Sunday, February 9, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி - வீடியோ

மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ

-

‘தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில் அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். 1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.

அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர். தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர். சரி இப்போது இவர்களது குடும்பத் திருமணத்திற்கே 500 கோடி
செலவழிக்கிறார்கள் என்றால் சொத்து எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.

சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகள் பிராமணிக்கு 16-11-2016 அன்று திருமணம் நடைபெற்றது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.

சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய். தற்போது அந்த பட்ஜெட் 650 கோடி என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு சும்மா கண்துடைப்புக்காக ஏதோ விசாரணை, ஆய்வு, ஆகட்டும் பார்க்கிறோம் என்று சீன் போட்டார்கள். மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். இது போக செல்லாத நோட்டு அறிவிப்பால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து போயிருக்கின்றனர்.ஆனால் ரெட்டி சகோதர்கள் மோடியின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜயநகர அரசின் தலைநகரையே மறுநிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஹம்பி நகரத்தின் முக்கியமான சின்னங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள். விஜய நகர பேரரசு காலத்தல்தான் தென்னிந்தியாவில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை பல்வேறு நிலைகளில் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த செட்டும், ரெட்டிகளும் அவர்களுக்கு சகல உதவிகளும் செய்யும் பா.ஜ.க-வும் நன்றாகவே பொருந்துகின்றனர்.

ஊரே சோகத்தில் துவண்டிருக்கும் போது இவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆபாசத்தை ஒழிக்காமல் மக்களுக்கு அமைதி ஏது?

பாருங்கள் – பகிருங்கள்!

  1. ரெட்டி சகோதரர்கள் எப்படி சம்பாதித்தார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.பின்னணிக் குரலில் சில ஏற்ற இறக்கங்கள் தேவை.இசையும் அப்படித்தான்.காலத்துக்குப் பொருத்தமான பதிவு.

  2. மணிகண்டன்…, atm மூலம் இரண்டாயிரம் ரூபாய் பணம் எடுக்கவே நாம் க்யூவில் நிற்கவேண்டியுள்ளது. வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டும் தான் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம் என்ற லிமிட் வேறு உள்ளது. திருமணத்துக்கு 2.5 லச்சங்கள் வரையில் தான் பணம் எடுக்கலாம் என்று இப்ப தான் அரசு அறிவித்து உள்ளது. அதற்கும் பான் கார்டு வேறு தேவை. ஆனா இவிங்களுக்கு எதுங்க இவ்வளவு பணம் ? அதுவும் மோடியின் செல்லா நோட்டு அறிவிப்புக்கு பின் 16-11-2016 அன்று நடைபெற்ற இந்த திருமணத்துக்கு செலவு செய்ய ஏதுங்க இவ்வளவு பணம்?

    • 500 கோடி ரூபாய் செலவு செய்து நடத்தும் திருமணத்தை 16ம் தேதி தான் செலவு செய்தார்கள் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது, 8ம் தேதிக்கு முன்பே அவர்கள் பல செலவுகளை செய்து இருப்பார்கள் மேலும் online transfer மற்றும் check மூலம் பணம் கொடுத்து இருப்பார்கள், இதெல்லாம் ஒரு கேள்வியா ?

      • சரி நீர் ரெம்பவும் மெனக்கெட்டு அந்த பெருச்சாளிக்கு சப்பை கட்டு கட்டுவதால்….
        உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம். ஒரு பாதி காசாவது 8ம் தேதிக்கு அப்புறம் செலவு செஞ்சிருக்க மாட்டார்களா ஏன்னா?

        அப்புறம் நீர் என்ன ரெட்டியோட ஆடிட்டர் மாறியே பேசுறீங்களே.

        மோடிய பத்தி பேசுனாலும் ஆஜரகுறீங்க.. ரஜினியப் பத்தி பேசுனாலும் ஆஜர் ஆகுறீங்க….ரெட்டியப் பத்தி பேசுனாலும் ஆஜர் ஆகுறீங்க……. பீஸ் இல்லாமலே அவர்களுக்கு வக்கீல் வேலைப் பாக்குறீங்க…….இருந்தாலும் ……இன்னும் முயற்சி பண்ணனும் பாஸ்…..

        பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்…….

        • காவிகள் முத்திரத்தை குடுத்து கேக் என செல்லி குடிக்க சென்னாலும் குடிப்பார் அதை நம்மிடம்மும் தந்து குடிக்க சொல்வர் நம் அது முத்திரம் என எடுத்து சொன்னாலும் அதை நம்பமாட்டார் காரணம் மத வெறி உரியர் மோடி என்ன சென்னாலும் நம்புவன் மணிகாண்டம் போன்ற முட்டாள்கள்

      • என்னிக்கு செலவு செய்தார்கள் என்பது தான் பிரச்சனையா?
        8-ம் தேதிக்கு முன்னால் செலவு செய்தால் என்ன பின்னால் செலவளித்தால் என்ன?

