Friday, June 2, 2023
முகப்புசெய்திகாவிரி உரிமை நிலைநாட்ட - டாஸ்மாக்கை இழுத்து மூட - மக்கள் அதிகாரம்

காவிரி உரிமை நிலைநாட்ட – டாஸ்மாக்கை இழுத்து மூட – மக்கள் அதிகாரம்

-

1. காவிரி நீர் உரிமை நிலைநாட்டிட சீர்காழியில் சாலை மறியல்

pp-block-road-demanding-cauvery-water-5காவிரியில் தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்டிட!
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட!
காவிரிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று ஆணையம் உடனடியாக அமைத்திட!
மேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட!

30-08-2016 அன்று காலை 10 மணி அளவில் சீர்காழி கிராமங்களில் மக்கள் அதிகாரம், விவசாயிகள் விடுதலை முன்னணி, அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி

2. மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பேரணி – ஆர்ப்பாட்டம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

tasmac-ntc-aமணப்பாறை தாலுக்காவுக்கு உட்பட்ட அமையபுரம், வேங்கைகுறிச்சி, பழைய கோட்டைபஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைவரும் கூலி வேலை, கட்டிட வேலை செய்வோராகவும் மற்றும் சிறுவிவசாயிகளாகவும் உள்ளனர். இப்பகுதியில் மையமாக உள்ள ஒத்தக்கடை அருகே உள்ள டாஸ்மாக் கடையினால் (கடை எண்.10400) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இக்கடையை சுற்றி உள்ள டீ கடை, டிபன் கடை உள்ளிட்ட அனைத்தும் டாஸ்மாக் பார்களாக மாற்றப்பட்டு குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வந்து காலை முதலே குடிப்பதும், குடித்துவிட்டு சாலையில் கிடப்பது, ஆபாசமாக பேசுவது, பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைப்பது, சாலையில் போவோர் வருவோரிடம் தகராறில் ஈடுபடுவது, அப்பகுதியை கடந்து செல்லும் பெண்களை பார்த்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி கிண்டல் செய்வது என தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் உள்பட பல வயதினரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், தினந்தோறும் எங்கள் கிராமங்களில் நிம்மதியின்றி தவித்து வருகின்றோம். வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை குடித்தே அழிக்கின்றனர். வேலை இல்லாத நாட்களில் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விற்று குடிப்பதும் தடுத்தால் அடிப்பதும், பொருட்களை உடைப்பதும் என மனநலம் பாதிக்க பட்டோர்களாக மாறி வருகின்றனர். போதை தலைக்கேரிய பிறகு கண்ணெதிரே நிற்பது, தாயா, தாரமா என வித்தயாசமின்றி நடந்து கொள்கின்றனர். இதனால் வீதிதோறும் குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

tasmac-ntc-bமன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கணவனை இழந்து 20க்கும் மேற்பட்டோர் விதவைகளாக உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி கை, கால் உடைந்து முடமாவது, உயிரழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. நேர்மையான முறையில் கூலி வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம், அதில் மண் அள்ளிப்போடும் விதமாக அரசு மதுபான கடை உள்ளது.

குடிபோதைக்கு கணவன் அடிமையானதால் மனம் உடைந்து குழந்தைகளை அனாதையாக்கி விட்டுத் தீக்குளித்த மனைவி, குடியால் கணவனை இழந்து சிறு குழந்தைகளோடு அல்லாடும் இளம் விதவை, குடி போதையால் குழந்தைகள், சிறுமிகள், முதியோர் மீதான பாலியல் வன்கொடுமை, குடிப்பவர்களை மட்டுமல்லாமல், பெற்றோர், பிள்ளை மனைவி உள்ளிட்ட ஒட்டுமொத்த சந்ததியினரையே பாதிக்கின்ற சமூகநோயாக டாஸ்மாக் மாற்றிவிட்டது.

சமூகக்குற்றங்கள் அதிகரிப்பது குடிபோதையினால்தான் என்பது காவல் துறையினரே ஒப்புக்கொள்கின்றனர். தவறு செய்யும் குற்றவாளிகளும் குடிபோதையினால்தான் மேற்கண்ட தவறுகளை செய்துள்ளேன் என ஒப்புதல் வாக்குமூலமும் அளித்து வருகின்றனர். எதிர்காலத்தில் உடல் வலிமை, மன வலிமை உள்ள தமிழனை தேட வேண்டிய நிலை ஏற்படும் என்ற அபாயத்தை அனைவரும் உணர்ந்து குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூடுவதே நமது முதல் பணியாக இருக்க வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களுக்கும் இலவசமாக லேப்டாப், ஆட்டுக்குட்டி, மிக்சி வழங்குவதற்கும் டாஸ்மாக் சாராய விற்பனையிலிருந்துதான் பணம் ஒதுக்குவதாக அரசு சொல்லுவதே மோசடியானது.

tasmac-ntc-cதாலி அறுத்த காசில் தங்கம் வேண்டுமென்று எந்த மக்கள் கேட்டார்கள்? படிக்கும் மாணவனை குடிக்க பழக்கிவிட்டு லேப்டாப் கொடுத்து என்ன பயன்? ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல சோறு குழம்பு இல்லாமலும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவிப்பதும் தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் அடித்து நொறுக்குவதும், விற்று குடிப்பதும், வேலை என குடிமகன்கள் கூத்தடிக்கும்போது அரசு வழங்கும் மிக்சி கிரைண்டரை வைத்து எதை அரைப்பது?

