privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !

பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !

-

girls education (3)பாகிஸ்தான் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக்கைத் தொடர்ந்து குழந்தைகளின் கல்வியறிவின்மை மீது நாம் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று செப்டம்பர் 2016-ல் மாதத்தில் அறைகூவல் விட்டிருந்தார் பிரதமர் மோடி. நவம்பரில் பாமர மக்கள் மீதான பணமதிப்பிழப்பு சர்ஜிக்கல் தாக்குதல் தனிக்கதை

என்ன செய்வது? இந்திய பள்ளிக்கல்வி முறையின் தரம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கியிருப்பதாக பெண்குழந்தைகளின் கல்வியறிவு பற்றிய ஒரு ஆய்வறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் கல்வியறிவில் பல கல்வியாண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின்படி ஐந்தாண்டுத் தொடக்கக் கல்வியின் முடிவில் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியப் பெண்களின் விகிதம் 48 விழுக்காடாகும். அதுவே நேபாளில் 92 விழுக்காடும், பாகிஸ்தானில் 74 விழுக்காடும், வங்கதேசத்தில் 54 விழுக்காடாகவும் இருக்கிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த உலகளாவிய கல்வி வாய்ப்பு நிதி உதவிக்கான சர்வதேச ஆணைக்குழு ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக இந்த ஆய்வை மேற்கொண்டது. “இந்தியக் கல்வித்துறை பின்தங்கியிருக்கிறது என்பதற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்தச் சமிக்ஞை இதுவாகும்” என்கிறார் அந்த ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான ஜஸ்டின் சண்டேபர்.

வளரும் நாடுகளின் மக்கள் தொகை மற்றும் சுகாதார மதிப்பாய்வு (DHS) தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டனர். வளரும் நாடுகளிடையேயான வாழ்க்கைத் தரத்தை ஒப்பிடக்கூடிய ஒரு தகவல் ஆதாரம் தான் DHS. வளரும் நாடுகளின் DHS தகவல்களில் உள்ள பெண்கள் கல்வியறிவிற்கான புள்ளி விவரங்களை இதற்கு பயன்படுத்திக் கொண்டோம் என்று சண்டேபர் கூறுகிறார்.

girls education (1)இந்தியப் பெண்களின் கல்வியறிவு விகிதம் முதலிரண்டு ஆண்டு பள்ளிப் படிப்பிற்குப் பிறகு 1-லிருந்து 15 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் பெண்களின் கல்வியறிவு 3-லிருந்து 31 விழுக்காடாகவும், நேபாளத்தில் 11-லிருந்து 47 விழுக்காடாகவும் இருக்கிறது. “பெண்களுக்கு தொடக்கப்பள்ளியிலேயே கல்வியறிவு பெற்றுத் தருவதில் இந்தியாவை விட பாகிஸ்தான் இரண்டு மடங்கு மேம்பட்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அல்லது படிக்க முடியாத மாணவர்களை ஊக்குவிப்பதில் இந்தியப் பள்ளிகள் ஆர்வமில்லாமல் இருக்கின்றன” என்று சண்டேபர் கூறுகிறார்.

பள்ளிகளின் தர உயர்வினால்தான் அந்நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதா என்பது குறித்த சரியான தகவல் எதுவுமில்லை என்கிறது அந்த ஆய்வு. அதே நேரத்தில் உலக அளவில் பெண்களின் கல்வியறிவிற்கான உலகளாவிய குறியீட்டு எண்களில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்த கணிசமான குழந்தைகள் மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்கூட நிழலில் ஒதுங்கும் சூழ்நிலை இங்கே நிலவுகிறது. இந்த நிலையில் அங்கே அவர்கள் கற்கும் ஏகைலவ கல்வியையும் கூட தனியார்மய தாராளமய துரோணர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்.

உலகம் முழுவதிலும் பெண்கள் கல்வியறிவு முன்னேறிக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெண்களுக்கான தொடக்கக் கல்வியறிவை பெறுவதில் வளரும் 51 நாடுகளில் இந்தியா 38-வது இடத்தில் தான் உள்ளது. தொடக்கக் கல்வியின் இறுதியில் குறைந்தது பாதிப் பெண்களாவது கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்தத் தகவல் திரட்டப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியா, ருவாண்டா, டான்சானியா மற்றும் எத்தியோபியா நாடுகள் இந்தியாவை விட பெண் கல்வியில் முன்னணியில் உள்ளன. இந்த பட்டியலில் கானா கடைசியில் உள்ளது. கானாவில் ஆறாம் வகுப்பு முடித்தவர்களில் வெறும் 7 விழுக்காடு பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றுள்ளனர். கானாவை விட நாம் முன்னேறி இருக்கிறோம் என்று தேஷ் பக்தர்கள் வேண்டுமானால் புளகாகிதம் அடையலாம்.

girls education (2)உலகின் பெரும்பான்மையான நாடுகள் பெண்களுக்கான அடிப்படைக் கல்வியில் பல மாற்றங்களை கொண்டு வந்து பெண்கள் படிப்பறிவு பெறுவதற்கு முயல்கின்றன. ஆனால் இந்தியாவில் இலட்சக்கணக்கான பெண்கள் பல ஆண்டுகள் பள்ளியில் படித்தும் ஒரு எளிய வரியைக் கூட படிக்க முடிவதில்லை.

உலகம் முழுதும் வளர்ந்த நாடுகளில் பெண்களின் மீதான அடிமை சங்கிலிகள் உடைக்கப்பட்டவுடன் ஆண்களை விட பெண்களே படிப்பறிவிலும் திட்டமிடுவதிலும் சிறந்து விளங்குவதாக புள்ளி விவரங்கள் நிறுவுகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.

அதிக எண்ணிக்கையிலான கருவுருதலும், பேறுகால மரணங்களும் இந்தியப் பெண்களை கவ்வியிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை கோலேச்சும் வட இந்திய மாநிலங்களில் பெண்களில் கணிசமானோர் வெறும் பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவும், வாரிசை சுமக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த எளிய உண்மையின் ஒரு எதிர்வினை தான் இந்தியப் பெண்கல்வியின் இந்த அவல நிலைமை.

தலித்துக்கள் மீதானத் தாக்குதலை திசைத் திருப்ப தன்னைச் சுடுங்கள் என்றும், அவமானத்தால் தான் தலைகுனிவதாகவும் கதைவிடும் அதே மோடி தான் இந்திய பெண்கல்வியின் நிலைமை அவமானகரமாக இருக்கையில் பாகிஸ்தான் மக்களிடம் சரஸ்வதி கடாட்சம் பற்றி வகுப்பெடுக்கிறார். உண்மையில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் மற்றும் அவர்களது சித்தாந்தமான பார்ப்பனியத்தின் மீது இந்தியப் பெண்கள் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்தாலொழிய இதற்குத் தீர்வில்லை.

th24_literacy_col
வரைபடம் நன்றி: The Hindu

____________

மேலும் படிக்க: