privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்காவிரி - மோடி அரசின் சதியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

காவிரி – மோடி அரசின் சதியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

-

காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசு!!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதிமன்றம்!!!

cauvery-vpm-pp-demo-1என்ற தலைப்பில் சென்னை, திருவாரூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

முழக்கங்கள்

காவிரியை முடக்குது கர்நாடக அரசு!
தீர்ப்பை அமலாக்க வக்கற்றது
மோடி அரசு! மோடி அரசு!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
காவிரியை முடக்கும் கர்நாடக அரசை!
தமிழர்களை தாக்கும் கன்னட வெறியர்களை!
தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசை!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதி மன்றத்தை!
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
வன்மையாக கண்டிக்கின்றோம்!

cauvery-issue-puduvai-pp-demo-6காவிரி, பாலாறு, சிறுவாணி
பவானி, முல்லைப் பெரியாறு
ஆறுகளின் தமிழக உரிமையை
தடுத்து நிறுத்துது தேசிய நீரோட்டம்!
துப்புக்கெட்ட தேசிய நீரோட்டம்!

புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
மாநில உரிமையை பாதுக்காக்காத
மக்கள் விரோத தேசிய நீரோட்டத்தை
புறக்கணிப்போம்!  புறக்கணிப்போம்!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
காவிரி ஆற்றின் தமிழக உரிமையை
நிலைநாட்ட துப்பில்லாத
தமிழக அரசை கண்டிக்கின்றோம்!

cauvery-issue-pp-chennai-03முல்லைப் பெரியாறின் தமிழக உரிமையை
பாலாற்றின் தமிழக உரிமையை
சிறுவாணியாற்றின் தமிழக உரிமையை
பவானியாற்றின் தமிழக உரிமையை
நிலைநாட்ட துப்பில்லாத
ஜெயா அரசைக் கண்டிக்கின்றோம்!
வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

மீதேன், கெயில் அழிவுத் திட்டங்களும்
வடமொழியும் திணிப்பு!
கல்வி உரிமையும் பறிப்பு!
வழக்கறிஞர் உரிமை பறிப்பு!
தமிழன் தலையில் ஏறி மிதிக்குது மோடி அரசு!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
இந்து மதவெறி மோடி அரசை!
வன்மையாக கண்டிக்கின்றோம்!

cauvery-issue-tvr-demo-12தூக்கியெறிவோம்!  தூக்கியெறிவோம்!
மாநில உரிமையை பாதுகாக்காத
ஆளத்தகுதி இழந்த மத்திய அரசை!
தோற்றுப்போன இந்திய அரசை!
தூக்கியெறிவோம்!  தூக்கியெறிவோம்!

தீராது! தீராது!
எதிர்நிலை சக்தியாகி போன
இந்த அரசு கட்டமைப்பில்
மக்கள் பிரச்சனைத் தீராது

கிளர்ந்தெழு!   கிளர்ந்தெழு!
தமிழ்ச் சமூகமே கிளர்ந்தெழு!
சாராய போதை, போலிசு பயம்
சினிமா மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும்
தமிழ்ச் சமூகமே கிளர்ந்தெழு!
மண்ணைக்காக்க கிளர்ந்தெழு!

பிற மாநில மக்களின்!
உரிமையை மதிக்கின்ற
உயர்வான பண்பாட்டை
மக்களிடம் உருவாக்கப்
போராடுவோம்! போராடுவோம்!

1. சென்னை, குமணன்சாவடி

சென்னை பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் 14–9-2016 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் மருது
தோழர் மருது

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய சென்னை மண்டல குழு தோழர் மருது

”கர்நாடகாவில் ஒரு இளைஞர் இணையத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என எழுதியதற்காக அவரை கர்நாடக இளைஞர்கள் அடித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என சொல்ல வைத்துள்ளனர். கர்நாடகாவில் பேருந்து, லாரிகள் எரிக்கப்படுகின்றன. தமிழர்கள் என்று தெரிந்தாலே தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு நதி ஓடுகிறது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீர் பங்கிட்டு கொள்ளப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் நடுவே ஒரு நதி ஓடுகிறது தினமும் போர் நடக்கிறது குண்டுகள் போட்டு 100 உயிர்கள் தினமும் கொல்லப்படுகிறது ஆனால் அங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் பங்கிடப்படுகிறது. ஒரு நதியை 6 நாடுகள் பங்கிட்டு கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஏன் சாத்தியப்படவில்லை?

