த படம் மெட்றாஸ். ஆனால், அது குறித்து ஏன் இங்கு ஒரு விமர்சனமும் வரவில்லை?

    கபாலி ஒரு fantasy (கனவின்ப) படம் என்று தான் முதலிலிருந்தே சொல்லி வருகிறேன். அது ஒரு வீடியோ கேம் ஆக நாளை உருமாற்றம் பெறலாம். நீல சட்டை அணிந்த கபாலி ஒரு புறமும், கபாலி வீழ்த்தும் வீரசேகரன், டோனி போன்றோர் மறுபுறமும் இருக்கலாம். அதை விளையாடும் குழந்தைகளிடம் நிச்சயமாக ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற ஆயிரக்கணக்கான குறியீடுகள், படிமங்கள் மூலம் தான் ஆர்.எஸ்.எஸ் மக்களின் மனதில் வேர் விட்டு ஆலமரமாக எழுந்து நிற்பதை உங்களை போன்றவர்கள் என்று தான் பார்க்கத் துணிவர்?

    அப்படியெனில் இப்படம் மீது விமர்சனமே வைக்கக் கூடாதா? என்றால் வைக்க வேண்டும். ஆனால், அதை நிராகரிப்பதில் இந்த மூர்க்கம் தேவையில்லை. மேல்சட்டை போடாமல் கிராமங்களில் ஆதிக்கசாதிகளிடம் மிதிபடும் மக்கள் மட்டுமல்ல தலித்கள். இன்று அவர்களில் கணிசமான பேர் படித்து முன்னேறி வருகின்றனர். பல துறைகளில் அவர்கள் உயர்வகுப்பினருக்கு சரிநிகரான போட்டித்திறனை கொண்டு விளங்குகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நிலவும் சாதிமுரண் பிசிக்கும் எஸ்சிக்கும் தான்.

    இப்பிரிவு மக்களுக்கு எதிரிகளை வீழ்த்தும் கபாலி ஒரு பெருமிதத்தை கொடுக்கிறது. ஒரு கனவின்ப களிப்பை வழங்குகிறது. அந்த பெருமிதமும், கர்வமும் தற்காலிகமானதாக இருக்கலாம். எனினும் ஒரு கொண்டாட்ட மனநிலையை கொடுக்கிறது. சினிமா விமர்சகர் அம்ஷன் குமார், தலித் கதாநாயகன் மட்டுமல்ல தலித் இயக்குநர் ஒருவரும் முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்று ரஞ்சித்துக்கு ஒரு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த ரஞ்சித்துடன் சேர்ந்த எடுத்த புகைப்படத்தை ப்ரொஃபைல் டி.பி.யாக வைத்த அபினவ் சூர்யா என்ற ஐ.ஐ.டி மாணவர், அவருக்கு வந்த ஆபாசமான வசைகளை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

    கிராமத்தில் வாழும் ஒடுக்கப்படும் தலித் மக்களின் விடுதலையை மனதில் வைத்து இயங்குவதால் இவை எதுவுமே முக்கியமில்லை என்பது என்ன வகையான வாதம்? இந்த எண்ணத்திலிருந்து தான் தைரியமிருந்தால் என்னை தலித் விரோதி என்று நிரூபி என்று வினவை கேட்க வைத்துள்ளது. இந்த கேள்வி அர்த்தமற்றது. தட்டுத்தடுமாறி கல்வி கற்று முன்னேறி வரும் தலித் மக்களின் எதிர்பார்ப்புகளையும், விழைவுகளையும் பெட்டி பூர்சுவா தன்மை கொண்டது என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது என்ன வகையான தர்க்கம்? மேலும் இந்த அணுகுமுறை தான் கல்வி கற்றெழும் மாணவர்களை தலித்திய இயக்கங்களின் மீதும், கிருத்துதாஸ் காந்தி, ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் செல்வாக்குக்கு உட்படவும் நெட்டித் தள்ளுகிறது.

    கபாலியில் பெரியாரை காட்டவில்லை என்பதற்காக ஹரன் பிரசன்னா என்ற ஆர்.எஸ்.எஸ் நபர் ரஞ்சித்தை அணைக்க துடிப்பது உங்களுக்கு தெரியுமா? இந்த பின்னணியில் தான் சில முற்போக்காளர்கள் இணைந்து கபாலிக்கு ஆதரவாக கூட்டம் போட்டனர். அது சரியானது என்பதே எனது கருத்து.

    • நண்பர் சுக்தேவ்,
     கபாலி படம் ஒரு மசாலாப் படம் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது தலித் படமல்ல என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனாலும் அப்படத்தை நிராகரிப்பதில் இவ்வளவு மூர்க்கம் தேவையில்லை என்று கூறுகிறீர்கள். அதற்கான காரணமாக நகரத்தில் வசிக்கும் கல்வி, வேலை வய்ப்பு, ஓரளவு வருமானம் என முன்னேறியிருக்கும் படித்த தலித்களுக்கு அது தற்காலிகமானதேயானாலும் ஒரு திருப்தியைத் தருகிறது, ஒரு மனக் கிளர்ச்சியைத் தருகிறது. அக்கிளர்ச்சியை உபயோகித்துக் கொண்டு, இப்படத்தையும் இரஞ்சித்தையும் தட்டிக் கொடுத்துவிட்டு, ஜாஸ் சினிமாவையும் ரஜினியையும் மட்டும் விமர்சித்து விட்டு, இதோ இரஞ்சித்தின் மூலமாக தமிழ் சினிமா உலகில் தலித்துகளின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்று ஒரு விமர்சனக் கட்டுரை வினவிலிருந்து வரவேண்டும் . அவ்வாறு வந்தால் கல்விக் கொள்ளையர்களிடம் தலித் மாணவர்களைக் காவு கொடுத்து பிழைப்பு நடத்தும் கிறுஸ்துதாஸ் காந்தி மற்றும் ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற பிழைப்புவாதிகளை நோக்கி தலித் இளைஞர்கள் செல்வதைத் தடுக்க முடியும் என்பது உங்கள் வாதம்.
     முதல் பத்தியில் நீங்கள் கூறிய கருத்துக்கு மேலதிகமாக நான் எதையும் கூறவில்லை என்றே கருதுகிறேன்.
     வினவு மற்றும் அது சார்ந்த அமைப்புகளை நோக்கி இளைஞர்கள், குறிப்பாக தலித் இளைஞர்கள் வரவேண்டும் என்ற உங்களது விருப்பத்திற்கு நன்றிகள் . ஆனால் எப்படியாவது வரவழைத்து விட வேண்டும் என்பதோ, அல்லது கிடைக்கும் வழிகளை எல்லாம் உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோ, பல்வேறு தவறுகளுக்கு இட்டுச் சென்று விடும் என்பதே யதார்த்தம். ஒரு சில உதாரணங்களோடு முடித்துக் கொள்கிறேன்.

     கடுமையாக ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வந்த தலித் மக்களை, கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு, நீங்கள் கடவுளின் குழந்தைகள் என அவர்களுக்கு ஹரிஜனங்கள் என்று பெயர் வைத்த காந்தியையும், சிறையில் மலம் அள்ள வரும் அந்தத் தாயின் கைகளால் இரண்டு ரொட்டிகள் திண்ண ஆசை என்று கூறி காரணம் கேட்டவர்களிடம் தனது குழந்தையின் மலத்தை எவ்வித வெறுப்புமின்றி அள்ளும் தாயைப் போன்றவள் தான் மலம் அள்ளும் தொழிலைச் செய்யும் அந்தத் தாய். அவள் கையால் உணவருந்த வேண்டும் என்று கேட்ட பகத் சிங்கையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
     பிறப்பால் இழிவானவர்களாகக் கருதப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் உயர்வான கடவுளின் குழந்தைகள் என்று கூறிய காந்தியை பாராட்டி விட்டு, மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் அவர்களை அதே தொழிலால் அடையாளப்படுத்தி அவமானப்படுத்துகிறார் என்று பகத்சிங்கைக் குற்றம் சாட்டினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அவ்வளவு அபத்தமானது தான், உங்களது வாதம்.

     ரஞ்சித் ரஜினிகாந்தின் வாயில் இரண்டு மூன்று தலித் ஆதரவு வசனங்கள் வைத்து விட்டதால் அப்படம் தலித் மக்களுக்கு உத்வேகம் தந்து, தற்காலிகமானதேயாயினும் ஒரு கர்வத்தை உண்டு பண்ணும் என்ற வாதம் சரியானதென்றால், ஹரிஜனங்கள் என்ற காந்தியின் சொல்லாடல் தலித் மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்ற வாதத்தையும் உங்களால் மறுக்க முடியாது.இவ்வாதத்தை ஏற்றுக் கொள்வீர்களா ?.

     காந்தியின் வாதம் உத்வேகம் கொடுத்திருக்கும், அது நல்லது தான் என்று பேசமாட்டீர்கள் என நம்புகிறேன். தலித் மக்களின் விடுதலைக்கு இன்றைய அவசியத்தேவை , சில மணிநேர கிளுகிளுப்புக்கான கபாலிகளும், ’ஹரிசன’தகப்பனார்களும் அல்ல. சாதியத்தின் அடி வேரில் ஓங்கி அடிக்கின்ற அம்பேத்கர் போன்ற சம்மட்டிகள் தான் தேவை. அத்தகைய சம்மட்டிகள் இத்தகைய வெட்டிக் கிளுகிளுப்புகளை எட்டி உதைக்க பழக்கப்படுத்தப்பட்ட இளைஞர்களால் தான் உருவாக்கப்பட முடியுமே ஒழிய ஈனத் திருடன் காந்தியின் ஹரிசன பம்மாத்திற்கு மயங்கும் இளைஞர்களால் அல்ல.

     காந்தியின் ஹரிசன பம்மாத்தின் போதையும், ரஞ்சித்தின் ரஜினிவாய் வழி வரும் வசன போதையும் தலித் இளைஞர்களுக்கு சில மணிநேர கிளுகிளுப்பைத் தரலாம். ஆனால் விடுதலையைத் தராது.

     ”ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே?”என ஈனப்பயல் காந்தியை தோலுறித்த நக்சல்பாரிகளின் நேரான பார்வையும், நம்மை வெற்று போதையில் ஆழ்த்த வரும் கபாலிகளின் முகத்திரையை கிழிக்கும் இது போன்ற விமர்சனக் கட்டுரைகளும் தான் தலித் இளைஞர்களுக்கு விடுதலையைத் தரக் கூடியவை.
     https://www.youtube.com/watch?v=8h6scZndK4Y

     பிரச்சினைகளை மேம்போக்காக பார்த்துவிட்டுப் போகும் தலித் இளைஞர்களுக்கு / முற்போக்காளர்களுக்கு இக்கட்டுரை வினவின் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தலாம். அவர்களை ஸ்டாலின் ராஜாங்கத்தின் பக்கமோ, கிறுஸ்துதாஸ் காந்தியின் பக்கமோ நோக்கி செல்ல வைக்கலாம். ஆனால் தலித் விடுதலை குறித்துச் சிந்திப்பவர்கள், இந்தப் பிழைப்புவாதிகளின் முகத்திரையை விரைவில் விலக்கிப் பார்த்து அவர்களிடமிருந்து வெளி வருகின்றனர். பிழைப்புவாதிகள் அவர்களோடு ஐக்கியமாகிக் கொள்கிறார்கள். நமக்கு அவர்களைப் பற்றிய கவலை தேவையில்லை.

     கடைசியாக, உங்களது கீழ்கண்ட வாதத்திற்கான பதில்,
     //// தட்டுத்தடுமாறி கல்வி கற்று முன்னேறி வரும் தலித் மக்களின் எதிர்பார்ப்புகளையும், விழைவுகளையும் பெட்டி பூர்சுவா தன்மை கொண்டது என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது என்ன வகையான தர்க்கம்? ////////

     தலித் மக்கள் சாதிய நுகத்தடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதை எதிர்பார்ப்பாகக் கொண்டிருப்பதே பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டம்.

     வெட்டி வசனங்களில் பெருமிதம் கொண்டு திளைத்து திருப்தி கொள்வது பெட்டி பூர்சுவா கண்ணோட்டம்.

     எந்தக் கண்ணோட்டம் சரியானதோ, அதை நோக்கி உந்தித்தள்ளுவதும், எது தவறோ அதை சுட்டிக் காட்டுவதும் தான் ஒரு முற்போக்காளனுக்கு அழகு. பெற்றவர்களாயினும், தாம் பெற்றவர்களாயினும் இக்கண்ணோட்டத்தில் பார்ப்பதே சரியானது. அந்த அடிப்படையில் கபாலி பட வசனங்களுல் கிளுகிளுப்பு தேடும் எதிர்பார்ப்பை, ஒரு பெட்டி பூர்சுவா கண்ணோட்டத்தை, பெட்டிபூர்சுவா கண்ணோடமாகத் தான் பார்க்கமுடியும்.

     மயக்கத்திலிருந்து விடுபடுவோம் ..
     யதார்த்தத்தை உணர்ந்திடுவோம்..

     கொசுறு:
     https://www.vinavu.com/2012/06/13/vazhakku-enn-18-9-movie-review/
     தலித் வாழ்க்கை முறையை இப்படத்துடன் மெட்ராஸ் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும். ஹீரோயிசத்திற்கும் யதார்த்ததிற்குமான உதாரணம் தான் முறையே மெட்ராஸ் படமும், வழக்கு எண்18/9 படமும்.

    • ////கபாலியில் பெரியாரை காட்டவில்லை என்பதற்காக ஹரன் பிரசன்னா என்ற ஆர்.எஸ்.எஸ் நபர் ரஞ்சித்தை அணைக்க துடிப்பது உங்களுக்கு தெரியுமா? இந்த பின்னணியில் தான் சில முற்போக்காளர்கள் இணைந்து கபாலிக்கு ஆதரவாக கூட்டம் போட்டனர். அது சரியானது என்பதே எனது கருத்து/////

     ஆர்.எஸ்.எஸ் கள்ளப்பருந்திடமிருந்து புறாவைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என அப்புறாவைப் பறக்கவிடாமல் அதன் சிறகுகளை வெட்டுவதற்குச் சமம் வெறுமனே பாராட்டுவதற்காக மட்டும் நடத்தப்பட்ட அந்த ஆதரவுக் கூட்டம்.

     ஒரு கலைஞன் மக்கள் கலைஞனாக உருவெடுக்க அடிப்படைத் தேவை, அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வும், அதற்காக சளைக்காமல் போராடும் போர்க்குணமும் தான். ஒரு மக்கள் கலைஞனாக ரஞ்சித் உருவெடுக்க வேண்டும் என விரும்பினால் போகிற போக்கில் தலித் வசனங்களையோ முற்போக்கு வசனங்களையோ தூவி விட்டு மட்டும் போகாமல், மக்களின் வாழ்வை – யதார்த்தத்தை – வலியை பதிவு செய்யும் படங்களை எடுக்க வேண்டுமே ஒழிய 50 கோடி சம்பள கபாலிகளின் வாயிலிருந்து அம்பேத்கர்களை வரவழைப்பது அல்ல.

     ஆர்.எஸ்.எஸ் இது போன்ற மொன்னைத்தனமான தலித்தியவாதிகளைத் தான் விழுங்கக் காத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் எனும் முதலை வாய் திறந்து காத்திருக்கும் வழித்தடத்தில், புகழ் ஓடத்தில் ஏற்றி இரஞ்சித்தை வழியனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் so called முற்போக்காளர்கள்.

     காத்திரமான படைப்புகளால் , ஆர்.எஸ்.எஸ் ஓநாய்கள் ஆத்திரமடைந்து ஓலமிடும் வகையில் தலித்துகளை முன் வைத்து ஒரு படம் எடுக்கட்டும் இரஞ்சித். அப்படத்திற்கு வினவின் விமர்சனத்தில் வரவிருக்கும் ஆகா ஓகோ புகழ்ச்சியை விட ஆர்.எஸ்.எஸ் ஓநாய்களின் வயிறெரியும் கூச்சல் தான் ரஞ்சித்திற்கு கிடைக்கும் மணிமகுடம் .

     ரஞ்சத் தயாராவாரா ?

    • நீங்களும் அந்த குறியீடு கண்டுபுடிக்குற டீமில் ஒருத்தரா. கஷ்டம்.

     அனானியன்,

     சுகதேவ் முதல் மாற்று என்கிற போலி கம்யூனிஸ்ட் இணையதளம் வரை கொண்டுள்ள உளவியளில் அரசியல் வடிவம் தான் அதுவாலே, ராம்விலாஸ் பஸ்வான், ரவிக்குமார் போன்றவர்கள் என்று கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

     அதுவாலே, ராம்விலாஸ்பஸ்வான் போன்றவர்கள் சொல்லும் வாதம் தான். ஆர்.எஸ்.எஸை பார்க்காதே. எங்களை பாருங்கள். தலித் சமூகத்தில் இருந்து ஒருவர் அமைச்சராவது தவறா? நாம் அமைச்சராகாவிட்டால் ஆதிக்க சாதி அந்த இடத்தில் இருந்து நம்மை அடிக்கமாட்டானா?சசிகலாவா,தேவர் சாதி வெறியா, ஜாஸ் சினிமாவா, ஆர்.எஸ்.எஸா மூலம் பற்றி பேசாதீர்கள்.அவர்களுடன் இருக்கும் தலித்தை பாருங்கள்.

