Friday, October 23, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !

பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !

-

girls education (3)பாகிஸ்தான் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக்கைத் தொடர்ந்து குழந்தைகளின் கல்வியறிவின்மை மீது நாம் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று செப்டம்பர் 2016-ல் மாதத்தில் அறைகூவல் விட்டிருந்தார் பிரதமர் மோடி. நவம்பரில் பாமர மக்கள் மீதான பணமதிப்பிழப்பு சர்ஜிக்கல் தாக்குதல் தனிக்கதை

என்ன செய்வது? இந்திய பள்ளிக்கல்வி முறையின் தரம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கியிருப்பதாக பெண்குழந்தைகளின் கல்வியறிவு பற்றிய ஒரு ஆய்வறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் கல்வியறிவில் பல கல்வியாண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின்படி ஐந்தாண்டுத் தொடக்கக் கல்வியின் முடிவில் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியப் பெண்களின் விகிதம் 48 விழுக்காடாகும். அதுவே நேபாளில் 92 விழுக்காடும், பாகிஸ்தானில் 74 விழுக்காடும், வங்கதேசத்தில் 54 விழுக்காடாகவும் இருக்கிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த உலகளாவிய கல்வி வாய்ப்பு நிதி உதவிக்கான சர்வதேச ஆணைக்குழு ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக இந்த ஆய்வை மேற்கொண்டது. “இந்தியக் கல்வித்துறை பின்தங்கியிருக்கிறது என்பதற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்தச் சமிக்ஞை இதுவாகும்” என்கிறார் அந்த ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான ஜஸ்டின் சண்டேபர்.

வளரும் நாடுகளின் மக்கள் தொகை மற்றும் சுகாதார மதிப்பாய்வு (DHS) தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டனர். வளரும் நாடுகளிடையேயான வாழ்க்கைத் தரத்தை ஒப்பிடக்கூடிய ஒரு தகவல் ஆதாரம் தான் DHS. வளரும் நாடுகளின் DHS தகவல்களில் உள்ள பெண்கள் கல்வியறிவிற்கான புள்ளி விவரங்களை இதற்கு பயன்படுத்திக் கொண்டோம் என்று சண்டேபர் கூறுகிறார்.

girls education (1)இந்தியப் பெண்களின் கல்வியறிவு விகிதம் முதலிரண்டு ஆண்டு பள்ளிப் படிப்பிற்குப் பிறகு 1-லிருந்து 15 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் பெண்களின் கல்வியறிவு 3-லிருந்து 31 விழுக்காடாகவும், நேபாளத்தில் 11-லிருந்து 47 விழுக்காடாகவும் இருக்கிறது. “பெண்களுக்கு தொடக்கப்பள்ளியிலேயே கல்வியறிவு பெற்றுத் தருவதில் இந்தியாவை விட பாகிஸ்தான் இரண்டு மடங்கு மேம்பட்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அல்லது படிக்க முடியாத மாணவர்களை ஊக்குவிப்பதில் இந்தியப் பள்ளிகள் ஆர்வமில்லாமல் இருக்கின்றன” என்று சண்டேபர் கூறுகிறார்.

பள்ளிகளின் தர உயர்வினால்தான் அந்நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதா என்பது குறித்த சரியான தகவல் எதுவுமில்லை என்கிறது அந்த ஆய்வு. அதே நேரத்தில் உலக அளவில் பெண்களின் கல்வியறிவிற்கான உலகளாவிய குறியீட்டு எண்களில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்த கணிசமான குழந்தைகள் மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்கூட நிழலில் ஒதுங்கும் சூழ்நிலை இங்கே நிலவுகிறது. இந்த நிலையில் அங்கே அவர்கள் கற்கும் ஏகைலவ கல்வியையும் கூட தனியார்மய தாராளமய துரோணர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்.

உலகம் முழுவதிலும் பெண்கள் கல்வியறிவு முன்னேறிக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெண்களுக்கான தொடக்கக் கல்வியறிவை பெறுவதில் வளரும் 51 நாடுகளில் இந்தியா 38-வது இடத்தில் தான் உள்ளது. தொடக்கக் கல்வியின் இறுதியில் குறைந்தது பாதிப் பெண்களாவது கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்தத் தகவல் திரட்டப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியா, ருவாண்டா, டான்சானியா மற்றும் எத்தியோபியா நாடுகள் இந்தியாவை விட பெண் கல்வியில் முன்னணியில் உள்ளன. இந்த பட்டியலில் கானா கடைசியில் உள்ளது. கானாவில் ஆறாம் வகுப்பு முடித்தவர்களில் வெறும் 7 விழுக்காடு பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றுள்ளனர். கானாவை விட நாம் முன்னேறி இருக்கிறோம் என்று தேஷ் பக்தர்கள் வேண்டுமானால் புளகாகிதம் அடையலாம்.

girls education (2)உலகின் பெரும்பான்மையான நாடுகள் பெண்களுக்கான அடிப்படைக் கல்வியில் பல மாற்றங்களை கொண்டு வந்து பெண்கள் படிப்பறிவு பெறுவதற்கு முயல்கின்றன. ஆனால் இந்தியாவில் இலட்சக்கணக்கான பெண்கள் பல ஆண்டுகள் பள்ளியில் படித்தும் ஒரு எளிய வரியைக் கூட படிக்க முடிவதில்லை.

உலகம் முழுதும் வளர்ந்த நாடுகளில் பெண்களின் மீதான அடிமை சங்கிலிகள் உடைக்கப்பட்டவுடன் ஆண்களை விட பெண்களே படிப்பறிவிலும் திட்டமிடுவதிலும் சிறந்து விளங்குவதாக புள்ளி விவரங்கள் நிறுவுகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.

அதிக எண்ணிக்கையிலான கருவுருதலும், பேறுகால மரணங்களும் இந்தியப் பெண்களை கவ்வியிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை கோலேச்சும் வட இந்திய மாநிலங்களில் பெண்களில் கணிசமானோர் வெறும் பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவும், வாரிசை சுமக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த எளிய உண்மையின் ஒரு எதிர்வினை தான் இந்தியப் பெண்கல்வியின் இந்த அவல நிலைமை.

தலித்துக்கள் மீதானத் தாக்குதலை திசைத் திருப்ப தன்னைச் சுடுங்கள் என்றும், அவமானத்தால் தான் தலைகுனிவதாகவும் கதைவிடும் அதே மோடி தான் இந்திய பெண்கல்வியின் நிலைமை அவமானகரமாக இருக்கையில் பாகிஸ்தான் மக்களிடம் சரஸ்வதி கடாட்சம் பற்றி வகுப்பெடுக்கிறார். உண்மையில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் மற்றும் அவர்களது சித்தாந்தமான பார்ப்பனியத்தின் மீது இந்தியப் பெண்கள் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்தாலொழிய இதற்குத் தீர்வில்லை.

th24_literacy_col
வரைபடம் நன்றி: The Hindu

____________

மேலும் படிக்க:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. என்ன சார் இப்பிடி செல்லுரிங்க ஆண்களைவிட பெண்கள்தன் 10th 12th முதல வரங்க ஆது மானுதர்மத்து ஏதிரனது என நினைத்த நமது டுபாக்குர் பாரத பிரதமர் நாடு முழுவதும் ஒரே கல்வியை (இந்தி சமஸ்கிரிதம் மானுதர்மம், ராமயணம் மற்றும் காவி சிந்தனை) அனைத்தையும் கொடுத்து பெண்கல்வியில் கானாவை முன்னேற செய்வதில் மும்முரம இருக்கார்

  குறிப்பு :அது பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா இல்ல

  பாகிஸ்தான் அல்லவிடம் தோற்ற போன இந்தி(ய) பாரத மாதா இல்ல

 2. பாகிஸ்தானிகள் (வினவு கூட்டம்) இந்த மாதிரியான விஷயங்களில் (அது பொய்யாக இருந்தாலும்) சந்தோசம் அடைவார்கள், அதில் ஒன்றும் வியப்பு இல்லை. ஆனால் உண்மை நிலை என்ன ?

