Wednesday, September 23, 2020
முகப்பு செய்தி BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் ! படங்கள்

BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் ! படங்கள்

-

PP-Protest-(2)மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி நாடகத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. மோடியின் கட்சியான பா.ஜ.கவின் தமிழக தலைமை அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது. அதை நோக்கி இன்று காலை (10.11.2016) 11.30 மணியளவில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முழக்கத்துடன் பேரணியாகச் சென்றனர். கமலாலயம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் போலிசார் தயாரிப்புடன் இருந்தனர். உடனே சாலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மறியல் செய்தனர். இதனதால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

சென்னையின் முக்கிய சாலையான பாண்டி பஜாரில் இந்த மறியல் போராட்டம் சுமார் அரை மணிநேரம் நடந்தது. அங்கே குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடனே அணிதிரண்டனர். எளிய மக்களை துன்புறுத்தும் விதமாகவும், வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியிருக்கும் முதலைகளை காப்பாற்றும் விதமாகவும் மோடி செய்திருக்கும் இந்த நடவடிக்கையை தோழர்கள் விளக்கினர். கூடியிருந்த மக்கள் அதை ஆதரித்ததோடு செல்பேசிகளில் படமும், வீடியோவும் எடுத்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். யாரும் சாலை மறியலை இடையூறாக பார்க்கவில்லை என்பதோடு ஆதரித்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

PP Protest (16)பிறகு போலீசார் மக்கள் அதிகாரம் அமைப்பினரை கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்களை கைது செய்யாமல் போலீசு தயங்கிய போது, பரவாயில்லை கைது செய்யுங்கள் என்று உற்சாகப்படுத்தினர் அந்த மாணவர்கள். மாணவர்கள் மீது. வழக்கு வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று மக்கள் அதிகாரம் தோழர்கள் தெரிவித்த பிறகு போலீசு மாணவர்களை கைது செய்தது.

இந்நேரம் பார்த்து மோடியின் அடிமை ஊடகமான “டைம்ஸ் நவ்” தனித்தனியாக தோழர்களை பார்த்து தவறான கருத்துக்களை பெற அரும்பாடுபட்டது. ஆனால் தோழர்கள் அவர்களின் தந்திரத்தை முறியடித்தனர். பள்ளி மாணவர்களை ஏன் அழைத்து வருகிறீர்கள் என்று அந்நிருபர்கள் பெரிய ‘மனிதாபிமான’த்தோடு கேட்ட போது, மோடியின் நடவடிக்கையால் எங்கள் வீடும் பாதிக்கப்பட்டிருக்கிறது, மக்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆகவே போராடுவது எங்கள் கடமை என்ற போது அந்த மேட்டுக்குடி செய்தியாளர்கள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு போய்விட்டனர்.

மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர். காவிரி உரிமைப் போராட்டத்தில் எதிரியாகிப் போன பா.ஜனதா கும்பல் இப்போது கருப்புப் பண விவகாரத்திலும் அம்பலப்பட்டு நிற்கிறது. முதலாளிகளின் பிரதிநிதியாக செயல்படும் பாரதிய ஜனதாவை முறியடிப்பதன் அவசியத்தை இந்த போராட்டம் ஏற்படுத்தியது. தொடர்ந்து போராடுவோம்!

– வினவு செய்தியாளர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. பாவம் கம்யூனிஸ்ட் தோழர்கள் மோடியின் surgical strike மூலம் ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பாங்க போல… எப்படியும் இவர்களின் போராட்டத்தை மக்கள் யாரும் ஆதரிக்க போவதில்லை அதனால் ஒன்றும் தெரியாத பள்ளி மாணவர்களை கூப்பிட்டு வந்து கூட்டம் அதிகம் என்பது போல் காட்டுகிறார்கள், காஷ்மீர் தீவிரவாதிகளின் தோழர்களாச்சே, அதனால் காஷ்மீரில் நடப்பது போல் நாட்டின் மற்ற பகுதிகளிலும் இவர்களின் தேசவிரோத அரசியலுக்கு மாணவர்களின் வாழ்வை நாசம் செய்ய பார்க்கிறார்கள்.