     மோடியின் தலித பாச டயலாகிற்கும் கைதட்டுபவர்கள்(உபயம்: ரவிக்குமார்) ரஜினி பேசிய வசனத்திற்கு கைத்தட்டுதட்டுவது இயல்பானதுதான். சுகதேவ் ஆரம்ப கால ரவிக்குமாராக இருக்கிறார்.

     இது சீரழிந்த தலித் அரசியலில் மறுவடிவம் தான்.தியாகம் செய்யாமல் முற்போக்காக இருக்க விரும்பும் ஒரு வகையான எலைட் பிரிவினர் இவர்கள். அதனால் தான் ஜெயாவை எதிர்க்க முடியாத தனது சாகாக்களின் கையாலாகத தனத்தை உடலின் வேலைப்பிரிவினையாக தத்துவ விளக்கமளிக்க முடிகிறது.

     இத்தணை நாள் ரஜினியை விமர்சித்தவர்கள் இப்போது அவரிடம் விழுந்துவிட்டார்கள்.அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு டயலாக்.
     ரவிக்குமார் இப்போதே துண்டு போட்டுவிட்டார் மோடி தலித்துகளுக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்று. இன்னும் சிலர் மோடியின் அண்டியார் நீலம் என்பது மூதல் பல வகையான குறியீடுகளை எதிர்கால்த்தில் கண்டுபிடிக்கலாம்.

     காபாலி இஸ் எ அதுவாலே.

     • நண்பர் மனோஜ்,

      அத்தகைய உளவியலின் முற்றிய அரசியல் வடிவங்கள் தான் ராம்விலாஸ் பஸ்வான் வகையராக்கள் என்ற உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

      இத்தகைய உளவியல் வளர்வதற்குக் காரணம், களத்தில் மக்களுக்காகச் செயல்படாமலும், அதிலிருந்து கற்றுக் கொள்ளாமலும் வெறுமனே மெலோட்டமாக முற்போக்கு பேசுவதோடு கடமையை முடித்துக் கொள்வதுமே என்பது என் கருத்து. நடைமுறையில் கறாராக இல்லாது போய், சமூக அவலங்களைத் தீர்க்க சரியான தீர்வுகளை வழங்க முடியாமல், பின்னர் தன்னை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி கொள்கைகளை விட்டுக் கொடுப்பது, அதற்கு தாமே வெட்கித் தலை குனியும் படி ஒரு விளக்கத்தைக் கொடுத்துக் கொள்வது என வளர்ந்து கடைசியாக திருமாவளவன், இரவிக்குமார் போன்ற பிழைப்புவாதிகளாக மாறுகிறார்கள்.

      இரண்டாவதாக தனி நபர் வழிபாடு மீதான முற்போக்காளர்களின் கண்ணோட்டம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தம்மை முன்னிலைப்படுத்தி சிந்திப்பது, நீங்கள் குறிப்பிட்டவாறு தியாகம் செய்யாமல் தனது அரைகுறை ’அறிவை’ முழுமையானதாக நம்பி தன்னை முன்னிறுத்தி முற்போக்காகக் காட்ட விரும்புபவர்களும் விசிக அரசியலுக்கு நழுவுவதும் யதார்த்தமே.

      • கபாலியை விட்டுவிட்டு வேறு விசயங்களை விவாதிக்கும் இந்த இருவருமே இந்த விவாதத்தின் நம்பிக்கை கீற்று.

 2. ” ஒரு உடலின் வெவ்வேறு அங்கங்களை போன்றது ஒவ்வொரு சமூகப்பிரிவினரின் பணி”.யாருடைய உடலின் சுக்தேவ் ?

 3. 50 கோடிக்கு மேல் சம்பளம்வாங்கும் ரஜினிய வச்சு 100 கோடிக்கு மேல செலவுசெஞ்சு எடுக்கிற படம், தலித் படமா? ஆதிக்க சாதி படமா? அல்லது அவ்வாள் படமாங்கிறத தாண்டி அதுல சொல்லப்படுற கருத்துக்கள், 100 கோடிய 1000ம் கோடியா எப்படி மாத்துறது, அதுக்கு ஏதாச்சும் சில அடக்குமுறையையும், கதாநாயகனின் எழுச்சியுரையையும் சேத்துக்கலாமா? அப்படிங்கிற அளவுலதான் அது இருக்கும். அந்த அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர், விஜயகாந்த், ரஜினி வகையாரக்களின் பெரும்பாலான படங்கள் அமைந்திருக்கு.

  இதுல இந்தமுறை இயக்குநர் ரஞ்சித் தன்னிடம் இருந்த லேகியத்தையோ, அல்லது ரஜினிக்காக சிறப்பான முறையில் செஞ்ச லேகியத்தையோ தனதுஉறையில் முடிந்து விற்க முயன்று தோற்றுப்போயிருக்கிறார்.

  இந்த படம் தொற்றுப்போனதுதான் இதனைப் பலரும் விர்சிப்பதற்குக் காரணமே அன்றி வேறில்லை, ஜெயித்திருந்தால் எதிர்த்துப்பேசும் நாவுகள் காணாம்ல் போயிருக்கும் போயிருக்கும்.

  ஆனாலும் வினவு இதனை எதிர்க்கவே செய்திருக்கும் என நம்பலாம் ஏனெனில் படம் வெளிவருவதற்கு முன்பே நெறுப்பா? கருப்பா ? என தகவல் சொன்னவர்களில்லையா?

  இந்த அடிப்படையில்தான் ஜெயாவை, பாசிஸ்ட் என்று வினவு அழைப்பதும் நிகழ்கிறது.

  ஆனால் சுகதேவ் சொல்லும் தத்துவ ஞான விளக்கமென்பது சாதுர்யமாக தப்பிச்செல்லும் செயல்.

  இங்கு எழும் ஒரே கேள்வி கையையும், காலையும், நாம் நாவோடு ஒப்படவில்லை, ஆனால் ஏன் சுகதேவ் வினவைத் தவிர பிற எந்த ஊடக நாவுகளும் ஜெயாவுக்கு எதிதிரில் அறுபட்டுப்போகிறது…

  ப்ளீஸ் … மீண்டும் ஒரு தத்துவத்தைச் சொல்லி எங்களை பயமுறுத்தாதீர்கள்.

 4. Mr.THIRUMAA nowadays called KULASAMY by their party cadres and caste folks.Earlier these people called their AANDAIS as kulasamy,now they give into new AANDAIS in their own caste,but rest of the DALITS stay where they are,nothing else.

 5. @குருசாமி மயில்வாகனன்

  /// தமிழ் சினிமாவில் முதன்முதலாக அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் முதன்மைக் கதாபாத்திரம் கபாலிதான். காபாலியை நான் வரவேற்கிறேன். ///

  சமீப கால படங்களை அண்ணன் குருசாமி மயில்வாகணன் அவர்கள் பார்ப்பதில்லையோ, பல்வேறு படங்களில் அம்பேத்கர் புகைப்படங்கள், அம்பேத்கர் குறித்த வசனங்கள் ஆங்காங்கு வருகின்றன. அவ்வளவு ஏன்? இதே இரஞ்சித்தின் மெட்ராஸ் படம் தலித் மக்களின் வாழ்க்கையைச் சொன்ன அளவில் 100ல் ஒரு பங்காவது கபாலி பேசியிருக்குமா?. ஒரு வேளை ரஜினி என்ற பிம்பத்தின் மீதான பிரமிப்பும் ’மரியாதையும்’ உங்கள் மனதின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் தான், ரஜினி ’வாயிலிருந்தே’ அம்பேத்கரைப் பற்றி பேச வைத்த ரஞ்சித்தை வினவு பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்றே எண்ணத் தோன்றியிருக்கிறது.

  ///படத்தின் இறுதியில் கிஷோர் பேசும் வசனங்கள்தான் கதையின் வில்லன். அவன் சாதியை மட்டுமல்ல வர்க்கத்தையும்தான் குறிப்பிடுகிறான். தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’? ///

  கத்தி திரைப்படம் கூடத்தான் வர்க்கத்தைப் பற்றி வசனம் பேசுகிறது.

