Sunday, September 27, 2020
முகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் டாஸ்மாக் பாரில் தேசிய கீதம் – காளமேகம் அண்ணாச்சி

டாஸ்மாக் பாரில் தேசிய கீதம் – காளமேகம் அண்ணாச்சி

-

pseudo patriotismரொம்ப நாளைக்குப் பெறவு வினவுக்காரவுக “அண்ணாச்சி, உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தீர்ப்பு படிச்சிருப்பீங்களே, எழுதுறீங்களா”ன்னு கேட்டாக. ஏற்கனவே எத்தனையோ தபா எழுதலாம்னு கேட்டப்போ, அதெல்லாம் உங்க காமடிக்கு செட்டாகாது, சீரியஸா எழுதற விசயமுன்னு சொன்னீகளே, இதுவும் அப்படிப்பட்டதுல்லான்னு கேட்டேன். “இல்லை அண்ணாச்சி இது சிரிச்சுக்கிட்டே எழுதுற விசயம், சிரிங்கன்னு” டக்குனு போன வைச்சுட்டாங்க.

எக்குத்தப்பா ஏதாவது எழுதி நம்மள மாட்டுறாங்களோன்னு ஒரு சம்சயம் (சந்தேகம்) மனசிலுண்டு. சரி, வுடுங்க பாத்துக் கிடலாம். காந்தியே செத்துட்டாரு, சிவாஜக்கே சில வெச்சுட்டாங்க!

நோட்டுக்கு வேட்டு வெச்சுட்டாரு மோடி அவரு தாடிக்கேத்த கேடின்னுட்டு தேசமே கானாவுல அறம் பாடிக்கிணு கீறப்போ உச்சநீதிமன்றம் இப்புடி ஒரு தீர்ப்ப அவுத்து வுட்டுறுக்கு!

நவம்பருல நோட்டெல்லாம் செல்லாதுன்னு பத்து இலட்ச ரூபா கோட்டு கனவான் சொன்னப்பவே நம்ம சேட்டன் கவுதம் வாசுதேவ மேனன் (பெயரை சின்னதா வைக்க கூடாதா ராசா?) உசாரா விரல்லயே வித்தை காட்டுற தம்பி சிம்பு படத்தை ரிலீஸ் பண்ணாம பூட்டி வைச்சிருக்கணும். ஆசை யார வுட்டுதுங்குற கணக்கா படத்த வுட்டாக. மல்டி பிளக்ஸ்ல ஆரம்பிச்சு மகாலெட்சுமி தியேட்டர் வரைக்கும் ஆளில்லாம வாச்சுமென்னெல்லாம் அன்னைக்கு ஒரு கட்டு கணேஷ் பீடியை அதிகம் பிடிச்சாகளாம்.

கபாலியில 1000-ம் 500-ன்னு ஏமாந்தப்பவே நம்ம பயலகளெல்லாம் இனி தமிழ் ராக்கர்ஸ்தான் நம்மோட தியேட்டர்னு சுடுகாட்டுல சத்தியம் எடுத்துட்டு அன்னாடம் 12 மணி ராவுல டவுண்லோட போட்டு விட்டுட்டானுவ. இதுல தியேட்டர்ல தேசிய கீதம் பாடு இல்லேன்னா ஓடுன்னு சொன்னா எவம்டே சினிமா பாக்க வருவான்?

ஏம்பா நீதிபதிகள்ள, இந்த மிஸ்ரா, ராய் இவுகளெல்லாம் எடுக்க மாட்டமோன்னு ஒரு ஃபத்வா போட்டா என்னப்பா? ஒருத்தரு கோவில்ல வேட்டிய கட்டு, தாவணிய போடு இல்லேன்னா உள்ள உடமாட்டோம்குறாரு. இன்னொருத்தரு அய்யமாரத் தவிர மத்தவனெல்லாம் கருவறைக்குள்ள வராதங்குறாரு. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு வடிவேலு அண்ணாச்சி சொன்னா அதுல சிரிக்கவும் சிந்திக்கவும் நிறைய இருக்கு. ஆனா உயந்த சாதிக்காரவுக கொலை செய்ய மாட்டாங்கன்னு வெண்மணியிலேந்து, பன்வாரி தேவியோட ராஜஸ்தான் வரை சொல்ற நீதிபதிய பாத்தா அதுல விசமும் வில்லங்கமுமுல்லா நெம்பி வழியிது!

தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய்ன்னு உச்சியில நீதிய பதுக்கி வச்சுருக்கிற இரண்டு பேருதான் இப்ப தியேட்டர்ல ஜனகனமண வேணுமுன்னு ஒத்தக்கால்ல உத்தரவு போட்டுருக்காக. தீர்ப்பு சொல்ற அன்னைக்கு அவங்க வீட்டு குழந்தைங்க ஏதும் மோடி அமித்ஷாவ பாத்து மிரண்டு கத்தி ஐயாமாரு மூட அவுட்டாக்கிட்டாங்களோ தெரியல.

அந்த உத்தரவுல இன்னா சொல்லக்கீறாங்கன்னா:

 1. சினிமா படத்துல ஆகாசவாணிக்கு முன்னாடி தேசிய கீதத்த போடு
 2. கீதத்த போடும் போது தேசியக் கொடிய காட்டு
 3. பாட்டு கேக்கறச்சே பாக்குற ஜனமெல்லாம் அட்டென்சுல நிக்கணும்
 4. பாட்டு ‘போரு’ன்னு எவனாவது தம்மடிக்க போனாலும் போவான், அதுனால பாட்டு போடும் போது கதவை மூடு
 5. ஏற்கனவே பாரதமாதாவ கூறு போட்டு வுத்ததால தேசிய கீதம் இசைக்கிறச்சே நீ வேற புதுசா வெளம்பரத்த போடாத

pseudo patriotism 1இதை தியேட்டரு ஓனருங்க செய்யலேன்னா நீதிமன்ற வழக்கு போடுவோமுன்னு மிஸ்ராவும், ராயும் மாட்ரிக்ஸ் படத்துல வாற ஏஜெண்ட் ஸ்மித் கணக்கா கண்டிசனாக சொல்லிட்டாங்க.

ஏற்கனவே மகாராஷ்டிர சட்டசபையில பாரதமாதா ஜெய் சொல்லலேன்னு ஒரு பாய வெளியேத்தி அலப்பறை பண்ணுன பா.ஜ.க-மாரு இதுதான் சாக்குண்ணு உடனே நடைமுறைபடுத்துரோம்னு துள்ளிட்டாய்ங்க! ஏ.டி.எம்லேயும், பேங்குலயும் ஜனமான ஜனம் மோடி வரட்டும் பாத்துக்குறோம்னு குதிச்சப்போ, எல்லையில வீரனுங்க சாவுற போது ஏ.டி.எம்ல செத்தா என்னடான்னு கல்யாணராமன்லேர்ந்து, சுமன் சி ராமன் வரைக்கும் சாபம் மேல சாபம் போட்டு மெய்யாலுமே அது பலிச்சும் போச்சு!

இப்ப தியேட்டர்ல ஜயஹே பாடனும்முனு ஒரு விவாதத்தை ஏத்தி விட்டா ஃபேஸ்புக்குக்கும் வாட்ஸ்அப்க்கும் வாக்கப்பட்ட பயலுவ அதையே பேசிப் பேசி நோட்டு விவகாரத்தை மறந்துருவாணுகள்ளா? ஐடியான்னா அது அமித்ஷாம்தாடே!

போதாக்குறைக்கு கலிங்கப்பட்டி ஜமீனுகிட்ட மைக்க கொடுத்துட்டா நாடு பூறா பதினெட்டு பட்டிக்கும் தேசிய கீதத்த வகுப்பெடுத்து வாய்க்கால் வெட்டி அதுல கப்பலே உடுவாருல்லா! அப்பாலிக்கா அந்த கப்பல்ல ஈழம் வேழம்ணு முழங்குனாருன்னா பெறவு எதுக்குடே தியேட்டருக்கு போவணும்! ஆதித்யா சானலுக்கே நம்ம வைகோ அண்ணாச்சிதாம்டே போட்டி!

மோடிக்கு வெற்றி, செல்லாத நோட்டுக்கு மக்களோட ஆதரவுன்னு ஜூ.வி-லேர்ந்து தந்தி டி.வி வரைக்கும் சளைக்காம பேசுற பயலுவ இனி ஜனகனமணவ வைச்சு கம்பெனி ஆர்ட்டிஸ்ட்ட கத்த வைச்சு ஒரு மாசம் ஓட்டுவாணுகள்ளா!

என்ன இருந்தாலும் தேசம்னாலும், தேசபக்தின்னாலும், தேசிய கீதம்னாலும் சும்மாவாடே! இவுணக பேலுறதும் மோளுறதும்  அடைச்சுப் போச்சுன்னா பாரத மண்ணே வணக்கமுன்னு ஆர்.எஸ்.எஸ் காரனுவுகளோ இல்லை சமூக ஆர்வலருண்ணு காவி ஜட்டிய மறைச்சுக்கிணு வாரவனையும் சாக்கடையில கைய வெக்கச் சொல்லு பாப்போம்!

