Sunday, May 16, 2021
முகப்பு செய்தி மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் BJP தலைமையகம் முற்றுகை !

மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் BJP தலைமையகம் முற்றுகை !

-

PP Logoபத்திரிக்கைச் செய்தி

நாள் : 9-11-16

அன்புடையீர் வணக்கம்,

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அரசு நேற்று இரவு 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தது. 120 கோடி மக்கள் உள்ள மிகப்பெரிய ஜனநாயக’நாட்டில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை முடக்குவதன் மூலம் கருப்பு பணத்தை, ஊழல் பணத்தை மீட்க முடியும் என அனைவரையும் நம்ப சொல்கிறார். இது மோடியின் கருப்புப் பண மோசடி!

இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி, எஸ்ஸார், மிட்டல் போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்புப்பணத்தை 500, 1000, ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை. மோடியின் இந்த அதிரடி உத்தரவால் சசிகலா-ஜெயலலிதா, வைகுண்டராஜன், பி.ஆர்.பி, நத்தம் விசுவநாதன், ஒரத்தநாடு வைத்தியலிங்கம், எடப்பாடி பழநிச்சாமி, சைதை துரைசாமி, ரெட்டி சகோதரர்கள்,என இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நபர்களின் எந்த அசையும் அசையா சொத்துக்களையும் இத்தகைய நடவடிக்கையால் முடக்க முடியாது. கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய்! இந்த மோசடிப் பேர்வழிகளின் பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார்?

ரொக்கப்பணம் மட்டும் கருப்புப் பணம் அல்ல. கருப்புப் பண முதலைகளின் எந்த வகை முதலீடுகளையும் முடக்காமல் சாமானிய மக்களின் சேமிப்பையும்  சம்பளத்தையும் வழிப்பறி செய்வதே மோடியின் இந்த திடீர்த் தாக்குதலின் நோக்கம். மேலும் நான் பிரதமரானால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிகணக்கிலும் ரூ.15 லட்சம்  போடுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திறமையான அரசு நிர்வாகம் என அனைத்திலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. இதை மூடி மறைக்கவே மக்கள் மீதான இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை !

மறுபுறம் பி.ஜே.பி. சங்பரிவார் அமைப்புகள் மாட்டுக்கறி, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி கொள்கை, இஸ்லாமிய எதிர்ப்பு, காவிரியில் கன்னட இன வெறி அரசியல், இட ஒதுக்கீடு ரத்து, ராமன் பார்க், தேசிய வெறி என மக்களிடையே கலவரத்தை தூண்டி மனித சமூகத்தையே கற்காலத்திற்கு பின்னோக்கி இழுத்து செல்ல முயற்சிக்கின்றனர்.

மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி, கோடிக்கணக்கான சாதாரண மக்களை நள்ளிரவில் நடுத்தெருவிற்கு தள்ளியுள்ளது. கருப்புப் பண முதலைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைத்த பணத்தை வெளிக் கொண்டு வராது நகைகளாகவும், சொத்துக்களாகவும், நிலங்களாகவும், பதுக்கப்பட்ட கருப்புப்பண முதலீடுகளை ஒன்றும் செய்யாது.

பெரும்பான்மை மக்களை வங்கி கணக்கு என்கிற வலைக்குள் சிக்க வைத்து ஆதார் என்கிற போலீசு கண்காணிப்பின் மூலம் வரிவிதிப்பை அதிகரிக்கவும், மான்யத்தை ரத்து செய்யவும், கோடிக்கணக்கான மக்களின் சிறுவாட்டு சேமிப்பு காசையும் வங்கிக்கு கொண்டு வந்து  அம்பானி அதானி மிட்டல்,போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு  தாரை வார்க்கத்தான் மக்கள் மீதான மோடியின் இந்த பொருளாதார பயங்கரவாத தாக்குதல்.

கள்ளப்பணம், கருப்புப் பணம் குவியவும், லஞ்ச ஊழல் பெருகவும் மக்களா காரணம்?  கருப்புப் பண முதலைகள் செய்யும் குற்றங்களுக்காக சாமானிய மக்கள் சாப்பாடும், மருந்தும் வாங்க வழியில்லாமல் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?. சாமானிய மக்கள் மீதான தற்போதைய பொருளாதாரத் தாக்குதலை எதிர்க்காவிட்டால்  ஹிட்லர் வடிவில் மீண்டும் ஒரு எமர்ஜென்சி அரசியல் பாசிச பயங்கரவாதத் தாக்குதலாக வரும், அனைத்துப் பிரிவினரும் போராடாமல் மோடியின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க முடியாது!