  /// ஆனால், பெரும்பான்மையான ரஜினி ரசிகர்களுக்கும் கபாலி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, படத்தின் மீது அவர்களுக்கு எரிச்சலும் உள்ளது. ஒரு எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகின்ற மாபெரும் பெருமையைப் பெற்ற முதல் தமிழ் சினிமா கபாலி. காபாலியை நான் வரவேற்கிறேன் ///

  ரஜினி இரசிகர்களுக்கு இது எஸ்.சி படம் என்பதால் பிடிக்காமல் போனது எனில் பாபா ஏன் ரசிகர்களால் தூக்கி எறியப்பட்டது? இரசிகர்களில் ஐ.டி நிறுவன இரசிகர்கள், கீழ்தட்டு இரசிகர்கள் என இரு வகைப்பாடு உண்டு. எஸ்.சி படம் என்று வெறுப்பது ஐ.டி. நிறுவன விசிலடிச்சான் குஞ்சுகள் தான். விறுவிறுப்பு, ஆணாதிக்க வசனங்கள் ரஜினிக்கு உரிய பிரம்மாண்டம் போன்றவையே கீழ் தட்டு இரசிகர்களின் எதிர்பார்ப்பு. சாதாரண இரசிகர்களைப் பொறுத்த வரையில், பாபா படத்தைப் புறக்கணித்த அதே காரணம் தான் இப்படத்தின் மீதான் வெறுப்பிற்குக் காரணம்.
  தவிர, ரஜினி இரசிககிகாமணிகளால் தலித்துகள் குறித்த 2,3 வசனங்களையே பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்திற்காகவே, கபாலி தலித் பிரச்சினை குறித்து பேசும் படமாகி விடுமா ?. அப்படியெனில் மெட்ராஸ் படத்தோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்களும் ஒரு முற்போக்கு ரஜினி ‘இரசிகராக’ மாறியிருப்பதையே உங்களது கபாலி வரவேற்பு காட்டுகிறது.

  /// ‘வில்லேஜ் தீம்களில்’ அம்பேத்கர் படத்தை மாட்டிவைக்கும் நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் இருக்கிறதா என்ன? ////

  வினவு கூற விழைவது நகரத்தின் நட்சத்திர ஓட்டல்களில் என்றாவது ஒரு நாள் வில்லேஜ் தீமை உருவாக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமத்து அடையாளங்களை செயற்கையாக ஏற்படுத்தி கிராமிய மணத்தை உருவாக்க முயற்சிப்பது போல், கபாலியிலும் அங்கின்றும் இங்கொன்றுமாக தலித் பிரச்சினை குறித்த வசனங்கள் சொறுகி வைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் படத்தின் கதை தலித் பிரச்சினை பற்றியதா ?. பின் எதற்காக ரஞ்சித்தையும் கபாலியையும் பாராட்ட வேண்டும் ?.

  வில்லேஜ் தீம் தான் அம்பேத்கர் படம். ரியாலிட்டி அதாவது அந்த நட்சத்திர ஓட்டல் தான் தாதாவின் மசாலா கதை.

 6. கோவன் கைதை பா.ஜ.க எதிர்த்தது என்ற எனது கூற்றை கலப்படமற்ற பொய் என்று சொல்லியிருப்பதால் அது பற்றி கூடுதல் தகவலை அளிக்க விரும்புகிறேன். கோவன் கைதை முதலில் எதிர்த்த தமிழிசை பிறகு அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் கோவன் கைது விவகாரத்தில் பா.ஜ.க.வின் உப்புசப்பற்ற நிலைப்பாட்டை கண்டு கோபமுற்ற மெய்நிகர் உலக இந்துத்துவர்கள் பா.ஜ.க தலைமைக்கு நெருக்கடி கொடுக்க துவங்கினர். அதில் ஒரு நபர் கோவனின் மோடி எதிர்ப்பு பாடலை வெளியிட்டு தமிழிசை, வானதி போன்றோருக்கெல்லாம் டேக் செய்து பாஜக தலைவர்களுக்கு சுரணை ஊட்ட முயற்சித்தார். இருந்தும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த பிரகாஷ் ஜவடேகர் ‘a folk singer was arrested for singing an anti-liquor song’ என்று ஜெயலலிதா அரசை விமர்சித்தார். வேண்டுமானால், இந்த பேட்டியை யூடியூபில் கேளுங்கள். கோவன் கைதை பா.ஜ.க ஆதரிக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால், அது எதார்த்தமில்லை. எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

  வெவ்வேறு புள்ளிகளுக்கு நடுவே கோடிழுத்து அபத்த முடிவுகளை நீங்கள் வந்தடைவதை உணர்த்தவே (உ.ம். உங்களுக்கு ரஜினி ரசிகர்கள் மேல் என்பது போன்ற) இதை சொல்ல வேண்டி வந்தது. நன்றி.

  • சுகதேவ், பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ கருத்து, கட்சி ரீதியான கருத்து என்ன என்பது இன்னமும் உங்களுக்குத் தெரியவில்லையா? கோவன் கைது குறித்த அத்தனையும் வினவிலேயே ஆவணமாக உள்ளன. பிரகாஷ் ஜவடேகர் சொன்னது மட்டும் எங்களுக்குத் தெரியாமல் போய்விடுமா என்ன? ஆங்கில் பத்திரிகைகளின் பிரபலமான செய்தியின் கோணத்தில் அவர் பேசியிருக்கிறார். அதில் நாட்டுப்புற பாடகர், டாஸ்மாக் எதிர்ப்பு போன்ற பொதுவான அம்சங்களில் பேசுகிறார். இதில் ஜெயலலிதா அரசை, பா.ஜ.க கண்டிக்கிறது என்ற அதிகாரப் பூர்வமான நிலைப்பாடு இல்லை. மேலும் // கோவன் கைதை பா.ஜ.க ஆதரிக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால், அது எதார்த்தமில்லை.// என்று எழுதுமளவுக்கு உங்கள் பார்வை இருண்டுவிட்ட படியால் பேசிப் புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கையில்லை.

   இருப்பினும் மனந்தளராமல் கமலாலயத்திற்கு தொலைபேசி, தமிழிசை அவர்களிடம் நேரடியாகவே இந்த விவகாரம் குறித்து நீங்கள் விசாரிக்க்லாம். ஒரு விவாதத்தில் பேசப்படும் பொருள் குறித்து உரையாடும் போது தான் சொன்னது என்னவாகினும் சரி என்று தொப்பிக்காக தலை வெட்டும் ஆபத்தில் விழுந்து விட்டால் அதற்கு எந்த வைத்தியமும் இல்லை. நன்றி

   • //ஆங்கில் பத்திரிகைகளின் பிரபலமான செய்தியின் கோணத்தில் அவர் பேசியிருக்கிறார்.// இப்படி ஒரு கோணத்தை முதன்முறையாக இப்போது தான் கேள்விபடுகிறேன். என்னை தமிழிசையிடம் கேட்க அறிவுறுத்திய நீங்கள், பிரகாஷ் ஜவடேகரிடம் அவர் பேசிய கோணத்தை கேட்டு உறுதிப்படுத்தினீர்களா? மற்ற பிரச்சினைகளில் எல்லாம் தமிழக பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்களை வாழ்த்தி வரவேற்கும் பா.ஜ.க.வினர், இந்த பிரச்சினையில் திருப்தி கொள்ளாதிருந்தது ஏன் என்றும் கேட்டு விடுங்கள்.

    கலை இலக்கிய விமர்சன பயிற்சியின்மையும், அதை கற்றுக் கொள்வது குறித்த அக்கறையின்மையுமே உங்களை தடித்த வார்த்தைகளை பிரயோகிக்க வைக்கிறது. கொஞ்சம் மாறுபட்டு விவாதித்தாலே சந்தேகம் கொள்கிறீர்கள். நண்பர், வாசகர் என்று வேறுபடுத்துகிறீர்கள். அதனை புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி விவாதித்தால் பதற்றம் அடைகிறீர்கள்.

    நான் அடையாள அரசியலையோ/ பின்நவீனத்துவத்தையோ முன்வைக்கவில்லை. மார்க்சிய கலை இலக்கிய விமர்சன அணுகுமுறை செழுமை பெற வேண்டும் என்பதே எனது அவா. இதை கூட புரிந்து கொள்ள முடியாததற்கு உங்களை நீங்கள் முதலில் நொந்து கொள்ளுங்கள். கலை இலக்கிய விமர்சனத்தை எப்படி மேற்கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் அழகாக எழுதி வருகிறார்கள். அதை வாசியுங்கள். நன்றி.

 7. Tracy Chapman is sponsored by American capitalism. But you have no problem.

  Ilayaraja was sponsored by thevar castists like Bharathi Raja and Brahmins like Maniratnam. Also he is a brahminical supporter. You don’t care about that too.

  You claim Western Classical music is an expression of people’s mind. But most of the music were played in palaces and churches.

  You get goosebumps from Shreya Goshal’s songs. Ignoring, the same capitalist and castist forces are behind that.

  But when someone talk about Kabali or Free Software (I remember Vinavu!) as a change and a step in right direction, you loose your cool and start to claim that it is useless, it has hidden agenda and so on.

  I think there are some authors in your circle. If they like Tracy Chapman she will be portrayed as a good person. If they like Snoop Dog then you will shamelessly publish another article saying Snoop Dog is revolutionary. If the author likes Ilaya Raja, then he will become a hero. Subjective choices are given a concession in your fault finding committee. Great!

