Monday, July 6, 2020
முகப்பு உலகம் அமெரிக்கா போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !

போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !

-

மெரிக்கா என்றதும் நமது நினைவுக்கு வருவது  பூலோக சொர்க்கம் என்ற சித்திரம். மாறாக அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை நாம் நினைப்பதே இல்லை. மண்ணின் மைந்தர்களை வரலாற்றில் இருந்து அழிப்பது கொலம்பஸ் காலத்தில் மட்டுமல்ல இன்றும் தொடர்கிறது.

டக்கோட்டாவில் மக்கள் போராட்டம்
டக்கோட்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பதை எதிர்த்த போராட்டம்

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியிலுள்ள வடக்கு டகோட்டா மாகாணத்தில் தொடங்கி 4 மாநிலங்கள் வழியாக இல்லினாய்ஸ் வரை மொத்தம் 1,800 கி.மீ தொலைவுக்கு எண்ணெய் குழாய்(84 செ.மீ சுற்றளவுக் குழாய்) பதிப்பதற்காக டகோட்டா ஆக்செஸ் பைப்லைன் (Dakota Access LLC, A subisidy of Energy Transfer Crude Oil Company, Dallas – ETCO) என்ற நிறுவனம் அமெரிக்க அரசு மற்றும் நீதிமன்றங்களின் ஆசியோடு வேலையைத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் மேற்கு மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கெயில் எண்ணெய் குழாய் திட்டம் போன்றது இது.

இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,287,10,00,000/-). இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது ஒரு நாளைக்கு 5,70,000 பேரல்கள் அளவுக்கு எண்ணெயைக் கொண்டு செல்ல முடியும். மேலும் இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது. 2016-க்குள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி விடுவோம் என்று மார்தட்டிக்கொண்டு அரசு ஆதரவோடு களமிறங்கியது டி.எ.பி நிறுவனம். இங்கேயும் கெயில் திட்டத்திற்கு மத்திய அரசு, நீதிமன்றங்கள் பாதுகாப்பு கொடுத்து நிறைவேற்றுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சொந்த மண், வாழ்ந்த ஊர் சின்னாபின்னமாக்கப்படுவதை யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இத்திட்டத்தில் பாதிக்கப்படும் செவ்விந்தியர்களும் ஏனைய மக்களும் ஆரம்பம் முதலே இதை எதிர்க்க ஆரம்பித்தனர். சிறிய அளவில் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடக்க நிலையிலேயே அடக்க முயன்ற அரசு எந்திரம் 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்தது. மறுபுறம் இந்தத் திட்டம் இயற்கையை எந்த விதத்திலும் பாதிக்காது, அதி உயர் பாதுகாப்பு நிறைந்தது என்றும் எதிர்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டது, அரசு. நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாகி, இறுதியில் எண்ணெய் நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தபிறகு போராட்டம் மேலும் மேலும் செறிவுற்று முற்றுகைப் போராட்ட நிலைக்கு வந்தது.

போராடுபவர்கள் மீது நாயயை ஏவும் அமெரிக்க கவல்துறை
சொந்த மக்களை நாயை ஏவி விட்டுக் கடிக்க விடும் அமெரிக்க போலீசு

பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஒட்டுமொத்த பழங்குடிகளும் ஒன்று திரண்டு வடக்கு டகோட்டா மாகாணத்தில்  நடைபெற்று வந்த பணிகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்த முயன்றபோது, அமெரிக்க அரசு தனது முதலாளித்துவ ஒடுக்குமுறையை இறக்கியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அதாவது தன் சொந்த மக்கள் மீது ஈவு இரக்கமின்றி நாயை ஏவி விட்டுக் கடிக்க வைத்தனர்; மிளகுச் சாறு அடைக்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே(Pepper Spray)வைப் பயன்படுத்தினர். இறுதியில் இந்த ஒடுக்குமுறைகள் மக்களை மேலும் கோபத்திற்குள்ளாக்கி அவர்களும் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இரும்பு வேலிகளை உடைத்து நொறுக்கிய மக்களைப் பார்த்து போலீசு மற்றும் நிறுவனத்தின் அடியாட்கள் பின்வாங்கினர்.

இறுதியில் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தைப் பார்த்து நிலைகுலைந்து விட்ட நீதிமன்றமும், வெள்ளை மாளிகையும் இப்போது இந்தத் திட்டத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளன. தடை தொடருமா, திட்டம் தொடருமா என்பதை மக்கள் போராட்டம் தீர்மானிக்கும். ஒரு வேளை திட்டத்தை அமல்படுத்த அமெரிக்க போலீசு முனைந்தால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க அங்கே மக்கள் தயாரில்லை.

மேலும் படிக்க…

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அமெரிக்கா மீதான காழ்ப்பு அப்பட்டமாக தெரிகிறது. நான் இங்கு அமெரிக்காவில் வசிக்கிறேன், இந்த திட்டத்தை பற்றி கூர்ந்து கவனிக்கிறேன். நீங்கள் சொல்வது போல் பழங்குடி மக்களை நாயை விட்டு கடிக்க சொல்லவில்லை. பழங்குடி மக்கள் போராடுகிறர்கள் உணமைதான், ஆனால் அரசும், போலிஸும் அவர்களை கண்ணியமாகத்தான் நடத்துகின்றனர். தமிழ் நாட்டை போல காவல்துறையை விட்டு அடித்து இழுத்து செல்லவில்லை, அல்லது உங்கள் எஜமானர்கள் ரஷ்யா, சீனாவை போல சுட்டு தள்ளவும் இல்லை.

  • சாம்பசிவம் ஐயா, கட்டுரையின் கீழே கொடுத்துள்ள இணைப்புகளை சொடுக்கி படிக்காமல் அமெரிக்காவில் இருப்பதாக மிரட்டுவதில் என்ன இலாபம்? நாய் கடிப்பதை “டெமாக்ரசி நவ்” பத்திரிகை அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த பத்திரிகை செய்தியாளர் மீது வழக்கே போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்தாலும் உங்களுக்கு உண்மை என்பது தெரிந்திருக்க வேண்டியதில்லை. பொய்யுரைக்காதீர்கள். போராடும் மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள்!

   Last Thursday, an arrest warrant was issued under the header “North Dakota versus Amy Goodman.” The charge was for criminal trespass. The actual crime? Journalism. We went to the Standing Rock Sioux Reservation to cover the growing opposition to the Dakota Access Pipeline.

   Global attention has become focused on the struggle since Labor Day weekend, after pipeline guards unleashed attack dogs and pepper spray on Native American protesters. On that Saturday, at least six bulldozers were carving up the land along the pipeline route, where archeological and sacred sites had been discovered by the tribe. The Dakota Access Pipeline company obtained the locations of these sites just the day before, in a court filing made by the tribe. Many feel that the company razed the area, destroying the sites, before an injunction could be issued to study them.

   Scores of people, mostly Native American, raced to the scene, demanding the bulldozers leave. The guards pepper-sprayed, punched and tackled the land defenders. Attack dogs were unleashed, biting at least six people and one horse.

   • நான் அமெரிக்காவில் இருப்பதாக சொன்னது (தற்காலிக வாசம்தான்) இங்கு நடக்கும் உள்ளூர் விபரங்களை பற்றி விபரமாக பல ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காகத்தான். அப்படி எழுதியதே உங்களை மிரட்டுவதாக சொல்வதிலேயே நீங்கள் எப்படிபட்ட open minded நடு நிலையாளர் என்று தெரிகிறது. “சிந்தனை செய்” உங்களுக்கு பதில் சொல்லிவிட்டார்.