  • அம்பானிக்கும் அதானிக்கும் இன்னபிற கார்ப்பரேட்டுகளுக்கும் மோடிமாமா
   விளக்கு பிடிக்கிறதை ஒட்டுமொத்த இந்தியாவும் பார்த்து காறி துப்புது.
   இந்த கண்டிஷன்லயும் உங்கள மாதிரி ஆளுகளால சொம்படிக்க முடியுதுன்னா
   மதவெறி ஒண்ணுதான் காரணமா இருக்க முடியும்.முஸ்லீம்களுக்கு எதிரா
   இருக்கான்கிற ஒரே காரணத்திற்க்காக எங்கியோ இருக்கிற நாரவாயன்
   TRUMPக்கு சப்போர்ட் பண்ற அம்பிகள் போல.

  • மணியண்ணே,

   சர்ஜிக்கல் ஸ்டிரைக்ல மக்கள் எல்லாரும் தான் பாதிக்கப்பட்டிருக்காங்க ..

   நீங்க போயி கோயம்பேடு மார்க்கெட்டுல ”இது நல்லது தான்” ,” மோடி சரியாத்தான் பண்ணிருக்காரு”ன்னு கொஞ்சம் சொல்லிப் பாருங்களே மணியண்ணே …

   மணியண்ணனுக்கு அங்கேயே வாய்க்கரிசி போட்டிருவாங்க ..

   எல்லாம் கடுப்புல இருக்காங்க டி மாப்ள .. வெளிய கிளிய போயி சொல்லிடாதப்பு.. ஒம்ம புராணத்த வினவுக்குள்ள மட்டும் வச்சிக்க மணியண்ணே ..

   அப்புறம் ஆப்பு உனக்கு மட்டும் இல்லை. எங்களுக்கும் தான் .. ஒரு காமெடி பீசு இல்லைன்னா வினவு இணையதளமே போரடிச்சிடும்.

   வரடா ..

 2. Mr மணிகண்டன் …, மோடியின் உள்நோக்கத்தை போட்டு உறைகின்றார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி…. வங்கிகளுக்கு தேவையான மூலதனம் இந்த நடவடிக்கை முலம்கிடைக்கும் என்கின்றார் நிதி அமைச்சர்… இது வரையில் பெரு நிறுவங்களுக்கு கொடுத்து திரும்பி வராத பல லட்சம் கோடி மக்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க துப்பு இன்றி மீண்டும் மீண்டும் மக்களின் கை பணத்தை பிடிங்கும் முயற்சி இது என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுகின்றார் திருவாளர் ஜெட்லி… மேலும் விவரங்களுக்கு தமிழ் செய்தித்தாள் ஹிந்துவின் இணைப்பை பாருங்கள் மணிகண்டன்… உண்மையில் பாதிக்கப்படுவது நடுத்தர ஏழை மக்கள் தான் என்ற உண்மை விளங்கும்…. அப்படி பாதிகப்படும் மக்களில் வினவு இணையத்தை சேர்ந்தவர்கள் இருகின்றார்கள் என்பதால் அவர்கள் போராடுவதில் என்ன தவறு மணி?

  Jetlee’s statement in Tamilthehinu News Daily : //வங்கிகளுக்கு இதன் மூலம் (இந்த பணம் 500 1000 ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம்) மூலதனம் கிட்டும் என்றாலும் அவற்றிற்கு மேலும் மூலதனம் தேவைப்படும். ஆனால் இதன் மூலம் மூலதனம் திரட்டும் ஆதாரம் அதிகரித்துள்ளது.//

  http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article9328803.ece?homepage=true

 3. மக்களுக்கு எதிரான பிரச்சினைகளில் உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்புடன் நாமும் கரம் சேர்ப்போம்.இந்து மத வெறி பாசிஸ்டுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.வாங்கின காசுக்கு அதிகமாகக் கூவும் மணிகண்டன்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க