தோழமையுடன்
வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்

______________________

500, 1000 நோட்டுக்கள் செல்லாது !
மோடியின் கருப்புப் பண மோசடி!

பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை
நாள் : 10.11.2016 நேரம் : காலை 11.30 மணி
இடம் : தி.நகர்
தலைமை : தோழர்.சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்

 

ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம் ?
கருப்புப் பண முதலைகளின்
எந்த வகை முதலீடுகளையும் முடக்காது
சாமானிய மக்களின் சேமிப்பையும்  சம்பளத்தையும்
வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல் !

மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை
மூடி மறைக்கவே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை !

மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி,
சாதாரண மக்களை நள்ளிரவில் நடுத்தெருவில் தள்ளியுள்ளது.

மோடியின் இந்த நடவடிக்கை,
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
பதுக்கப்பட்ட பணத்தை வெளிக் கொண்டு வராது.
நகைகளாகவும் சொத்துக்களாகவும் நிலங்களாகவும்,
பதுக்கப்பட்ட கருப்புப்பண  முதலீடுகளை ஒன்றும் செய்யாது.

இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள்
பல வகைகளிலும் இரண்டு சதவீத
பணக்காரர்களின் கையில்தான் உள்ளன.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள்
கருப்புப்பணத்தை 500, 1000, ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.

கார்ப்பரேட் தரகு முதலாளிகளின்
வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய்!
இந்த மோசடிப் பேர்வழிகளின்
பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும்
மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார்.?

கள்ளப்பணம், கருப்புப் பணம் குவியவும்,
லஞ்ச ஊழல் பெருகவும் மக்களா காரணம்?
கருப்புப் பண முதலைகள் செய்யும் குற்றங்களுக்காக
சாமானிய மக்கள் சாப்பாடும், மருந்தும்
வாங்க வழியில்லாமல் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?.

சாமானிய மக்கள் மீதான தற்போதைய
பொருளாதாரத் தாக்குதலை எதிர்க்காவிட்டால்
அரசியல் பாசிச பயங்கரவாதத் தாக்குதலாக வரும், எச்சரிக்கை.
அனைத்துப் பிரிவினரும் போராடாமல்
மோடியின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க முடியாது!

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை. 9962366321

 1. மோடியின் இந்த நடவடிக்கையால் பாதிக்க பட போவது ஊழல் அரசியல்வாதி, தீவிரவாதிகள் போன்ற பல தீய சக்திகள், அதனால் அவர்கள் எல்லாம் ஏதோ சாதாரண மக்கள் மீது அக்கறை இருப்பது போல் நாடகம் ஆடுவார்கள்… ஊழல் அரசியல்வாதிகள், தீவிரவாதிகளுக்கு பணம் கொடுப்பவர்கள், கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை இப்போது மாற்ற முடியாது மாற்றினால் அதற்கான கணக்கை காண்பிக்க வேண்டும் இல்லையென்றால் பணத்தை இழக்க வேண்டும்… திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இவர்கள் எல்லாம் இருப்பார்கள்.

  மோடி ஆட்சிக்கு வரும் போதே இதையெல்லாம் பிளான் பண்ணி வந்து இருப்பார் என்று நினைக்கிறேன் முதலில் அனைவருக்கும் வங்கி கணக்கு, ஆதார் கட்டாயம் என்று ஒவ்வொரு கட்டமாக வந்து இப்போது கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் மீது surgical strike

  சிலர் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆடிட்டர் மூலம் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை தவறாக கணக்கு காண்பித்து வெள்ளையாக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் எவ்வுளவு தூரம் அவர்களால் பொய் கணக்கு காண்பிக்க முடியும் ? நிச்சயம் தாங்கள் சம்பாதிக்கும் 100 கோடி ரூபாய்க்கும் பொய் கணக்கு காண்பிக்க முடியாது, அவர்கள் சொல்லும் செலவு போக வரி கட்டி தான் ஆக வேண்டும். அப்படி பார்த்தால் சாதாரண மக்கள் கூட பொய் கணக்கு காண்பிக்கலாம்.