  • NEER KOORNTHU KAVANITTHA LATCHANATHAI PAARTHOME-please read these links also-https;//www.brookings.edu/blog/the-avenue/2016/09/14/five-things-to-know-about-the-north-dakota-access-pipeline-debate/.This particular article has been written by DrDevashree Saha,a social conscious scholar who is Senior Policy Associate&Associate Fellow-Metro Policy Program,Brooklings Institution.
   countercurrentnews.com/2016/09/police-do-nothing-mercenaries-protesters-dogs
   http://www.nydailynews.com/news/national/pipeline-protesters-wounded-north-dakota-face-off-article-1-2777342

  • பெருமதிப்பிற்குரிய ஐயா சாம்பசிவம் அவர்களே,

   இம்மாத புதிய ஜனநாயம் இதழில் ஐரோம் ஷர்மிளா கட்டுரையின் சில வரிகள் உங்களுக்காகவே எழுதப்பட்டதுபோல இருந்ததால் அதை இணைத்திருக்கிறேன்.

   “கிணற்றுக்குள்ளேயே வாழ்வதனால் கிணறு பற்றிய தவளையின் ஞானம் மேம்பட்டதாகிவிடாது. அனுபவம் என்பது அறிவியலுக்கு மாற்றல்ல. ஞானம் கிணற்றுக்கு வெளியே இருக்கிறது”.

  • “அல்லது உங்கள் எஜமானர்கள் ரஷ்யா, சீனாவை போல சுட்டு தள்ளவும் இல்லை.” Why are you calling Russia and China here ? Can I Take this is as your ரஷ்யா, சீனா மீதான காழ்ப்பு ? WE know what is your current living country is doing to his African American people there.

   • “R” அவர்களே, இங்கு கறுப்பினத்தவர்களுக்கு நடப்பது பற்றி அவர்கள் வெளிப்படையாக விவாதிக்கிறார்கள். ஜாதியின் பெயரில் கௌரவ கொலைகள் நடத்தும் நமக்கு அதை பற்றி சொல்ல தகுதி இல்லை

    மார்க்சிய-லெனினிய சார்புடைய வினவுக்கு ரஷ்யாவும், சீனாவும்தானே வழிகாட்டிகள்? நான் ரஷ்யா, சீனாவை பற்றி சொன்னால் காழ்ப்பு, வினவு அமெரிக்காவை பற்றி சொன்னால் நடு நிலமையோ!!

 2. “செவ்விந்தியர்கள்” என்பது கீழ்மைப்படுத்தும் சொல்… பழங்குடி மக்கள் என்று குறிப்பிடவும் …

  • நன்றி! இனி சாம்பசிவம் மன்னிப்பு கேட்பாரா என்று பார்ப்போம்! பதிவிலும் இந்த வீடியோவை சேர்த்தாயிற்று!

   • வினவு,

    திரு. சாம்பசிவம் கூறி இருப்பது சரி தான். நீங்கள் கட்டுரையில் கூறியுள்ள அனைத்தும் செய்தது அமெரிக்க அரசாங்கம் அல்ல. இந்த எல்லாமும் Dakota Access Pipeline Company செய்தது. லிங்க் செய்துள்ள வீடியோ தலைப்பை பார்த்தால் போதும். உங்கள் கட்டுரை வாக்கியமும் இந்த தவறை செய்கிறது. சம்பந்தப்பட்ட வாகியம் உங்கள் பார்வைக்கு:

    /*பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஒட்டுமொத்த பழங்குடிகளும் ஒன்று திரண்டு வடக்கு டகோட்டா மாகாணத்தில் நடைபெற்று வந்த பணிகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்த முயன்றபோது, அமெரிக்க அரசு தனது முதலாளித்துவ ஒடுக்குமுறையை இறக்கியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அதாவது தன் சொந்த மக்கள் மீது ஈவு இரக்கமின்றி நாயை ஏவி விட்டுக் கடிக்க வைத்தனர்; மிளகுச் சாறு அடைக்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே(Pepper Spray)வைப் பயன்படுத்தினர். */

    நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த போதும் அரசாங்கம் தலையிட்டு இந்த திட்டத்தை நிறுத்தி உள்ளது. அதற்கான சுட்டி:

    http://www.reuters.com/article/us-usa-pipeline-nativeamericans-idUSKCN11F2GX

    இப்போ நீங்க மன்னிப்பு கேட்டு திருத்தும் போடுவீங்களா?

    • அப்படியா, Dakota Access Pipeline Company நாய்களையும், பெப்பர் ஸ்ப்ரேயையும் பயன்படுத்தி தாக்கியதற்காக அந்த நிறுவனத்தின் செக்யூரிட்டி குண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் போடப்பட்ட செய்தி தெரியாதே? நாங்கள் அறிந்தவரை போராடும் மக்களும், பத்திரிகையாளர் மீதுதான் வழக்கும் கைது நடவடிக்கைகளும் பாய்கின்றன. எனினும் செக்யூரிட்டிகள் சிறையில் இருப்பதற்கு ஆதராமாய் நீங்கள் செய்தி தேடி துன்பப்படவேண்டாம்! ஈராக்கிலோ, ஆஃப்கானிலோ இருக்கும் அமெரிக்க இராணுவத்திற்குள்ளேயே தனியார் இராணுவங்களும் இருக்கின்றன. ஆகவே பொதுமக்களைக் கொல்லும் காட்டுமிராண்டித்தனத்தை அமெரிக்க இராணுவம் செய்யவில்லை, தனியார் இராணுவம் செய்தது என்று புரிந்து கொள்ளுமளவு நீங்கள் அப்பாவி என்றால் ஒன்றும் செய்வதற்கில்லை. அனுதாபங்கள்!

     • கஷ்ட காலம். தனியார் நிறுவனத்தின் செயலுக்கும், அமெரிக்க ராணுவ ஒப்பந்ததாரர் சிப்பாய்க்கும் குழப்பம் ஏன்? டகோட்டாவுக்கும், ஈராக், ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் என்னையா சம்பந்தம்? இருக்கும் விசயத்தில் மட்டும் பேசவும். டகோட்டாவ விட்டுட்டு வழக்கம்இ போல ஈராக், ஆப்கானிஸ்தான்க்கு ஓட வேண்டாம்.

      வேலை அத்தனையும் செய்தது ஒரு தனியார் நிறுவனம் என்பது உங்கள் காணொளி மூலமே தெளிவாக உள்ளது. அதை வைத்து கொண்டு இதை செய்தது அமெரிக்க அரசு என்று எப்படி சொல்றீங்க? ஒரு தனிநபர் அல்லது தனியார் நிறுவனம் செய்வது எப்படி அரசு செய்வதாகும்? இல்ல இதை அமெரிக்க அரசாங்கம் செய்ய சொன்னது என்பதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? இருந்தால் பகிரவும்.

      • நல்லது, ஒரு தனியார் நிறுவன அடியாட்களை அமெரிக்க அரசும், உள்ளூர் போலிசும் ஆதரிக்கிறது என்பதாக உங்களது கருத்தை கருணையுடன் புரிந்து கொள்கிறோம்.

       • வினவு,

        உங்க அமெரிக்க எதிர்ப்பு குழப்பதை கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு, உண்மைகள் என்ன என்று மட்டும் பார்க்கவும். அதன் படி மட்டும் பேசுவோம். எதாவது சொன்னா ஆதாரம் எதாவது தரனும். அந்த நிறுவனத்தை, அதன் செயல்களை அமெரிக்க அரசு ஆதரிக்கவில்லை என்பதற்கு நான் கொடுத்த சுட்டி ஒரு ஆரம்பம். நீங்க சொன்ன மாதிரி அமெரிக்க அரசு அவர்களை ஆதரிக்கிறது என்பதற்கு ஏதேனும் credible sources தர முடியுமா? தந்தால் உங்கள் கூற்றை ஏற்று கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

        நீங்க சொன்ன அதே உள்ளூர் போலீஸ், போராட்டக்காரர்கள் பக்கம் இருப்பதால் அமெரிக்க அரசு மீது விமர்சனம், கண்டனம் எல்லாம் செய்து உள்ளது. இது வரை ஒபாமா அரசிடம் இருந்து உள்ளூர் போலிசுக்கு எந்த வித உதவியும் வரவில்லை. உள்ளூர் அரசும், போலிசும் இதை வெளிபடையாகவே சொல்லி உள்ளனர். நீங்க வரிந்து கட்டி கொண்டு எந்த அமெரிக்க அரசின் மீது இப்படி குழம்பி தள்ளி குற்றம் சொல்லுகீர்களோ, அதே அரசு தான் போரட்டகாரருக்கு பக்கம் இருக்கிறது. நீதிமன்றம் பணி தொடரலாம் என்று சொன்ன போதும் அதை நிறுத்தி உள்ளது. இவை அனைத்தும் கடந்த மாதங்களில் நடந்தவை.