 8. பார்ப்பனீயம் எனப்படுவது யாது என்பதன் என்னுடைய புரிதலை ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறேன்.
  1) கிருஷ்ணா என்ற பாடகருக்கு விருது கிடைத்ததை செயமோகன் மிக கேவலமாக விமரிசித்தார். அவர் அய்யரை எதிர்த்து அய்யங்காரிய அரசியல் செய்கிறார், வலுவான அரசியல் செய்யும் பின்புலத்தினால் அந்த விருதை அடைந்தார் என்பது அவரின் தரப்பு. ஆனால் செயமோகனுக்கு எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் எதிர்ப்பு வந்தது. எங்களை எதிர்ப்பதும் எங்கள் தரப்பிலிருந்தே ஒருவராக இருக்க வேண்டுமே தவிர நீ யார்? எங்களின் தகுதி பற்றி பேச என்பதே எதிர்ப்பின் தரப்பு. அதாவது, விளையாட்டின் இரு தரப்பிலும் எமது ஆட்களே ஆடவேண்டும். மற்ற எல்லோரும் வெட்டப் படக் கூடிய காய்களே.
  2) அம்பேத்கரை ஆதரிப்பது பெரியாரை எதிர்ப்பது. பிரித்து ஆள்வது அல்லது அணைத்துக் கெடுப்பது.
  அணைத்துக் கெடுத்ததினால் தான் பிறப்பாலே வர்க்கம் புகுத்தும் இந்து மதத்தையோ, பார்பனீயத்தையோ விமர்சிக்காமலேயே கம்யூனிஸ்ட் கட்சிகளினால் வர்க்கத்தை எதிர்த்து அரசியல் கட்சி நடத்த முடிகிறது.
  இன்னும் பல அம்சங்கள் அவைகள் இங்கே விவரிக்க தேவை இல்லை.

  எனக்கு ஒரு கேள்வி உள்ளது. மயிர் பிளக்கும் விவாதங்களினால், நாம் தேவைக்கு அதிகமான எதிரிகளை உற்பத்தி செய்கிறோமா?
  சிறு தவறு இருந்தாலும் எதிர்ப்பது சரியா அல்லது சிறு ஆதரவு இருந்தாலும் அவர்களை நம்மை நோக்கி இழுப்பது சரியா (அதாவது அவர்களை ஆதரித்து எதிர் கருத்துக்களை நீர்த்துப் போகச்செய்வது )?

  இதை ஏன் நான் இங்கே எழுப்புகிறேன் என்றால் கபாலி இயக்குநரின் தரப்பில் இருக்கும் சிறிதளவேயான நம் தரப்பிற்க்காக ஆதரிப்பதா கூடாதா என்பதின் தெளிவை பெறுவதற்காக

  • ////எனக்கு ஒரு கேள்வி உள்ளது. மயிர் பிளக்கும் விவாதங்களினால், நாம் தேவைக்கு அதிகமான எதிரிகளை உற்பத்தி செய்கிறோமா?
   சிறு தவறு இருந்தாலும் எதிர்ப்பது சரியா அல்லது சிறு ஆதரவு இருந்தாலும் அவர்களை நம்மை நோக்கி இழுப்பது சரியா (அதாவது அவர்களை ஆதரித்து எதிர் கருத்துக்களை நீர்த்துப் போகச்செய்வது )?

   இதை ஏன் நான் இங்கே எழுப்புகிறேன் என்றால் கபாலி இயக்குநரின் தரப்பில் இருக்கும் சிறிதளவேயான நம் தரப்பிற்க்காக ஆதரிப்பதா கூடாதா என்பதின் தெளிவை பெறுவதற்காக/////

   நண்பர் மாதவ்,

   இந்தியாவே அன்னா ஹசாரேயை மெச்சித் தள்ளிய போது, ஏகாதிபத்திய, பார்ப்பனீய அடிவருடியான அன்னா ஹசாரேயை வினவும் அதன் தோழமை அமைப்புகளும் தான் தோலுறித்தார்கள்.

   சிறு தவறுக்கு விமர்சனம் வைக்கலாம், மக்கள் விரோதத் தன்மைக்கு தோலுரிப்புதான் மிகச் சிறந்த மருந்து. அவ்வகையில் கபாலி குறித்த விமர்சனக் கட்டுரையை இரஞ்சித்தின் தலித்தியப் பார்வை குறித்த விமர்சனமாகவும், இவ்விவாதக் கட்டுரையை, கபாலியை மிகப் பெரிய புரட்சி என்று மெச்சித்தள்ளிய ’முற்போக்காளர்கள்” மீதான விமர்சனமாகவும் நான் பார்க்கிறேன்.

   விமர்சனங்களின் அரசியலை நேர்மறையாகப் புரிந்து கொள்ளும் தன்மையுடையவர்களுக்கு, தமது மீதான விமர்சனங்களை அக்கறையோடு கவனித்து அதில் தம்மை சுயபரிசீலனை செய்து கொள்ளும் அல்லது அது குறித்து நேர்மையாக விவாதிக்கும் தன்மையுடைய ஜனநாயகவாதிகளைக் கண்டிப்பாக இத்தகைய விவாதங்களின் மூலம் நாம் இழக்கப் போவதில்லை. அவர்களுக்கு வினவு நட்பு சக்தியாக மட்டுமே இருக்க முடியும்.

   மாறாக , ஊரே என்னைப் புகழ்கிறது, இவர்கள் யார் நம்மை வியாக்கியானம் செய்ய? என்ற கண்ணோட்டத்தில் விமர்சனங்களை எதிர்கொள்வோர் நமக்கு புதிய எதிரியாக உருவாகப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே, தங்களது பிழைப்புவாத அரசியல் சித்தாந்தத்தில் ஊறிப் போய், வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புகளை கூட்டத்தோடு கூட்டமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவதூறுகளைப் பரப்பி தங்களை யோக்கியவான்களாக நிறுவிக் கொள்பவர்களாக இருக்கின்றனர்.

   மேற்கூறியவை விமர்சனத்துக்குள்ளாக்கப்படுபவர்கள் பற்றியது.

   விமர்சனத்துக்குள்ளாக்கப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள், விமர்சனத்துக்குள்ளாக்கப்படுபவர்களின் சித்தாந்தத்தை ஆதரிக்கிறவர்களா, அல்லது தனி மனிதனாக அந்த நபரை ஆதரிக்கிறாரா, அல்லது ஊரோடு சேர்ந்து போகிற போக்கில் ஆதரிக்கிறாரா? என்பதைப் பொறுத்து தான் அவர் ஆதரவாளராக மாறுவதும், எதிரியாக மாறுவதும் அமையும்.

   தலித் மக்களின் வாழ்க்கைக்காக ஏதேனும் ஒரு நன்மை கிடைத்துவிடாதா என்ற ஆதங்கத்தில் கபாலியை தலித் படமாகக் கொண்டாடுபவர்கள், இவ்விவாதங்களின் மூலம் கபாலியை ஏன் தலித்துகள் கொண்டாடக் கூடாது என்பதை விவாதித்து சுயபரிசீலனையோடு ஒரு முடிவு எடுப்பார்கள் என்பது உறுதி.

   தனிமனிதராக ரஞ்சித்தைப் பாராட்டும் நபர்களுக்கு, நாம் பேசும் எதுவும் புரியப் போவதுமில்லை, அவர்களுக்கு அது குறித்து அக்கறையும் இருக்கப் போவதில்லை. அவர்கள் எதிரியின் பக்கம் தான் ஏற்கனவே சரிந்து நிற்கிறார்கள். இழுக்கப் போனால் நாமும் சறுக்க நேரிடுமே ஒழிய வேறெந்த சிளைவும் இருக்காது.

   ஊரோடு ஊராக கபாலியை ஆதரிப்பவர்கள்- கனிசமான தொகையாளர்கள் – மேற்கூறிய இருதரப்பும் கலந்த கலவையானவர்கள்.எத்தரப்போடு இணைய விருப்பம் உள்ளதோ அதோடு இணைந்து கொள்வார்கள்.

   ஒரு வேளை ரஞ்சித் அம்பேத்கரை முழுமையாகப் படித்திருந்தால், அவரது மனசாட்சிக்குத் தெரியும், அம்பேத்கர் கூறிய படி சாதியத்தை அழிக்க தமது படத்தில் ஒரு துரும்பையேனும் எடுத்து வைத்திருக்கிறோமா, அல்லது திருமா வின் கனவான தலித் நாடாள வேண்டும் என்ற கருத்தை தமது படத்தில் காட்டியிருக்கிறோமா என்று. இரஞ்சித்தே உங்களின் கடைசிக் கேள்விக்கு பதில் சொல்லட்டும், இயக்குனரின் தரப்பில் தலித் மக்களின் நலனுக்கு (அம்பேத்கரின் விருப்பமான சாதியை ஒழித்தல் என்பதற்கு) சிறிதளவாவது கபாலியில் காட்சியோ, கதையமைப்போ இருக்கிறதா என்று. அப்படி ஒரு அம்சம் இருக்கிறது என்று அவர் எண்ணி வினவுக்கு புது எதிரியாக அவர் மாறுவார் என்றால் , அப்படி ஒரு எதிரியை புதியதொரு திருமா வை வரவேற்போம்.