  பாகிஸ்தானை விட எங்கள் இந்தியா கல்வி தரத்தில் உயர்ந்து தான் இருக்கிறது.

  மேலும் இந்தியாவில் பெண்களுக்கு என்று தனி கல்வி எதுவும் இல்லை, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வி தான் போதிக்கப்படுகிறது. கல்வி தரம் குறைவாக இருந்தால் அதை அனைத்து மாணவர்களையும் சேர்த்து தான் பார்க்க வேண்டும் பெண்கள் என்று தனியாக பார்ப்பதில் அர்த்தம் இல்லை…

  மாநில அரசுகள் கல்வியை அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஹிந்தி கூடாது என்று ஏழைகளுக்கு மறுத்து விட்டு அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஹிந்தி கற்று கொடுக்கும் போலித்தனம் தான் இங்கே இருக்கிறது. மாணவர்களுக்கு எது நல்லது அவர்களின் வருங்காலத்திற்கு எந்த மாதிரியான கல்வி சரியாக இருக்கும் என்று சிந்தித்து செயல்படும் அரசியல் இங்கே இல்லை (நான் இடதுசாரிகள் மற்றும் திராவிட காட்சிகளை இந்த விஷயத்தில் மிக கடுமையாக குற்றசாட்டுக்கிறேன்) மிக மிக குறுகிய கண்ணோட்டத்தில் தான் கல்வி கொள்கை பார்க்கப்படுகிறது… நாட்டின் நலனுக்காக மாணவர்களின் வருங்காலத்திற்காக கல்வி தரத்தை இங்கே யாரும் பார்ப்பது இல்லை… அரசியல் கட்சிகள் (பிஜேபி உட்பட) அனைத்தின் மீதும் இதை நான் ஒரு குற்றசாட்டாகவே சொல்கிறேன்.

  கல்வி கொள்கைகளில் அரசியல்வாதிகள் (மிக முக்கியமாக இடதுசாரிகளும் திராவிட கட்சிகளும்) தலையிடாமல் இருப்பதே நல்லது.

  • என்னமாதிரியான வழக்கறிஞர் நீங்க மணி? same side goal அடிக்கிரிங்க்ளே ! முதலில் வினாவு கட்டுரைக்கு எதிரான விசயங்களை கூறிவிட்டுகடைசியில் ஆமாம் ஆமாம் “””நாட்டின் நலனுக்காக மாணவர்களின் வருங்காலத்திற்காக கல்வி தரத்தை இங்கே யாரும் பார்ப்பது இல்லை… அரசியல் கட்சிகள் (பிஜேபி உட்பட) அனைத்தின் மீதும் இதை நான் ஒரு குற்றசாட்டாகவே சொல்கிறேன்.””” என்று முடிவுரை கூறும் போது வினவு கட்டுரையுடன் அழகாக ஒருங்கிணைந்து போகின்றீர்களே மணிகண்டன்….
   சரி விசயத்துக்கு வருவோம்…. திரு ராஜாஜியின் ஹிந்தி திணிப்புக்கு பின், குலகல்வி திட்டத்துக்கு பின் தான் அவர் மக்களால் தூக்கி எறியப்பட்டு திரு காமராஜர் முதலமைச்சராக வந்தார். அவர் ஆட்சியில் தான் ராஜாஜியால் மூடப்பட்டு இருந்த 6000 பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டும் மேலும் 12000 புதிய பள்ளிகூடங்களும் திறக்கபட்டன. அவரின் மதிய உணவு திட்டங்கள் இன்று உலக அளவில் நடைமுறைபடுத்த படும் திட்டங்களாக உள்ளன.அதன் பயனாக பள்ளியில் படிப்பவர்களின் எண்ணிக்கை 37 % உயர்ந்தது.. பள்ளி வேலை நாட்கள் 180லில் இருந்து ௨௦௦ ஆக உயர்த்தப்ட்டது. சென்னையில் அவரின் முயற்சியால் தான் IIT கொண்டு வரப்பட்டது. ஆமாம் மணிகண்டன்.., இரு மொழி கொள்கையால் (தமிழ் ஆங்கிலம் ) தமிழ் நாடு எப்படி எல்லாம் கல்வியின் தரத்தில் குறைந்து போனது என்று விரிவாக கூறுங்களேன் பார்ப்போம். ஹிந்தி கற்ற மாநிலங்களை விட ஹிந்தி கற்காத தமிழ் மக்கள் எப்படி கல்வி தரத்தில் குறைந்து போனார்கள் என்று கூறுங்களேன் பார்கலாம்! நீங்கள் குறை கூறும் தேர்தலில் பங்குபெறும் கம்யுனிஸ்டுகள் ஆட்சி செய்த மாநிலங்களில் கூட கலவி பெற்றவர்கள் சதவிதம் கிட்டதட்ட 100% (Kerala literacy rate at 93.9 per cent)அளவுக்கு தானே உள்ளது… (Tripura has achieved the first position in literacy with 94.65 percent) கல்வி அளிப்பதில் கம்யுனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அவர்களுக்கு உள்ளாகவே போட்டி போடுகின்றார்கள் என்ற நிலையில் இதுவரையில் கம்யுனிஸ்டுகள் ஆட்சி செய்யாத மாநிலங்களின் நிலை என்ன வென்று பார்கலாமா?

   1. Literacy rate in Uttar Pradesh has seen upward trend and is 67.68 percent as per 2011 population census. Of that, male literacy stands at 77.28 percent while female literacy is at 57.18 percent.
   2. In 2011, literacy rate of Madhya Pradesh is 70.6 per cent as compared to 63.7 per cent in the year 2001. During the last decade the rise in literacy rate of Madhya Pradesh is 6.9 percentage points. Female and male literacy rates in 2011 are 60.0 per cent and 80.5 per cent respectively.

   3. Literacy rate in Gujarat has seen upward trend and is 79.31% as per 2011 population census. Of that, male literacy stands at 87.23% while female literacy is at 70.73%. Urban Population of the State is 42.6%, which used to be at 37.4% in 2001.

   4. Bihar is the least literate state in India, with a literacy of 63.82%.

   இப்ப நீங்க பேசுங்க மணிகண்டன்…. நான் பதில் அளிக்க தயாராக தான் இருக்கின்றேன்….