பாதாளச் சாக்காடையில இறங்கி ஒரு தபாவாச்சும் முங்கி எந்திரிக்கிறவன்தான் தேசபக்தன்னு ஒரு சட்டம் போட்டா என்னடே நடக்கும்? தந்தி டி.வி பாண்டே பய சிட்னிக்கு ஓடிருவான். புதிய தலைமுறை பச்சமுத்து பாங்காக் பறந்துருவான். பா.ஜ.க எச்ச ராஜா பெல்ஜியத்துக்கு கிளம்பிருவான். மோடி, அமித்ஷாவெல்லாம் என்னத்துக்கு தூரமான்னு லாகூருலயே குதிச்சிருவான்.

ஏலே கத கேக்குற தம்பிகளா நாஞ் சொல்லுறது கத இல்லடே. பர்மாவுல அந்தக் காலத்துல துப்புறவு தொழிலாளிங்க ஸ்டிரைக் பண்ணுனுப்ப, அரசாங்கமே விரட்டியும் கிளம்பாத செட்டியாருங்கல்லாம் இனிமே அவங்க அவங்க ஆயை பாக்கெட்டுல கட்டி ரங்கூன வுட்டு தூரமா போட்டுட்டு வரணும்னு அரசாங்கம் சொன்னப்போ ஆள வடுங்கன்னு சென்னைக்கு கப்பலு ஏறிட்டாங்கடே.

சரி அத வுடு, இப்ப என்ன தேசிய கீதம் பாடணும்.

பாரத மாதான்னா யாரு, வேளாங்கண்ணி மாதிரி வடக்கத்திய மாதாவான்னு கேக்குற பயலுக கூட இன்ன தேதிக்கு சன்னி லியோன, டெஸ்க்டாப்ல கோயில் கட்டி கும்புடுதாணுக! அதான் நம்ம மிஸ்ராவும், ராயும் ரோசனை பண்ணி தேசத்துக்கு ஏதாச்சும் செஞ்சு கீதத்தை செஞ்சுரணும்னு முடிவு பண்ணிட்டாக.

சரிங்க ஆபிசர். எதுக்கு அத தியேட்டரோட பூட்டணும். பூரா இடங்கள்ளயும் திறந்து வுட்டா பெறவு தேசபக்தி பூத்துக் குலுங்கும்லா? அதுக்குத்தான் நொம்ப ரோசனை பண்ணி சில ஐட்டத்தை சொல்லிட்டு போறேன், பாத்து செய்யுங்க!

பாயிண்ட் நம்பர் 1: அப்பல்லோ தொட்டு அரசாங்க ஆஸ்பத்திரி வரை அல்லா ஆபரேசன் தியேட்டர்லயும் (இதுவும்தான் தியேட்டர்தாம்டே) கத்திய தொடுறதுக்கு முன்னாடி ஜனகனமண பாடணும்னு ஆக்கணும். சரி எப்படியும் நாம பொழைக்க மாட்டோம்னு நினைக்கிற நோயாளியெல்லாம் இதுதான் கிளைமாக்ஸ்னு புரிஞ்சுகிட்டு புண்ணியமா போய்ச் சேந்துருவான்.

பாயிண்ட் நம்பர் 2: ராவுல 9 மணிக்கு தம்பி பாண்டேவும், அண்ணே ஆர்னாப்பும் டி.வியில கத்துற விவாதத்த தேசிய கீதத்த போட்டு ஆரம்பிச்சா ரெண்டு பயபுள்ளைகளுக்கும் வேலை ஈசியா முடிஞ்சிரும். பேச வராவங்கள்ள யாரு பாடுறா, யாரு வாயசைக்கிறா, யாரு ஒப்பேத்துறான்னு கண்டுபிடிச்சா கிளைமேக்சுல தேசிய கீதம் தெரியாத நீதான தேசத்துரோகின்னு அதுக்கு ஆதராம புட்டேஜ்ஜ போட்டா போச்சு!

பாயிண்ட் நம்பர் 3: ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத்தான் இலவச அரிசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா அடடே மானியத்த வெட்டுறுதக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குரியோட வாயப் பொளப்பானுகல்லா!

பாயிண்ட் நம்பர் 4: டாஸ்மாக் பாருல ஒரு மணிநேரத்துக்கு ஒரு வாட்டி தேசிய கீதம் போடணும். அத போடும் போது ஸ்டெடியா நின்னா ஒரு குவார்ட்டர் இனாம்னு ஒரு அறிவிப்பு போட்டா, மொத்த தமிழ்நாடே ஒரு ராத்திரியிலேயே தேசிய கீதத்த கரைச்சு குடிச்சு இந்தியாவுக்கே முன்மாதிரியா ஆயிருமுல்லா! பெறவு குடிச்சுட்டு சீனு போடுறவனெல்லாம் ஒரு குவார்ட்டர் இனாம்ங்கிறத மனசுல வெச்சுகிட்டு பவிசா நடப்பாம்லா!

pseudo patriotism 2பாயிண்ட் நம்பர் 5: இந்தியா ஃபுல்லா அல்லா வூட்டுங்கள்ளேயும் தினமும் ஒரு வாட்டி அய்யருமாறு காயத்ரி மந்திரம் மாதிரி தேசிய கீதம் பாடணும். யாரு இத போடாம டபாய்க்கிறாங்கண்ணு ஒரு சேட்டிலைட் கோட 2000 ரூபாய் நோட்டுல போட்ட மாதிரி ஓட்டுக்குள்ளயோ கூரைக்குள்ளயோ போட்டா டேட்டா பேசுல டிமிக்கி குடுக்குறவனுங்க தெரிஞ்சுருவாணுங்க. அப்பால மாசத்துக்கு ஒரு தபா இப்புடி தேசிய கீதம் பாடாத வீடுங்கள்ள திருடங்க புகுந்து திருடலாம், போலீசு வராது, கேஸ்ஃ ஆகாதுன்னு ஒரு அறிவிப்பு கொடுத்துப் பாரு! பெறவு 30 நாட்கள்ள தேசிய கீதத்த பாராயணம் செய்வது எப்படின்னு புக்லேர்ந்து, டிரைனிங் சென்டர் வரை பிசினஸ் பிச்சுகிடுமுல்லா!

பாயிண்ட் நம்பர் 6: ஒரு குடும்பத்துல அத்தனை பேரும் தேசிய கீதத்த சரியா பாடிக் காம்பிச்சா அவுங்க ஆதார் கார்டுல ஒரு ஸ்டார ஏத்தி, இந்த ஸ்டார் இருந்தா சரவணா ஸ்டோர்லேந்து, நல்லி குப்புசாமி வரை அல்லாக் கடைங்கள்ளயும் ஒரு சரோஜாதேவி சோப்பு டப்பா இனாமுன்னு சொன்னா இன்னா நடக்கும்? பெறவு டப்பா பத்தலேன்னு சீனாவுலேந்துதான் இறக்கணும்.

பாயிண்ட் நம்பர் 7: ஆன்சைட் போக விரும்புற நம்ப ஐ.டி தம்பிமாரு பத்து கிராமத்துல நூறு பேருக்கு தேசிய கீதத்த கத்துக் கொடுக்கணும். கொடுத்தா அமெரிக்கா நிச்சியமுன்னு ஒரு அறிவிப்பு போடு! பயபுள்ளைக ஃபேஸ்புக்க காலி பண்ணிட்டு கிராமம் கிராமமா சுத்துவாணுகல்லா!

பாயிண்ட் நம்பர் 8: மாட்டுக்கறி துன்னுறவணுங்க ஒரு நாளைக்கு ஐஞ்சு வாட்டி தேசிய கீதத்த பாடணும், துன்னாதவனுக்கு கிடையாதுன்னு சொல்லிப் பாரு! வேற வழியில்லாம நாட்டுக்காக மாட்ட தியாகம் பண்ணுவாங்க. நாமளும் நாடயும், மாடயும் காப்பாத்துனமாறி ஆச்சுல்லா?

ஃபைனல் பாயிண்ட் நம்பர் 9: அல்லாரு வூட்டுலயும் படுக்கும் போது கண்டிசனா தேசிய கீதம் பாடணும்னு அதுக்கும் சாட்டிலைட் கோடு போட்டு பாடலேன்னா டி.வி கட் பண்ணிருவோம்னு சொல்லு! பயபுள்ளைக கந்தசஷ்டிக் கவசம் மாறி பிச்சு மேஞ்சுருவாங்கல்லா? சீரியலு பாக்காம நம்ம மாதர் குலங்க வாழ முடியாதுல்லா?

– காளமேகம் அண்ணாச்சி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. தேசிய கீதத்த மக்களுக்குக் கத்துக்குடுத்து தேசபக்தியப் பரப்புறதுக்கு நீங்க குடுத்த ஐடியா சூப்பரு அண்ணாச்சி. ஆனா தேசபக்திய கிண்டல் பன்னிட்டிங்கன்னு உள்ளப் புடிச்சு போட்டுடுவானுங்க பாத்துக்கங்க.

 2. என்ன அண்ணாச்சி பாத்து ரொம்ப நாளாச்சு சௌக்கியமா? அடிக்கடி வந்துட்டு போங்க. சீரியசாவே படிக்கிற வினவு வாசகர்களுக்கு காமடியனும் வேணுமுள்ள. ஆமா ஊருபக்கம் போயி பல வருசமாச்சுப் போல அண்ணாச்சி பேச்சுல சென்னை வாடை வீசுதே அதான் கேக்குறேன்.

