privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாவிரி : தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி

காவிரி : தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி

-

people-power-press-release

 நாள் 3-10-2016

பத்திரிகை செய்தி

தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி !
ஒருதலைப்பட்சமான ஒருமைப்பாட்டுக்குக் கட்டுப்பட மறுப்போம் !

ச்சநீதிமன்றம் சொன்னால் என்ன? காவிரி நடுவர் மன்றம் சொன்னால் என்ன? தமிழகமே பாலைவனமானால் என்ன? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு கூறுவது தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சியை உறுதிபடுத்துகிறது. இனியாவது தமிழகம் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. அமைப்புகளை அரசியல் சமூக புறக்கணிப்பு செய்தாக வேண்டும்.

இனி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட சட்டத்தை மட்டும் பேசினால் நியாயம் கிடைக்காது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக மைய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் ஓரவஞ்சனையும் சூழ்ச்சியும் அடங்கி இருக்கிறது.

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளும், மைய அரசின் நடவடிக்கைகளும் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசும், மோடி அரசும் தமிழகத்தை வஞ்சிக்கிறது.

காங்கிரசு, பிஜே.பி.யும் தமிழகத்தில் செல்வாக்கு பெறாமலிருப்பதற்குக் காரணம், தமிழர்களின் “ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு” உள்ளிட்ட திராவிட இயக்க கருத்தியல்களும் அதன் மீது ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியும்தான் காரணம்.

மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் நோக்கத்தை, சதியை, நிறைவேற்ற, விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும் தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.

சேதுக்கால்வாய் திட்டத்தை ஆதரித்து தமிழ்நாட்டில் நடத்தபட்ட முழு அடைப்புப் போராட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடுவோம் என மிரட்டினார்கள். ஆனால் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதி மன்றம் பல முறை உத்தரவிட்டது. ஆனால் அதை அமல் படுத்தாமல் கர்நாடக அரசின் ஆதரவோடு அம்மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் அடுத்தடுத்து நடைபெறுகிறது. மத்திய சட்ட அமைச்சர் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்கிறார். பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடகத்தில் பெரும் வன்முறை கலவரத்தை நடத்தி வருகிறது. ஏன் கலைக்க உத்திரவிடவில்லை?

தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பர நலனைப் பேணுதல் என்பதுதான் அதனின் அச்சாணி. காவிரி, பாலாறு, சிறுவாணி, முல்லைப் பெரியாறு ஆகிய ஆற்றுநீர் உரிமைகளில் தொடங்கி, கூடங்குளம், மீத்தேன், நியுட்ரினோ, நீட் தேர்வு, கெயில் வரையிலான அனைத்திலும் அந்த அச்சாணியை இந்திய ஆளும் வர்க்கமே முறிக்கிறது.

ஒருதலைப்பட்சமான ஒருமைப்பாட்டுக்குக் கட்டுப்பட மறுப்போம் என்ற முழக்கம்தான் காவிரி முதலான அனைத்து பிரச்சினைகளிலும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

தோழமையுடன்

சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க