  • யோவ் மணிகண்டன், ஹிந்தி என்னமோ அமுதமா, ஏழைகளுக்கு மறுத்துவிட்டு பணகாரங்களுக்கு மட்டும் கொடுப்பதற்க்கு. என்ன உளரல். ஹிந்தி படித்தால்மட்டும்தான் உயர் கல்வியா? சமஸ்கிருதம் படித்தவந்தான் உசத்தி என்று சொல்லும் கூட்டமாயிற்றே நீங்கள், அப்படிதான் சொல்வீர்கள். கல்வி கொள்கயில் இப்போது BJP தான் அதிகமாக தலையிட்டு கல்லூரிகளை வேத பாட சாலைகளாக மாற்றி கொண்டிருக்கிறது

   • நான் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவிற்கு என் காரில் சென்றேன், ஷிமோகா பக்கத்தில் உள்ள நரசிபுரா என்ற பகுதியில் கேன்சர் நோய்க்கு மருந்து கொடுக்கிறார்கள், என் உறவினர் ஒருவருக்கு வாங்கி கொடுக்க சென்றேன். எனக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மட்டும் தான் தெரியும் ஹிந்தி தெரியாது. ஷிமோகா சென்ற பிறகு ஆங்கிலத்தில் வழி கேட்டால் அவர்களால் வழி சொல்ல முடியவில்லை, அவர்கள் எனக்கு ஹிந்தி தெரியும்மா என்று கேட்டார்கள்… சாதாரண மக்கள் அனைவரும் சுலபமாக ஹிந்தி பேசுகிறார்கள் ஆனால் ஆங்கிலம் தெரியவில்லை… இது கர்நாடகாவில் மட்டும் இல்லை, கேரளா ஆந்திர என்று அனைத்து மாநிலங்களிலும் சாதாரண மக்கள் ஹிந்தி பேசும் போது, தமிழகத்தில் மட்டும் தான் இந்த அநியாயம்.

    அரசியல்வாதிகள் தமிழக மக்களை தமிழக எல்லையை தாண்டி போகவிடாமல் செய்து இருக்கிறார்கள். பெங்களூரு டெல்லி மும்பை போன்ற பகுதிகளில் ஆங்கிலத்தை வைத்து பிழைத்து கொள்ளலாம் ஆனால் நாட்டின் மற்ற சிறு நகரங்கள் மற்றும் கிராம பகுதியில் ???

    ஆங்கில மொழியை ஏற்க முடியும், எந்த சமபந்தமும் இல்லாத அரபி மொழியை ஏற்க முடியும் ஆனால் பல ஆயிரம் வருடங்களாக தமிழோடு ஒன்றிணைத்த சமஸ்கிரத்தை ஏற்க முடியாது…

    • Manikantan,you are advocating for Hindi or Sanskrit?Sanskrit is spoken by only 16000 persons in India.It was because one section of people thought that language as their own.It was told that even wives of priests were not allowed to talk in Sanskrit.”SOOTHIRAN THAVARIPOY VEDHATHAI KETTUVITTAAL AVAN KAADHIL YEEYATHAI KAYCHI UUTRU”_MANU.

     • சமஸ்கிரத்தை இந்திய தேசிய மொழியாக கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். சமஸ்கிரத கலப்பு இல்லாத எந்த ஒரு இந்திய மொழியும் இல்லை, தமிழும் அதற்கு விதிவிலக்கு இல்லை, அதற்கு தொல்காப்பியமே சிறந்த சாட்சி, ஹிந்தியை விட சமஸ்கிரதம் தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் அனைத்து தகுதியும் உடைய மொழி…

      சமஸ்கிருதத்தை அழிவில் தள்ளியது போலி மதசார்பின்மை பேசி ஹிந்து மத எதிர்ப்பை குறிக்கோளாக கொண்டவர்கள்.

      சமஸ்கிரதம் அழிந்து விட்டது என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை, அப்படி அதை அழிவில் தள்ளியதற்கு அனைவருமே வெட்கப்பட வேண்டும்… மனித இனத்திற்கு தேவையான பல விஷயங்களை நம் முன்னோர்கள் தவம் இருந்து மனித இனத்திற்கு சொல்லியிருக்கிறார்கள் அதை மிக சாதாரணமாக போலி மதசார்பின்மை பேசி புறம்தள்ளியிருக்கிறோம். உலகில் இப்படி கேவலமாக வேறு எந்த ஒரு நாட்டினரும் நடந்து கொண்டது இல்லை.

      கிரேக்கர்கள் அரபியர்கள் என்று உலகில் பலரும் அவர்களின் பண்டைய மொழியை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் சமஸ்கிரதம் ஹிந்து மதத்திற்கு சம்பந்தப்பட்ட மொழி என்ற ஒரே காரணத்திற்காக பலரும் எதிர்க்கிறார்கள்.

      • மணிகண்டன்,

       முதலில் தேசியம் என்றால் என்ன என்று கூறவும்?
       சமஸ்கிருதத்திற்கு தேசிய மொழியாக என்ன தகுதி இருக்கிறது?

       ஒரு மொழி மற்ற மொழிகளில் கலந்து இருக்கிறது என்பதாலேயே அதை தேசிய மொழியாக்க முடியாது. சாக்கடைக் கூட தான் சந்து போந்து என்று எங்கும் நீக்கமற கலந்திருக்கிறது. அதற்காக அதை தேசிய நதியாக அறிவிக்க முடியுமா என்ன? அள்ளிப் பருகத்தான் முடியுமா?

       ஒரு மொழி அல்லது அதன் சமூகத்தின் காலாச்சரக் கூறுகள் தன்னியல்பில் பிற மொழி/சமூகத்தில் கலக்கிறது என்றால் பிற மொழி/சமூகக் கலாச்சாரங்களும் இங்கே கலக்கின்றன என்றே கருத முடியும். எதுவும் ஒற்றைவழி பாதையாக இருக்க முடியாது.

       தேசிய மொழியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கென தனித்த கலாச்சாரம் இருக்க வேண்டும்.

       அதற்கென தொடர்ச்சியாக மண்ணில் வாழ்ந்து வரும் ஒரு மக்கள் கூட்டம் இருக்க வேண்டும்.

       இசை, பாடல்கள், நாடகங்கள், செய்தி, திரைப்படங்கள், இலக்கியங்கள், போராட்டங்கள், கல்வி, வணிகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்ததாக இருக்க வேண்டும்.

       முன்னோக்கி செல்லும் மக்கள் சமூகத்தை வழிநடத்தும் தகுதி படைத்ததாக இருக்க வேண்டும்.

       தன் நிலை யாதென்று உய்த்துணரும் சுமரியாதையை கற்று தருவதும் மட்டுமல்லாமல்
       பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தம்மை போலவே பிறரையும் கருதும் ஒரு பரந்து விரிந்த உலகப் பார்வை அதற்கிருக்க வேண்டும்.
       ——-

       உண்மையில் சமஸ்கிருதத்தில் உள்ள பெரும்பாலான ஆக்கங்கள் யாவும் உலோகாயுதத்தை பறைசாற்றக் கூடியவை தான் என்றாலும் அதில் நல்ல விசியங்கள் இருக்கின்றன என்றாலும் ஆதி சங்கரனுக்குப் பிறகு அதன் உலோகாயுத பார்வை முனை மழுங்கி விட்டது, துருப்பிடித்து விட்டது, சாக்கடையாகி விட்டது. அந்த துர்நாற்றங்கள் இந்திய மொழிகளில் அனைத்திலும் வீசுகின்றன.

       கூவத்தை கூட தூய்மைப்படுத்தி விடலாம். சமஸ்கிருதம் இனி வேலைக்கு ஆகாது. செத்த பிணத்தை பெத்த பாவத்திற்காக நீர் தூக்கி சுமக்கலாம். ஆனால் நாங்கள் ஏன் அதை சுமக்க வேண்டும்.

       எண்கள் குழந்தைகளுக்கு உயிர்ப்பான தாய்மொழியிலேயே உலக அறிவு வாய்க்கப்பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். அது கண்டிப்பாக செத்த சமஸ்கிருதம் அல்ல.