        மீண்டும் கோருகிறேன் வினவு. நான் இங்கே கூறி உள்ளவை ஏதேனும் தவறான தகவல் என்றால் credible sources தரவும். நான் மன்னிப்பு கேட்டு கொண்டு, திருத்தி கொள்கிறேன். இல்லை நான் கூறிய facts சரி என்றால் அதற்க்கு ஏற்ப திருத்தங்கள் கட்டுரையில் சேர்க்கவும். இவ்வளவு தான் செய்ய வேண்டியது.

        • ஐயா, கேள்வி எளியது, போராடும் மக்களை தாக்கியது யார்? நாயை விட்டு ஏவிக் கடிக்க வைத்த்து யார்? அவர்கள் அமெரிக்க அரசு இல்லை என்பது உங்களது கண்டுபிடிப்பு. அவர்களை அமெரிக்க அரசு, அரசாங்கம், போலீசு, ஏன் கைது செய்யவில்லை என்பது நாங்கள் கூறும் யதார்த்தம். அடித்ததும், கடித்ததும் உண்மை என்றால் கைதும், சிறையும் ஏன் இல்லை என்று கேட்டால் அதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள்.போராடும் மக்களையும், போராட்டத்தை செய்தியாக சொன்ன செய்தியாளர் மீதும் வழக்கு பாய்கிறது. வாய்ப்பிருந்தால் அந்த பழங்குடி மக்களை சந்தியுங்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை தூக்கி நிறுத்தும் அரசை பற்றியும் உங்களுக்கு விளக்குவார்கள். நன்றி

         • நாசமா போச்சு. ரெண்டு தரவை படித்து, கட்டுரை எழுதி விட்டு மக்களை சந்தியுங்கள்னு பெருசா போட்டா போதாது. விஷயம் எவ்வளோ சிக்கலானது என்று கொஞ்சம் தோண்டி பார்த்து இருக்க வேண்டும். ஏதோ நான் கண்ட வரை கீழே விளக்க முயல்கிறேன்.

          நீங்கள் கூறியது சரி தான். தாக்கியவர் கைது செய்ய படவில்லை என்பது உண்மை. ஆனால் வழக்கு பதிய பட்டு உள்ளது. இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை. நீங்கள் எதிர்பார்பது போல ஏவிய தனிநபர் மீது வழக்கு பதிய முடியாது, கைதும் செய்ய முடியாது. காரணம் அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தின் வேலையாட்கள். எனவே அந்த நிறுவனத்தின் மீது தான் வழக்கு பதிய முடியும், அந்த நிறுவனத்தின் தலைவர், சூப்பர்வயசெர் போன்றோர் மீது தான் வழக்கு பதிய முடியும். உதாரணமாக ஒரு பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர் மீது தான் வழக்கு பதிய பட முடியுமே தவிர, எழுதிய தனி நபர் மீது அல்ல. ஒரு நிறுவனம் மீது மட்டும் தான் அரசாங்கம் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். அதுவும் நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே. அதற்கான செயல்படிகள் உள்ளன. அவை நடைபெற்று வருகின்றன.

          இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. இந்த தாக்கு போராட்டகாரர்கள் வேலி தாண்டி தங்கள் நிலத்தில் வந்ததால் தற்காப்பு அடிப்படையில் நடந்தது என்பது அந்த நிறுவனத்தின் வாதம். இதில் வேலி தாண்டியது உண்மை. எனவே அதில் தற்காப்பு என்ற வாதம் செல்லுபடி ஆகும். அதில் excessive force என்று நீதிமன்றம் தீர்மானித்த பிறகே அடுத்த கட்டத்துக்கு வழக்கு செல்ல முடியும். இதற்கான process நடந்து கொண்டு இருக்கிறது. அதற்க்கு பிறகு அந்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க படும். மிக சமீபமாக Gawker எனும் நிறுவனத்தின் மீது இதே போல வழக்கு போடப்பட்டது. அதில் நஷ்டஈடு கொடுக்க முடியாமல் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. பிறகு அதன் சொத்துக்கள் அனைத்தும் விற்கப்பட்டு அந்த நஷ்டஈடு கொடுக்க பட்டது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், சட்டப்படி தாக்குதல் நடத்திய தனி நபர்கள் மீது வழக்கு பதிய முடியாது. இப்போதைக்கு நிறுவனத்தின் மீது தான் பதிய முடியும். அந்த வழக்கு பதியப்பட்டு, நடந்தும் வருகிறது.

          இதில் இன்னொரு layer of problem உங்கள் பார்வைக்கு, வழக்கம் போல தப்பி உள்ளது. இது போன்ற பிரச்னையில் அமெரிக்க மத்திய அரசாங்கம்(Federal Government) செய்ய முடிந்தது கொஞ்சமே. காரணம் அமெரிக்க அரசியலைப்பு சட்டம் அப்படி. போலிசு, national guard அனைத்தும் உள்ளூர் மற்றும் மாநில அரசின்(Local and state government) கட்டுபாட்டில் வரும். நம்ம ஊர் மாதிரி ராணுவம், மத்திய பாதுகாப்பு படை எல்லாம் உடனே அனுப்பிட முடியாது. மாநில அரசை எளிதில் கலைக்கவும் முடியாது. உதவி வேண்டும் என்று மாநில அரசு கேட்க வேண்டும்.பிறகே அனுப்ப முடியும். உள்ளூர் போலீஸ்க்கு இதை செய், அதை செய் என்று கட்டளை இடவும் Federal government ஆல் முடியாது. காரணம் அந்த முழு மொத்த கண்ட்ரோல் மாநில மற்றும் உள்ளூர் அரசிடம் மட்டுமே உண்டு. எனவே நீங்கள் எதிர்பார்க்கும் எதையும் செய்யும் பவர் அமெரிக்க அரசுக்கு இந்த விசயத்தில் இல்லை. உங்கள் கம்ப்ளைன்ட் அத்தனையும் உள்ளூர் அரசின் மீது செய்ய வேண்டியது. Federal government மீது அல்ல.

          இந்த பிரச்னையில் உள்ளூர் அரசாங்கம் குழாய் கட்ட முனைகிறது. ஆனால் மத்திய அரசாங்கம் அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்து விட்டது. பழங்குடி மக்கள் பக்கம் நிற்கிறது. நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இதில் இன்னொரு கேள்வியும் உங்களுக்கு எழலாம். ஏன் முதலில் இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுக்க பட்டது என்று. முதலில் அனுமதி கொடுக்க பட்ட பாதை வேறு. பிறகு அந்த நிறுவனம் மாறுதல் செய்து உள்ளூர் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி பணிகளை நடத்தியது. இது சமீபகாலமாக அமெரிக்காவில் நடந்து வரும் பிரச்சனை. அமெரிக்க அரசு, அதன் சுற்றுச்சூழல் மற்றும் இதர regulation சுற்றி வளைக்க, உள்ளூர் அரசாங்கத்துடன் நிறுவனங்கள் கை கோர்த்து செயல்பட்டு வருகின்றன. This is an ongoing problem.

