Friday, December 9, 2022
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபுதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ? தோழர் கணேசன்

புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ? தோழர் கணேசன்

-

ganesan rsyf 3மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கைசமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னைமதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.த.கணேசன் ஆற்றிய உரை:

“புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்று கல்வியாளர் போர்வையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்களும், அதன் ஆதரவாளர்களும் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், தொலைக்காட்சிகளில் பேசுகிறர்கள். இதற்கு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பலரும் ஆட்பட்டு ஆமாம், அதில் என்ன பிரச்சினை உள்ளது என கேட்கின்றனர்.

என்ன பிரச்சினை இருக்கு? பார்ப்பனிய சாதி தீண்டாமை கொடுமையால் பெரும்பான்மை மக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி கிடைக்காத நாட்டில், காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை என்று பெரும்பான்மை ஏழை மக்களை கல்வி நிறுவனங்களில் இருந்து விரட்டியடிக்கும் நாட்டில்,5 ம் வகுப்பிற்கு மேல் இனி கல்வி இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை.

ganesan rsyf 1இதன் நோக்கம் என்ன தெரியுமா? பார்ப்பனிய நரி ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி  முறையை உயிர்ப்பிப்பதுதான். அதாவது, பிள்ளைகள் அவனவன் அப்பன் தொழிலை செய்யணும். பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி என்றும், பார்ப்பன – வேதக் கலாச்சாரம்தான் இந்திய கலாச்சாரம் எனும் புதிய கல்விக் கொள்கையை எப்படி வரவேற்க முடியும்?

சமஸ்கிருத திணிக்கும் மோடி அரசின் முயற்சியை பலரும் ஒரு மொழிப் பிரச்சினையாக அணுகுகிறார்கள். இது ஒரு மொழி பிரச்சனையல்ல.  பல தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, வராலாற்று அடையாளங்களை அழித்துவிட்டு ஒற்றை மொழி – ஒற்றை தேசியம் – ஒற்றை பண்பாடு எனும் ஆர்.எஸ்.எஸ் –ன் இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் 1000 அரசு பள்ளிகளில் அரசு சம்பளத்தில் RSS ஆசிரியர்கள் ஷாகா பயிற்சி நடத்த இருக்கிறார்கள். ராஜஸ்தான், குஜராத் என தான் ஆளும் மாநிலங்களில் எல்லாம் பாடப்புத்தகத்தில் இந்துத்துவா கருத்துக்களை புகுத்திவிட்டார்கள். அதை நாடு முழுவதும் செய்யத்தான் இப்போது சமஸ்கிருதத்தை நாடு முழுவதும் திணிக்கிறார்கள்.ganesan rsyf 2

இதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தனியார்வசம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது இந்த புதிய கல்விக்கொள்கை. உலகளவில் உள்ள 200 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவத் துடிக்கிறார்கள். இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது இந்த புதிய கல்விக்கொள்கை.

1965-ல் இந்தித் திணிப்பை  விரட்டியடிக்க தமிழகத்தில் இருந்து தீப்பிழம்பாக மாணவர்கள் கிளம்பியதைப் போல  இன்று நம்மை நெருங்கி வரும் புதிய கல்விக் கொள்கை – சமஸ்கிருத திணிப்பு எனும் அபாயத்தை முறியடிக்க மாணவர்கள் கொதித்தெழ வேண்டும் “.

 1. மாணவர்களிடம் இதன் ஆபத்தைப் புரிய வைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் பற்றி யோசிக்க வேண்டும். புமாஇமு சார்பாக தமிழகம் தழுவிய அளவில் மாணாக்கர்களுக்கான கட்டுரைப் போட்டியை அறிவிக்கலாம்.

 2. //,5 ம் வகுப்பிற்கு மேல் இனி கல்வி இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை.//

  ஆள் பாஸ் திட்டத்தினால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது என்கின்ற கருது நிலவுகிறது .

  ஆசிரியருக்கு கடின உழைப்பை நல்க வேண்டும் என்கின்ற உற்சாகம் போய்விடுகிறது . எப்படி இருந்தாலும் ஆல் பாஸ் தானே என்கின்ற மனோபாவம் வந்துவிடும் .

  அணைத்து வகுப்பிலும் ஆசிரியர்கள் நன்றாக சொல்லிக்கொடுத்தால் தான் , அடுத்த வகுப்பு ஆசிரியர் சொல்லி தர முடியும் . இல்லை என்றால் அவர் கஷ்டப்பட வேண்டும் .முந்தைய வகுப்பில் சொல்லி தராவிட்டால் , யாரும் சொல்லி தர வில்லை நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்கின்ற மனோபாவமும் வரலாம் .

  உண்மையாகவே உழைக்கும் ஆசிரியர்களையும் சமூகம் ஒரே தட்டில் வைத்து , சொல்லி கொடுத்தா என்ன இல்லை என்றால் என்ன இவங்களுக்கு காசு வந்துவிடுகிறது என்கின்ற பேச்சும் வருகிறது .

  ஐந்தாம் வகுப்பில் தேர்வு திட்டத்தை அதனால் கொண்டு வந்து இருக்கிறார்கள் . அனால் வெளிநாடுகளில் இருப்பது போல பள்ளி கூடத்திற்கு தர மதிப்பை நிர்ணயம் செய்யும் முறை இதற்கு நல்ல தீர்வாக அமையும்.

  மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் . அனால் மார்க் குறைந்தால் அவர்கள் பாஸாவது தடுக்கப்படாது . ஆனால் அந்த பள்ளியில் எத்துனை பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதை வைத்து பள்ளிக்கு மார்க் வழங்கப்படும் .

  இது ஓபி அடிக்கும் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும், உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களை வெளிச்சம் போட்டு காட்டும் .

  எட்டாவது வரை ஆல் பாஸ் என்று அத்தகை கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டு தான் கொண்டுவர வேண்டும்

 3. இராமன் ! முதலில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை வரட்டும். அதற்கு பிற்பாடு ஆல் பாஸைப் பற்றி பேசலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க