மத்திய அரசோ மாநில அரசோ இதை சரி செய்ய வக்கில்லாமல் உள்ளன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டியதில்லை என தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பேசுகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நாடே கொந்தளித்தது. மாணவர், மக்கள் என அனைவரும் போராடிக்கொண்டிருந்தார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை போல ஒரு போர் இன்று தேவையாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையில் ஒரு லட்சம் மக்கள் திரண்டு போராடி எப்படி அணையை கட்டவிடாமல் இனவெறி கேரள அரசிடமிருந்து காப்பாற்றினோமோ இன்று அப்படி போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு இந்தக் கட்டமைப்பில் தீர்வு இல்லை” என எழுச்சியோடு பேசினார்.

இதனைத் தொடர்ந்து தோழர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கண்டன உரையாற்றிய சென்னை மண்டல் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்,

com-vetrivel-chezhiyan
தோழர் வெற்றிவேல் செழியன்

“இன்று கர்நாடகாவில் காவிரியை வைத்து இனவெறியை தூண்டும் கன்னட அமைப்புகள் சுதந்திரமாக நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க வக்கற்று உள்ளது இந்த அரசு கட்டமைப்பு.

காவிரி என்பது கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமான நதியல்ல. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என நான்கு மாநிலங்களுக்கு சொந்தம். ஆற்றின் ஓட்டம், வரலாறு ரீதியான அதன் பயன்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தமிழ்நாட்டிற்கு 58% கர்நாடகவிற்கு 37% தரப்பட வேண்டும். சர்வதேச நதிநீர் சட்டத்தின் படி கடைமடை பகுதிக்கு உரிமையுண்டு இது தானம் என்பது போல் பேசப்படுகிறது அல்ல இது நம்முடைய உரிமை.

ஜூன் மாதம் 242 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் சராசரியாக ஒரு வருடத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் திறக்கவில்லை. அதை இந்த அரசும் கேட்கவில்லை. தமிழக விவசாயிகள் போராடிய பிறகு தூங்கி கொண்டிருந்த ஜெயலலிதா எழுந்து கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என ஆகஸ்ட மாதத்தில் சித்தாரமையா கூறுகிறார். இதுவே அந்த கர்நாடக மக்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கருத்தை உருவாக்குகிறது அதனால் சித்தாரமையா தான் இந்த பிரச்சனையில் முதல் குற்றவாளி.

cauvery-issue-pp-chennai-02இவ்வளவு பிரச்சனை நடக்கும் போது செயலற்ற ரோமாபுரி மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததை போல இருந்த ஜெயலலிதா மக்கள் போராடிய பிறகே கடிதம் எழுதுகிறார். கடிதம் எழுதி என்ன நடக்க போகிறது ஒன்றும் நடக்காது அதனால் ஜெயலலிதா தான் இரண்டாவது குற்றவாளி. பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுபயணத்தில் காலம் கழிக்கிறார் எந்த பிரச்சனையையும் சரி செய்ய வக்கற்ற மோடி மூன்றாம் குற்றவாளி.

பொன் ராதா கிருஷ்ணன் மொழி தீவிரவாதிகளால் தான் பிரச்சனை என்று பேசுகிறார். கர்நாடகாவில் எடியுரப்பா தான் இந்த பிரச்சனைகளை தூண்டி விடுகிறார். தேசியப் கட்சி என்று கூறி கொள்ளும் இவர்கள் அங்கு தண்ணீர் திறக்கக்கூடாது என அடிக்கிறார்கள். இங்கே தண்ணீர் கொடுக்கச் சொல்லி நாடகமாடுகிறார்கள். அரசியல் ஆதாயம் ஒன்றே இவர்கள் நோக்கம்.