 3. அண்ணாச்சி காமடினு நினைச்சி ஒன்பது பாயிண்டு கொடுத்து இருகாரு! ஆனா பாருங்க இந்த காமடியான விசயத்தை கூட சிரியஸா நடைமுறைபடுத்துங்க என்று கூறிக்கொண்டு மணிகண்டன் மாதிரியான மோடி ரசிகர்கள் ஓடோடி வருவாங்க! நீதிபதிகளுக்கு தேசிய கீதத்தை எங்கு பாடவேண்டும் , எப்போது பாடவேண்டும் என்ற நடைமுறை கூட தெரியவில்லை.

 4. திரை அரங்கில் தான் ஒருவன் என்ன மதம் என்ன ஜாதி என்ன இனம் என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் மக்கள் கூடும் இடம், அந்த இடத்தில் இனம், மதம், ஜாதி என்று அனைத்தையும் கடந்து நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை.

  இதற்கான காரணம்

  இந்தியா என்ற நாட்டை விட என் மதம் தான் முக்கியம் என்று பலர் இருக்கிறார்கள்,______
  இந்தியா என்ற நாட்டை விட கம்யூனிச கொள்கை தான் முக்கியம் என்றும் பலர் இருக்கிறார்கள், ________இந்தியா என்ற நாட்டை விட இனம் தான் முக்கியம் என்றும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் ஈழம் தான் தங்கள் தேசமாக நினைக்கிறார்கள்.

  இம்மாதிரியான விஷயங்கள் தொடர்ந்தால் நாளை இந்தியா என்ற தேசமே இருக்காது… தேசம் இருக்காது என்பதை விட இவர்களால் அப்பாவி மக்கள் பெரும் அளவில் துன்பங்களை சந்திப்பார்கள். தேச நலனுக்காக தேச ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

  • திரையரங்குகளில் காட்டப்படும் படங்கள் பெரும்பாலும் நீங்கள்நினைபது போன்று சமுகத்தின் மீதான அக்கரையில் எடுக்கப்படும் படங்கள் அல்லவே! குறிப்பாக கூறுவது என்றால் தேவர்மகன் போன்று சாதியை முன்னிருத்தும் படங்கள் தானே! மேலும் பல் சுவையுடன் கூடிய மசாலா படங்கள் தானே அவை. அத்தகைய நிலையில் நீதிபதிகள் கூறுவது போன்று பல்சுவை நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடக்கூடாது என்றால் திரைப்படங்க்ளுக்கு மட்டும் எதற்கு தேசிய கீதம்? மேலும் ஒவொரு புதிய படத்துக்கும் அரசின் உத்தரவை மீரித்தானே கட்டணம் என்ற பெயரில் மக்கள் அதிக பணத்தை கொடுகின்றார்கள்… அப்படி என்றால் திரையரங்குகளில் நடமாடும் கருப்புப்பணத்துக்கு தேசிய கீதம் தான் சாட்சியா மணிகண்டன்?

  • 1,இந்தியா என்ற நாட்டை விட என் மதம் தான் முக்கியம் என்று பலர் இருக்கிறார்கள்,

   ஆமாம் இந்தியவை விட மதம்தன் முக்கியம் என்று பலர் இருக்கங்க காரணம் இப்போது இந்தியவை ஆள்வது மதவாதி அரசு, மதசார்பற்ற நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றி காவிகள் ஆட்சி செய்வதால் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழந்தவன் எப்படி இந்தியவை முக்கியம் என கருதுவன்

   2,இந்தியா என்ற நாட்டை விட கம்யூனிச கொள்கை தான் முக்கியம் என்றும் பலர் இருக்கிறார்கள்,

   மக்கயை வதைப்பதை பாத்து கொண்டு சும்மா இருக்க கம்யூனிசஸ்ட் என்ன காவி கைகூலிகள இல்லை கார்பேட் தரகர் மோடியா கம்யூனிஸ்ட்க்கு இந்தியவை பிடிக்கமால் இல்லை இப்போது உள்ள காவி பா,ஜ க கொள்கை விட கம்யூனிச கொள்கை தான் முக்கியம் என்று இருக்கிறார்கள்

   3,இந்தியா என்ற நாட்டை விட இனம் தான் முக்கியம் என்றும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் ஈழம் தான் தங்கள் தேசமாக நினைக்கிறார்கள்.

   தன் இன மொழி தமிழை அழித்து ஒன்னுக்கும் உதவாத இந்தி சமஸ்கிதம் போன்ற மொழியை தினித்தல் ஈழமக்களை கொன்ற சிங்களன் நண்பர் என கூறும் மோடி அரசு பாக்கிஸ்தன் இந்துக்கள் இந்தியவந்தல் அனைத்து வசதியும் தரும் காவி அரசு ஈழமக்களை அகதியாய் பார்ப்த்தார் அவன் எப்படி இந்தியனு வாழ்வன் ஒன்னு தெரிஞ்சுக்க மணிகாண்ட நீ 100 வருசமா தான் இந்தியன் ஆனா நாங்க பல கோடி வருசமா தமிழன் டா

   • இலங்கை தமிழர்கள் தமிழக மீனவர்களை அவர்கள் கடலில் மீன் பிடிக்க விடாமல் அடித்து விரட்டும் போது எல்லாம் உங்களை போன்றவர்களின் இன பற்று எங்கே சென்றது என்று தெரியவில்லை, இந்த விஷயத்தில் கூட நேர்மையில்லாமல் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவது சிங்களவர்கள் என்று பொய் சொல்லி கொண்டு தானே உங்களை போன்ற ஆட்கள் திரிகிறீர்கள்.

    இந்தியாவை ஒன்றிணைக்கும் காரணங்களில் ஹிந்து மதமும் ஒன்று அதனால் தான் ஒரே மாநிலமான காஷ்மீரில் தீவிரவாதமும் ஜம்முவில் அமைதியும் நிலவுகிறது. அதனால் இந்தியாவை பலவீனப்படுத்த பிரிவினையை தூண்ட பார்க்கும் பல இயக்கங்களும் ஹிந்து மதத்தின் மீது தாக்குதலை நடத்துகிறார்கள். விட்டால் அவர்கள் இந்தியாவில் ஹிந்து மதமே கிடையாது ஹிந்துக்கள் வெறும் 2 சதவீதம் தான் என்றும் சொல்வார்கள்.

    • இந்தியாவே ஹிந்து என்ற மார்க்கத்தில் ஒன்றிணைவதாக அடித்து விடும் மார்கபந்துவே,

     1. தமிழ்நாடு இந்தியாவில் தான்யா இருக்கிறது. அப்புறம் இன்னாத்துக்கு கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடாமல் சண்டித்தனம் செய்கிறது. இங்கே மதாம் எங்கே பொய் விட்டது?

     2. கையால் மலம் அள்ளுகிறார்கள். இதற்கு காரணம் யார் நாத்திகர்களா இல்லை பாய்களா? அதை தடுப்பதற்கு வக்கில்லாமல் இந்து மதம் பொந்து மதம் என்று கலாய்க்கின்றீர்கள்.

     3. விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். எங்கே போனதையா உங்கள் பொந்து மதம்? விவசாயிகளை உங்களது இந்தியாவில் இணைய விடாமல் சதி செய்பவர்கள் யார்? நாத்திகர்களா இல்லை பாய்களா?

     4. 56 இன்ச் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் மீள் சிங்கள படையின் மூச்சு காத்துக் கூட படாது என்று அதார் உதார் வேட்டு விட்டது யார்? நாத்திகர்களா இல்லை பாய்மார்களா?

     5. மாட்டுதொலை உரித்ததற்காக தலித்துக்களை அடித்து கொடுமைபடுத்தியது யார்? நாத்திகர்களா இல்லை பாய்களா?

     6. பெண்கள் வாழவே தகுதியில்லாத நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறதே. காரணம் யார் நாத்திகர்களா இல்லை பாய்களா?

     7. ஏழை எளிய மக்கள் தங்களது கையிலிருக்கும் பணத்தை கூட செலவு செய்ய முடியாமல் தங்களது உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒட்டுத்துணியையும் உயிரையும் கூட காப்பாற்ற முடியாமல் சாகிறார்களே காரணம் யார்? நாத்திகர்களா இல்லை பாய்களா?

     எனவே பெண்களை, தலித்துக்களை, உழைக்கும் ஏழை எளிய மக்களை உங்களது
     ஹிந்து இந்தியாவில் இருந்து துண்டாடுவது நாத்திகர்களா இல்லை பாய்களா இல்லை…. பார்ப்பன ஹிந்து மத வெறியர்களும் அவர்களின் அடிவருடியுமான நீங்களா?

     • உங்களின் கருத்துக்கள் ஹிந்து மத வெறுப்பை தான் காட்டுகிறதே தவிர அதில் அறிவு சிந்தனை இல்லை.

      தமிழகத்தில் வயல்வெளிகளில் வாய்க்கால் சண்டைகள் உள்ளது, என் வயலுக்கு நீர் பாய்ச்சிய பின்பு தான் உன் வயலுக்கு நீர், இந்த மாதிரியான விஷயங்களால் தமிழகத்திலேயே வெட்டு குத்துகள் மரணங்கள் நடந்து உள்ளது. இதே காரணம் தான் கர்நாடக விஷயத்திலும் நடக்கிறது… பஞ்சாபிலும் நடக்கிறது. வரும் காலங்களில் இது மேலும் மேலும் தீவிரம் அடையும், அதனால் முன்னெச்சரிக்கையாக இப்போதே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் உங்களை போன்ற ஆட்கள் விவசாயிகள் மீது அக்கறை என்ற போர்வையில் இந்தியா எதிர்ப்பை கிளறி விட பார்க்கிறீர்களே ஒழிய இந்த நிலையை எப்படி சரி செய்வது என்று சிந்திப்பது இல்லை (அப்படி சரி செய்தால் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகளுக்கு வெறுப்பை தூண்ட காரணம் இல்லாமல் போய்விடும்)

   • நாங்கள் 100 வருடங்களாக இந்தியர்கள் என்றால் நீங்களும் 100 வார்டுங்களாக தமிழர்கள், அதற்க்கு முன் நீங்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் 🙂

    பழங்காலத்தில் சேர சோழ பாண்டிய பல்லவ தேசங்களுக்கு இடையில் பல வேற்றுமைகள் இருந்தாலும் போர் புரிந்தாலும் அவர்கள் அனைவரையும் இணைத்த விஷயங்கள் ஹிந்து மதமும் சமஸ்கிருதமும் தமிழும் தான், தமிழும் சமஸ்கிருதமும் இணைத்து தான் ஹிந்து மத வேதங்களை உருவாக்கின.

    இன்று சேர சோழ பாண்டிய பல்லவ தேசங்களை இணைத்து அவர்களை தமிழக மக்கள் என்று ஏற்க முடிந்த உங்களால் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் வாழும் மக்களை இந்திய மக்கள் என்று எங்களால் பெருமையோடு தலைக்கனத்தோடு சொல்ல முடியும்.

    உங்களை போன்றவர்களுக்கு இந்தியா என்ற தேசம் 100 வருடங்களாக தான் இருக்கிறது எங்களை போன்றவர்களுக்கு பாரதம் பல ஆயிரம் வருடங்களாக வாழும் தேசம்.

    • மங்குனி அமைச்சரே,

     ஆம் அய்யா.

     எங்களது தேசம் பாரத தேசம் இல்லை. அது உங்களுடையது தான்.

     எங்களது மொழி தமிழ் மொழி. சமஸ்கிருதம் அல்ல.

     எங்களுக்கு தேசிய கீதம் என்பது எங்கள் தாய் மொழியில் தான் இருக்க முடியும். ஏனெனில் அடிப்படையிலேயே இந்தியா என்பது ஒரு தேசியம் அல்ல. எனவே சமஸ்கிருதமோ ஹிந்தியோ கண்டிப்பாக எங்களின் மீது திணிக்கப்பட முடியாது.

     தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையே என்ன தொடர்பு? தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து தான் வேதம் உருவாச்சு என்று விடும் ரீலுக்கு என்ன ஆதாரம்?

     நாமெல்லாம் பாரத தேசத்தை சேர்ந்தவர்கள் என்று எங்கள் தமிழ் மொழியிலோ அல்லது எங்கள் தமிழ் மொழி நூல்களிலோ இல்லை. நெஞ்சில் மஞ்சா சோறு இருந்தால் காட்டவும்.

     நாங்கள் அசுர குலத்தை சேர்ந்த திராவிடர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் இந்தியன் என்பதில் அல்ல.

     • நீங்கள் அசுரர்களாகவே இருந்துவிட்டு போங்கள் கவலையில்லை ஆனால் மற்றவர்களையும் அரசுரர்களாக மாற்றாதீர்கள்… நாங்கள் நல்லவர்களாக இருக்க ஆசைப்படுகிறோம் அடுத்தவன் மனைவியை தூக்கி செல்லும் தீயவர்களாக அல்ல.

      நீங்கள் கேட்ட கேள்விக்கு பல ஆதாரங்கள் உள்ளது அதில் சிலவற்றை கூறுகிறேன்.

      தமிழ் கடவுள் சொல்லப்படும் முருகனின் கந்தபுராணம் ஆரம்ப பாடலே சமஸ்கிரதம் தான் “திகட சக்கரச் செம்முகமைந்துளான்” திகழ்+தச+கரம்=திகடச்சக்கரம் தமிழில் இப்படி ஒரு நேரடி வார்த்தை கிடையாது, இதை தமிழ் மட்டுமே தெரிந்து படித்தால் அர்த்தமும் கிடைக்காது, ஆனால் இந்த வார்த்தையை தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழியோடு சேர்த்து படித்தால் அர்த்தம் புரியும். பத்து திருக்கரங்கள் மற்றும் செம்முகம் ஐந்துளான் என்று இந்த வரிகளின் அர்த்தம்… ஹிந்து மத வேதங்களை புரிந்துகொள்ள தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழி அறிவு இருந்தால் தான் அந்த வேதங்களில் உள்ள ரகசியங்களை புரிந்துகொள்ள முடியும்.

      தமிழ் இலக்கணத்தை வகுத்தது தொல்காப்பியம் ஆனால் அந்த தொல்காப்பியத்திலேயே சமஸ்கிரதத்திற்க்கு தனியிடம் ஓதுபட்டு இருக்கிறது.

      வரலாற்று றெய்தியாக பார்த்தால் தமிழக மன்னர்கள் (சேர சோழ பாண்டிய பல்லவ) தங்கள் ஆணைகளை தமிழ் மற்றும் சமஸ்கிரதம் என்று இரு மொழிகளில் வெளியிடுவார்கள், அதில் சங்கம் வளர்த்த பாண்டியர்களின் சமஸ்கிரத அணைகளில் அழகியல் இருக்கும், இன்றும் கூட இதை சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள செப்பேடுகளில் நீங்கள் பார்க்கலாம்.

      இதையெல்லாம் உங்களை போன்ற ஆட்கள் பிராமணர்களின் சதி என்று சொல்ல கூடும், சமஸ்கிரத்தின் பல முக்கிய நூல்களை இயற்றிய தமிழர்களில் பலர் பிராமணர்கள் அல்ல.

      • Only one question to Manikantan,how this “glorious”Sanskrit died?Why only 16000 people talk Sanskrit in India?Ravanan took Seetha in his PUSHPAGA VIMANAM as per Kamban and both Kamban and Valmiki never talked about Ravanan violating the modesty of Seetha.But Indiran violated Agalikai.Now tell whether Asuras are good or Devas(Suras)are good and also tell whether you will not count Indira as God because of his heinous act.

       • Mr Manikantan,Today’s Hindu carried a news report with the title,”World’s sole Sanskrit daily struggles to stay afloat’To read the full news click-www.thehindu.com/news/national/world’s-sole-Sanskrit-daily-struggles-to-stay-afloat/article16751253.ece
        You used to boast that Sanskrit is a glorious language and that lot of importance was given to it by Tamil kings.Some others like you also used to boast that Sanskrit is mother of many Indian languages even though there was not even an iota of truth in that false statement.If it is such a glorious language,how come there is only one daily in that language in the entire universe and that sole daily is also struggling to remain afloat?This fact confirms that it is a dead language.Yet for propagating this dead language astronomical money has been spent by the Central govt.
        2014-Grant of Rs170 crore to universities for developing Sanskrit language.
        2015-Allocation of Rs470 crore for celebrating Sanskrit Week.
        23-7-2015-Allocation of Rs320 crore to CBSE schools by Ministry of Human Resource Development for developing Sanskrit language
        July,2015-Rs 200 crore grant for the World Sanskrit Conference held at Bangkok in which Union Minister Sushma Swaraj participated.
        2016-Rs70 crore allocated to Rashtriya Sanskrit Sanasthan for new research on Sanskrit by students.
        In northern States,Urdu teachers are compelled to learn Sanskrit since they have to teach Urdu with the help of Sanskrit.
        All Central Govt schemes have Sanskrit/Hindi names.
        In order to develop Sanskrit and Veda institutions,establishment of Veda Education Board.
        In spite of spending so many crore for development of this language,Kerala’s five Sanskrit schools had to be closed for want of students.Now,door to door propaganda is being done to enroll students in these schools.
        In the draft New Education Policy also,under para no-6.13.20,the following recommendation has been given;-
        “Keeping in view the special importance of Sanskrit to the growth and development of Indian languages and its unique contribution to the cultural unity of the country,facilities for teaching Sanskrit at school and university should be offered on a more liberal scale”
        In para no;-6.13.19 of NEP 2016,it is stated as,”The study of Sanskrit requires special emphasis,as it is still inextricably linked with the life,rituals,ceremonies and festivals of the people and is a window to the rich cultural,philosophical,artistic and scientific heritage of India.Knowledge of Sanskrit is a window to languages and cultures in many States”
        The draft NEP,2016 devotes almost 5 paragraphs regarding development of Sanskrit language.Yet the Ministry of HRD says that the draft does not advocate compulsory teaching of Sanskrit.The full text of the recommendations was not published in the Ministry’s website particularly in Tamil translation.,

      • We know that Tamil kings,as slaves,propagated Sanskrit.You should know that the condition stating that one should have studied Sanskrit to get admission in medical colleges was removed by then Chief Minister belonging to Justice Party.

      • //தமிழ் கடவுள் சொல்லப்படும் முருகனின் கந்தபுராணம் ஆரம்ப பாடலே சமஸ்கிரதம் தான் “திகட சக்கரச் செம்முகமைந்துளான்” திகழ்+தச+கரம்=திகடச்சக்கரம் தமிழில் இப்படி ஒரு நேரடி வார்த்தை கிடையாது, //

       சரி , இது அருணகிரிநாதரின் வரிகள் .. இதனால் தாங்கள் கூற வருவதென்ன. அவரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு. மணிபரவாள நடை என்பது செய்யுளில் புகுத்தப்பட்ட காலம் அது. அவர் மட்டுமல்ல அவரின் காலத்தையொத்த தாயுமானவர் என்கிற அருளாளரும் அவ்வாறே பாடியுள்ளார். அது அவர்களின் தமிழ் மொழியின், அதன் இலக்கண விதியின் அறிவின்மையை காட்டுகிறது. இவர்கள் மட்டுமல்ல அதே 17,18ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பைபிளிலும் இவ்வாறு பல சமக்ருத சொற்கள் பரவி கிடக்கின்றன. இது அப்போதிருந்த காலத்தின் தமிழ் அறிவின்மைக்கான ஒரு சான்று அவ்வளவே.இதை வைத்துக் கொண்டு தாங்கள் சமக்ருத மொழிக்கு ஜல்லி அடிப்பது தாங்கொணா அருவெறுப்பாக இருக்கின்றது.

       • //ஹிந்து மத வேதங்களை புரிந்துகொள்ள தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழி அறிவு இருந்தால் தான் அந்த வேதங்களில் உள்ள ரகசியங்களை புரிந்துகொள்ள முடியும்.//

        சமஸ்க்ருத மொழியை வைத்து ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே

       • செத்தாண்டா சேகரு …..(மணிகண்டன் இப்படி இந்த அளவுக்கா அறிவு இல்லாமல் இருப்பிங்க!) வினவில் department department ஆ வாசகர்கள் உங்கள் பின்னுடங்க்களை ஆய்வு செய்து சும்மா புகுந்து விளையாடுகின்றார்களே! மணிகண்டன்….., இது என்ன உங்கள் சொந்த பிளாக் என்று நினைத்து மனதில் உள்ள குப்பைகளை எல்லாம் வாரி இறைகின்றீரோ !

       • ரெபேக்கா மேரி கந்த புராணத்தை எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார், அவருக்கு முருக கடவுளே இந்த வரிகளை எடுத்து கொடுத்ததாக ஐதீகம், அவரின் காலம் 11ம் நூற்றாண்டு. கந்த புராணத்தை அரங்கேற்றும் போது ‘திகட சக்கரம்’ என்ற வார்த்தைக்கு தமிழ் அறிஞர்கள் விளக்கம் கேட்டனர், அதற்கு கச்சியப்பர் திகழ்+தசக்கரம்(திகழ்- விளங்குகின்ற; தசக்கரம்- பத்து கரங்கள்) என்பன புணர்ந்து திகடசக்கரம் ஆயிற்று என்றார், அதை அறிஞர்கள் ஏற்கவில்லை, ழ்+த்=ட் ஆகாது என்று சொன்னார்கள் அதற்கு முருக கடவுளே நேரில் வந்து தமிழ் சமஸ்கிரத இலக்கண நூலான வீரசோழியத்தை மேற்கோள் காட்டி இந்த புணர்ச்சி சரி என்று சொன்னதாக சொல்வார்கள்.

        நான் சொல்ல வருவது சமஸ்கிரதம் தமிழ் அறிஞர்கள் மொழி மட்டும் அல்ல, அது தமிழ் கலாச்சாரம் பண்பாட்டில் ஒன்றாக கலந்த மொழி… இன்னும் சரியாக சொல்வது என்றால் தமிழில் ஒரு வார்த்தை சரியாக வரவில்லை என்றால் தமிழ் அறிஞர்கள் சமஸ்கிரத வார்த்தையை அந்த இடத்தில் பயன்படுத்த சிறிதும் தயங்கியது இல்லை.

        கச்சியப்பருக்கு தமிழ் அறிவு இல்லை என்று நீங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது… விட்டால் நீங்கள் முருக கடவுளுக்கே தமிழ் அறிவு இல்லை என்று சொன்னாலும் கொள்வீர்கள்.

      • ஆரியர்களுக்கு சொம்படிக்கும் மணி…, ஆரிய –திராவிட முரண்பாடுகள் இன்று நேற்று அல்ல….. தொன்ம காலம் தொட்டே தொடரும் பகைமையாக இருக்கிறது என்பதற்கு பல்வேறு சான்றுகள் தமிழ் நிலத்தின் தொன்-பாடல்களில் பலவாறாக விரவிக்கிடகின்றது. ஆதியில் நாவலந்தேசம் முழுதும் திரவிடரே பரவியிருந்தனர். மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற நகரங்களில் வாழ்ந்த மக்கள், திரவிடரே. நாவலந்தேசம் முழுதும் சேர சோழ பாண்டியரென்னும் முத்தமிழ் மன்னர்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது.. தெற்கே பஃறுளியாறு வரையில் பரந்திருந்த நாடு பாண்டிநாட்டின் பெரும் பகுதியாகும். சோழநாடு பனிமலைவரை எட்டியிருந்தது. மேல்கரை நாடுமுழுதும் சேரநாடாகும்.

       -நூல் தமிழர் சரித்திரச் சுருக்கம், ஆசிரியர் : ஞா.தேவநேயப் பாவாணர்

       • மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், அப்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே வந்தேறிகள் தான். ஆங்கிலேயர்கள் சொன்ன ஆரிய திராவிட பொய்களை நீங்கள் வேண்டுமானால் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருங்கள்…

        • மணி, திராவிடர்கள் வந்தேறிகள் என்றால் அதற்குரிய வரலாற்றை கூறவேண்டியது இப்போது உங்களின் கடமை ஆகின்றது. இதியாவிற்குள் ஆரியர்கள், அதற்கு அடுத்து முகலாயர்கள் வந்தேடேரிய வரலாறுக்கு ஆவணங்கள் ,தடய சாச்சியங்கள் ஏராளமாக இருகின்றன. ஆனால் நீங்கள் கூறும் “ அனைவருமே வந்தேறிகள் ” என்ற கூற்றுக்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கனவாய் வழியாக வந்தார்கள் என்பதற்கு சாட்சியங்கள் இருக்கு… மேலும் சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள் என்பதற்கும் சாட்சியம் இருக்கு !

         ஆரியக்கூட்டம் எப்பவுமே அது நாடோடிக் கூட்டம்,…. விவசாயம் கூட செய்யத் தெரியாத அடுத்தவர் உழைப்பில் வாழும் கூட்டம். அது சோறு கண்ட இடமே சுவர்க்கம் என்று ஓட இப்போது கூட அமேரிக்கன் எம்பசியில் போய் கால் கடுக்க நிற்கும் கூட்டம் அது

         • ஆங்கிலேயர்கள் சொல்வதை எல்லாம் வேத வாக்காக உங்களை போன்றவர்கள் எடுத்து கொள்ளலாம் ஆனால் நான் அப்படி அல்ல. நீங்கள் கேட்ட ஆதாரம் இதோ https://en.wikipedia.org/wiki/Early_human_migrations அனைவருமே ஆப்பிரிக்காவில் இருந்து தான் வெளியேறினார்கள்… இதன்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள அனைவருமே வந்தேறிகள் தான்.

          நீங்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் சொல்வதை தான் நம்புவீர்கள் என்பதால் இந்த புத்தகத்தை உங்களுக்கு reference ஆக கொடுக்கிறேன் படித்து பார்க்கவும்.

          https://ia601602.us.archive.org/17/items/EdwinBryantLauriePattonIndoAryanControversyEvidenceAndInferenceInIndianHistoryRoutledge2005/Edwin%20Bryant%2C%20Laurie%20Patton-Indo-Aryan%20Controversy_%20Evidence%20and%20Inference%20in%20Indian%20History-Routledge%20%282005%29.pdf

          The so called Arya of the Rig Veda are supposed to be just another tribe or group of tribes that have always been resident in India

          பிராமணர்கள் வந்தேறிகள் என்று சொல்வதை விட பெரிய முட்டாள்தனம் (கட்டுக்கதை) வேறு ஒன்றும் இல்லை… சும்மா ஆங்கிலேயன் கதை அளந்து விட்டான் என்பதால் அதை நம்பிக்கொண்டு இருக்க வேண்டாம். பிராமணர்களாக இருந்தாலும் சரி தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்தாலும் சரி அனைவரும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களே.

          _____________

        • இருக்கட்டுமே.அப்படி ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் உலகின் பிற பகுதிகளுக்கு பரவி சென்றபோது அந்த பகுதிகளை யாரும் நீரோடும் ஆறுகளுக்கு அருகில் வயல்,வாய்க்கால்,வரப்பு என மனிதர்கள் வாழவதற்க்கு உரியதாக ஆக்கி வைத்திருக்கவில்லை.அந்த மக்கள்தான் தங்கள் உழைப்பால் காடு,மேடாக கிடந்த நிலத்தை திருத்தி நாடாக சமைத்து அவற்றை மனிதர்கள் வாழவதற்க்கு உரியதாக ஆக்கினார்கள் .அந்த முயற்சியில் காட்டுவிலங்குகளின் தாக்குதல்களில்,திடீர் வெள்ளப்பெருக்குகளில் இன்னும் பாறைச்சரிவுகளில் சிக்கி பல்லாயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள் .இப்படியாக மக்களின் உழைப்பிலும் தியாகத்திலும்தான் இந்த உலகம் மனிதர்கள் வாழ தகுதியானதாக ஆகியிருக்கிறது.