   • “விமர்சனங்களை அக்கறையோடு கவனித்து அதில் தம்மை சுயபரிசீலனை செய்து கொள்ளும் அல்லது அது குறித்து நேர்மையாக விவாதிக்கும் தன்மையுடைய ஜனநாயகவாதிகளைக் கண்டிப்பாக இத்தகைய விவாதங்களின் மூலம் நாம் இழக்கப் போவதில்லை.”
    Thanks for the clarification.

 9. கபாலியில் கபாலி பென்ஸ் காரில் செல்வது பற்றிய வினவின் விமர்சனம் அறியாமையின் வெளிப்பாடாக எடுத்துகொல்வதா அல்லது வர்க்க உணர்வின் வெளிப்பாடாக எடுத்துகொள் வதா என்று தெரியவில்லை…! இன்றைய முதாளித்துவம் தலித் மக்களுக்கும் பொருளாதார உயர்விற்ற்கு தரும் சில சந்தர்ப்பங்களை கூட வினவு மறுதலித்தத்தை இதற்கு முப்பே வினவு கட்டுரைகளில் பார்த்து இருக்கின்றேம்…பன்னாட்டு நிறுவனங்களில் அவர்கள் கோரும் பயணத்துக்கான கார் போன்ற வாகனங்களை இயக்குவதற்ற்கு (contract basis ) தலித் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கூட வினவு இதற்ற்கு முன்னே குறைகூறியுள்ளது….

  தலித் மக்கள் ஏழைகளாகவே இருக்கவேண்டும்.., காரில் கூட பயணிக்கக்கூடாது என்ற வினவின் கொள்கை வர்க்க உணர்வின் வெளிப்பாடாக தெரியவில்லை….. இது வக்கிர உணர்வு தானே தவிர வேறேதுமில்லை…….

  • @ KSK,

   ஐஐடியில் பாப்பாத்திகளின் பாசை பேசிக் கொண்டு காரியம் சாதிக்க மட்டும் தலித்தியம் பேசும் வசந்தா கந்தசாமி அவர்களிடம் போய் இதை எடுத்துப் பேசுங்கள், உங்களுக்குப் புகழாரம் சூட்டுவார்.

   உங்களுக்கு சரியான பதிலை நண்பர் மனோஜ் மறுமொழியெண் 10ல் தெளிவாக விளக்கியுள்ளார்.

   • Do you mean to say that DrVasantha Kandasamy is an upper-class dalit?Your information is wrong.She belongs to BC.Inspite of her better qualifications,she was not promoted and hence she filed writ petitions.She has also supported the struggle of Dalits in getting just appointments in IIT,Chennai as Faculty Members and for admission of Dalit students there.Since your information is wrong about her caste,your accusation that she is hobnobbing with brahmins must also be wrong.Another question-can you call any person as belonging to upper-class just because he/she is working as Faculty Member in IIT? He/she would have got that posting as first generation graduate.Please read the following links to know about DrVasantha Kandasamy-www.thehindu.com/news/cities/chennai/iitmadras-is attempting-to-cover-up-irregularities/article5121105.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utmcampaign=RelatedNews
    http://www.thehindu.com/news/cities/chennai/hc-stays-cbi-probe-into-iitmadras-appoinments/article5125331.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

   • DrVasantha Kandasamy is the proud mother of young poet Meena Kandasamy(32)whose book of poetry-“Touch” was published with a forward by Kamala Das.Meena Kandasamy’s next book of poetry-“Ms.Militancy” was published by the renowned publisher-Navayana.She wrote her novel-The Gypsy Goddess-based on the Kizhvenmani massacre.She co-authored the biography of Dalit leader Ayyankali with M.Nissar.This book had a forward by Kancha Ilaiya.She has also translated the works of Periyar,Thol.Thirumavalavan and the Ezham poet Kasi Ananthan.Her writings are focusing mainly on Caste annihilation,feminism and linguistic identity.

   • அனானியன் , நான் என்ன கூறினேனோ அதற்கு யாதொரு தொடர்பும் இன்றி பேசிக்கொண்டு உள்ளீர்கள்… முதாளித்துவம் கொடுக்கும் சிறு சந்தர்ப்பங்களை கூட தலித் மக்கள் பயன்படுத்திக்கொள்ள என்ன உங்களுக்கு பிரசனை? சிவகாமி IAS பற்றிய ஒரு கட்டுரையில் தலித் மக்கள் அந்நிய நிறுவனங்களின் போக்குவரத்து ஒப்பந்தங்களை பயன்படுத்தியதை குறை கூறி இருந்து… அத்துடன் தொடர்புடைய பிரச்சனையாக தான் இந்த கபாலிகாரில் போகும் பிரச்சனையை பார்க்கின்றேன்…புரிதலுக்கு நன்றி

 10. தலித் மேட்டுக்குடி பி.ஜே.பி உடன் கூட்டு வைத்தாலும் அது முற்போக்கு; ரஜினியுடன் கூட்டு வைத்தாலும் அது முற்போக்கு; அதை யாரும் கேள்வி கேட்க கூடாது. அப்படி கேட்பவர்கள் சாதி வெறியர்கள். தலித் வளர்ச்சியை கண்டு பொறுக்காதவர்கள் என சுலபமாக கடந்து செல்வதை கற்று தேர்ந்துள்ளார்கள் இந்த மேட்டுக்குடி தலித்துகள்.

  தேவயானி , அலெக்ஸ் பால் மேனன் முதல் பூவை மூர்த்திகள் வரை தலித் போர்வையை தேர்ந்த முறையில் பயன்படுத்துகிறர்கள்.

  நம்மூர் அறைகுறை முற்போக்குகள் சம்பளம் வாங்காத வேலையாளாக இவர்களுக்கு பயன்படுகிறார்கள்

 11. —கபாலி திரைப்படம் குறித்தான வினவு தளத்தில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைகள் குறித்து—

  தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? (https://www.vinavu.com/2016/04/26/brahminical-cleverness-in-equating-dmk-admk/) எனற புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரையில் “தேர்தல் அரசியலுக்கு வெளியேதான், மக்கள் விடுதலைக்கும் அதிகாரத்துக்குமான தீர்வு இருக்கிறது என்று நாம் கூறுவதனாலேயே, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அனைத்தும் சமமானவை என்று பொருளல்ல. பாரதிய ஜனதா, காங்கிரசு முதலான ஆளும் வர்க்கக் கட்சிகளாகட்டும், போலி கம்யூனிஸ்டுகள், தலித் கட்சிகள் போன்றவைகளாகட்டும், அவை ஒவ்வொன்றின் தன்மையையும் பிரித்துப் புரிந்து கொள்வது அவசியம்.” என்று கூறப்பட்டிருக்கும்.

  தேர்தல் அரசியலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளைப் மதிப்பீடு செய்வதில் காட்டிய நிதானம், கபாலி பட விமர்சனத்தில் வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது.

  மற்ற ரஜினி படங்களை மதிப்பிடுவதைப் போன்று கபாலி படத்தையும் மதிப்பிட முடியுமா? ரஜினியின் மற்ற படங்களுக்கும் கபாலிக்கும் எந்த வேறுபாடும் இல்லையா? இருக்கிறது. மிக முக்கியமான வேறுபாடு, ரஞ்சித் என்ற தலித் இயக்குனர் கபாலியை இயக்கியிருப்பது.

  ஒரு தலித் இயக்குனர் சாதி இந்துக்கள் கோலோச்சும், இடைநிளைகளின் வாழ்வியலை, சாதி ஆதிக்கத்தைப் பெருமையாக தமிழ்ககாலாசசாரம் என்று சித்தரிக்கும் தமிழ்த் திரையுலகில், ஒரு முன்னணி கதாநாயகனை வைத்து மலேசியத் தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி ஒரு படம் எடுக்கிறார். அதில், சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் சில குறியீடுகளையும், வசனங்களையும் வைக்கிறார். அது தினமணி போன்ற பார்ப்பனியப் பத்திரிக்கைகளுக்கும், சாதி வெறிகளுக்கும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

  இது மிகப் பெரிய புரட்சியல்ல. ஆனால், எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு அவ்வளவு சாதரணமான விசயமுமல்ல. கபாலியை எதிர்த்த சாதி வெறியர்களின் பதிவுகளைப் பார்த்தால் தெரியும், இது அவ்வளவு எளிமையாக அனைவராலும் பார்க்கப்படவில்லை என்று.

  ரஜினி எப்படி ரஞ்சித்துடன் நடிக்க சம்மதித்தார்? என்ற கேள்வியின் பின் இருப்பது எது?