காவிரியை வைத்து கன்னட இன பெருமை பேசிப்படுகிறது. எப்படி சாதி பெருமை பேசி எந்த நியாயத்தையும் பேச விடாமல் கண்ணை கட்டுகிறார்களோ அது போல் இன பெருமை பேசி தூண்டி விடுகிறார்கள். இரண்டு மாநிலங்களுக்குள்ளும் காவிரி நீர் மட்டும் பங்கிடப்படவில்லை. பல்வேறு கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. ஆகவே ஆரோக்கியமான உறவு வேண்டும் என்பதை பற்றி யாரும் பேசுவதில்லை. இனவெறியை தூண்டி அரசியல் ஆதாயம் அடையவே பி.ஜே.பி போன்ற கட்சிகள் செயல்படுகிறார்கள்.

cauvery-issue-pp-chennai-10குடகுமலையில் தான் காவிரி தொடங்கும் இடம் அங்கு நட்சத்திர விடுதிகள் கட்டப்படுகின்றன. நீர்நிலைகள் பாதுகாக்கபடுவதில்லை. காடுகள் அழிக்கப்படுகின்றன. மழை குறைந்து விட்டது. இயற்கை சமநிலையை குலைக்கிறார்கள். இதனால் காவிரியில் தண்ணீரே இல்லாத நிலை உருவாகி வருகிறது.

மீத்தேன் திட்டத்தை அமுல்படுத்த இந்தியாவில் விவசாயத்தை அழித்து விட்டால் நிலத்தை விட்டு விவசாயியை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம் என்ற திட்டத்தில் தான் இது நடக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவகம் செய்வே இது நடக்கிறது.

நீதிமன்ற உத்திரவை மதிக்காமல் கர்நாடக அரசு நடந்து கொள்கிறது அதை கேட்க வக்கில்லாமல் மோடி அரசு உள்ளது. இதுவே இந்த அரசு இயந்திரம் தோற்றுப்போய்விட்டதற்கு சான்று.

தேவகவுடா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க தேவையில்லை என்கிறார். யார் இவர் முன்னாள் பிரதமர். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடப்பேன் என அடித்து சத்தியம் செய்தவர். மதிக்கத் தேவையில்லை என்று அவர் சொல்கிறார். அவர்கள் இயற்றிய சட்டத்தை அவர்களே மதிப்பதில்லை. இதைத்தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.

press-meetகாவிரியில் எவ்வளவு கொள்ளவு தண்ணீர் இருக்கிறதோ அதில் 58% தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும் ஆனால் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது ”வாழு வாழவிடு” என்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறது. 15 டி.எம்.சி கொடு என கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறி நிற்கிறது. அவன் போட்ட சட்டத்தை அவனே மதிப்பதில்லை. அவன் உருவாக்கிய விதியை அவனே மீறுகிறான். இது தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.

இந்த அரசியல் கட்டமைப்பில் சாதி, மத இன பிரச்சனைகளை தீர்க்க முடியாது. தேசிய ஆணையம், மாநில ஆணையங்கள் பல இருந்தும் அது செயல்படுவதில்லை.

இதற்கு வெளியே தான் தீர்வு என்கிறோம். மக்களுக்கு மற்றவர் உரிமையை பறிப்பது தவறு என்ற உயரிய பண்பாட்டை உருவாக்க வேண்டியுள்ளது. எடியூரப்பா பேசும் போது கர்நாடக மக்களே எதிர்த்தால் இப்படி பேசுவாரா? மக்கள் தான் போராட வேண்டும் என்று இந்த பிரச்சனையை நிலவும் கட்டமைப்பில் தீர்த்து கொள்ள முடியாது” – என பேசினார்.

“இந்த போராட்டம் இன்று முடியவில்லை தொடங்குகிறது” என்று முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவுப்பெற்றது.

ஆர்ப்பாட்டம் நடந்த இடம் நான்கு முனை சந்திப்பு என்பதாலும், பேரூந்து நிறுத்தம் என்பதாலும் பொதுவான மக்களும் தொழிலாளர்களும் அதிகம் கூடுமிடம் என்பதாலும் ஆர்ப்பாட்டத்தை நின்று கவனித்தனர். பிரசுரம் தரும் பொழுது கவனமாக படித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

2. திருவாரூர்

cauvery-issue-tvr-demo-1113-09-2016 காலை 10.30 மணிக்கு பேருந்து நிலையம், திருவாரூரில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட மக்களதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி தலைமையேற்று கண்டன உரையாற்றினார். தோழர் சண்முகசுந்தரம் – மக்களதிகாரம், மண்டலக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து – மக்களதிகாரம், மண்டலக்குழு உறுப்பினர் தோழர் தனியரசு – மக்களதிகாரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ் – மக்களதிகாரம், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் தோழர் GV எனப்படும் G.வரதராஜன், மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் காளியப்பன் – மக்களதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர் சுந்தரமூர்த்தி – மக்களதிகாரம் நன்றி கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,