          நீங்கள் கேட்ட கேள்வி மிக சரியானது. ஆனால் குற்றம் சொல்ல வேண்டிய இடம் அமெரிக்க அரசாங்கத்தின் மீது அல்ல. உண்மையில இந்த பிரச்சனை மிக சிக்கலானது. நிறுவனம், உள்ளூர் அரசுடன் சேர்ந்து இந்த திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த பிரச்னையில் அமெரிக்க அரசாங்கம் பழங்குடி இன மக்கள் பக்கமே நிற்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்றால் அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் முதலில் மாற்றப்பட வேண்டும். நடக்க முடியாத ஒன்றுக்கு நீங்கள் தவறான இடத்தில் குற்றம் கூறுகிறீர்கள். இவ்வளவே நான் சொல்ல முயல்வது.

          • 1. இந்த 2016-ல், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தான் டகோட்டா பைப்லைன் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான எரிபொருள் உள்கட்டமைப்பு திட்டத்துக்கான கொள்கைகளில் Environment-friendly ஆக இருந்த ஏராளமான அம்சங்களை Industry-friendly ஆக மாற்றியிருக்கிறார்கள்.

           2. மக்கள் போராட்டம் நிச்சயம் வரும் என்று தெரிந்தே G4S போன்ற குண்டர்களை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

           3. அனுமதித்ததோடல்லாமல், அது போன்ற தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி கிடையாது.

           போன்ற கிரிமினல் வேலையைச் செய்த அந்த அரசுக்கு இப்போது அதிகாரம் எதுவும் இல்லையாம். அதை எல்லாம் மாநில அரசுக்கு எப்போதோ தாரை வார்த்துவிட்டார்களாம்.

           மக்களின் போராட்டத்தினை கண்டுகொள்ளாமல் விட்டால், சபையில் அம்பலமாக நேரிடும் என்று பயந்து, நீதிமன்றமே கம்பெனிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தபோது, அதிகாரத்தை சட்டென்று எடுத்து, கம்பெனியின் திட்டத்தினை தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளது இந்த ஒபாமா அரசு.

           இந்த பிரச்சினை மிகவும் சிக்கலானது மற்றும் நாம் நினைப்பது போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியாது என்று சிந்திக்காமலே தீர்ப்பெழுதிவிட்டபடியால், மக்கள் நாய்க்கடி வாங்காமல், வாழ்வாதாரத்தை இழந்து பட்டினி கிடந்து சாவுங்கள் என்கிறார், சிந்தனை செய்பவர்.

 3. திரு பார்த்திபன்,

  ஏன் இந்த குழப்பம்? நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக எடுத்துக்கொண்டு ஒரு strawman அர்குமென்ட் ஏன்? மக்கள் சாவுங்கள் என்று நான் எங்கே சொன்னேன்? நான் சொன்னதெல்லாம் வினவு எதிர்பார்பதை செய்யும் அதிகாரம் Federal governmentக்கு இல்லை என்பது மட்டும் தானே? நீங்க பாயிண்ட் பாயிண்ட் பேசுனதுக்கு பதில் கீழே. இனிமேல் தயவு செய்து நான் சொன்னதை மட்டும் விமர்சனம் செய்யவும். உங்கள் கற்பனை குப்பை எல்லாம் என் மீது வீச வேண்டாம்.

  1. நீங்கள் கூறியது போல பல சட்டங்கள் மாற்றப்பட்டன என்பது சரி. ஆனால் நீங்கள் மீண்டும் வழக்கம் போல டகோட்டா மாநில சட்டங்கள் மாற்றப்பட்டதை மீண்டும் ஒபாமா மத்திய அரசின் மீது சொல்கிறீர். இது போன்ற திட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். உதாரணமாக ஏதேனும் பொது நிலத்தின் மீது அல்லது நீர் நிலையின் அடியில் செல்லும் இடங்களில் மட்டுமே, அதுவும் அந்த நிலம் அல்லது நீர்நிலை பல மாநிலங்களை பாதிக்கும் போது மட்டுமே EPA, Department of Justice போன்ற மத்திய நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும். இப்போது பணியை நிறுத்தி வைத்து இருப்பது இந்த நிறுவனங்களே. நீங்கள் கூறியது போல சட்டத்தை வலுவிழக்க செய்து இந்த குழாய் கட்ட அனைத்து ‘சேவைகள்’ புரிவது டகோட்டா மாநில குடியரசுக் கட்சி.

  2. ஆமாம் சார். 2016ல அடியாள் தேவைப்படும்னு தெரிஞ்சு 1954ல ஒரு கம்பெனி ஆரம்பிச்சு அதை 2002ல ஒரு வெளிநாட்டு கம்பனிக்கு வித்து எல்லாம் அறுபது ஆண்டு கால திட்டமா வெற்றிகரமாக நடத்தறாங்க. ஏன் இதோட நிறுத்திடீங்க? ப்ளோரிடாவில் நடந்த படுகொலை செய்த ஓமர் மாடீன் இந்த நிறுவனத்தில் தான் வேலை பாத்தான். அப்படியே இந்த நிறுவனம் தான் எல்லா படுகொலைக்கும் ஆள் சப்ளை பண்ணுது. பன்னாட்டு கம்பெனி என்பதால் பாரிஸ் படுகொலைகளுக்கும் ஆள் சப்ளை பண்ணது இவனுங்க தான்னு சொல்லுங்க. ஆதாரம் இல்லாம சொல்றதுன்னு ஆய்டுச்சு. ஏன் சிம்ப்ளா நிறுத்தனும்? அடிச்சு உடுங்க. சரி இது வெளிநாட்டு நிறுவனத்தால் வாங்க பட்டதால் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்னு சொல்லிடீங்க. ஒருவேளை அது நடக்காம அமெரிக்க நிறுவனம் ஒன்னே ஆட்களை கொடுத்து இருந்தா என்ன சொல்வீங்க?

  3. விசாரைனைக்கு உட்படுத்த அனுமதி கிடையாது என்று எந்த சட்டம் கூறுகிறது? கொஞ்சம் காட்ட முடியுமா? நிறுவனத்தின் ஊழியர் தவறு செய்தாலும் நிறுவனத்தின் மீது தான் விசாரணை நடைபெறும். இந்த வழக்கில் நஷ்டஈடு அந்த நிறுவனம் தான் தர வேண்டும். நேரடியாக இத்தனை ஆண்டு இவருக்கு தண்டனை, இவ்வளவு நஷ்டஈடு என்று அமெரிக்க அரசாங்கம் கூற முடியாது. நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். முதலில் சில படிகள் உள்ளன. Excessive force பிரயோகம் செய்ய பட்டது என்று திட்டவட்டமாக நிரூபிக்க பட வேண்டும். பிறகு அடுத்த கட்டம் செல்ல வேண்டும்.

  ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவும். நடந்த எதையம் சரி என்றோ, நியாயபடுத்தியோ நான் பேசவில்லை. நடந்தது தவறு, மிக தவறு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நான் சொல்வது எல்லாம் இந்த விசயத்தில் அமெரிக்க மத்திய அரசின் மீது குறை கூறுவது தவறு. நீங்கள் எதிர்பார்பதை செய்யும் அதிகாரமும் அவர்களுக்கு கிடையாது. இந்த கட்டுரை அமெரிக்க அரசின் செயல்பாடு பற்றிய புரிதல் இல்லாமல் எழுத பட்டு, தவறான இடத்தில குற்றத்தை கூறுகிறது என்பது மட்டுமே நான் சொல்வது.

  • திரு சிந்தனை செய் அவர்களே!

   சுற்றுச் சூழலின் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமல், US Army Corps திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது என்று பழங்குடி மக்களே சமீபத்தில் குற்றம் சாட்டி வரும் வேளையில், அப்படியெல்லாம் அல்ல, பல மாநிலங்களை பாதிக்கும்போது மட்டும்தான் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என சில உதாரணங்களை அள்ளி வீசுகிறீர்களே, இது யாரை ஏமாற்ற?