       எங்களுக்கு தேனினும் இனியத் தமிழ் மொழியுண்டு.
       அதற்கு வாளியினும் கூரிய சொல்வளம் உண்டு.
       பெத்த தாய் இங்கிருக்க
       செத்த பிணத்தை எங்களிடம் தள்ளாதே……

       • சாக்கடை என்பது உங்கள் பார்வை, அது உங்களின் வக்கர பார்வையை காட்டுகிறது, சமஸ்கிருதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை மனித இனம் தொலைத்து விட கூடாது என்பது என் பார்வை…

        • முக்கியமான கேள்விகளுக்கு பதில் இல்லை….

         தேசியம் என்றால் என்ன? தேசிய மொழி என்றால் என்ன? இந்தியா என்பது தேசியமா?

         சமஸ்கிருதம் தேசிய மொழி என்றால் அதற்கு என்ன தகுதி இருக்கிறது?

         வர்ணாசிரமத்தை தவிர தமிழில் அதற்கென்ன பங்கிருக்கிறது?

         சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வதால் என்னென்ன நன்மை ஏற்படும்?

         தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அப்படி என்ன சிறப்பான தகுதி இருக்கிறது?

         பல்வேறு படையெடுப்புகளுக்கு பின்னரும் தமிழ் அழியாமல் இருக்க காரணம் என்ன?

         இந்திய நிலப்பரப்பில் பல்வேறு மன்னர்கள் அடைக்கலம் கொடுத்தும் பேச மக்கள் இல்லாமல் நாதியற்று இருப்பது ஏன்?

         முதலில் அடுத்தவர்கள் மீது பலி போடாமல் உண்மையை அறிய முயற்சி செய்யவும்.

         அப்புறம்,
         //சமஸ்கிருதத்தை அழிவில் தள்ளியது போலி மதசார்பின்மை பேசி ஹிந்து மத எதிர்ப்பை குறிக்கோளாக கொண்டவர்கள்.//

         யார் அந்த போலி மதசார்பின்மை பேசியவர்கள்?

    • மணிகண்டன்…, தேசிய இனப்பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தான் ஆட்சியில் உள்ள உங்களை போன்ற ஆட்கள் இந்தியாவையே சீர்குலைத்துக்கொண்டு மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சனையை உருவாகிக்கொண்டு உள்ளார்கள்.பல்வேறு மொழிகளை உள்ளடங்கிய இந்தியாவில் ஒரு மொழிக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று நமது அரசியல் அமைப்புச்சட்டம் கூறவில்லை மணி! அப்படி இருக்க ஹிந்திக்கு மட்டும் முதனமையான இடத்தை , அதனை ஹிந்தி அறியாத பிறர் மீது திணிப்பது என்பது இந்தியாவின் ஒற்றுமையே குலைத்தது விடும் மணி! USSR ல் உங்களை மாதிரியே ஒரு தோழர் ருஷ்ய மொழியை சோவித் யூனியனில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் கட்டாயம் ஆக வேண்டும் என்று ஆசான் லெனின் அவர்களிடம் கூறினார்….. அதற்கு ஆசான் லெனின் அவர்களின் பதில் என்ன தெரியுமா?

     “தடி எடுத்து எல்லாம் மனிதர்களை சொர்கத்துக்கு துரத்த முடியாது தோழர்”…

     என்ன மணி புரிகின்றதா? புரியாவிட்டால் அடுத்த பின்னுட்டத்தில் விளக்கமாக கூறுகின்றேன்.

    • அரபி மொழியை ஏற்க முடியும் ஆனால் பல ஆயிரம் வருடங்களாக தமிழோடு ஒன்றிணைத்த சமஸ்கிரத்தை ஏற்க முடியாது…

     முட்ட மணிகான்டம் எவன் அரபி மொழி தினிச்சன் அரபி நாட்டுல 10 வருசமா வேலை செய்யுரேன் எந்த அரபியும் வந்து அரபி கத்துகொள்ள செல்லவில்லை ஆனா நீ இந்திய இந்தி கத்துகொள் என இங்கு உள்ள இந்தியர்கள் செல்வர்கள் ஏன் எனில் இங்கு உள்ள வட இந்தியனுக்கு இந்தியை தவிர வேறு மொழி தெரியாது 1000த்துக்கு 10 பேர்தன் அங்கில அறிவுடன் நல்லபதவில் இருப்பான் மீதி 980 பேர் லேபர இருப்பன் ஆன தமிழன் மலையாளி 1000த்துக்கு 800பேர் நல்லபதவில் இருப்பான் 200 பேர்தன் லேபர இருப்பான் வேனுனா அரபு நாட்டுல வேலை செய்யும் மக்களிடம் கேட்டுபர் புரியும் இந்தி ஒரு மண்ணுக்கு உபாயம் இல்ல

     • அரபி மொழியை ஏற்க முடியும் ஆனால் பல ஆயிரம் வருடங்களாக தமிழோடு ஒன்றிணைத்த சமஸ்கிரத்தை ஏற்க முடியாது…

      அரபி மொழியை வார்த்தையில் தமிழ் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் முஸ்லிம்கள் இன்னறவும் சில பழம் தமிழ் பேசுவர்கள் எ,க தொழுகை,நோன்பு, பள்ளிவாசல் பசிஅறவா உணவு உன்னுனியா அதைபோல் மலையாளிகளும் பேசுவர்கள் என சில முஸ்லிம் மற்றும் மலையால நண்பர்கள் பேச நேரில் கண்டேன் இந்த வினபோன சமஸ்கிரத்தம் தன் தமிழ் மொழியின் அழகை கொன்றது

     • இந்திய இஸ்லாமிய வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள், இந்தியாவில் இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்ட மதம், அவர்களின் மத வழிபாடு எந்த ஒரு இந்திய மொழியிலும் கிடையாது, அரபி மொழியில் மட்டும் தான் அவர்கள் வழிபட முடியும், குரான் அரபி மொழியில் தான் எழுதப்பட்டது, அவ்வுளவு ஏன் தஞ்சை மாவட்டத்தில் எங்கள் கிராமத்தில் பள்ளிவாசல் இருக்கிறது, அந்த பள்ளிவாசலில் அரபி மொழியில் தான் தினமும் குரானை ஓதுகிறார்கள்… அதுவும் பல கிலோமீட்டர் தூரம் கேட்க கூடிய loud speaker ல் அவர்கள் தமிழில் வழிபாடு நடத்தி நான் கேட்டதே இல்லை.

      இப்படி உங்கள் எல்லோராலும் எந்த கேள்வியும் கேட்கப்படாமல் அரபி மொழியை ஏற்க முடியும் போது ஏன் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் வழிபடும் ஹிந்து மதத்தையும் சமஸ்கிரத்தையும் ஏற்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு நியாயமா ?

      • சரி, அரபி மொழியை ஏற்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே. சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வது மக்களின் விருப்பமாக இருக்கும் போது யாரும் அதைத் தடுக்க முடியாது.

       ஆனால் இன்றைய தேதியில் எவ்வளவு மக்கள் சமஸ்கிருதத்தை பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

       அப்புறம் கட்டுரையின் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்று பாகிஸ்தான் ஓடுகிறீர்கள்.