         அந்த வகையில் மொகஞ்சதாரோ,கரப்பாவில் துவங்கி தென்குமரி வரை இந்த இந்திய துணைக்கண்டத்தை நாடாக மாற்றியவர்கள்,அதற்க்காக வியர்வையும் குருதியும் சிந்தியவர்கள் யார்.எங்கள் முன்னோர்களான திராவிடர்கள்தான் .அந்த அடிப்படையில்தான் திராவிடர்களாகிய நாங்கள் இந்த நாட்டின் மீது உரிமை கொண்டாடுகிறோம்.இந்த நாட்டின் ஆதிகுடிகள் நாங்கள்தான் என்கிறோம்..மைய ஆசியாவிலிருந்து ஆடு,மாடு மேய்த்துக்கொண்டு இங்கு வந்தேறி இந்த நாட்டை சூழ்ச்சியால் எங்கள் முன்னோரிடமிருந்து அடித்துப்பிடுங்கிய ஆரியர்களை, வந்தேறிகள் என்கிறோம்.

         • என்ன மணிகண்டன் திப்புவின் விளக்கத்துக்கு மேலேயும் ஆரியர்கள் வந்தேறிகள் என்பதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டுமா?

         • நீங்கள் சொல்லும் கருத்து ஆங்கிலேயர்களால் இந்திய மக்களை பிரித்தாள சொல்லப்பட்ட கட்டு கதை, திராவிட ஆரியம் என்பதே மிக பெரிய புரட்டு, அனைவரும் ஒரே மக்கள் தான்… ஏற்கனவே நீங்கள் நம்பும் ஒரு ஆங்கிலேயரின் புத்தகத்தை உங்களுக்கு ஆதாரமாக கொடுத்து இருக்கிறேன்… சரி நீங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்களே ஏன் கர்நாடக திராவிடன் தமிழ் திராவிடனுக்கு தண்ணீர் விட மாட்டேன் என்கிறான் ? ஏன் கேரளா ஆந்திராவில் யாருமே நீங்கள் சொல்லும் திராவிட புரட்டை மதிக்க மாட்டேன் என்கிறார்கள் ?

          சரியாக சொல்வது என்றால் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாள் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது, ஒரு யூகமாக இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும். அவ்வளவு ஏன் உங்கள் பரம்பரை பற்றி எத்தனை தலைமுறைகள் உங்களுக்கு தெரியும் ? உங்கள் 10 தலைமுறைக்கு முன் உங்கள் தனிப்பட்ட குடும்ப முன்னோர்கள் என்ன செய்தார்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று உங்களால் நிச்சயமாக சொல்ல முடியும்மா ? நீங்கள் யூகத்தின் அடிப்படையில் அவர்கள் விவசாயம் செய்தார்கள் அல்லது திருடினார்கள் அல்லது போர் வீரர்களாக இருந்தார்கள் அல்லது குறுநில மன்னராக இருந்தார்கள் என்று தான் சொல்லமுடியுமே தவிர என் குடும்பத்தில் 10 தலைமுறைக்கும் இப்படி தான் வாழ்ந்தார்கள் இதை தான் சாப்பிட்டார்கள் என்று நிச்சயமாக உங்களால் சொல்ல முடியாது.

          ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லலாம் பிராமணர்களும் சரி திராவிடர்களும் சரி அவர்கள் அனைவரும் இந்த நாட்டின் மக்கள். அதில் ஒரு தரப்பினர் மீது கண்மூடித்தனமாக வெறுப்பை தூண்டுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

     • வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
      தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
      குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
      குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்

      இது புறநானூற்றின் மிக பழமையான பாடல் இதில் இந்திய தேசத்தின் எல்லைகளை பற்றி விளக்கமாக கொடுத்து இருக்கிறார்கள் வடக்கே பனிபடர்ந்த மலை தெற்க்கே குமரி இரு பக்கமும் கடல் சூழ்ந்த நாட்டின் மக்கள் நாங்கள் என்று மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். உங்களை போன்ற ஆட்களுக்கு வேண்டுமானால் இந்தியா நேற்று உருவான தேசமாக இருக்கலாம் ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு இந்தியா என்ற தேசம் பல ஆயிரம் வருடங்களுக்காக இருக்கும் தேசம்.

      வட இந்தியனுக்கு ராமேஸ்வரம் புனிதத்தலம், தென் இந்தியனுக்கு காசி புனிதத்தலம் அதனால் தான் கங்கையில் இருந்து புனித நீரை கொண்டு வந்து இங்கே கோவில் கும்பாபிஷேகத்தை ராஜேந்திர சோழன் நடத்தினான்.

      • Please tell the serial number of this PURANANOORU PAADAL.You were telling about the prominence given to Sanskrit by CHERA,CHOLA,PANDIYA kings.We also know about SADURVEDIMANGALAMS,TRIVEDIMANGALAMS and BRAMHADEYAM.Really one has to appreciate the shrewd Brahmins for influencing the kings and blame the slavishness of these kings.

       • சூரியன் அய்யா , அந்தப்பாடல் பாண்டிய மன்னன் முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றிப்பாடும் காரிக்கிழார் என்ற புலவர் அந்த தமிழ் மன்னனின் ஆட்சிப் பரப்பை பற்றி புறம் 6 ல் கூறுகின்றார்.

        • Thanks Senthilkumaran,this type of fraud only was done by Aryas.Until Patel integrated various parts ruled by princes into Indian Dominion,there was no “India”And here this Manikantan tells the frontiers of Pandya king as frontiers of non-existent India.

      • மணிகண்டன்…, திராவிட தமிழ் மக்கள்வாழ்ந்த நில எல்லைகளை பற்றி அறிய நீங்கள் கூறும் பாண்டிய மன்னனை புகழும் புறநானுற்று பாடலை சாட்சிக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி…. புறநானுறுக்கு முந்தைய தமிழ் இலக்கணம் கூறுவது என்னவென்றால் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” . மேலும் உ.வே.சா., “பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் வடவெல்லை கிருஷ்ணா நதியென்று சிற்பசாஸ்திரம் என்ற நூலின் அடிப்டையில் கூறுகின்றார். பழந்தமிழர்கள், பெரும் தேசிய இனமாக “நாவலந்தேசம்” எனப்படும் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
       “தென்குமரி வடபெருங்கல்
       குணகுட கட லாவெல்லை. (புறம் – 17)
       என்று குறுங்கோழியூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடியிருக்கிறார். மேலும்,
       “வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
       தென்திசை ஆண்ட தென்னவன் வாழி. (சிலம்பு – 11:19 – 22)
       என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
       மேலும், “வங்கத் தலைநகருக்கு இன்னும் “காளிக்கோட்டம்” என்னும் தூய தமிழ்ச்சொல் வழங்குவதே பண்டைக் காலத்தே தமிழர், பனிமலைவரை அல்லது கங்கை வரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாகும்
       என்று தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார்.
       இதற்கு வலு சேர்க்கும் விதமாக, “மொகஞ்சதாரோ, ஹரப்பா சிந்துசமவெளி நாகரிகத்தில் தமிழர் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் உள்ளன”, என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

       அப்படி என்றால் தமிழ் மக்கள் விரவி-பரவிக் கிடந்த இந்திய பூமிக்கு வந்தேறியவர்கள் தான் இந்த ஆரிய பார்பனர்கள் என்பது புலனாகின்றது.

  • இந்தி பேசுபவன்தான் இந்தியன் மற்றவன் எல்லாம் 2ஆம் தர குடி மகன், மோடிக்கு ஜே போடுவன் மட்டும்தான் தேசபக்தன் மற்றவன் எல்லாம் பாகிஸ்தான் விசுவாசிகள் அப்படிதானே மணிகண்டன்.

  • செக்ஸ் பாம் சகீலா படமெடுக்கும் மாமாப்பயல்களும் அதற்க்கு தணிக்கை சான்றிதழ் கொடுத்து திரையிட அனுமதிக்கும் அயோக்கியப்பயல்களும் திரையிடும் கேடிப்பயல்களும் தேசிய கீதம் பாடிநால் அது பெருமையா கேவலமா