  அது வெறும், ரஞ்சித் புதுமுக இயக்குனர் என்பதனால் மட்டுமல்ல. ரஞ்சித் ஒரு தலித், தலித் மக்களின் வாழவியலைப் பற்றி பேசும் படங்களை எடுத்தவர், ஒரு தலித் இயக்குனர் ரஜினியை எப்படி இயக்கலாம்? ரஜினி எப்படி தலித் ஆதரவு வசனங்களைப் பேசலாம்? என்ற காழ்ப்புணர்ச்சியும் இணைந்துதான் இப்படி ஒரு கேள்வியை கேட்க வைக்கிறது.

  கபாலி படம் பற்றி தினமணியில் வெளி வந்த கட்டுரை, கபாலியை ரஞ்சித்தை முன்வைத்து எதிர்க்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் குரலாய் ஒலித்தது.

  “கலகம் செய்து ஆண்டைகளின் கதை முடிப்பான்”,
  “மேட்டுக்குடியின் கூப்பாடு, இனி நாட்டுக்குள்ள கேக்காது” போன்ற பாடல் வரிகள், காந்தி-அம்பேத்கர் கோட் தொடர்பான வசனங்கள், தலித் மக்களின் உடை அரசியல் பற்றிய வசனங்கள் போன்றவை பல ஆதிக்க சாதிவெறியர்களை வெறுப்படையச் செய்திருக்கின்றன.

  “லிங்கா” போன்ற ரஜினியின் முந்தைய படங்களைப் பற்றி வாயே திறக்காத திரைப் பிரபலங்கள் சிலர், கபாலி படம் சரியில்லை என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். கபாலி படத்தை விமர்சித்த இணைய விமர்சகர் ஒருவர், “கபாலி திரைப்படத்தின் மிகப்பெரிய நெகடிவ் ரஞ்சித் தான்“ என்று கூறுகிறார். லிங்கா படத்தின் விமர்சனத்தின் பொது கே.எஸ்.ரவிக் குமாரைப் பற்றி அப்படிக் கூறவில்லை.
  ஆனால், கபாலி படத்தைப் பற்றி வினவில் வெளிவந்த முதலிரண்டு விமர்சனக் கட்டுரைகளிலும், ரஞ்சித்தை எதிர்க்கும் சாதி வெறியர்களின் வெறிக் கூச்சலைப் ப்பற்றி ஒரு வரி கூட இல்லை. மாறாக, சாதி ஆதிக்க எதிர்ப்பாக ஒலிக்கும் பாடல் வரிகளும், வசனங்களும் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

  ரஜினி என்ற நடிகர், அவரின் அபத்தங்கள், அவரை முதலீடாகக் கொண்டு தயாரிப்பாளர்கள் நடத்தும் கொள்ளை (இந்தக் கொள்ளையில் ரஜினியும் பங்குதாரர்தான்), ரஜினி படத்தின் பின்னுள்ள வியாபார-விளம்பர அரசியல் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும். அதை வினவின் கட்டுரைகள் மிகச்சரியாகவே செய்திருக்கின்றன. அதில் ஏதும் மாற்றுக்கருத்துகள் இல்லை.

  இவையெல்லாம் இருக்கின்றன என்ற காரணத்தினாலேயே, படத்தில் இருக்கும் சில முற்போக்கான விசயங்களை கடந்து செல்வதும், சிறுமைப்படுத்துவதும் எந்த வைகையில் சரி?

  இயக்குனர் ரஞ்சித்தை ‘பழைய தலித்தியம்’ பேசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கும் நபர் என வினவு மதிப்பிடுகின்றது. இருந்துவிட்டுப் போகட்டும், அதற்காகவா ரஞ்சித்தையும், கபாலியையும் சாதி வெறியர்கள் விமர்சிக்கிறார்கள்? பின்னர், ரஞ்சித்தின் மீதான சாதிவெறித் தாக்குதல்கள் பற்றி வினவு பேசாததின் காரணம் என்ன?

  தன்னார்வத் தொண்டு நிறுவனத் தொடர்புதான் காரணம் என்றால், டாடா நிறுவனத்திடமிருந்து நிதி வாங்கிகொண்டு ‘மாதொருபாகன்’ நாவல் எழுதிய பெருமாள்முருகன் பிரச்சினையில், பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும், சாதிவெறியர்களை விமர்சித்தும் வினவில் கட்டுரைகள் வெளிவந்தனவே?

  மாதொருபாகன் என்ற படைப்பும் கபாலி என்ற படைப்பும், இரண்டும் உள்ளடக்கத்திலும் சரி, அதற்கு வந்த எதிர்ப்புகளின் தன்மைகளும் வேறு வேறாக இருக்கலாம். அதற்காக, ரஞ்சித்தின் மீதான சாதிவெறியர்களின் தாக்குதல்களைக் கண்டும் காணாதது போல் விடுவது சரியா?

  கபாலி திரைப்படத்தை ரஞ்சித் இயக்காமல் வேறு ஒரு இயக்குனர் இயக்கியிருந்தால், சாதிவெறியர்கள் இப்படி வெறுப்பை உமிழ்ந்திருப்பார்களா?

  சாதி வெறியர்கள் ரஞ்சித்தை வைத்து கபாலியை எதிர்ப்பதாலேயே முற்போக்காளர்கள் கபாலியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதில் சிலர், சாதிவெறியர்களை எதிரப்பதோடு நிறுத்திக் கொண்டு, கபாலியை விமர்சிக்கிறார்கள். சாதி வெறியர்கள் எதிர்ப்பதாலும், ரஞ்சித் இப்படத்தை இயக்கியிருப்பதாலும், எப்போதும் ரஜினி படத்தின் அபத்தங்களை, சில்லரைத்தனத்தை கூர்மையாக விமர்சிக்கும் முற்போக்காளர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள், அது மட்டுமல்லாமல், படத்தில் வரும் சில ஆதிக்க எதிர்ர்ப்பு குறியீடுகள், வசனங்கள், பாடல்கள் ஆகிவற்றை வைத்து இது சராசரி ரஜினி படம் அல்ல, இதில் இயக்குனர் ரஞ்சித் பல முற்போக்கான விசயங்களை செய்திருக்கிறார் என்று கூறி கபாலியை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

  கபாலி திரைப்படத்தில் பல குறைகள் இருக்கின்றன. சில ‘முற்போக்கு’ விமர்சகர்கள் சித்தரிப்பதைப் போல், கபாலி ஒன்றும் அம்பேத்கரியம்-தலித்தியம் பேசும் புரட்சிப்படமில்லை. அப்படி இயக்குனர் ரஞ்சித்தும் கூறவில்லை. ரஞ்சித்தின் முந்தைய படங்களில் உள்ள யதார்த்த சித்தரிப்புகள் கபாலியில் ரஜினிக்காக காவு வாங்கப்பட்டிருக்கின்றன. இதை ரஞ்சித்தும் மறுக்கவில்லை.

  “கபாலி தமிழ் சினிமாவின் கலகக் குரல்”, கபாலி தமிழ் சினிமாவைப் புரட்டி போட்டுவிட்டது” என்றும் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், அப்படி ஒன்றும் கபாலியில் இல்லை என்பதே எனது கருத்து. மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை, சாதி ஒடுக்குமுறையை ஒரு ‘நல்ல’ கொள்ளைக் கூட்டத்தலைவனின் பார்வையில்தான் சொல்ல வேண்டுமா? அவற்றைச் சொல்வதற்கு வேறு கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாதா? ரஜினிக்காக, கபாலியில் நிறைய சமரசம் செய்திருக்கின்றார் ரஞ்சித். பாத்திரப் படைப்புகள், யதார்த்த மீறல் என பல குறைகள் இருக்கின்றன படத்தில். இவைற்றை விமர்சனம் செய்யும் அனைவரையும் தலித் விரோதிகள் என முத்திரை குத்துவது ஏற்புடையதல்ல.

  கபாலி படத்தில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடுகளும், வசனங்களும் ரஜினி படத்தில் இடம்பெற்றிருப்பதும், ரஜினி வாயால் பேசப்படுவதும் ஒருவகையில் அசாதாரணமானதுதான். வினவு குறிப்பிடுவது போல, மற்ற படங்களில் காவல் நிலையங்களில் அம்பேத்கர் படம் இருப்பதும், கபாலி படத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் விதமும் ஒன்று அல்ல.

  சினிமாவின் மூலம் புரட்சி செய்துவிட முடியாது. ரஞ்சித்தும் அப்படி நினைக்கவில்லை. இயக்குனர் ரஞ்சித்துக்கு இது பற்றிய தெளிவான புரிதல் இருக்கின்றது.