       இசுலாமிய பெரும்பான்மை நாடான பாகிஸ்தானில் பெண் கல்வி இந்து பெரும்பான்மை நாடான இந்தியாவை விட சிறப்பாக இருக்கிறது. அது ஒருவேளை இசுலாமிய மதக்கல்வியாக கூட இருக்கலாம். ஆனால் அது கூட ஏன் இங்கே நடக்கவில்லை?

       பெரும்பாலான ஏழை எளிய மக்கள் படிப்பதற்கு பள்ளிகூட நிழலைக் கூட மிதிக்க நாதியற்று இருப்பது எவரையும் குற்ற உணர்வு அடைய செய்யும். ஏகலைவனின் கட்டைவிரலை பார்ப்பனீயம் வெட்டி வீழ்த்தியதை போல இந்திய ஏழைப் பெண்கள் கல்வி கற்பதை பார்பனியமும் முதலாளித்துவமும் வீழ்த்துகின்றன.

       இந்தியப் பெண்கள் கல்வி கற்க முடியமால் இருப்பதற்கு பாகிஸ்தான் காரணமா இல்லை உருது தான் காரணமா?

      • 1,இந்திய இஸ்லாமிய வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள், இந்தியாவில் இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்ட மதம்,

       கத்தி முனையில் பரப்பட்ட மதமாக இருந்தால் 900 வருடம் இந்தியவை ஆண்டவர்கள் முஸ்லிம்கள் அப்படி பார்த்தால் நீயும் நானும் முஸ்லிமாக இருந்து இருப்போம்

       2,அவர்களின் மத வழிபாடு எந்த ஒரு இந்திய மொழியிலும் கிடையாது

       அவர்கள் மத மொழி அரபி அது எப்படி இந்திய மொழியில் வரும், சமஸ்கிரதம் இந்திய மொழியே கிடையாது ஆடு மாடு மேக்க வந்த ஆரியன் மொழி,

       3,அவ்வுளவு ஏன் தஞ்சை மாவட்டத்தில் எங்கள் கிராமத்தில் பள்ளிவாசல் இருக்கிறது, அந்த பள்ளிவாசலில் அரபி மொழியில் தான் தினமும் குரானை ஓதுகிறார்கள்… அதுவும் பல கிலோமீட்டர் தூரம் கேட்க கூடிய loud speaker ல் அவர்கள் தமிழில் வழிபாடு நடத்தி நான் கேட்டதே இல்லை.

       தஞ்சை மட்டும் இல்ல உலகில் அனைடத்து நாடுகளிலும் அவர் சாமி கும்பிட அழைப்பது அல்லா சாமியை வணங்குவது அரபில்தன் ஆனால் அவர்கள் அரயியை தேவ மொழி என்னும் அரபி அல்லத மொழியை நீச்ச பாஷை என்று கூறியாது கிடையாது இந்து மதத்தில் சமஸ்கிரத்தை தேவ பாஷை என்றும் சமஸ்கிரத்தை அல்லத மற்ற இந்திய மொழியை நீச்ச பாஷை என்று இன்று கூறுவது உண்டு , தீபாவளி அன்று காற்று மாசு அடையும் பட்டசு வெடிப்பதும் தீ விபத்து ஏற்பாடுத்துவதும் அதுக்காக தீபாவளியை கொண்டமா இருக்கிங்கள
       உங்களுக்கு வந்ம இரத்தம் அவனுக்கு வந்த தாக்களி சட்டினியா

       4,தமிழில் வழிபாடு நடத்தி நான் கேட்டதே இல்லை.

       முதலில் நீங்க கோவிலில் தமிழில் வழிபாடு நடத்து அப்பரம் அவன சொல்லாம் ,

       5,அரபி மொழியை ஏற்க முடியும் போது ஏன் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் வழிபடும் ஹிந்து மதத்தையும் சமஸ்கிரத்தையும் ஏற்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு நியாயமா ?

       இஸ்லாமியனுக்கு வணக்க முறைக்கு ஒரே கடவுள் ஒரே மொழி அனால் இந்துகளுக்கு ஒரே கடவுளும் இல்லை ஒரே மொழியும் இல்லை

       • சமஸ்கிரதம் இந்திய மொழியில்லை என்று சொல்வதை விட பெரிய முட்டாள்தனம் வேறு ஒன்றும் கிடையாது… உங்களை சொல்லி குற்றமில்லை அந்தளவுக்கு இந்திய பண்பாட்டின் மீது பொய்களை பரப்பி வெறுப்பை வளர்த்து வைத்து இருக்கிறார்கள் போலி மதசார்பின்மை பேசும் இடதுசாரிகளும் மற்ற அரசியல்வாதிகளும்.

        காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் இருக்கும் ஹிந்து கோவில்கள் அனைத்திலும் சமஸ்கிரத்தில் தான் மந்திரம் சொல்லி வழிபடுகிறார்கள். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் இருக்கும் அனைத்து ஹிந்து கோவில்களிலும் தீபம் ஏற்றி புஷ்பம் வைத்து தான் கடவுளை வழிபடுகிறார்கள்.

        அவ்வுளவு ஏன் தமிழக அரசு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று சட்டம் இயற்றினார்கள் ஆனால் மக்களில் எத்தனை பேர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லி கேட்கிறார்கள் (எனக்கு தெரிந்து ஒருவர் கூட இல்லை).

        இஸ்லாமிய பள்ளிவாசலில் அரபி மொழியில் வழிபடுவதை கேள்வி கேட்காத இடதுசாரிகள் எந்த அடிப்படையில் ஹிந்து கோவில்களில் சமஸ்கிரதம் கூடாது என்று சொல்கிறார்கள், அப்படி கேட்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

        விட்டால் இந்தியாவில் ஹிந்து மதமே இல்லை, ஹிந்துக்களே கிடையாது என்று அய்யோக்கியத்தனமாக பேசுவீர்கள்.

        இது இந்தியாவில் மட்டுமே நடக்க கூடிய அயோக்கியத்தனம், பாகிஸ்தானிலும் அரேபியாவிலும் இஸ்லாம் அவர்கள் மதமே இல்லை என்று சொல்லி பாருங்களேன்… ஓட்ட வெட்டி விடுவார்கள்.

        • Manikantan,POO SEI YENDRU POO VAITHU VAZHIBAADU SEITHA THAMIZHARGALAI PAARTHUTHAAN PUSHPAM VAITHU AARIYAR VAZHIBAADU SEYYALAAYINAR.”POO SEI” THAAN “POOJAI”AANADHU.You now say that every one should learn Sanskrit.206 youngsters learnt AAGAMAM and Sanskrit.But why a section of Hindus prevented these youth to become Archagars in TN temples?What prevented them to recognize these youngsters as capable priests?Give me straight answer.Do not run away.You have not answered many of my queries.

         • சமஸ்கிரதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு அல்ல, அதில் ஏராளமான அறிய பொக்கிஷங்கள் மனித இன மேம்பாட்டிற்காக சொல்லப்பட்டு இருக்கிறது. உலகிலேயே சமஸ்கிரத மொழியில் இருக்கும் அறிவு களஞ்சியங்கள் வேறு எந்த மொழியிலும் கிடையாது… பக்தி, இசை, இலக்கியம், நாட்டியம், அறிவியல், ராஜதந்திரம், மருத்துவம், மனப்பக்குவம் என்று அனைத்து துறையிலும் கிடைப்பதற்கு அறிய களஞ்சியங்கள் சமஸ்கிரத மொழியில் உள்ளன, அவைகளை எல்லாம் வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். இசை நாட்டியம் பக்தி போன்றவற்றுக்கு எல்லாம் சமஸ்கிரதம் அளவிற்கு உலகின் வேறு எந்த மொழியிலும் அறிய தகவல்கள் கிடையாது.