மக்கள் அதிகாரம்,
திருவாரூர்

3. புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதி தென்கோபுர வீதியில் மாலை 5 00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

cauvery-issue-puduvai-pp-demo-1“இரண்டு மாநில மக்கள் காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்ள முடியாமல் தடுத்து இன உணர்வுகளை தூண்டி மோத விட்டு ரசிக்குது மத்திய மாநில அரசுகள். மக்களின் அடிப்படையான எந்த உரிமையும் கொடுக்காத அரசு கட்டமைப்பு நமக்கு இனி தேவையில்லை, தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை கர்நாடக அரசு மீறும் போது இதில் தலையிட்டு பேசி தீர்க்க வக்கில்லாத துப்பில்லாத அரசு கட்டமைப்பை அடித்து நொறிக்கிவிட்டு மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என தலைமையுரையில் பேசினார் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர் தோழர் பிரகாஷ்.

cauvery-issue-puduvai-pp-demo-2இவரை தொடர்ந்து பேசிய தோழர் தீனா, அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி, “தண்ணீர் கேட்டு நடக்கும் போராட்டம் என்பது இனரீதியில் மக்களை பிளவு படுத்தும் போராட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீரை தடை விதிப்பதற்கு அவர்கள் யார்? இனவெறியை தூண்டி தமிழ் மக்களை அடித்து துண்புறுத்துவது கண்டிகத்தக்கது இந்த கலவரத்திற்கு பின்னால் பா.ஜ.க அரசு இருக்கிறது அவர்களின் அகண்டபாரத்தை வீழ்த்தாமல் நமக்கு விடுதலை இல்லை” என்று உணர்வுபூர்வமாக பேசினார்.

அடுத்ததாக தோழர் லெனின் சுப்பையா, “மோடி ஒரு முகமூடி என்றும் மோடி இந்தியாவை சுரண்டிகொடுக்கும் முதலாளிகளின் எடுபிடி, பன்னாட்டு கம்பெனிகளின் மூளை” என மோடியின் உண்மை முகத்தை தோலுரித்து பாடல் மூலம் வெளிப்படுத்தினார்.

cauvery-issue-puduvai-pp-demo-4தோழர் சாந்த குமார், பகுதி ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி தனது கண்டனவுரையில், “காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தரமறுக்கும் கர்நாடகத்தை கண்டிக்க தோற்று போய் நிற்கிறது மத்திய மாநில அரசும். கர்நாடகாவில் இனவெறியை தூண்டுவதில் வன்முறையில் ஈடுபடுவதில் மோடி அரசுக்கு பங்கிருக்கிறது. தமிழக விவசாயிகளுக்கு தரவேண்டிய நியாயமான உரிமையை உச்சநீதி மன்றமே குறைத்து கொடுக்க சொல்லி துரோகம் செய்துள்ளது. காவிரி நீரை பங்கிட்டுக்கொள்ளும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றமே மீறுகிறது. காவிரி பிர்சனையில் எதிரிகளை ஒளித்து வைத்து விட்டு இரண்டு மாநில விவசாயிகளையும் மக்களையும் இன ரீதியில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசு அமைப்புகள். அங்குள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீரை விற்கின்றனர். கர்நாட விவசாயிகள் தினம் தினம் இந்த அரசால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே இந்த அரசு மக்களை ஆளும் தகுதி இழந்து மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பது காவிரி பிரச்சனையில் தெரிந்துவிட்டது இனி மக்கள் அதிகாரமே தீர்வு” என்று பேசினார்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி

4. விழுப்புரம்

cauvery-vpm-pp-demo-3லைமை : தோழர் மோகன்ராஜ், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் . விழுப்புரம்.
கண்டன உரை:
தெய்வக்கண்ணு, உழவர் மன்றம், விருதை .
வழக்கறிஞர் வைத்திஸ்வரன், கடலூர்.
தோழர் ரவி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் , சீர்காழி மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு டெல்டா மாவட்டம்.
தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்