  அப்படி இருக்கையில், ஒரு இளம் தலித் இயக்குனரின் ஒரு புதிய முயற்சி என்ற வகையில், இயக்குனர் ரஞ்சித் கபாலி படத்தில் செய்திருக்கும் சில முற்போக்கான விசயங்களை முதலில் பாராட்டிவிட்டு, அதன் பிறகு, கபாலியை விமர்சனம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

  அதைவிடுத்து, ஒட்டுமொத்தமாக, கபாலியைக் குப்பையில் போடுவதென்பது ஒரு வகையான வறட்டுத்தனத்தின் வெளிப்பாடு என்றே மதிப்பிடத் தோன்றுகின்றது.

  கபாலியைக் கடுமையாக விமர்சிப்பதற்குக் காரணம் வினவின் தலித் விரோத மனப்பான்மைதான் என்று சிலர் கூறுகின்றனர். அப்படிக் கூறுவது சரியான பார்வை இல்லை என்பது எனது கருத்து.

  • நண்பர் கனகு,

   குழந்தை தவறு செய்யும் போது கையாள வேண்டிய நடைமுறையை முற்போக்காளர்களுக்கு விமர்சனம் செய்யும் போது கையாளச் சொல்லுகிறீர்கள் என்றே கருதுகிறேன்.

   கபாலி புரட்சிப்படமுமல்ல, இரஞ்சித்தும் அவ்வாறு கூறவில்லை தான். ஆனால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அதைப் பெரிய புரட்சியாகத் தானே சித்தரிக்கிறார்கள். அதனையும் தவறு என்றே நீங்களும் கூறுகின்றீர்கள், எனினும் அதில் உள்ள சில முற்போக்கு அம்சங்களைப் பாராட்டி விட்டு பின்னர் பக்குவமாக அதில் உள்ள விமர்சனங்களை வினவு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறீர்கள்.

   கபாலியில் ”கலகம் செய்து ஆண்டைகளின் கதை முடிப்பான்”,“மேட்டுக்குடியின் கூப்பாடு, இனி நாட்டுக்குள்ள கேக்காது” போன்ற பாடல் வரிகள், ”காந்தி-அம்பேத்கர் கோட்” தொடர்பான வசனங்கள், தலித் மக்களின் உடை அரசியல் பற்றிய வசனங்கள் போன்றவற்றை படத்தில் வைத்ததற்காக பாராட்டவேண்டும் எனில், இதற்கு முன்னால் வினவு தளத்தில் வெளிவந்திருக்கும் சினிமா விமர்சனங்களில் நான் படித்த எந்தப் படத்திற்குமான விமர்சனமும் வசனங்களுக்காக மட்டும் படத்தைப் பாராட்டி வந்ததில்லை. கபாலிக்கு மட்டும் அப்படி ஏன் சிறப்புக் கவனம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

   படத்தின் திரைக்கதை ஒடுக்கப்படும் மக்களின் வாழ்க்கையை ஒரு தாதாவின் கையில் லாஜிக்கை மீறி ஒப்படைத்திருக்கிறது. தலித் மக்களின் விடுதலைக்காக படம் வழிகாட்டவில்லை என்றாலும், சிங்கப்பூரில் ஒடுக்கப்படும் மக்களின் யதார்த்த வாழ்வை முன்னிலைப்படுத்தும் படமாகவாவது இருந்திருக்கலாமே ?. அவ்வாறும் இல்லாத ஒரு படத்தை எந்த அடிப்படையில் பாராட்டவேண்டும்?.

   இயக்குனர் தலித் என்பதாலோ, அல்லது அவர் ஆதிக்க சாதி வெறியர்களால் கடும் சாடலுக்கு உள்ளாக்கப்படுகிறார் என்பதாலோ, இப்படத்தை சிறந்த படம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

   இப்படத்தை சாதி வெறியோடு விமர்சித்தவர்களுக்கு எதிராக வினவு கட்டுரை எழுத வேண்டும் என்பது எனது விருப்பமும் கூட. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

   தவிர வினவு, திரை விமர்சனங்களில் இத்தகைய கறாரான கண்ணோட்டத்தை பின்பற்றவேண்டும், சுகதேவ் போன்ற வினவுக்கு ஆதரவானவர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் விவாதிப்பது நல்லது என்று கருதுகிறேன்.

   • தோழர், ரஞ்சித் தலித் இயக்குனர் என்பதால், கபாலி படத்தை சிறந்த படமென்று ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. வினவு, கபாலி படத்தை பிரித்து மேயட்டும். அது பிரித்து மேயப்பட வேண்டியதுதான்.

    ஆனால், எதற்காக சாதி வெறியர்கள் ரஞ்சித்தின் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்?

    இதுவரை, ரஜினியோ இல்லை எந்த முன்னணி நடிகரோ நான் மேற் குறிப்பிட்ட வசனங்களைப் பேசியிருக்கிறார்களா? அதற்கு தினமனியிடமிருந்தும், சாதி வெறியர்களிடமிருந்தும், இப்படி ஒரு எதிர்வினை வந்திருக்கிறதா?

    இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ்த்திரையுலகில், ஒரு தலித் இயக்குனர் சில முற்போக்கு விசயங்களைச் செய்ய முயற்சி செய்திருக்கின்றார். அதில் பல குறைபாடுகள் இருக்கின்றன, இல்லை என்று கூறவில்லை. அவ்விசயங்களைக் கொண்டாடச் சொல்லவில்லை. ஆனால், சாதிவெறியர்கள் இவ்வளவு எதிர்வினை புரிந்த பிறகும், அம்முற்போக்கான விசயங்களை சிறுமைப்படுத்துவதும், சாதிவெறியர்களின் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் செல்வதும் எதற்காக?

    ஓட்டுக்கட்சிகளைத் தரம்பிரித்து விமர்சனம் செய்யும் தோழர்கள், ஒரு தலித் இயக்குனர் செய்த (அல்ல செய்ய நினைத்த) சில முற்போக்கான விசயங்களை, மற்ற சராசரி இயக்குனர்களின் படங்களைப் போல எடுத்தோம், கவிழ்த்தோம் என்று விமர்சனம் செய்திருக்க வேண்டுமா?

    ரஞ்சித் ஒன்றும் பார்ப்பனிய கும்பலோடு கைகோர்க்கும் வலதுசாரி அல்ல. அவர் ஒரு சமூகப்பற்றுக் கொண்ட இயக்குனர், அவரின் சமூக-அரசியல் பார்வையில் குறைபாடுகள் இருக்கலாம், ஆனால், அதற்காக அவரின் முன்னெடுப்புகள் நிராகரிக்கப்பட வேண்டியவையா?

    ஒரு சில ‘போலி முற்போக்காளர்கள்’ கபாலி படத்தை தலித் சினிமா என்று கொண்டாடுவதால், நாம் அதை எதிர் நிலையில் நின்று எதிர்க்க வேண்டுமா?

    ரஞ்சித்தைப் பாராட்டுவதால், ரஜினியை ஆதரித்தாகிவிடுமா?

    இப்படத்தை இயக்க , ரஞ்சித் ஒன்றும் ரஜினியை அணுகவில்லை, ரஜினிதான் தயாரிப்பாளர் தாணுவின் மூலம் ரஞ்சித்தை அணுகியிருக்கின்றார். அந்த சூழ்நிலையில் , எந்த ஒரு இயக்குனரும் அந்த வாய்ப்பை நிராகரித்திருக்க முடியுமா?

    தான் சொல்லநினைத்த கருத்தையும் சொல்ல வேண்டும், ரஜினி ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற சிக்கலுக்குள், ரஞ்சித் பல சமரசங்களைச் செய்திருக்கின்றார், ஆகவேதான், கபாலி ரஜினி படமும் இல்லாமல், ரஞ்சித் படமும் இல்லாமல் வேறொருவிதமாக இருக்கின்றது.

    மனநிலை மருத்துவர் சாலினி கபாலி படத்தைப் பற்றி ஒரு கருத்து தெரிவித்திருந்தார். “ரஜினி முதன்முதலாக, பெண்களைப் பற்றி சிறுமைப்படுத்தாமல், ஆபாசமாக, பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்திருக்கின்றார். அப்படி நடிக்க வைத்ததற்காக இயக்குனர் ரஞ்சித்துப் பாராட்டுக்கள்” என்று கூறியிருந்தார்.

    இவையெல்லாம், கருத்தில் கொண்டு கபாலியை விமர்சித்திருக்கவேண்டும் என்பதே என கருத்து.

 12. பாட்சா,நாயகன்,கபாலி இந்த படங்களில் என்ன ஒற்றுமை வேற்றுமை உள்ளது.உண்மையிலயே ரஞ்சித் தலித் ஆதரவு படம் எடுப்பதாக நினைத்திருந்தால் தன் கருத்தும்,கதையும் பொருத்தமாக வெளிப்படவேண்டுமென்றால் புதுமுக நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருந்தால்,ரஞ்சித் வெளிப்பட