 5. 30,40 வருசத்துக்கு முன்னாடி இப்படி ஒரு நடைமுறை இருந்தது.தியேட்டர்ல படம் முடிஞ்ச உடனே தேசியகீதம் போடுவான்.ஜனகன..ஜயகேனு ஒரு செக்கண்டுல தேசியக்கொடியையும் காட்டி முடிச்சுருவான்.அதுக்குள்ள மக்கள்லாம் வீட்டுக்குப் பாதி தூரம் போயிருப்பாங்க.போதையப் போட்டுட்டு தூங்குறவன் மட்டும் தான் அரை போதையில எழுந்திருச்சி நிப்பான்.அந்தக் காலத்திலயே தேசிய கீதத்துக்கு இவ்வளவு தான் மதிப்பு.பள்ளிக்கூடத்தில வாத்திமார தேசியகீதம் பாடச்சொல்லுவாங்க.எனக்குத் தெரிஞ்சு யாருமே முழுசாப் பாடுனதும் இல்ல.சரியாப் பாடுனதும் இல்ல.இப்ப தேச பக்தியின் திசை வழி என்னன்னு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரிஞ்சிருக்கு.அந்த ஆபத்த உணர்ந்துதான் இந்த உத்தரவப் போட்டிருக்காங்க. நிரைய சட்டம் ,உத்தரவு எல்லாம் ஏட்டில இருக்குது.ஆனா நடைமுறையில இல்ல.ஹெல்மட் சட்டம் போட்டு அதை வச்சு பல வழக்கறிஞர்களோட வாழ்க்கையில நீதிமன்றம் விளையாடிக்கிட்டிருக்குது.ஆனா முக்கவாசிப் பேரு ஹெல்மட் வைக்கிறதே இல்ல.யாருமே கண்டுகிறதும் இல்ல.ஆனா பழிவாங்குற கடமையை மட்டும் ஒழுங்கா செஞ்சிக்கிட்டிருக்கிறாங்க நீதி அரசர்கள்.இப்படி தேச பக்திய வாயில ஊட்டுறவுங்க வேற யாருமில்ல.காவிக்கூட்டம்தான்.மோடி கருப்புப் பணத்த ஒழிச்ச/கிழிச்ச கதைதான்.தேசியகீதத்த இதவிடக் கேவலப்படுத்த வேற யாராலயும் முடியாது.தெரிஞ்சே தான் நீதிஅரசர்கள் இதைச் செய்யிறாங்க.ஏன்னா அவுங்க தேசபக்தர்கள்ங்கிறத எப்படி வெளிப்படுத்துறது.பாடத் தெரியுமான்னு கேட்க முடியுமா?கேட்டா,தேச துரோக வழக்கில கம்பிதான் எண்ணனும்.அப்பதான் தேசபக்திவரும்.முதல்ல தேசியக் கொடிய நேரா வச்சு ஏத்தத் தெரியுமா? பல தடவை தலைகீழா ஏத்தியிருக்காங்க இந்த தேசபக்தர்கள்.இது நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும்தானே.

 6. முதலிரவுக்கு முன்னாடி கீதத்த பாடிட்டுதன் மத்ததெல்லம்னு சட்டம் போட்டா நல்ல தேசபக்தி இருக்கர குழந்தைகளா பொறக்கும். 😛

  • சூப்பர் க்ரிஷ்.அறிவு கெட்ட பயலுவொ சட்டம் போட்டாலும் போடுவானுவோ.”முதலிரவுக்கு முன்னால் கண்டிப்பாய் தேசியகீதம் பாடவேண்டும் என்று மோடி சட்டம் போட்டுவிட்டார் என்று ம்ணிகண்டன் கூட்டாளி யாரிடமாவது சொல்லி அதை ம்ணிகண்டன் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதற்க்கு முன்னால் மணிகண்டன் காதில் ஓதச்சொன்னால் எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன்னால் உட் கார்ந்து அதற்க்கும் ஒரு வியாக்கியானம் செய்து நமக்கு பாடம் நடத்துகிற பைத்தியம் தான் இந்த மணிகண்டன்.

 7. திரையரங்குகள் மக்கள் கூடுமிடம் என்பதால் நாட்டுப்பண் இசைக்க சொல்கிறார்கள்.சரி ,தேஷ் பக்தாஸ் இந்த மாசம் அங்கங்கே கூடி இசைக்கச்சேரி செய்வாளே ,அங்க இந்த பாட்டை போட்டு தேச பக்தியை காட்டுவாளா.

  தொலைக்காட்சியும் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பார்ப்பதுதானே.அதில் ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் போடணும்னு உச்சா நீதிபதிகள் சொல்லி பாக்கட்டுமே.ஒரு வாரத்துல மண்டைல விளக்கு சுத்துற காரை புடிங்கிட்டு வீட்டுக்கு தொரத்திருவாங்க

 8. கொள்ளைக்காரனுக்கு தெய்வீக அந்தஸ்து கொடுத்து ‘அரசன்’ என்று பெயர் சூட்டி , கொள்ளையில் பங்கு பெறுவதே ‘ஆரியம்’!

  ஆரியம் என்றுமே உடல் உழைப்பை விரும்பாமல், பணம்/அரசை அண்டிபிழைப்பதே கொள்கையாக கொண்டது! இதற்காக பெண்களை பயன்படுத்துவது அவர்கள் யுத்தமுறை!

  மற்றொரு தந்திரம், மக்கள் தெய்வமாக மதிக்கும் அவர்களது இறந்த தலைவர்கள் தங்களை ஆதரித்ததாக புராணங்கள் புனைந்து மக்களை நம்பச்செய்வது! இதுநீண்ட கால செயல் உத்தி!

  மத்திய தரை கடல் பகுதியிலிருந்து ஊடுருவிய ஆரியர்கள் தங்கள் படைத்தலைவன் இந்திரனை முதலில் தலைவனாக கொண்டிருந்தனர்! அப்பொது சிந்து சமவெளி பகுதியிலிருந்த , அணைகள் கட்டி விவசாயம் செய்து வந்த , பெரிய அளவில் சண்டை செய்ய தெரியாத மக்களை அழித்தனர்! ஆரியன் விவசாயம் செய்யக்கூடாது என்ற வேத விடியும் அப்போதுதான் ஏற்பட்டது! விவசாய அணைகளையும், புரம் என்ற ஊர்களையும் அழித்த இந்திரனுக்கு சோமபான குடங்களை அளித்து வேதம் புகழ்ந்தது!

  சோம பானம் பெறாத ஆரிய விரோதிகள் அரக்கர் எனவும், அசுரர் எனவும் இகழ்வாக குறிக்கப்பட்டனர்! ஆரியர்களால் வெற்றி கொள்ள முடியாத தலைவர்கள் இறப்புக்குக்கு பின்னர் (அண்ணாநாம் வாழ்க என்று ஒரு கூட்டம் வந்ததை போல) அவர்களை தெய்வமாகவும், ஆரியர்களுக்கு அடிமைகளாகவும் கற்பித்து மக்களுக்கு மூளைச்சலவை செய்கின்றனர்! உதாரணம்; கிருட்டினன், அனுமான்,நந்தி , பிரகலாதன், மகாபலி முதலிய ஆரியரல்லாத அரசர்களை கூறலாம்!

  திராவிடத்தில் ஆரியம்நுழைந்தது அகத்தியர் , தொல்காப்பியர் காலத்தில்! ஆரிய பழக்க வழக்கங்கள் வேறூன்றி அதற்கு முந்திய முனிவர்கள் ஏற்படுத்திய வாழ்வு முறையை பாழ்படுத்தி ஆரியத்திற்கு பணிந்த அரசு முறை இஙும்நிலை பெற்றது!

  சுதந்திரமாக இலக்கியஙகள், அறநூல்கள் இயற்றப்பட்டதற்கு மாறாக ,ஆரியருக்கு எதிரான எந்த கருத்தையும் அனுமதிக்காத ஒடுக்குமுறை கையாளப்பட்டது!

  இந்த ஆரிய கூத்துகளுக்கு தமிழர்கள் அடிமையாகும் அளவிற்கு வெள்ளந்திகளாக இருந்து வருவதாலேயே பெரியார் சொரணையற்ற தமிழன் காட்டுமிராண்டி என்றும், சமூதாய உணர்வற்ற இலக்கியங்கள் புராணங்கள் போற்றப்படுவதால் , தமிழை காட்டு மிராண்டி மொழி எனவும் சாடினார்!

 9. தேசியகீதம் தேசியவிலங்கு தேசியபறவை என்பதெல்லாம் ஒரு சம்பிரதாயம்.தேசியகீதம் பாடுவதுதான் தேசப்பற்றுக்கான அளவுகோலா?தேசப்பற்று என்பது வரவேண்டிய நேரத்தில் அனைத்து மக்கள் மனங்களிலும் வெளிப்படும்.தேவைக்கு வெளிப்படுமேயன்றி யாரிடமும் இல்லாமலில்லை.இதையெல்லாம் கூட ஒரு விஷயம் என்று பீத்திக்கொண்டு திரிவது மோடிமஸ்த்தான் வகையறாக்களின் பம்மாத்துதானே தவிர வேறொன்றும் இல்லை என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.இந்த கேனத்தனம் நீதிமன்ற உத்தரவாம்.எந்த அளவிற்க்கு காவிக்கறை படிந்த நிலையில் நீதிபதிகளின் மூளை இருக்கிறது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.உருப்படாத கிறிக்கெட்டில்தான் இந்த தேசப்பற்றை இவ்வளவு நாளாய் அரங்கேற்றி கொண்டிருந்துதுகள்.இப்போ சினிமா தியேட்டரில் தேசியகீதமாம்.ஆக தேசப்ப்ற்று தேசியகீதம் என்பதெல்லாம் இவனுங்களுக்கு கேளிக்கை பொழுதுபோக்கு+அரசியல்.நாட்டு மக்களையெல்லாம் முட்டாள்களென்றும் பைத்தியங்களென்றும் நினைத்துக்கொண்டிருக்கிறதுகள்.

  • உங்களை போன்றவர்களுக்கு எங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பற்றி எந்த அக்கறையும் கிடையாது என்பது தெரியும். பள்ளி கூடத்தில் கூட தேசிய கீதம் பாட கூடாது என்று சொல்பவர்கள் தானே நீங்கள்.