        ரூ.500 கோடிக்கும் மேல் ஒரு திருமணத்திற்கு செலவு செய்யப்பட்டதும், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது, எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதெல்லாம் பிரச்சனையே இல்லை அப்படித்தானே?

        நாட்டின் வளங்களை கொள்ளையடித்து சேர்த்த அந்தப் பணம் எங்கிருந்து வந்தது, எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி பேசுபவர்கள் எல்லாம் தேச விரோதிகள், பாகிஸ்தான் கைக்கூலிகள். 8-ம் தேதிக்கு முன்னால் செலவு செய்ததா பின்னர் செலவளித்ததா என்று பேசுபவர்கள் தேச பக்தர்கள். எனில் உங்கள் தேசம் என்பது எது?

      • என்ன மணிகண்டன் மக்களுக்கு ஒரு சட்டம் …! அவருக்கு ஒரு சட்டமா ? தனது மகளின் திருமணத்தை ரூ.2.5 லட்சத்தில் நடத்தினாரா? அவர் திருமணச் செலவுகளுக்கு காசோலைகளை மட்டுமே பயன்படுத்தினாரா? ரூ.2.5 லட்சத்திலேயே செலவுகளை சமாளித்துவிட்டாரா? அல்லது அவரது ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டாரா?”

      • என்ன மணிகண்டன் ,
        வங்கி பரிவர்த்தனை நடைபெற்றால் கறுப்புப் பணம் இருக்காது, ஊழலும், லஞ்சமும் இருக்காது என மோடி கூறுகிறார். இப்போது வங்கி பரிவர்த்தனை நடைபெறும் நாட்களில் நடைபெற்ற அந்த திருமணத்தில் ஊழலும், கறுப்புப் பணமும் இல்லையா என்பதற்கு மணிகண்டன் விளக்கம் அளிக்க வேண்டும்.

      • என்ன மணிகண்டன் …! வினவு வாசகர்கள் குமுறு குமறு என்று குமுறும் போதும் பதில் சொல்லாமல் எங்க போயிட்டீங்க! வாங்கிய காசு பத்தாம இன்னும் வாங்க போயிட்டீங்களா? இல்ல பதில் தெரியாமல் பதில் கேட்க போயிட்டீங்களா?

      • This is for you Mr. Mankandan.

        “பதிவு செய்த நாள் : 30, நவம்பர் 2016 (23:4 IST) மாற்றம் செய்த நாள் :30, நவம்பர் 2016 (23:11 IST)

        இறந்த மனைவி உடலுடன்
        ஏடிஎம் வரிசையில் காத்திருந்த முதியவர்

        ராஜஸ்தான் மாநிலம் நோடியா கிராமத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வருபவர் முன்னிலால் ( வயது 65). இவரது மனைவி பூமதி. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நோயின் தாக்கத்தால் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார். மனைவியின் உடலை அடக்கம் செய்ய முன்னில்லாலால் வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை .இதனால் மிகவும் சிரமபட்டு உள்ளார். அருகில் உள்ள வங்கியில் அவரது மூத்த மகன் கணக்கில் ரூ 16 ஆயிரம் போடபட்டு இருந்தது ஆனால் அதை எடுக்க முடியவில்லை.

        இதனால் மனைவி உடலுடன் அந்த வங்கியின் முன்னால் அமர்ந்து விட்டார். இது குறித்து முன்னி லால், ‘’வங்கியின் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் நின்று இருந்தேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை. நான் வங்கி ஊழியர்களிடம் எனது மனைவியின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் எடுக்க வேண்டும் என கெஞ்சி கேட்டு கொண்டேன். ஆனால் யாரும் எனது வேண்டு கோளை ஏற்று கொள்ள வில்லை. நான் பொய் கூறுவதாக எண்ணினர். அன்று வங்கியை பூட்டியும் விட்டார்கள். இறுதியில் அவரது மனைவியின் இறுதி சடங்கிற்கு ஒரு போலீஸ் அதிகாரி ரூ.2500 வழங்கி உள்ளார். மேலும் ஒரு அரசியல்வாதி ரூ. 5000 வழங்கி உள்ளார். This is from Nakkheeran.

  3. சூரத்தில் 500 ரூபாய் செலவில்நடந்த திருமணத்தை , தனது ரேடியோ உரையில் குறிப்பிட்ட கேடி, இந்த மாஜி பி ஜே பி மந்திரி வீட்டு 500 கோடி ஊதாரி தனத்தை ஏன் குறிப்பிடவில்லை?????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க