          சமஸ்கிருதத்தை அழிவில் தள்ளுவது என்பது நம் முன்னோர்களுக்கும், நம் வருங்கால சந்ததியினருக்கும் செய்யப்படும் மிக பெரிய அநீதி, துரோகம்

          • A good language should unite all people together irrespective of caste or creed.But,Sanskrit language has divided people according to Varnashrama Dharma, It infiltrated into Tamil (due to unique strength of Tamil,its core strength could not be damaged by Sanskrit).But,it damaged the core strength of Telugu,Kannada,Malayalam and Thulu by infiltrating into those languages.
           “Sanskrit was instrumental in fostering religious and caste clashes”-Vivekananda- as recorded by Maraimalai Adigal in his book-“Thamizhar Madham”-page-24.

          • The Archagar trainees were much offended not by refusal of Archaghar jobs as such.But they feel very bad for the treatment meted out to them on the basis of their birth.Their learning of Sanskrit has not elevated them to a higher level.But,in spite of their acquiring the knowledge through Sanskrit,they have been insulted on the basis of their birth.This case proved the fact that Sanskrit divides people according to Varnashrama Dharma.

         • You are all short sighted and deliberately want to spread hatred towards Sanskrit…

          வர்ணம் என்பது நம்மை நாம் உணர்ந்துகொள்ள, நம் தகுதியை உயர்த்திகொள்ள உதவும் அளவுகோல் அவ்வளவே. மனிதர்களின் செயல்கள் மற்றும் குணாதிசையங்களை வைத்து அவர்களை நான்கு பிரிவுகளாக (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) தரம் பிரித்திருக்கிறார்கள், உலக மக்கள்அனைவரும், ஆணோ, பெண்ணோ இந்த நான்கு தரத்தில் ஏதோ ஒன்றின் கீழ் தான் இருப்பார்கள், ஒருவரின் செயல் மற்றும் பேசும் முறையிலேயே இதை கண்டு கொள்ளலாம்.

          பிறப்பினால் அனைவரும் சூத்திரர் தான், அவர்களின் செயல்கள் மற்றும் குணத்தின் மூலம் ஒவ்வொரும் படியாக முன்னேறி அவர்கள் பிராமணராக மாறலாம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் எல்லோருமே ஆரம்ப கல்வி LKG யில் தான் ஆரம்பிக்கிறார்கள், அதில் சிலர் 12 ம் வகுப்பு வரை படிப்பார்கள், சிலர் Phd வரையில் படித்து முன்னேறுவார்கள். இதில் LKG சூத்திரன் என்றால் Phd பிராமணன்.

          நவீன வாழ்க்கையில் சொல்வது என்றால் இன்று வேலைக்கு சேர Leadership quality வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார்கள்… சமஸ்கிரத்தில் சொல்வது என்றால் அதன் பெயர் சத்திரிய குணம், அந்த leadership quality யை வளர்த்து கொள்ள பலர் training எல்லாம் போகிறார்கள்… ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் இது பற்றி எல்லாம் தெளிவான விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள், எப்படி நம் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்…

          முட்டாள் தனமாக நாம் அதை எல்லாம் புறக்கணித்து கொண்டு இருக்கிறோம்.

          வினவையும் அதன் பெரும்பாலான வாசகர்களையும் நான் சூத்திர குணம் கொண்டவர்களாகவே பார்க்கிறேன்.

          இங்கே நான் சூத்திரர் என்று சொல்வது உங்கள் ஜாதியை அல்ல, உங்கள் குணத்தை

          • மணிகண்டன்,

           பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் குணத்தின் அடிபப்டையில் தான் சாதி இருக்கிறது எனில் இழிவான குணத்தை கொண்டிருக்கும் காரணத்தால் இந்நேரம் பார்ப்பனர் என்ற சாதியே காணாமல் போயிருக்கும்.

           சூத்திரர்கள் என்பவர்கள் யாவர்? அவர்கள் ஏன் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் என்று ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் விளக்கி உள்ளனர். நீங்கள் சொல்லும் கட்டுக்கதையும் புதிதல்ல.

           பார்ப்பனர்கள் அனைவரும் எங்கே ஐயா படித்து பி.எச்.டி பட்டம் பெற்றார்கள்? சாதி அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிருவனப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பில் பார்ப்பனன் என்பவனும் சூத்திரன் என்பவனும் என்ன செய்ய வேண்டும் என்பதை மனு சாத்திரங்கள் தெளிவாக கூறுகின்றன.

           எடுத்துக்காட்டாக மலம் அள்ளுவது தீண்டத்தகாதவர்களின் தொழிலாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அவர்களை அந்த இழிவிலேயே தொடர்ச்சியாக வைத்திருப்பதால் இருக்கும் சமூக பொருளாதார நலன்களே. அவர்கள் LKG கூட படிக்க இயலாமல் அடித்திருப்பதன் மூலம் அவர்களது சமூக இழிவைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்துகிறார்கள்.

           அப்புறம் சங்கராச்சாரி ஜெயேந்திரன் எந்த பள்ளியில் படித்தான்? எங்கே பி.எச்.டி பட்டம் பெற்றான்? அப்புறம் லீடர்ஷிப் குணத்தை பற்றி லெக்சர் கொடுக்கிறீர்கள். எங்கே படித்தால் அய்யா அது கிடைக்கும். ஒரு வேலை ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் படித்ததால் தான் மோடி போன்ற ஒரு பாசிட்டு தலைவர் கிடைப்பாரோ?

           பார்ப்பனியத்திற்கு தாங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் சாதிய படிநிலைகளால் நிலைநிறுத்தப்பட்ட பார்பனிய அமைப்பிற்கு முட்டு கொடுப்பது போன்றது. ஒருவகையில் வர்ணாசிரமத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் சூழலில் அதை கண்டு நெஞ்சம் பதைபதைத்து அதை எப்படியாவது நியாப்படுத்தி நிலைநிறுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும் அது வெளிபடுகிற்றது.

          • செல்வம் நான் சொன்ன கருத்தை உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை,இப்படி எதையும் சரியாக புரிந்துகொள்ளாமல் அல்லது வேண்டும் என்றே திட்டமிட்டு உங்களை போன்றவர்கள் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை/அவதூரை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்.

           உங்களுக்கு புரியும்படி இன்னொரு உதாரணம் சொல்கிறேன் விசுவாமித்திரர் ஒரு சத்திரியர், தன் நிலையை உயர்த்தி கொள்ள கடும் தவம் புரிந்தார்… கடவுள் அருளை பெற்ற பிறகு விசுவாமித்திரர் வசிஷ்டரிடம் சென்று தான்பல வருடங்கள் தீவிரமான தவம் செய்ததால் தன்னை பிராமணனாக அழைக்க வேண்டும் என்று வேண்டினார்.

           அதற்கு வசிஷ்டர் சத்திரியர்கள் தவத்திற்கு அருகதையுடையவர்கள் அல்ல. அவர்கள் ஒருக்காலும் பிராமணர் ஆகமாட்டார்கள்,

           அதற்கு காரணம் என்ன தான் கடும் தவம் செய்தாலும் சத்திரியனின் போர்க்குணம் இருக்கும் வரையில் அவன் பிராமனாக இருக்க முடியாது. அந்த போர் குணத்தை துறந்த பிறகு தான் விசுவாமித்திரை பிரமரிஷி என்று வசிஸ்ட்டர் அழைத்தார்.