   ஐயா, எந்த நாட்டு தனியார் பாதுகாப்பு (குண்டர் படை) நிறுவனமாக இருந்தால் என்ன? மத்திய அரசின் ஆசி இல்லாமலா நாட்டு மக்கள் மீது பிரயோகிக்க முடியும்? அப்படி நடைபெற்றதாக இருந்தால், நீங்கள் கூறுவது போல, பழங்குடி மக்கள் பக்கம் நிற்கும் இந்த அரசானது, எப்படிப்பட்ட எதிர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றுதான் வினவு அவர்கள் விளக்கினார்கள். பாவம் அந்த விளக்கம் உங்களுக்கு பிடிபடவில்லை/பிடிபடாததுபோல நடித்திருக்க வேண்டும்.

   மக்கள் இந்த காட்டுமிராண்டி கார்ப்பொரேட்டுகளையும் அதை ஆதரிக்கும் இந்த அரசையும் எதிர்த்து போராடும் தருணங்களில், சட்டத்தையெல்லாம் அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது, அதை மாற்ற முடியாது, இதை மாற்ற முடியாது என கற்பனை விளக்கம் கொடுக்கிறீர்களே, இது மக்கள் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி அவர்களை பட்டினிக்குத் தள்ளும் இந்த அரசைக் காப்பாற்றும் கீழத்தரமான முயற்சி அல்லாமல் வேறென்ன?

   • திரு பார்த்திபன்,

    US Army Corps of Engineers மீது குற்றம் சாட்டி வழக்கு பதிந்தது என்னவோ உண்மை தான். ஆனால் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. ஆனால் அதன் பிறகும் அவர்கள் தானாகவே முன்வந்து வேலைகளை நிறுத்திவிட்டனர். அப்புறம் இந்த யாரை ஏமாற்ற என்ற கேள்வி கேட்டால் போதாது. நான் கூறியதில் எது தவறு என்று ஆதார பூர்வமாக கூறவும். தவறு இருந்தால் திருத்திக்கொள்ள எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் குற்றம் சாட்டினால் மட்டும் அது குற்றம் என்று ஆகி விடாது. நிரூபிக்க வேண்டும்.

    ஆமாம் அய்யா. தேசத்தில் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு நிறுவனமும் அனைத்து செயல்களையும் மத்திய அரசின் ஆசியுடன் தான் செய்கிறது. அவர்களின் ஆசி இல்லாமல் அணுவும் அசையாது பாருங்க.

    விளக்கம் பிடிபடாமல் எல்லாம் இல்லை. ஏவியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இது தானே வினவு கோரியது? இந்த விசயத்தில் இந்த சக்தி மாநில, உள்ளூர் அரசாங்கம் மற்றும் போலீசுக்கு தான் உண்டு, மத்திய அரசாங்கத்திடம் இல்லை என்பது தானே நான் கூறியது? அது தானே உண்மையும் கூட? இங்க கூறப்பட்டுள்ளது போல பத்திரிகையாளர் மீதும், போராட்டக்காரர் மீதும் வழக்கு பதிந்து இருப்பதும் நார்த் டகோட்டா அரசே. மத்திய அரசு அல்ல.

    ஒரு நிறுவனத்தின் மீதோ, தனிநபர் மீதோ அவ்வளவு சுலபமாக நீங்கள் கூறியது போல மத்திய அரசால் வழக்கு, சிறைவாசம் எல்லாம் நடந்தால் தேசம் வேற மாதிரி இருக்கும். நீதிமன்றம் தான் முடிவு எடுக்க முடியும். உங்க சர்வாதிகார எதிர்பார்ப்பு எல்லாம் செய்ய முடியாது. நீங்களும், வினவும் என்ன நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்று எதிர்பார்கிரீர்களோ அதே தான் நானும் விழைகிறேன். ஆனால் என்ன ஒரே வித்யாசம். நீங்க மத்திய அரசு உடனே ஏன் செய்யவில்லை என்று கொந்தளிகிறீங்க. அதை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்னும் உண்மை தெரியாமல். உங்க கோவம் நியாமானதே. என்ன ஒரே ஒரு சின்ன பிரச்சனை. நீங்க உங்க கற்பனை உலகத்தில் நினைப்பது போல அமெரிக்க federal government சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகார அரசு அல்ல. Especially when it comes to what they can do inside their own country.

    • சிந்தனை செய்,

     சற்று பொறுமையாக சொல்வதை உள்வாங்க முயற்சி செய்யுங்கள். மத்திய அரசின் அனுமதியெல்லாம் தேவையில்லை என்று EPA வை வைத்து வாதாடியது நீங்கள் தானே? அதற்குத் தானே நான் பதில் கூறியிருந்தேன். இப்போது என்னவென்றால், அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்கிறீர்கள். மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்றா தள்ளுபடி செய்தது?

     நீங்கள் கூறிய அதே EPA வின் டைரக்டர் தான் இத்திட்டம் கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மார்ச் 11 அன்றே Army Corps க்கு கடிதம் எழுதி எச்சரித்திருக்கிறார்.

     “Crossings of the Missouri River have the potential to affect the primary source of drinking water for much of North Dakota, South Dakota, and Tribal nations.”

     • திரு பார்த்திபன்,

      நான் மத்திய அரசை பற்றி பேசியது ஒரே ஒரு விசயத்தை புரியவைக்க மட்டுமே. வழக்கு பதியவோ, கைது செய்யவோ federal அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை மட்டுமே சொல்கிறேன். கோவங்கள் நியாயம். அவை தவறான இடத்தில இருக்கின்றன என்பதை மட்டுமே நான் சொல்ல விழைகிறேன். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை சரியாக பேசும் நீங்கள், அந்த நீதிபதி US Army Corps சரியான procedure follow செய்துள்ளது. எனவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது என்றும் கூறி உள்ளார். முழு தீர்ப்பையும் நீங்கள் இங்கே படிக்கலாம்: https://www.scribd.com/document/323482719/Dakota-Pipeline-Opinion#from_embed

      நீங்கள் quote செய்த வாக்கியம் அந்த கடிதத்தில் இருப்பது என்னவோ உண்மை தான். அதற்க்கு முன்னும் பின்னும் என்ன இருக்கிறது என்பதையும் படித்து பார்க்க வேண்டுகிறேன். பக்கத்தில் இருக்கும் ஈரநிலம் மற்றும் பாதுகாக்கபட்ட நிலத்தின் வழியாக செல்ல முடியாததால் இந்த பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது. முழு கடித்தையும் படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். லிங்க்: https://www.documentcloud.org/documents/3036068-Dakota-Access-2nd-DEA-Cmts-3-11-16-002.html

      நான் சொல்ல இவ்வளவு தான். நீங்கள் எதிர்பார்ப்பது போல வழக்கு பதிய, கைது செய்ய மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை. இப்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதே சமயம் அரசாங்க நிறுவனங்கள் மீண்டும் பூர்வகுடி மக்களுடன் இந்த விசயத்தில் என்ன செய்ய வேண்டும், வருங்காலத்தில் இந்த மாதிரி பிரச்சனை வராமல் இருக்க என்ன சட்ட மாறுதல் செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறது. நீங்கள் எதிபார்ப்பது போல எடுத்தோம் கவுத்தோம் என்று செய்ய இது சர்வாதிகாரம் இல்லை. நார்த் டகோட்ட அரசு என்ன தான் முயன்றாலும் தவறான வழக்குகள் மற்றும் கைதுகள் தள்ளுபடி ஆகி விட்டது. நிருபர் மீது பதிந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. Again, this isnt a dictatorship where the Federal government can do as it pleases. So lets not expect unreasonable actions or call for them. That is all.

      • சிந்தனை செய்,

       திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைத்தான் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் மழுப்பிக்கொண்டேதான் இருக்கிறீர்கள்.

       //மத்திய அரசின் அனுமதியெல்லாம் தேவையில்லை என்று EPA வை வைத்து வாதாடியது நீங்கள் தானே? இப்போது என்னவென்றால், அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்கிறீர்கள். மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்றா தள்ளுபடி செய்தது?// என்றுதானே கேட்டிருந்தேன்.

