Thursday, April 15, 2021
முகப்பு செய்தி விருதை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் கைது ! களச்செய்திகள்

விருதை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் கைது ! களச்செய்திகள்

-

விருத்தாசலம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் மணிவாசகன் கைது!

விருத்தாசலம் கோ.பூவனூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 2014–ல் வீடில்லா ஏழைகளுக்கு IAY வீடு கட்டும் திட்டம் மூலம் 10 வீடுகள் ஒதுக்கப்பட்டது. அதில் ஊராட்சி செயலாளர் செந்தில் என்கிற மாயவன், ஒப்பந்தாரர் சுரேஷ் ஆகியோர் முறைகேடு செய்துவிட்டு வீடுகள் கட்டுவதையும் நிறுத்திவிட்டனர். இதை கண்டித்தும் முறைகேடு செய்தவர்களை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல முறை மனு கொடுக்கப்பட்டது. இதை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கும் பதிலில்லை.

RSYF Posterr copy

இந்நிலையில் மக்கள் அதிகாரம் விருதை ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் 2-12-2016 அன்று முற்றுகையிடப்பட்டது. இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் –  BDO பேச்சுவார்த்தைக்கு  அழைத்தார். பேச்சுவார்த்தையில் ”வீட்டை கட்டுங்கள் நான் பில் தருகிறேன்” என கூறினார். ஆனால் அன்று மாலையே தோழர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Manivasagam rsyf
கைது செய்யப்பட்ட தோழர்.மணிவாசகன்

அதனடிப்படையில் காவல் துறை அரசு அலுவகத்தில் அத்துமீறி நுழைதல் (உழைக்கும் மக்கள் அரசு அலுவலகத்துக்கு வந்து புகார் செய்தல்), ஆயுதம் ஏந்தி வந்தார்கள் (மக்கள் அதிகாரம் கொடி), ஆபாசமாக திட்டியது(முழக்கமிட்டது), அரசு ஊழியர் பணி செய்வதை தடுத்தல்( IAY திட்டத்தில் முறைகேடுகளை ஆய்வு செய்ய கோரியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தோழர்கள் முருகானந்தம், மணிவாசகம் ஆகியோர் வீடுகளுக்கு 4-12-2016 அன்று அதிகாலை 4 மணியளவில் சென்று தோழர்களை கைது செய்ய முயன்றது. தோழர் முருகானந்தம் ஊரில் இல்லாததால் கைது செய்யப்படவில்லை. தோழர் மணிவாசகனை 6 போலிசு (அதில் இருவர் மது குடித்திருந்தனர்) கொலை குற்றவாளியை மடக்கி பிடிப்பதை போல் பிடித்து சட்டை, செருப்பு கூட போடவிடாமல் விருதை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 15 நாட்கள் சிறைக் காவலில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க வேண்டிய BDO முறைகேட்டில் பங்கு வகிக்கிறார். மக்களை பாதுகாப்பதாக சொல்லி கொள்ளும் காவல் துறை மக்கள் பிரச்சினைக்கு மனு கொடுப்பவர்களை கிரிமினல் போல் நடத்துகிறது. இது ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் மக்களுக்கு எதிரானது தான் என்பதை துலக்கமாக காட்டுகிறது.

( படங்களைப் பெரிதாகப்பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
விருத்தாசலம்.

___________________________

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் 2016 நவம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. அதில் வழக்கறிஞர்கள் மில்டன், பார்த்தசாரதி ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் தடையையும், வழக்கறிஞர் மகாதேவன் மீதான் மூன்று ஆண்டு தடையையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மதுரை வழக்கறிஞர்கள் 5  பேர் மீதான வாழ்நாள் தடை மற்றும் 8 பேர் மீதான மூன்று ஆண்டு தடையையும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தண்டணைகளை திரும்பப்பெறக்கோரி பார்கவுன்சிலை கேட்டுக்கொள்வதோடு இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்க்ககோரி  உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இந்திய மற்றும் தமிழக பார் கவுன்சில தலைவர்களுக்கு மனு கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மில்டன் ,பார்த்தசாரதி மற்றும்  மகாதேவன் ஆகியோரின் மேல்முறையீட்டிற்காக தலா 50,000 ரூபாயை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிதியிலிருந்து தருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மீதான தடை நீங்கும் வரை பராமரிப்பு தொகையாக மாதம் தலா 15,000 சங்க நிதியிலிருந்து தருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் துயர்துடைப்பு நிதியம் ஏற்பாடு செய்யப்பட்டு நிதி திரட்டப்படும். வழக்கறிஞர்கள் தாராளமாக நிதி உதவி செய்யுமாறு கோருகிறோம்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
சென்னை.

01.11.2016
Proceedings of the Extra ordinary General Body Meeting held at 1.45 p.m. on the 1st November 2016 at MHAA Library hall premises under the Presidentship of  Mr. R.C.Paul Kanagaraj, President, MHAA, resolved the following resolutions.

We strongly oppose the punishment imposed on the advocates debarring permanently Mr.S.Jim Raj Milton, Mr.S.Parthasarathy and three years temporarily debarment of Mr.S.Mahendran from the State roll by the Disciplinary Committee of the Bar Council of Tamil Nadu and Pondicherry which is highly excessive and unjust.

We strongly oppose the punishment permanently debarring five advocates and three years temporarily debarment of eight advocates belonging to Madurai Bar from the State roll by the Special Disciplinary Committee of the Bar Council of  Karnataka which is highly excessive and unjust.

We demand the Bar Council of India and the Bar Council of Tamil Nadu and Pondicherry to withdraw forthwith the punishment imposed on the aforesaid advocates unconditionally.

We demand the Bar Council of India to drop forthwith the disciplinary proceedings against the nine advocates pertaining to the CISF frisking point issue pending before the Special Committee of the Bar Council of Karnataka unconditionally.

We decided to submit a memorandum to the Chief Justice of India, the Chief Justice of Tamil Nadu, the Chairman of Bar Council of India and the Chairman of Bar Council of Tamil Nadu and Pondicherry seeking their intervention to resolve  our aforesaid demands.

We decided to provide each a sum of Rs.50,000 to the affected advocates Mr. S.Jim Raj Milton, Mr. S. Parthasarathy and Mr. S.Mahendran from the MHAA fund for their appeal filing expenses.

We decided to provide every month a sum of Rs.15,000 to the affected advocates Mr. S.Jim Raj Milton, Mr. S.Parthasarathy and Mr. S.Mahendran from the MHAA fund for their monthly expenses till their prohibition to practice be withdrawn.

We decided to collect fund for the rehabilitation of the aforesaid advocates under the name of MHAA Distress Relief Fund and we request the advocates to contribute generously for this fund.

We decided to conduct a State level conference of advocates in the month of November,  2016 at Chennai to raise our grievance in this issue.

Information :
PEOPLE RIGHTS PROTECTION CENTER.
Chennai.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க