ஏழை மக்களைக் குடிக்கவைத்து நோயாளியாக்கி சாகடித்து அதன் மூலம் வரும் வருவாயில் அதே ஏழைகளுக்கு இலவசங்களா? நமது கையைவெட்டி நமக்கே சூப்பு வைத்துத் தருகிறது அரசு. இதனை மக்கள் நல அரசு என்று சொல்ல முடியுமா?

அமெரிக்காவின் சில மாகாணங்கள் சூதாட்ட கிளப் வைத்து வருவாய் ஈட்டுவதையும், தாய்லாந்து அரசு அந்நாட்டு மக்களை விபச்சாரத்தில் தள்ளி வருவாய் ஈட்டுவதையும் போல தமிழகத்தை போதையில் தள்ளாட விட்டு வருவாய் ஈட்டுகிறது நமது அரசு. இது சமூகத்தையே சீழ் பிடிக்கச் செய்யவும் அருவெறுப்பானதா இல்லையா? இப்படிச் செய்யும் அரசு. நாட்டை மக்களை ஆள்வதில் எவ்வித நியாமும் உரிமையும் இல்லை. மக்களை வாழ வைக்க அரசா? சாகடிக்க அரசா?

  • நீங்கள் சொல்வது நல்ல விசயம்தான் போராடினால் போலீசு அடிக்கும், உதைக்கும், ஜெயிலில் அடைக்கும் என்று போராட தயங்குபவரா நீங்கள்?

கெட்டவனை பிடிக்கதான் போலீசு, அதற்குதான் நமது வரிப்பணத்தில் சம்பளம் வழங்குகிறோம்! நல்ல விசயத்திற்காக போராடும் நம்மை போலீசு தடுக்கிறது என்றால், அதைத் தட்டி கேட்க வேண்டாமா? நீங்கள் கேட்காமல் வேறு யார் கேட்பது?

  • வேலைக்கு போனால் 100, 200 கூலி கிடைக்கும், போராட்டத்திற்கு வந்தால் பிழைப்பு போயிடுமே, ரொம்ப கஷ்டப்படுகிற குடுபம் என கலங்குபவரா நீங்கள்?

tasmac-ntc-dகுடிக்க காசு தராவிட்டால், பெற்ற தாயை கூட அடித்தே கொல்லும் குடி வெறியர்களிடம் இருந்து உங்கள் கூலியை பாதுகாத்திட முடியுமா? பகல் பொழுது முழுவதும் உழைப்பதற்கும் இரவு பொழுது குடிகாரர்களிடம் உதைபடுவதே வாழ்க்கை என மாறிய பிறகு இந்த கொடுமைக்குக் காரணமான டாஸ்மாக் மீது காரி உமிழ்வதுதான் முக்கியமான வேலையாகும்.

  • உடனடியாக கடையை மூடினால், குடி நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள், அதனால் படிப்படியாக மூடலாம் என வாதிடும் அரசின் இலவச வழக்கறிஞரா நீங்கள்?

குடி நோயாளிக்களுக்கு சிகிச்சையாக மருந்து இருக்க வேண்டுமே தவிர, மது இருக்கக்கூடாது. இடைவிடாத குடி இறப்பைதான் உறுதிபடுத்தும்!

கணக்குப் பாருங்கள். தினம் 500 ரூபாய் கூலியில் 400 ரூபாயை டாஸ்மாக்கிடம் பறிகொடுத்துவிட்டு, குடும்பமே கடனில் மூழ்குவதை விட்டு வெளியேறி, அந்த சனியனிடமிருந்து விடுபட, கடையை மூடும் போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டும். அதுதான் டாஸ்மாக்கை மூட ஒரே வழி.

நாம் இந்தக் கடையை அகற்றப் போராடாமல் இருந்தால் எதிர்கால தலைமுறை சீரழிந்து விடும். நமது சொந்தத்தில் பல குடும்பங்களை பறிகொடுத்து விட்டோம். சிலர் ஊனமாக கை, கால்களை இழந்து முடமாகக் கிடக்கின்றனர். அது இன்னும் நீடிக்க வேண்டுமா? பல ஆண்டுகள் குடும்பம் நலமாக வாழ சில நாட்கள் போராடுவது தவறு இல்லை. நாம் இந்த போராட்டத்தில் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டு ஒத்தக்கடை டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை தொடருவோம். வாரீர்.

டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு!
டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!
மூடு கடையை, எவன் வருவான் பார்ப்போம்!
நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது!

மூடு டாஸ்மாக்கை!

நீங்களும் வாங்க….
இந்த சனியனை ஒழிக்க!

மணவை ஒத்தக்கடை
டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி

பேரணி – ஆர்ப்பாட்டம்

நாள் : 14-09-2016 புதன்
பேரணி நேரம்: காலை 10.00 மணி,
இடம்: நேரு சிலை அருகில், பொத்தமேட்டுப்பட்டி
ஆர்ப்பாட்டம் நேரம்: பகல் 12.00 மணி
இடம்: வட்டாட்சியர் அலுவலகம், மணப்பாறை

செய்தி:
மக்கள் அதிகாரம்,
மணப்பாறை.
9843130911.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க