       //அந்த நீதிபதி US Army Corps சரியான procedure follow செய்துள்ளது. எனவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது என்றும் கூறி உள்ளார்.// என்று நீங்கள் கூறிய பதில் சரியா?

       நீதிபதியின் தீர்ப்பிலிருந்து நாம் பெறும் விளக்கம் என்னவென்றால், US Army Corps தான் இந்தத் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டிய அயோக்கியர்கள்.

       இதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட பழங்குடி மக்கள், சுற்றுச் சூழலின் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமல் US Army Corps இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது என்று மிகச் சரியாக குற்றம் சாட்டுகிறார்கள்.

       ஆனால் நீங்களோ, மத்திய அரசுக்கும் இத்திட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறீர்கள்.

       சரியாகச் சொல்ல வேண்டுமானால், இந்த மக்கள் விரோதத் திட்டத்திற்கு அனுமதி அளித்த US Army Corps ன் கொடூரத்தைவிட, போராடும் மக்கள் மீதான நாய்க்கடி அவ்வளவு கொடூரமானதல்ல என்பதையாவது புரிந்துகொள்ள முடிகிறதா உங்களால்?

       • அய்யா தெய்வமே!!! இதுக்கு மேல முடியாது சாமி. மொதல்ல என்ன ஏதுன்னு தெளிவா படிங்க. அரசாங்க நிலத்தில் கட்டுமான பணி என்பதால் US Army Corps உள்ளே வருகிறது. அவர்கள் environmental assessment செய்து வழியை தேர்ந்து எடுத்தார்கள். அவ்வளவே.

        பிறகு என்ன மாறுதலால் இங்கு குழாய் வருகிறது என்பதையும் பார்க்க வேண்டுகிறேன். முதலில் Bismarck என்னும் இடத்துக்கு அருகில் வருவதாக தான் திட்டம். ஆனால் அது ஈர நிலங்கள் மற்றும் பாதுகாக்கபட்ட குடிநீர் இருப்பதால் இந்த பாதைக்கு மாற்றப்பட்டது. விக்கிபீடியா பார்த்தால் கூட இது தெரியும்.

        /*Routing the pipeline across the Missouri River near Bismarck was rejected because of the route’s proximity to municipal water sources; residential areas; and road, wetland, and waterway crossings. The Bismarck route would also have been 11 miles longer.[4] The alternative the Corps of Engineers selected crosses half a mile from the Standing Rock Indian Reservation where a spill could impact the waters that the Tribe and individual tribal members residing in that area rely upon*/

        பழங்குடி மக்கள் கூறுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்த பாதை தேர்ந்டுத்த பிறகே அவர்கள் opinion பெற பட்டது, அதற்க்கு முன்பு அல்ல என்று தான் கூறுகின்றனர். இதை அடிப்படையாக வைத்தே வழக்கும் பதிய பட்டு உள்ளது. இதில் மத்திய அரசாங்கத்தின் involvement அவ்வளவே. இப்போது இருக்கும் நிலைமையில் பழங்குடி மக்கள் US Army Corps மீது குற்றம் சாட்டுகின்றனர். US Army Corps தன் வேலையை சரியாக செய்ததாக கூறுகிறது. இதில் யார் தவறு செய்தனர் என்பது வழக்கு முடிந்த பிறகு தெரியும். Right now, its basically he said, she said. எனவே facts வரும் வரை ஒரு பக்கத்தை குற்றம் சாட்ட வேண்டாம் என்பது என் தாழ்மையான கோரிக்கை.

        • சிந்தனை செய்,

         //இப்போது இருக்கும் நிலைமையில் பழங்குடி மக்கள் US Army Corps மீது குற்றம் சாட்டுகின்றனர். US Army Corps தன் வேலையை சரியாக செய்ததாக கூறுகிறது. இதில் யார் தவறு செய்தனர் என்பது வழக்கு முடிந்த பிறகு தெரியும். Right now, its basically he said, she said. எனவே facts வரும் வரை ஒரு பக்கத்தை குற்றம் சாட்ட வேண்டாம் என்பது என் தாழ்மையான கோரிக்கை.//

         அருமை. USACE தன் வேலையைச் சரியாக செய்ததாகக் கூறுவதில் வியப்பில்லை. நீதிமன்றம் அதற்கு ஆமா சாமி போடுவதும் ஆச்சரியப்படத்தக்கதல்ல. ஆனால், உங்களுக்கு அதன் மீது எந்தக் கருத்தும் இல்லையா? உங்கள் மொழியில் கூறுவதானால் நிரூபணம் வேண்டும் இல்லையா?. நிரூபித்துவிட்டால் மக்கள் வாழ்க்கையில் விளையாடும் அனைத்து கார்ப்பொரேட்டுக்களையும் ஒழித்துவிட்டுத்தான் இந்த அரசு மறுவேலை பார்க்கும் என்கிறீர்களா?. அதுவரை நமக்கிருக்கும் சமூக அறிவைக்கொண்டு யார் மீதும் விமர்சனம் வைக்கக்கூடாது அப்படித்தானே?. ஆனால் நீங்களோ, மத்திய அரசின் இந்த திட்டத்தை நிறுத்தக்கோரும் நாடகத்தை வைத்தே அது பழங்குடி மக்கள் பக்கம் நிற்கிறது என்பீர்கள்.

         கீழ்காணும் பழங்குடி மக்களின் கதறல் உங்கள் காதுகளுக்கு கேட்கிறதா?

         “Native Americans throughout history have been the stewards of the land and we have been warning mainstream America about the destruction that they are doing and that it is not going to last”

         உலகம் முழுக்க அமெரிக்க வல்லாதிக்கத்துக்கெதிரான மக்கள் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதைப்பற்றி கீழ்கண்ட முறையில் புரிந்து வைத்திருப்பது அறியாமை மட்டுமல்ல. ஆபத்தானதும்கூட.

         //நீங்க உங்க கற்பனை உலகத்தில் நினைப்பது போல அமெரிக்க federal government சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகார அரசு அல்ல. Especially when it comes to what they can do inside their own country.//

         • திரு பார்த்திபன்,

          உங்களுக்கு புரியும் வகையில் சொல்கிறேன். நடவடிக்கை எடுகின்றனர், எடுக்கவில்லை என்பது பற்றி நான் பேசவே இல்லை. முதலில் நீதிமன்றம் ஆமாம் சாமி தான் போடுகிறது என்று நீங்கள் assume செய்வதை நிறுத்தவும். வேண்டுமென்றால் நீதிமன்ற தீர்ப்பு நான் லிங்க் செய்து உள்ளேன். அதில் என்ன தவறு, எந்த சட்டத்தை வளைத்து ஆமாம் சாமி போட்டது என்று காட்டவும். இல்லாவிட்டால் உங்கள் conspiracy theoryஇல் எல்லாம் நேரம் வீணடிக்க பொறுமை இல்லை.

          மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுக்கிறது அல்லது கை கோர்கிறது என்பதற்கும், US Army Corps மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளிபதர்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இரண்டும் அமெரிக்க அரசின் ஒரு பகுதி என்பதால் அவர்கள் ஆமாம் சாமி தான் போட்டு இருப்பார்கள் அல்லது போடுவார்கள் என்று நீங்கள் கருதினால், உங்களுக்கு அதை நிரூபிப்பதில் எந்த வித பிரச்சனையும் இருக்காது. தீர்ப்பு இணையத்தில் இருக்கிறது. அமெரிக்காவை கரைத்து குடித்த மக்களை உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். தாராளமாக நீங்கள் அதை ஆராய்ந்து எனக்கு எந்த சட்டம் எப்படி மீறப்பட்டு இருக்கிறது, எங்கே நீதிமன்றம் ஆமாம் சாமி போட்டு உள்ளது என்று காட்டவும். மீண்டும் கூறுகிறேன். தவறு செய்திருந்தால் திருத்தி கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்கள் opinion பேரில் எல்லாம் அல்ல. Factually wrong என்று காண்பிக்கவும்.