   • மணிகண்டன், பணமில்லா பரிவர்த்தனை பற்றி கூவிக்கொண்டு இருக்கும் மோடியும் அவரின் நிதி மந்திரியும் கையில் வைத்து உள்ள ரொக்க பணத்தை பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பு இல்ல உங்களுக்கு! ஆனால் தேச பக்தியை பற்றி போலித்தனமாக கூவிக்கொண்டு வந்து உள்ளீர்கள் வினவுக்கு! செய்வது எல்லாம் மொள்ள மாரித்தனம் பேசுவது மட்டும் தேசபக்தியை பற்றியா மணிகண்டன்… உங்களின் இந்த பிழைப்புக்கு …..!

    • சரி மோடியிடம் எத்தனை பழைய 500 நோட்டுகள் உள்ளது எத்தனை 1000 ரூபாய் நோட்டுகள் உள்ளது எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளது என்று கேட்டு சொல்லுங்கள் பிறகு நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறேன். நீங்கள் மானஸ்தன் என்று நினைக்கிறேன் உடனே பதில் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

     • முழு லூசு மணிகண்டன்…, மோடிக்கு ஆதரவா ,அவருக்கு வக்கிலா வினவில் வந்து உளிரிகிடு இருக்கும் நீர் தானே இதுக்கும் பதில் சொல்லனும்…! என்ன முழுசா முத்திடிச்சா!

     • அய்யா லூசு மணிகண்டன்…, மோதிகிட்ட எத்தனை 1000 , 500 இருக்கு என்பதா இங்க பிரச்சனை? அதுவல்லவே விவாதம்…! பிச்சைகாரர் கூட பணமில்லா பரிவர்த்தனை செய்கிறார் என்று கூறும் மோடிக்கு அந்த அறிவு…, பணமில்லா பரிவர்த்தனை பற்றிய அறிவு சுத்தமாக இல்லையா? அந்த அறிவு இல்லாமையால் தானே அவர் கையில் ரொக்கமாக 89000 ரூபாய்களுக்கும் மேல் வைத்து உள்ளார்! இப்ப நீங்க பேசுங்க மோடியின் வக்கில் மணி!

   • மணிகண்டன், உங்களை போன்ற ஆரிய வந்தேறி நாடோடி கூட்டத்துக்கு தான் துளிகூட தேசபக்தி என்பதே கிடையாது. நிலத்தில் கால் நிற்காமல் சோறு கண்ட இடம் சுவர்க்கம் என்று அமெரிக்க எம்பசியில் கால் கடுக்க நிற்கும் உங்களின் ஆரிய நாடோடிகளுக்கு தேச பக்தியை பற்றி பேச என்ன அருகதை இருக்கு…? உங்கள் பார்பன ஆளுமைக்கு பிரச்சனை வந்தால் காந்தியை கூட கொல்லும் ஆரிய தேச துரோக கூட்டத்தை சேர்ந்தவர் தானே நீங்கள் ! உங்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் விசமாக தானே இருக்கும்!

   • அய்யோடா,இவர்கள் நாடாம்ல.வந்தேறிகளும் வந்தேறிகளுக்கு வால் பிடிப்பவர்களுமான இவர்களுக்கு,நாட்டின் ஆகப்பெரும்பான்மையான மக்களை 500/1000-செல்லாது என்ற ஒரே ஆணையில் பஞ்சை பராரிகளாக ஆக்கிவிட்ட அயோக்கியர்களுக்கு வால் பிடிப்பவர்களான இவர்களுக்கு தாய்நாடு என்ற சொல்லை கூட சொல்வதற்க்கு யோக்கியதை கிடையாது.

    எங்களுக்கு தேசிய கீதத்தை பற்றி எந்த அக்கறையும் கிடையாது என கொந்தளிக்கிறார்.ஆம்.பிரித்தானிய மன்னனை அவனது அடிமையொன்று வரவேற்று வாழ்த்தி பாடி வைத்த அடிவருடி பாடலை தேசிய கீதமாக வைத்திருக்கும் கேவலத்தை காறி உமிழத்தான் தோன்றுகிறது.

    • இன்று சென்னை திரையரங்கிற்கு அச்சம் என்பது மடமையடா படம் பார்க்க சென்றேன், படம் ஆரம்பிப்பதற்கு முன் தேசிய கீதம் போட்டார்கள் அத்தனை மக்களும் (இஸ்லாமியர்கள் உட்பட) எழுந்து நின்றார்கள், மிகவும் சந்தோசமாக இருந்தது. நீங்கள் எல்லாம் எங்கள் நாட்டின் தேசிய கீதத்தை எவ்வுளவு அவமதித்தாலும் சாதாரண மக்களாகிய நாங்கள் எங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று வைத்து இருக்கிறோம், நிச்சயம் உங்களை போன்றவர்களால் எங்கள் நாட்டை பலவீனப்படுத்த முடியாது.

     வாழ்க பாரதம்.

   • மணிகண்டா காலையில் கக்கூஸ் போவதற்க்கு முன்னால் தேசியகீதம் பாடிவிட்டு போனால் மலச்சிக்கல் இருக்காதாம்.மோடி சொன்னார்.அதனால் அவசரப்பட்டு கக்கூசுக்குள் போய்விட வேண்டாம்.தேசியகீதத்தை முழுதாய் பாடிவிட்டே போவோம்.

 10. மக்கள் கூட்டம் இப்போ அதிகமா கூடுகின்ற இடங்கள் என்றால் அவை ஆTM கள் தான். அங்கே வேன்டுமானால் டேஸிய கீதம் போடலாம்.

  முட்டா __ பய ஆட்சி நடத்துனா இப்படி அரைகுறையா யோசிப்பானுவ.

 11. மணிகண்டன்.., எனக்கு இன்று கிடைத்த நேரத்தில் முடிந்த அளவுக்கு இன்று நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளேன். நாளை மாலைக்கு தான் நான் இனி உங்களுடன் வினவு முலமாக பேச முடியும்… … அதுவரைக்கும் மகிழ்ச்சியாக இருங்கள்… நாளை மாலை வரையில் என்னால் உங்களுக்கு ஏதும் விவாத தொல்லைகள் ஏற்படாது. நன்றி…வணக்கம்…

 12. ஆரியர் திராவிடர் இனம் என்பதே கட்டுக்கதை என்று உளறும் மணிகண்டன்…
  இங்குள்ள பார்ப்பனர்களின் தாய் மொழியான சமர்கிருதம் கூட கட்டுக்கதைதானா?
  உலக மாந்தர்களில் அய்ந்து வகையான இனப் பிரிவு மக்களும் (திராவிட, ஆரிய, மங்கோலிய, கார்கேசி முதலான) கற்பனை என்கிறீர்களா?
  மாந்த இனம் ஆப்ரிக்காவில் தோன்றியது என்று புதிய ஆதாரம் காட்டும் மணிகண்டனே… மாந்த இனம் முதன்முதலில் தோன்றியது எமது குமரிக்கண்டத்திலே என்று பல ஆய்வுகள் அதற்கு முன்பே தெரிவித்தனவே?
  ஆஸ்திரேலியா வரை ஒன்றாயிருந்த எமது குமரிக்கண்டத்தின் மக்களின் முதல் மொழியே தமிழ் மொழிதான் என்பது அறிவர் அம்பேத்கர் நிறுவியது. அதை மறுப்பீரா?
  பார்ப்பனர்கள் இந்த நாட்டின் பூர்வ குடி என்று போதையடித்து உளறும் மணிகண்டனே… இதைக் கேட்கும் போது உங்களை சிறுபிள்ளையாகவே நினைக்கத் தோன்றுகிறது.
  இந்திய துணைக்கண்டத்தில் பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் அந்தந்த நாடுகளுக்குரிய(மாநிலங்களுக்குரிய) அந்தந்த மொழிகளைப் பயன்படுத்தினாலும், ஒரு திசையிலிருந்து மறு திசையில் உள்ள பார்ப்பனர்களின் பேச்சு வழக்கு ஒரே மாதிரியாக இருப்பதற்குக் காரணம் என்ன?
  எங்கள் நாட்டில் இந்தப் பார்ப்பனர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி விடக்கூடாதே என்பதற்காகவே, ஒவ்வொரு மொழிக்காரனும் தன்னை இந்தியன் என்று நினைக்க வேண்டும், அப்படி ஒரு போலித்தனமான தேச பக்தியை எங்கள் மேல் திணித்தால்தான், இந்தப் பார்ப்பனர்கள் இங்கு எங்களை ஏமாற்றிச் சுரண்டி, திருடி தனது பிழைப்பைத் தொடர்ந்து நடத்த முடியும். எங்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இல்லாவிட்டாலோ, இந்து என்ற உணர்வு இல்லாவிட்டாலோ இந்தப் பார்ப்பனர்கள் இங்கு தொடர்ந்து வாழ்ந்திட முடியாது என்பதற்காகவே, எங்கள் மேல் இந்தப் பார்ப்பனக் கூட்டம் இப்படி ஒரு போலித்தனமான பக்தியைத் திணித்து, அதன் மேல் தன்னுடைய இருப்பைத் தக்கவைக்கப் முயற்சிக்கிறது.

 13. //மாந்த இனம் முதன்முதலில் தோன்றியது எமது குமரிக்கண்டத்திலே என்று பல ஆய்வுகள் அதற்கு முன்பே தெரிவித்தனவே?//

  தமிழாசிரியர்களும், தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் ஆய்வு செய்தால் அப்படித்தான் முடிவு வரும் 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க