  ஓரிரு நாள் கஷ்ட்டத்தை அனுபவித்தாலும் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது மோடியின் இந்த செயல் நாட்டின் நலனுக்கு நன்மையை அளிக்கும்.

  உடனே யாரும் என்னை பிஜேபி ஆதரவாளன் என்று சொல்ல வேண்டாம், இந்த செயலை மன்மோகன் சிங் செய்து இருந்தாலும் பாராட்டுவேன்.

  • சிறுபிள்ளைத்தனமாக பொருளாதார நுட்பம் ஏதும் அறியா குழந்தையாக பேசிக்கொண்டு உள்ளீர்கள் மணிகண்டன்…. 65வயதுடைய MR கருப்பு மணி மணிகண்டன் என்பவர் அரசியல் ஊழல்கள், கமிசன் என்று சம்பாரித்த 1000ரூ கோடிகளை இன்னும் பணமாகத்தான் லாக்கரில் வைத்து கொண்டு உள்ளார் என்று அப்பாவியாகவா இன்னும் நம்பிக்கொண்டு இருக்கீங்க? என்ன போங்க மணிகண்டன்… எல்லாம் நிலமாகவும், தங்கமாகவும், வெளிநாட்டு முதலீடுகளாகவும் தானே உள்ளன. அவற்றை மீட்பது பற்றி மோடி ஜீ ஏதும் கவலைபடாமல் நடுத்தர மக்களின் தலையில் அல்லவா கை வைத்து உள்ளார் .என்ன இவர்கள் இப்போது கையில் உள்ள சில கோடிகளை r500 r1000 ஆக உள்ள கோடிகளை தானே அவர்கள் மாற்றவேண்டியது ஆகின்றது… அதற்கும் பேரங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கும்… 500 க்கு 50 என்று பேரன்கள் நடந்துக்கொண்டு தான் இருகின்றன…

   இவற்றை எல்லாம் தடுக்கவும் , பொருட்ட்களாக மாற்றப்பட்ட கருப்புப் பணத்தையும் தடுக்க என்ன செய்யப்போகின்றார் திருவாளர் மோடி அவர்கள்…

 2. இந்த நடவடிக்கை கருப்புப் பண முதலைகளின் நிழலைக்கூட நெருங்காது.அவர்களின் சொத்துக்கள் பணம் எல்லாம் பாதுகாக்கப்பட்டுள்ளது.இது சிறுவாடு சேமிக்கும் சாதாரண மக்களின் பணத்தைப் பிடுங்கி கார்ப்பரேட் கொள்ளை கும்பலிடம் ஒப்படைக்கும் முயற்சி என்பது பற்றி மணி வாயே (கையே) திறக்க வில்லையே ஏன்? இது தான் கோயபல்ஸ்தனம் என்பது! ”மக்களே போல்வர் கயவர்”

  • மணிகண்டன் போன்ற தேச விரோதிகள் இப்படிதான் நாட்டை பெரு முதாளிக்ளுக்கு தாரை வார்க்க மோடிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். நாம் தான் இந்த தேச விரோத செயலுக்கு எதிராக மக்களின் துணையுடன் போரட்ட வேண்டும்.. கதிர் நீங்கள் கூறுவது உண்மைதான்…. நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வாக்கு மூலத்தை பாருங்கள்:

   “””வங்கிகளுக்கு இதன் மூலம் (இந்த பணம் 500 1000 ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம்) மூலதனம் கிட்டும் என்றாலும் அவற்றிற்கு மேலும் மூலதனம் தேவைப்படும். ஆனால் இதன் மூலம் மூலதனம் திரட்டும் ஆதாரம் அதிகரித்துள்ளது””

   மக்களின் பணம் இதற்கு முன்பே ௮ லச்சம் கோடிவரையில் பெருநிருவன்ங்களுக்கு கொடுத்து வராகடனாக இருக்க இன்னும் வங்கிகள் முலம் மக்கள் பணத்தை மோடியின் உதவியால் அந்த பெரு நிறுவனங்கள் மீண்டும் கொள்ளையடிக்க போட்டத்திட்டம் தான் இது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க