          உலகம் முழுவதும் அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் எல்லாம் இருக்கட்டும். அது எப்படி நான் கூறியதை தவறு என்று நிரூபிக்கிறது? அமெரிக்க பெடரல் அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் எவ்வளவு முரண்பாடுகளை கொண்டுள்ளது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் கருகலைப்பு பிரச்சனை, LGBT மக்களின் உரிமை பிரச்சனைகள், துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை பற்றிய பிரச்சனை போன்றவற்றை பார்க்கும் அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும். உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு அளித்த போதும், அதை enforce செய்ய மத்திய அரசு முயன்றபோதும் ஒரு சில மாநில அரசுகள் அதற்க்கு எவ்வளவு முட்டுகட்டை, எதிர்ப்பு போட்டன என்பதை அமெரிக்காவை பற்றி நன்கு அறிந்த உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை.

          உலகம் முழுவதும் அமெரிக்க influence இருப்பதும், நீங்கள் சொல்வது போல மக்கள் போராட்டம் நடப்பதும் மேல் கண்ட சம்பவங்கள் நடந்தது இல்லை என்று ஆக்கி விடுமா? சமூக அறிவை கொண்டு தாராளமாக விமர்சனம் வைக்கலாம். ஆனால் அது உண்மைக்கு புறம்பாக இருக்க கூடாது. பல விசயங்களில் அமெரிக்க மாநில அரசுகள், அமெரிக்க மத்திய அரசுக்கு நேர் எதிர் போக்கை, மக்கள் விரோத போக்கை கொண்டு இருப்பதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். உதாரணமாக பெண் உரிமை பிரச்சனை, LGBT மக்களின் பிரச்சனைகள், Creationism and religious fundamentalism போன்ற மிக முக்கிய பிரச்சனைகளில் அமெரிக்க மத்திய அரசாங்கம் சரியான பக்கம் நிற்கிறது. அதையும் நாடகம் என்பீர்களா? இதே நீதிமன்றம் தான் தீர்ப்பு அளித்துள்ளது. இதே அரசாங்கம்தான் அதை செயல்முறை படுத்தவும் செய்கிறது. ஆனால் உங்கள் லாஜிக் படி பார்த்தால் உலகம் முழுவதும் அமெரிக்க அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் நடப்பதால், இந்த நடவடிக்கைகளும் மக்கள் விரோதமானவை என்று தான் கொள்ள வேண்டும்.

          இங்கு பிரச்சனை, என்னை பொறுத்தவரையில், நீங்கள் அமெரிக்காவை ஒரு broad generalization மட்டும் தான் பார்கிறீர்கள். US Army Corps சரியாக தன் வேலையை செய்து இருக்கலாம், நீதிமன்றம் நடுநிலைமை தவறாமல் தீர்ப்பு வழங்கி இருக்கலாம் என்று கூட உங்களால் யோசிக்க முடியவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்கள் சரி என்று ஆகிவிடாது, உண்மைகளை ஆராய்ந்து பார்த்துதான் முடிவு செய்யவேண்டும் என்பது என் பார்வை. I want facts to dictate my opinions and not let opinions color the facts. நீங்கள் கூறியது போல கடந்த கால வரலாறு, இப்போதைய நிகழ்வுகள் எல்லாம் வைத்து உங்கள் opinion நீங்கள் தாரளாமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் இவை எதுவும் factsஐ மாற்றி விடாது.

          உங்கள் opinion பற்றி பேச நான் விரும்பவில்லை. நீங்கள் கூறியது போல

          //USACE தன் வேலையைச் சரியாக செய்ததாகக் கூறுவதில் வியப்பில்லை. நீதிமன்றம் அதற்கு ஆமா சாமி போடுவதும் ஆச்சரியப்படத்தக்கதல்ல//

          என்பது தான் உண்மையாக இருந்தால் அதை தயவு செய்து facts உடன் இங்கு பதியவும். நான் தவறு செய்து இருந்தால் மாற்றி கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. கடைசியாக இதை மட்டும் சொல்லிகொன்கிறேன். இதற்க்கு மேல் உங்கள் opinion, அமெரிக்க அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்று நீங்கள் பேசுவதாய் இருந்தால் என்னிடம் இருந்து பதில் வராது. Please present the facts that support what you have said or supports your opinion in this case and then we can go from there. எடுத்துக்காட்டாக நீதிமன்றம் எங்கே ஆமாம் சாமி போட்டது, US Army Corps தன் வேலையை எங்கு சரியாக செய்யவில்லை என்று காட்டவும். அது முடியாவிட்டால் இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளலாம்.

          • சிந்தனை செய்,

           //இதற்க்கு மேல் உங்கள் opinion, அமெரிக்க அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்று நீங்கள் பேசுவதாய் இருந்தால் என்னிடம் இருந்து பதில் வராது. எடுத்துக்காட்டாக நீதிமன்றம் எங்கே ஆமாம் சாமி போட்டது, US Army Corps தன் வேலையை எங்கு சரியாக செய்யவில்லை என்று காட்டவும்.//

           நீங்கள் சொல்வதுதான் சரி. தேவையில்லாமல் இந்த பழங்குடி மக்கள், USACE மீது வழக்கு தொடுக்கிறார்கள். என்ன தைரியம் அவர்களுக்கு? USACE தன் வேலையை சரியாகத்தான் செய்திருக்கிறது என்று அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்திவிட்டது. பின்னர் என்ன பிரச்சினை? திட்டத்தை அமல்படுத்த விடவேண்டியதுதானே? அப்படி அவர்களிடம் தவறு இருந்தால் நிரூபிக்கவேண்டியதுதானே? ஆனால் துரதிருஷ்டவசமாக, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை நிரூபிக்க பழங்குடி மக்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. போராடுவதைத் தவிர.

 4. சிந்தனை செய்,

  வேலை அத்தனையும் செய்தது ஒரு தனியார் நிறுவனம் என்பது உங்கள் காணொளி மூலமே தெளிவாக உள்ளது – இதைச் சொல்லும் நீங்கள் இப்படியும் சொல்கிறீர்கள்: அதில் excessive force என்று நீதிமன்றம் தீர்மானித்த பிறகே அடுத்த கட்டத்துக்கு வழக்கு செல்ல முடியும். இதற்கான process நடந்து கொண்டு இருக்கிறது.

  Excessive force பிரயோகம் செய்யபட்டதா இல்லையா? இதில் உங்கள் கருத்து என்ன?

  //உங்க சர்வாதிகார எதிர்பார்ப்பு எல்லாம் செய்ய முடியாது.//

  போராடிய பூர்வகுடி மக்கள் மீது நாயை ஏவி ஒடுக்கிய விசயம் தீர்க்கப்பட முடியாத, அரசியலமைப்பு சட்ட சிக்கல்களைக் கொண்ட ஒன்று என்றால், அந்நாடு எப்படிப்பட்ட ‘ஜனநாயக’ நாடென்று விளங்கிக்கொள்ள ஆய்வு செய்து தான் கண்டுபிடிக்க வேண்டுமா?

  பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதை அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது என்றாலோ (அல்லது) அரசியலமைப்பு சட்டத்திலுள்ள ஓட்டைகள் தான் இப்பிரச்சனைக்கு காரணம் என்றாலும் கூட அது அமெரிக்க அரசின் பிரச்சனை – தோல்வியில்லையா? இதற்கு அமெரிக்க அரசை விமரிசிக்காமல் மாயன் அரசை அல்லது ஆப்பிரிக்க அரசையா விமரிசிக்க வேண்டுமென்கிறீர்கள்?

  • திரு ராம்சங்கர்,

   Excessive force ப்ரோயோகம் செய்யப்பட்டது. நார்த் டகோட்டா அரசு வழக்கம் போல மக்கள் மீது பழி போட என்ன என்னசெய்ய வேண்டுமோ அனைத்தையும் செவ்வனே செய்து வருகிறது. நீதிமன்றம் இது வரை சரியான தீர்ப்புகளை வழங்கி வருகிறது.

   இது தீர்க்க முடியாத சிக்கல் என்று எப்போது அய்யா கூறினேன்? நான் சொன்னது எல்லாம் வினவோ, மற்றவரோ எதிர்பார்பது போல Federal government வழக்கு பதியவோ, கைது செய்யவோ முடியாது என்பது மட்டும் தானே? இதில் ஏன் இவ்வளவு குழப்பம்? ஜனநாயக நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளூர் அரசு என்று பல layerல control இருப்பது உலகத்தில் எங்கும் இருப்பது தானே? அரசியல் அமைப்பு சட்டமோ, இல்லை எந்த ஒப்பந்தமோ போடும் போது ஒரு சில இடங்களில் control கொஞ்சம் விட்டு கொடுத்து தான் செல்லவேண்டும். Compromise, even when you dont want it, is how people work together. இதை abuse செய்யும் போது அது பிரச்சனை ஆகிறது. அது தான் இங்கயும் நடக்கிறது. இதை நீங்கள் அமெரிக்க அரசின் தோல்வியாக பார்க்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இது ஜனநாயகத்தில் அல்லது மக்கள் ஒன்றாக சேரும்போது சர்வ சாதாரனமாக வரும் பிரச்சனை. நீங்கள் எவ்வளவு perfect ஒப்பந்தமோ அல்லது அரசாங்கமோ நிர்ணயித்தாலும் சரி. ஒருவர் அதை பின்பற்ற அல்லது வளைக்க முற்பட்டால் போதும். இதை பற்றி பேச ஆரம்பித்தால் முடியாமல் போய்கொண்டே இருக்கும். எனவே இங்கே நிறுத்திகொள்கிறேன்.

 5. சிந்தனை செய் அவர்களே….

  சரி டகோட்டா குறித்து விவாதிக்க வேண்டாம்….

  அமெரிக்கா குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

  • உலகில் பல தேசங்களை போலவே தனக்கென்று பிரச்சனைகள், தனித்துவங்கள் கொண்ட ஒரு தேசம். பல தவறுகள், வழக்கமான ஒட்டு வங்கி அரசியல்வாதிகள், ஊழல்கள், fundamendalist பிரச்சனைகள் என்று மற்ற தேசங்களை போலவே இதற்கும் பிரச்சனைகள். ஒரு சில இடங்களில், துறைகளில் மிக சிறந்தது. சில விசயங்களில் மிக பின்னில் இருக்கிறது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால், Its just a nation like any other but with a bigger influence and footprint in the world. There is a lot to learn, from both their rights and wrongs.

 6. சிந்தனை செய்…. மிக்க நன்றி…

  அமெரிக்காவின் மீதான உங்கள் புரிதலை விட அவர்களின் மேல் அதிகபட்ச இரக்கம் இருப்பதாகத் தான் தெரிகிறது…..எல்லா நாடுகளிலும் உள்ள அதே பிரச்சினைகள் தான் அவர்களுக்கும் இருக்கிறது என்று அமெரிக்காவை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முயல்வது உங்களுடைய ஒருமுகத் தன்மை என்று கூறலாமா?

  அமெரிக்கா ஒரு மேலாதிக்க வல்லரசு, ஏகாதிபத்தியத்தின் உச்சத்தில் இருக்கும் நாடு என்பதைப் பற்றிய கண்ணோட்டத்தோடு நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்களா அல்லது புரியாதது போல விட்டு விட்டீர்களா என்ற சந்தேகம் எழுகிறது……உலகின் ஒவ்வொரு மூலையிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும்போது நீங்கள் பொத்தாம் பொதுவாக கருத்து கூறுவது சரியா?

  • திரு ராஜா,

   நான் கூறியது அமெரிக்கா என்ற தேசத்தின் உள்நிலைமை மட்டுமே. நீங்கள் அதை அமெரிக்கா மீதான இரக்கம் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல. எல்லா நாடுகளுக்கும் உள்ள பிரச்சனைகள் மட்டும் தான் அமெரிக்காவுக்கு இருப்பதாக நான் கூறவில்லை. முதல் வாக்கியத்தை மீண்டும் படித்து பார்க்கவும். அமெரிக்காவுக்கு என்று பிரச்சனைகள், தனித்துவங்கள் உள்ளன என்றும் தான் கூறி உள்ளேன். மேலும், அது அமெரிக்கா என்பதால் அதற்க்கு நான் கூறிய பிரச்சனைகள ,உலகில் மற்ற தேசங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் இல்லாமல் போய் விடுமா? They are not mutually exclusive.

   நீங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று பார்பதை நான் வேறு விதமாக பார்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு தேசங்கள் உலக வரலாற்றில் மிக பெரிய ஆதிக்கம், செல்வாக்கு கொண்டு இருக்கும். அச்சிரியன், பெர்சிய பேரரசு முதல் போன நூற்றாண்டில் பிரிட்டிஷ், ஜப்பான் ஆதிக்கம் வரை. இப்போது அமெரிக்கா. இப்போது சீனா வளர்ந்து வருகிறது. இழந்த செல்வாக்கை பெற ரஷ்யா முயல்கிறது. இந்தியாவும் இந்த இடத்துக்கு வர முயன்று வருகிறது. தன் செல்வாக்கை கொண்டு தனக்கு, தன் தேசத்துக்கு எது சரி, நல்லது என்று அது நினைக்கிறதோ, அதை அமெரிக்கா செய்து வருகிறது. மற்ற எல்லா தேசமும் செய்வது தான் இது. அதற்காக அந்த செயல்கள் சரி என்று நான் கூறுவதாக எடுத்து கொள்ள வேண்டாம். பல இடங்களில் மிக, மிக தவறான, கண்டிக்கத்தக்க, செய்யவே கூடாத செயல்கள் அவை.

   ஒரு வேலை அவர்கள் மேலாதிக்க வல்லரசு, உலகம் முழுவதும் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது என்று நீங்கள் பார்பதால் அவர்கள் மீது உங்களுக்கு வேறு மாதிரியான பார்வை இருக்கலாம். இதே போன நூற்றாண்டு என்றால் பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனி, ஆசியாவில் பார்த்தால் சீனா, ஜப்பான், இப்படி கூறிக்கொண்டே போகலாம். என்னை பொறுத்தவரை, உலகில் மற்ற எல்லா தேசமும் செய்ததை, செய்வதை தான் அமெரிக்காவும் செய்கிறது. They have the influence and are leveraging it to do what they think is best for America. There is nothing unique or wholly new about their behavior.

   கடைசியாக, உலகின் ஒவ்வொரு மூலையில் அமெரிக்கா செல்வாக்கு இருப்பதால் அந்த தேசத்துக்கு மற்ற தேசங்கள் போலவே பிரச்சனைகள் இருப்பதாக இல்லாமல் போய் விடுமா? உலகின் செல்வாக்கு மிகுந்த நாடு என்றால் ஊழல் அரசியல்வாதிகள், religious fundamentalism, ஊழல்கள் இல்லை என்று ஆகி விடுமா?

 7. சிந்தனை செய் !!! அமெரிக்க அரசின் நேரடி தலையிடு இந்த பிரச்சனையில். நீங்கள் சொன்ன வெங்காயம் எல்லாம், கார்பரேட்டுக்களுக்காக உரிக்கப்பட்டு அமமணமாக இருப்பதைப் பாருங்கள்.

  அன்றே சொன்னார் அந்த தாடிக்காரர் – “தனக்கான இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் போது, ஆளும் வர்க்கம் தனது முகமூடிகளை கழட்டி விட்டு, மிருகத்தனமாக தன்னை வெளிப்படுத்கும் என்று.

  https://www.vinavu.com/2016/11/03/dakota-access-pipeline-protest/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க