           இன்னொரு உதாரணம் கம்ப ராமாயணத்திலும் சரி, வால்மீகி ராமாயணத்திலும் சரி ராவணனை பிராமணன் என்றே அழைக்கினார்கள். அசுர இனத்தை சேர்ந்த ராவணவனை ஏன் பிராமணன் என்று அழைத்தார்கள் ?

           ஹிந்து மத தர்மப்படி பிறப்பினால் அனைவரும் ஒன்றே, தன் குணத்தினால் மற்றும் நடத்தையால் தான் பிராமணன் ஆகிறான்.

          • //வர்ணம் என்பது நம்மை நாம் உணர்ந்துகொள்ள, நம் தகுதியை உயர்த்திகொள்ள உதவும் அளவுகோல் அவ்வளவே. மனிதர்களின் செயல்கள் மற்றும் குணாதிசையங்களை வைத்து அவர்களை நான்கு பிரிவுகளாக (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) தரம் பிரித்திருக்கிறார்கள்//

           வர்ணங்கள் நிர்ணயிக்க படுவது பிறப்பினால் அல்ல குணத்தினால் தான் என்று கூறுகிறீர்கள். நல்லது, இதற்கான ஆதாரத்தை நீங்கள் வேதங்கள் முதற்கொண்டு ஏதாவது ஒரு இந்து மத இலக்கியத்தில் இருந்து காட்ட முடியுமா. ஆதாரம் காட்டி அதன் அடிப்படையில் பேசினால் நல்ல இருக்கும்.

           //வினவையும் அதன் பெரும்பாலான வாசகர்களையும் நான் சூத்திர குணம் கொண்டவர்களாகவே பார்க்கிறேன்….//

           நானும் அந்த பட்டியலில் இருக்கிறேனா????!!!!!

          • Even according to your prescription to become Brahmins (though I would not advice anybody to aspire to become a Brahmin),these Archagar students learnt Agamam and Sanskrit in the Govt school.They were taught by priests who were well versed in Agamam and Sanskrit.So according to your argument,they have prepared themselves to be Archagars(Brahmins).But how come a section of people who are already practicing the Archagar profession went to SC to prevent appointment of these trained students as Archagars in TN temples?You are not telling straight answer and certainly evading your reply by giving a new definition for Varnashrama Dharma.This definition is being flaunted only as an argument but never practiced.My objection is against the very division of the mankind into four categories and prescribing profession for each category.Sudras are not prescribed any profession.They have been ordained to do menial jobs for the other Varnas They were denied education,good clothes and good food by Manu.Here the Scheduled Caste people are excluded from the Varnams altogether.They were called as Panchamar.The moment Nandan had ardent bakthi to have dharshan of Nataraja,according to your prescription had become a Brahmin.How come he was prevented to enter the temple and have Siva Dharshan and why he was burnt alive?Why the South Gate of Chidambaram temple which was closed for Nandhan still not opened?The moment Ekalaivan mastered the art of archery equal to the level of Arjun,he had already become a Kshatriya.Why Drona wanted his thumb as Gurudakshina thereby preventing Ekalaiva from practicing archery?Why Emperor Shivaji should become Kshatriya by following some rituals with the help of Gagapatta before his coronation?Why Dhuryodhana should make Karnan a king before allowing Karnan to lead a day’s war?If you have answers for all these questions,come out with it.Otherwise stop telling further definition for Varnashramadharma and listing out non-existent “virtues”of Sanskrit.

          • sooriyan: நீங்கள் சொல்வது உண்மை தான் இன்றைய காலகட்டத்தில் உண்மையான பிராமணன் என்று யாரும் இல்லை (நான் இதுவரையில் சந்தித்தது இல்லை) ஒரு பிராமணனின் வாழ்வை வாழ்வது என்பது அவ்வுளவு சுலபமும் இல்லை.

           துரோணாச்சார்யார் ஏன் இப்படி செய்தார் என்பதற்கான பதில் இருக்கிறது, ஏகலைவன் குலமான நிஷாத வம்ச மன்னர் பரம்பரை சேர்ந்தவன்,(வழிப்பறி கூட்டம்), ஒரு முறை ஏகலைவன் தியானம் செய்து கொண்டு இருந்த போது ஒரு நாய் குலைத்தது, தன் தியானம் தடைபடுவதால் கோபம் கொண்ட ஏகலைவன் கண்ணை மூடியபடியே சத்தம் வந்த திசையை நோக்கி அம்புகளை எய்தான், அந்த அம்புகள் சரியாக நாயை தாக்கி, குலைக்க முடியாதபடி அதன் வாயை மூடியது.

           வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கூட்ட தலைவனிடம் இப்படி ஒரு சிறந்த வில் வித்தை திறமை இருப்பது நல்லதா ?

           இது ஒசாமா பின் லாடன் கையில் அணு ஆயுதம் இருப்பதற்கு சமம், இன்றைய காலகட்டத்தில் ஒசாமா பின் லாடன் கையில் அணு ஆயுதம் இருப்பதை ஏர்ப்போமா ?

  • மணி ,கம்யுனிஸ்டுகளை பற்றி அவதுறாக பேச உங்களுக்கு எப்படி மனம் வந்தது…?

   “தன் நாட்டுக் குழந்தைகளுக்கு 100 சதவீதக் கல்வியை அளிக்க முடியாத தேசம், தன் நாட்டினருக்கு அடிப்படை ஊட்டச்சத்துக் கிடைப்பதை உறுதிசெய்யாத தேசம் அதர்மமான தேசம்”

   -பிடல் காஸ்ட்ரோ

   மேற்குறிப்பிட்ட இலக்குகளைத் தன் நாட்டில் நிகழ்த்திக் காட்டினார் பிடல் காஸ்ட்ரோ. கல்வி, மருத்துவம் போன்றவற்றில் கியூபா தலைசிறந்து விளங்குவதற்கு ஃபிடல் வழிவகுத்தார். ஆனால் இந்தியாவில் உங்கள் முதலளித்துவ அடிவருடிகளான காங்கிரஸ் அரசும் , பிஜேபி அரசும் குறைந்த பட்சம் கல்வியில் கூட 100% இலக்கை அடைந்தனவா மணிகண்டன் ?

   • ________
    தேசவிரோதிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட்கள் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்ய முடியாது… அவர்களால் மக்களுக்கு நன்மை என்பதை நான் ஒரு மாயபிம்பமாகவே பார்க்கிறேன், கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் தீய சக்தியாகவே நான் பார்க்கிறேன்… கம்யூனிஸ்ட்கள் நிச்சயம் இந்திய மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள் என்பதை வலுவாக நான் நம்புகிறேன்.

    இந்தியாவின் மிக மோசமான அரசியல் கட்சி கம்யூனிஸ்ட்.

    • ஆதி சங்கரனின் வாரிசுகள் கயிற்றையும் பாம்பாக தான் கருதுவார்கள் என்பதற்கு ஆதிசங்கரனே வந்து தான் சாட்சி கூற வேண்டுமா?

     ஆம் இந்து வெறியர்கள் அவர்களுக்கு எதிரானவர்களை தீய சக்திகளாக தான் பார்ப்பார்கள். அதனால் தான் இம்மண்ணின் மைந்தர்களான அசுரர்களை மட்டுமல்ல சமண சார்வாக பவுத்த மக்களை கயமைத்தனமாக வதம் செய்தனர்.

     ஒவ்வொரு வதைக்கும் ஒரு எதிர்வதை உண்டல்லவா. நீர் உமது மாயா சிந்தனைக் காரணமாக கயிறை சாம்பலாக்க நெருப்பில் இடுகிறீர்கள். ஆனால் பழுக்க காய்ச்சப்பட்ட அதன் கூர் முனை உமது மூளையின் முதுகுத்தண்டில் பாயத்தான் போகிறது.

     • //கயிறை சாம்பலாக்க
      இரும்பு கம்பியை கயிறாக நினைத்து சாம்பலாக்க ….என்று படிக்கவும்

 3. Manikantan,Who is Drona to punish Ekalaivan?Your explanation is again an excuse.The Nishadha vamsam must have been inferior than Kuru Vamsam(kshathiriyar varnam)It is told that Valmiki,the author of Ramayanam,himself belong to hunter tribe.How come he is regarded as great author?When,you yourself saying that there are no true brahmin,what right these bogus brahmins to treat others badly?The priests of Tirupathi temple according to their scriptures,should not do yaga for private individuals.But these priests fly to Delhi and Mumbai for doing yaga for rich persons.In big temples built according to Agama Shastra,the karpagraham should be closed after Arthajama pooja and should not be opened after that pooja.But,the karpagrahams in these temples are kept open after midnight for devotees on English New Year Day.Yet,these traditional Archagars (many of them not well versed in Agamam and mantras)objected the well-trained Archagar students from becoming Archagars in these temples.You have not offered any explanation for my other queries like Nandan,Emperor Shivaji etc.

 4. Manikantan,you say that a person belonging any varnam can become a brahmin by enhancing his good qualities.What about Mahatma Gandhi?He was considered as personification of fine human being and that is why,he was called “Mahatma”.But,before 1925 or so,during his visits to Chennai,he used to stay in one particular friend’s house.He was fed not inside the house of that friend.That was the period in which Periyar was fighting against the evils of Brahmanism.The Periyar movement brought a change the way the Mahatma was entertained by his friend in subsequent years.Do you want any more example for proving that your new definition for Varnashrama Dharma is false.

 5. சமஸ்கிருதத்தில் அவ்வளவு கருத்து கடல் இருந்தால் , மணிகண்டன் போன்றோர் தாராளமாக படிக்கட்டும்! பார்ப்பனர் ரிக் வேத பாடல்களே சமஸ்கிருதத்தில் இல்லை; இன்னும் மொழி தெரியாமல் அர்த்தத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்! (உபயம்:டி டி கொசம்பி)

  பிராமண ஆதிக்கத்தை நிலைநிருத்த கிட்டத்தட்ட 130 உபனிடதங்களை உருவாக்கியுள்ளார்கள்; எல்லாமே வேத சாரங்களாம், ஆனால் ஒன்றுக்கொன்று முரண்படுபவை. இவை தவிர மற்றவை பிற இந்திய மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. இதை வலிந்து மற்றவர் மீது ஏன் திணிக்கவேண்டும்?

  அறிவியல் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக உலகெங்கிலும் பயன்படும் மொழியான ஆங்கிலம் படிப்பதேநாம் உய்ய வழி!

 6. மணிகண்டன் …….

  நீங்கள் இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை ..

  //வர்ணம் என்பது நம்மை நாம் உணர்ந்துகொள்ள, நம் தகுதியை உயர்த்திகொள்ள உதவும் அளவுகோல் அவ்வளவே. மனிதர்களின் செயல்கள் மற்றும் குணாதிசையங்களை வைத்து அவர்களை நான்கு பிரிவுகளாக (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) தரம் பிரித்திருக்கிறார்கள்//

  வர்ணங்கள் நிர்ணயிக்க படுவது பிறப்பினால் அல்ல குணத்தினால் தான் என்று கூறுகிறீர்கள். நல்லது, இதற்கான ஆதாரத்தை நீங்கள் வேதங்கள் முதற்கொண்டு ஏதாவது ஒரு இந்து மத இலக்கியத்தில் இருந்து காட்ட முடியுமா. ஆதாரம் காட்டி அதன் அடிப்படையில் பேசினால் நல்ல இருக்கும்.

  • ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது, சத்திரியனாக இருந்து பிராமனாக மாறிய விசுவாமித்திரர் வரலாறு ஒரு சின்ன சாம்பிள் மட்டுமே… இன்னும் சொல்ல போனால் ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் பிராமனாகவும் தம்பி வைசியனாகவும் வாழ்ந்து இருக்கிறார்கள்… பிராமணனை பற்றி நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் ஒரு சிறந்த உதாரணம்.

   நம் நாட்டின் உண்மை வரலாற்றை நம்மிடம் இருந்து ஆங்கிலேயே மிஸ்சோநரிகள் மறைத்து இருக்கிறார்கள்.

 7. யார் பிராமணன்? பிரமத்தை அறிந்தவனே பிராமணன்! விஸ்வாமித்திரனும், வஸிஸ்டனும் ஒரே பாட்ட்னாரை கொண்டவர்கள்! பிரமத்தை அறிய தவ வழியை கைகொண்டதால் வஸிஸடன் பிராண்னாகவும், விஸ்வாமித்திரன் ஷத்திரியானாகவும் மதிக்கப்பட்டாஅர்கல், செய்தொழிலின் அடிப்படையில்! ஆனால்,நாட்டில் தனது குடிகள் வறுமையில் பட்டினி இருக்கும்போது , வசிஸ்டன் செல்வ செழிப்பில் திகழ்வது , விஸ்வாமித்திரனை சிந்திக்க வைக்கிறது! வசிஸ்டன் செல்வத்தை அபகரித்து குடிமக்கள் பசியை போக்கநினைத்த முதலாவது இந்தியநக்சலைட் விஸ்வாமித்திரன்!

  தந்தை பெரியார் பிராமணீயத்தை ஒழிக்க அறைகூவல் விடுத்தை போல, விஸ்வாமித்திரன் அனைவருக்கும் பிராமணருக்குநிகரான சொர்க்க வாழ்வு கிடைக்க போராடுகிரான்! இறுதியில் புதியதோர் பிராமண கோத்திரத்தையே படைக்கிறான் விஸ்வாமித்திரன்! தக்ஷிண பிராமணர்களின் தோற்றம் இதுதான்!

  • எதற்கு எடுத்தாலும் நக்ஸலைட்க்ளோடு ஒப்பிட்டு பெரியவர்களை அசிங்கப்படுத்த வேண்டாமே ப்ளீஸ்…

   உண்மையில் நக்சலைட்களுக்கு ஏழை மக்கள் மீது அக்கறையிருந்தால் அவர்களுக்கு நல்ல தரமான கல்வியும் சுகாதார வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய சொல்லுங்கள். சும்மா ஏழைகளின் பெயரை சொல்லி வன்முறைகளில் ஈடுபடுவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை…

 8. எதற்கு எடுத்தாலும் நக்ஸலைட்க்ளோடு ஒப்பிட்டு பெரியவர்களை அசிங்கப்படுத்த வேண்டாமே ப்ளீஸ்…

  யார் பெரியவர் காவிகளின் கைகூலி பெரியவர்கள்

 9. Naxalites do not get tax revenue from the people.Naxalites only create awareness among the general public about the govt’s duty to be a welfare State.Manikantan worries too much for the image of the fictional characters like Vashista and Viswamithra.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க